அத்தியாயம்-14
நட்ராஜ் தலைமையில் அந்த கட்சி கூட்டம் தொண்டர்களால் நிரம்பியிருந்தது.
சுரபி ஒரு குற்றவாளியாக அவ்விடத்தில் அமர்ந்திருந்தாள்.
ஆளாளுக்கு அவளிடம், ஆராவமுதனை பற்றியும் புகைப்படத்தை பற்றியும் கேட்க, “அது என்னோட பர்ஸனல்” என்று பதில் தந்தாள்.
“ஓ… அந்த ஆராவமுதன் சொன்ன அதே பதில். மேடம் இது அவர் சொல்லும் போது ஓகே. ஆனா கட்சி பதவில இருந்துட்டு, நீங்க நம்ம எதிர்கட்சி ஆளையே விரும்பினா, கட்சியோட நம்பகதன்மை இதுல இருக்கே. நாளைக்கு புருஷன் மாமனார்னு நீங்க விட்டு கொடுத்து போகலாம். கட்சி கொள்கைகள் என்னாகறது.
ஏற்கனவே கட்சில விசுவாசமா இருந்த நிவாஸை துரத்தியடிச்சிட்டிங்க. அவர் தான் கிட்னாப் செய்தார் என்ற பழி வேற. நிவாஸ் நான் கிட்னாப் செய்யலைன்னு சொல்லறார். நீங்க ஒன்னு சொல்லறிங்க. ஆக மொத்தம் அந்த நிலசரிவுல நம்ம கட்சியாட்கள் நால்வர் பலியானது தான் மிச்சம்.
அட்லீஸ்ட் அங்கயே இருந்து உதவியாவது செய்து மக்களிடம் நம்ம கட்சிக்கு பெயர் சேர்த்துயிருக்கலாம். அதையும் உங்க காதலன் சொன்னதால் கார்ல ஏறி வந்துட்டிங்க” என்று பேசவும் சுரபி பதில் அளிக்க பிடிக்காமல் நின்றாள்.
“அவர் சென்னதால் ஏறி வரலை. அம்மாவோட உடல்நிலையை முன்னிட்டு வந்தேன்.” என்று பதில் தந்தாள்.
“அந்த அமுதன் சொல்லவும் , நீங்க அழகா கார்ல ஏறி வந்ததை தான் டிவில போட்டு போட்டு காட்டினானே. இதுல போட்டோவுல டவுசர் வேற.” என்று கட்சியாளர் ஒருவர் கேலி செய்தார்.
மற்றொரு ஆளோ, “யோவ் அது டவுசர் இல்லை. ஷார்ட்ஸ் யா. சரியான குமுட்டையா இருக்க” என்று நகைத்தனர்.
இத்தனை நாள் சுரபியின் ஒரு பார்வைக்கே வாயை மூடிடும் ஆட்கள். இன்று எள்ளி நகையாடவும் கோபமானாள்.
ஆனால் கோபம் இதில் காட்ட முடியுமா?
“இங்க பாருங்க… சேலை கட்சி சம்பந்தப்பட்டப்ப உடுத்தறது. அதை தாண்டி என் பெர்சனல் டைமிங்ல நான் என்ன உடுத்தறேன்னு நீங்க கேலி செய்ய வேண்டாம்.
அதோட, அம்மாவை பார்க்க வந்தது என்னை பொறுத்தவரை தப்பில்லை.” என்றாள்.
”சரிம்மா… நீ சரி. சின்ன வயசு காதல் இப்ப கை கூடுது.நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அது தனிமனித சுதந்திரம். கட்சிக்கு நம்பிக்கையா நீங்க இருப்பிங்களா எந்த கேரண்டி?” என்றார்.
“பதினெட்டு வயசு ஆனதும் நேரா கட்சில உறுப்பினரா சேர்ந்து, இந்த கட்சி தான், என் உயிர் மூச்சா வாழறவ நான். என்னை நம்பறவங்க இருங்க. நம்பாதவங்க வேடிக்கை பாருங்க. என் ஒரே நோக்கம் இலக்கியனை வீழ்த்தி அவர் கட்சியை கீழேயிறக்கிட்டு நம்ம கட்சியை கோட்டையில் பறக்கவிடணும்.
இதை யாரோட ஆதரவும் இல்லாம என்னால நடத்த முடியும். என்னோட இருந்து வேடிக்கை பார்க்கறவங்க இருங்க.
