அத்தியாயம்-8
ஆராவமுதன் சுரபி இருவரும் தங்கள் கைகளை பிணைத்து கதை பேசினார்கள். கொஞ்சம் போனதும் இருட்டில் அவன் தோள் சாய்ந்தாள்.
அதீத நடுக்கம் கூட மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு, கட்டியணைத்து படுத்தனர். சேலையை போர்வையாக பயன்படுத்தப்பட்டாலும் அதெல்லாம் குளிரை மட்டுப்படுத்தவில்லை.
இரவெல்லாம் நடுக்கத்தில் பாம்பை போல பிணைந்திருக்க, அதிகாலையில், பற்கள் தட்டச்சு செய்ய, சுரபி ஆராவமுதனை தழுவி இருந்தாள்.
இருவருமே நடுக்கத்தோடு இமை மூடி படுத்திருக்க, பனிப்பொழிந்து அது துளிகளாக சேர்ந்து மரத்திலிருந்து அவர்கள் முகத்திலேயே விழுந்தது.
அதன் காரணமாக எழுந்தனர். பக்கத்திலிருந்த ஓடையில் வாய்கொப்பளித்து தண்ணீர் பருகினான் ஆராவமுதன்.
சுரபியோ போர்வையாக உபயோகித்த சேலையை மீண்டும் தன்னுடலில் சுற்றிட, கட்டினாள்.
அதன் பின் நடந்து செல்ல முடிவெடுத்தனர். லேசான குளிர் அப்பொழுதும் உடலை குத்தினாலும் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் உந்தியது.
“வீட்டுக்கு போயிட்டு என்ன ஐடியால இருக்க?” என்று கேட்டான்.
“தெரியலை…” என்றாள் சுரபி.
“தெரியலையா? ம்ம்ம்.” என்றவன் “கிட்னாப் எல்லாம் உங்க கட்சி ஆள் தான். அதுல எந்த வித குழப்பமும் வேண்டாம்” என்று கூற, ‘கார் கண்டறிந்த இடத்தில் தான் இறந்தவர்கள் சடலத்தை டிவியில் காட்டினார்களே. செய்ய சொல்லியவன் யாரோ?’ என்று அதில் சிந்தனையை செலுத்தினாள்.
“நிவாஸ் எல்லாம் எனக்கு கையிட் பண்ணினவர்.” என்று கூறினாள்.
“சோ வாட்.. நல்லவன் என்ற வேஷம் போடக்கூடாதா?” என்று எதிர் கேள்வி கேட்டான்.
“பதவிக்காகவா?” என்று அவனிடம் திருப்பி கேட்க, “அவன் உனக்கு ரூட் போட்டான். நீ கண்டுக்கலை. இத்தனை வருடத்துல நீ கிடைக்க மாட்டேன்ற உண்மை புரிய, சமயம் பார்த்து கிட்னாப் செய்து பழியை அதுக்கு ஏற்றது போல போட்டுட்டு பட்சி உன்னோட இடத்தை பிடிக்க பிளான் பண்ணிருக்கலாம்” என்று கூற, சுரபியோ ”என்னை குழப்பி விடாத. இதுவரை எந்த மைனஸும் நிவாஸிடம் நான் பார்த்ததில்லை. அவன் ஜெனுவா உண்மையா இருக்கான்.” என்று நடந்தாள்.
“உனக்கு நான் சொன்னா புரியலை.” என்றவன் கோபமாய் நடையிட, “ஏய் அங்க பாரு… வீடு… வீடு இருக்குன்னா மக்கள் இருப்பாங்க. அவங்களிடம் போன் வாங்கி அப்பாவிடம் பேசினா பிராப்ளம் சால்வ்.” என்று வேகமாய் நடந்தான்.
சுரபியால் நடைப்பது கடினமாகி மெதுவாக வந்தாள். “கொஞ்சம் சீக்கிரமா நட” என்றான்.
