முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 கதைகளுக்கு வாசிப்பு நடுவாராக முத்துலட்சுமி மோகன்தாஸ் M.A. அவர்களை பற்றி..
நடுவர் மோ.முத்துலட்சுமி மோகன்தாஸ் அவர்கள் எனது வேண்டுக்கோளுக்கு இணங்க போட்டிக்கதையை வாசித்து
கதைக்கரு, எழுத்துநடை அடிப்படையில் கதைகளை தேர்ந்தெடுத்து உள்ளார்.
நடுவரை பற்றி சிறு அறிமுகம்.
முத்துலட்சுமி மோகன்தாஸ் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். திருமணத்தின்போது எஸ்.எஸ்.எல்.சி வரை மட்டுமே பயின்ற இவர் இரண்டு மகன்கள் பிறந்த பின்னர் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற பெருமை உடையவர்.
சிறுவயதில் அவர் தந்தை தந்த ஊக்கம் கதை, கட்டுரையில் எழுத நாட்டம் கொண்டார்.
மாதயிதழான மங்கையர் மலருக்கு இவர் எழுதிய முதல் கட்டுரையே இரண்டாம் பரிசை பெரும் தகுதி பெற்றது.
மங்கையர் மலர், குமுதம் சினேகிதி, தினத்தந்தி என பத்திரிகைகளில் பல கட்டுரைகள் பிரசுரம் ஆயின.
இதில் விழிப்புணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை கட்டுரைகள் அதிகம் எனலாம்.
மங்கையர் மலர் போட்டி கட்டுரைக்கு நடுவராக இருந்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மகளிர் மன்ற ஆண்டு விழாவிற்கு பாடல்கள், நகைச்சுவை நாடகங்கள் என எழுதி இயக்கி நடித்த அனுபவம் உண்டு.
கவிதைகள் புனையும் நாட்டத்தில், காதல் சமூக விழிப்புணர்வு, நாட்டுப்பற்று தலைப்புகளில் எழுதியுள்ளார்
தன் பூர்வீக கிராமத்தில் சில மாணவ மாணவிகளுக்கு மாலை நேர இலவச பாடசாலை அமைத்துள்ளார்.
அப்பாடசாலையை இரண்டு ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
அவ்வப்போது சென்று மாணவ மாணவிகளுக்கு ஆக்கபூர்வமாக பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டியும், ஊக்கபரிசினையும் வழங்கி வருகிறார். கதைகளில் வருவது போல நல்லுள்ளம் கொண்டவர்.
இவர் புனைந்த பல கவிதைகளில் *மனதில் மலர்ந்த மலர்கள்* என்ற கவிதை புத்தகம் அகரவரிசையில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
அதில் பலவகை உணர்வுகளை நவரசங்களை படைத்துள்ளார்.
அக்கவிதைகளை உற்று நோக்கினால் சமுதாய பாடல்களும், இளைஞர்களுக்கு தேடுதலும், கூடல் மிக்க காதலும் கமழ்ந்திருக்கும்.
நினைவலைகள் அக்காலத்தை புரட்டி இருக்கும் பழங்கஞ்சியின் சத்தும், புதுமைகளின் பித்தும், முத்தாக மிளிர்ந்திருக்கும்.
மொத்தத்தில் மனதில் மலர்ந்தவைகள் மட்டுமல்ல ஒவ்வொரு மனதிலும் மணம் பரப்பி மலர்ந்து கொண்டிருக்கின்ற மலர்களே இவர் கவிதைகள்.
மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி போன்ற மாதயிதழில் இவரின் கட்டுரைகள், கவிதைகள், அனுபவங்கள் எண்ணிலடங்கா இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை தொகுத்து ஒரு புத்தகம் போடும் அளவிற்கு சேர்த்து வைத்துள்ள இவர் மற்றொரு கவிதை நூலான *செல்ல சிறகுகள்* வெளியிட போகின்றார்.
நிறைய புகைப்படங்கள் பார்வைக்கு எடுத்து வைக்க நினைத்தேன். அவர்கள் தற்சமயம் பூர்வீக இடத்திற்கு சென்றதால் கடைசியாக வந்த பரிசு பெற்ற கட்டுரையும், குமுதம் சிநேகிதி அளித்த பரிசையும் மட்டும் புகைப்படமாக காட்சிக்கு….
என்னை ஊக்குவித்து என்னை முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும் முத்துலட்சுமி மோகன்தாஸ் அவர்களை வணக்கத்துடன் கௌவுரவிக்கின்றேன். மென்மேலும் அவர்கள் அறிவும், உதவியும் மற்றவருக்கு உதவ போற்றி வணங்குகின்றேன்.
நன்றி,
பிரவீணா தங்கராஜ்.