அத்தியாயம்-7
தன்னை கடத்த வந்தவர்களிடமிருந்து மீட்டெடுத்தான். தன்னை புதைத்து இறப்பை பரிசளிக்க வந்த இயற்கை சீற்றத்தை மீறி தன்னை காத்தவன். இப்பொழுது தன்னை நெருங்க “அமுதா” என்று அலறி சுரபி துடித்தாள்.
“அமுதன் டி நான். விஷத்தை விதைச்சிட மாட்டேன். நீ இப்ப எப்படியோ… நான் உன்னை இப்ப விரும்பறேன்.
வேடிக்கையை பார்றேன்…
நீ என் மேல பைத்தியமா இருந்தப்ப காதல் வரலை.
எங்கப்பாவோட டியரெஸ்ட் பிரெண்ட் உங்கப்பாவா இருந்தப்பவும் உன் மேல காதல் வரலை.
என்னையே சுத்தி சுத்தி எனக்காக உயிரை தர்ற அளவுக்கு நீ அன்பு செலுத்தினப்ப காதல் வரலை. அப்ப எல்லாம் நீ வெகுளி. உலகம் தெரியாதவனு கேலி செய்திருஅககேன்.
ஆனா இப்ப நீ என்னை விரும்பலை, எங்கப்பாவும் உங்கப்பாவும் அரசியல்ல விரோதிங்க. இந்த நேரத்துல காதல் கண்றாவி வருது. அதுக்கூட இங்க வந்தப்ப கூட உன் மேல அந்த பீல் கிடையாது.
ஸ்மார்ட் அண்ட் பிரேவ், ஃபயரான பேச்சு, அதுவும் எங்கப்பாவை…
என்னை, என் இதயத்தை சும்மா நறுக்கி எண்ணெய்யில் போட்டு வதக்குற, ஆனா பாழா போன லவ் இப்ப வருது.” என்று கடுகடுப்பாய் ஆவேசமாக உரைத்தின்.
”அத்துமீறுவது எல்லாம் நமக்குள் பத்து நிமிஷத்துல நடந்து முடியுமா??? காலம் பூரா உன் கைப்பிடிக்கணும்னு நினைக்கறேன்.
உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னிக்கு காலையில கூட, நீ என்னோட இருப்பதை எனக்கு சாதகமா மாத்தி, கட்சிக்கு ஏத்த மாதிரி பேசி உன்னை உன் கட்சி ஆட்களை உனக்கு எதிரா திருப்ப நினைச்சேன்.
ஏன்… உன்னை நியூட்டா போட்டோ எடுத்து, அந்த போட்டோவை நெட்ல விட்டா ஹாட் டாபிக்கே நீ தான்.
ஜனநாயக விடியல் கட்சியின் இளைஞர் அணி தலைவியின் அந்தரங்க புகைப்படம். திரும்பற பக்கமெல்லாம் நீ தான் பேசும் பொருளா மாத்திருக்கலாம். உன்னை உன் அரசியல் சாம்ராஜ்ஜியத்தை மொத்தமா அழிச்சிருப்பேன். உன்னை வெளியே தலைகாட்ட விட்டிருக்க மாட்டேன். ஏன்… மயக்கத்துல இருந்தப்ப உன்னை நான் என்ன செய்தாலும் உனக்கு தெரிந்திருக்காது. எதுவும் செய்யலை…
அப்படிப்பட்ட என்னிடம் என் காதலை சீண்டி பேசாத.
நான் வேண்டுமின்னா உன்றை லேட்டா காதலிச்சிருக்கலாம். ஆனா உன்னை விட அழுத்தமானவன். என் காதலும் அழுத்தமானது” என்றவன் அவள் மீது படராமல் சாய்ந்தவன் எழுந்தவன்.
சுரபிக்கு அழுவதை தவிர ஒன்றும் தோன்றவில்லை. அந்த நட்டநடு காட்டில் பள்ளத்தாக்கில் அவளது கம்பீரத்தை குலைப்பது போல அழுவதை யாரும் பார்க்க மாட்டார்கள். அதோடு இப்போழுது அழுதால் மட்டுமே மழைத்துளி அவளது அழுகையை காட்டிக் கொடுக்காது.
“கத்தறது கேட்குதா?” என்று கேட்டவனிடம் புரியாமல் பார்த்தாள்.
“பச் நல்லா கேட்குது. யானை பிளிறுது மாதிரி… முதல்ல எந்திரி.” என்று எழுந்து கை கொடுக்க, அவளும் எழுந்து தன் உடையை சரிப்படுத்நிதினாள்.