“உனக்கென்ன… ஹாயா நடக்கற. எனக்கு கால் வலிக்கு.” என்று கூற, நின்று திரும்பி பார்த்தவன், “நான் வேண்டுமின்னா தூக்கிட்டு நடக்கவா?” என்று விஷமமாய் சிரித்தான்.
“ஒன்னும் வேண்டாம்… உனக்கு வீட்டுக்கு போக அவ்ளோ அவசரம். என்னால இந்த சேரில நடக்கவே முடியலை. இரண்டு அடி எடுத்து வைக்கவும் காலை தட்டுது.” என்று அவள் வருத்தப்பட்டு நடந்தாள்.
ஆராவமுதனுக்கு, “இல்லையா பின்ன அப்பாவிடம் நிறைய பேசணும்.
தொகுதிக்கு மாநாட்டுக்கு மக்களை சந்திக்க நடந்து போறதேயில்லை. அப்பறம் எப்படி?.. கார்ல சல்லுனு வர்றது சல்லு போறது. புடவை கசங்காம இருந்திருப்ப. இப்ப அப்படியா?” என்று கூறினான்.
‘ம்கூம்.. புடவைய போர்வையா யூஸ் பண்ணிட்டு பேச்சை பாரு’ என்று முனங்கி நடக்க, வீடு அருகே வந்தது போல தோன்றியது. ஆனால் ஆங்காங்கே மரண ஓலங்கள் கேட்டது.
ஆராவமுதன் சுரபியின் கிண்டல் கேலி எல்லாம் மாயமானது.
”அமுதா… இங்கயும் நிலச்சரிவு ஏற்பட்டுயிருக்கு” என்று கண்ட காட்சியில் உறைந்தாள்.
ஆராவமுதனும், “இந்த அளவு மோசமான சூழ்நிலையை நான் சந்திச்சதேயில்லை. சுரபி… முதல்ல உதவுவோம்” என்று பறந்தனர்.
மக்கள் வாழும் அவ்விடத்தில் வீடும் நிலமும் சரிந்து போனதில், அவரவர் வீட்டுக்குள் மக்கள் பலரும் சிக்கியிருப்பதை காண முடிந்தது. இதில் தலையில் காயம், கை துண்டாகி, கால் உடைந்து, ரத்த ஆறாக, சதை கிழிந்து தொங்கி, பார்க்கவே பரிதாபமாக நெஞ்சை வதைக்கும் விதமாக மரணத்தில் மிதந்தவரை கண்டு ஒப்பாரியும் ஓலமுமாக உறவுமுறை சொல்லி ஆங்காங்கே மாரில் அடித்து அழுது துடித்தனர்.
சில குழந்தைகள் பெரியவர்கள் அடிப்பட்டு வலியில் துடிக்க ஆராவமுதன் அங்கு வந்த ஆம்புலன்ஸில் ஏற்ற உதவினான்.
சுரபியும் அவளால் முடிந்த உதவியை செய்ய ஆயத்தமானாள்.
அவள் எதிர்கட்சி தலைவரின் மகள் என்றது எல்லாம் முதலில் தெரியவில்லை. மணலால் அழுக்கு படிந்தவளை இங்கே எதிர்பார்க்காமல் முதலில் ஏதோ படித்த பெண் உதவுகின்றாளென்று நினைத்தார்கள்.
ஆராவமுதன் பெரிதாக மீடியாவில் இதுவரை சிக்கியது இல்லை. ஆனாலும் நல்ல திடக்காத்திரமான ஆண் மகன் ஓடி ஓடி உதவியதில் அங்கிருந்தவர்களின் கவனத்தை பெற்றான்.
மருத்துவ உதவிக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் நிறைய வந்தவண்ணம் இருந்தது. தன்னார்வலர் குழு வேறு வந்து உதவியது. சிலர் குழந்தைகள் முதியவர்களுக்கு பசிக்குமென உணவை வினியோகம் செய்ய முன் வந்தார்கள்.
