Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-3

Hello Miss எதிர்கட்சி-3

அத்தியாயம்-3

  காபி பருகி முடிக்கும் வரை சுரபி ஆராவமுதனை கவனிக்கவில்லை. சுரபி காபியை பருக, ஆராவமுதன் அவளை பருகினான்.

  அவனது வெள்ளை சட்டை அவளது குட்டி ஷார்ட்ஸ் என்று அணிந்திருந்தாள் இதற்கு முன் சேலை கட்டி போர்த்தியிருந்தவள் தேகம், இன்று பால்கோவா வண்ணத்தில் பளிங்காக காட்சியளித்தது.
  முழுக்கை சட்டையை ஒதுக்கி மெதுவாக பருகிய காபி கோப்பையை கீழே வைத்தவள் அதன் பின் ஆராவமுதனை கண்டு உதடு சுழித்து, “இது என்ன இடம். இப்ப எங்க வீட்டுக்கு போகணும். ஏன் என்னை கடத்தி வந்திருக்க?” என்று சுவாதினமாக கேட்டாள்.

  ”அபாண்டமா பொய் சொல்லாதடி. கடத்திட்டு வந்தா இப்படியா ஃப்ரியா உலாத்த விட்டிருப்பேன். உன்னை கட்டிப்போட்டிருக்கணும். இல்லை  நாசம் செய்து இருப்பேன். அட்லீஸ்ட் நாயை காவலுக்கு வச்சி மிரட்டலாம். இது எதுவும் செய்யாம சமத்து பையனா உன்னை உன் ஆட்களிடமிருந்து காப்பாத்திருக்கேன். இட் இஸ் எ பிராமிஸ். உன் கட்சியாட்கள் தான் கிட்னாப் பண்ண வந்தாங்க. உங்க அப்பாவோட கட்சி கொடி அந்த கார்ல இருந்தது. சத்தியம் சத்தியம் சத்தியம்” என்று அவள் தலையில் சத்தியம் செய்தான்.
  சொல்லப்போனால் அவன் சத்தியம் வைக்கும் சாக்கில் அவளது சில்கி கூந்தலை தொட்டு தீண்டினான்.

  “பச்… கையை எடு” என்று தட்டிவிட்டு எழுந்து சுற்றி முற்றி இடத்தை ஆராய்ந்தாள்.

  கண்ணை சுழற்றி முடித்து “காபி எஸ்டேட்ல இருக்கோமா?” என்று கேட்டாள். சின்ன வயதில் இரண்டு முறை தந்தை நடராஜோடு இங்கு வந்திருந்தாள் சுரபி.

  இன்று நினைவு வரவும் “பரவாயில்லை… பழசை எல்லாம் நினைவுல வச்சியிருக்க” என்று கைகட்டி சுவரில் சாய்ந்தவன் அவளை ரசிப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை.

  அவன் அவளை ரசிக்கவும் மீண்டும் தன் நிலையை கவனித்து, “என்‌ டிரஸ் எனக்கு வேண்டும்” என்று ஆக்ரோஷமாய் கேட்டு நிற்க, “ஈரமா இருக்குன்னு சொன்னேனே. பிரேக்பஸ்ட் சாப்பிடலாமா?” என்று வெகுயியல்பாய் கேட்டான்.
  சுரபியும் வயிற்றை தொட்டுப்பார்த்தாவள் சம்மதமாய் தலையாட்டினாள். ஆராவமுதனிடம் குழைந்து பேசவும் வரவில்லை. அதே சமயம் கடுகடுப்பை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவும் முடியாது திணறினாள் பேச்சரசி.

   சூடான பாலில் கெளாக்ஸ் போட்டு தேனும் ஊற்றி தரவும், ஸ்பூனால் கலக்கி இரண்டு வாய் சுவைத்தார்கள்‌.

  இவளுக்கு நான் டிரஸை ரிமூவ் பண்ணியது பிரச்சனையில்லையா? என்று அவளை கூர்ந்து ஆராய்ந்தவனை, “சும்மா சும்மா என்னையே பார்க்காத. இதுக்கு முன்ன என்னை பார்த்ததில்லையா?” என்று சிடுசிடுவென மாறி கேட்டாள்.

  இதற்கு முன் தன்னை பார்க்காதவன் போல விழுங்குகின்றான்.‌ உடை மாற்றும் போது என்ற நினைப்பு போகவும், தன் மேல் பட்டனை இரண்டும் இறுக பற்றினாள்.

  ஆராவமுதன் தன் மனதை அடக்க இயலாது சிரிப்பை அடக்கி டிவியை உயிர்பித்தான்.

