Skip to content
58 / 100 SEO Score

அத்தியாயம்-29

அடுத்த இரண்டு நாட்கள் கூட ஷ்ரத்தா வாழ்க்கை முழுக்க ஒரு அறைக்குள் சுருங்கிவிட்டது போல இருந்தது.

காலை எழுந்து குளிப்பாள்.

சாப்பிட வற்புறுத்தப்பட்டால் கொஞ்சம் போல கொறிப்பாள்.

பிறகு அதே அறை, அதே சுவர், அதே புரஜெக்டர் புதுபுது பாடங்கள்.

கல்லூரியில் பாடங்கள் நடந்துக்கொண்டிருந்தால் அதை லைவாக பாடிகார்ட்ஸ் மூலமாக இங்கே தூரிதமாக ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்திருந்தது‌.

பாடங்கள் எல்லாம் நடந்தன. ஆனால் ஷ்ரத்தாவிடம் உயிர்ப்பு இல்லை.

மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்தவள். இப்போது மருத்துவம் தான் தனது வாழ்க்கையை இப்படி மாற்றியதோ என்ற கேள்வியோடு அமர்ந்திருந்தாள்.

 

புரஜெக்டரில் பேராசிரியர் பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால் ஷ்ரத்தா வெளியே வேடிக்கை  பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் பங்களாவின் கீழ்தளத்தில் சத்ரியன் போனை மேசையில் வைத்தபடி ஷ்ரத்தா அறையில் இருக்கும் கேமரா காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இவ என்ன ஜன்னலை பார்த்துக் கொண்டிருக்கா’ என்று சத்ரியன் புருவம் சுருங்கியது.

 

“மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கா…” என்று மெதுவாக முணுமுணுத்தான்.

யோகேஷ் அருகில் நின்றான்.

 

லஞ்ச் டைம் நெருங்கவும், கை கடிகாரத்தை பார்த்தான் சத்ரியன்.‌

“மேடத்தை சாப்பிட கூப்பிடவா பாஸ்?” என்று யோகேஷ் பார்வையறிந்து கேட்டான்.

 

“இல்ல. நீ போக வேண்டாம். நீ போனா உம்முனு இருக்காளே. அந்த வினோத்தை அனுப்பு.” என்று கட்டளையிட்டான்.‌

“வினோத்தையா?” என்று கேட்க, “ம்ம்ம்.. அவனையே அனுப்பு. உன்னை கண்டா தான் ஷ்ரத்தாவுக்கு கோபம் கோபமா வருது. வினோத் என்றால் அண்ணானு உறவெல்லாம் வச்சி கூப்பிடறா. சோ.. அவனையே அனுப்பு” என்றதும் யோகேஷ் சத்ரியனின் கட்டளைக்கு இணங்கி, வெளியேயிருந்த வினோத்திடம் உணவை கொண்டு போக உரைத்தான்.

 

‘நானா? ஏன் நீ போகலை” என்று கேட்க, சத்ரியன் சொன்ன காரணத்தை கூறினான்

 

வினோத்தோ “அதென்னவே உண்மை. ஷ்ரத்தா மேடத்துக்கு உன்‌மேல கோபமிருக்கு.” என்று சிரித்தான்.

 

உணவை கொண்டு சென்று ஷ்ரத்தா முன்னே வைத்து, “நீங்க சாப்பிடலன்னு பாஸ் சொன்னார்.” என்றதற்கு, “அவனுக்கென்ன… ஜெயிலில் அடைந்து இருந்தா வேலை வேலைக்கு சோறு போடுவது போல எனக்கு தட்டுல படி அளக்கறான். என் நிலைமை ஜெயில் கைதிகள் மாதிரி கூட இல்லை. வீட்ல கட்டி போட்டு வளர்க்கற நாய் மாதிரி” என்று கோபித்தாள்.

 

“நீங்க சாப்பிட்டா தான் உங்களை காவல் காத்திட்டு இருக்கற நாங்களும் சாப்பிட முடியும் மேம்” என்றதும் அள்ளி அள்ளி விழுங்கினாள்.

