அத்தியாயம்-11
ஆராவமுதன் நெஞ்சில் சுரபியை சாயை வைத்து “இங்க ஒரு தாமரை முகம் பதிஞ்சதே எங்க எங்கன்னு என் இதயம் அலறிடுச்சா.
ஊர்லயிருந்து சென்னை வந்ததும் அவ முகத்தை மீண்டும் பதிய வைக்கறேன்னு இதயத்தை சமாதானம் செய்தேன்.” என்றவன் மையல் பேச்சில் திமிறினாள்.
“இங்க பாரு அமுதன். உங்களுக்கு வேண்டுமின்னா எல்லாமே விளையாட்டா இருக்கலாம். எனக்குனு சில பொறுப்புகள் இருக்கு, பதவி இருக்கு, அதுக்கு களங்கம் வராம பார்த்துக்கணும். நமக்குள்
பேச வேண்டியதை பேசிட்டா நான் புறப்படுவேன்” என்று நறுக்கு தெறித்து விடும் அளவிற்கு குரலில் வார்த்தையை உச்சரித்தாள். ஆராவமுதனுக்கு தந்தை சென்னது நினைவு வந்தது. இது உன்னை விரும்பிய பழைய சுரபி இல்லை. இவள் சூறாவளியாக சுழன்றுக்கொண்டிருக்கும் புயல் தான்.
“முதல்ல உட்காரு” என்றான் அசட்டையாக. அவளுக்கென சூப்பும் சீஸ்கட்லெட்டும் கொண்டு வரப்பட்டது.
“மீடியாகாரன் மட்டும் உன்னையும் என்னையுமா சேர்த்து வச்சி பார்த்தா கிழிகிழினு கிழிப்பாங்க. புரிஞ்சு தான் வர சொன்னியா? உனக்கென்ன… நீ உன் வேலையை பார்த்துட்டு போயிடுவ. கட்சில உறுப்பினரா இருப்பது நான் தானே. இதுல சூப்பாம் சூப். மீடியா பார்த்தா அவங்களுக்கு நாம தான் சூப். தினமும் நம்ம தான் கன்டென்ட்” என்று கோபமானாள்.
“இப்ப மட்டும் அவங்களுக்கு நாம கன்டென்ட் இல்லை. ஆல்ரெடி உன்னையும் என்னையும் இணைத்து கிசுகிசு மீம்ஸ் பறக்குது.
சரி அதை விடு. நான் ஆளுங்கட்சி இளைஞர் அணி தலைவரா பொறுப்பை ஏற்க போறேன் சுரபி.” என்று கூறினான்.
சுரபி திடுக்கிட்டு போனவளாக, நிமிர்ந்தாள். இலக்கியனை எதிர்த்து, ஏட்டுக்கட்டி பேசும் சுரபிக்கு ஆராவமுதன் அவ்விடத்தில் வந்தால் திணறி போவாளே, அவனோ “இதை அப்பாவிடம் சொல்லிட்டு நேர உன்னிடம் சொல்ல தான் வந்தேன்.” என்றதும் “ஓஹோ இதை சொல்ல தான் கூப்பிட்டியா. இந்த சந்திப்பு நீ ஊர்லயிருந்தப்பவே பிக்ஸ் ஆனது. அப்படின்னா இதுக்கு என்ன அர்த்தம்?” என்று கட்டுப்படுத்திய கோபத்தில் நிதானமாக கேட்டாள்.
ஆராவமுதனும் அதே நிதானத்துடன், “சந்திக்கணும்னு சொன்னது வேற ரீசனுக்காக, இந்த பொறுப்பை ஏற்க போறதா நினைச்சது இன்னிக்கு தான். இப்ப உன்னிடம் முதல்ல சொல்ல ஆசைப்பட்டேன். நான் பொறுப்புல பதவில வர்றது உனக்கு பிடிக்கலையா? சரி நமக்குள் அரசியல் டாபிக் பேச அழைக்கலை.