     அதில் “வயநாட்டில் நிலச்சரிவு செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

  “ஓ மை காட்.” என்று சத்தம் கூட்டி பார்க்க, ஆங்காங்கே வீடுகள் சரிந்து கிடப்பதை செய்தியில் காட்டினார்கள்.
  உயிர் சேதமும் நிலச்சரிவும் செய்தியில் பார்த்ததில் தேன் கலந்த உணவும் கசந்தது.

  “எவ்வளோ பேர் இறந்து கிடக்கறாங்க” என்று சுரபி கேட்கவும், “அடிக்கடி இந்த பக்கம் நிலசரிவு நடக்கும்னு கேள்விப்பட்டேன். ஆனா இந்த முறை அதிகமா உயிர் சேதம் அடைந்திருக்கு.” என்றவன் பார்க்க மனம் கஷ்டமாகவும் மற்றொரு செய்தி அலைவரிசையை மாற்றினான்.‌

  அதில், நடராஜன் கண்ணீருடன் “என் மகளை நேற்றிலிருந்து காணோம். அவளோட போன் இருக்கற இடத்தை டிரேஸ் பண்ணறதா சொன்னாங்க. ஆனா இப்படி நடக்கும்னு நான் நினைக்கலை.” என்று அழுதார்.

    “இப்படி நடக்கும்னா? என்னை நிர்வாணப்படுத்தி போட்டோஸை நெட்ல விட்டியா” என்று ஆராவமுதனின் காலரை பிடித்து உலுக்க, “அறிவுக்கெட்டவடி நீ, என்னை காதலிச்ச பொண்ணை ஊரறியா எவனாவது மானபங்கம் படுத்துவானா? நானே இப்ப தான் நியூஸை பார்க்கறேன். உங்கப்பா காரணத்தை சொல்லிட்டு அழவேண்டியது தானே. எனக்கு தெரிந்து உன்னை கிட்னாப் பண்ண வந்தாங்க. அவ்ளோ தான்” என்று சுரபி கையை தட்டிவிட்டான்.‌ தன்னை மூன்றாம் மனிதன் தரத்திற்கு அல்லவா ஒருநொடியில் சித்தரித்துவிட்டால் என்ற கோபம்.

  “அவங்க உயிரோட இல்லைன்னு நினைக்கறிங்களா சார்” என்று பேட்டி கேட்பவர் மைக்கை எடுத்து கேட்டதும், “முட்டாள் மீடியா” என்று ஆராவமுதன் முனங்கினான்.‌ சுரபி உயிரோடு இல்லையா என்ற கேள்வி அவனுக்கு அபத்தமாக தோன்றியது.ஸ

  “சார் பொண்ணு காணோம் என்றதுமே என் மனைவி பல்லவி மயங்கி விழுந்து ஹாஸ்பிடல்ல இருக்கா. இதுல மனசை காயப்படுத்தற மாதிரி கேள்வி கேட்காதிங்க. உங்களுக்கு இது வெறும் நியூஸ். எங்களுக்கு எங்க மகள் உயிர். அவ எங்கயாவது உயிரோட இருப்பா. தேவையற்று பேசாதிங்க” என்று மறுத்து அனுப்ப முயன்றார்.‌ எப்பேற்பட்ட தலைவராக இருந்தாலும் பெண் பிள்ளை காணோம் என்ற செய்தி உயிரை உலுக்கிவிடும் தானே?!

நடராஜனுக்கு பதிலாக நிவாஸ் தானாக முன் வந்து, டிவி தொகுப்பாளரிடம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தான்.‌ நிவாஸ் இரவோடு இரவாக விமானத்தில் ஏறி சென்னை வந்திருந்தான்.

“இல்லை சார் மேடத்தை மாநாடு முடிந்ததும், நான் தான் கார்ல வழியனுப்பினேன். இந்நேரம் இங்க வந்திருக்கணும். ஆனா ஏன்னு தெரியலை மேடம் ஏர்போர்டுக்கே வரலை. நான் தைரியமானவங்க, எப்படியும் கிளம்பி இங்க வந்துடுவாங்கனு இருந்தேன். அதனால் தான் காலையிலயே ஐயாவுக்கு போன் பண்ணி மேடத்தை பத்தி விசாரிச்சேன். அவங்க காணோம் என்றது தெரியவும் யாரோ கிட்னாப் பண்ணியதை தெரிவிச்சேன்.

