அத்தியாயம்-26
ஷ்ரத்தா சத்ரியனின் அறை முன் நின்றுகொண்டிருந்தாள். அவள் கைகள் உயர்ந்து. கதவை தட்ட சென்று மீண்டும் கீழிறங்கியது.
தான் உள்ளே நுழைந்தால் என்ன பேசுவான்? முதலில் தான், என்ன பேச போகின்றோம்? அவளுக்கே தெரியவில்லை.
‘அந்த பெயர் தெரியாத எக்ஸ் பத்தி சொல்லணுமா…? அவன் நம்புவானா…? இல்ல… அவனே இதுக்கெல்லாம் காரணமா…? சத்ரியன் தன்னை டெஸ்ட் செய்கின்றானா?’ என்று மனசு குழம்பியது.
அந்த நேரம் உள்ளிருந்து சத்ரியனின் கரகரப்பான குரல் வந்தது. “வெளியே நின்னு யோசிக்கறதுக்கு… உள்ள வந்தே யோசிக்கலாம். நான் உள்ள வராதனு சொல்ல மாட்டேன்.” என்று சத்ரியன் பேச ஷ்ரத்தா அதிர்ச்சியில் நிமிர்ந்தாள்.
அவன் கதவை கூட திறக்கவில்லை. அப்படியிருந்தும் அவள் வெளியே நிற்பதை அறிந்தே வைத்திருக்க, சில நொடிகள் தயங்கினாள்.
பிறகு மெதுவாக கதவை அதற்குகேற்றவாறு அவனே திறந்தான். அறைக்குள் மங்கலான மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்தது.
ஏசி குளிர் லேசாக பரவியிருந்தது.
சத்ரியன் படுக்கையின் பின்னே சாய்ந்து அமர்ந்திருந்தான்.
மேல்சட்டை இன்னும் போடவில்லை. வயிற்றில் பேண்டேஜ் கட்டியிருக்க, காய்ச்சலால் முகம் சற்று சோர்ந்திருந்தாலும், அந்த கண்கள் மட்டும் அவளை கூர்மையாக கவனித்தது.
ஷ்ரத்தா கதவோரமாகவே பேசாமல் நின்றாள்.
“தூங்கலையா? இல்லை என்னை கொல்லாம தூக்கம் வரலையா?” என்று கேட்டான்.
அவள் பதில் சொல்லவில்லை.
சத்ரியன் அவளை சில விநாடிகள் பார்த்தான்.
“நீ என்னை இன்னும் நம்பலைன்னு தெரியும்.” என்றான் அமைதியாக. அந்த அமைதி தான் அவளை இன்னும் சங்கடப்படுத்தியது. அவன் கோபப்படுவான் அல்லது மிரட்டுவான் என்று நினைத்திருந்தாள். ஆனால் இரண்டுமின்றி இப்படி அமைதியாக பேசுவது அவளை தளர்த்தியது.
“நான்.” என்று ஆரம்பித்தவள் வார்த்தையை முடிக்க முடியாமல் நின்றாள். “எதுக்கு வந்தியோ அதை சொல்லு” என்றான் நேராக.
ஷ்ரத்தா மெதுவாக மூச்சை இழுத்தாள். “எனக்கு… சில நாளா யாரோ பின்னாடியே பாலோவ் பண்ணுவதா பீல் ஆச்சு. அதுக்கு ஏத்த மாதிரி ஒரு லெட்டர்ல மெசேஜ் அனுப்பிட்டு இருந்தாங்க.” என்றாள்.
சத்ரியனின் பார்வை சற்று மாறியது. ஆனால் ஷ்ரத்தா பேசும் போது இடையில் பேசவில்லை.
“முதல்ல நான் பிராங்க்னு நினைச்சேன். அப்புறம்.. நீங்களே கூட என்னை டெஸ்ட் பண்ணறதா கூட தோணுச்சு.” என்றவளது குரல் மெதுவாக நடுங்கியது.
“அந்த லெட்டர்ல அப்பா கேஸ் பத்தி, உங்களை பத்தி எழுதியிருந்தது. சத்ரியன் மெதுவாக நேராக அமர்ந்தான்.
“என்னை பற்றி என்ன?
ஷ்ரத்தா உடனே பதில் சொல்லவில்லை. அவள் விரல்கள் ஒன்றை ஒன்று அழுத்திக் கொண்டது.
“உன்னை நம்பக்கூடாதுனு… நீ கெட்டவன்… எங்கப்பாவை நீ தான் கொன்ற..ன்னு. அந்த வீடியோ கூட காட்டினேனே..” என்றவள் அறை முழுக்க சில நொடிகள் அமைதியாகியது.
சத்ரியன் முகம் மெதுவாக இறுகியது.
“உங்கப்பா ஆதாரம் இல்லாம குற்றவாளி நான் தான் எப்படி சொல்றதுனு தான் கோர்ட்ல வாதாடி என்னை காப்பாற்றியது. அப்படியிருக்க, ஒரு வீடியோ அது உங்கப்பாவை நான் கொன்றதா முடிவுக்கட்ட போதுமான ஆதாரம்னு நீ நினைக்கறியா.
அப்படி பார்த்தா உங்கப்பா என் கேஸை வாங்கலை என்றதற்காக கொலை மிரட்டல் விடுக்க பேசியது. ஆனா உங்கப்பா தான் என்னை என் கேஸில் இன்வால் ஆகிட்டாரு. பிறகு நான் கொல்ல காரணம் என்னனு நினைக்கற?” என்றதும் ஷ்ரத்தா விழித்தபடி தயங்கினாள்.
” இட்ஸ் ஓகே… இப்பவும் போன்ல பேசறியா” என்றான்.
“ம்ம்ம். ஹாஸ்டல்ல இருந்தவரை.”
“கால் பண்ணானா?” என்று கூர்ந்து பார்வையிட்டான்.
“ம்ம்ம்.” என்றாள்.
“நம்பர்?” என்றான்.
“அந்த போன் ஹாஸ்டலில் இருக்கு. அதுல தான் கால் பண்ணுவான்” என்று கூறினாள்.
“உன்னை நேர்ல சந்திச்சு பேசயிருக்கானா அந்த ஆள்?” ஷ்ரத்தா சற்று யோசித்தாள்.
“இதுவரை நேர்ல வந்து நின்றதில்லை. ஆனா காலேஜ்ல யாரோ என்னை பார்த்துட்டு இருக்கற மாதிரி இருக்கும். அதே போல ஹாஸ்டல் வந்தா கூட. ஹாஸ்டல் ரூமுக்கு வெளியே முதல்ல ஒரு லெட்டர். இரண்டாவது தனிப்பட்ட போன், வைரமோதிரம் இது கொண்டு வந்து வச்சப்ப யாரும் பார்க்கலை. அதே சமயத்துல தான் நீங்களும் பூங்கொத்து, பிறந்தநாள் வாழ்த்து, டிரஸ், ஸ்டதஸ்கோப்னு அனுப்பினிங்க.” அந்த நொடி சத்ரியனின் கண்கள் கூர்மையாயின.
அவன் உடனே ஏதோ தொடர்புப்படுத்தி ஆரம்பித்தது போல இருந்தது.
ஷ்ரத்தா மீது அதீத மோகம் இருக்க, அதை புரிந்துக் கொண்ட எவனோ ஒருவன், திவாகரின் மரணத்தால்
பாரில் பேசியதை வைத்து வீடியோவை கத்தரித்து எடுத்து, ஷ்ரத்தாவிடம் தன்னை குற்றவாளியாக காட்டுகின்றான்.
இதில் போலி டாக்டர் போர்வையில் வந்தவன் யாமினியை அனுப்பியது, தற்போது ஷ்ரத்தாவை குறிவைத்து பண்ணுவது. துப்பாக்கி சூட்டு
எல்லாமே தனித்தனியா இல்லை.
யாரோ திட்டமிட்டு நகர்த்துறாங்க.
சத்ரியன் மெதுவாக தலையை குனிந்து யோசித்தான்.
“நா..நான் வேண்டுமின்னா… அந்த போனை கொண்டு வரவா? அந்த நம்பர் யாருதுனு கண்டுப்பிடிச்சா.. யார் இப்படி எல்லாம் செய்வதுனு கண்டுப்பிடிச்சிடலாம்” என்று தன்மையாக கேட்டாள்.
சத்ரியன் ஷ்ரத்தாவை ஏறிட்டு, “என்னை கொல்லறதுக்கு என் நிழல் கூட தயாராகிடும். ஏன்னா அந்தளவு எல்லாரிடமும் பகையில் தான் நட்புப்பாராட்டி திரியறேன்.
இந்த கிங்பின் வட்டாரத்தில் என்னை கொன்னுட்டு என் இடத்துக்கு வரத்துடிக்கிற ஆட்களே ஆறேழு பேர் இருக்காங்க. லீடிங்ல இருப்பது என் கூட பார்ட்னரா இருக்கற ஆட்கள்.
அதுல சில்லறை எதிரிகளா எனக்கு கீழே வேலை செய்யறவங்களே இருக்காங்க. அதனால எதிரிகள் பாதிக்கு பாதி எனக்கு தெரிந்தவங்க தான் ஷ்ரத்தா.
ஆனா என்னை இந்தளவு ஆராய்ந்து வழிநடத்தி, என்னை கொல்ல உன்னை தேர்ந்தெடுத்து இருக்கின்றவன் கொஞ்சம் டேஞ்சரஸ்ஸா தெரியுது.
ஏன்னா… நமக்குள் அவன் நுழைவது எனக்கு சரியாப்படலை.
பட்…
எனிவே… நீ அவனோட இந்த ஆக்டிவிட்டிஸ் தெரிந்தும் ஏன் அவனோட நட்பா பேசி பழகின?” என்றான்.
“அ…அது.. சப்போஸ் அப்பாவை நீங்க கொல்லாம இருந்து, அவன் கொன்று இருந்து, பழியை உங்க மேல போட நினைச்சி என்னை அணுகியிருந்தா… அவன் யார்னு தெரிந்துக்கணுமே. அதனால அவனோட போன்ல பேசினேன். உங்களிடம் தெரிவிக்காததுக்கு அதுவும் ஒரு காரணம்.” என்றாள்.
சத்ரியனோ ”விவரம் தான். நான் கொன்றியிருந்தா என்னை போட்டு தள்ள துடிக்கற. ஒரு வேளை அவன் கொன்றியிருக்கலாம்னு டவுட்னா அவனையும் விடாம யார்னு கண்டறிய நினைக்கற. குட்…
சப்போஸ்… இப்பவும் உனக்கு அவன் பேச்சுல சந்தேகம் இருந்து நான் தான் உங்கப்பாவை கொன்றியிருப்பேன்னு நினைச்சா கில் மீ. பட் ஒன் கண்டிஷன்” என்று இடைவெளியிட்டு, “ஐ நீட் யூ. எனக்கு நீ வேணும். உன்னை ஒருமுறை தந்துட்டு என் உயிரை எடுத்துக்கோ” என்று சாதாரணமாக கூறினான்.
ஷ்ரத்தா இத்தனை நேரம் ஏதோவொரு இலகு தன்மையோடு சத்ரியனிடம் பேச அவன் தற்போது எரிச்சல் படுத்தும் விதமாக பேசவும் கோபம் பொங்கியது.
“உனக்கு அசிங்கமா இல்லை. எனக்கு கார்டியன் என்ற இடத்துல கையெழுத்து போட்டுட்டு என்னை தப்பான நோக்கத்தோட அப்ரோச் பண்ணற.” என்றாள்.
சத்ரியன் உதடுபிரியாமல் சிரித்தான். சத்தமாக சிரிக்க எண்ணினாலும் வயிற்றில் சுருக்கென்ற தையல் வலித்தது. “கார்டியன் என்ற இடத்தில என்னோட பெயர் என்றதும் அப்பா ஸ்தானமா இருக்கும்னு நினைச்சியா. முட்டாளா நீ… கணவன் என்ற முறையும் இருக்கலாம். பட் எனக்கு இந்த கமிட்மெண்ட்ல நுழைவதில் இஷ்டமில்லை. செட்டாகாது சோ ஷ்ரத்தா.. என்னோட ஆசைக்கு மட்டும் தான் உன்னை அப்ரோச் பண்ணறேன்.” என்றான் வெளிப்படையாக.
“எங்கப்பாவை கொன்றது நீயா இல்லாம போனா தேவையில்லாம உன்னை கொன்னுட்டோமேனு என் மனசாட்சி என்னை கொல்லும். அதுக்காக தான் யோசித்தேன். இல்ல… இப்பவே கூட கொன்னுடுவேன்.” என்று கத்தினாள்.
சத்ரியனோ சுருக்கென வலித்தாலும் பரவாயில்லை என்று சத்தமாய் சிரித்தான்.
“நீ சின்ன பொண்ணு ஷ்ரத்தா.. கொல்லணும்னா எப்படி?
ஒரு மனுஷன் சக மனுஷனை காரண காரியமின்றி கொல்ல ஒரு விதமான தைரியமோ அலட்சியமோ மிருகத்தனமோ வேண்டும். அவ்ளோ எளிது இல்லை கிங்பின் ஆகறது. ரத்தமும் சதையும் தெளிக்க குடல்கள் அறுப்பட்டு ரத்தாறுல ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வது.
அதெல்லாம் செய்ய மனசாட்சி எவ்ளோ தடுக்கும் தெரியுமா?
அதைமீறி ஒரு உயிரை கொல்வது கஷ்டம். அதுவும் உன்னை மாதிரி உயிரை காப்பாற்றற டாக்டருக்கு எவ்ளோ கஷ்டமான வேலை.
நீ என்னடான்னா ரொம்ப சுலபமா பேசற.
ஒரு உயிரை பறிக்க உன்னை மாதிரி ஒருத்திக்கு நியாயமான காரணம் வேண்டும் ஷ்ரத்தா.
என்னை மாதிரி ஒருத்தனுக்கு காரண காரியம் எதுவும் தேவைப்படாது. எனக்கு பிடிக்கலைன்னா, இதோ என் முன்ன பேசிட்டு இருக்கற உன்னை கொல்லவும் தயங்கமாட்டேன். இதான் நான்.” என்றான்.
ஷ்ரத்தாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. தன்னை ஆசையாக அணுகவும் செய்கின்றான். அடுத்த நொடியே கொல்லவும் தயங்கமாட்டேன் என்று பேசுகின்றான். இதை எப்படி எடுத்துக் கொள்வதென்ற மலைப்பு ஷ்ரத்தாவுக்கு தோன்றியது.
சத்ரியனோ ”பயப்படாத… நான் ஒன்னு நினைச்சா அதை நடத்தி காட்டுவது தான் எனக்கு பிடிக்கும். எனக்கு நீ வேண்டும் ஷ்ரத்தா. அதுவும் நீயாவே வந்து உன்னை தரணும். அதனால.. உன்னை இப்ப எதுவும் செய்ய மாட்டேன்.
நீயும் உங்கப்பாவை கொன்றவனை தேடற. கண்டுப்பிடி… ஏன்னா உங்கப்பா இறப்பு விபத்தில்லை. அது ஒரு திட்டமிட்ட கொலை தான். அது ஊர் அறிந்த விஷயம். ஆனாலும் விபத்தா மாற்றி அமைக்கப்பட்டிருக்கு. உங்கப்பா அடிக்கடி சொன்னது போல, உங்கப்பா இறப்புக்கு தேவையான ஆதாரம் இல்லை.
கவலைப்படாதா.. திவாகரை கொன்றது யார்னு தெரிந்தா தண்டனை கொடுக்க சட்டத்துக்கு வேண்டுமின்னா ஆதாரம் தேவைப்படலாம்.
இந்த சத்ரியன் கோர்ட்ல ஆதாரமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். யார் கொன்றதுன்னு தெரிந்தாலே உயிரை உருவிடுவேன்.
சப்போஸ்.. அந்த ஆள் யார்னு தெரிந்தாலும் உன்னிடம் சொல்லறேன். ஆனா சும்மா சொல்லமாட்டேன். அப்ப அதுக்கான பீஸ்ஸா…. நான் எதிர்பார்க்கறதை தந்துடணும். என்ன.. புரிதா” என்று கேட்டான்.
ஷ்ரத்தா சத்ரியன் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ மாயத்தை உணர்ந்தவளாக நின்றவள், தானாக தலையை ஆட்டி, சம்மதமாக பதில் தந்தாள்.
“ஷ்ரத்தா… ஆர் யூ சூர்… உங்கப்பாவை கொன்றவனை கண்டுபிடிச்சா… அது யார்னு நான் உன்னிடம் சொல்லறதுக்கு நீ உன்னை என்னிடம் இழப்பியா?” என்று கேட்டான்.
ஷ்ரத்தா அதே கற்சிலை போல நின்றவள், ஏதேதோ யோசித்தவள், சம்மதமாக மீண்டும் தலையாட்டினாள்.
சத்ரியன் வியப்புடன் ஷ்ரத்தாவை ஏறிட்டு, உற்று நோக்கினான்.
-தொடரும்.

Super sis nice epi 👍👌 shratha ellathaiyum avankita sonnadhu nalladhu dhan but evan eppdi maathi maathi pesuradhu dhan confusion ah eruku🙄🧐🤔
Interesting waiting for nxt epi