“எந்த பக்கம் சத்தம் வருதுன்னு தெரியலையே” என்று சுற்றி முற்றி தலையை திருப்பினான்.
தன் மனதை மாற்ற பேச்சை திசைத்திருப்புவதாக எண்ணியிருக்க, யானை பிளிறுவது போல சுரபிக்கும் கேட்டது.
“அ…அந்த பக்கம் சத்தம் வர மாதிரி இருக்கு.” என்று சுட்டிக்காட்டினாள்.
அந்த பக்கம் ஓடவும், அங்கே குட்டி யானை ஒன்று அங்கிருந்த குழியில் விழுந்திருந்தது.
“ஓ மை காட். மரம் முறிந்து விழுந்து பள்ளமாகியிருக்கு. அதுல யானை குட்டி விழுந்துடுச்சு போல. தனியா இருக்கு. எப்படி காப்பாத்தறது” என்று முழித்தவன், பள்ளத்தில் குதித்தான்.
“அமுதா என்ன பண்ணற” என்று பதறியவளிடம், “இல்லை பள்ளத்துல இருந்து வந்துடுவேன். யானை குட்டியை மேல வரவைக்க ட்ரை பண்ணுவோம்” என்று யானையின் பிட்டத்தை பிடித்து இரண்டு காலையும் தள்ள, அதுவோ சுரபியிடம் தும்பிக்கையை போட்டது. தும்பிக்கை கணத்தில் சுரபி முதலில் தடுமாறினாலும், அவளுக்கு அது தன்னிடம் உதவி கேட்பது புரிந்திட, கையை நீட்டினாள்.
ஒரு குட்டி யானையை தூக்கும் வல்லமை தங்களுக்கு உண்டா என்று எல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. கண் எதிரே ஒரு உயிர் உயிருக்கு போராடுகின்றது அதை காப்பாற்றும் நோக்கம் மட்டுமே.
“மூச்சு வாங்குது, அமுதா” என்று இழுக்க முடியாமல் சுரபி சோர்வுற, “குட்டி யானை என்பதால் ஏற தெரியலை. அதுவும் மேல ட்ரை பண்ணிட்டா ஈஸி தான்” என்று தள்ளி அவனுமே களைத்திருந்தான்.
“குட்டியானையா இது. வெயிட்டா இருக்கு” என்று கூற, “குட்டி யானையா இருந்தாலும் 90 டூ 100 கிலோ இருக்கும் சுரபி. மனுஷங்க மாதிரியா 3 கிலோ 2அரை கிலோவா இருக்க?” என்று பேசியவன், “சு..சுரபி” என்று பள்ளத்திலிருந்து ஏற முயற்சிக்க, சுரபியோ “ஏ குட்டி யானை நீயும் மேல ஏறிவா. ட்ரை பண்ணு.” என்று திட்டி கொஞ்சினாள்.
அவள் துதிக்கை பிடித்து இழுக்க, அவள் கைகள் பக்கத்தில் பெரிய துதிக்கை முன் வந்தது.
“இதென்ன?” என்று திரும்ப அங்கே பெரிய தாய் யானை நின்று குட்டியை தூக்க முயன்று பிளிறியது.
“அ…அமுதா” என்று அவளும் ”சுரபி” என்று அவனும் பயத்தில் மிரண்டு அழைத்துக்கொள்ள தாய் யானையை பார்த்த குட்டியோ துள்ளலாய் அன்னையின் துதிக்கையில் முறுக்கி கொண்டது.
சுரபியை ஒன்றும் செய்யாமல் தன் குட்டியை காப்பாற்ற முன் வரவும், ஆராவமுதனோ, “சுரபி பயப்படாத” என்றவன் யானையை தூக்கி தன் தோள் வளைவில் முட்டுக்கொடுத்தான்.
சில நிமிடத்தில், யானைகுட்டி மேலே எழும்பியதும் ‘அப்பாடா” என்றனர் சுரபி அமுதன் இருவரும். குட்டி யானையோ தாய் யானையிடம் சென்ற மகிழ்ச்சியில், தாய் யானையின் காலை சுற்றி சுற்றி வந்தது.
“அமுதா நீ மேல ஏறு” என்றவள் கையை கொடுக்க, அவனுக்கு கை எட்டவில்லை.
“அமுதா... நீ இப்ப எப்படி வருவ?” என்று தவிக்க, தாய் யானையோ துதிக்கையை நீட்டியது.
ஆராவமுதன் அச்சத்துடன் கையை நீட்டினான்.