அது போல மீடியாவும் படையெடுத்து விட்டது. அதன் பலன் மீடியா நிலசரிவில் பாதிக்கப்பட்டவரை பாதிக்கப்பட்ட இடத்தை கவரேஜ் செய்த வீடியோ, தங்கள் டிஆர்பி ரேட் அதிகரிக்க, தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவரின் மகள், மற்றும் இளைஞர் அணி தலைவி, காணாமல் போனதாகவும், இறந்து விட்டதாக செய்தியில் பரவி வரும் சுரபி, உயிரோடு இருப்பதாகவும் அவர் இங்கே மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கின்றார்’ என செய்தி சேனலில் தொகுப்பாளி, காணொளி மூலமாக சுரபியை ஜூம் செய்து காட்டினான்.
நடராஜும் நிவாஸும் அதை காண நேர்ந்தது. இறைவனுக்கு நன்றி கூறி அவர்கள் எந்த செய்தி அலைவரிசை என்று கேட்டு செய்தியை எடுக்கும் தொகுப்பாளியிடம் தொடர்பை ஏற்படுத்த நிவாஸை முயற்சித்திட கூறினார்.
நிவாஸோ அதிர்ச்சியுற்றவனாக, “சார்… சுரபி மேடம் முதலமைச்சர் பையன் கூட இருக்காங்க” என்று சுட்டிக்காட்ட, நட்ராஜனோ “அதனால என்னப்பா ஆராவமுதன் தானே. பொண்ணு உயிரோட இருப்பதே எனக்கு போதும்” என்று மனைவி பல்லவியிடம் சந்தோஷத்தை பகிர்ந்தார். இன்னமும் மருத்துவமனை உதவியோடா இருப்பதால் அவரிடம் சென்று மகளின் நலனை பற்றி தெரிவிக்க நினைத்தார்.
நிவாஸோ ஒலிப்பரப்பான செய்தி சேனலை அணுகினான்.
அடுத்து முதலமைச்சர் இலக்கியனுக்கும் செய்தி காட்டு தீயாக பரவியது. ஏற்கனவே நிலசரிவானதால் மக்களை காண தன் தொகுதி பக்கம் செல்ல முடிவெடுத்தவர், ஏற்கனவே மகன் அங்கே உதவி செய்வதை டிவியில் காண நேரவும், அவரது பி.ஏ விடம் “அவனுக்கு போன் பேட்டா ரீச் ஆகுதா?” என்று கேட்டார்.
“இல்லை சார்.” என்றதும் “தொகுதிக்கு போகணும் ஏற்பாடு செய்” என்று கூறி அகன்றார் இலக்கியன்.
இங்கு சுரபியையும் ஆராவமுதனை உதவி செய்ய விடாமல் மீடியா இடையூறாக உதவுவதை வீடியோ எடுக்க, “சார்… வீடியோ எடுக்கற நேரத்துல நீங்களும் உதவலாம். இல்லையா… உங்க தொழிலுக்குன்னு இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்து சேனலுக்கு அனுப்பிட்டு, இங்க சூழ்நிலைக்கு தேவைப்படற உதவியை செய்யலாம். ஏன் இப்படி பின்னாடி வந்து இம்சை பண்ணறிங்க” என்று திட்டிவிட்டு அங்கே இடிபாடுகளில் இருந்தவரை மீட்கவே ஓடினாள்.
அப்பொழுதும் மீடியா தொந்தரவு தாங்க முடியவில்லை. உதவி செய்வதை அருகே வந்து எடுத்தது. அதை பார்ப்பதற்கு ஏதோ நாடகத்தன்மையாக உதவுவதாக காட்டிவிடும். அந்தளவு கூடவே வந்து செல்ல, சுரபி எரிச்சலடைந்தாள்.
ஆராவமுதனோ எதையும் கேமிரா பார்த்து பேசவில்லை. கோபமாக கேமிரா முன் வந்து, அந்த கேமிரா எடுப்பவனிடமிருந்து, கேமிராவை பிடுங்கி தூரயெறிந்து, “அகைன் கேமிராவை தூக்கிட்டு எவனாவது கைக்கு பக்கத்துல வந்திங்க, அவனவன் கேமிரா தூக்கி உடைச்சி தூரப்போடுவேன்.” என்று உருமினான்.
