அத்தியாயம்-21
ஆராவமுதன் பேசியதை கேட்டு, அவன் தோளை தீண்டி, “என்னடா சொல்லற?” என்று கேட்கவும், “அய்யோ அப்பா… நான் பிளான் பண்ணி அவளை கல்யாணம் செய்யலை. அவளோட பிளான்ல நானா கல்யாணத்தை நடந்திருக்கேன்.” என்றவன் மனதிற்குள் ‘இந்த சுரபி எனக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கா. அய்யோ அமுதா இப்படியா அவளிடம் போய் விழணும்.’ என்று மனசாட்சியிடமே கேலிக்குள்ளானான்.
“என்னப்பா சொல்லற?” என்று இலக்கியன் கேட்டதும், “நீங்க சொன்னது உண்மைப்பா. அவ… என்னை விரும்பினப்ப இருந்த அப்பாவி சுரபி கிடையாது. புயல் மாதிரி என்னை பிளான் பண்ணி தாக்கிட்டா.” என்றவன் நிதானமாக, இலக்கியனோ “முதல்ல சிதம்பரத்தை கூப்பிடு, நீ எதுவும் விவரமா சொல்ல மாட்டேங்குற. நான் அவனிடம் கேட்டுக்கறேன்.” என்றார்
இலக்கியன் கூறிய அடுத்த நொடி, பல்லை கடித்தபடி, “அய்யோ அப்பா சிதம்பரம் சுரபியோட ஆளுனு இப்ப தான் தெரிய வந்தது.” என்றதும் இலக்கியன் ஆடிப்போனார்.
“என்னப்பா சொல்லற? நீ நம்ம சொந்த ஊருக்கு போய் சுரபியை மீட் பண்ணி பேச, ஸ்கெட்ச் போட்டது முதல், எல்லாமே சிதம்பரத்துக்கு தெரியுமே. அப்படின்னா??? முதலில் இருந்தே சுரபிக்கு உன்னோட பிளான் தெரிந்திருக்குமே” என்றதும், தோல்வியை தாங்க இயலாதவனாக, “அதை தானே சொல்லறேன்.” என்று குமைந்தான்.
“சரி சரி… என்னாச்சுன்னு பொறுமையா சொல்லு” என்றார் முதலமைச்சர்.
தான் எவ்வாறு சறுக்கினோம் என்று ஆராவமுதன் தன் தந்தையிடம் கூட கூற தயங்கினான்.
அவன் அதை கூறுவதை தவிர்த்துவிட்டான்.
“அப்பா… ப்ளீஸ்… உங்களிடம் அதை சொல்ல முடியாது. அதெல்லாம் அவளிடமே பேசிக்கறேன். இப்ப நம்ம பிளான் எல்லாம் தெரிந்து தான், சுவாதீனமா நம்ம கார்லயே உட்கார்ந்திருக்கா.
இப்பவும் பிளான்ல சேஞ்ச் பண்ண வேண்டாம். நாம முன்ன போட்ட பிளான் படி, உங்களுக்கு உடம்பு சரியில்லை, நான் உங்க இடத்துல தற்காலிகம முதல்வரா வந்துட்டு, அப்பறம் அவளிடம் பேசிக்கறேன். ஆனா சிதம்பரத்திடம் இனி எந்த ரகசியமும் பேச வேண்டாம்.
இதுக்கு முன்ன என்ன பிளான் நமக்குள் போட்டோமோ அப்படியே செயல்படுத்துவோம்.
இப்ப விட்டேன் தற்காலிக முதல்வரா என்னால நிற்க முடியாது. இப்ப கிடைக்கிற சான்ஸ் மூலமாக, நான் தற்காலிக முதல்வர் ஆனா தான், தேர்தல் வருவதற்குள்ள, சில நல்லது செய்தாலாவது நான் தேர்தலில் தனியாளா தொகுதியில் நிற்க முடியும். இல்லைன்னா அவ என்னை அரசியலில் நிற்க வைக்காம ஆஃப் பண்ணிடுவா.
