The leader-12
அத்தியாயம்-12
ஷ்ரத்தா வேர்த்தபடி நின்றாள்.
அவளது விரல்கள் சற்று நடுங்கின.
அந்த நடுக்கத்தை சத்ரியன் கவனிக்கக் கூடாது என்பதுபோல், அவள் கைப்பிடியை இறுக்கிப் பிடித்தாள். ‘என்ன இது’ என்று மனசுக்குள் கொதித்தது.
ஷ்ரத்தாவுக்கு மரணத்தை கண்டு பயம் இல்லை… இது பயத்தை விட மோசமான ஒரு உணர்வு.
சத்ரியன் மெதுவாக இன்னும் ஒரு அடிக்குள் அவளை நெருங்கினான். அவனது நிழல் ஷ்ரத்தாவை மூடிவிட்டது.
“நீ சாக தயாரா இருக்கேன்னு சொல்ற” சத்ரியன் குரல் மெதுவானது. அவன் வார்த்தையில் இருந்த கொடூரம், கத்தலுக்கு சமமாக ஷ்ரத்தாவுக்கு புரிந்தது.
“ஷ்ரத்தா… நான் இன்னும் உன்னை வாழ வைக்கணும்னு தான் நினைக்கிறேன்.” என்று கூறிட, ஷ்ரத்தா கண்களை உயர்த்தி நேராக அவனை பார்த்தாள்.
“ஏன் எங்கப்பாவுக்கு ஏதாவது வாக்கு தந்தியா?” என்று இளக்காரமாக கேள்வியாக கேட்டாள்.
சத்ரியன் அவளது பேச்சு சாமர்த்தியத்தில் சிரித்தான்.
அது சாதாரண சிரிப்பேயில்லை. வேட்டையாடும் மிருகத்தின் சிரிப்பு.
“இல்ல… செத்துப்போன உங்கப்பாவுக்காக நான் ஏன் மெனக்கெடுக்கணும்? இது எனக்காக.” என்றவனது பேச்சில் அவனது தேவை என்ன என்று புரியவைத்திட, அங்கே ஒரு நொடி அமைதி.
காற்றும் பூமியும் கூட செயலிழந்தது போல நின்றது போன்ற மாயை.
“நீ என்னை வெறுக்க வெறுக்க.. நான் உன்னை நெருங்கி வந்து கட்டிப்பிடிக்கணும் போல தோணுது ஷ்ரத்தா.” அவன் சொற்கள் மெதுவா விழுந்தது.
சத்ரியனின் அந்த எண்ணம் ஷ்ரத்தாவை முழுக்க உறைய வைத்தது. அவள் ஒரு அடியை பின்னோக்கி எடுத்தாள். பேச்சின் வீரியத்திற்கு அர்த்தம் தெரியாத குழந்தை இல்லையே.
“நீங்க என்ன பேசுறிங்க தெரியுமா?”
குரல் நடுங்கியது.
“ரொம்ப நல்லாவே தெரியும்.”
சத்ரியன் இன்னும் ஒரு அடிக்கு முன் வந்தான்.
“நீங்க என்னை பயமுறுத்துறிங்கன்னு நினைச்சிங்கனா… தவறு. லாயர் திவாகரோட பொண்ணு ஷ்ரத்தா எப்பவும் எதுக்கும் பயப்பட மாட்டா” என்றாள் தைரியமானவளாக காட்டிக்கொள்ள மெனக்கெட்டாள். சத்ரியனின் நெருக்கம் கூட கூட, பின்னால் நகர்ந்தவள், பற்களை கடித்து பயத்தை மறைத்து “நான் பயந்து ஓடுறவங்க லிஸ்ட்ல இல்ல மிஸ்டர் சத்ரியன்” என்றாள்
“ஷ்ரத்தா” சத்ரியன் தலையை சாய்த்து அவளை ரசித்தான்.
“அதான் பிரச்சனை.” அவன் விரல் அவள் கன்னம் அருகே வந்து நின்றது. அவள் கன்னத்தை அவன் தொடவில்லை, ஆனால் தொட்டதை விட மோசமா இருந்தது அவளது நிலை.
“நீ பயப்படாம என் முன்ன நின்னா… நான் என்ன செய்யணும்னு இன்னும் என்ன செய்து உன்னை அடிப்பணிய வைக்கலாமென்ற ஆர்வம் அதிகமாகிடுது.” ஷ்ரத்தா உடனே அவன் கையை தட்டி தள்ளினாள்.
“டோண்ட் டச் மீ.” இந்த முறை சத்ரியன் சிரிக்கவில்லை.
அவன் கண்கள் மட்டும் இருண்டது.
“டெபனட்லி… இப்போ டச் பண்ண மாட்டேன்.” அவன் மெதுவாக சொன்னான்.
அவளை இருவிழியை கூர்ந்து “ஆனா அந்த நாள் விரைவில் வரும்.” என்றதும் அவள் மூச்சு நின்றது.
சத்ரியனோ “நீயே… நான் தொட்டா… விலகாம நிக்கிற நாள் விரைவில் வரும்” என்றான் ஆருடமாக.
இருவரும் ஒருவரை ஒருவர் சளைக்காமல் பார்த்தனர். ஷ்ரத்தா “அந்த எண்ணம் உன்னோட பகல்கனவு” என்றாள்.
“பகல் கனவோ, அதிகாலை கனவோ… ஏன் நைட் கனவோ… கனவு பலிக்கும்.” என்றான் அழுத்தமாய்.
இருவருக்குள் அந்த நொடி ஒரு போரின் ஆரம்பம் போல பார்வைகள் நெருப்பாய் மோதியது.
ஷ்ரத்தா அவனை உதாசினம் செய்து திரும்பி நடந்தாள்.
அவள் ஒவ்வொரு அடியும் கனமாக இருந்தது. சத்ரியனை பின்னால் திரும்பி பார்க்கவில்லை.
சத்ரியன் அங்கேயே நின்று நிதானமாக அவளது பின்னழகை அளவெடுத்து பார்த்தான்.
அவன் உதடு மெதுவாக ‘யு ஆர் கில்லிங் மீ ஷ்ரத்தா’ என்றது அவன் மனம்.
வகுப்பிற்கு வந்தப்பொழுது ஒரு பக்கம் பாடங்கள் நடத்தப்பட்டிருந்தது. அதெல்லாம் ஷ்ரத்தா செவிக்கு எட்டவில்லை.
திடீரென தன் கையை யாரோ தொடவும், விலுக்கென திரும்பினாள்.
சத்ரியன் தான் வகுப்பறை வரை வந்து விட்டானோ என்ற அச்சம் அவள் மேனி நடுங்க தெரிந்தது.
அதை வெளிக்கிட்டாமல் கனிமொழியை பார்த்து நிதானமானாள்.
“சாரி… சாரி.. பயந்துட்டியா?” என்றாள்.
“நீயா..” என்றாள் ஷ்ரத்தா.
கனிமொழி கையை பற்றியபடி, “நான் அப்படி பண்ணியிருக்க கூடாது. ஜானை சத்ரியன் சார் அடிச்சதை பார்த்ததும், பயத்துல உன்னை விட்டு விலகிட்டேன்.
அது உன்னை காயப்படுத்தியிருக்கலாம். ஆனா எனக்கு வேற வழி தெரியலை ஷ்ரத்தா. டாக்டர்ஸ், டீன், மேம், சீனியர் ஜூனியர்னு அத்தனை கூட்டத்தை வச்சிட்டு, அவரும் அவரோட பாடிகார்ட்ஸும் இருந்ததும், சீனியர் ஜானை அடிச்சதும் உனக்காக என்றதும், உன்னை நெருங்கவே பயம் இருக்க தானே செய்யும்.
மேம் டாக்டர்ஸ் கூட உன்னை பார்த்து இப்ப பயப்படறது அப்பட்டமா தெரியறப்ப, நான் எல்லாம் எந்த மூலைக்கு?
கொஞ்சம் அதிகமா பயந்துட்டேன். நீயேன் அழுத? எனக்கு அதை பார்க்கறப்ப கஷ்டமா இருந்தது.” என்றாள்.
“எங்கப்பா இறந்தப்ப எனக்கு யாருமில்லை என்ற வலியில அழுதேன். அதை கடந்து ஒவ்வொரு முறை வர்றப்ப, திரும்ப திரும்ப உனக்கு யாருமில்லை என்ற தனிமையை மோசமான சூழ்நிலை பாடம் புகட்டும் போதும் உடைந்து போயிடறேன்.
அப்பா இருந்தவரை நான் எதுக்கும் அழுததில்லை. ஆனா இப்ப…” என்றவள் தெம்பற்றவளாக கனிமொழி கையை பிடித்து ஒரு மூச்சாக அழுதாள்.
கனிமொழியும் ஆறுதல்படுத்தாமல் அழுது முடி என்று காத்திருந்தாள்.
“அந்த சத்ரியன் ஏன் உன்னை வந்து வந்து பார்க்கறார்? பேசறார். நிஜமாவே உன்னை பாதுகாத்து ஜானை வார்ன் பண்ண வந்தாரா? ஆனா அவரை பார்த்து நீ கோபப்பட்டதை பார்த்தேன்.” என்றாள்.
“அவன் தொழிலதிபர் போர்வையில் இருக்கறான். அவனோட கருப்பு பக்கத்தை பணத்தால் மத்தவங்க பயத்தால் மூடி மறைக்கறான்.
இங்க அவன் பெயர் கார்டியன் இருக்க, அவன் பெயருக்கான மதிப்பை உருவாக்கறான். சிறிதளவு டவுனாகவும் வந்து துவசம் பண்ணிட்டான்.
அவன் வார்ன் பண்ணியது ஜானுக்கு இல்லை. ஜானை வச்சி மத்தவங்க யாரும் அவன் பெயரை கேட்டு பத்தடி தள்ளி ஓடணும் என்ற வீம்புக்கு.” என்றாள்.
கனிமொழி மெதுவாக, “கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத. அவன் வீட்டுக்கு போய் ஒன்நைட் ஸ்டே பண்ணியதா ஜான் சொன்னானே? அது உண்மையா?” என்றாள்.
ஷ்ரத்தா கனிமொழியை உயிரற்ற பார்வை பார்த்து முடிக்க, “சாரிப்பா… நான் தப்பான அர்த்தத்தில் கேட்கலை” என்றாள்.
“உனக்கும் இந்த மெடிக்கல் சீட் அவனோட படுத்து வாங்கியதா முடிவு கட்டிட்டியா? இது எங்கப்பா உயிருக்கான விலை” என்றாள் ஷ்ரத்தா.
ஷ்ரத்தா கண் கலங்க தந்தை இறந்ததும் சத்ரியன் கேஸை வாதாடி வெற்றி பெற்ற கதையும், டாக்டர் சீட்டை வழங்கியதையும், பின்னர் வினோத் பேஞியதன் விளைவா, யோகேஷ் அழைத்து சென்று, தேவையற்று ஒரு நாள் இருந்து தலையில் இடித்து ரத்தம் வழிந்து இருந்துவிட்டு ஓடி வந்த கதையை விவரித்தாள்.
“இப்ப அவனுக்கு நான் பேசியதுல ஈகோ ஹர்ட் ஆகிட்டான். மாடல் அழகி மேல இருந்த போதை, இப்ப நான் பேசியதால், என்னை அவன் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கறான். பொறுக்கி… என்னை நேத்தும் இன்னிக்கும் அப்படி தான் பேசிட்டு போனான்.” என்று கூறினாள்.
“உனக்கு ஏஜ் எயிட்டின் வந்ததும் தூக்கிட்டு போயிடுவானா?” என்று கனிமொழி கேட்க, “அந்த பயத்துல தான் யோசிக்கறேன். நான் எல்லாம் லேசா அதட்டினாலே உடைந்து போயிடுவேன் கனிமொழி. ஆனா அவன் பேசறப்ப அவனை கொல்லணும் என்ற அளவுக்கு கோபம் வருது. எதிர்த்து பேசிடறேன்… ஆனா அப்பறமா தனிமையா இருக்கறப்ப பயமா இருக்கு. பாடத்தை கூட கவனிக்க முடியலை. இதுல நான் ஏதோ அவனிடம் என்னை இழந்து இங்க வந்து படிக்கறேன்னு எல்லார் பார்வையும் உரசறப்ப தீயில நிற்கற பீலாகுது.” என்று அழுதாள்.
“நான் இதுக்கு டாக்டர் படிக்க வராமலேயே இருக்கலாம். ஆனா இந்த சீட் எங்கப்பாவோட உயிருக்கு சமம். நான் டாக்டர் படிக்கறது எங்கப்பாவோட கனவு. அதை இழக்கவும் மனமில்லை.” என்றாள்.
கனிமொழியோ ஷ்ரத்தாவிடம், “இதே உன்னிடத்தில் நான் இருந்தா இந்தளவு போல்டா இருப்பேனானு தெரியலை ஷ்ரத்தா. ஒன்னு உங்கப்பா இறந்ததும் வீட்ல உடைந்து போய் காலேஜிக்கே அடியெடுத்து வைக்காம உடைஞ்சி போயிருப்பேன்.
இல்லையா… இரண்டு பேர் கொல்ல வந்தாங்கனு சொன்னியே அப்பவே அகப்பட்டு செத்து போயிருப்பேன்.
அதுவும் இல்லாமன்னா… மானத்தை இழந்து செத்துப் போயிருப்பேன்.
இங்க… இந்த இடத்துல இன்னமும் அழுதாலும் உன்னை மாதிரி தைரியமா இருக்க வாய்ப்பில்லை.
உன் தைரியத்தை மட்டும் விட்டுடாதே. அழுகையை மென்னு முழுங்க பாரு. இன்னமும் தைரியம் பெற்றவளா மாறுவ.” என்று கூறவும் ஷ்ரத்தா கனிமொழியை கட்டியணைத்தாள்.
“மனிஷாவை நியாபகப்படுத்தற. அவளும் இப்படி தான் பேசுவா. ஒரு தோழியா ஒருத்தர் இருக்கவே மனசு தெளிவாகுது.” என்றாள் ஷ்ரத்தா.
கனிமொழியோ ”மனிஷா போல நான் உண்மையான தோழியா இருப்பேனா தெரியலை. என்னால முடிந்த அளவு உதவுவேன்.” என்று ஷ்ரத்தா கன்னத்தை ஈரப்படுத்திய கண்ணீரை துடைத்தாள்.
கூடவே ‘சாப்பிடு’ என்று உணவை பகிர்ந்துக் கொண்டார்கள்.
காலையிலிருந்து வயிறும் காய்ந்திட, அந்த உணவும் தேவமிர்தமாக இறங்கியது. அதைவிட கனிமொழியின் நட்பு, ஆறுதலான பேச்சு, ஷ்ரத்தாவுக்கு தெம்பை தந்தது.
தனக்கு கல்லூரியில் ஒரு ஆதரவென்று.
மறுபக்கம் வினோத் ஷ்ரத்தாவின் முந்தைய டீட்டெயில் அவளது விருப்பு வெறுப்பை கடைந்தெடுத்து அட்டவணையிட்டு சத்ரியன் முன்னே கொண்டு வந்திருந்தான்.
“ஷ்ரத்தா மேடத்தோட ரேர் பிக்சர். ஷ்ரத்தா திவாகருக்கு ஒரே பொண்ணு பாஸ். திவாகர் அப்ப இப்ப எல்லா காலத்திலும் நேர்மையானவர். அதனால காதலித்த பெண்ணான சாம்பவியையே மணந்து வாழ்ந்திருக்கார்.
ஷ்ரத்தா மேடத்தோட அம்மா… சாம்பவிக்கு, அவங்க உறவுகள் ஒதுக்கியதால் அப்பவே இவங்க மூன்று பேர் மட்டும் தான். திவாகருக்கு ஷ்ரத்தா சாம்பவி மட்டுமே உலகமா வாழ்ந்திருக்கார்.
ஷீரத்தா மேடம் ஏழாவது படிக்கறப்ப அவங்க அம்மா சாம்பவி இறந்துட்டாங்க. அதுலயிருந்து திவாகர் தான் தாயுமானவரா மாறிட்டார்.
ஷ்ரத்தா மேடத்தோட நலனில் எல்லா பங்கும் அவர் மட்டும் தான். சொல்லப்போனா அப்பா மகள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களா பேசி வாழ்ந்திருக்காங்க. அதுக்கு உதாரணம் தான் ஷ்ரத்தா மேடம் டென்த் படிக்கறப்ப டுவெல்த் படிக்கற இரண்டு பசங்க அவங்களிடம் பிரப்போஸ் செய்திருக்க அதை அப்பாவிடம் சொல்லியிருக்காங்க.
ஏன் பிளஸ் டூ முடியறப்ப கூட ஒரு பையன் லாஸ்ட் டே அப்ப பிரப்போஸ் பண்ணியதா அவளோட கிளாஸ்மேட் சொன்னாங்க.
யாரையும் ஹர்ட் பண்ணாம அதே சமயம் எஸ் சொல்லாம அவங்க திவாகரை அழைச்சி மனசு நோகாம படிக்கற வழியை பாருங்கனு அட்வைஸ் பண்ணி அனுப்பியிருக்கார்.
இங்க காலேஜ்ல சமீபத்தில் நிரோஷ் என்பவனும் லவ் பண்ணறதா சொல்லியிருக்கான். அது நம்ம கவனத்துல வரலை. ஜான் சீனியர் கேலி செய்தது மட்டும் தான் அன்னிக்கு அடிச்சி துவைச்சது. அப்ப அந்த நிரோஷ் கேம்பஸ் குள்ள இருந்திருக்கான். நீங்க ஜானை அடிக்கும் போது ஓடியதா ஜான் கூடயிருந்த சீனியர் பொண்ணு சொன்னா.
இதுவரை ஷ்ரத்தா மேடம் யாரையும் விரும்பலை. இதுல ஸ்கூல் ஸ்லாம் புக். அதுல பேஸ்டல் க்ரீன் பேவரைட், பர்மா புட் பிடிக்கும், பிடிச்ச டிரஸ், பிடிச்ச ஸ்பாட் எல்லாம் சொல்லியிருக்காங்க.
இதுல பதினொட்டு வயசு வந்ததும் யாருக்கு ஓட்டு போடணும் என்றது கூட இருக்கு பாஸ்.” என்று வினோத் காட்டவும், ஆர்வமாய் அதை திருப்பி பார்த்தான்.
அதில் முன்னால் நடிகனும், இந்நாள் அரசியல்வாதியின் பெயரை எழுதியிருக்க, புன்னகைத்தான்.
“இதெல்லாம் எங்க கலெக்ட் பண்ணின?” என்றான் சத்ரியன்.
“திவாகர் வீட்ல போய் வீட்டையே அலசி ஆராய்ந்து எடுத்துட்டு வந்தேன் பாஸ். அதோட ஷ்ரத்தாவோட ஸ்கூலுக்கு போய் அவ கிளாஸ்மேட் பொண்ணுங்களிடம் தகவல் சேகரிச்சது. மனிஷா என்ற பொண்ணு தான் க்ளோஸ் போல. அவளிடம் மட்டும் எதுவும் விசாரிக்கலை. அப்படியே போனாலும் அந்த பொண்ணு ஷ்ரத்தாவை பத்தி சொல்ல வாய்ப்பிருக்கானு தெரியலை. அதான்… மத்தவங்களிடம் ஷ்ரத்தா பேசியது எழுதியது, அவ ஸ்கூல்ல ஷேர் பண்ணியதுனு மொத்தமா கேட்டு வந்தேன்.
