Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-6

Hello Miss எதிர்கட்சி-6

அத்தியாயம்-6

  இயற்கையின் சீற்றம் எப்பொழுது வரும், ஏன் வரும் என்றெல்லாம் யாராலும் கணிக்க முடியாது.

அதோடு இயற்கை சீற்றம் பாவம் செய்தவர்கள், புண்ணியம் செய்தவர்கள், நல்லவர், கெட்டவர், குழந்தைகள், பெரியவர்கள், வாழ வேண்டியவர்கள், பணக்காரர்கள் ஏழைகள் என்று எந்த விதமான வட்டத்துக்குள் சிக்கிடாமல் தன் சீற்றத்தை காட்டிவிடும்.
 
  இயற்கை சீற்றத்துக்கு பல எடுத்துக்காட்டு உண்டு, சுனாமி, தீக்கு இரையான உயிர்கள், புயல் காற்று, வெள்ளம், பூகம்பம், அந்த வரிசையில் சுரபி ஆராவமுதன் இருவர்களின் அந்த நிமிடத்தை ஆக்கிரமித்தது நிலச்சரிவு என்ற அரக்கன்.

  அடிக்கடி மலைச்சரிவு பாதையில் நிலச்சரிவு ஏற்படுவது இயல்பாக நடப்பது என்றாலும், உயிர் சேதம் பொருட்சேதம் நேராமல் கடந்திடுவதை கடந்து போயிடலாம்.
  ஆனால் நேற்று முக்கிய செய்தியில் வயநாட்டில் ஏற்பட்ட சரிவு போல இங்கேயும் ஏற்பட்டது.

    ஆராவமுதன் இமை திறக்க, அவன் முன் இருட்டாய் காட்சி அளித்தது.
கஷ்டப்பட்டு போராடி இமைத்திறக்க கண்ணில் மண் விழுந்து உறுத்தியது.

அதை மீறி கடினப்பட்டு, இமை திறக்க, ஏதோ பள்ளத்தில் இடை வரை மணல்கள் அவனை சூழ்ந்திருந்தது.
மேலே வானத்திலிருந்து சிறு சிறு தூரல் இன்னமும் பொழிந்தபடி இருந்தது.

அதிகாலையில் கண்டப்போது வீட்டுக்குள் இருந்து இந்த சாரலை தூரலை ரசித்தான். இப்போழுது மணலோடு கசகசவென பொழிய முகம் சுழித்தான். அவர்கள் இருந்த பால்கனி ஒன்றும் பாதியுமாக அல்லவா காட்சியில் இருக்கின்றது. அங்கிருந்த சுரபி, அவள் கை பற்றியிருந்தாலே, வலது கையை பார்வையிட, அவன் கரங்கள் இன்னமும் சுரபியை பிடித்திருந்தது. ஆனால் சுரபி நெஞ்சுவரை மணல்கள் இருந்தது.

  இதில் மழை பொழிய, மணல்கள் தண்ணீர் என்று அவள் பக்கம் சேர்ந்தது. இப்படியே இருந்தால் நிலத்தில் ஐலசமாதி ஆனாலும் யாரும் அறியப்போவதில்லை என்ற நிதர்சணம் புரிய, ”சுரபி.. சுரபி” என்று அவளை தட்டினான்.‌

சுரபி அதிர்ச்சியில் இன்னமும் கண் மூடி கிடந்தாள்.

   “சுரபி” என்று உலுக்க, திடுக்கிட்டவள் இமை திறக்க, “அமுதா.. நிலம் சரியுது” என்று கடைசியாக அவள் கண்ட காட்சியை  கூறியவள் அதன்பின்னே அந்த நிலசரிவில் அகப்பட்டு உள்ளதை அறிந்து பயந்தாள்.

   “டோண்ட் பேனிக் டோண்ட் பேனிக். முதல்ல நிதானமா இரு.” என்றவன் எழ போராடி மணலை முட்டி தன் இரு கால்களை தூக்க முயன்றான்.

‘ரைட் லைப்ட்னு மூவாகி மேல ஜம்ப் பண்ணற மாதிரி மூவ் பண்ணி பாரு” என்று கூற அப்படியே முயன்றாள்.