நான் டாக்டரை கூப்பிடறேன். அவர் பேச சொன்ன டயலாக் பேசிட்டு போகட்டும். சிதம்பரம் மற்ற கட்சி தொண்டர்கள் மத்தியில், உங்க இடத்துல நான் வந்தப்பிறகு, அவ ரியாக்ஷன் பார்த்து, பிறகு அதுக்கு ஏற்றது போல சொல்லறேன்.
நல்லவேளை… நீங்க உடல்நிலை சரியில்லாம மருத்துவமனையில் வந்து, தற்காலிக முதல்வரா என்னை நிறுத்தற பிளான் போடுவதை சிதம்பரத்திடம் கூட கலந்து ஆலோசிக்கலை. இப்ப செய்ததில் உருப்பிடியானதுல அதுவும் ஒன்னு.
எப்படியும் அவ என்னிடம் பேச வருவா தானே?! வாக்குவாதம் நிகழும், அப்ப கவனிச்சிக்கறேன்.” என்றான்.
இலக்கியனோ, “பார்த்து அமுதா இப்பவும் சொல்லறேன் அவ அரசியலில் தேர்ந்தெடுத்த கேடி. சுரபி முன்ன மாதிரி இல்லை. நீ ஆசைப்பட்ட, அதோட என்னை எதிர்த்து பேசினவ என் வீட்ல நமக்கு அடங்கிய மருமகளா மாத்தறதில் எனக்கும் விருப்பம் இருந்தது. அதனால் உன் ஆசையை தடை செய்யாம விட்டேன். எதையும் கோட்டை விடாத.” என்றவர் ஐசியூவில் படுத்த படுக்கையாக நடிக்க தயாரானார்.
அவர் கைகளில் ஆங்காங்கே பிளாஸ்திரி சுவாச குழாய் பொருத்தியபடி “இங்க பாரு ஆராவமுதன்… நெப்போடிஸம்ல அரசியல்வாதியா வந்துடறது பெருசு இல்லை. மக்கள் மனசுல ஆழமான இடத்துல, உன்னை செதுக்கிட்டு வந்தா மட்டும் தான், இந்த அரசியல்களத்துல நிலையா நிற்க முடியும். இல்லைன்னு வையு அடுத்து சுரபி முதல்வரா வருவதை தடுக்க முடியாது. ஏன்னா…. சுரபி அளவுக்கு உன் வாய் திறமை நிச்சயமில்லை அவ இப்பவும் மக்களுக்கு உதவிட்டு இருக்கா.” என்று கூறவும், “அப்பா… சொல்லை விட செயல் சிறந்ததுனு என்னால மக்களுக்கு புரிய வைக்க முடியும்.” என்றான்.
“அதுக்கு கூட மக்கள் உன்னை நேசிக்கணும் அமுதன்” என்றதும் “புரியுது” என்றான். இனி அவளை புகழ்த்து, என்னை மட்டம் தட்டும் விதமாக பேசாதிர்கள் என்ற தோரணை அதில் இருந்தது.
“சரி நான் வெளியே போறேன். ஹாஸ்பிடலுக்கு வெளியே பிரஸ் மீட் இருக்கு. எப்படியும் உங்க உடல்நிலையையும், என் கல்யாணத்தையும் கேட்பாங்க. அதுக்கு பதில் சொல்லும் போது கரெக்டா, அரை மணி நேரம் கழிச்சு, நீங்க கண் விழிக்கவும், டாக்டர் உங்களை கொஞ்ச நேரம் பேச வைக்க மட்டும், வாயை திறங்க. இப்பவே சிதம்பரம் வெளியே தான் இருக்கான். இந்த ஹாஸ்பிடல் டிராமாவை கண்டுபிடிக்கும் முன்ன நாடகத்தை நடத்திடணும். இதுவரை போட்ட பிளான் எல்லாம் பெரிய விஷயமேயில்லை” என்று கூற, இலக்கியன் மகனை அனுப்பிவிட்டு இமை மூடி தயாரானார்.