கட்சியை விட்டு காதல் முக்கியம்னு ஓடுவேன்னு சராசரி பெண்ணா என்னை நினைச்சா உங்க விருப்பம். எதையும் காலம் பதில் சொல்லும்.” என்றாள்.
நட்ராஜனோ, தொண்டையை செருமி, “சுரபி என்னோட மகள் என்ற எண்ணத்தை தாண்டி, கட்சில நம்பிக்கை ஒட்டு எடுக்கப்படுது. அதுல அதிகபட்ச வாக்குல எந்த எண்ணத்துக்கு சாதகமா வருதோ கட்சி அந்த முடிவை எடுக்கும். இது எந்த பக்கமும் சார்பற்ற அரசா தான் நான் கொண்டு போக விரும்பறேன். அதனால் தான் இங்க என் மகளை யார் எது பேசினாலும் பேச விட்டு வேடிக்கை பார்த்தது.
இது இத்தனை காலமா சுரபி கட்சில இருந்ததால் அவளுக்கு சாதகமா பக்கபலமா இருக்கறவங்க சீட்டு எழுதி போடுங்க.
இதுல சுரபியோட செயல்கள் பாதகமாக இருக்குன்னு அவநம்பிக்கையா சீட்டு போடுங்க. எது முடிவாகுதோ அதை பொறுத்து கட்சில சுரபி இருக்கவா வேண்டாமா என்று சொல்லிடறேன்.” என்று நியாயமாக பேசினார்.
ஆளாளுக்கு துண்டு சீட்டும் பேனாவுமாக எழுந்தனர்.
சுரபி மௌனமாய் தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றாள்.
ஏற்கனவே நிவாஸ் சிலரை பேசியே அழைத்து சென்றிருக்க, இதில் பாதி அவநம்பிக்கையாகவும் சீட்டு போட்டனர்.
ஓரளவு நம்பிக்கை அடிப்படையிலும் சீட்டு குவிந்தது.
மொத்தமாய் எண்ணிக்கையை கூட்டும் நேரம் சுரபிக்கு சாதகமாக எட்டு வோட்டு அதிகமாகவே அமைந்தது.
அதன் காரணமாக கட்சியில் இருக்க முடிவானது.
ஆராவமுதனோடு எடுக்கப்படும் முடிவுகள் தனிப்பட்ட பெர்ஸனல் முடிவுகளாக எடுக்கப்படும் என்றும் அவளும், கட்சி சம்பந்தப்பட்ட தலையீடல்கள் இருக்காது என்று கட்சி ஆட்களும் எழுதி தந்தார்கள்.
நட்ராஜ் அதனை படித்து காட்டி சபையை களைத்தார்.
ஒரு வழியாக மதிய உணவை முடித்து ஆயசமாக அமர்ந்தாள்.
மணி ஆறாக, ஆராவமுதன் சுரபியின் வீட்டிற்கே வந்தான்.
சில கட்சி ஆட்கள் அங்கே இன்னமும் இருந்த பொழுதிலும், “நட்ராஜ் அங்கிளை பார்க்கணும்” என்று வாட்ச் மேனிடம் தெரிவிக்க, அவனோ முதல்வர் மகன் என்பதால், விழுந்தடித்து இன்டர்காமில் தெரிவித்தான்.
பல்லவி தான் போனை எடுத்தது. அதனால் உள்ள வரச் சொல்லிவிட்டார்.
வாட்ச்மேன் பதவிசனமாய் உள்ளே அனுப்ப, கார் சீறி பாய்ந்தது.
டிரைவர் கார் கதவை திறக்க, மிடுக்காய் இறங்கினான்.
எதிரே இருந்த கரைவேட்டிகளை அவன் பார்வை வட்டத்துக்குள் பார்த்தும் பாராதது போல வீட்டுக்குள் வந்தான்.
“வாங்க தம்பி” என்று பல்லவி வரவேற்க, “பிளஸ் பண்ணுங்க ஆன்ட்டி” என்று காலில் விழவும், அவசரமாய் சுரபி அறையிலிருந்து வெளிவந்தாள். அவளது நெஞ்சு விம்ம, கண்கள் அதிர்ச்சியில் உறைந்து ஆராவமுதனை காண, “ஹாய்” என்றான்.
சுரபியோ பல்லவியை காணவும், கையை பிசைந்து நின்றாள்.
“அங்கிள் இருக்காரா? நான் அவரிடம் பேசணும் சுரபி.” என்று கூறினான்.
“அப்பா… ரூம்ல” என்று சுரபி திணற, “சுரபி அப்பாவை கூட்டிட்டு வா. நீங்க உட்காருங்க தம்பி” என்று உபசரிக்க ஆரம்பித்தார் பல்லவி.
பணியாட்களை இனிப்பு காரம், எடுத்துவர பணித்து பழச்சாறும் தண்ணீரையும் கொடுத்தார்.
“சாப்பிடுங்க தம்பி” என்று கூறவும், “வீட்ல செய்ததா ஆன்ட்டி. என்னயிருந்தாலும் இந்த மாதிரி உளுந்து லட்டு, முறுக்கு எல்லாம் சாப்பிட்டு பல வருஷமாகுது. மாதுளைப்பழம் வேண்டுமின்னா வீட்ல போட்டு தர சொல்லிடுவேன். என்னயிருந்தாலும் அம்மா கூடயிருத்தா நேரத்துக்கு ஆரோக்கியமா சாப்பிடலாம்” என்று கூறியபடி சுவைத்தான்.
முன்பு இது போல் கொடுத்து விட, ஆராவமுதன் சொன்னதாக இதே வசனத்தை நட்ராஜ் உரைப்பார். என்ன அப்பொழுது நண்பனின் மைந்தன். இன்று எப்படியோ? என்று கணவர் வர அவரை கண்டார்.
நட்ராஜ் வரவும் எழுந்து நின்றவன், இரு கைகளை நமஸ்கரித்து “வணக்கம் அங்கிள்” என்றதும், “உட்காருங்க” என்று கூறினார்.
“பெர்சனல்லா பேசலாமா” என்றதும், நட்ராஜ் தனியாக மற்றோர் அறைக்கு அழைத்து வந்தார்.
பல்லவியும் நட்ராஜ பின் தொடர, சுரபி அன்னையின் தோளைப் பற்றியபடி, வந்தாள்.
“ஆன்ட்டி நீங்களும் உட்காருங்க. ஏ சுரபி நீயும் உட்காரு” என்று பக்கத்து இருக்கையை காட்டி பேசவும் தந்தையை கவனித்தாள்.
“என்ன மேடையில் ஸ்பீக்கர் இல்லாம அந்த கத்து கத்தற. வீட்ல என்ன சைலண்ட்டா. இல்லை… ரீசண்ட்டா வந்த மீடியா செய்தியாளர்கள் தொல்லையால் பேச்சையே இழந்துட்டியா?” என்று வெகுயியல்பாய் உரையாடினான்.
“இங்க எதுக்கு வந்திங்க?” என்று ஆரம்பித்தவளின் சினம், அவனை சிறுஉறுத்தலுக்கும் ஆளாக்கவில்லை.
“எதுக்கு வந்தேன்னு தமிழக மக்களை கேட்டுப் பாரு. கரெக்டா சொல்லுவாங்க. ஆனா சம்மந்தப்பட்ட உனக்கு தெரியாதா?” என்றவன் நட்ராஜனிடம் திரும்பி, “அங்கிள் அப்பாவோட உங்களுக்கு இருக்கற மோதலை வச்சிட்டு எங்க காதலை பிரிப்பிங்களா? இல்லை… எங்க காதலை ஏற்று கல்யாணத்துக்கு சம்மதிப்பிங்களா? அதை நேர்ல நான் தெரிந்துக்கொள்ள வந்தேன்.
எங்கப்பா என் ஆசைக்கு குறுக்கே நிற்க மாட்டார். சுரபி விருப்பத்துக்கு நீங்க எப்படி அங்கிள்?” என்று நேரிடையாக கேட்டுவிட்டான்.
நட்ராஜனோ “மகள் விருப்பத்துக்கு தான் அவ ஆசைப்பட்டபடி அரசியலில் நீந்த விட்டது. இப்படி திடீரென காதல் தொடரும்னு எதிர்பார்க்கலை தம்பி. அவ விருப்பத்தை மதிக்கறவன் நான்.
மேடையில் என்னென்னவோ உங்க அப்பாவை பேசியிருக்கா. அதெல்லாம் மனசுல வச்சிட்டு என் மகளை ஏதாவது செய்துட்டா? சமீபத்தில் கடத்தியவங்க யாருன்னு இப்பவரை தெரியலை. எங்க கட்சி ஆட்களே என்ற ஒரே காரணத்தில் கண்டுபிடிக்கவும் முடியலை.
நாளைக்கு ஒரே பொண்ணை வாறி கொடுத்துட்டு அழுதுட்டு இருக்க முடியாது.” என்று தந்தையாக முதலில் உரைத்தார். இங்கே பூசி மொழுக எதுவும் இல்லாமல் பேசினார்கள்.
“கடத்தியதுல எங்க பங்கு இருக்குனு நினைக்கறிங்களா? அப்பா பார்த்து பெயர் வச்சி வளர்ந்தவ சுரபி. அவரே உயிருக்கு ஆபத்து விளைவிப்பார்னு நினைக்கறிங்களா? உங்களுக்கு எனக்கு சுரபியை கொடுக்க விருப்பமில்லைன்னா அதை தெளிவா சொல்லுங்க.
எங்கப்பா எங்க காதல் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டார். அவருக்கு மக்கள் என்ன பேசுவாங்க? கட்சி தொண்டர்கள் என்ன பேசுவாங்க? மீடியா பேப்பர்காரன் எதையும் யோசிக்கலை. பையனுக்கு பிடிச்சா போதும்னு சொல்லிட்டார்.” என்று இலக்கியனை பெருமையாக பேசினான் அமுதன்.
“என்ன தம்பி என் மகளுக்கும் எனக்கும் சிண்டு முடிச்சி விடறிங்களா?” என்று நட்ராஜன் சாந்தமாய் தான் கேட்டார்.
“பதினேழு வயசு இருக்குமா அங்கிள், எங்கப்பாவுக்கு எதிரா அரசியல்ல நிற்பேன்னு வாய் சொல்லா சொன்ன சுரபி. பதினெட்டுல… சொன்னது போலவே கட்சி உறுப்பினரா சோர்ந்துட்டா. உங்களுக்காக தானே..?
அப்படியிருக்க நான் சிண்டு முடிச்சா அவளுக்கு அது தெரியாதா? நான் சிண்டு முடிக்க வரலைனு அவளுக்கு நல்லா தெரியும்.
அவளை நிலசரிவுல விட்டுட்டு ஓடாம சாவுல ஒன்னா இருப்பேன்னு நின்று காப்பாத்தினேன்.
என் உண்மையான காதல் அவளுக்கு தெரியும். இங்க என் காதலை நம்பி தான் வந்தேன். எஸ் ஆர் நோ அதை சொல்லுங்க அங்கிள்” என்று வினாவுக்கு விடையை மட்டும் கேட்டவனாக நின்றான்.
சுரபியோ, “முதல்ல நான் போட்ட கண்டிஷன் உங்களுக்கு ஓகேவா? அதை சொல்லாம மீடியாவுல பேட்டி கொடுக்கறிங்க. இங்க அப்பாவிடம் வீராப்பா பேசறிங்க” என்று சுரபி வாய் திறந்தாள்.
“மீடியா முன்ன அவ்ளோ பேசறேன்னா… நீ போட்ட கண்டிஷன் எனக்கு ஒகேன்னு அர்த்தம்” என்று கூறினான். சுரபிக்கு பேரதிர்ச்சி.. மீடியா மட்டும் தன்னிடம் முதலில் கேட்டிருந்தால் கட்சியா காதலா என்று யோசித்து கட்சி என்று சொல்லியிருப்பாள். ஆனால் ஆரவமுதன் இவ்வாறு சொல்லவும் அமுதனை விழியகலாது பார்த்தாள்.
“என்ன… கழட்டி விட்டுடுவேன்னு நினைச்சியா? அரசியலால் பிரியகூடாதுனு தான் மீடியா முன்ன ஒளிச்சு மறைச்சி இல்லாம பகிரங்கமா மனசை திறந்தது.
ஒருவேளை இவன் தான் காதலிப்பதை சொல்லிட்டான். வேண்டுமின்னே நோ சொல்லி அவாய்ட் பண்ணி ஏமாத்தலாம்னு பார்க்காத…
அப்பறம் கொண்ணு புதைச்சிடுவேன்” என்று காரசாரமாய் கூறியவன், சுரபியின் கையை பிடித்து, “மாமா யோசிச்சு முடிவெடுங்க. அத்தை… உடம்பை பார்த்துக்கோங்க. பொண்ணு கல்யாணத்தை விமர்சனையா பார்க்கணும். எங்க சைட்ல அம்மா வேறயில்லை. நீங்க தான் எனக்கும் அம்மாவா இருந்து வழிநடத்தணும். சுரபி… அடிக்கடி போன் பண்ணுவேன் எடு.” என்று எழுந்து கொண்டான்.