அதையும் செய்தி சேனல் தூரத்திலிருந்து ஜூம் செய்து ஒலிப்பரப்பியது.
சிதம்பரமோ, “அய்யோ தம்பி இப்படி ஆக்ரோஷமா இருந்தா சேனல்காரன் எல்லாம் நம்மிடம் பகையா திரும்புவாங்க. டேய் முருகா. தம்பி இருக்கற இடத்துக்கு போலாம். தம்பியை தனியா விட்டது தப்பா போச்சு. இதுல அவ வேற அங்க இருக்கா” என்று சுரபியையும் சேர்த்தே தூற்றி கிளம்பினார் சிதம்பரம்.
ஏதோ அங்கிருந்தவர்களுக்கு அரசாங்க பள்ளியிலும் மருத்துவமனையிலும் தற்காலிகமாக தங்கினார்கள்.
சுரபி இங்கிருக்க, அடுத்து அந்த ஊரின் கட்சி ஆட்கள் படையெடுக்க, ஆராவமுதனை தேடி அவனது கட்சி ஆட்களும் படை திரண்டு வந்தார்கள்.
முதலில் சண்டை போடும் விதமாக கட்சி ஆட்கள் உணவும் தண்ணீரும் வினியோகிக்க, சுரபியோ, “தானம் பண்ணும் போதும் கட்சியோட உதவினு சொல்லி தான் செய்யணுமா. தயவு செய்து ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று பிரிக்காம உதவியை சேர்ந்து செய்யுங்க” என்றுரைத்தாள்.
ஆராவமுதனோ முதலுதவி பெட்டியை எடுத்து “முதல்ல உன் கால்ல கீறிய இடத்துக்கும் கைல அடிப்பட்டதுக்கும் மருந்து போடு. இங்க ஓரளவு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தாச்சு. நீ உன்னை கவனி” என்று கட்டளையிட, அவனிடம் தன் கையை கொடுத்து அமர்ந்தாள்.
அவனோ பஞ்சை வைத்து துடைத்தபடி, “அடுத்து மீடியா உன்னையும் என்னையும் இணைச்சு தான் டாபிக்கை எழுப்பும். நம்ம என்ன சொன்னாலும் அவனுங்களோட டிஆர்பிக்காகவாது அட்லீஸ்ட் நம்ம உரண்டை இழுப்பாங்க. மீடியாவுக்கு என்ன பதில் சொல்லப்போற? இப்பவே சொல்லிட்டா நானும் ப்ரிப்பேர் ஆகிடுவேன்.” என்று பேண்ட்எயிட் போட்டபடி கேட்டான்.
“ஏன் உங்களுக்கு என்ன சொல்லணும்னு தெரியுமே. இல்லைன்னா பதில் தெரியாதா?” என்றாள். தன் வாயால் ஏதேனும் கசியட்டுமென வினாவை என்னிடம் திருப்புகின்றான் என்றதில் கேட்டாள்.
அதற்கு ஆராவமுதனோ “மீடியா நேரிடையா என்னை கேட்டா, நான் உண்மையை தான் சொல்லுவேன். உன்னை கிட்னாப் பண்ணினவங்களிடமிருந்து காப்பாத்தி என் கெஸ்ட் ஹவுஸ்க்கு கூட்டிட்டு போனேன். என்னோட சின்ன வயசுல கைகோர்த்து விளையாடிய சுரபி. அவளை அவ அனுமதி இல்லாம வீட்டுக்கு தூக்கிட்டு போனேன். அங்க காபி குடிக்கும் போது நிலசரிவு ஏற்பட்டு பள்ளத்தாக்குல விழுந்தேன். நடந்து வந்தப்ப இங்க இந்த சூழ்நிலையை சந்திச்சோம்னு சொல்வேன்.” என்றான்.
சுரபியோ நடந்ததை அப்படியே சொன்னாலும் உலகம் ஏற்குமா? அல்லது புதுபிரச்சனை எழுமா? என்று ஆராவமுதன் பேச பேச சிந்தித்தவள், “ஃபைன் நடந்தது அது தானே.” என்று கூறிவிட்டு எழுந்தாள்.
ஆராவமுதனோ இடையில் ஏற்பட்ட மனமாற்றம் எல்லாம் எப்படி எடுத்துக்கொண்டால்?
எப்படியும் அந்த மாற்றத்தை தானே மீடியா கேட்கும் என்றாலும் இந்த நிலையில் வேறெதையும் சிந்திக்க திரணியின்றி சிதம்பரத்தை அழைத்தான்.
“என்ன தம்பி நீங்க, எஸ்டேட்ல விட்டுட்டு வந்தா இங்க வந்து நிற்கறிங்க. அதுவும் இந்த பொண்ணுக்கூட” என்று பேச, “அங்கிள்… நம்ம கெஸ்ட் ஹவுஸ் நிலசரிவில் சரிந்திடுச்சு. நீங்க வேற எந்த உதவி என்றாலும் தேவைப்பட்டா கவனியுங்க,” என்றான்.
”தம்பி அப்பா உங்களிடம் பேசணுமாம்.” என்று போனை நீட்டவும், வாங்கினான்.
“சொல்லுங்கப்பா?” என்றான். அவர் ஆராவமுதனின் நலன் விசாரணையை ஏற்று, அங்கிருந்த நிலவரத்தையும் கேட்டுக்கொண்டார்.
கடைசியாக “போன காரியம் என்னடா ஆச்சு? கிட்னாப் அதுயிதுனு நியூஸ் போச்சு. சிதம்பரத்தை கேட்டா தம்பி என்னை உங்க வேலையை பாருங்கன்னு அனுப்பிட்டார்னு சொன்னான். இப்ப நியூஸ்ல சுரபி உன் கூட இருக்கா?” என்று கேட்டார்.
“பிளான் எல்லாம் மாறி மாறி நடக்கு. ஆனா நமக்கு சாதகமா தான் அமையுது. இங்க எதுவும் கேட்காதிங்க. வீட்டுக்கு வந்து நேர்ல பேசறேன்.” என்றான்.
“சரி… நம்ம கட்சி தொண்டர்களோட சேர்ந்து என்ன உதவி தேவைப்படுதோ அதை தயங்காம செய். அதுவும் சுரபி கூட நின்றே செய்” என்று கூற, போனில் பேசியபடி சுரபியை கவனித்து, லேசான முறுவலோடு “ஓகேப்பா” என்று துண்டித்து கொண்டான்.
-தொடரும்.
Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 appo evanum surabi ya kadatha dhan vandhan ah🙄 plan pottu ethellam seyirano😢 enna nadakumo parpom 🧐
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 8)
அப்படின்னா, அமுதன் அப்காவுக்கும் சுரபி அப்பாவுக்கும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறதுல எந்த தவறான கருத்தும் இல்லை. ஆனா, இந்த பொதுமக்களுக்கும் மீடியாவுக்கும் தான் வயிறெரியுது போல. ..?
நல்லதும் பண்ண முடியலை, கெட்டதும் பண்ண முடியலை.
எது பண்ணாலும் பகிரங்க கூத்தாயிடுது. செலிபிரிட்டின்னு வந்துட்டா இப்படித்தான் பல பிரச்சினைகளை சந்திக்கணும் போல. என்ன கர்மம் டா இது..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Yennangada plan panringa avala vachu aalaluku
Rendu daddy ivanga onnu ah irukkirathu ah parthu perusaa ethuvum react panna la aana mathavangaluku apadi illa including media people
Media kku ….sollavaavenum…..avanga velaiya avanga பாக்குறாங்க…..nice move…
Interesting
Superb 🔥👍👍💯💯 Interesting 💥🤩💥💯🤩
ipo media itha vachi oru vishayatha kelapi vida poguthu aana ilakiyan vera pona vishayam ena achi kekuraru ianum namaku sathagama iruku solran nallavan mari nadakurana illa ivan tha kadatha plan pani vera mari acha
Interesting😍