Rice ball fry
செய்முறை :
ஒரு கப் சாதம் மிக்ஸியில் லேசாக அடித்து வைத்து, அதனுடன் வெங்காயம், தக்காளி இஞ்சி, பூண்டு, உப்பு மிளகாய்தூள், தேவைக்கு ஏற்ப கலந்து, மல்லிதழையை பொடியாக நறுக்கி,சீரகம் சிறிதளவு சேர்க்கவும்.
சோளமாவு இரண்டு ஸ்பூன் அளவு கலவையில் சேர்த்து நன்றாக பிசைந்து குட்டி குட்டி பந்து போல உருட்டி கொள்ளவும்.
எண்ணெயில் போட்டு எடுத்து மொருமொருவெனரைஸ் பால் ப்ரை கிடைக்கும். அதனுடன் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
பெரும்பாலும் ஒரு கப் அளவு கொண்ட சாதஉணவு மீதமிருக்க இப்படி செய்தால் நன்றாக வறுத்த இவ்வுணவு உடனே தீர்ந்திடும்.