  ஆராவமுதனுக்கு அவன் செயல் கைக்கொடுத்தது. உடற்பயிற்சி செய்யும் போது காலில் வலு கட்டி இருந்தாலும் காலை அசைத்து பார்த்து தூக்க முயல்வான். அதனால் இங்கே அதே மெத்தட் போல கைக்கொடுத்தது.

ஆனால் சுரபிக்கு இம்மியும் அசையாமல் துவண்டாள்.

  ஆராவமுதனோ, ஓரளவு எழுந்துவிட, சுரபிக்கு கைக்கொடுத்து இழுக்க முயன்றான்.‌

    “என்னால அசைய கூட முடியலை அமுதா. பேசாம நீ போ. நான் செத்துட்டா அப்பாவிடம் சொல்லிடு.” என்று அழுதாள்.

  “லூசாடி நீ… உன்னை காணோம் என்றாலே இங்கயிருந்து நகர மாட்டேன். என் கண் எதிர்ல இருந்துட்டு விட்டுட்டு ஓடுவேன்னு எப்படி நினைச்ச?” என்றவன் அவள் பக்கமிருந்த மண்ணை கையால் அப்புறப்படுத்தினான்.
 
   அவளுமே அவன் கண்ணில் கண்ட காதல் வலியில், மேனிசிலிர்க்க, இது போதும் என்ற ஆனந்தம் அடைந்தாள். ஆனாலும் ஆராவமுதன் தனக்காக போராடும் போது மண் போல மண்ணில் இருக்க முடியுமா? உடலை அசைத்து வெளிவர முயற்சி செய்தாள்.

  நெஞ்சுவரை இருந்த மண்ணை வயிறு வரை அகற்றியிருக்க சற்று எழும்ப முயன்றாள். ஆனாலும் வெளிவர கடினப்பட்டாள்.

  இதில் மேற்கொண்டு மழையால் சரிவாக, மீண்டும் ஒரிடம் தள்ளி சென்றது.

  இம்முறை ஆராவமுதன் வேகவேகமாய் சுரபி அருகேயிருந்த ஈரமண்ணை தோண்டினான்.‌

   அவன் கண்ணில் அதீத பதட்டம் கண்டவள் சுற்றி பார்வையிட, மறுபக்கம் கீழே விழும் தோரணையில் அப்பகுதி இருந்தது. கீழே அதளபாதாளம் போல காட்சிக்கு தெரிய, “அமுதா… ப்ளீஸ்… நீ இங்க இருந்து போ. என்னால நீயும் இங்க சிக்கிக்காத. ப்ளீஸ்… அமுதா… ப்ளீஸ் போ.. எனக்கு நீ மட்டுமாவது உயிர் பிழைச்சா போதும். அமுதா…” என்று பயத்தில் உலறினாள். ஆராவமுதன் ஒரு நொடி செயலை நிறுத்தி அவளை பார்வையிட்டு, மீண்டும் மண்ணை அப்புறப்படுத்தி, அவளை இழுக்க முனைந்தான்.
  “இலக்கியன் அங்கிளுக்கு உன்னை தவிர யாருமில்லை. என்னை காப்பாத்தறேனு நீயும் இதுல மாட்டிக்காத. அமுதா… போ” என்று விரட்டினாள்.
 
  ஆராவமுதனோ “போ போனு விரட்டற. என்ன என் மேல இப்பவும் அதே காதலா?” என்று கோபப்பட்டு, அவளை முட்டியிட்டு இரண்டு கைகளால் அவளை முதுகோடு அணைத்து இழுத்தான். இம்முறை மேல எழ முயன்றது. அதே பளுவுடன் அவளை இழுக்க மண் ஆட்டம் கண்டது.

அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவளை இழுத்து தூக்க, சற்று எடையுடன் அவன் மீது விழுந்தாள்.

பிறகு அவள் முட்டி வரை இருந்த மணல்களை இருவருமே அப்புறப்படுத்தி எழுவும், அவனை அணைத்துக் கொண்டாள்.