சந்திப்பிற்கான காரணம் ஓன் நைட் உன்னோட இருந்ததை பத்தி பேச.” என்றதும் சுரபிக்கு அங்கமெல்லாம் உதறல்.
“ஆக்சுவலி… என் போன் நிலசரிவு ஆன இடத்துல உதவி செய்தோமே அங்க மிஸ்ஸாகிடுச்சு.” என்றான்.
“அதனால என்ன? புது போன் வாங்கியிருப்ப தானே?!” என்று சலிப்பாய் பதில் தந்தாள்.
நடுவுல கேட்ட கேள்விக்கு பதில் தராம பேசறா இவளை..’ என பல்லை கடித்து அடக்கிக்கொண்டு “போன்ல நீயுமா நானும் செல்பி எடுத்த போட்டோஸ் இருக்கு. எப்ப வேண்டுமென்றாலும் அது வெளிவரலாம். அப்படி வந்தா என்ன செய்ய?” என்று கேட்டான்.
“போன் மழையில மண்ல கிடந்தது. அது ஓர்க் எல்லாம் ஆகாது.” என்று கூறினாள்.
“சப்போஸ் வந்தா… ஏன்னா என்னுடையது சாதாரண போன் இல்லை. வாட்டர் ப்ரூப், அந்த போன் விளம்பரமே நீச்சல் குளத்துல, மழையில் ஜாக்கிங் போனாலும் அணிந்து செல்லற மெத்தட் என்ற விளம்பரம் வச்சி வந்தது. லாஸ்ட் டைம்மே நான் சரிப்பண்ணியதும் போன் வேலை செய்ததை உனக்கு தெரியும் தானே! தொலைந்து போனதை திருடியவன், போன் ரிப்பேர் கடையில் கொடுத்து சரிப்பண்ணிருந்தா…” என்று கூறி ஆராவமுதன் அவளை ஆழ்ந்து நோக்கினான்.
“இந்த டாபிக் பேசவா கூப்பிட்ட?” என்ற சலிப்பு சுரபி முகத்தில் கசிந்தது.
“போட்டோ லீக் ஆன உன்னோட ரியாக்ஷன் என்ன?” என்றான் அழுத்தமாக. அவன் கேட்டு நின்ற தோரணை ஏதோ மனதிற்குள் உதைத்தாலும், “அப்..அப்..அப்படி ஏதாவது நடந்தா பார்ப்போம்” என்றாள்.
“ஓ…. நைஸ்.. பார்ப்போம்” என்று தன் புது போனில் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்த போட்டோவை காட்டினான்.
சுரபி எழுந்ததில் சூப் சிதறியது, உடையிலும் கொஞ்சம் சிதற, படபடப்பாய், “எ..எப்ப லீக் ஆச்சு” என்று கேட்டாள்.
“ஜஸ்ட் கொஞ்சம் முன்ன தான். வேறொரு வொர்ஸ்ட் சேனல்ல வந்தது. உடனே சம்பந்தப்பட்ட ஆட்களை வச்சி முடக்கிட்டேன். பட்… இப்ப அதை பார்த்த சிலர், டவுன்லோட் செய்து கொஞ்சம் கொஞ்சமா டிரெண்டிங் ஆகுது. எப்ப வேண்டுமென்றாலும் ‘பூம்’னு வெடிக்கும். சேனல்காரனுங்க படையெடுக்கலாம்.” என்றதும் சுரபி தொப்பென்று அமர்ந்தாள்.
லேசாக தலையை தாங்கி பிடித்தவளிடம், “சூப்” என்று முன்னிருத்த, “ஐ கில் யூ. உன்னால என் கெரியரை ஸ்பாயில் ஆகுது. இதுல சூப்பாம் சூப்” என்று ந
தட்டிவிட்டாள்.