ஆராவமுதன் லேசாக கிளிசரின் கைகுட்டையால், கண்ணை துடைத்து விட்டு, வெளியே வந்தான்.
ஒன்றிரெண்டு மீடியா ஆட்கள் தடுப்பு பகுதியிலிருந்தே “சார் முதலமைச்சருக்கு என்னாச்சு?” என்று கேட்டபடி இருக்க, சிதம்பரமோ, “தம்பி…. அய்யா எப்படியிருக்கார்” என்று கேட்டார்.
“டாக்டர் வந்து தான் சொல்லணும் அங்கிள் ஹார்ட் அட்டாக். முதல் முறை வந்திருக்கு. கண் விழித்ததும் ஆபத்து கட்டத்தை தாண்டிட்டாரா இல்லையானு சொல்வாங்க” என்றவன் வாசல் பக்கம் வர, மீடியா சூழ்ந்தது.
“சார்… முதலமைச்சருக்கு என்னாச்சு? உங்களோட இந்த திடீர் கல்யாணத்தால் அவர் பாதிக்கப்பட்டிருக்கார்.
எதிர்கட்சி தலைவரோட பொண்ணையே மணந்தது சரித்திரத்தில இல்லாதது.
முதலமைச்சரை மீறி இந்த கல்யாணத்தை ஏன் செய்திங்க சார்?” என்று ஆளாளுக்கு முட்டி மோதி மைக்கை எடுத்து நீட்டி வினாத்தொடுக்க, வீடியோவும் லைவில் சென்றுக் கொண்டிருந்ததை கண்டான்.
கார்ல இருந்து இந்த சுரபி எப்படியும் நியூஸை பார்ப்பா. இதுல இந்த சிதம்பரம் வேற, கிளிசரின் வேலை காட்டி முடியறதுக்குள் அழுற லுக்கோட, கண்கலங்கி பேசணும்.
ஸப்பா… அரசியலில் எண்ட்ரி கொடுத்ததுக்கே நடிக்க வைக்கிறிங்களேடா.’ என்றவன், “இங்க பாருங்க… அப்பாவுக்கு முதல் ஹார்ட் அட்டாக். டாக்டர் கண் முழிக்கும் வரை எதுவும் சொல்ல முடியாதுன்னு சொல்லறார். அவருக்கு ஒதுவும் ஆகாது. ஆனாலும் கொஞ்சம் நிதானமா இருக்க வேண்டிய சூழலில் இருக்கேன். கல்யாணம் என் விருப்பத்துக்கு செய்தது. அப்பாவுக்கு தனிப்பட்ட சுரபியை பிடிக்கும். அவர் பெயர் வச்ச பொண்ணு சுரபி. அவளே மருமகளா வருவதில் அப்பாவுக்கு இந்த உடல்நிலை கோளாறு வந்திருக்காது.” என்று கூறினான்.
”சார் முதல்வர் பதவிக்கு வரமுடியலை. அட்லீஸ்ட் முதல்வர் பையனை கல்யாணம் செய்துட்டாங்களா? அவங்க எங்க சார்? சுரபியை கல்யாணம் செய்து அங்கயே விட்டுட்டு வந்துட்டிங்களா?” என்றான்.
“வார்த்தையை அளந்து பேசுனா நல்லது.” என்று ஆராவமுதன் குரல் மாறவும், “எப்பா… முதலமைச்சர் உடல்நிலையை தானே கேட்கணும்.” என்று அதட்டினார்கள் தொண்டர்கள்.
