நன்விழி அத்தியாயம்-5
@praveena நன்விழி - பிரவீணா தங்கராஜ்
எழுதும் சிறுகதை எல்லாம் இன்னும் நீளாதோ எனும் எண்ணம் வாசிக்கும் அனைவருக்கும் தோன்றும் வண்ணத்தில் எழுதுவது தான் வழக்கமோ... இந்த கதையும் சீக்கிரமே முடிஞ்சிடுச்சி ஆனால் சொன்ன விஷயம் ❤️
சமூகத்துக்கு விரோதமாக செயல்படும் இயக்கத்தை சார்ந்தவர்கள் விமான நிலையத்தில் நடமாடுவதை கண்டு கொண்ட போலிஸ் ஒருவர் அவர்களை பின்தொடர,
அதனை கண்ட அவ்வியக்க அயோக்கியர்கள் வழியில் இருந்த நந்தவனம் குடியிருப்பை ஹைஜாக் செய்து தப்பிக்க முயல்கிறார்கள்.
அவர்களில் ஒரு நிறைமாத கர்ப்பிணியும் இருக்க, அவளுக்கு வலி வரும் நிலையில் பனிக்குடம் உடைபட அடுத்து என்ன என்பதை கதையில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆண் பெண் நட்பின் உன்னதத்தை போகிறவாக்கில் சொன்ன விதம் ஐ லவ் இட் ❤️ பட் இந்த சமூகம் ஆண் பெண் பேசினாலே தவறாக தானே இட்டு கட்டி பேசும் அதை எல்லாம் எதார்த்தமா சொல்லி இருப்பது நைஸ். இருந்தால் ஒரு பேச்சு இல்லை என்றால் ஒரு பேச்சு. கடைசியில் என்ன அழ வச்சிடாங்க 😢 முடிவு எதிர்பாராதது.
எளிமையான எழுத்து நடை. வித்தியாசமான கதை விரும்பிகள் க்ரைம் த்ரில்லர் போலிஸ் கதை விரும்பிகள் தாராளமாக வாசிக்கலாம். ஐந்தே அத்தியாயத்தில் இப்படி ஒரு கதையை வாசித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அக்கா.
Leave a reply
-
நன்விழி அத்தியாயம்-42 years ago
-
நன்விழி அத்தியாயம்-32 years ago
-
நன்விழி அத்தியாயம்-22 years ago
-
நன்விழி அத்தியாயம்-12 years ago
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 8 Online
- 1,938 Members