சில நிமிடத்தில், நிதானமடைந்து, “இந்த வீடியோ இப்ப தானே வந்திருக்கும். நீ அணியில் பொறுப்புவகிக்க முடிவெடுத்ததும் இப்ப. அப்படின்னா… இன்னிக்கு சந்திக்கணும்னு சொன்னது எதுக்காக? பிகாஸ் நீ அங்கிருந்தப்பவே என்னிடம் பேச நினைச்ச விஷயம் என்ன?” என்று கேட்டாள்.
அவன் மௌனமாக நிற்க, அவன் சட்டை காலரை பிடித்து “சொல்லு… சொல்லு… நீ வந்ததிலருந்தே என் கெரியர் அழியுது. நான் எடுத்த நல்ல பெயர் எல்லாம் ஸ்பாயில் பண்ணிட்டு இருக்க… ஒரு வேளை நீ உன்னோட வளர்ச்சிக்கு, என்னை அச்சாணியை போடறியா” என்றதும் ஆராவமுதனிடம் அதே மௌனம். அரசியலில் கைதேர்ந்த யூகத்தை அசால்டாக கண்டறிந்து யூகித்து விட்டாளே என்ற ஆச்சரியம்.
அவன் கணித்த சுரபி அவனிடம் பூனை போல பம்மி காதலை உரைத்தவளாயிற்றே!
“இந்த மௌனத்துக்கு என்ன அர்த்தம் அமுதன்? பட்டுபட்டுனு பேசுவ.” என்றவள், சட்டையை இன்னமும் கூடுதலாக இறுகி பிடித்து, “அப்ப… என்னை கடத்தியது நீ தான். உன்னோட இருக்க வச்சி, நான் சேர்த்து வச்ச நல்ல பெயரை ஸ்பாயில் பண்ண பிளான் போட்டிருக்க.
நான் நிலசரிவு நடந்த இடத்துல இருந்து உதவி செய்தா, எங்க எனக்கு பெயர் வந்துடும்னு, என்னை மீடியாவிலருந்து காப்பாற்றி, அம்மாவை பார்க்க முதல்ல போன்னு என்னை நேக்கா அனுப்பிட்டு, நீ நல்லவனா உதவி செய்து ஒட்டுமொத்த மீடியாவை பிடிச்சி மக்கள் கவனத்தை ஈர்த்துட்ட.
உன்னோட அரசியலுக்கு பிள்ளையார் சுழியா அதெல்லாம் யூஸ் பண்ணிருக்க. குறுக்கே நான் இருப்பதால், என்னை.. என்னோட பழைய காதலை வச்சி மடக்க பார்க்கற ரைட் மிஸ்டர் ஆராவமுதன்.” என்று கேட்ட தோரணையில் லேசாக புன்முறுவல் உதிர்த்தான்.
“ஹலோ மிஸ் எதிர்கட்சி… இப்படி சந்தேகத்தோட தான் என்னோட பழகினியா?” என்று சமாளிக்கும் விதமாக கேட்டான்.
“என் சந்தேகம் ஒன்னு கூட உண்மையில்லைன்னு சொல்லு?” என்று அவள் பார்த்த பார்வையில் ஆராவமுதன் அவளருகே நெருக்கமாய் அமர்ந்தான்.
“உன்னை கிட்னாப் செய்ய நினைத்தவங்க உன் கட்சி ஆட்கள் தானே? முகத்தை மூடியிருந்ததால் நீ கவனிச்சிருக்க மாட்ட. ஆனா நான் அடித்து போட்டது அந்த மூன்று பேரை தான். எனக்கு அப்ப அவங்க உன் கட்சி ஆட்கள்னு கூட தெரியாது. உன்னை அடிக்க முயற்சிக்க வந்ததை, என்னால தாங்க முடியலை காப்பாத்தினேன். உன்னை கிட்னாப் செய்யணும்னா நான் என் கட்சி ஆட்களை இல்லை அனுப்பியிருக்கணும்.