  இப்ப மேடத்தோட போன் இருக்கற இடத்தை டிராக் பண்ணிட்டாங்க. கண்டிப்பா கிடைச்சிடுவாங்க அதுவரை டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்று முடித்து கொண்டான்.

  “பாரு… அப்பா எப்படி பீல் பண்ணறார். அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்களாம். உடனடியா ஒரு போன் பண்ண முடியலை. இந்த இடத்துல வேற டெக்னாலஜி எதுவும் இல்லையா?” என்று ஆராவமுதனிடம் எரிந்து விழுந்தாள்.‌
  
  “ஏய்… சும்மா வள்ளுவள்ளுனு விழாத. உன் போன் காரோட போச்சு என் போன் தண்ணில ஓர்க் ஆகலை. எல்லாத்தையும் பிரிச்சி வச்சிருக்கேன். டிரையர் வச்சி வாட்டரை டிரை பண்ணி அசம்பள் செய்து முயற்சி பண்ணிட்டேன். டிஸ்பிளே ஒர்க் ஆகுது. ஆனாலும் நெட் சிக்னல் எதுவும் வேலைக்கு ஆகலை. புரியுதா?

  எங்கப்பாவை பத்தி நேத்து இஷ்டத்துக்கு பேசினவ நீ. அப்படியிருக்க உன்னை என் கூட இங்க தங்க வைக்க எனக்கென்ன அவசியம்.

  நீ காணோம்னு தான் அவன் பேட்டி கொடுக்கணும். ஆனா அந்த நிவாஸ் கிட்னாப் பண்ணியதா சேனலுக்கு தகவல் தர்றான்‌. அதுயெப்படின்னு யோசிக்க மாட்ட?” என்று கடித்து துப்பினான்.‌

   சுரபி மெதுவாக தலைகுனிந்து சிந்தித்தாள்.
  நிவாஸ் கிட்னாப் என்கின்றான், ஆரவமுதனும் கிட்னாப் செய்ததாக கூறினான்.
   இதென்ன புரியாத புதிர்.

   நகத்தை கடிக்க சென்றவளின் கையை பிடித்து, “அழகா நகங்கள் வளர்ந்து நெயில்பாலிஷ் போட்டு வச்சியிருக்க. எதுக்கு தீவிரமா யோசிக்கறேன்ற பெயர்ல கடிச்சி வைக்க போறியா.” என்று எடுத்துவிட்டான்.

  சிறுவயதில் சுரபிக்கு கை சப்பும் பழக்கமுண்டு. அப்பொழுது ஆராவமுதன் இப்படி தான் எடுத்துவிடுவான்.

    சோகமாய் அவனை கண்டு வேறிடத்தில் நடந்து சென்றாள். இருக்கும் சோகத்தோடு பழைய சோகத்தையும் உள்ளிருந்து கிளப்பிவிடுகின்றானே.

தொலைக்காட்சி மாறி மாறி ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சியை ஒலித்தது.

   “நான் வெளியே போய் யாரிடமாவது போன் வாங்கி இங்க இருப்பதை தெரிவிக்கறேன். எனக்கு வேற டிரஸ் ஏதாவது தா” என்று கேட்டு நின்றாள். அவள் எதிரில் சாதாரணமான குறுஞ்செய்தி கூட அனுப்பி முயன்று பார்த்தான்.

  “என்னுடைய டீஷர்ட் இருக்கு ஷர்ட் இருக்கு பேண்ட் ஜீன்ஸ் ஷார்ட்ஸ் எது வேண்டுமோ கப்போர்ட்ல இருந்து எடுத்துப்போட்டுட்டு போ.” என்று கையை கப்போர்ட் முன் கோபமாய் காட்டினான். ஏதோ போன் வைத்தும் எதுவும் உதவாதது போல அல்லவா பேசுகின்றாள் என்ற கடுகடுப்பு.

  “விளையாடறியா? நான் இளைஞர் அணி தலைவி. சேலை தவிர்த்து ரோட்ல ஆம்பள மாதிரி டிரஸ் போட்டுட்டு போனா மீடியா என்ன பேசும்” என்றாள். அரசியலுக்கு என்று வந்தப்பின் காட்டன் புடவை தவிர அவள் உடுத்தியதில்லை.

  ”பெரிய மீடியா… ஃபுல்ஷிட். நீ செத்துட்டதா நியூஸ் போட்டு  கொண்டாடு துடிக்கறான்.

  இந்த மீடியாவுக்கா கவலைப்படறா?
  ஆனா நீ முட்டாள் தான்‌. நிவாஸ் கிட்னாப் பண்ணியதா சொல்லறான். அதுயென்ன ஏதுன்னு யோசிக்க மாட்டேங்குற? எனக்கு அவன்‌ உன்னிடம் ஓவரா நெருங்கறது சுத்தமா பிடிக்காது.” என்று கூறினான்.
‌ “அவன் என்னை நெருங்கினா உனக்கென்ன?” என்று கேட்டதும், சுரபி அருகில் வந்து கழுத்தை பிடித்து, ஆவேசமாய் “என்னை தவிர உன்னை யாரும் நெருங்கக்கூடாது புரிஞ்சுதா.” என்றான்.

சுரபி மனதிற்குள் ஆனந்த மழையை கொட்டித் தீர்த்தது. அவன் கையை தட்டிவிட்டு, “எதிரியான உனக்குள் இப்படியோரு உரிமைப்போராட்டமா? உன்னை காதலிச்ச முட்டாள் சுரபி நானில்லை.” என்றாள்.

  சொல்லிவிட்டு தனது உடை காய்ந்துவிட்டதா என்று ஆராய சென்றாள்.

  “முன்ன நீ என்னை காதலிச்ச, நான் உதாசினம் செய்தேன்‌. இப்ப‌..‌…” என்று நிறுத்தி அவளது விழியை அலசினான்.‌

  ‘இப்ப நான் விரும்புகிறேன். நீ உதாசினம் செய்யற சுரபி’ என்று கூறுவானென்ற சொல்லிற்கு காத்திருந்தாள்.

  அவனோ நேரம் எடுத்து “இப்ப எதிரியானாலும் ஒரு காலத்தில் என்னை விரும்பின சுரபி நீ ஆச்சே. அந்த உரிமையில் பேசறேன்.” என்றவன் தன் கால்சட்டை பேக்கெட்டில் கையை நுழைத்து ஓய்யாரமாய் நடையிட்டான். இவள் விடாக்கண்டன் என்றால் அவன் கொடாக்கண்டனாயிற்றே.

    செய்தி சேனலை ஓடவிட்டு மாற்றிக் கொண்டிருந்தாள் சுரபி. அவளை காணவில்லை என்றதும் கடத்தப்பட்டாதா என்று மாறி மாறி அலைவரிசையில் செய்திக் காட்டப்பட்டது. அதோடு இடையிடையே வயநாடு உயிர் சேதாரம் வீடியோ எல்லாம் ஓடியது. முதலில் உச்சுக்கொட்டி பார்த்தாள். எத்தனை உயிர்? இயற்கைக்கு கொஞ்சமும் இரக்கமில்லையா? என்று வஞ்சனையின்றி திட்டினாள்‌.

   ஒவ்வொரு அழுகையும் செவிக்குள் ஒலமாக கேட்டதும் அதை ஜீரணிக்க இயலாது அவளை பற்றி மட்டும் ஒலிபரப்பும் அவளது சுரபி சேனலை மாற்றிவிட்டாள்.
 
  “அநியாயமா இருக்கு. ஆளுங்கட்சி முதல்வரோட வீடு. இப்படி எதிர்கட்சி அமைச்சரோட பொண்ணு மிஸ்ஸிங் என்ற செய்தியே காலையிலருந்து ஓடுது. இதுக்கு நிலச்சரிவு நியூஸை தெரிந்துக்கிட்டாலாவது தேர்தலப்ப பேச எனக்கு வசதியா இருக்கு.” என்று அமைச்சர் மகன் என்பதாக அமர்த்தலாய் உரைத்தான் நாயகன்.‌

  செய்தி சேனலில் “எதிர்கட்சி தலைவரின் மகள் சுரபியோட அலைப்பேசியின் கடைசி சிக்னல் இங்க தான் காட்டுது. இந்த இடத்தை பார்த்திங்களா?” என்று காட்டவும், சுரபி சோபாவில் நுனிக்கு வந்தாள்.

  “இதுவா அந்த இடம்?” என்று டிவியின் ஒலியை இன்னமும் கூட்டினான்.

   மைல் கல்களின் சிலகாட்சிகள் அந்த இடம் என்று உறுதிப்படுத்தியது.

  நம்ம அங்கிருந்து வந்ததும் நிலச்சரிவு நடந்திருக்கு. உன் கார் அதுல கீழே விழுந்து உருண்டிருக்கு. இந்த கார் தான். உன்னை கிட்னாப் வந்த ஆட்கள். ஏய் ஹாக்கி ஸ்டிக்” என்று சுட்டிக்காட்ட, அவளது கட்சிக்கார் என்பது சுரபி உரைத்தாள்.
 
  “இந்த கார்.., இதே ஆட்கள், இந்த ஹாக்கி ஸ்டிக் வச்சி தான் நான் வந்த காரை உடைச்சாங்க” என்று கூறியவள் செய்தியை கவனித்தாள்.

  அங்கே ராட்சத எந்திரத்தால் சுரபியின் கார் மற்றும் அதிலிருந்த ஆட்களின் பிணங்கள், பொருட்கள் என்று எடுத்து வைத்திருந்தனர்.‌

  நிவாஸோ “சுரபி மேடத்தோட போன்.  இவங்களாம் கட்சி தொண்டர்கள், அவங்களாம் இங்க இருந்தா… அப்ப சுரபி மேடமும் இங்க தான் எங்கயோ மாட்டிக்கிட்டு… ஓ மை காட் இறந்துட்டாங்களா? ஆனா அவங்க உடல்?” என்று கூறி கவலைரேகையை முகத்தில் ஓடவிட்டான் செய்தி தொகுப்பாளர்.

  “நீ இங்க தான் இருப்பன்னு ஏன் இவ்ளோ கான்பிடன்ஸா சொல்லறான் உன் சேனல் தொகுப்பாளி. கிட்னாப் பண்ண முயன்றது இந்த கேங் என்றால் அப்ப கடத்தி கூட வச்சியிருக்கணும்னு முடிவுக் கட்டிட்டானா? இதெல்லாம் நிவாஸ் பிளானா” என்று ஆராவமுதன் கேட்டு சுரபி பதிலை எதிர்பார்த்தான்.

  “உன்னை போல தானே இங்க வேடிக்கை பார்க்கறேன். எனக்கென்ன தெரியும்? ஆனா இந்த ஆட்கள் எல்லாம் என்னை கடத்த வந்தவங்க. நிவாஸுக்கு இவக்களுக்கும் சம்மந்தம் இருக்குமான்னு தெரியலை.

விதியோட ஆட்டத்தை இப்ப கவனிப்போம். அதுக்குள்ள நமக்கு ஒரு க்ளியர் ஸ்டேட்மெண்ட் கிடைக்கலாம்” என்றாள்.

  ஆராவமுதனுமே, ‘ஆமா நானுமே இந்த விதியோட ஆட்டத்தை கவனிச்சிட்டு இருக்கேன். என்னை விரும்பறேன்னு சுத்தி வந்தப்பொண்ணு. ஆனா எதிரியா இப்ப பாவிக்கறா. இப்பவும் இவளுக்கு என் மேல காதலிருக்கா? இல்லையா? அதை தெரிந்துக்க ஆர்வமாயிருக்கு.’ என்று தனது ஆட்டத்தை தனியாக காய்நகர்த்தும் திட்டம் வகுத்தான்.

-தொடரும்.

12 thoughts on “Hello Miss எதிர்கட்சி-3”

  1. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    நிவாஸ் தான் ஏதோ டபுள் ப்ளே பண்றானோன்னு தோணுது.
    ஏன்ளா, கடத்தலா இல்லையான்னு தெரியாத முன்னாடியே கடத்தல்ன்னு போன் அடிக்கிறான். தவிர, அவங்ப்பாவோட கட்சி கொடி போட்ட கார், மண்சரிவு ஏற்பட்ட இடத்துலத்தான் சுரபியும் மண்ணோடு மண்ணா புதைஞ்சு இருக்கணும்ன்னு எதிர்பார்க்கிறானா…? இல்ல திட்டம் போட்ட மாதிரி அவளை கடத்தியிருக்கணும்ன்னு எதிர் பார்க்கிறானா…? சம்திங் பிஷ்ஷி..! பட்… அரசியல் கூத்து எத்தனை மோசமா இருக்குன்னு நினைக்கிறச்ச நமக்கே அருவருப்பா இருக்குது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. News ah rombha nalla telecast panriga uyir oda irukava la kanum nu sollurathu ok seri andha spot ah parthutu landslide la mattikitatha sollurathu kooda seri nu sollalam aana kidnapp pannitu inga than kootitu vandha ga nu sollura ga ithu la onnu vidakandan innoru than kodakannandan nalla vilayadriga vilayatu

  3. Kalidevi

    vara vara kuda irukavanga tha ethana sathi panranga athum avangaluku viswasama irunthute doubt varama panrangalama ellarum muttala iruka matangala inga surabi yosicha amuthan atha veliya solran but nivas ethukaga ipadi panran therinjikalam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *