Skip to content

The leader-16

64 / 100 SEO Score

The leader-16

அத்தியாயம்-16

ஒரு வைர மோதிரம்,

ஒரு ஸ்டெதஸ்கோப்பும்

ஷ்ரத்தாவின் முன் மேசையில் இரண்டும் ஒளிர்ந்திருந்தன.

ஒரு பக்கம் சத்ரியனை கொல்ல தூண்டும் இருளுக்கு பிரகாசமான வைரமோதிரம். மற்றொரு பக்கம்

அவளது கனவுகளை ஒளியூட்ட தந்தையின் நினைவூட்டும் அவளது எதிர்காலத்தின் பிரகாசம்.

 

யாரை நம்புவது, ஷ்ரத்தா மெதுவாக தலையை பிடித்தாள்.

அந்த வைர மோதிரத்தை எடுத்தாள். ஒளி சின்ன சின்ன தீப்பொறிகளா அவள் கண்களில் மின்னியது தந்தையின் இறப்புக்கான காரணமும் காரணகர்த்தாவும் அழிய வேண்டும்.

 

அவள் மெதுவாக மோதிரத்தை விரலில் போட்டாள். ஏதோ நெஞ்சை அடைக்கும் விதமாக மூச்சு முட்டியது.

 

வைரம் சிலருக்கு அழிவை தருமாம். ஷ்ரத்தவோ அழிவை தேடி தான் அதை தேர்ந்தெடுத்தாள்.

ஏனோ சத்ரியனின் கர்ஜனை

“ஷ்ரத்தா… என்னை கொல்ல யாரிடம் கைகோர்க்கற? நான் தான் உங்கப்பா திவாகரை கொன்றதாக நினைக்கறியா?” என்ற உறுமல் பிரம்மையாய் கேண்கவே

ஷ்ரத்தா திடுக்கிட்டாள்.

சத்ரியன் பின்னால் சிங்கம் போல உறுமுவதாக பயந்து நடுங்கினாள். ஆனால் அவள் திகைத்து திரும்ப அவ்வறை காலியாக இருந்தது.

 

ஆனால்… அந்த குரல் தெளிவாக கேட்டது. சத்ரியன் குரலும் கர்ஜனையுமாக. சாதாரணமாய் சத்ரியனை கொல்ல நினைத்தாலே அவர்களை அழித்திடுவானே. இப்படி தான் பயத்திலே சாகடித்திடுவானோ?

 

டேபிளில் இருந்த ஸ்டெதஸ்கோப் அவள் கையில் தட்டுப்பட்டது.  அவள் என்னவோ ஏதோவென கையை உதற ஸ்டதஸ்கோப் கீழே ‘டக்’ என்று விழுந்தது.

 

அந்த சிறு சத்தம் அறையை முழுக்க நிரப்பியது. ஷ்ரத்தா உடம்பு பயத்திலேயே உறைந்தது. அவள் மெதுவாக கீழே குனிந்து ஸ்டதஸ்கோபை எடுத்தாள்.

 

அதை மெதுவாக காதில் வைத்தாள். தன் இதயத்தை தானே கேட்க, அங்கே இதய துடிப்பு கேட்பதற்கு பதிலாக சிரிப்பு சப்தம் கேட்டது. ஆழமான… வசீகரிக்கும் ஆணின் சிரிப்பு. ஷ்ரத்தா திடுக்கிட்டு ஸ்டெதஸ்கோப்பை காதிலிருந்து எடுத்தாள். சத்ரியனின் சிரிப்பு அவளை விடாமல் துரத்துவதாக வேர்த்தது.

“எனக்கு என்ன ஆச்சு? சத்ரியன் என்னை விரட்டுவதாகவே நினைச்சிட்டு இருக்கேன். அது ஏன்?” என ஷ்ரத்தா நினைக்க மூச்சு வேகமாயிற்று.

 

கதவுக்கு வெளியே மெதுவான அச்சுறுத்தும் தட்டல். டக்… டக்…

“யாரு?’ என்று  குரல் உருகுலைந்திட கேட்டாள்.

 

மறுபுறம் பதில் இல்லை.

டக்… டக்… சப்தம் மீண்டும் கேட்க, யாரு அவள் மெதுவாக கதவை திறந்தாள். வெளியே யாரும் இல்லை ஹாஸ்டல் வார்டன் தான் இருந்தார்.

