🔥தி லீடர்🔥 (அடங்காத திமிர் அரசன்)
அத்தியாயம்-1
அங்கிருந்தவர்களின் கைகளில் மின்னி மறைந்து போனில், தொடர் அழைப்பு ஒலிகள், வந்தவண்ணம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோருக்கு கைகள் நடுங்கியது. எதிரே நின்றவனின் விஸ்வரூபம் அப்படி.
தீ ஜூவாலைகள் இரண்டும், இரு கண்களாக கொண்டவன் அவ்விடத்தில் இருந்தவர்களை மெதுவாக பார்வையிட்டான், அதென்னவோ சிலரின் சாதாரண பார்வையே கிலியை தருவிக்கும்.
பார்வையாலே பயத்தை போதித்தவன், தன் கண்களுக்கு கருப்பு கண்ணாடியை அணிந்தான்… அவன் சத்ரியன்.
தொழிலதிபர் என்ற போர்வையில் பல அசாதாரண செயலையும், கண் பார்வையில் செய்து காட்டும் வல்லமையுடையவன். அவனது செயல்கள் தொழில்கள் எல்லாமே தூய்மையானதாக இருக்குமென்றால் கேள்விக்குறியே.?! அப்படியென்றால் நீங்களே புரிந்துக்கொள்ள வேண்டும்.
பிசினஸ் என்று வந்துவிட்டால், நல்லது தீயது, ஏன் செய்ய தயங்கும் காரியங்கள் பலவும் அதில் அடக்கம் பெற்றாலும், தலைமை பண்பில், கட்டி ஆள்பவனுக்கு நீதிநேர்மை பழி, பாவம் எதுவும் பாராதவன்.
அப்பேற்பட்டவன் சமீபகாலத்தில் நண்பர்களால் இந்த நிலையில் வந்து நிற்கின்றான். இந்த நிலை என்றால் அவனை பொறுத்தவரை சோகமயமான நிலை அல்ல, நண்பர்களில் யார் துரோகியென கண்டறிந்த வெற்றி நிலையே..!
அவன் நின்ற கோர்ட் வளாகம், அக்காலை நேரத்திலேயே கருப்பு கோட், வெள்ளை காலர்,
கையில் கோப்புகள், முகத்தில் அவசரம் என்று ஆளாளுக்கு பரபரப்பாக இருந்தனர்.
அந்தக் கூட்டத்துக்குள், சத்ரியன் அவசரம் இல்லாமல் நிதானமாக நடந்தான்.
எதிரேயிருப்பவர்களுக்கு தன் பார்வையை வைத்து தன்னை எடை போடயியலாமல் கண்ணாடியால் மறைத்தான்.
கண்ணாடிக்குள் இருந்த கண்கள், எந்த பயமுமின்றி மற்றவர்களை கிலியை தருவித்திட, மற்றவர்கள் ஒதுங்கினார்கள்.
அவனது நீண்ட கால்கள், நிமிர்ந்த நடை, மேற்சட்டையில் திறந்திருந்த பகுதியில் ரோமங்கள், அதனை உரசிய சூரிய டாலர் மின்ன, கையில் கிடந்த தங்க முலாம் பூசிய போன் கேஸ் என்று தன்னை பார்ப்பவரை மிரள வைத்தான்.
“அவர் தான்?’
“எதிர்ல இருப்பவர் தான் சத்ரியனா?”
“அவனே தான்?”
“இந்த கேஸ்ல கூறப்பட்டவரா?” என்று அங்கிருந்த காக்கி உடையணிந்தவர்களும், வக்கீல் உடையணிந்தவர்கள் பலரும் கிசுகிசுக்கள் சத்ரியன் செவியில் கேட்டாலும், அவன் கோலமோ ‘என் காதுல எதுவும் விழலை’ என்ற ரீதியில் கடந்தான்.
