அத்தியாயம்-13
கனிமொழியும் ஷ்ரத்தாவும் தியரி கிளாஸ் முடிந்து, கேன்டீனில் இருந்தனர். அப்பொழுது, “இன்னிக்கு கிளாஸ்ல நடத்தியது கொஞ்சம் புரியவேயில்லை. உனக்கு ஏதாவது புரிந்ததா?” என்று கேட்க, கனிமொழி உதடு பிதுங்கினாள்.
“புக்ல படிக்கும் பொழுது புரியற மாதிரி இருக்கு. எழுதறப்ப ஏனோ சுத்தமா பிளாங் ஆகுது.” என்றாள்.
கனிமொழியோ “உனக்காவுது அந்த அளவு. எனக்கு சுத்தம்” என்றாள்.
இவர்கள் பேச்சை கேட்டிருந்த ஒருவனோ சத்ரியனுக்கு தகவலை தெரிவிக்க, உடனடியாக பாடம் நடத்தியவரை தொடர்புக்கொண்டு உதவ கூறியிருந்தான்.
யசோதா வந்து ”இன்னிக்கு நடந்திய பாடம் உனக்கு புரியலைன்னா நான் வேண்டுமின்னா அகைன் டீச் பண்ணவா?” என்று தாமாக வந்து உதவிசெய்ய கேட்டார்.
இப்பொழுது எல்லாம் ஷ்ரத்தாவுக்கு யாராவது இப்படி உதவ வந்து நெருங்கினால், அது சத்ரியனுக்காக யோகேஷ் செய்யும் வேலை என்று அறியவும் எரிச்சலடைந்தாள்.
“ப்ளீஸ்.. தயவு செய்து போறிங்களா இதுக்கு முன்ன இப்படி எந்த ஸ்டுடண்டிற்காவது ஹெல்ப் பண்ணியிருக்கிங்க. நான் என்ன ஸ்பெஷல்? போங்க… உங்க வேலையை மட்டும் பாருங்க” என்று கத்திவிட்டாள். ஷ்ரத்தா முன்பு போல டாக்டர் டீன் சீனியர் என்று யாரையும் மதிப்பிட்டு பார்ப்பதில்லை. கோபத்தில் ஏதோ இவளே இந்த கல்லூரிக்கு ராணியாக முகம் தூக்கி எரிந்து விழுகின்றாள். புதிதாக யாரேனும் ஷ்ரத்தாவின் செய்கையை கவனித்தால், ‘இந்த பொண்ணுக்கு எவ்ளோ திமிர்’ என்று தான் முனங்க தோன்றும். அந்தளவு அவள் உதாசினத்தின் மறுபிறவியாக ஷ்ரத்தா மாறியிருந்தாள்.
அவளுக்கு கிடைக்கும் எந்த உதவியும் அவளை கோபப்படுத்தியது. அவளை அறிந்தவர்களுக்கு தெரியும். அவளது உள்மனதின் வலி. ஆனால் அவளை தான் யார் அறிவார் இந்த கல்லூரியில். ஏதோ ஷ்ரத்தாவை சத்ரியன் காதலர்கள் ஒன்றுக்குள் ஒன்றானவர்கள் என்றெல்லாம் பிதற்றுவார்கள். அதெல்லாம் கேட்டு கேட்டு சில நேரம் கனிமொழி கூட ஓட்டினாள். ஷ்ரத்தா தான் கோபமாக சண்டைப்பிடித்து அடக்குவாள்.
அன்று கேன்டினில் சாப்பிட்டு பணத்தை தரப்போனால், “இல்லை… வேண்டாம்” என்று மறுத்தார் கேண்டீன் இன்சார்ஜர்.
“நான் உங்களிடம், ‘எனக்கு பசிக்குது…. பணம் காசு இல்லைன்னு ஏதாவது உதவி பண்ணுங்க’னு கேட்டேன்னா.. ஏன் ப்ரீ சர்வீஸ் பண்ணறிங்க? என்னிடம் எங்கப்பா சேர்த்து வைத்த பணமும் வீடு காசு எல்லாம் இருக்கு. டோண்ட் ட்ரீட் அன்னகாவடி” என்று கடிந்தாள்.
