அத்தியாயம்-12
‘அவனிடம் என் பெண்மையை இழந்ததும், நானா அவனை கல்யாணம் செய்வேன்னு முடிவு கட்டிடுவானா?
இன்னோசன்ட் சுரபி இல்லைடா நான். என் காதலை அவமதிச்சு துரத்தியதால் வலியும் வேதனையும் சுமந்து, அரசியல் தந்திரத்தை கரைத்து குடித்த சகுனியா வளர்ந்த சுரபி நான்.
தேர்தலுக்கு வரணும்னு பிளான் பண்ணி வந்திருக்கான். இடையில் என் சந்திப்பை அவனுக்கு சாதகமா பயன்படுத்தியிருக்கான்.
இப்ப எனக்கு ஆப்ஷன் இல்லைன்னு நினைச்சுட்டானா?! இந்த சுரபி எதுக்கும் துணிந்தவள்’ என்றவளுக்குள் லேசான கலக்கம்.
முதலமைச்சரின் மகன் என்ற போர்வையில் அரசியலில் காலூன்றுவது மிகவும் எளிது. இதில் நிலசரிவு மக்களுக்கு நேரில் உதவியதில் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தமாகிவிட்டான். மணமாகாத அழகான இளைஞன் என்ற கூடுதல் தகுதியில், பெண்களையும் வசியம் செய்யும் வசியக்காரன். இந்த நேரத்தில் என்னோடு படுக்கையில் சல்லாபித்து விட்டதால் என்னை ஏற்பானா? நிச்சயம் அவனது நோக்கம் அரசியலில் களம் இறங்குவதாக அமையும்.
இந்த போட்டோவால் ஏற்படுப் சறுக்கலை நான் தான் கவனமாய் கையாண்டு பேச வேண்டும். இதே சேலை அணிந்து அவனோடு பக்கத்தில் நின்றிருந்தாலாவது சாதாரண நட்புடன் ஏற்பட்ட சந்திப்பில் புகைப்படம் எடுத்ததாக கூறிடலாம். ஆனால் அவன் உடையை அல்லவா அணிந்து நின்றேன். நல்ல வேளை படுக்கையில் இருந்ததை எந்த இழவும் எடுத்தா தொலைக்கவில்லை. இல்லையேல் மொத்த அரசியலுக்கும் முழுக்கு போட்டிருக்க நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
இதையே சிந்தித்தவளால் அவளுக்கு வந்த அழைப்புகளை புறக்கணித்தாள்.
எல்லாம் ஆராவமுதனோடு நெருக்கமாய் நின்ற புகைப்படத்திற்காக கட்சிக்காரர்களும், தந்தையும் பதறிக்கொண்டு அழைப்பதையும் அறிந்தாள்.
முதலில் வீட்டுக்கு சென்று விடவேண்டும்.
எண்ணியதை விட காரோட்டி வீட்டுக்கு சீக்கிரமாகவே கொண்டு வந்துவிட, அவள் இறங்கி தந்தையை தேடும் முன், கட்சி கரைவேட்டி ஆட்கள் சூழ்ந்தனர்.
“ஒன்னு மாற்றி ஒன்னு சர்ச்சையில் சிக்கியிருக்கிங்க. மகளிர் அணி தலைவி இப்படி தான் உடையுடுத்துவாங்களா?” என்ற குரல் ஒரு பக்கம், “இதுக்கு தான்யா பொண்ணுங்க கட்சி பதவில இருக்க கூடாது. ஈசியா கவுந்திடுவாங்க.” என்ற ஏளன பேச்சும், “நமக்கு அதெல்லாம் எதுக்கு? ஆளுங்கட்சி பையனோட அம்மினிக்கு என்ன வேலை?” என்று எரிந்து விழும், பேச்சுக்களை கடந்தே வீட்டுக்குள் சென்றாள்.