 

“ஷ்ரத்தா… வந்துட்டியாம்மா?” என்று கேட்டார்.

 

“எஸ் மேம்.” என்றாள்.‌

 

“ஓ..ஓகேம்மா. நீ தானானு செக் பண்ணினேன்.” என்று நடந்தார்.‌

 

‘என்‌ ரூம்ல நான் இல்லாம வேற யார் இருப்பா?’ என்று ஷ்ரத்தா மனதில் முனங்கியவள், “மேம்… இங்க என்னை தவிர வேற யாராவது வந்தாங்களா?” என்று கேட்டாள்.

 

“இல்லையேம்மா… உனக்கா தனியறை கொடுக்க சொல்லி சத்ரியன் சார் ஆர்டர். நீ வீட்ல இருப்பது போல பீல் பண்ணணும்னு சொன்னார். அதனால நாங்க உன் ரூம்மேட்டா கூட யாரையும் இணைக்கலை. இருந்த சீனியரை கூட அனுப்பிட்டேனே.” என்றார்.

 

‘ம்கூம்.. தனியா திகிலூட்ட தான் அவன் பிளானா இருக்கும்’ என்று மனதிலையே வைதாள்.

 

“மேம்… என்‌ ரூம் பக்கம் வேறயாராவது வந்தாங்களா? ஐ மீன் ஜென்ஸ் யாராவது?” என்று கேட்டாள்.

 

“இல்லைம்மா.. ஹாஸ்டல்ல மென்ஸ் அலவுட் இல்லை. யாரும் வரமாட்டாங்க. ஏன் கேட்கற?” என்றார்.

 

”சிசிடிவி இருக்கே யாராவது வந்துட்டு போனா தெரியும் தானே? மேம்… ஒரு அரை மணி நேரம் முன்ன இங்க யார் வந்தானு பார்க்க முடியுமா?” என்று கேட்டாள்.

 

ஹாஸ்டல் நிர்வாகிக்கும் பெண்மணியோ “ஏன் ஷ்ரத்தா? ஏதாவது பிரச்சனையா? அய்யோ… உனக்கு ஏதாவது ஆபத்துன்னு சத்ரியன் சார் சும்மா இருக்க மாட்டாரே” என்று பயந்தாள்.

 

“மேம்… நான் நார்மல் ஸ்டுடண்ட் தானே? என்ன பயம்? சத்ரியனை எல்லாம் அடிக்கடி இழுக்காதிங்க. ஏதோ ஆப் ஹவர்குள்ள இருக்கற சிசிடிவி கேமிராவை பார்க்கணும் அதை மட்டும் காட்ட முடியுமா?” என்று கோரிக்கையாக கேட்டாள்.

 

சரியென்று கூறி அழைத்து சென்றார் அப்பெண்மணி.

 

சிசிடிவி அறையில் ஷ்ரத்தா இங்கு வரும் முன், யாராவது காரிடரை தாண்டி வந்தாரா என்று பார்க்க அப்படி யாரும் வரவில்லை.

 

‘மேம்… இந்த சிசிடிவி ஒர்க் ஆகுதா? இல்லை பழைய க்ளிப் வீடியோ ஏதாவது திரும்ப ஓடுதா? என்னோட ரூம் பக்கம் சிசிடிவி ஏதும் இருக்கா?” என்று கேட்க, “இந்த ஒரு சிசிடிவி தான் மெயின் மா. ஓர்க்கிங் கண்டிஷன் தான் ஷ்ரத்தா. எதுக்கும்மா கேட்கற? காலையில உனக்கு ஒரு பார்சல் வந்ததே அது சத்ரியன் கிட்ட வேலை பார்க்கற யோகேஷ் தான் கொண்டு வந்து வைத்துட்டு போனார்.” என்று கவரை யார் வைத்தது என்று அறிய கேட்கின்றாளோ என்று நினைத்து வினா தொடுத்தார்.

 

இவரிடம் சத்ரியன் தவிர்த்து, இது போல ஒரு நலம் விரும்பி கடிதத்தை அறைக்குள் கதவருகே இருந்ததாக உரைக்க முடியுமா? அப்படியே கூறினால் அடுத்த நொடி சத்ரியன் செவிக்கு எட்டிவிடும். என்று அவளறியாததா!

 

“ஓகே.. மேம். சத்ரியன் வந்தானானு ஓவர் திங்கிக் பண்ணிட்டேன். சாரி” என்று எழுந்துக் கொண்டாள்.

 

ஷ்ரத்தா மெயின் கேட் வழியாக எவனும் வந்திருக்க வாய்ப்பில்லை. யாரோ சுவரேறி குதித்து மறைந்து வந்து இங்கே வைத்திருக்க வேண்டும். சத்ரியன் அவனாக யோகேஷிடம் சொல்லி, பரிசை நேரிடையாக தான் வைத்திருக்க வேண்டும்.

 

அதே யோசனையில் அறைக்கு வந்து சேர, குளித்து உடை மாற்றி உறங்க முயன்றாள்.

 

சத்ரியன் முகமே வந்து அச்சுறுத்தியது. இன்றெல்லாம் அவன் பார்வை தன் மேனியை ஊர்ந்து ரசித்ததில் அவ்வளவு நேரம் குளித்து அந்த பார்வையை அகற்ற முடியாமல் தவித்தாள்.

 

மனிஷா போனில் அழைத்து ஷ்ரத்தா நலத்தை கேட்டுக் கொண்டாள். ”எங்க எங்களை அனுப்பிவிட்டு உன்னை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டானா? என்று பயந்தே போயிட்டேன்” என்று கேட்டாள்.

“அதெல்லாம் அவனை நோஸ் கட் பண்ணி அனுப்பிட்டேன். நானா அவனை தேடி வருவேன்னு ரொம்ப கான்பிடன்ஸா பேசறான். நானா அவனை தேடி போகமாட்டேன் மனிஷா‌.” என்று பேசினாள்.

 

“சரிடி இப்ப தான் நிம்மதி. தூங்கு” என்று அணைத்திட அடுத்து கனிமொழி போனில் கூப்பிட்டாள்.

 

அவளிடமும் தன் நலத்தை நடந்ததை தெரியப்படுத்தினாள்.

 

“துப்பாக்கியை வச்சி சுட்டுட்டியா? ஏன் ஷ்ரத்தா? உனக்கா அவரை பார்த்தா பயமாயில்லையா?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள்.

 

“நான் உயிரோட வாழ ஆசைப்பட்டா பயமிருக்கும் கனிபொழி. எனக்கு தான் உயிர் வாழ ஆசையில்லையே. பிறகு ஏன் பயப்பட போறேன்” என்று பதிலுரைக்க, “சரி ஷ்ரத்தா… பார்த்து இருந்துக்க” என்று அறிவுறுத்தி முடித்தாள்.

 

தோழிகளிடம் பேசியதன் விளைவாக சிலதை மறந்தவள், ஸ்டதஸ்கோப்பை அணைத்து கொண்டு இறுக கண்ணை மூடினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அமைதியுற்றது அவளது மனம். ஆனால் அதை வாங்கி தந்தவனே சத்ரியன் என்றது அந்த நிமிடம் மறந்துப்போனாள்.

 

அடுத்த நாள் கண்விழித்த போது, ஸ்டதஸ்கோப்பை கழுத்தில் அணிந்தும், மோதிரத்தை கையில் அணிந்தும் கல்லூரிக்கு புறப்பட்டாள்.

 

மோதிரத்தை ஏன் போட்டோமென அவளுக்கு உறுத்தியது. ஆனால் ஒரு மனமோ தந்தை இறப்பை பற்றி பேசியதால் அணிந்துக் கொண்டாள்.‌ யார் அந்த முகம் தெரியாத சத்ரியனின் எதிரி? தனக்கு நல்லதை செய்வானா? சத்ரியன் போன்ற ஒருவனிடம் சிக்கிக் கொண்டால் மீட்க உதவ வருவானா? இப்படி முடிவெடுத்து அணிந்தாள். மேற்கொண்டு நேரிடையாக பேச நேரும் போது தெளிவாக உரைத்திடலாமென கணக்கிட்டாள்.

 

கொஞ்சம் அதிகப்படியான தைரியசாலியாக வலம் வந்தாள்.

 

அதிலும் அவள் அணிந்த வைர மோதிரம் அவளை மற்றவர்களிடமிருந்து அன்னியப்படுத்தியது.

 

கல்லூரிக்கு வந்ததும் “இது யார் தந்த மோதிரம் ஷ்ரத்தா? சத்ரியன் டிரஸ் ஸ்டதஸ்கோப்பை தந்தார்னு தானே சொன்ன?” என்று கனிமொழி கேட்டாள்.

 

மோதிரத்தை பார்த்து ‘இது ஒரு நலம் விரும்பி தந்தது. அப்பாவோட பிரெண்டா இருக்கலாம். இப்பவரை நேரிடையா பேசியதில்லை. பேசினா சில டவுட் கேட்கணும். நானா இந்த பிரசண்ட் செய்தவரை இதுவரல பார்க்கலை பேசலை. நானா பேச முற்படவும் முடியாது‌. அவனா வந்தான் இதை வச்சிட்டு விஷ் பண்ணினான். மேபீ நேர்ல பேசினா எதிர்வாதம் இல்லை யாருனு தெரிந்தா இந்த மோதிரத்தை திருப்பி தந்தாலும் தந்திடுவேன்.” என்றுரைத்தாள்.

 

“ஓ… அப்ப ஸ்டதஸ்கோப்பை?” என்றாள்.

 

“தெரியலை.. சத்ரியன் ஏன் இதை பிரசண்ட் பண்ணினானு இப்ப வரை புரியலை. அப்பாவிடம் நான் பெர்த்டேவுக்கு கேட்ட பிரசண்ட். இவன் பரிசுல வச்சியிருப்பானு நினைச்சு கூட பார்க்கலை. ஒரு டிரஸும் வந்துச்சு‌. அதை அப்படியே வச்சிட்டேன். அப்பாவிடம் கேட்ட பிரசண்ட் வந்ததால தான் இதை கையோட கொண்டு வந்திருக்கேன்.

 

என் லைப்ல என்னை தாண்டி வேற யார் யாரோ என்னை நோட் பண்ணி அவங்க விளையாடற மாதிரி பீல். அப்பா சத்ரியன் கேஸை ஹாண்டில் பண்ணிருக்க கூடாது. அவர் இறந்திருக்க கூடாது. நான் அனாதையா நின்றியிருக்க கூடாது.

எல்லாத்துக்கும் மையப்புள்ளி சத்ரியன் தான். இதுல… அப்பா காப்பாற்றியதை தாண்டி என்னிடம் சீப்பா பிஹேவ் பண்ணறான். என்னவோ அவனை தேடி நானே வருவேன்னு ரொம்ப கண்பிடன்ஸா பேசறான். நான் ஏன் அந்த மாதிரி ஒருத்தனை தேடி போகப் போறேன்.” என்று நொடித்தாள்.

 

கனிமொழி ஷ்ரத்தாவை தீண்டி, ”ஒரு விதத்தில் சத்ரியன் உன்னை கட்டாயப்படுத்தி தூக்கிட்டு போய் ஏதும் பண்ணிடுவானோனு பயந்தேன். அது நடக்கலை. அதுவரை அவன்  கண்ணுலப்படாத.” என்றாள்.

 

“நானா அவனை தேடி போனேன். நீயே பார்த்தல, நாம நிம்மதியா சாப்பிட்டுட்டு இருந்தப்ப அவனா தான் வந்தான். அவன் வந்ததும், இந்த படத்துல காட்டுவது போல இருந்த எல்லாரும் அப்படியே கிளம்பிட்டாங்க. உன்னையும் மனிஷாவையும் கூட அனுப்பிட்டான். தனியா நானும் அவனும் அப்படியே லவ்வர்ஸ் மாதிரி சை… இதுல துப்பாக்கி எல்லாம் தொட்டதும்.. ஸப்பா.. ஓடிவந்துட தோணுச்சு.” என்று சோர்வாக பேசவும், கனிமொழி அவசரமாக “ஷ்ரத்தா… ஜான் வர்றான்.” என்று சுட்டிக் காட்டினாள்.

 

ஷ்ரத்தா அவனை கண்டு பேச முன்னேற, “ப்ளீஸ்… என்னை விட்டுடு. நான் இனி உன் பக்கமே வரமாட்டேன்.” என்று கையெடுத்து கும்பிட்டு ஓடாத குறை.

 

“என்னடி இது நான் என்ன செய்தேன். இவனா தான் வம்பு வளர்த்து என்னை அசிங்கப்படுத்தினான். அதை தெரிந்த சத்ரியன் அடிச்சிட்டான். என்னவோ நான் போய் சத்ரியனிடம் இவனை பத்தி புகார் வாசித்ததா பயந்துட்டு ஓடறான்.‌ சே…” என்று செயற்கை ஊற்று இருக்கும் இடத்தில் திண்டில் அமர்ந்தாள்.

 

“ஒரு விஷயத்துல சிலர் ஒதுங்கறது நல்லதுக்கு தான். விடு.” என்று கனிமொழி சிரிக்க, “இல்லை.. நான் இயல்பா இருக்க முடியலை. என்னை அவன் ஒரு கட்டத்துக்குளள வரவழைக்க ட்ரை பண்ணறான்.‌

டாக்டர்ஸ், டீன், சீனியர், ஹ்ஸ்டல் வார்டன், நிர்வாகி, அங்க இருக்கற ஆட்கள், காலேஜ்ல என்னோட கோ-ஸ்டுடண்ட் எல்லாரிடமும் தள்ளி நிறுத்திட்டான். யாரோ.. நான் யாரிடம் பேசணும்னு முடிவெடுத்து அளவு வச்சது போல இருக்கு. பாரு… நீ மனிஷா தவிர யாருமே என்னிடம் நெருங்கி பழகறதில்லை.” என்று ஷ்ரத்தா கூறிட, கனிமொழியோ மனதிற்குள் ‘அதென்னவோ உண்மை தான். உன்னை பார்த்து பயந்து தனியா போன என்னை வினோத் சார் தான் சத்ரியன் சார் சொன்னதா சொல்லி, பிரெண்டா ஆறுதலா இரும்மானு சொன்னார். அது உனக்கு தெரிய வேண்டாம்னும் கேட்டுக்கிட்டார்.

அப்படி பார்த்தா உன்னோட பேச என்னை சத்ரியன் அனுமதிச்சியிருக்கார். அவரை தாண்டி நீயா யாரிடமும் பழகாம பார்த்துக்கறார்.’ என்று கூற முடியாமல், “இருக்கலாம் ஷ்ரத்தா… நீ யாரிடம் பேசணும்னு சத்ரியன் சார் முடிவுப் பண்ணலாம். அதனால கூட என்னை எட்டி நிறுத்தாம இருக்கலாம்‌.” என்றாள்.

 

நகம் கடித்தபடி, “சரி நீ போ” என்று மோதிரத்தை கழற்ற முனைந்தாள்.

 

“ஏன் மேதிரம் கழட்டற” என்றாள்.

 

“பேஸிக்கா ஹாஸ்பிடல் ப்ரோடாக்கால்ல மோதிரம் போடக்கூடாது கனிமொழி. இந்த மோதிரம் ஒரு பிரசண்ட் என்று சொன்னேனே. இதை போட்டா ஏதோ சத்ரியன் தந்த பிரசண்டா பார்க்கறாங்களா? இல்லை… என்னனு தெரியலை வியர்டா இருக்கு. அதான். பேக்ல போட்டு வச்சிட்டேன்.” என்றாள்.

 

“வைர மோதிரம் தொலைஞ்சிட்டா ரிஸ்க் ஷ்ரத்தா.” என்று கனிமொழி கூற, “நான் எங்கப்பா உயிரையே இழந்தவ. ஆப்ட்ரால் இந்த மோதிரம் தொலைந்தா நான் என்ன பெருசா பீல் பண்ண போறேன். போனா போகுது.” என்றாள் ஷ்ரத்தா.

 

‘என்னிடம் சத்ரியனை பத்தி, இல்லை மோதிரம் வச்சி, யாராவது அணுகி பேசணும்னா நேரிடையாவே பேசட்டும். அதான் வெள்ளை சுடிதார் போட்டு இருந்தேனே. நேரிடையாவே யாராயிருந்தாலும் வரட்டும். இந்த மோதிரம் கூட என்னை மத்தவங்களிடமிருந்து வேறுப்படுத்துது.’ என்று பர்ஸில் ஒரு ஜிப்பில் வைத்துவிட்டு எழுந்தாள். ஷ்ரத்தாவுக்கு காலையிலிருந்து மற்றவர்கள் பார்வை தன்னையும்

மோதிரத்தையும் ஸ்டதஸ்கோப்பையும் பார்வையிடவே உறுத்தலாக இருக்க மோதிரத்தை கழட்டிவிட்டாள்.

 

-தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “The leader-16”

  1. Pavam shratha nilamai ivlo mosama Iruku confusion la iruka ena panrathu nu etho kattathukulla namala control panranganu therinja athu nimmathiya iruka mudiyathu than

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!