சிலர் புகைப்படம் எடுக்க முனைய, அவனது தலை திருப்புதலில் கேமிரா கீழேயிறங்கியது. மீறி எடுத்தால் அழிந்துவிடும். புகைப்பட கருவி அல்ல… கேமிராவுக்கு உரிமையாளரான குடும்பம் என்பதை தனியாக கூற அவசியமில்லை.
சத்ரியன் முன்னாடி நின்று கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராகவன் ஒரு நொடி தயங்கினாலும், “உள்ள போங்க.” என்றார்.
ராகவன் குரல் சட்டமா இருந்தது. ஆனால் அவர் மனம் ஏதோ சரியில்லை என்று உறுத்தியது.
சத்ரியன் அந்த இன்ஸ்பெக்டர் ராகவன் முகத்துக்கு நேராக தன் கண்ணாடியை கழற்றி, ஒரு பார்வை வீசி, எகத்தாளமாய் சிரித்து முன்னேறினான்.
அங்கேயிருந்த மற்ற போலீஸுக்கு அடிவயிறு கலக்கியது. சத்ரியன் நின்று நிதானமாக ஒருவனை பார்த்து, பார்வை வீசி புன்னகைத்து செல்கின்றான் என்றால் அடுத்து ராகவனுக்கு நடக்கும் விபரீதம் புரியாமலா?
ராகவனுக்குமே வேர்த்து விட்டப்போதும், கோர்ட் ஹாலுக்குள்ள சத்ரியன் பின்னால் வந்தார்.
நீதிபதி வந்ததும் எல்லாரும் எழுந்திட, சத்ரியன் சவகாசமாக இருக்கையில் அமர்ந்தான்.
ராகவனுக்கு நீதிபதி வரவும், சத்ரியன் அமர்வதில், புருவம் சுருக்கினான்.
அவனை ஏறிட்டு நீதிபதிக்கு சல்யூட்டை வைத்தார். அதென்னவோ சத்ரியனுக்கு வைத்த சல்யூட் போல காட்சிக்கு விழுந்தது.
அடுத்து அரசாங்க வழக்கறிஞர் கஜேந்திரன், சத்ரியன் தனக்காக பேச ஏற்பாடு செய்த வழக்கறிஞர் திவாகர் தங்கள் கேஸை வாதாட தயாரானார்கள்.
குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு அங்கே அமைதி.
அதிலும் இன்ஸ்பெக்டர் ராகவனால் சத்ரியன் தான் அனைத்து விதமான குற்றங்களை புரிந்து குற்றவாளி கூண்டில் நிறுத்த, அரசாங்க வழக்கறிஞர் வாதாடினார்.
சம்பந்தப்பட்ட குற்றவாளியென்று கூறப்படும் ‘சத்ரியன்’ பெயர் கூப்பிடப்பட்டதும், சத்ரியன் எழுந்து நின்றான்.
சத்ரியன் அந்த குற்றவாளி கூண்டில் ஒரு காலை மட்டும் முன்னே எடுத்து வைத்திருப்பான்.
அவன் பின்னாலிருந்த கூட்டம்,
அவனை விட பின்னால் தள்ளி சென்றனர்.
“பிராசிக்யூஷன்?” என்று நீதிபதி கேட்டார்.
அரசாங்க வக்கீல் கஜேந்திரன் எழுந்தார்.
“மைலார்ட் தொழிலதிபர் என்ற போர்வையில் இல்லீகல் லேண்ட் செல்ஸ், அடுத்தவர்களை மிரட்டி பணம் பறித்தல், மற்றும் சட்டத்துக்கு புறம்பான விஷயங்கள் செய்வதாக இவர் மேல எண்ணற்ற நிறைய கேஸ் பதிவாகியிருக்கு” என்றார்.
“இதை நான் ஆட்சேபிக்கறேன், மைலார்ட்.” என்று சத்ரியனுக்காக வாதாடும் திவாகரின் குரல்.
திவாகர் வாதாடவும் அவ்விடம் அமைதியானது. திவாகர் மெதுவா எழுந்து சத்ரியன் அருகே வந்தவரின் கையில் கோப்பு இல்லை, குரலில் பதட்டமும் இல்லை.