டாக்டர் படிச்சு ப்ரீ சர்வீஸ் பண்ணணும் என்பது ஷ்ரத்தா மேடத்தோட ஆசையாம் பாஸ்” என்று கூறினான் வினோத்.
மூச்சுபிடிக்க அலைந்து திரிந்து வந்த விஷயத்தை ஒப்பித்து நின்றான்.
“எல்லா மெடிக்கல் ஸ்டூடண்டும் அப்படி தான் ஆசையா படிக்க வருவாங்க வினோத். காலம் அவங்களை சொந்த க்ளினிக்ல கொண்டு வந்து கன்சல்டிங் சார்ஜே ஏழைங்க புலம்பற அளவுக்கு பணத்தை வாங்குவாங்க.
அதெல்லாம் இப்ப தேவையில்லை. ஓட்டு போடற வயசு தானே… அது நெருங்கட்டும். அப்பறம் இப்ப ஜானை அடிச்சி துவைச்சதில் அந்த சீனியர் நிரோஷ் லவ்னு இனி ஷ்ரத்தா பக்கம் சுத்தமாட்டான்னா விட்டு வை. இல்லைன்னா ஒரு தட்டு தட்டி வை.” என்றான்.
வினோத் தலையாட்டி முடித்தான்.
“பாஸ் ஒரு டவுட்” என்று கேட்க, “ம்ம்” என்று சத்ரியன் உயர்தர புகைப்பானை எடுத்தான்.
“ஷ்ரத்தா மேடத்தை விரும்பறிங்களா” என்றான்.
“வாட் நான்சன்ஸ்… இன்னொரு முறை இதை கேட்காத” என்றான் சத்ரியன்.
வினோத்தோ
“சாரி பாஸ்.” என்றான் இப்பொழுது சத்ரியன் மனதில் எந்த காரணம் என்று விளங்காத கலக்கத்துடன் ஷ்ரத்தாவுக்காக கவலைப்பட்டான் வினோத்.
-தொடரும்.

Intresting sis.
Super super super super super super super interesting
Super sis nice epi 👍👌 virumbalai nu soldran🤔 appo en da andha ponna eppdi pandra paavam😔
Interesting waiting for nxt epi
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 12)
அடேயப்பா..! இவன் என்ன வல்லவனை விட ரொம்ப அரகண்ட்டா, கெட்டவனா இருக்கிறான்…? அவ ஒதுங்கிப் போனாலும், இவன் விட மாட்டான் போலவே. அவ வேற அவன் எதிர்க்க கெத்தா பேசிட்டு, அப்புறம் என்னடான்னா
ரூமுக்குள்ள உட்கார்ந்து கதவை சாத்திக்கிட்டு அழுக்காச்சியா மாறிடுறா…?
இதுல அவ அப்படி கெத்தா திமிறா பேசறதுக்காகவே
அவளை அடக்க வேற நினைக்கிறான். இது எங்கப் போய் முடியப் போகுதோ தெரியலை…? அநேகமா, மூணு முடிச்சுல கொண்டு போய் நிறுத்துவானோ ?
😴😴😴
CRVS (or) CRVS2797
Pavam shratha nilamai ena tha thairiyamana ponnu nu kattikittalum ulla bayam irukum thane athuvum ivana pathi pathu therinji vachi iruka details ketanu ivlo detaila collect panitinvanthu nikura paru Vinoth avlo sincerity chathriyanuku
இப்போ விரும்பலை என்று சொல்றான் பின்னர் அவளை உயிருக்கு உயிரா நேசிப்பான்