அந்த நேரம் நான் அங்க வந்தது தான் தப்பு. என்ன செய்ய, உன்னை சந்திக்க வந்ததுக்கு முக்கிய காரணம், பெயர் வச்ச எங்கப்பாவையே உன்னால எப்படி டி எதிர்த்து பேச முடியுதுனு கோபமா கேட்க வந்தேன். ஆனா சிட்டுவேஷன் டோட்டலா என்னை மாத்திடுச்சு.
என்னை விரும்பினப் பொண்ணு, இப்ப என் மனசை கொள்ளையடிக்கிற விதத்துல இருந்தாலும், நேர்ல என்னை மொத்தமா சாச்சிட்ட.
டிரஸ் கூட ரொம்ப ஈரத்தோட குளிருல நடுங்கின. எனக்கு அப்ப மாற்றிடலாம்னு தோன்றுச்சு. என் ரூம்ல கைக்கு கிடைத்த டிரஸ்ஸை எடுத்து தான் உனக்கு போட்டேன். அது செக்ஸியா இருந்தது.. அதுக்கு பிறகு நடந்த முத்தம், யுத்தம் எல்லாம், நீ முன்ன எப்படி என் மேல பரிசுத்தமான அன்பை எண்ணி காதலிச்சியோ, அதே அளவு உன் மேல நான் வச்சிருக்கற காதலால் மட்டுமே நிகழ்ந்தது.
மேபீ… உன்னை நிலசரிவுலயே இருக்க வச்சா, எங்க நமக்குள்ள இருக்கற உறவை பத்தியே கேட்டு உசுரை வாங்குவாங்கன்னும், அதோட நீ யூகித்த மாதிரி என் அரசியல் என்ட்ரிக்கு நான் பிள்ளையார் சுழியா மக்களுக்கு உதவி செய்தேன். ஏதாவது செய்து தானே பதவிக்கு வரமுடியும். சும்மாவே எனக்கு இளைஞர் அணி போஸ்டிங் தூக்கி கொடுக்க முடியாது. மற்ற தொண்டர்களுக்குள் கேள்வி கேட்பாங்கள்ல?
உன்னை அனுப்பிட்டு மக்களுக்கு உதவியது எல்லமே தேர்தலை முன்னிருத்தி நான் நடத்திய வியூகம். வெளிப்படையா ஒத்துக்கறேன்” என்றான். சுரபிக்கு இந்த சந்தேகம் அங்கிருந்து வந்த நாள் முதலே இருந்தது.
சுரபி கையை பிடித்து, “அரசியலை தாண்டி நம்மளை பத்தி பேசலாமா? நீ என்னை விரும்பின. நான் முன்ன அக்சப்ட் பண்ணலை. இப்ப நானும் உன்னை விரும்பறேன். அக்சப்ட் பண்ணுவியா மாட்டியா?” என்றான் ஆராவமுதன். அவன் அழைத்தது இந்த காரணம் தானே.
இப்பொழுதும் காதலிக்காமலா அவனிடம் இழைந்தது
அதை சொன்னால் தலைக்கனம் ஏறும் என்று பேச்சை தவிர்க்க, “இந்த பிக்சர்… போன் மிஸ்ஸிங்னு சொன்ன?” என்று அவள் கேட்டாள். ஏனெனில் அவனுடன் எடுத்த புகைப்படத்தில் அவனது உடையை கவர்ச்சியாக அல்லவா அணிந்திருந்தாள்.
“அது வெளியே கசிந்தாலும் போட்டோவை ஒன்னுமில்லாம மாத்திடலாம். அங்கிளும் அப்பாவும் முன்னால் நண்பர்கள். அந்த நட்பு ஊருக்கே தெரியும். அந்த பழக்கத்தில் மலர்ந்த காதல்னு சொல்வேன். காதலையும் அரசியலையும் குழப்ப வேண்டாம்னு க்ளியரா பேசுவோம். உன்னுடைய முடிவு சொல்லு” என்று கேட்டவனிடம் பார்வையை வெறித்தாள்.
