ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...(முடிவுற்றது)
hi friends phone மூலமாக ஏற்படும் விபரீத கதையில் இதுவும் ஒன்று.
தன் தாய் தந்தை தன்னை கவனிக்கவில்லை. வளர்ந்து விட்டதால் கண்டுக்கவில்லை என்று ஏங்கி காதல் என்று தவறான நபரை நெருங்க, விதியோ அவளை காப்பாற்றி விடுகின்றது. எப்படி? யாரால் எந்த நபரால்? என்ற வினாக்களுக்கு விடையாக கதை. phoneஆல் நிகழும் தவறு.
முழு கதை கீழே உள்ள linkல இருக்கு. வாசிங்க உங்க கருத்தை பகிருங்கள். facebook and சைட்ல novel discussion பகுதியிலும் ரிவ்யு போடலாம்.
🔗👉ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... - Praveena Thangaraj Novels
விமர்சனம் பார்த்து படித்தேன். இன்றைய தினத்தில் மொபைல் இல்லாமல் வாழவே முடியாது என்ற அளவுக்கு மொபைல் தன்னிடம் அடிமை ஆக்கி வைத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மொபைல் அத்தியாவசியம் ஆனது ஒரு காரணம் என்றால் தனிமையை போக்கவே பெரும்பாலானோர் மொபைலை நாடுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இது அப்படியான கதை. சிறுகதைதான்.
இன்றைய சூழலில் இருவர் உழைத்தால் தான் தன் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் செய்ய முடியும் என்று ஓடுகிறார்களே தவிர நின்று நிதானமாக ஒரு வார்த்தை பேச நேரம் இருப்பதிலில்லை அவர்களுக்கு. தாங்கள் யாருக்காக உழைக்கிறோம் எவ்வளவு கஷ்டபடுரோம் என்பதை குழந்தைகளிடம் ஷேர் செய்தால் தங்கள் மீதான அன்பை அவர்களும் புரிந்து கொள்வார்கள். அது இல்லாதபட்சத்தில் என்னாகும்? அதுதான் கதை. எவரிடமோ அன்பை தேடாமல் தன் பெற்றோரிடம் தன்னிலை விளக்கம் அளித்து அழுவது மேல்.
தோழியர் செய்யும் தவறை நன்மை என்று நினைத்து தன் தனிமையை விரட்ட அவள் எடுத்த ஒரு முடிவு எங்கு நிறுத்தியது அவளை? அதிலிருந்து மீண்டாளா? அவளது பெற்றோர் அவளிடம் தங்கள் அன்பை புரிய வைத்தார்களா? அவளது எதிர்கால வாழ்க்கை என்னானது? என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். என் பார்வையில் இன்னும் அதிகமாக எழுதியிருக்கலாம்.
@fellik Thank u so much ma.... loveable review. maybe lot of write panna irukku. apa iruntha mind set enough nu ninaichutten.
Leave a reply
- 143 Forums
- 2,637 Topics
- 3,146 Posts
- 5 Online
- 2,160 Members