“குற்றச்சாட்டுகள் நிறைய இருக்கலாம் ஆனா சட்டத்துக்கு தேவையானது ஆதாரம்? அந்த ஆதாரம் இருக்கா?” என்று எதிர்தரப்பு அரசாங்க வழக்கறிஞரிடம் புருவம் உயர்த்தி கேட்டார்.
கஜேந்திரன் ஒரு நொடி பயந்தார். எதிரே சிங்கம் சாதுவாக இருக்கும் கோலத்தில் சத்ரியன் இருந்தாலும், ஏதோ வேட்டைக்கு குறிவைக்கும் உணர்வு.
கஜேந்திரன் “வாக்குமூலம் இருக்கு மைலார்ட்” என்று ஒருவரை முன்னே அழைத்து வந்தார்.
இதற்கு முன் சத்ரியனுக்கு சாரதியாக.. அதாவது ஓட்டுநராக பணியாற்றிய பைரவன் நின்றியிருந்தான். அவன் முகத்தில் மரணபயம் மின்னியது.
திவாகரோ “போலீஸோட அடிக்கு பயந்து, பயத்தில கொடுக்கப்பட்ட வாக்குமூலமா?” என்று நக்கலாய் கேட்டார்.
அரசு வக்கீல் கஜேந்திரன் தடுமாறினார். “மைலார்ட்” என்றபடி திவாகர் தொடர்ந்தார் “என் கட்சிகாரர் சத்ரியன் பெரிய தொழிலதிபர். அவர் தொழிலால், பலருக்கு எதிரியா பார்க்கப்படலாம். ஏன் நல்லவன் இல்லாம கூட பெயரெடுத்து இருக்கலாம். ஆனா அதல்லாம் கேள்விப்பட்டு குற்றம் சுமத்தக்கூடாது, முடியாது.
சட்டத்துக்கு கேள்விப்பட்ட விஷயமோ, வதந்தியோ புரளியோ தேவையில்ல. ஆதாரத்தில தான் ஒருவரை குற்றம் சுமத்த முடியும்” என்றதும், சத்ரியன் முதன் முறையாக திவாகரை பார்த்தான்.
அந்த பார்வையில் ஆச்சரியம் இல்லை, கூடுதலாக அவருக்கு உண்டான ரகசிய விஷயம். இருந்தது.
“இந்த பைரவன் நான்கு வருடமாக சத்ரியனுக்கு ஓட்டுநரா வேலை பார்க்கறான். சமீபத்தில் அவர் பொண்ணு கல்யாணத்திற்கு உதவி கேட்க சத்ரியனும் தாராள மனசா பணத்தை வாறி வழங்கி கொடுத்திருக்கார். பைரவனுக்கு பேராசை அடங்கலை.. அவரோட பேராசையை சத்ரியனோட எதிரிகள் அறிந்து பைரவனுக்கு தேவைப்படுவதை காட்டிலும், அதிகப்பட்சமான பணமும் வீடும் தந்து, சத்ரியன் இல்லீகலா நிறைய குற்றத்துல ஈடுபடும் விஷயங்கள் செய்வதாகவும், அதை நேர்ல பார்த்ததும், என் கட்சிக்காரர் சத்ரியன் மீது பழிசுமத்தும் படியாக கேட்க, அவரும் அதற்கு சம்மதித்து, சத்ரியன் மீது அபாண்டமா பழி சுமத்தி, நேர்மையான அதிகாரியான ராகவனிடம் பொய் புகார் அளித்திருக்கின்றார்.
இன்ஸ்பொக்டர் ராகவனும் பைரவனோட வாக்குமூலம் போதுமென்று, சத்ரியன் காரில் டிரக் தங்கம் கடத்தப்பட்டதாக கூறி அரஸ்ட் பண்ணிருக்கார். ஆனா அதுக்கும் ஆதாரம் இல்லை. வாக்குமூலத்தோட சாட்சி வைத்து சத்ரியனை இங்க வரவழைச்சியிருக்கார். என் கட்சிக்காரரும் தன்னோட எதிரிகள் எந்தளவு தன்னை இதுல திணிக்கறாங்கனு கண்டறிய ராகவனோட குற்றத்தை கேட்டு இந்த இடத்துக்கு வந்துட்டார்.
பெரிய தொழிலதிபரை சாதாரண இன்ஸ்பெக்டர் கைது பண்ணினா நியூஸ் காட்டு தீ போல பரவி ராகவன் பேசப்படுவார் புகழ் கிடைக்கும்னு சினிமா ஹீரோ ரேஞ்சுல நினைச்சிட்டார்.
ஆனா பாருங்க… ஒரு கட்டத்துல பைரவனை விட, எதிரிகள் நேர்மையா இருக்காங்க. ‘சத்ரியன் மேல பழி சொன்னது பைரவனுக்கு பணம் தந்தது நான் தான்’னு மிஸ்டர் மோதிலால் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆக.. என் கட்சிகாரர் சத்ரியனை பொய்யான குற்றச்சாட்டில் ராகவன் பிடித்து வந்ததற்கும், சத்ரியனோட நேரத்தை விரையம் செய்ததற்கும் மன்னிப்பு கேட்டு சத்ரியனை விடுதலை செய்ய கோர்ட்டில் அவர் தரப்பில் முன் மொழிகின்றேன்” என்றார். மோதிலாலும் தலையாட்டி கூண்டிற்கு வெளியே நின்று ஆமோதித்தார்.
நீதிபதியும் சில கோப்புகளை புரட்டி, பைரவனை ஏறிட, “சார்.. சார்… தப்பு தான் சார். என் குடும்பத்தை ஒன்னும் பண்ணிடாதிங்க சார்” என்று சத்ரியனை கண்டு நடுங்கியபடி மண்டியிட்டு உரைத்தான்.
“இடைவேளைக்கு பிறகு கோர்ட் இந்த வழக்கிற்கு நீதியளிக்கும்.” என்று களைத்தார் நீதிபதி.
பைரவனோ “அய்யோ… சார்… என் குடும்பத்தை ஒன்னும் பண்ணாதிங்க சார்” என்று அலறுவதை அலட்சியப்படுத்திவிட்டு அவ்விடம் விட்டு, கோர்ட் வளாகத்தின் ஒரு மூலையில் சத்ரியன் கேட்டபடி நின்றிருந்தான்.
அவன் நின்ற தோரணை இங்க நிறுத்தி விட்டான் பைரவன்.. நீ அலறுவது செவிக்கு இதமாக ஆனந்தத்தை தருகின்றதென்று சொல்லாமல் சொன்னது.
வழக்கறிஞர் திவாகர் சத்ரியன் அருகில் வந்தான். “உங்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பதில் ஒரு சௌகரியம். ஒரு எதிரியை விலைக்கு வாங்கி பைரவனுக்கு உதவியதா மாத்திட்டிங்க. எதிரியையும் உங்களோட பொம்மலாட்டத்துக்கு ஆடவச்சிட்டிங்க. ஆனா ஒரு டிரைவரை கோட்டை விட பார்த்திங்க” என்றார்..
சத்ரியனோ “எனக்குத் தெரியும். எப்பவும் விஸ்வாசமா இருக்கறவங்க உயிர் பயத்துல விலை போயிருக்கலாம். ஆனா பைரவன் நினைக்க தவறின இடமும் அதுதான்.” என்று பதில் சொன்னான்.
திவாகரோ, “இந்த வழக்கு தள்ளுபடி ஆகும். ஆக வச்சிடுவேன். ஆனா அதுக்கு விலை இருக்கு சார்.” என்றார்.
“எவ்ளோ விலை?” என்றான் சத்ரியன். ஏனெனில் திவாகர் நீதி நேர்மை பணத்திற்கு தலை வணங்காதவர் என்று கேள்விப்பட்டவனே. அதை தாண்டி திவாகருக்கு இக்கட்டை கூட்டி தான் இங்கே சத்ரியன் சாதித்தது. அப்படியிருக்க ஒரு நேர்மைவாதி என்ன விலை கேட்க போகின்றானென்ற ஆவல் சத்ரியன் கண்ணில் மின்னியது.
திவாகர் சிரித்தபடி, “விலை தானே சொல்லறேன். அதுக்கு முன்ன இங்க தைரியம் வேண்டும்” என்றார் தோளைக்குலுக்கி.
“என் தைரியம் எப்படி, என்னனு இந்த நகரத்துக்கே தெரியும்.” என்று ஆவேசமானான் சத்ரியன். அவன் கூறிய போது கழுத்து நரம்புகள் புடைத்திருந்தது. ‘என்னை கோர்டில் இருந்து வெளியே வரவழைக்க உன் வாததிறமை வேண்டுமென்ற நக்கலா?’ என்பது போலிருந்தது.
“உங்களுக்கு தைரியம் இல்லைனு நான் சொல்லலை. உங்க தைரியம் தெரிந்ததால் தான் அந்த பைரவன் இப்பவும் மரண ஒலத்தில் மிதக்கறான். நான் சொன்னது, உங்க பக்கத்துல நிற்கறவர்களுக்கு தைரியம் இல்ல.” என்று திவாகர் அமைதியாக சொன்னார்.
அந்த வார்த்தை, சத்ரியனை ஒரு நொடி சிந்திக்க வைத்து நிறுத்தியது.
அவன் பின்னால் இருந்தவர்களை, திரும்பாமல் வலது பக்கமாக பார்வையிட்டான். கூண்டில் ஒரடி எடுத்து வைத்ததற்கே பின்னால் சென்றவர்களை ஏற்கனவே கண்டறிந்து இருந்தான்.
அங்கே இவனுக்கு பக்கபலமாக நின்ற ஆறு அடியாட்களும், பின்னால் நடுக்கத்துடன் நகர்ந்தனர்.
தன்னை இங்கு நிறுத்தியவர்களில் அவர்களுக்கும் பங்குண்டு என்பதை அறிந்தவனாக சிரித்தான். அடுத்த நிமிடம் ஆளாளுக்கு சத்ரியன் காலில் விழ தயாரானார்கள். அதில் ஒருவனோ “இல்லை.. சத்ரியன் கால்ல விழுந்தா நம்ம உயிர் பிழைக்க முடியாது. அவன் இறந்தா மட்டும் தான் உயிர் பிழைக்க முடியும்” என்றான் சத்ரியனை புரிந்தவனாக.
மற்றொருவனும், வேகமாக சிந்தித்து, சரியாக சொல்வதாக தலையாட்ட, ஆறுபேரும் சத்ரியன் அருகே கொல்வதற்கு வந்தார்கள்.
சத்ரியனோ, “என்ன ராகவன் சார்… என்னை கூண்டில் அடைக்க திட்டமா? இல்லை… ப்ரீஸர் பாக்ஸில் வச்சி சவபிணமா மாற்ற திட்டமா?” என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டான்.
ராகவனோ பதில் கூறும் முன், அவரது துப்பாக்கியை சத்ரியன் புயல் வேகத்தில் எடுத்து, தன்னை நெருங்க வந்த ஆறு பேரையும் கண்மண் தெரியாமல் குறிப்பார்த்து சுட்டு தள்ளினான்.
ராகவனுக்கு பட்ட பகலில், கோர்ட் வளாகத்தில், தன் துப்பாக்கியை எடுத்து, சத்ரியன் மற்ற ஆறு பேரை சுட்டு தள்ளவும், அதிர்ச்சியாக நின்றார். ஆனால் நொடியில் தன் கைரேகையை துடைத்த சத்ரியன், துப்பாக்கியையும் ராகவனிடம் தூக்கிப்போட அதை மடத்தனமாக பிடித்தவர் சுற்றிமுற்றி பார்த்தார்.
அங்கே நீதிபதியாக வந்தவரோ, ராகவன் கையில் துப்பாக்கி, மற்ற ஆறு பேர் இரத்த வெள்ளத்தில் கிடக்க, “என்ன ராகவன் இது?” என்றார்.
ராகவன் பதில் தரும் முன், “என்னை கொல்ல என்னோட ஆட்களே வந்துட்டாங்க சார். ஏற்கனவே பைரவன் என்னுடைய பிஸ்னஸை இல்லீகல்னு சொல்லிட்டான். இதுல இவங்க வேற எந்த எதிரி விலைக்கு வாங்கினானோ. கூட்டமா வந்து என்னை கொல்ல முடிவெடுத்தாங்க. ராகவன் என்னை கைது செய்ய வந்தாலும், என் உயிரை காப்பாற்ற மத்தவங்களை சுட்டு தள்ளிட்டார்.” என்று கூறினான் சத்ரியன்.
“இல்லை… நான் எதுவும் பண்ணலை.” என்று ராகவன் மறுக்க, அங்கே சுற்றியிருந்தவர்கள் ராகவன் தான் சுட்டதாக கூச்சலிட்டனர்.
சிசிடிவியும் இல்லாத பகுதியில் வந்து சிக்கியதை அறிந்த ராகவனோ சத்ரியனை காண, அவனோ எகத்தாளமாய் ஒரு புன்னகை வீசினான். ஏற்கனவே திவாகர் இந்த இடத்தை ஆராய்ந்து சத்ரியன் வழக்கிலிருந்து தப்பும் படியாக இருந்தால் இங்கே அழைத்து வர, மற்றவர்கள் முடிந்தால் போட்டுத்தள்ள கூறியிருந்தார் ராகவன். அதனால் சத்ரியன் இடைப்புகுந்து, என்னை சீண்டினால் இந்த கதி தான் நடக்குமென்றது போல கடந்தான்.
அதற்குள் ராகவன் கையிலிருந்த துப்பாக்கியை கைரேகை படாதவாறு வாங்கினார் மற்றொரு காவல் அதிகாரி.
இந்த ஆறுபேரை கொன்றது யாரென கைரேகை முடிவு செய்யட்டுமென்று நீதிபதி கூறினார்.
கூட்டங்கள் களைய, “என்ன ராகவன்… துப்பாக்கியை தூக்கி போட்டதும் யோசிக்காம கேட்ச் பிடிச்சிட்டிங்க. சோ சேட். டிரைனிங்ல எல்லாம் சொல்லி தந்தும் கோட்டை விட்டுட்டிங்களே. இந்த சத்ரியனை சாதாரணமா நினைச்சிட்டியா? விரைவில் உன்னையும்…” என்றவன் இறந்தவர்களை கண்டா ராகவனை துளையிட்டான்.
அதுவொரு பக்கம் பேசும் விதமாக கோர்ட் வளாகத்தில் சலசலந்தது. ஆனால் அந்த உயிர் பலி எல்லாம் இங்கு நடைப்பெற சாத்தியமானதாக இருக்குமென்று எதிர்பார்த்த கும்பல்களில் சிலர், சத்ரியன் குற்றம் புரிந்தவனா? அல்லது குற்றமற்றவனா என்ற வழக்கு முடிவுக்கு காத்திருந்தனர்.
சத்ரியன் அவன் வழக்கில் விடுதலை ஆகும் விதமாக திவாகர் வாதத்திறமை சூடுபறக்க அமைந்தது. திவாகர் ஒரு கேஸில் வாதாடினால் வெற்றி நிச்சயமென்பது கோர்ட் அறிந்ததே.
விடுதலை பெற்றதும், “உங்களுக்கான தொகை, நீங்க கேட்ட காலேஜ் சீட் இரண்டும் உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.” என்றார்.
திவாகரோ, “இதுவரை என்னுடைய வாதத்திறமையில் அறத்தை முன்னிருத்தி மட்டுமே வாதாடினேன். ஆனா முதல் முறை உன்னோட வழக்குக்கு பொய்யும் புரட்டுமா வாதாடிட்டேன்.” என்று குற்றவுணர்வில் முகம் வாடினார்.
“திவாகர் சார்… ரிட்டையர்மெண்ட் ஆகற வரை உங்க வாழ்க்கை தரத்துல ஒருபடி நீங்க முன்னேறலை. ஆனா நீங்க இதுக்கு முன்ன வாதாடி சம்பாரிச்சா கூட பார்க்காத பணத்தை, இந்த ஒரே கேஸ்ல பணத்தை சம்பாரிச்சியிருப்பிங்க. வீட்ல போய் பணத்தை எண்ணறதுக்கு பணம் எண்ணும் மிஷினை வாங்குங்க. ஆல்தி பெஸ்ட்” என்றான் சத்ரியன்.
திவாகருக்கு சிங்கத்தின் முன் தன் வாழ்வை ஒப்படைத்தது போன்ற உணர்வு. சத்ரியன் வழக்கில் வாதாடாமல் சென்றாலும் அவன் சும்மாவிட மாட்டான். எனக்காக வாதாட மாட்டியா என்ற ஆணவத்தில் தன்னை தன் மகளை அழித்திடுவான். அதற்கு வாதாடி ஜெயித்து கொடுக்க வேண்டிய இக்கட்டு. ஆனால் இம்முறை முன்பு போல நியாயம் அநியாயம் என்று பேதம் பார்க்க முடியாத அளவுக்கு நியாயதராசில் உள்ள தேவதை போல கண்ணை மூடிக்கொண்டார்.
சத்ரியன் நெஞ்சுநிமிர்த்தி, மற்றவர்களை பார்வையிட, அவன் பி.ஏ வினோத் மற்றும் விசுவாசிகள் கூட்டம் கருப்பு வண்ண காரில் வந்தவண்ணம் இறங்கினர்.
அதில் 6055 எண்ணை கொண்ட ஆங்கில எழுத்தாக boss மாற்றிய சத்ரியனின் பிரத்யோக காரும் வந்து சேர்ந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
இது
Kingpin Story
Antihero story
Heroine Student
Revenge Story
வாசிக்கறவங்க உங்க அபிமான கருத்தை பகிரலாம்.

தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 1)
ஓ… சத்ரியன், சாமர்த்தியன் தான். இல்லைன்னா இன்ஸ்பெக்டர் ராகவனோட கன்னை வைச்சே தன்னை போட்டுத் தள்ள வந்தவங்களை போட்டுத் தள்ளிட்டு ராகவன் மேலயே கொலை பழியை திருப்பிவிட்டது ரொம்பவே சூப்பர்.
உண்மையிலயே இவன் அடங்காத திமிர் அரசன் தான். போகட்டும், இவன் வாழ்க்கையில என்ட்ரீ கொடுக்கிற அந்த திமிர் அரசியால கூட இவனை அடக்க முடியாதோ…?
எல்லா ஆம்பிளைங்களும் வீட்ல எலி, வெளியிலத் தானே புலியா இருப்பாங்க…?
இவன் அப்படி கிடையாதோ..?
😌😌😌
CRVS (or) CRVS 2797
Nice start
Nice to starting 🤝👌🏻👌🏻👌🏻
Wow the leader sema start sis. Very intresting sis. Different story o8ne started with court and a heros intelligence. Very intresting sis.
Welcome for the new story sisy. Romba naal kalichi oru athiradi story ninaikiren ithulaum pasatha kaata aal varuvangalam papom. Apo intha athiradi illegal issues la vidu ana pakalam
Wow super sis amazing start 😀 eppo dhan sis endha story ya gavanichen🙄 chathriyan character padika eagerly waiting sis 🥰
Nice starting.
Super story