ஆராவமுதனோ அவளை விலகி நிறுத்தி, கைப்பிடித்து ஓட, அவளும் பின் தொடர்ந்தாள்.

  மணலுக்கு மேல ஓடவும் அதிர்வும் மழை துளியும் அருவியாக மாற, நிலம் மீண்டும் சரிய துவங்கியது.

   அங்கிருந்த மரத்தில் இருவரும் பிணைந்து கட்டிக்கொள்ள, மணல்கள் மழையால் அடித்து சென்றது.

  அதை நிதானமாக பயத்தோடு பார்த்து முடித்து, பாதையை கவனித்தனர்.

  ஆராவமுதன் தங்கிய இடத்தில் சுற்றி வீடே கிடையாது. தனியாக தங்கி செல்ல தான் முன்பு கட்டியது. முதலமைச்சராக மாறியப்பின் இலக்கியன் வருவது இல்லை. ஆராவமுதன் மட்டும் என்றாவது தலைகாட்டுவான்.
 
  மற்றபடி பணியாட்கள் மட்டுமே சுத்தம் செய்து வைப்பது. ஆராவமுதன் வருவதால் தனிமை விரும்பி அவனுமே அவர்களை வரவேண்டாமென உரைத்துவிட்டான். இப்பொழுது எங்கிருக்கின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை.

  முதலில் சமதளமான இடத்திற்கு நடத்தி அழைத்து சென்றான்.

  சுரபி துவண்டவளாக வந்தாள். அவள் உடுத்தியிருந்த சேலையில் மண் ஒட்டி எடை கூடியிருந்தது.
  சேலை ஈரத்துடன் ஒட்டியிருக்க நடக்கவும் கடினப்பட்டாள்.

   “நாம ஊருக்கு எப்படி போறது?” என்று கேட்டாள்.

   தனது ஷார்ட்ஸில் போனை எடுத்து பார்த்தான். ஈரமாக, மணலோடு புதைந்திருந்தது போல காட்சியளித்தது. ஆன் செய்ய முயல, அதுவோ வேலைக்கு ஆகவில்லை. ஏற்கனவே மழையில் நனைந்து வேலை  செய்தாலும் மீண்டும் வேலை செய்யுமா என்பது சந்தேகமே. 

  “போன் ஆன் ஆனா யாருக்காவது கால் பண்ணலாம்‌. ஆன் ஆகலை. எப்படியும் ஊர் பக்கம் போனா, யாராவது உதவுவாங்க” என்றான். அதுவரை நடராஜா சர்வீஸ் என்று புரிய நடந்தார்கள்.

   “ஜஸ்ட் மிஸ்.. நீ இல்லைன்னா நான் செத்திருக்க வாய்ப்பு உண்டு. நேத்து மட்டுமில்லை‌ இன்னிக்கும். என்னை விட்டு நீ ஓடியிருக்கலாம். ஆனா காப்பாத்த நின்றுட்ட” என்று கூறியவளுக்கு அவனை ஏறிட, “முதல்ல யாரோட உதவியாவது கிடைக்கட்டும் அதுவரை அமைதியா வா” என்று கூறியதும் மழை வலுத்தது.

  ”ஓ மை காட்” என்று சுற்றிலும் பார்வையை செலுத்தினான்.

  இங்க சரிவான பாதையில்லை ஆனா மழை பயங்கரமா பொழியுது. முதல்ல நாம எங்கயாவது பாதுகாப்பா தங்கணும்” என்றவன், கைகள் சுரபியை விடாமல் பற்றியபடி வேக நடையிட்டான்‌.

   பாறைகளுக்கு நடுவே சென்று ஒதுங்கலாம் என்றாலும் பயம் கவ்வியது‌. நிலசரிவை கண்ணால் கண்டப்பின் இப்படி ஒதுங்கவும் பயந்துவிட்டார்கள்.

  “நம்ம வீட்டை விட்டு கொஞ்சம் இருபது நிமிஷம் டிஸ்டன்ஸ்ல தான் ரோடு வரும். அதை தாண்டி ஒரு கால் மணி நேரம் கடந்தா ஊரோட கலந்துடும். ஆனா நாம வீட்டுல இருந்து எந்த பக்கம் நிலசரிவு ஆனதுன்னு தெரியலை. அதோட டைம் பார்த்தா… இரண்டு மணி நேரம் அங்க மண்ல சிக்கி மயங்கியிருக்கோம். இதுல மண்ணிலருந்து வெளியே வர போராடி, இங்க வர இன்னும் இரண்டு மணி நேரமாகியிருக்கு. இப்ப மணி பன்னிரெண்டு வெயில் தெரியாததானால் மழை பொழிவதாலையும் தெரியலை. நாம வேற ரூட்ல மிஸ்ஸாகி பள்ளத்துல விழுந்திருப்போம்” என்று கணித்து கூறினான்.

   “எ..என்ன சொல்லற” என்று முகத்தில் வழிந்த நீரை துடைத்தபடி கேட்டாள்.

“என்ன சொல்லறேன்னா? நம்ம இருந்த வீடு மலை உச்சிக்கு நெருக்கத்துல, சரிவு வந்து விழுந்ததுன்னா… பக்கத்துல இருக்கற  பள்ளத்தாக்கு பக்கம் காட்டுக்கிட்ட மாட்டியிருக்கோம்.” என்றதும் சுரபி நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தாள்.

  ஏனெனில் சிறு வயதில் உச்சியில் இருந்த வீட்டின் மறுபக்கம் பார்த்தால் பெரிய பள்ளத்தாக்கு. அங்கிருந்து குதித்தால் உயிரே போயிடும். சிறுவயது பயந்து அந்த பக்கமே எட்டி பார்த்திட மாட்டாள்.

  இன்று அந்தப்பக்கமே வீடு விழுந்ததாக அல்லவா ஆராவமுதன் உரைப்பது.

சுரபியின் அதிர்ச்சியை கண்டு “ஏய்… பயப்படாத.. நீயென்ன தனியாவா மாட்டியிருக்க? நான் கூடயிருக்கேன்” என்று உரைத்ததும், சுரபியோ ‘அதான் என் பயமே’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

   அந்த வானம் மழை தூவ, இந்த பூமி மழையால் மண்ணில் கரைய, அங்கங்கள் எல்லாம் மழை நீரோடு ஒட்டி உறவாடியது. அதில் அங்கங்கே ஒட்டிய மண்துகள்கள் சேர் இரண்டும் அடித்து செல்ல, ஈரமாய் நின்றாள்.

   சேலை உடலோடு ஒட்டியிருக்க, கொஞ்சம் வேகமாக பொழிந்த நீரில் மரத்தில் வழிந்த பகுதியில்  உடலை நனைத்து அடிக்கடி சேரை உதறினாள், கூடுதலாக அவ்விடம் விட்டு வந்து தண்ணீரை பிழிந்து உதறினாள்.

  லேசாய் ஆராவமுதன் நகைத்தான், இந்த நிலையில் இவனால் எப்படி சிரிக்க முடிந்தது என்ற ஐயத்தை கேட்க, ஆராவமுதனோ “நீ காலையில் என்னுடைய வொயிட் ஷர்ட், டார்க் மெருன் குட்டி ஷார்ட்ஸ் போட்டிருந்த. அதோட நிலம் சரிந்திருந்தா, இந்நேரம் இந்த கொட்டற மழைக்கு வெள்ளை சட்டை…  குட்டி ஷார்ட்ஸ்.. ம்ம்ம்” என்று கற்பனையில் ரசிக்க, “உதைப்பேன் ராஸ்கல்‌” என்று அதட்டினாள்.

  “ஆஹ்.. ஆமா… கிஸ் பண்ணியதுக்கு இந்நேரம் உதைச்சிருக்கணும். அடிக்கலையே.” என்று அடிக்கண்ணால் பார்த்தான்.

  சுரபியோ மீண்டும் இந்த பேச்சை எடுத்துவிட்டானே என்று குரல் உள்ளே சென்றிடும் வகையில், “நான் உன்னை அடிச்சேன். மரம் மாதிரி நின்றுட்டு இருந்த. அடியை ஹாயா என்ஜாய் பண்ணிட்டு இருந்த” என்றதும், “நான் கிஸ்ஸை தான் என்ஜாய் பண்ணினேன்” என்று சில்மிஷமாக பேசினான்.

  இரண்டு கையையும் பேக்கெட்டில் விட்டு மரத்தில் சாய்ந்து கொண்டான்.

   “நானும் என்ஜாய் செய்தேன்னு சொல்ல என்ன தடுக்குது சுரபி” என்றதும், “நான் அந்த பழைய சுரபி இல்லை. பத்தாவது படிக்கறப்ப, பஸ்ட் இயர் படிக்கற உன்னை காதலிச்சேன். அந்த வயசுல காதலிப்பதே தப்பு. அதை உன்னிடம் சொல்லி கேலிக்குள்ள ஆனது தான் மிச்சம். ஏதோ அப்ப உங்கப்பா எங்கப்பா நண்பர்கள் என்ற அடிப்படையில் அதிகமா பழகியதால வெட்கமில்லாம உன்னிடம் வந்து லவ் சொல்லிட்டேன். அதே சுரபி நான் இல்லை அமுதன். நீங்க என்னிடம் அத்துமீறி முத்தமிட்டிங்க. இனி அது மாதிரி பண்ணாதிங்க. காதலிச்ச பாவத்துக்கும் இப்ப என் உயிரை காப்பாத்தியதற்கும் சேர்த்து நீங்க செய்ததை மன்னிக்கறேன்.” என்றாள் பெரிய நியாயவாதியாக.

  “ஓ… பெரிய மனசு பண்ணி மன்னிக்கற? ஃபைன்… ஃபைன்.. இந்த காட்டுல நான் உன்னை ரேப் பண்ணிட்டா அதுக்கும் சேர்த்து மன்னிப்பியா?” என்று ஆவேசமாய் வர, சுரபி பயந்து இரண்டடி பின்னடைந்தாள். இவ்வளவு நேரம் உயிரை காப்பாற்றி உதவியவன், அவள் மீதே விழுந்து அவளை நெருங்க நினைக்க, சுரபி ஆராவமுதனின் ஆவேசத்தில் பயந்தே போனாள்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

12 thoughts on “Hello Miss எதிர்கட்சி-6”

  1. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 6)

    இதுங்க ரெண்டு பேருக்குமே கிறுக்குத்தான் புடிச்சிருக்கு.
    இந்த மாதிரி கிறுக்குத்தனமெல்லாம் ஒருத்தருக்கு புடிச்சிருந்தாலே தெளிய வைக்கிறது கஷ்டம். இதுல ரெண்டு பேருக்குமே, ஒரே வகையான கிறுக்கு புடிச்சிருந்தா அதை தெளிய வைக்கிறது ரொம்ப ரொம்ப குஷ்டம்… அதுவும் அகங்காரம் + அலட்சிய கிறுக்காச்சே. அது அத்தனை சீக்கிரம் போயிடுமா என்ன…?

    அது சரி, இந்த மாதிரி மழை பொழிஞ்சா மண் சரிவு ஏற்படும்ன்னு தெரிஞ்சே, ஏன் இங்க எல்லாம் வீடு கட்டுறாங்களோ தெரியலையே…? அதுலேயும் கேரளா என்றாலே மழையைத் தவிர்க்க முடியாது தானே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Evala close panna ye and nenachano.. kadaisila athe maathri nadakuthu.. evala poi nikra vara setha listless sethruvanuga

  3. நிலச்சரிவு ஏற்பட்டும்…இவங்க பேச்சு இன்னும் மாறல….என்னத்த சொல்ல….🤦‍♀️🤷‍♀️

  4. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 renduperum erukura nelamaiyila ennaiya pannitu erukeenga awww😬😬😬

  5. Kalidevi

    inga evlo prachanaila matitu irukinga ithula amutha nee ena pesura etho pechila mattum tha apadi summa pesura patha ipo ena da taknu ippadi ketutu nerungura surabiya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *