The leader-17
அத்தியாயம்-17
சத்ரியனிடம் யோகேஷ் “வைர மோதிரம் பாஸ். இந்தளவு விலைமதிப்பற் ரிங் போடற அளவுக்கு ஷ்ரத்தா மேடத்தோட வீட்ல இருந்திருக்க வாய்ப்பில்லை. திவாகர் சாரோட சொத்துக்களில் அந்த மோதிரம் வாங்கியதா வரவு கணக்கு வரவேயில்லை. ரீசண்டா தான் யாரோ பிரசண்ட் பண்ணியதா தெரியுது.” என்றதும், வினோத் “காலேஜில யாராவது லவ் பண்ணறவங்க பிரசண்ட் பண்ணியிருப்பாங்களா பாஸ்” என்று கூறினான்.
சத்ரியன் ஒரு புன்னகை உதிர்த்து, “என்னோட எதிரிகள் யாராவது தந்திருக்கலாம் வினோத். அது மேட்டர் இல்லை. அவ அந்த ஸ்டதஸ்கோப்பை கழுத்துல போட்டிருந்ததா யோகேஷ் சொன்னானே… அதை பற்றி உன்னோட ஓபீனியன் என்ன?” என்றதும், வினோத் யோகேஷை பார்க்க, யோகேஷ் வினோத்தை பார்த்தான்.
வினோத்தோ “அவங்களுக்கு ஏதோவொரு இன்ட்ரஸ்ட் இருக்கலாம் பாஸ்” என்றான்.
சத்ரியன் அங்கிருந்த மதுவை கோப்பையில் ஊற்றியபடி, “ஏதோவொரு இன்ட்ரஸ்ட்ன்னா?” என்று புருவம் உயர்த்தி கேட்க, யோகேஷோ “இட் மீன்ஸ் லவ் பாஸ்?” என்று கூற, வினோத் விந்தையாக பார்வையிட சத்ரியன் “நோ.. அவளுக்கு என் மேல காதல் இல்லை. அவ கண்ணுல அந்த உணர்வு துளியும் இல்லை.” என்றான்.
“வேற… என்ன உணர்வுனு கெஸ் பண்ண முடியலை பாஸ்” என்றான் யோகேஷ்.
“ஸ்டதஸ்கோப்பை வச்சிக்கிட்டதுக்கு காரணம் தெரியலை. பட் அவளுக்கு என் மேல வெறுப்பு இருக்கு” என்று தொண்டையில் உயர்ந்த விலையை கொண்ட மதுவை சரித்தான்.
யோகேஷோ ‘ம்கூம்.. அந்த வெறுப்பு தான் தெரியுமே. நான் போய் நிழலா தொடர்ந்தாலே என்னை எரிப்பது போல பார்க்குது அந்த பொண்ணு ஷ்ரத்தா’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டான்.
“வினோத் நீ என்ன பண்ணற, அந்த டைமண்ட் டிசைனை நம்ம கஸான் ஜிவல்லரியிடம் காட்டி எந்த பக்கமிருந்து அதை நம்ம எதிரி வாங்கியதா பார்த்து சொல்லு. அப்பறம் இன்னிக்கு கேஸினோல யாரோ இல்லீகலா நுழைவதா தகவல் வந்திருக்கு. அதென்ன யாருனு பார்த்துடு.
அடுத்து இந்த மெடிக்கல் காலேஜ்ல, டொனேஷன் இருந்ததே. அதெல்லாம் என்னனு பார்த்து கை மாத்து.
இன்னிக்கு கல்வி அமைச்சர் கூட லஞ்ச் அதை ஏற்பாடு பண்ணிட்டு எனக்கு ரிமெம்பர் கொடு.
ம்ம்ம் இதுக்கு நடுவுல… ஷ்ரத்தாவை பார்க்கணும். பட் இப்ப வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்.” என தன் வேலையையும் இடையில் தங்கு தடையின்றி பார்த்துக் கொண்டான்.
யோகேஷ் தனது பின் தொடர்தலை தொடர சென்றான்.
ஷ்ரத்தா மோதிரத்தை அறையிலேயே வைத்து வந்திருக்க, பொடி நடையாக கல்லூரிக்கு நடந்தாள்.
அவளை சுற்றி ஒரு கவசம் போல ஏதோ சுழல்வதை உணர, சுற்றி முற்றி பார்த்தாள்.
எதிரே யோகேஷ் மலை போல நின்றியிருந்தான்.
“வந்துட்டான்டா” என்று தலையில் கை வைத்து எரிச்சலில் கல்லூரிக்கு சென்றாள்.
அவள் மோதிரம் அணியாமல் நடந்து வருவதை தூரத்திலேயே கண்டு விட்ட யோகோஷ் அந்த தகவலை சத்ரியனுக்கு கடத்தினான்.
“ஓ.. போடலையா? ம்ம்ம்.. டாக்டர்ஸ் மோதிரம் எதுவும் போட மாட்டாங்க அது தெரியாம எவனோ ஒருத்தன் மோதிரத்தை வச்சி கேம் பிளேம் பண்ணிருக்கலாம்.
இப்ப ஷ்ரத்தா மோதிரம் ரூம்ல வச்சியிருப்பா.” என்றான்.
“மேபி பாஸ்” என்றான்.
“தட்ஸ் குட். நீ ரொட்டீனா அப்டேட் பண்ணு” என்று கூறிவிட்டு சத்ரியன் ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்றான்.
தன்னை அழிக்க வந்தவர்களை அழித்து வேடிக்கை காட்டுபவன் சத்ரியன். அப்படி இருந்தும், யாரோ தன்னிடம் ஆட்டம் காட்டுவதாக தோன்றியது.
திவாகர் இறப்புக்கு தான் காரணமாக இருக்கலாமென ஷ்ரத்தா சந்தேகத்தின் அடிப்படையில் முடிவெடுத்து நிற்கின்றாள்.
தன்னை நெருங்க கொல்ல ஆட்கள் துடித்திருக்க, இதில் ஷ்ரத்தா வேறு கவனத்தை ஈர்க்கின்றாள்.
ஏனோ சத்ரியனுக்கு மாடல் அழகிகள் மீதான மோகமே குறைந்துவிட்டது. ஷ்ரத்தா என்றவள் மீது பித்தேறி நிற்பது போல எண்ணங்கள் மூளையை திண்றது.
புதிதாக பார்த்த பெண் என்றதாலும், தன்னையே வினாத்தொடுத்த தாரகை என்றதாலும் ஆசை எழுப்பியிருக்க கூடுமோ? சிறிது காலம் அவளை விலகி நிறுத்தி கண்டால் இந்த எண்ணங்கள் மரித்து போகும் என்று கூட பார்த்துவிட்டான் சத்ரியன்.
நாளாக நாளாக தனது இரவை, தன் மெத்தையை வெறிச்சோடி காணும் போது, ஏதோவொன்று ஏற்க மறுத்தது. யாருமற்ற பஞ்சு மெத்தையாக கூட சத்ரியனால் அவனது அறையை சந்திக்க நேரிட்டால் ஏற்கும் இதயம், மெத்தையில் யாரேனும் பெண்ணை நிறுத்தி பார்க்கவே அருவருப்புனாக தோன்ற, வினோத்திடம் யாரும் வேண்டாமென கத்திவிட்டான்.
வினோத் கூட “ஏன் பாஸ்.. என்ன காரணம?” என்று நச்சரித்திடாத வகையில் நாசூக்காய் கேட்க, அதற்கு சத்ரியனோ “ஏன்னு தெரியாதா… இங்க ஆண்கள் வந்து என்னை கொல்ல முயற்ச்சிக்க யோசிக்கறாங்க. ஆனா பெண்கள் ரொம்ப ஈஸியா வந்துடறாங்க. முன்ன ஒருத்தி மாடலிங் பொண்ணு. கூடயிருந்த யாமினி இதெல்லாம் செய்தது போதாதா? காரணம் வேற சொல்லணுமா?” என்று உறுமாத குறையாக கூறிவிட்டான்.
வினோத் அதுவும் சரி தான் என்று சிந்தனை செய்தபடி வெளிவர, யோகேஷோ “அப்ப என்ன காரணத்துக்காக அந்த லாயர் பொண்ணு பின்னாடி நான் போகணும் வினோத். பாஸ் அவளை கண் கொத்தி பாம்பாக தொடர சொல்லறார்.” என்று கேட்டு நின்றான்.
வினோத் ஆமால… இதுவேற’ என்றவன் சிந்தனை ஓட்டத்தை தடுத்தான் யோகேஷ்.
“அந்த லாயரோட பொண்ணு என்னை முறைக்குது, என் தலை தென்பட்டாளே தூஉனு துப்புது வினோத். பாஸ் மட்டும் திரும்ப அவரோட பாடிகார்ட் வேலைக்கு நிறுத்திட்டா நிம்மதியடைவேன். இந்த பொண்ணு பின்னாடி எல்லாம் போறது பிடிக்கலை. இதுல காலேஜ் பக்கம் போறச்ச பொண்ணுங்க வேற நல்லா தான் பார்க்கறாளுங்க. திரும்பினா பயந்துட்டு ஓடறாளுங்க. முடியலை வினோத் முடியலை” என்று புலம்பினான்.
வினோத் சிரித்தபடி, “பாஸ் எதிர லாயரோட பொண்ணுனு சொல்லிடாத. அப்பறம் உண்டில்லைனு மாத்திடுவார். ஷ்ரத்தா மேம்னு கூப்பிட்டு பழகு. ஏன்னா…. ஷ்ரத்தா மேடத்திடம் பாஸுக்கு ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கு. இல்லைன்னா பாஸ் இந்தளவு கூடவே கண்கொத்தி பாம்பா அவங்களை காவலுக்கு உன்னை அனுப்ப மாட்டார்.” என்று தோளில் தட்டி சென்றார்.
வினோத் நகர்ந்து சென்றதும் தான் யோகேஷிற்கு வினோத் சொன்ன விஷயமும் புரிய துவங்கியது. உண்மையில் ஷ்ரத்தாவை சார் புதுமையான முறையில் தான் அணுகுகின்றாரா? அதனால் தான் தன்னை தொடர அனுப்பியதாக புரிந்துக் கொண்டான்.
இனி பாஸ் இருக்கறப்ப இல்லாதப்பனு யோசிக்காம, ஷ்ரத்தாவை மேடம்னு சொல்ல பழகணும்.’ என்று முடிவெடுத்தான்.
காலங்கள் கொஞ்சம் நகர்ந்திட, ஷ்ரத்தாவுக்கு மோதிர பரிசை தந்த மர்ம நபரோ மீண்டும் பேசுவதற்கு ஒரு அலைபேசியை கொண்டு வந்து முன்பு போலவே கதவிற்கு முன் வைத்து விட்டு சென்றது.
ஷ்ரத்தா புருவம் சுருக்கி அதை எடுத்து அறைக்குள் வந்து தாழிட, அவை அலற துவங்கியது.
பயத்தில் நெஞ்சில் கையை வைத்து, போனை ஏற்று, காதில் வைத்தாள்.
“ஹாய் ஷ்ரத்தா… நான் கொடுத்த மோதிரம் ஏன் போடலை.” என்று நேரிடையாக கேட்டது அக்குரல். தன்னருகே யாருமில்லை என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு,
“லுக்… நீ யாருனே தெரியலை… எதுக்கு எனக்கு டைமண்ட் ரிங் கிப்டா தந்தனு புரியலை. இதுல.. எங்கப்பாவை சத்ரியன் தான் கொன்றான்னு எழுதியிருக்க. எங்கப்பா உயிரோட இருந்தப்ப சத்ரியனுக்காக தான் வாதடினார். அப்படியிருக்க அவர் மேல பழிப்போட்டா எப்படி நம்பறது? இதுல நீயாதான் என்னை வேவு பார்த்து லெட்டர்ல இப்ப போன்ல பேசற. ஆப்ட்ரால் முகம் தெரியாதவரேட லெட்டரும் போனும் வச்சி நம்பறது கஷ்டம். அத்தோட நீ பேச தான் நான்னு இருக்க. நான் உன்னிடம் எப்பயும் பேச வைக்க முடியாது.
அதனால சந்தர்ப்ப சூழ்நிலையை வச்சி நீ என்னை சத்ரியனோட கோர்த்து விடுவதா
மனசுக்குபடுது. மத்தபடி நான் நம்ப முடியாது. அப்பறம் அந்த வைர மோதிரம் எனக்கு உறுத்துது. எல்லாரும் என்னையே பார்க்கற மாதிரி. என்னால அதை யூஸ் பண்ண முடியாது. அதை நீ வேண்டுமின்னா திரும்ப எடுத்துக்கோ.” என்றாள்.
மறுபக்கம் சில நொடி அமைதி காத்து “நீ நம்பணும்னா நான் என்ன செய்யறது. லெட்டரில் பேசி கம்யூனிகேஷன் சடனா ஆன்சர் வரலை என்றதால தான் இந்த போன் மூலமா வந்தேன். உனக்கு எப்ப வேண்டுமென்றாலும் என்னிடம் பேசணும்னா இதுல தெரிவிக்கலாம். அடுத்த ப்யூ டேஸ்ல நானே கான்டெக் பண்ணுவேன். உங்கப்பா இறப்புக்கு சத்ரியன் தான் காரணம்னு சட்டுனு காட்ட என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஏன்னா ஆதாரத்தோட சத்ரியன் எதுவும் செய்யமாட்டான்.
ஆனாலும் நாளைக்குள் ஒரு ஆதாரத்தை கொண்டு வர்றேன்.” என்றான்.
“வெயிட் வெயிட்… சத்ரியன் எங்கப்பாவை கொன்றதா நீ சொல்லி அதை நான் கேட்கறேன்னு வச்சிக்கோ அதனால உனக்கென்ன லாபம்? எங்கப்பா இறப்பு விபத்துனு பூசி மொழுகி கேஸ் பைலை மூடிய பிறகு, உனக்கு அது திட்டமிட்ட கொலைனு சொல்லி என்னை குழப்பறது எதுக்கு?” என்றான்.
“ஒரு நல்லவரோட இறப்பை வெளிச்சம் போட்டு காட்டத்தான்.” என்றான் மறுபக்கம் இருந்தவன். ஷ்ரத்தா உடனே விரக்தியாக சிரித்து, “அதை எங்கயாவது காதுல பூ வச்சிட்டு சுத்துற குழந்தைக்கிட்ட சொல்லு. நான் குழந்தை கிடையாது. உனக்கு என்னால ஏதோ காரியம் ஆக நினைக்கற. அதுக்கு தான் என்னை விடாம பாலோவ் பண்ணற. ஏன்னா என் பின்னால சத்ரியன் கையாள் யோகேஷ் இருப்பதை தாண்டி வேற யாரோ தொடர்வதை என்னால உணர முடியுது.” என்றாள்.
“க்ளவர்… நான் கூட உன்னை சின்ன பொண்ணுனு நினைச்சேன். அது தப்பு தான். நீ கேட்கற ஒவ்வொன்னும் நீ சின்ன பொண்ணு இல்லைனு புரிய வைக்குது.
உண்மை தான்… எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும். அதுக்காக தான் பின் தொடருறேன்.” என்றான் மறுபுறம் இருப்பவன்.
“வாட்?” என்றாள் ஷ்ரத்தா.
“ஷ்ரத்தா… சத்ரியனால பலர் பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. உயிரும் பணமும் பலமும், அதிகாரமும்… இப்படி பலவிதமா.
நீ உங்கப்பாவை இழந்த. நான்… நானும் ஒருவகையில் என் தரப்புல இழந்திருக்கேன்.
சத்ரியனை கொல்ல பலமுறை ட்ரை பண்ணிட்டேன். என்னால முடியலை. நான் அனுப்பின ஆண்கள் பலரும் அவனோட துப்பாக்கி தோட்டாவுக்கும், கூர்மையான கத்திக்கும் இரையாகிட்டாங்களே தவிர, யாரும் திரும்பி வரலை.
அவனோட வீக்னஸ் பெண்கள் என்றதும் பெண்களை அனுப்பி கொல்ல சதி செய்தேன். ஆனா அதுவும் கண்டுபிடிச்சிடறான்.
இப்ப அவனோட பார்வை நீ. நீ மட்டும் தான். நீ நினைச்சா அவனை உன் வலையில் விழவச்சி கொல்ல திட்டமிடலாம். பிகாஸ் அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்றான்.
“என்ன..” என்றவள் அதிர்ச்சியுற்றவளாக மாற, போனின் பிடி நழுவி மெத்தையில் கிடந்தது.
-தொடரும்.

தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 17)
இவ சரியான லூசேத் தான்.
இல்லைன்னா, சத்ரியன் பார்வை இவ மேல விழுந்ததுக்கு இன்னுமா காரணம் பிடிபடாமல் இருக்கும். அதை எதிரி போன் பண்ணி சொன்னப் பிறகு தான் இவளுக்கே புரியற மாதிரி என்னாம்மா அதிர்ச்சி பில்டப்பை கொடுக்கிறாள்…?
அந்த சத்ரியனுக்குத் தேவை இவ விருப்பத்தோட அவனோட படுக்கையறைக்கு வரணும், அது எங்களுக்கே பப்ளிக்கா தெரியுறச்ச இவளுக்கு அது இன்னுமா புரியாமல் இருக்கிற மாதிரி காட்டுறாள். இல்லைன்னா அந்த சத்ரியன் எதுக்கு இவ பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், பண வேஸ்ட்ன்னு சுத்தணும்.
அவனுக்கு வேண்டியது இவளுடைய சரீரம், இவளுக்கு வேண்டியது அவனோட உயிர்
அவ்வளவு தானே..?
அவனோட படுக்கைக்கு போ…
அவனை கொன்னுட்டு வந்துடு…
சிம்பிள் மேட்டர்.
😴😴😴
CRVS (or) CRVS2797
Super super super super super super super super super super super super ❣️ interesting ❣️
Interesting waiting for nxt epi
Apo chathriyan avale varuva en kitta sonnathu shratha thana love panra mari nadichi avan bed ku poi kolla povalo atha than apdi solli irukana
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌 endha phone la pesuradhu yaaraerukum🤔 edhu mattum chathriyan ku therinjidhu enna aagumo🙄 endha ponnu avana nambi yedhavudhu panni maattika pogudhu😕
இந்த பொண்ணு முட்டாள்