அத்தியாயம்-16
உன்னிகிருஷ்ணன் வரவும், நட்ராஜ் அவரை குடும்பத்துடன் அறிமுகம் செய்து வைத்தார்.
“பல்லவி என்னோட திருமதி. இவங்க என் அரசியல் வாரிசு சுரபி. இவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் இலக்கியன், அவர் முதலமைச்சரோட மகன் ஆராவமுதன்” என்று அறிமுகப்படுத்தினார்.
“யாயா.. இவரையும் நம்ம சுரபியோட டிவியில் பார்த்தேன்.” என்றுரைத்தான் உன்னிகிருஷ்ணன்.
ஆராவமுதன் வேண்டா விருப்பமாய் ஒரு புன்னகையை தழுவ விட, “சாரி அங்கிள் நீங்க தமிழ்நாட்டு சி.எம் கூட பேசுங்க. நான் அதுவரை வெயிட் பண்ணறேன்.” என்றவன் கொண்டு வந்த பரிசை மட்டும், எடுத்தபடி “அங்கிள் இது சுரபிக்கு கொண்டு வந்தது. வாங்கிக்க சொல்லுங்க” என்று நீட்டினான்.
நட்ராஜனோ ”அம்மா சுரபி வாங்கிக்கோ” என்றார்.
சுரபி தயக்கமாய் சிறு சிரிப்பை உதிர்த்து பெற்றுக்கொண்டாள்.
“ஆங்… சுரபி.. இங்க வச்சி திறந்து பாருங்க” என்று சற்று தள்ளியிருந்த மற்றொரு மேஜையருகே சுட்டிக்காட்ட, சுரபி தந்தையை காண, “நீ போம்மா… நான் சி.எம் கூட பேசறேன்.” என்றார்.
தந்தை ஆராவமுதனுடனும், இலக்கியன் அங்கிளுடன் பேசுவதாக கூற, உன்னிக்கிருஷ்ணன் கொடுத்த பரிசை வாங்கி, அவன் சுட்டிக்காட்டிய திசைக்கு நடந்தாள்.
ஆராவமுதனுக்கு இக்காட்சி உள்ளுக்குள் திகுதிகுவென காய்ந்தது.
சுரபியை உன்னிக்கிருஷ்ணன் பரிசை பிரிக்க கூற, அவளோ மெதுவாக கவரை திறக்க, அதற்குள் மற்றொரு பரிசு கவர் போட்டுயிருந்தது.
இன்னொன்று பிரிக்க அதற்குள் மற்றொன்று என்று, பிரிக்க பிரிக்க பரிசுக்கவரே வந்து சோர்வுற்றாள்.
இங்கே மகளை பார்த்தவாறு “என் மக ஆசைப்பட்டது எல்லாம் என்னால வாங்கி தர முடியும். ஆனா அவ உங்களை விரும்பறதா சொல்லி, உங்களுக்காக அலங்காரம் செய்துக் கொண்டு வந்து நின்றப்ப, ரொம்ப ஆச்சரியப்பட்டு போனேன்.
இத்தனை நாள் அரசியலில் எதிரியா நினைச்சி மேடையில் பேசியது எல்லாம், ஒரு செகண்ட் தூள் தூளாகிட்டிங்க.
உங்களை தப்பு சொல்ல முடியாது. அவ இளமை பருவத்தில் மனசுல மொட்டுவிட்ட காதல். அது மலர தானே அவ மெனக்கெடுவது.
எனக்கு இந்த பிரிச்சு வைக்கறதுல உடன்பாடில்லை. ஏன்னா அநியாயமா எது செய்தாலும் சுரபி அதுக்கு எதிரா தான் செயல்படுவா.
கண் முன்ன பெரிய காரணம் இருந்தும், ஆளுங்காட்சி பையன் தான் உனக்கு காதலிக்க கிடைச்சானா?னு கேட்க முடியாது.
அவ விரும்பிய உங்களை சேர்த்து வைக்க வாக்கு தந்திருக்கேன். அந்த ஒரு காரணம் மட்டும் தான். என்ன இந்த தேர்தல் முடியவும் அவ முதல்வரா பதவி ஏற்று, உங்க வீட்டு படியேறனும். இல்லை இப்பவே எதிர்கட்சி தலைவரோட பொண்ணு, வருங்கால முதல்வரை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டாலும் சரி, உங்க விருப்பமே. எப்ப கல்யாணம் வச்சிக்கறது எல்லாம் உங்க சௌகரியத்துக்கே சொல்லுங்க. வரதட்சனையா பத்து பைசா பாக்கி இல்லாம என் மகளை குறையில்லாம தங்கத்தேர்ல அனுப்புவேன்.” என்றார்.
இலக்கியனோ, “ஆக நண்பனுக்கு உன் மகளை கட்டி தரப்போறதில்லை. அரசியவாதி பையனுக்கு கட்டி தரப்போற.” என்று சூசகமாக கேட்டு நின்றார்.
“அது நீங்க எடுத்துக்கற கண்ணோட்டத்தில் இருக்கு.” என்று நட்ராஜனும் உரைத்தார்.
பல்லவியோ “என்ன பேசறிங்க? அண்ணா… ஏதோ உள்குத்தா பேசற மாதிரி இருக்கு. இவ்வளவு நேரம் நல்லா தானே போச்சு. என்னங்க நம்ம சுரபி அமுதனை நேசிக்கறா. அண்ணா உங்களுக்கும் தெரியும் தானே? அவ சின்ன வயசுலயே ஆராவமுதன் என்றால் பிரியம்” என்று கூறினார்.
“ஆன்ட்டி… ஊருக்கே தெரியும். தனியா வேற எங்கப்பாவுக்கு சொல்லணுமா? அங்கிளுக்கு மட்டும் நல்லா பதியற மாதிரி சொல்லுங்க.” என்று கூறியவன் உன்னிகிருஷ்ணனை பார்த்து, நட்ராஜனிடம், “உங்க பொண்ணு மனசை மாத்த ரொம்ப மெனக்கெடுக்கறிங்க.. அது முடியாது. அவ மனசுல இருந்து துளியும் என்னை அழிக்க முடியாது. எனிவே ட்ரை பண்ணுங்க. ஆன்ட்டி சமையல் சூப்பர். விரைவில் இந்த வீட்டு மருமகனா வந்தப்பிறகு, உங்களிடம் எனக்கு பிடிச்சதை கேட்டு சமைக்க சொல்லறேன்.
எனக்கு இந்த வீட்டு மாப்பிள்ளை நான் தான் என்று நல்லாவே தெரியும். கான்பிடன்ஸ் அங்கிள்.” என்று கூற நட்ராஜ் முகம் வெளிறியது.
தந்தை முகம் வெளிறி கிடக்க, ஆராவமுதன் ஏதோ நக்கலாய் பேசி சிரிக்க கண்டதும், அவசரமாய் பரிசு கவரை மொத்தமாய் பிரித்து, கிழித்தாள்.
“ஓ..ஓ.ஹ்.. மெதுவா பிரிக்கலாமே” என்று உன்னிக்கிருஷ்ணன் கூற, பதில் கூறாமல் பரிசை பார்த்தாள். கோடிகள் பெருமானமான வாட்ச் அதில் இருந்தது.
“ரொம்ப காஸ்ட்லி, மூன்று கோடி. வைரத்தை செதுக்கி அதுல பதிச்சிருக்காங்க” என்றுரைத்தான்.
இத்தனை வெகுமானமான பரிசு எதற்கு என்று வினா பிறந்தாலும், நன்றி கூறி தந்தையை நோக்கி வந்தாள்.
“ஹாய் கல்யாண தேதி பேசிட்டோம். இங்க ஆன்ட்டி கையால் சாப்பிட்டாச்சு. எங்கப்பாவும் இங்க வந்துட்டார்.
எவர்திங் ஓகேவா சுரபி. டைம் ஆச்சு இப்ப கிளம்பட்டுமா?” என்று அனுமதி கேட்டான் நாயகன்.
‘என்னோட பேசவேயில்லையே.” என்று மெதுவாக கேட்டாள் நாயகி.
“ஏய்… உன்னிகிருஷ்ணன் வந்திருக்கார். உங்கப்பா அவர் கூடவும் பேசணும்ல? அவர் அவரையும் பேச அழைச்சிருக்கார். நாகரிக்கமா நாங்க கிளம்பறோம்.” என்று கூறிவிட்டு, “அப்பா போகலாம்” என்று ஆராவமுதன் புறப்பட தயாராக, இந்த உன்னிகிருஷ்ணனால் இலக்கியன் அங்கிளிடமும் ஆராவமுதனுடனும் பேசமுடியாமல் போனதில் வருத்தம் கொண்டாள்.
“வர்றேன் தங்கச்சி, சுரபி வர்றேன்மா” என்று புறப்பட்டார் இலக்கியன். அவர் செல்லும் பொழுதும் பெரிதாக கோவத்தை காட்டிக்கவில்லை.
நட்ராஜனோ “சுரபி வாசல் வரை வழியனுப்பிட்டு வாம்மா” என்று கூற, சுரபி ஆராவமுதனுடன் நடையிட்டாள்.
“என்னங்க நீங்க. அண்ணாவை வரசொல்லிட்டு, இந்த தம்பியையும் வர வச்சி பேசினா என்ன அர்த்தம்? நீங்க பழசை மனசுல வச்சிட்டு பேசறிங்க. இது மட்டும் சுரபிக்கு தெரிந்தா கஷ்டப்படுவா.
உங்களுக்கு தெரியுமா? ஆராவமுதனை அரசியலுக்குள் வராம இருந்தா தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உங்க பொண்ணு கண்டிஷன் போட்டிருக்கா. அந்த தம்பி கண்டிஷனுக்கு ஓகேன்னு சொல்லி நம்ம பொண்ணுக்காக பொண்ணு பார்க்க வந்திருக்கார். இதெல்லாம் சுரபி கொஞ்ச நேரம் முன்ன அலங்காரம் செய்தப்ப சொன்னது.
நம்ம பொண்ணுக்காக அரசியலுக்கு வரமாட்டேன்னு முடிவெடுத்திருக்கார்னா எந்தளவு நம்ம பொண்ணு மேல காதலிக்கறார்னு யோசிங்க. நீங்க ஏதாவது ஏடாக்கூடமா செய்து சுரபி மனசுல உங்களுக்கான மதிப்பை இழந்துடாதிங்க” என்று காதில் போடவும், நட்ராஜ் திட்டம் வகுத்தவராய் மகளின் கண்டிஷனில் வன்மமாக சிரித்து கொண்டார்.
“சாரி அமுதா” என்று சுரபி வெளியே மன்னிப்பு கேட்க, “இந்த சாரியை முதலமைச்சரிடம் கேளு. கேட்பியா?” என்று இளக்காரமாக கேட்டான்.
சுரபியோ இலக்கியனை பார்த்து, “அங்கிள்… வெரி சாரி. அப்பா இப்படி உன்னிகிருஷ்ணனை வரவழைச்சது தப்பு தான். அதுக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கறேன்.” என்றாள்.
இலக்கியனோ அவள் சிரத்தில் கைவைத்து, “உன் மனசுக்கு ஏற்றது போல நடக்கும். மன்னிப்பு கேட்கற அளவுக்கு நீ எந்த தப்பும் செய்யலைம்மா. ஒரு காலத்தில் உங்க அப்பாவை இதே போல செய்தவன் நான். என்ன அப்ப அது தப்பு என்று நீ பொங்கின. இப்ப அதே தப்பு, இருக்கட்டும் இதெல்லாம் என் மகன் ஆசைக்கு முன்ன சாதாரணம்” என்று கூறி காரில் ஏறினார்.
சிதம்பரம் கதவை திறக்க, ஆராவமுதனோ, “உங்கப்பாவிடம் சொல்லு. எங்கப்பா ரொம்ப இறங்கி வர்றது எனக்காக மட்டுமில்லை. உனக்காகவும் தான். சின்ன வயசுலயே அவர் உன்னை மருமக என்று பேசியிருக்கார். அதை நினைவு வச்சிக்க சொல்லு” என்று கர்ஜித்து கூறி சென்றான்.
அதன்பின் ஹாலுக்கு வர, உன்னிகிருஷ்ணன் நட்ராஜ் மட்டும் பேசிக்கொண்டிருக்க, பல்லவியை தேடி சென்றாள்.
“ஏன்மா அப்பா இப்படி செய்தார். அப்பா அவரோட கெத்தை காட்டணும்னு நினைச்சா இலக்கியன் அங்கிளை இங்க வர வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்ல. வீட்டுக்கு அழைச்சிட்டு, பார்மாலிடிஸுக்கு பேசிட்டு, சாப்பிட வச்சி கடைசியில் சரியா பேசினாங்களா என்னனு கூட தெரியலை. இந்த உன்னி வேற” என்று கடுகடுத்தாள்.
“இங்க பாரு… எனக்கு உனக்கும் உங்கப்பாவுக்கும் புத்திமதி சொல்லுற அளவுக்கு அறிவு இல்லை. ஆனா அந்த தம்பி உன்னை விரும்புது. இந்த அரசியல் கட்சி, பிரிவு, பெரியவங்களோட ஈகோ, இதுக்கெல்லாம் உங்க காதல் முட்டிக்கிட்டா நீ உண்மையா காதலிச்சதா அர்த்தமேயில்லாம போயிடும். எந்த முடிவு என்றாலும் நீயா எடு. நிதானமா எடு.” என்று கூறிவிட, சுரபிக்கு ஏதோ மனதில் குழப்பமானது.
உன்னிகிருஷ்ணன் செல்வதற்கு காத்திருந்தாள்.
அவன் ஒன்பது பத்திற்கு செல்லவும், நட்ராஜ் அருகே வந்தாள்.
“பழிக்கு பழி வாங்கிட்டிங்களா அப்பா?
இலக்கியன் அங்கிள் முதலமைச்சரா இருந்தப்ப, அவருக்கு கீழே கட்சி தொண்டரா துணை முதலமைச்சராக இருந்தப்ப, பதவியோட சீனியர் ஜூனியரை தாண்டி நண்பனா வீட்டுக்கு போனப்ப, உங்களிடம் பேசியவர், சட்டுனு மத்திய அரசாங்கத்தில் சில பிரமுகர் வந்துட்டதா, உங்களை வெளியே நிறுத்தி அவமானப்படுத்தியதா அவருக்கும் உங்களுக்கும் சண்டை வந்தப்ப, இலக்கியன் அங்கிள், “ஆமாடா எனக்கு மத்திய அரசாங்க பிரமுகர்கள் முக்கியம். நீ எனக்கு கீழே வேலை செய்யறவன் தானே. காத்திருந்தா என்னனு கேட்டுட்டார். இதுல கட்சி ஆட்கள் முன்ன அவமானப்படுத்தற விதமா, அவங்க போகவும் பேச வந்ததில் உங்க ஈகோ, உங்க கோபத்தில அவரோட நட்பு ரீதியில் சண்டைப்போட, நட்பு வேற பதவி வேற, அரசியலில் யார் முக்கியம்னு படுதோ அவங்களை தான் பக்கத்துல வச்சிப்பேன்னு இலக்கியன் அங்கிள் பேசவும், அந்த கோபத்துல இலக்கியன் அங்கிள் நீங்க கண்மண் தெரியாம பேசினிங்க. அதுக்கு தானே கட்சி கொள்கை மீறிட்டதா பிரிந்து போனது?
அதுக்கு தானே தனிகட்சி ஆரம்பித்து, அவரை ஜெயிக்க முன்னேறுனிங்க. ஆனா இப்ப அதே போல அவரை காக்க வச்சிட்டு கேரளா முதலமைச்சர் பையனோட நீங்க மட்டும் பேசலாமா? ஒருத்தரை பேச வரவழைத்தா இடையில் இவருக்கு எதுக்கு அப்பாயின்மெண்ட் தந்திங்க? இது என் வாழ்க்கை.
அப்ப நான் ஆராவமுதனை காதலிக்கறேன்னு தெரிந்தும், பழிக்கு பழின்னு செய்யறிங்க.” என்று கோபமாய் கேட்டாள்.
நட்ராஜனோ தனது போனில் முந்தைய குறுஞ்செய்தியை தேடினார்.
அதில் உன்னிகிருஷ்ணனின் தந்தை தேவராயன் நட்ராஜனுக்கு நிலசரிவு ஏற்பட்டு சுரபி மக்களுக்காக உதவிய நாளில் இருந்து அனுப்பியதை காட்டினார்.
அதில் ‘உங்க பொண்ணு நிலசரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை டிவியில் பார்த்தேன். ரொம்ப மகிழ்ச்சி. சுரபியோட பேச்சை கேள்விப்பட்டதுண்டு. இன்னிக்கு சர்வீஸை பார்த்து ரொம்ப மகிழ்ச்சி. என் வாழ்த்தை உங்க பொண்ணுக்கு சொல்லிடுங்க’ என்று இருந்தது.
“உங்க பொண்ணோட மேடை பேச்சை, என் மகன் உன்னிகிருஷ்ணன் பார்த்தான். இரண்டு நாளா உங்க பொண்ணு பேச்சு தான் வீட்ல.” என்று அனுப்பியிருக்க, கூடுதலாக இன்றைய தேதியை குறிப்பிட்டு சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டிருக்க, நட்ராஜனும் “அதனால என்ன வீட்டுக்கு வாங்க பேசுவோம் என்று வரகூறி பேசியிருந்தார்.
”தேதியை கவனிச்சியாம்மா? நீ நிலசரிவுல மக்களுக்கு உதவிட்டு இங்க வந்த இரண்டாவது நாள். உன் அம்மா உடல்நிலை கேட்டுட்டு சந்திக்க வருவதா இருக்க, அப்ப வரச்சொல்லி சம்மதிச்சியிருந்தேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவருக்கும் அங்க நிலச்சரிவு மக்கள் நலனை பார்க்கற பொறுப்பு இருந்துச்சு. கேரளாவிலும் நிலச்சரிவு நடந்ததே. இப்ப கூட தேவராயனால் வர முடியலை. உன்னி கிருஷ்ணன் உன்னை பார்க்க ஆசைப்பட்டு வந்திருக்கார். அவரிடம் நேர்ல பேசி புரிய வைக்க நினைச்சேன். உன் வருங்கால மாமனார் சந்திக்க கேட்டதும் மறுத்துடாம சம்மதிச்சிட்டேன். தள்ளிப்போட்ட அதுவொரு தப்பு காரணமா போயிடும்னு தான். நான் செய்த தப்பு உன்னிகிருஷ்ணனனை வரசொன்ன அதே தேதியில் சம்மதிச்சிட்டேன். உன்னி வருவதை போன் பண்ணின பிறகு தான் நினைவு வந்தது. இதுல சிதம்பரம் கேட்டதும் இலக்கியனையும் வரச்சொல்லிட்டேன்.
இங்க உங்கப்பா தப்பு பண்ணலைம்மா. அதமட்டும் தெளிவுப்படுத்திக்கறேன். மத்தபடி ஆராவமுதனை நீ விரும்புவதை டிவில சொல்லாட்டியும் எந்தளவு உன் மனசுல அவன் ஆதிக்கம் செலுத்தறான்னு என்னால புரிந்துக்க முடியும்.
கல்யாண தேதி முடிவு பண்ணியாச்சு. தேர்தலுக்கு பிறகு தான் அறிவிச்சியிருக்கார் உன் மாமனார்.
உன்னிகிருஷ்ணனிடம் ஏற்கனவே உனக்கும் ஆராவமுதனுக்கும் இருக்குற காதல் விவகாரம் அறிந்தப்பிறகும் வந்துட்டு போயிருக்கார். இதை எப்படி எடுத்துக்க எனக்கு தெரியலை. தேவராயன் சொல்லிப்பார்னு நம்பறேன். அதோட இந்நாள் முதல்வர் இலக்கியனோட பையன் வாழ்வில் கேரள முதல்வர் தலையிட மாட்டார்னு நினைக்கறேன். இந்த சந்திப்பு உன்னை பாராட்டி பரிசு தர நினைச்சதா சொன்னார். அதுக்கு தான் வந்தப்பவும் பெரிதா தடுக்கலை.
எனிவே… அப்பாவை நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி. என் மக சந்தோஷம் எனக்கு முக்கியம்” என்று நகர்ந்தார்.
சுரபி தந்தையின் மனதை புண்படுத்தியதாக எண்ணி துவண்டாள்.
-தொடரும்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ரீடர்ஸ்
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 16)
ஆக மொத்தம், சுரபியை சுத்தி ஆராவமுதன், நட்ராஜ், இலக்கியன்… ஏன் சுரபியே கூட ஏதோ கண்கட்டு வித்தை மாதிரி எல்லாருமே ஒவ்வொரு விதத்துல சதி செய்யுறாங்களோன்னு தோணுது. என்ன நடக்கப்போவதுன்னு பொறுத்திருந்தே பார்ப்போம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Anna aaluku oru thitathoda than erukaanga. Paavam Surabhi than maatikitta
Interesting 👌
Superb 😍🥳🤩🤩 interesting 💥🤩💥🔥👍👍💯🔥💥
Superb 😍🥳🤩🤩 interesting 💥🤩💥🔥👍👍💯🔥💥 Amuthan vera level 💥
Illa pallavi ah thavira ellarumey yetho oru plan la irukaga even natraj avar um serthu than
புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹
Interesting😍
Sema twist. Intresting
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍
nice epi kerala cm paiyanum oru pakam just paka tha vanthu irukanu solraru apadi varavan ethuku ivlo costly gift vangitu varanum amutha love vaium vida mudila arasiyalaium vida matan athuku etho oru reason iruku ipo solla matan mrg mudinjathum veliya varum papom ena solranu
Interesting