பல்லவியோ, “ஒரு நிமிஷம் தம்பி. நீங்க காதலிச்சி கல்யாணம் செய்யணும்னு விரும்பறிங்களோ, இல்லை அரசியல் பின்னனியில் சதி செய்யறிங்களா?, என் மகளை உங்க சதுரங்க ஆட்டத்துல பொம்மையா உபயோகப்படுத்தாதிங்க.” என்று கோரிக்கை வைத்தார்.
“ஆன்ட்டி நான் சுரபியை பொம்மையா நினைச்சாலே, அவ என்னை தூக்கி போட்டுடுவா. உங்க பொண்ணு தமிழக முதல்வர் இலக்கியனையே எதிர்த்து பேசுறவ. நான் எல்லாம் எந்த மூலைக்கு.” என்று சிரித்தான்.
இலக்கியன் எல்லாம் தன்னை வளர்த்தவர். ஆயிரம் பேசினாலும் அவளை எந்த மேடையிலும் தூற்றி பேசியதில்லை. அதோடு, சுரபியை சுட்டிக்காட்டியும் பேச மாட்டார்.
இவன் தான் பார்வையால், பேச்சால், வதைப்பது, மனதை சிதைப்பது, எல்லா மாயையையும் செய்யக்கூடியவன் என்று நினைக்க, ஆராவமுதனோ நல்ல பதிலாக நட்ராஜின் பொறுப்பில் விட்டு மீண்டும் சந்திப்பதாக புறப்பட்டான்.
புயல் அடித்துவிட்டு ஓய்ந்தது போல சுரபி வீடு அமைதியுற்றது.
-தொடரும்.
Nijamave puyal dan amudan
Sema twist. Intresting
Kadasila bala ivanga courtla pottu poitane. Annalum yetho ulkuthu eruku.
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 14)
அட… இந்த அமுதன் ஆர்ய கூத்தாடினாலும் காரியத்துலயே கண்ணா இருக்கிற டைப்போ…?
வந்தான், சொன்னான், சென்றான்னு போயிட்டே இருக்கானே…? அடுத்து என்ன கல்யாணம் தானோ…?
ஆனா, எனக்கென்னவோ…
இன்னும் சந்தேகமாவே இருக்குதே. இவன் அத்தனை சீக்கிரமா விட்டுக் கொடுக்கிறவன் இல்லையே..?
ஒருவேளை, கல்யாணம் முடிச்சிட்டு (அரசியல்) களத்துல இறங்குவானோ…? புலி பதுங்கிறது பாய தானோ…? அதாவது அரசியல்ல வைமாட்டேன்னு சுரபி கிட்ட கொடுத்த வாக்கை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சு, கல்யாணம் முடிச்ச பிறகு களத்துல இறங்கின மாதிரியும் ஆச்சுன்னு முடிவெடுத்திட்டானோ…? இருக்கும், இருக்கும் இந்த அமுதனை நம்பவே முடியாது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
மனசுக்குள்ள ஏதோ சதி பண்ணிக்கிட்டு வந்திருக்கிறான் இந்த அமுதன் சுரபி ரெடியா இருந்துக்க எல்லாத்துக்கும் தயாரா இருந்துக்க வெரி இன்ட்ரஸ்டிங்
ஆராவமுதன் என்னும் புயல் கரையை கடந்துவிட்டது.
It’s going very interesting 👌👌
Superb 😍🎉👍 interesting 💥💯💯🔥💯 amuthan planned anything
Amuthan planned anything… superb 🔥💥🤩💥💯🤩💥🥰 interesting
Amudhan something special than real ah vae puyal mathiri vandhan avan pattuku pesitu poitae irukan but avan oda mindset ah innum catch panna mudiyala
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 amudhan eppdi arasiyala vittu kuduthan oru vela marriage ku apparam parthukalam nu nenaikirano parpom 🧐🤔
Very interesting ❤️❤️❤️
Unga writing talent vera level sis👍
Super😍 interesting
Superb 😍🥰🎉 interesting 💥💯💯🔥👍
Amuthan yetho oru plannoda thaan varaan…be careful surabi.,
Amutha ithu unmaiya illa ithuvum etho karanam vachi seiriya pesinathu la nalla iruku nee pana velaiyala una namba mudila but inoru pakam santhaosama iruku surabi santhosam vetkam ellam varuthu
Impressive proposal