கேள்வி கேட்டு நின்றவர்கள் எல்லாம் தான் ஒரு பெண் இவளிடம் அடிபணிந்து நிற்க வேண்டுமா? என்று இத்தனை காலமாக முனங்கியவர்களே. சமயம் பார்த்து விஷத்தை கக்குவதை அறிந்தாள். இவர்களே இப்படி என்றால் மீடியாக்காரர் கைகளில் சிக்கினால் என்ற எண்ணத்தில் தலை சுற்றியது.
ஆராவமுதனை கண்டு சஞ்சலப்பட்ட இதயத்தை திட்டி தீர்த்தாள் சுரபி. அவளது காதலன் என்றதால் எளிதாக வீழ்ந்தாள் மடப்பெண்.
இதில் நிவாஸால் கட்சி இரண்டாக பிரிந்தது. சிலருக்கு ஒரு சின்ன பெண்ணிற்கு கீழே தங்கள் அனுபவத்தை தொலைப்பதாக தெரிந்தது. அதற்கு நிவாஸ் போன்ற ஆணிற்கு அடிபணிந்து போகவே எண்ணம் உதித்தது.
எப்பொழுதும் பெண்ணை மட்டம் தட்டி பேசும் பூமர்கள் வெகு வேகமாய் நிவாஸ் பக்கம் சாய்ந்தார்கள். அதிலும் சுரபி ஆராவமுதன் சேர்ந்த புகைப்படத்தை பார்த்தவர்கள், இனிமே கட்சி நடுநிலையாக இருக்காது என்று காதுபட பேசவே செய்தார்கள். கட்சியில் சிலர் கேள்விகள் கேட்டும் பேசாமல் வீட்டுக்கு சென்றவள் மீது சினம் துளிர்த்தது.
நட்ராஜ் வந்தாரெனில் அவரிடம் சுரபி பேசியதை வைத்து சிலர் சொல்லிவிட்டு புறப்படவும் காத்திருந்தார்கள் எனலாம். வெகு சிலரே கட்சிக்கு நம்பிக்கைக்குரியவராகவும் சுரபி மீதும் பற்றுவுள்ளவர்களாக இருந்தார்கள்.
வெளியே கட்சி ஆட்கள் இவ்வாறு இருக்க, பல்லவியோ வீட்டுக்கு வந்த சுரபியிடம், “என்னடி இது. அந்த போட்டோவுல இருப்பது நீ தானே” என்று கேட்க, “நான் தான்” என்றாள் பல்லைக்கடித்தபடி.
“இதை விட சின்ன டிரஸ் உனக்கு கிடைக்கலையா?” என்று பல்லவி கோபமாய் கேட்டார்.
“பச் அங்க அவனிடம் வேற டிரஸ் இல்லை. ஷர்ட் ஷார்ட்ஸ் தான் அமுதனிடம் இருந்தது. அதை தான் போட்டுவிட்… போட்டுக்கிட்டேன்” என்று ‘போட்டுவிட்டான்’யென கூறவந்து ‘போட்டுகிட்டேன்’யென மாற்றினாள். இந்த ஆடை குறைப்பிற்கே அம்மா பத்ரகாளியாக மாறுகின்றார். இதில் அவன் தான் இருட்டில் அணிவித்தான் என்றால் மீண்டும் ஐசியூ சென்றாலும் ஆச்சரியமில்லை. இதில் அவனோடு தங்கிய கதையெல்லாம் கூறி தன்னை இழந்ததை கூறினால் இன்றே தனக்கு விஷம் வாங்கி குடிக்க கொடுத்தாலும் கொடுப்பார்.
“இது மட்டும் தானா? இல்லை அவனோட படுக்கையை பங்கு போட்டியா?” என்று பல்லவி கேட்டதும் சுரபிக்கு பகீரென்றது. அதை தானே மறைக்க முயன்றாள்.
“பல்லவி சும்மாயிருக்க மாட்ட” என்று நட்ராஜ் அதட்டலில் பல்லவி புலம்ப ஆரம்பித்தார்.