“நான் மறுக்க மாட்டேன்னு பிளான் பண்ணி என்னிடம் செக்மேட் வைக்கற அமுதா” என்றதும் சிறு முறுவல் ஆராவமுதன் உதட்டில் வந்து சென்றது. உண்மையில் அவன் நினைத்ததும் அதுவே.
சுரபி அதிகம் யோசிக்காமல் தொண்டையை செருமி, “உன்னை இப்பவும் விரும்பறேன்.. கல்யாணம் பண்ணிக்கலாம். பட் ஒன் கண்டிஷன்.
நான் உன்னை கல்யாணம் செய்வதா இருந்தா, நீ அரசியலில் கால் பதிக்கவே கூடாது. பிள்ளையார்சுழியா நீ செய்த உதவிகள், திட்டங்கள் எல்லாம் தவிடுப்பொடியாகும்.
உனக்கு நான் முக்கியம்னா அரசியலில் ஒரு சின்ன கோட்டை கூட நீ தொடக்கூடாது. நான் வேண்டாம்னா அடுத்த மீட்டிங்ல கட்சி உறுப்பினரா இளைஞர் அணி தலைவனா அறிவித்துடு. அரசியலில் எதிர்கட்சியா சந்திக்கலாம்” என்று புறப்பட ஆயத்தமானாள்.
“சுரபி… அப்ப மீடியா அந்த போட்டோ காட்டி உன்னிடம் கேட்டா?” என்று நிறுத்த முயன்றான். அவன் நினைத்தை அடியோடு மறுக்க கூறுகின்றாளே என்ற கோபம். அரசியலுக்கு வரவேண்டாமென தடையிட்டு தனக்கே எதிர் செக்மேட் வைத்து நிற்கின்றாளே.
இவன் தான் காதலென்ற ஆயுதத்தை வீச நினைத்தது. அதை அவளும் வீசிவதை கண்டு ஆச்சரியம், அதிர்ச்சி இரண்டையும் மறைத்து கேட்டான்.
சுரபி வறட்சியாக “இப்பலாம் நெருக்கமா, உடலுறவு காட்சியை கூட ஏஐ துல்லியமா போடுது. நான் மீடியாவிடம் எதையாவது சொல்லி சமாளிப்பேன்.” என்றாள்.
“அது உண்மையான போட்டோ ஏஐ இல்லைன்னு நான் மீடியாவிடம் சொல்வேன்.” என்றான் திமிருடன். கிட்டதட்ட அழகான மிரட்டல்.
“ஒரு வீடியோ ஒரு போட்டோவுக்காக என்னால அரசியலை கை கழுவ முடியாது அமுதா. உண்மை பொய் எதுவேண்டுமென்றாலும் சொல்லு, நான் பேஸ் பண்ணிக்கறேன்.
ஏன்னா… உன்னால அவமானப்பட்டு இருந்த சமயம் என்னை உணர்ந்து அடையாளப்படுத்திக்கிட்டது இந்த அரசியலில் தான். அரசியல் என் உயிர்மூச்சு. நல்லது கெட்டதுன்னு எது வந்தாலும் அதை தைரியமா நான் பேஸ் பண்ணிடுவேன்.” என்றாள்.
“அப்ப என் மேல வச்ச காதல்? அன்னைக்கு ஒன் நைட் என்னோட தங்கியது” என்று கேட்டான். அன்று போர்வையாக சேலையை போர்த்திக்கொண்டாலும், கூடுதலாக அவளுக்கு போர்வையாக மாறியவன் ஆராவமுதன் தானே. அந்த உரிமையில் தான் இத்தனை திட்டமும் வகுத்தான். எப்படியும் காதலித்தமையால் மணப்பாளென்ற மிதப்பும் இருந்ததே!?
“நான் மட்டுமா காதலிச்சேன். நீயும் காதலிப்பதா சொல்லற. உனக்கு என்னை மிஸ் பண்ண கூடாதுன்னு தாட்ஸ் இருந்தா நீ முடிவெடு அமுதா. என்னோட காதல் உயர்வா இல்லையானு, அந்த இரவில், என்னையே தந்து நான் புரியவச்சியிருக்கேன்.
இல்லைன்னா ஒரு ஆம்பள நீ, அதுவும் என் கட்சிக்கு எதிராளி. என் டிரஸை சேஞ்ச் பண்ணி விட்டதுக்கு தாம்தூம்னு குதிக்காம, உன்னுடைய முத்தங்களை ஏற்று, உன்னோட தேவைக்கும் இடம் கொடுத்து இத்தனையும் செய்தேனே.
இனி உன் காதல் பெருசுன்னா நீ தான் முடிவெடுக்கணும். அப்படியில்லைன்னா கூட, உனக்கு லாபம் தான். ஜம்முனு என் மானத்தை வாங்கி, அதிலையும் அரசியல் செய்.” என்று கம்பீரமாய் புறப்பட்டாள்.
இத்தனை நேரம் வீம்பாக பேசிவிட்டு லேசாக தொண்டை கவ்வி பிடிக்க, காரில் ஏறினாள்.
ஆராவமுதன் செல்பவளை ஆச்சரியமாய் காண்பதை உலுக்கியது அவனது அலைப்பேசி ரிங்டோன்.
“என்னடா… ஏதோ மறுக்க முடியாத அளவுக்கு சுரபிக்கு செக் வச்சதா சொன்ன. உன்னை கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டாளா?” என்று கேட்டார் இலக்கியன். சுரபி கார் செல்வதை சிதம்பரம் கூறியதும் மகனுக்கு போனில் அழைத்துவிட்டார்.
“முடிவு என் கையில் கொடுத்துட்டு போயிட்டாப்பா. மத்ததை நேர்ல பேசறேன்.” என்று அணைத்துவிட்டு தலையை தாங்கினான்.
“அமுதா… குரல் ஏன்டா வருத்தமா இருக்கு” என்றதை கேட்டபடி இருந்த இலக்கியனோ ‘அவ வகையா என்னிடம் சிக்கியிருக்கா. நிச்சயம் என்னை கல்யாணம் செய்ய சம்மதிப்பா’ என்று கெத்தாக கூறி சென்றவன் குரலில், ஏன் வருத்தம் என்றவரோ, மகனிடம் நேரில் கேட்டுக்கொள்வோமென விட்டுபிடித்தார் இலக்கியன்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
வாசகர் பூஸ்ட் பத்தலை.
பிரதிலிபில இருந்த அந்த எனர்ஜி இன்னமும் வரலை. வாசகரான உங்களை ரொம்ப மிஸ் பண்ணறேன். எனிவே வாசிக்கற அனைவருக்கும் என் நன்றிகள். வாசகருக்கான உண்மையான அன்பா நான் புதுக்கதைகளா எழுதறது என்ற எண்ணத்தில் இருக்கேன். என் ரீடர்ஸுக்கு அது தான் வேண்டும்னு எனக்கு தெரியும்.
Wonderful narration. Surabhi super super.
Wow super sis semma epi 👍👌😍 dei amudha yaaru kita surabi da eppo unakey check vechitu poita parthiya eppo enna panna pora nu parkalam🤨🧐🤔
எதிர் பார திருப்பம் நைஸ்
Wow Surabhi gettha kaatita. Etha than except pannom Eva kitta. Pennoda unarvugala ayuthama use panrathe anngal vazhamaya aakitraanga. But athu antha kaalam aagipochu.
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 11)
ஓ மை காட்…! அமுதன் ஒன் நைட் ஸ்டாண்ட் என்கிறதுக்கு அது தான் அர்த்தமா…? நான் கூட புடைவையைத்தானே போர்வையா போர்த்திக்கிட்டாங்க, இதுல என்ன இருக்குன்னு நினைச்சேன். பட், அமுதன் எல்லாத்தையும் திட்டமிட்டே காயை நகர்த்தியிருக்கான்னு நினைக்கிறச்ச, அவனோட செய்கைகள் ரொம்ப கேவலமா இருக்குது. அவளாவது சின்ன வயசுல காதலை சொல்லி, முகத்துல தனக்குத்தானே கரியை பூசிக்கிட்டு, அதை மறக்க தன்னைத்தானே மோட்டிவேட் பண்ணிக்கிட்டு அரசியல்ல இறங்கி அணித் தலைவியா இருக்கிறவளை, இப்படி கேவலமா ஸ்கெட்ச் போட்டு தூக்கினதுக்கு உண்மையான காரணம் என்னன்னு தெரியலையே…? அவங்கப்பா இலக்கியனை கரிச்சுக் கொட்டறது மட்டும் தான்னா, அப்ப இவனும் பதிலுக்கு திருப்பி அப்படியே செஞ்சிருக்கலாமே…? அதை விட்டு இப்படி அவளுக்கு செக் வைக்குறேன்ங்கிற போர்வையில விளையாடறது அவளை கேவலப்படுத்துற மாதிரி தானே…? அப்பாவுக்காக
பிள்ளை பழி வாங்குறதுக்கு காதல், களவாணித்தனம்ங்கிற இந்த வழி தான் கிடைச்சதோ..?
இதுல கண்றாவியா அரங்க ரெண்டு பேரும் நெருங்கியிருந்த
படத்தை வேற எடுத்து, அதை லீக் பண்ணிடுவேன்ங்கிற பகிரங்க மிரட்டல் வேற விடுறான். இப்படித்தான், தான் நேசிக்கிற பெண்ணை அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தி பார்க்க சொல்லுதா காதல்…?
இதுல காதல் எங்கயிருந்து வந்துச்சு ? பழிவாங்குற எண்ணம் தான் அப்பட்டமா தெரியுது…?
அடேய்… வீணாப்போனவனே ! ஒருத்தரோட பலவீனத்துல அடிக்கிறது தான் ஆண்மைக்கு அழகுன்னு நினைச்சுண்டிருக்கியா என்ன ?
திஸ் இஸ் நாட் ஃபேர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow 👌 👌👌👌👌👌👌 sharp than…. spr going….. waiting 😍
Super super interesting
Wow…semma சுரபி… சக்கைபோடு உன்னோட பேச்சு…superb…. ஒரு ஆண், ஒரு பெண்ணை… தாழ்த்தனும்னா….அவளை அசிங்கப்படுத்தனும், இல்லனா அவளை மானபங்கப்படுத்தணும். சுரபி…அமுதன் சொன்னதை எல்லாம் கேட்டு…இவ அரசியல்ல இருந்து வெளிய வந்துடுவாலோன்னு நினைச்சேன் sis…but so sweet சுரபி ..அப்படி பண்ணல.she is very bold and smart excellent….I like her… ❤️❤️❤️
Surabhi’s move 👍 interesting ma
Surabi vera level 💥💯🤩🥰 superb 😍🥰💥🤩🤩 interesting 💥🤩💥🤩🤩💯🔥💥🤩💥💯🔥👍👍
Amudha unnaku checkmate ipadi surabi vaipa nu ne yosikavae illa ava kadhal ah unnaku favour ah use panna partha aana ava unnoda kadhal ah vachae unnaku nalla pakkava reveat adichitu poita even ne andha one night nu kuthi kuthi nu kuthichalum athai yum samalipen nu sollitu poita ah
Intersting
Super😍
amutha una romba nallavanu ninacha nee ena ippadi ava kuda irunthatha solli mirattura alavuku vanthu nikura ippadi ellathaium plan panni pani irukiye ithula surabi mela love irukunu vera solra but surabi great nee athi pani iruka nu therinji avaluku varutham irunthalum atha marachi ipo unake chechmade vachitu poi iruka thairiyama ithuku ena pathil solla pora
Semma sis👌