அவனை லாவகமாக சுருட்டி மேலே கொண்டு வந்தது.
சுரபியோ, “வாவ்… யானையே காப்பாத்திடுச்சு” என்று சந்தோஷம் கொள்ள, இருவரையும் சுற்றி விட்டு தாய் யானை குட்டியை அழைத்துக்கொண்டு வேகமாய் சென்றது.
“பிளஸிங் பண்ணுச்சா?” என்று சுரபி கேட்க, “நான் போய் வேணுமின்னா கேட்டுட்டு வரட்டா.” என்று நக்கலடித்தான்.
“அமுதா.” என்று அவன் நெஞ்சில் குத்தவும், “சூப்பர் சீனை மிஸ் பண்ணிட்டேன். யானை மட்டும் காப்பாத்தாம போனா, நீ சேலை போட்டு என்னை காப்பாத்தியிருப்ப தானே” என்று கண் சிமிட்டினான்.
“ஆசை தோசை.. வாங்க யானையை பாலோவ் பண்ணி போலாம்” என்று கூறினாள்.
“ஏய்… அது யானை கூட்டத்தோட போகும். இந்த யானை குட்டியை காப்பாத்தவும் நம்மை சுற்றிட்டு என்னை காப்பாத்திட்டு போயிடுச்சு. மத்த யானைகள் நம்மளை மிதிச்சிட்டா என்ன செய்வ? யானை அந்த பக்கம் போனா நாம ஆப்போஸிட்டா போவோம்” என்று கூப்பிட்டான்.
இருவரும் பாதையில் மழையோடு நடக்க “அச்சு.” என்று தும்பினாள்.
“அச்சோ… அடுத்து சலிப்பிடிக்க போகுதா?” என்று ஆராவமுதன் கேட்க, “காலையில பத்து மணிலருந்து தண்ணில இருக்கோம் அமுதா. மழையில் தொப்பலா வேற நனைஞ்சிட்டே இருக்கோம்.” என்றவள் வயிற்றை தொட்டு லேசா பசிக்குது. சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும். ஆனா இங்க கிடைக்காதுல.” என்று கவலையுற்றாள்.
“காலையிலயிருந்தா…. நாம நேத்து நைட்டும் நனைச்சிட்டும்.
இங்க ஏதாவது சாப்பிட கிடைக்குமான்னு போற வழியில தேடிப்பார்ப்போம்” என்று நடையிட அவனை தொடர்ந்தாள்.
நடக்க நடக்க கொஞ்சம் மழை முற்றிலும் நின்றது.
“அப்பாடி மழை விட்டுடுச்சு” என்று சுரபி மகிழ, “மழை பெய்தா கூட குளிர் தெரியாது சுரபி. ஆனா இனி தான் டேஞ்சர் குளிரெடுக்கும் நடுங்க ஆரம்பிக்கும்” என்று அச்சுருத்தினான்.
“இஷ்டத்துக்கு ஏதாவது சொல்லாதிங்க” என்று நடந்தவளிடம், “குளிருதுன்னு நடுங்குவ அப்ப இருக்கு” என்று கமுக்கமாய் சிரித்தான்.
பதினைந்து நிமிடம் நடக்க, “சுரபி.. ஒன் செகண்ட்” என்றவன், ஒரு செடியை உலுக்கு உலுக்கு என்று உலுக்கினான்.
“இப்ப எதுக்கு செடியை பிடுங்கறிங்க. ஏதாவது நிலசரிவு திரும்ப வந்துடப்போகுது.” என்று பயந்தாள்.
“பச் பசிக்குன்னு சொன்னல்ல… இது ஒரு கிழங்கு செடி. நம்ம லக் செடியை பிடுங்கி பார்ப்போம். ரீசண்டா கூகுள்ல இந்த செடியை பார்த்திருக்கேன்.” என்று தன் பளுவை ஒட்டுமொத்தமாய் காட்டும் விதமாக செடியை வேரோடு பிடுங்க போராடினான்.
மூச்சு வாங்கியதே தவிர, ஆராவமுதனால் பிடுங்க முடியாது சோர்ந்தான்.
மழை விட்டதில் குளிர்ந்த காற்று வேறு வீசியது.
இதில் அச்செடியை உலுக்கியதில் நடந்து வந்த அசதி வேறு.
ஆனாலும் சுரபி பசி என்று கேட்டுவிட்டாளே… அதற்காக உலுக்க, அந்த செடியை அசைக்க இயலாது திணறினான்.
“இந்த சிக்ஸ் பேக், கட்டுமஸ்தான உடம்பு இதெல்லாம் ஜஸ்ட் அட்ராக்ஸனுக்கு தானா? இந்த செடியை அசைக்க முடியலை” என்று சுரபி கேலி வேறு செய்திட, ஆராவமுதனோ “கொழுப்புடி… போன்ல இருந்த என் ஜிம் போட்டோஸ் எல்லாம் ஜொள்ளு விட்டு பார்த்துட்டு இப்ப என் உடம்பை கேலி செய்யற. இதுக்காகவே செடியை சாய்த்து காட்டறேன் பாரு.” என்று சபதமிட்டான்.
கொஞ்ச நேரம் அவன் கஷ்டப்படவும் சிரித்தவள், “அமுதா… எனக்கு பசிக்கலை. தயவு செய்து கிளம்புவோம். நீ சொன்ன மாதிரி லேசா குளிருது.” என்றாள்.
“பின்ன நேரமாக நேரமாக மலைசரிவான பிரதேசம் குளிராம சூடாவா இருக்கும்” என்று கூறி செடியை பிடித்து இழுக்க ஒன்றும் பாதியுமாக பிடுங்கி விழுந்தான்.
“அம்மா” என்று முதுகை பிடிக்க, “அமுதா” என்று சுரபி வந்தாள்.
“மரவள்ளி கிழங்கு செடி தான் சொன்னேன்ல. ஆனா கிழங்கு சைஸ் சிறுசா இருக்கு. இன்னும் வளரணும் போல” என்று சின்னதாக காய் விட்ட மரவள்ளி கிழங்கை ஒரு ஓடத்தில் இருந்த நீரில் கழுவி இரண்டாக கையாலேயே துண்டாக்கி நீட்டினான்.
இதெல்லாம் முனபு சாப்பிட்டது. அதாவது விவரம் தெரியாத வயதில். அம்மா பல்லவி இதை வேகவைத்து தருவார்கள்.
அதன் பின் கால மாற்றத்தால், இதை வீட்டில் வாங்கி கூட பார்த்ததில்லை. இன்று வேறு வழியில்லை பச்சையாக சுவைக்க என்று விதியெழுதியிருக்க கடித்தாள்.
அவனுமே மென்றபடி, “தன் அலைப்பேசியை எடுத்து, அழுத்தி பார்த்தான். தண்ணீரில் மூழ்கி அதெப்படி வேலை செய்யும். ஏற்கனவே நேற்றும் தண்ணீர்பட்டு உயிர்பெற நேரமெடுத்ததே.
இன்று வேலை செய்யுமா? “பச் போன் ஒர்க் ஆனாலாவது லோகெஷன் ஷேர் பண்ணி வீட்ல சொல்லலாம். ஹலிகாப்டர்ல தேடி வருவாங்க. இப்படி வந்து சிக்கிட்டோமே” என்று புலம்பினான்.
“வீட்ல தேடுவாங்கள்ல?” என்றதும், “ம்ம்ம்… உன்னை ஆல்ரெடி தேடினாங்க. என்னை அப்பா தேடுவது சாத்தியமில்லை. அவருக்கு மனசுல உன்னை காணோமேனு பதட்டமா இருப்பார். என்னை சிதம்பரம் அங்கிள் தேடலாம். அவர் தான் கடைசியா என்னை இங்க பார்த்தது.” என்று கூறி நடந்தான்.
மற்றொரு இடத்தில் மரவள்ளி கிழங்கு செடியை பார்த்து, இலைகளை கிளைகளை எல்லாம் முதலில் உடைத்துவிட்டு, பிடுங்க ஆரம்பித்தான். இம்முறை போனமுறை போல அதிகம் வதைக்காமல் இழுத்துவிட்டான்.
கடவுள் வயிற்றுப்பசிக்கு ஏற்றதாக மரவள்ளிக் கிழங்கை அள்ளி வழங்கினான்.
நன்றாக பெரிய பெரிய கிழங்குகள். இன்று இது போதும்” என்று தங்குவதற்கு இடம் தேடினான்.
இதற்கு மேல் நடந்து செல்வது கடினமே. மலைச்சரிவில் குளிர் பிரதேசத்தில் விரைவிலேயே இருட்டி விடும். அப்படியிருக்க, மாலையில் கண் தெரியாமல் எங்கவாது விழுந்துவிட்டாலும் ஆபத்து. அதன் காரணமாக, பெரிய பெரிய இலைகளை வெட்டி, மரங்களுக்கு மத்தியில் சிறு கூடாரம் அமைத்தான்.
‘கொஞ்சம் ஈதிகமாகவே கஷ்டப்பட்டு விட்டான். முதலமைச்சர் மகனாகவே வாழ்ந்ததால் கைகள் இவ்வாறான செடி கொடிகளை உடைத்து காட்டில் வீடு கட்ட முடியாது ஏதோவொன்றை செய்ய முயன்றான்.
அதற்கேற்றாற் போல பெரிய பெரிய இலைகளை சிறு சிறு கிளைகளின் குச்சியில் சுற்றிலும் வைத்து தடுப்பு சுவராக கட்டினான்.
பிறகு அங்கே மண்ணிருக்க அதில் இலைகளை பரப்பினான்.
“பூச்சி ஏதாவது இருக்குமா அமுதா” என்று நடுங்க, “பெரிய யானை, பள்ளத்தாக்கு, நிலசரிவு இதையே சமாளித்து வந்திருக்கோம். பூச்சி வந்து நம்மளை கடிக்குமா? அதெல்லாம் வராது.. வராதுன்னு நம்புவோம்.” என்று கூறினான்.
தலைக்கு மேலே சேகரித்த மரவள்ளி கிழங்குகளை வைத்தான்.
“மணி ஐந்தரை ஆகுது.” என்று கொஞ்சம் கொஞ்சமாக கடிக்க தெரியாமல் கிழங்கை கடித்து பசியாறிகூற, “ஆனா இப்பவே பனிமூட்டமா இருக்கு.” என்றாள்.
“அதுக்கு தான் தங்க இடத்தை ரெடி பண்ணியது.” என்று மூச்சு விட்டு மரத்தில் சாய்ந்து கால் நீட்டினான்.
வேறு வழியேயில்லை சுரபியும் ஆராவமுதன் பக்கம் வந்து அமர்ந்தாள்.
“நிறைய பேசலாம்… நமக்கு நேரமிருக்கு” என்று ஆராவமுதன் கூற, “பேசறதா.. எனக்கு குளிருது” என்ற சுரபி சேலையை இழுத்து உடலோடு போர்த்தினாள் அப்பொழுதும் உதடு தந்தியடித்தது.
ஆராவமுதனோ ஷார்ட்ஸ் அணிந்திருக்க, அவனுக்குமே குளிர் வாட்டியது. சுரபி எதிரில் குளிரை சமாளித்து நடித்தான்.
-தொடரும்.
Super sis nice epi 👍👌😍 renduperum eppdi enga erundhu thappika poranga therilaiye 🙄 parpom 🧐
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 7)
ஓ மை காட்..! கடத்தல் முயற்சி, காப்பாற்றுதல், மழை, மண் சரிவு, பால்கனி உடைந்து பள்ளத்தாக்கில் விழுதல், குட்டி யானையை கதப்பாற்றுதல், பெரிய யானை இவனை காப்பதற்றுதல், திரும்பவும் காட்டுல பயணம், பசிக்கு கிழங்கு, இலைதழை & கிளைகளால தற்காலிக கூடாரம்ன்னு நிறைய அட்வான்சர் பார்த்துட்டாங்க போலவே… ? ஒருவேளை, நாம டிஸ்கவரி சேனல், இல்லைன்னா வைல்ட் லைஃப்ல இருக்கோமான்னே டவுட் வந்திடுச்சு போங்க.
இப்ப அதிக குளிரு வேற, அவளுக்கு குளிருனா முந்தானையை எடுத்து போர்த்திப்பா, அவனுக்கு குளிருனா என்ன செய்வான்..? வேறென்ன செய்வான்…? அதான் பாட்டாவே பாடி வைச்சுட்டான்களே..?
“உனக்கு குளிருனா…
என்னையெடுத்து போர்த்திக்க…
மாமன் தோளுல மச்சம்
போல ஒட்டிக்க…”
😀😀😀
CRVS (or) CRVS 2797
இவங்களை தேடி யாராவது வருவாங்களா? Nice move sis…👌👌👌💐💐❤️❤️❤️
Adeiyappa rendu perum yetho adventure trip pora mathiri yae iruku pavam ivanga inga mattikitu irukkirathu yarukum therivikka kooda mudiyala
Wow wonderful narration. I too enjoy the cold while reading. Fantastic journey. That too elephant help and blessings. Extraordinary. I can imagine the scene while reading. Intresting sis.
Hills station naaa summmaaavaaaaaa… 🥶🥶🥶🥶🥶🥶