“படிச்சி படிச்சி சொன்னேன். இவளுக்கு அரசியல் எல்லாம் வேண்டாம். காலாகாலத்துக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செய்து அனுப்பி வையுங்கன்னு சொன்னேன்.
எனக்கு அரசியலில் வாரிசு இல்லைன்னு எகத்தாளம் செய்த இலக்கியனுக்கு பதிலடி தரணும்னு, நீங்க அன்னைக்கு ஆவேசமா பேச, நான் அரசியலில் களம் இறங்கி இலக்கியனை தூக்கி சாப்பிடறேன்னு இவ இறங்கினா. இதோ.. ஏழு வருஷமா அரசியல் தான் பேச்சு மூச்சுனு திரியறா. நீங்க அவளை பேசவிட்டு வேடிக்கை பார்க்கறிங்க.
இன்னிக்கு… அந்த தம்பி கூட ஜோடியா நிற்கறா. இவ பத்தாவது படிக்கிறப்பவே காதலிக்கறேன்னு அந்த தம்பி பின்னாடி சுத்தினவ. இப்ப மனசுல என்னத்த நினைச்சிட்டு அவனோட வெட்கப்பட்டு பக்கத்துல நிற்கறா கேளுங்க.
இதோ… வீட்டு லேண்ட்லைன், என் போன்ல சொந்தக்காரங்க, அதோ உங்க போன் அலறிட்டே இருக்கு. போனை எடுக்க முடியுதா? உங்க பி.ஏ முதல் கொண்டு கட்சி ஆட்கள், மீடியா, செய்திபோடறவன், நிருபர்கள், மக்கள் தொண்டர்கள் வரிசையா வீட்டுக்கு வெளியே காரணம் கேட்டு நிற்கறாங்க. அவங்களுக்கு சொல்லணுமா வேண்டாமா?
இத்தனை வருஷம் மேடையில் பேசறப்ப நெருப்பாட்டம் பேசறானு பெருமைப்பட்டுக்கலாம். இப்ப நெருப்புல இல்லை தத்தளிக்கறா. இதுக்கு என்ன சொல்லறது?” என்று மூக்குறிந்து அழுதார். பெத்த வயிறு மகளுக்காக அழுவது சரிதானே!
“அம்மா… இப்ப தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்திருக்க. அழுதழுது திரும்ப அங்க போகணும்னு ஆசைப்படாத. எதுவென்றாலும் நான் பார்த்துப்பேன்.” என்றாள் சுரபி.
பல்லவியோ “எதுனாலும் நீ பார்த்துப்ப. எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ அவனை இப்பவும் விரும்பறியா? அவன் கூட போட்டோ மட்டும் எடுத்தியா? இல்லை அவனிடம் மயங்கி உன்னையே தந்துட்டு ஏமாந்து வந்து நிற்கறியா” என்று கேட்க, சுரபியால் பதில் தர முடியவில்லை.
நட்ராஜனோ, “அவனோட நீ வந்த அன்னைக்கே கேட்க நினைச்சதும்மா. என் மக நெருப்புன்னு கேட்கலை. இப்ப அம்மா பயப்படறா பாரு. இந்த போட்டோவை வச்சி வீட்டுக்கு வெளியே கட்சி ஆட்களும், மீடியாவும் கேட்பதை விட்டு தள்ளு. நீ நல்லபடியா இருக்கனு ஒரு வார்த்தை அப்பாவிடம் சொல்லு அது போதும்.” என்று கேட்டார்.
சுரபியால் அதை தான் உரைத்திட முடியாது தள்ளாடுகின்றாள்.
அவளது போனும் விடாமல் அடித்து அலறியது.
இங்கு சம்பந்தப்பட்டவனோ திட்டங்கள் தவிடுபொடியாக தனியாக அதே ஹோட்டல் அறையில் வெளிப்புறத்தை கவனித்தான்.
எத்தனை கோடி மக்கள், சென்னை என்றாலே… இதில் தமிழக முதல்வரின் மகன், ஏன் வருங்கல முதல்வராகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. தந்தைக்கு பின் நெப்போடிஸம் முறையில் உள்ளே செல்வது எல்லாம் மிக எளிது.
ஆனால் அந்த ராணி இந்த ராஜாவுக்கு அல்லவா செக்மேட் வைத்து சென்றிருக்கின்றாள்.
நான் வேண்டுமா? அரசியல் பதவி வேண்டுமா? ஏதேனும் ஒன்றை பற்றிக்கொள் என்று கூறிவிட்டு கூலாக சென்றுவிட்டாள் சுரபி.
இதே இந்த திட்டம் போடும் போது பதவியும் கிடைக்கும், அதோடு மறுக்க இயலாமல் தன்னை காதலித்த சுரபி மணக்கவும் சம்மதிப்பாளென்று மேம்போக்காக நினைத்தோமே. இன்று அந்தளவு நான் உன்னிடம் பணிந்து செல்ல மாட்டேன், என்று புதிய வினாக்கில் சிக்க வைத்துவிட்டாள்.
எதை முடிவெடுக்க, வரப்போகும் அரசியல் பதவிகளா? அல்லது காதல் திருமணமா?
சுரபியை விட்டு தரும் அளவிற்கு என் மனம் இருக்குமா? அந்தளவு அரசியல் என்னை ஆட்படுத்திவிட்டதா?’ என்றவனுக்கு சுரபியோடு தான் இருக்கும் புகைப்படத்தை டிரண்டிங் ஆனதில் ஏகப்பட்ட கடுப்பு. அதுவும் அவன் தவறே. அவளாக காதலிப்பதாக மீடியாவில் பகிரமாட்டாளென்று ஆராவமுதன் தான் சோஷியல் மீடியாவில் அந்த நல்ல காரியத்தை ஏற்றியது.
இப்பொழுது அதுவே தனக்கு கத்தியாக வந்து நிற்கவும் செய்வதறியாது திகைக்கின்றான்.
அதற்கு பாவம் அவள் என்ன பதில் சொல்வாளென்ற கலக்கம் இப்பொழுது இவனுக்குள் வந்தது.
தந்தையை தேடி போக எண்ணியவன் காரை லிப்டில் வரவழைத்து ஏறினான்.
லிப்டி தரைத்தளம் வந்து அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலிருந்து மறைந்தது.
வீட்டுக்கு வந்தவன் முன் தொலைக்காட்சியில் செய்தியாளர்கள் இலக்கியனை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர்.
“மீடியாவுக்கும் செய்தியாளருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்று தான். என்னிடம் அரசியலை பற்றி கேளுங்க பதில் தர்றேன். நான் முதலமைச்சரா ஏதாவது தவறு செய்தா என்னை நிற்க வச்சி கேளுங்க. இப்ப கூட நிலசரிவு நடந்த இடத்துல உதவி தொகைகள் எல்லாம் சரியா போய் சேர வச்சேன்.
மத்தபடி பெர்ஸனல் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட ஆட்களிடம் நீங்க மைக்கை நீட்டுங்க. உங்க பிளாஸ் லைட்ஸ், கேமிராக்களை கொண்டு போங்க. என் பையனோட பெர்ஸனலில் நான் என்றைக்கும் தலையீடுவதில்லை. அதே போல எதிர்கட்சியில் இருக்கும் மகளிர் அணி தலைவியை பற்றியும் நான் எந்த கருத்தும் சொல்வதற்கில்லை.” என்று கரம் குவித்தார்.
“சார் சார் சார்.. உங்க பையன் ஆராவமுதன் அரசியலுக்கு வருவாரா?” என்று நிருபர் கேட்க, “முந்தைய கேள்வி கேட்கும் போது இதையும் அவரிடமே கேளுங்க. இப்ப தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை தேவையா இல்லையானு கருத்து போயிட்டு இருக்கு.
அதை பற்றி எனது கருத்தை மத்திய அரசாங்கத்துக்கு கூறப்போறேன்.” என்று செல்லவும் பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாய் அழைத்து சென்றார்கள்.
தற்போது ஆராவமுதன் சுரபி பற்றிய கிசுகிசு கேள்விகள் முன்னுக்கு இருக்க, நாட்டிற்கு மும்மொழி தேவையா இல்லையா என்ற கேள்விக்கு பதிலை அறிவதை பின்னுக்கு தள்ளிவிட்டது. மீடியாவை பொறுத்தவரை டிஆர்பி எதற்கு தேவையோ அந்த செய்திக்கே முதலிடம்.
“சார் சார்… ஆராவமுதனை எப்ப சந்திக்கலாம்” என்று கேட்டதும், “ஆராவமுதன் தம்பி என்ன ஓடி ஒளியற உருவமா? தம்பி இரண்டு மணிக்கு வீட்டுக்கு வரும். வேண்டுமின்னா அங்க போய் அவரை பேட்டி எடுங்க. போங்க போங்க” என்று சிதம்பரம் சுரபி செல்லவும் இங்கு வந்தவர், தள்ளாத குறையாக மீடியாவை அனுப்பினார்.
செய்தியாளர்கள் படையெடுத்து அவன் வீட்டில் சென்று நின்றதும் ஆராவமுதன் கார் வர, அவன் கார் முன் பாய ஆரம்பித்தார்கள்.
சிதம்பரமோ அவசரமாய் ஆராவமுதனுக்கு செய்தி தெரிவித்து பிரஸ் ஆட்கள் வருவதாக கூறி அவருமே செய்தியாளர்கள் தொடர்வதை அறிந்து, இங்கு ஓடோடி வந்தார்.
சரியாக மீடியா ஆராவமுதனை சூழும் முன் சிதம்பரம் வந்து கார் கதவை திறந்தார்.
“தம்பி… ஐயா மீடியாவை உங்கப்பக்கம் திருப்பி விட்டுட்டார். எதுனாலும் நீங்க பதிலை பாக்கெட்ல வச்சிட்டு இருப்பிங்கன்னு சொன்னார். நிஜமாவா தம்பி?” என்று காதோரம் வந்து கிசுகிசுக்க, “ஏன் அங்கிள் நீங்க வேற?” என்று வீட்டுக்குள் நுழையும் முன் “தம்பி மீடியா” என்று சிதம்பரம் சுட்டிக்காட்ட வேறு வழியின்றி அவர்களிடம் பேச ஆயத்தமானான்.
-தொடரும்.
Rendu perum yennasolla porangalo
என்ன நடக்க போதோ…? அமுதன் என்ன சொல்ல போறானோ..?
Amudhan avan oda arasiyal aasai uk surabi mela love um easy ah kedaikkum nu nenachen aana ava nan venum ne arasiyal ah iruku ah koodathu nu ava arasiyal ku oppu vaika nenacha avanukkae thirupi adicha ta ah
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 eppo amudhan enna badhil solla poran parpom 🧐 paavam surabi parents ku enna badhi sollaradhu nu theriyama muzhikira🙄
Interesting 👌 nice moving
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 12)
அப்படின்னா… சுரபிக்காக அரசியலை விட்டுக் கொடுத்திடுவானோ…?
ஆனா, ஒரு ஆணுக்கழகு முன் வைச்ச காலை, பின் வைக்காமை தானே..?
இந்த அமுதன் இனி என்ன செய்யப்போறானோ தெரியலையே…?
😀😀😀
CRVS (or)/CRVS 2797
Namma herova ippad தத்தளிக்க விட்டுடாங்களே
Sema twist. Amuthan what will do now? Intresting
Superb 👌🎊🎊🤩🤩 interesting 💥🤩💥💯
Super
ipo media karangaluku nee ena pathila solla pora amutha yosichi vachi irupa ethathu oru pathil nee kelapi vtathu ipo un kittaye vanthu nikuthu
Impressive