“சார்… ஐயா கண் விழிச்சிட்டார். உங்களோட பேசணுமாம்.” என்றதும், “யாராவது ஒருத்தர் என்னோட வாங்க. நேரலையா அப்பாவை மக்களிடம் காட்டுங்க. இப்படி என் உயிரை வாங்காதிங்க. நானே ரொம்ப மனவருத்தத்தில் இருக்கேன்” என்று கோபமாக கூறிட, அவசரமாய் ‘நிலா சேனல்’ வேகமாய் முன்னே சென்றார்கள்.
ஆராவமுதனை, சற்று இடைவெளியிட்டு கட்சியில் முக்கிய புள்ளிகளும், தொண்டர்களும் பின் தொடர்ந்தார்கள். ஆனாலும் நிலா சேனல் கேமிரா மேனை மட்டும் உள்ளே வர அனுமதித்தான்.
அப்பொழுது தான் ஐசியூவில் இமை திறந்திட படாதபாடுபட்ட இலக்கியன் இருக்க நிலா சேனல் வேகமாய் முதலமைச்சருக்கு ஜூம் வைத்து முடிக்க, “அ…மு..தா..” என்று தேர்ந்தெடுத்த நடிகனாக இலக்கியன் அழைக்க, தொண்டையின் ஏற்றயிறக்கத்தோடு முதல்வரை படம் பிடித்தனர்.
“கல்யாணம் செய்துக்கிட்டியா?” என்று கேட்க, “அப்பா… சுரபியை எனக்கு பிடிக்கும். நட்ராஜ் அங்கிளுக்கும் உங்களுக்கும் அரசியலில் பகை இருக்கட்டும். ஆனா அவ என்னோட காதலி. நட்ராஜ் அங்கிள் அவளை என்னிடமிருந்து பிரிச்சிடுவார்னு அவசரமாய் கல்யாணம் செய்துக்கிட்டேன். சாரிப்பா… உங்களை பத்தி யோசிக்கலை. உங்களிடம் சொல்லிருக்கணும். நீங்களும் மறுத்துடுவிங்களோனு நினைச்சேன்” என்றான்.
க்ளிசரினால் உண்டான கலக்கம் கண்ணீராய் வழிந்தது. அதனை கைகுட்டையால் துடைத்து அழுவதை மறைத்துக் கொண்டான்.
ஊடகம் காட்சி வாயிலாக மக்களிடம் இந்த செண்டிமெண்ட் சீன்களை கடத்தியது.
“உங்களுக்காக வெளியே நம்ம தொண்டர்கள் மக்களில் சிலர், மீடியா இப்படி கூட்டமா இருக்கு. நீங்க கண் விழிச்சது போதாதுப்பா. எழுந்து நடமாடணும்” என்று உருக்கமாய் கூறினான்.
“மிஸ்டர் ஆராவமுதன் சார் மினிமம் ஆறு மாசமாவது ரெஸ்ட் எடுக்கணும். அவர் அபாயக்கட்டத்தை தாண்டிட்டார். ஆனா இந்த உடல் தமிழக முதலமைச்சர் பதவியை ஏற்று நாட்டு நடப்பு சூழலை கட்டிக்காக்க முடியாது. நிச்சயம் நம்ம முதலமைச்சருக்கு ஓய்வு தேவை.” என்றார்.
“என்ன விளையாடறிங்களா? அப்பா இல்லைன்னா கட்சி இயங்காது. தெரியும்ல? தினம் தினம் அப்பா வீட்ல என்ன சொல்வார் தெரியுமா? தமிழகத்தை பசுமை நகரமா மாத்தணும். ஏழை மக்களுக்கு இன்னமும் அரசாங்க உதவிகள் தேவைப்படுது. நம்ம நாட்டை வெளிநாடு மாதிரி மாத்தணும்னு கனவெல்லாம் கண்டுட்டு இருக்கார்.” என்று பேசினான்.