சத்ரியன் அவ என்ன சாப்பிட்டாலும் அந்த கேன்டீன்ல இனி ஷ்ரத்தாவுக்கு எல்லாமே நம்ம செலவுல இருக்கட்டும் என்று ஏற்றி விட்டிருந்தான். அது அவளுக்கு பிடிக்கவில்லை. தந்தை கேஸ் வாதாடி சேர்த்த சொத்து போதுமே. இன்னமும் இவன் தருவது, அவளுக்கு அவளையே அவன் எதிர்பார்த்து செய்வதால் பற்றிக் கொண்டது.
‘வெளியே எத்தனை பேர் சாப்பாடு இல்லாம இருக்காங்க. உங்க மனிதாபிமானம் அங்க செல்லுமா? சான்ஸேயில்லை.. நான் மட்டும் என்ன? அவன் கார்டியன் என்றதும் விழுந்து விழுந்து கவனிக்கறாங்க. பாரு கனிமொழி” என்று கோபப்பட்டாள்.
முதலில் கனிமொழியே ஷ்ரத்தாவை கண்டு ஒதுங்கி விட்டாள். வினோத் மூலமாக சத்ரியன், அவ நட்பை அவ பேச ஆசைப்படறவங்களை அவளை சுத்தி விலகினா நோட் பண்ணி, அவங்களா மறுபடியும் பேச வைக்கறது யோகேஷ் உன் வேலை’ என்று கூறியிருக்க, யோகேஷாக தான் கனிமொழியிடம் சென்று ஷ்ரத்தாவுக்கு ஆறுதலாக பேச முன்னிருத்தி வற்புருத்தியது. கனிமொழி பயந்து தான் ஷ்ரத்தாவிடம் பேசியது. ஆனால் நாளடைவில் பழைய ஷ்ரத்தாவிடம் பேசும் இயல்பு வந்துவிட, சத்ரியனும் ஷ்ரத்தாவிடம் தான் பேச அனுமதிப்பதை அறிந்து இயல்பாகி விட்டாள். இதை சொன்னால் கனிமொழியிடமும் பேசுவதற்கு யோசிப்பாள் இந்த ஷ்ரத்தா.
கனிமொழி மூச்சுவிடவில்லை. “எனக்கென்னவோ அந்த மேம் சொன்ன புக்ல போய் பார்த்தா ஒரு ஐடியா கிடைக்கும். லைப்ரரி போய் பார்க்கலாம்” என்றாள்.
ஷ்ரத்தாவும் சரியென்று கூறினாள். ஆனால் கல்லூரி லைப்ரரி செல்ல பிடிக்காமல் கன்னிமாரா சென்றாள். அங்கே அவள் படிப்பு சம்பந்தமாக அவளாகவே கேட்டு நோட்ஸ் எடுக்க அமர்ந்தாள். நெடுநேரம் பார்த்து படித்து புரிந்து, புத்தகத்தையும் வாங்கி வெளியே இருவரும் பேசி விவாதித்து கொண்டனர்.
கனிமொழியாக “ம்ம் பசிக்கு” என்றாள். எதிரே தான் பெரிய ஹோட்டலும் இருக்க, அங்கு சென்று ஆர்டர் தந்துவிட்டு அமர்ந்தாள்.
யோகேஷும் அதேயிடத்தில் வந்து, பக்கத்து டேபிளில் எதிரே அமர்ந்தான்.
“இவனுக்கு வேலை எதுவும் இல்லை. ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளராது போல இந்த பாடிகார்ட்ஸுக்கு எல்லாம். ஒரு கேனை என்னை வாட்ச் பண்ண சொன்னா உடனே சுத்தி சுத்தி வர்றான்.” என்று சபித்தாள்.
“ஆளு நல்லாயிருக்கான்” என்று கனிமொழி சிரிக்க, “ம்ம்ம்.. ஒருநாள் சத்ரியனுக்கு பதிலா இவனை காதலிச்சு ரிவீட் அடிச்சா என்ன ஆகும்” என்று சிரித்தாள். கனிமொழியும் சேர்ந்து சிரித்து முடித்தாள்.
அந்த நொடி தான் மனசாட்சி ‘ஏய்.. அப்ப சத்ரியன் லவ்ஸ் ஷ்ரத்தாவா? நான் ஏதோ முட்டல் மோதல்னு நினைச்சேன்.’ என்று வினாத்தொடுத்தது.
ஷ்ரத்தா மனதை அடக்கி, “பச்… அவனால அப்பாவை இழந்திருக்கேன். இதுல அவனை வச்சி காமடி பண்ணிட்டு’ என்று அவசரமாக மனதை அடக்கினாள்.
சாப்பிட்டு கனிமொழி ஆட்டோயேறி செல்ல, ஷ்ரத்தா மறுபுறம் ஹாஸ்டல் வந்தடைந்தாள். கொஞ்சம் தாமதமாக தான் பேசி சிரித்து வந்தாள். இங்கு தான் யார் கேள்வி கேட்கப் போகின்றார் என்ற மமதை வேறு ஷ்ரத்தாவுக்குள் எள்ளியது.
அவள் தங்கியிருந்த அறையில் வந்தா கதவை திறக்க, அவள் பாதத்தில் ஒரு லெட்டர் இருந்தது.
“யாருக்கா.. இருக்கும்? இது எனக்கா? இந்த கிறுக்கன் சத்ரியன் அனுப்பியதா?” என்று எண்ணினாள்.
அவள் மட்டும் தானே வாசம் செய்கின்றாள். அதனால் அவளுக்கானதாக தான் இருக்குமென்று குனிந்து எடுத்து பார்த்தாள். அவளுக்கு சத்ரியன் தான் சொல்லாவிட்டாலும் கார்டியன் அதனால் அவன் தான் அனுப்பியிருக்க வேண்டுமென பிரித்து வாசித்தாள்.
“திவாகரின் மகளுக்கு… உன் கண்ணுக்கு தெரியாத நலம் விரும்பியின் கடிதம் இது.
உன் தந்தை தி கிரேட் லாயர் திவாகரின் மரணம் விபத்தல்ல. அது ஒரு திட்டமிட்ட கொலை என்று அறிந்த பெண்ணாக இருந்தாலும், தந்தையை கொன்றவன் யார்? தந்தையை விபத்துக்குள்ளாக்கியது யார்? என்ற தெளிவில்லாத குழப்பத்தில் இருக்கின்றவளே!
உன் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டது வேறு யாருமல்ல… உன் கார்டியன் சத்ரியன் மட்டுமே. இதற்கான ஆதாரம் என்னிடமில்லை. இருந்தால் அதை பகிர்ந்து இருப்பேன். ஆனால் நீ நம்ப வேண்டும்.
நீ நம்பினால்… சத்ரியனை கொல்வதற்கு திட்டத்தையும், ஆதரவும் உனக்குண்டு.
முகம் தெரியாத உன் நலம் விரும்பியுடன் கைகோர்த்திட நினைத்தால் நாளை சம்மதமாக வெள்ளை நிற ஆடையை அணிந்து ஆமோதித்திடு. மற்றவை பிறகு.
-நலன் விரும்பி.
அதை வாசித்து முடித்ததும் ஷ்ரத்தாவுக்குள் ஏதோ கோபம் குழப்பம் உண்டானது.
தந்தையை கொன்றது சத்ரியனாக இருக்குமா? இதை யார் அனுப்பியது? என்று எழுந்து கதவருகே எட்டி பார்த்தாள். அவளது வராண்டாவில் யாருமில்லை. சற்று தள்ளி ரோட்டில் எட்டி பார்த்தாள். இரண்டு மூன்று கார் நின்றது. ஆனால் சந்தேகிக்கும் விதமாக தென்படுவது போல தெரியவில்லை.
எழுதியது யாராக இருக்கும்? சத்ரியனுக்கு எதிராக யாரோ தன்னிடம் அவனை இழுத்து வைக்கின்றனரா? அல்லது நிஜமாகவே சத்ரியன் தான் தந்தை இறப்புக்கு காரணமா?
தந்தையை காப்பாற்றியவனே கொல்வானா? குழப்பம் அதிகரிக்க, முகத்தை அலம்பினாள்.
மீண்டும் மீண்டும் அந்த கடிதத்தை வாசித்தாள்.
நீண்ட நேரமாக நகம் கடித்தபடி, உணவை டி கூட மறந்தாள். ஆனால் இவள் சாப்பிட வராவிட்டால் சாப்பாடு இவளை தேடி வந்தது.
கதவு தட்டும் சப்தமும், குரலும், “ஷ்ரத்தா… டின்னர் கொண்டு வந்திருக்கேன்.” என்று அழைத்தார்.
“யா வர்றேன்” என்று அவசரமாக படித்திருந்த லெட்டரை மறைத்தாள். லெட்டர் இருந்த கவரையும் தனது புத்தக பையில் திணித்துவிட்டு, திறந்தாள்.
“சப்பாத்தி” என்று நீட்டவும், அந்த பாக்ஸை வாங்கி பார்த்தாள். இது ஹாஸ்டலில் இருக்கும் சப்பாத்தி இல்லை என்று பார்த்ததும் புரிந்தது. தற்போது எல்லாம் தனக்கு மட்டும் தனி உணவு வருவதையும் அவள் கவனித்திருக்கின்றாள். ஆனால் ஏன் எதற்கு இந்த வித்தியாசமென கேட்கவில்லை. ஒரு விஷயத்திற்கு விடை தெரிந்தே கேள்வி கேட்பதை ஷ்ரத்தா தவிர்த்திருந்தாள்.
“தேங்க்ஸ்” என்று பெற்றுக் கொண்டு கதவை தாழிட்டாள்.
சப்பாத்தி சுவைத்து முடித்து, நீரை பருகி முடித்தாள். இந்த அறையில் மற்றொரு பெண் இருந்தாள். ஆனால் சத்ரியன் ஜானை அடித்து துவைத்த நாளிலிருந்து ஷ்ரத்தா தனித்து தான் வாசம் செய்கின்றாள்.
அதனாலோ என்னவோ தனி வீடு போல தான் அவளுக்கு தோன்றியது.
இரவெல்லாம் அந்த லெட்டரை யார் எழுதியிருப்பார்கள்? சத்ரியனின் எதிரிகளில் யாரோ தன்னை பயன்படுத்த முனைகின்றனரா? அல்லது நிஜமாகவே சத்ரியன் தந்தை இறப்புக்கு காரணமா? இதையே மீண்டும் மீண்டும் எண்ணியவள் கால தாமதமாக உறங்கினாள்.
அதிகாலை கொட்டாவி விடுத்து எழுந்த போது, அறைக்கதவுக்கு வெளியே யாரோ இருப்பதாக நிழலாட, அவசரமாய் கதவை திறந்து பார்வையிட, அவள் பாதத்தில் வண்ணப் பூங்கொத்துகளாக இருந்தது.
கண்கள் சுருக்கி அதை பார்வையிட, “ஹாப்பி பெர்த்டே ஷ்ரத்தா” “பிறந்த நாள் வாழ்த்துகள் ஷ்ரத்தா”, “Happy to be turning Eighteen” என்று பல்வேறு விதமான வாழ்த்தை தாங்கிய அட்டையுடன், ஒவ்வொரு விதமான வண்ணத்தில் பூங்கொத்து இருந்தது.
அனுப்பியது சத்ரியன் என்று உடனே புரிந்துவிட்டது. நெஞ்சுக்கூட்டில் லேசாக பயத்தில் ஜில்லிட்டது. சத்ரியன் தன்னை வந்து வன்முறை செய்து அழைத்து சென்றிடுவானா? முன்பு யோகேஷ் இழுத்து சென்றானே.. அப்படி? என்று பேயறைந்தது போல நின்றாள்.
“ஹாப்பி பெர்த்டே ஷ்ரத்தா. இப்ப தான் எழுந்தியா?” என்று ஹாஸ்டல் வார்டன் கேட்க, “இதெல்லாம் என்ன மேம்” என்றாள்.
“ஓ பெர்த்டே டிரஸா? பூக்கள் எல்லாம் அழகாயிருக்கு.” என்றார்.
“இதெல்லாம் யார் அனுப்பினா? நீங்க எப்படி அலோவ் பண்ணினிங்க?” என்று எகிறினாள்.
“ஷ்ரத்தா… உனக்கே தெரியும். இங்க மேனேஜ்மெண்டே சத்ரியன் சாரோட கைக்குள்ள இருக்கு. அப்படியிருக்க என்னை கோச்சிக்கறதுல நியாயமில்லைம்மா.” என்றார்.
உண்மை தானே அவரை கோபத்தில் திட்டி என்னவாக போகின்றது.
டிபன் கொண்டு வரச்சொல்லவா?” என்று பணிப்பெண் போல பவ்யமாக கேட்டார்.
”நோ மேம். நானே குளிச்சிட்டு போய் பார்த்துக்கறேன்.” என்றாள்.
இந்த பூவை எடுத்து வச்சிக்கலையா?” என்று கேட்க வேண்டா வெறுப்பாக அதை எடுத்து அறைக்குள் வைத்துக் கொண்டாள்.
அதிலிருந்த புதுஉடையை பார்த்தாள், ‘பிறந்த நாளுக்கான உடை. உனக்கு பிடித்திருக்குமென நம்புகின்றேன். ஆனால் எனக்கு நீ பிறந்த பொழுது இருந்த கோலத்தை காணவே பேராசை அடைகின்றேன்.” என்று எழுதியிருக்க கசக்கி எறிந்தாள். அதில் உள்ள வார்த்தை அவளை அப்படி செய்ய தூண்டியது.
“அந்த இடியட்டே தான்” என்று கோபத்துடன் எழுந்தாள்.
மேஜையில் அலங்காரத்தில் இருந்த பூவை எல்லாம் பிய்த்து எறிந்தாள்.
கோபம் தணிய, நேரம் நகரவும், மனிஷா வாழ்த்து கூறினாள். அதன்பின்னே நிகழ்வுக்கு வந்தவள் வாழ்த்தை ஏற்று, பேசி சிரித்து குளிக்க சென்றாள்.
குளித்து முடித்து வெளியே வந்த பொழுது, பிய்த்து எறிந்த பூக்களை கண்டு வாடினாள்.
சத்ரியன் மீதுள்ள கோபம், இந்த பூக்கள் என்ன செய்தது? அதனால் அதை எல்லாம் ஒன்றாக எடுத்து அலங்கார மேஜையில் வைத்து தந்தை போட்டோ முன் சென்று வணங்கினாள்.
“நேத்து ஒரு நலம் விரும்பினு லெட்டர் வருதுப்பா. இன்னிக்கு பதினெட்டு வயசு ஆரம்பிக்குதுனு சத்ரியன் இஷ்டத்துக்கு பூவும் டிரஸும் அனுப்பியிருக்கான். அப்பா… இது நீங்க போன வருடம் வாங்கி தந்த டிரஸ். எனக்கு இந்த வருடம் புது டிரஸ் வாங்கி தர நீ ஏன்பா இல்லை.” என்
று கண்ணீர் விட்டவள், துடைத்து முடித்து கல்லூரிக்கு செல்ல முடிவெடுத்து கதவை மூடினாள்.
-தொடரும்.

Interesting waiting for nxt epi 😍
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 shratha kandipa andha letter a egnor pannanum ayyo enna Panna poralo🙄😕