“முடியாது சார்… முதலமைச்சர் கண்டிப்பா ஓய்வில் இருக்கணும். கட்சியில் இருப்பவர்களில் யாரையாவது தற்காலிக முதல்வராக பதவி ஏற்று வழிநடத்த சொல்லுங்க” என்று கூறிவிட்டு, மீடியா எல்லாம் ஐசியூ வரை வரக்கூடாது. முதலமைச்சரை பார்த்தாச்சா ஒரு புகைப்படம் எடுத்ததோடு இடத்தை காலி செய்யுங்க. அவரோட நலனில் நீங்களும் அக்கறை செலுத்துங்க” என்று விரட்ட, ஆராவமுதன் சிலையாக நின்றான்.
‘இலக்கியன் அய்யாவுக்கு பதில் யாரை நிறுத்த’ என்ற குரல்கள் அங்கே தீயாய் பரவ, “என்ன சிதம்பரம் அங்கிள் அப்பாவுக்கு பதிலா நான் தற்காலிக முதல்வரா இருக்கலாமா?” என்று கேட்க, சிதம்பரமோ, “நல்ல ஐடியா தம்பி.” என்று கூறினார்.
“அப்படியா? மனசார சொல்லற மாதிரி தெரியலையே. உங்க சுரபியிடம் போன்ல கேட்டு சொல்லுங்க” என்று கூறவும் சிதம்பரம் திருதிருவென முழிக்க, “சுரபி கூட மட்டும் பேசறதுக்குன்னு ஒரு பட்டன் போன் வச்சிருப்பிங்களே அதை எடுத்து கேட்கறது.” என்றதும் சிதம்பரம் அரண்ட நின்றார்.
“உங்க வாயால… நான் தற்காலிக முதல்வரா வரணும்னு இப்ப இங்க கட்சி தொண்டர்கள் மத்தியில சொல்லணும். சொல்லுங்க…” என்று கிட்டதட்ட மிரட்டினான்.
சிதம்பரமோ, இலக்கியன் கட்சி ஆரம்பித்த நாட்களிலிருந்து, நட்ராஜ் இருந்தது போல, அவரும் கூடவே இருந்தார்.
இந்த இக்கட்டு நிலையில் சிதம்பரம் தற்காலிக முதல்வராக நியமித்தால் ‘தமிழக எழுச்சி கட்சி’யில் இருப்பவர்கள் ஆமோதிப்பார்கள்.
ஆனால் சிதம்பரம் செய்த துரோகமாக, சுரபிக்கு இவர் மறைமுக நண்பராக இருந்தாரென்று தெரிந்தால் கட்சி ஆட்கள் வெளுத்திடுவார்கள்.
ஆராவமுதனை சொல்ல சொல்லி தள்ளவும், சுரபியிடம் பேசவும் வழியின்றி, பதறினார்.
“சொல்லுங்க சிதம்பரம் இப்ப நீங்க அங்க என்னை தற்காலிக முதல்வர் பேச்சுல நீங்களா நிறுத்தலை. உங்க பேத்தி டியூஷன் போயிட்டு வர்ற வழியில், நீங்க நியமிச்ச டிரைவரால், பாலியல் சீண்டலாகறது நாளைக்கு நியூஸா வெளிய வரும் இல்வை… லைவ் டெலீகாஸ்ட் பார்த்தா நம்புவேன்னு இருந்தா ஜஸ்ட் ஒரு போன்” என்றதும் சிதம்பரம் நிலைதடுமாறினார்.
“தம்பி.. ” என்று கிட்டதட்ட அலறாத குறையாக கூப்பிட, “அப்படி கூப்பிடாதிங்க, ஆராவமுதன் என்று பெயர் சொல்லியே கூப்பிட்டு திட்டுங்க. கூடயிருந்தே குழி பறிச்ச, உங்களோட பாச வார்த்தை தம்பி தும்பி எதுவும் வேண்டாம்” என்றான்.
மருத்துவமனையை சுற்றி தொண்டர்கள் மீடியாகாரர்கள், மக்களில் நேசம் வைத்த ஆட்கள், முதல்வரை எட்டி நின்று பார்க்க வந்த ரோட்டோர மக்கள், மருத்துவமனையில் உள்ள இதர நோயாளிகளின் சொந்தம் பந்தம், இதை தவிர, உள்ளே நாடகமும், வெளியே முதல்வர் சிகிச்சை எடுப்பதாக காட்டப்படும் பதட்ட நிலையும், மருத்துவர்களில் குறிப்பிட்ட டாக்டர், டீன், நர்ஸ் என்று அந்த தளத்தில் நடந்து நடந்து தேய்த்தனர்.
இதற்கிடையே தனியாக சிதம்பரத்திடம் ஆராவமுதன் கொதிப்புடன் பேசிட, வெளியே கார் பார்க்கிங்கில், ஏசி காரில் தலையை தாங்கி சுரபி அமர்ந்திருக்க, அவளருகே பல்லவியோ “என்னடி இது. இலக்கியன் அண்ணாவுக்கு உடம்பு முடியாம போச்சு. இப்ப வீட்டுக்கு போக முடியாதா? உங்கப்பா வேற எனக்கு போன் போட்டு போட்டு திட்டிட்டு இருப்பார். அட்லீஸ்ட் அவருக்கு நீ எங்க இருக்கன்னாவது போன்ல சொல்லேன்.” என்று வற்புறுத்தவும், “ஏன்மா உயிரை வாங்கற. அப்பாவுக்கு நான் ஆராவமுதனை கல்யாணம் செய்ய கிளம்பியது தெரியும். தேட மாட்டார் கொஞ்சம் சும்மாயிரு.” என்று அதட்டினாள்.
‘நானே இந்த ஹாஸ்பிடல் சம்பவங்கள் ஆராவமுதனோட டிராமாவா என்னனு யோசித்துட்டு இருக்கேன். சிதம்பரம் அங்கிள் வேற போன் பண்ணலை. நிஜமாவே இலக்கியன் அங்கிளுக்கு உடல்நிலை மோசமாகிடுச்சா?’ என்று ஆழ்ந்து யோசித்து இமை மூடியவள், ஆராவமுதன் எந்த நொடியிலிருந்து தன்னிடம் முகம் திருப்புகின்றானென, இன்றைய நாட்களின் ஓட்டத்தை மனதில் ரீவைண்ட் செய்து பார்த்தாள்.
திருமணமாகி காரில் ஏறியப்பின்னும் ஆராவமுதன் சிரித்து பேசி வந்தான். இடையே சோசியல் மீடியாவில் போடட்டுமா? என்று சிதம்பரம் தன்னை பார்த்து அனுமதி வேண்டியப்பின் தான், ஆராவமுதனின் முகம் தன் பக்கம் காணாது தவிர்ப்பதாக தோன்றியது.
கார் கண்ணாடி வழியாக தன் பிம்பத்தை பார்த்து, தன் சமிக்ஜை மொழியாக சிதம்பரம் அங்கிளிடம் இமை மூடி பதிவிட சொல்லி அனுமதி வழங்கியதில், தனக்கும் சிதம்பரம் அங்கிளுக்கும் நட்பு உண்டு என்று யூகித்து விட்டானா? அந்தளவு அரசியலில் ஞானம் பிறந்து விட்டதா என்ன? என்று எள்ளலாய் சிரித்து சிந்திக்க, காரில் நீண்ட நேரமாக யாரிடமோ ஆராவமுத் பிரென்ஞ்ச் மொழியில் சாட் செய்தது கண்ணில் தோன்றியது.
தான் இருக்கும் பொழுதே சிதம்பரத்தை பற்றி யாரிடமோ கேட்டறிந்து இருக்கின்றான். அதன் காரணமாக, எங்கோ ஒரு சொதப்பலில் சிதம்பரம் அங்கிள் தனக்கு உதவுவதை அறிந்துக் கொண்டான் என்பதை சுரபி தெளிவாக யூகித்தாள்.
‘நாட் பேட் அமுதா.’ என்று கணவனை பாராட்டியவள், ‘அப்படின்னா இந்த ஹாஸ்பிடல்ல முதல்வர் இலக்கியனுக்கு உடல்நிலை சரியில்லாம சேர்க்கலை. ஏதோ பிளான் பண்ணி நடிக்கறாங்க. முதல்வர் ஹாஸ்பிடல்ல இருந்தா அடுத்த பொறுப்புல தற்காலிக முதல்வரா இருக்க போவது’ என்றவளுக்கு, அடுத்து நிகழப்போகும் அபத்தம் புரிய ‘அமுதனா? நோ’ என்று உச்சரித்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Oh ho
Wow Sema twist. Surabhi you too so intelligent. Awesome narration sis.
Well done 👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏surabi. Intha amudhan eppadiyo moppam pudichi Chidambaram unnoda alumnu kandupidichittan .adhutha mudhalvarukkum adikkalam pottu makkah,medieval Namba vachittan
Avana summa vrdatha
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 amudhan nee semma killadi pa😬 surabi eppo kandu pudichita eppo enna nadaka pogudho 🧐
Interesting
Super twist, both hero and heroine are equal
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 21)
சூப்பர்…! சூப்பரா பாயிண்ட்டை பிடிச்சிட்டா சுரபி. ஸோ… அமுதனோட தற்காலிக முதல்வர் ட்ராமா வர்க் அவுட் ஆகாம இருக்க அடுத்து ஏதாவது நிச்சயமா பண்ணுவான்னு தோணுது. அப்படித்தான் அவனை தந்திரத்தால அடிக்கணும். ஸ்கெட்ச் போடறானா, காதல் ஸ்கெட்ச்.
பதினெட்டு வயசுல இருந்து அரசியல்ல இருக்கிறா, ஆனா இன்னும் என்ட்ரீ கூட கொடுக்காத இந்த அமுதன் அதுக்குள்ள அவளுக்கு வேட்டு வைக்க நினைக்குறானா…?
சுரபி சாணக்கிணி டா…!அவ்வளவு லேசா அவளை எடை போட்டுடாதே…. நிச்சயமா பதிலடி கொடுப்பா, வெயிட் பண்ணு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Adipavi annaikku illakiyan ennaku varisu iruku nu sonnathu ah vachi kai nagarthi iruku ah pola amudhan ah politics la vara vidamal ithuku chidambaram avar um kootu ah wow wow sema twist than kattam katti thooki iruku ah la
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 21)
சூப்பர்…! சூப்பரா பாயிண்ட்டை பிடிச்சிட்டா சுரபி. ஸோ… அமுதனோட தற்காலிக முதல்வர் ட்ராமா வர்க் அவுட் ஆகாம இருக்க அடுத்து ஏதாவது நிச்சயமா பண்ணுவான்னு தோணுது. அப்படித்தான் அவனை தந்திரத்தால அடிக்கணும். ஸ்கெட்ச் போடறானா, காதல் ஸ்கெட்ச்.
பதினெட்டு வயசுல இருந்து அரசியல்ல இருக்கிறா, ஆனா இன்னும் என்ட்ரீ கூட கொடுக்காத இந்த அமுதன் அதுக்குள்ள அவளுக்கு வேட்டு வைக்க நினைக்குறானா…?
சுரபி சாணக்கிணி டா…!அவ்வளவு லேசா அவளை எடை போட்டுடாதே…. நிச்சயமா பதிலடி கொடுப்பா, வெயிட் பண்ணு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Eni ethu tugof war than.. veetukulleye rendu thuruvangala erukaporaanga. Yennanadakuthunu paapom
Interesting 👌…
Vera level 💥🔥👍🥳 interesting 💥🥰😍🥳🤩🤩💥
Vera level 💥🔥👍🥳 interesting 💥🥰😍🥳🤩🤩💥… Surabi good 👍