 

வினோத்தையும் கத்தி விட்டு பாடம் நடத்தவும் புரஜெக்டர் முன் வந்தமர்ந்தாள்.

 

இவளை போலவே கீழே ஹாலில் பெரிய ஸ்கிரீனில் வீடியோ கால் போட்டுவிட்டு பல முகங்களுடன்

சத்ரியன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

“சைன் ஆகாத நிலத்தை க்ளியர் பண்ணுங்க.”

“அந்த டீல் நாளைக்கு முடிஞ்சிருக்கும்.”

“அவன் பணம் கொடுக்கலனா ப்ராஜெக்டை ஹோல்ட் பண்ணுங்க.”

“போலீஸே நம்ம சைட் அதெல்லாம்  நாம பார்த்துக்கலாம்.” என்று ஒவ்வொருத்தரிடமும் ஒரு டீலிங்கை முடித்தான்.

 

அங்கே அவன் பேசினான்.

மற்றவர்கள் கேட்டார்கள்.

ஒரு வார்த்தை முடிவாக உரைத்த பின், பல கோடிகள், பல பேர் கை மாறி வரவு வைக்கப்பட்டது.

 

எல்லாம் திரையில் நகர்ந்தது.

மேலிருந்து படிக்க பிடிக்காமல் வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்த ஷ்ரத்தா… தண்ணீர் எடுக்க வெளியே வந்தபோது அதை பார்த்தாள். அவள் சில நொடிகள் அப்படியே நின்றாள்.

 

ஒரு பக்கம் “இவனை பார்த்தா பயமா இருக்கு… மற்றொரு பக்கம்…

‘இத்தனை பேரை இவன் எப்படி இயக்கறான்?’ என்ற மலைப்பு. இதில் “நான் ஏன் இவனிடம் மாட்டினேன்?’ என்றது அவளுக்கே புரியவில்லை.

 

அதையே நினைத்தபடி தண்ணீரை அருந்தி பாடங்கள் புரஜெக்டரில் ஓட, ஏதேதோ யோசனையில் மூழ்கினாள்.

 

‘என்னை இவனோட கோர்த்து விட்டவனை தூக்கி போட்டு மிதிக்கணும்.’ என்றவளுக்கு வினோத் நினைவு வந்தது.

 

சத்ரியனை தந்தை காப்பாற்றிய கணம், லாயர் திவாகருக்கு ஒரு பொண்ணு இருக்கா என்ற தகவல் தான் போய் சேர்ந்தது.

அப்பா கேஸில் ஜெயித்துட்டப் பிறகும் என் பெயரோ நானே சத்ரியனுக்கு தேவையானதாக அமையவில்லை.

அத்துடன் தந்தை கொலை செய்யப்பட்டு சடலமாக வீட்டை வந்தடைந்த போது கூட சத்ரியன் மரியாதை செலுத்தவரவில்லை. தந்தையை இடுகாடு எடுத்து செல்ல வந்தப்பொழுது கூட ‘சத்ரியன்’ என்ற பெயர் தான் அவ்விடம் முழுக்க இடம்பெற்றதே தவிர அவன் தன்னை கேட்டோ, அல்லது வேறு விதமாக அறிமுகமில்லாது இருந்தது.

 

தன்னை சத்ரியன் காணாத வரை தனக்கும் அவனுக்கும் எவ்வித இணைப்பும் இல்லை.

 

வினோத்.. வினோத்… அண்ணா.. அவர் தான் என்னை தவறுதலாக சத்ரியன் முன் கொண்டு நிறுத்தினார். அதன்பின் தான் சத்ரியனுக்கு என் பெயரும் நானும் மனதில் பதிந்திருந்தோம். முதல் அறிமுகம் வினோத் அண்ணனால் நிகழ்ந்தது.

 

அதோடு வீடு தேடி வந்து விட்டப்பின், நால்வர் துரத்தி வந்த நேரம் சத்ரியன் பாரில் இருப்பதாக தனக்கு எப்படி தெரியும்.

 

சத்ரியன் போனில் பேசிய பொழுது ஏதோ பாரில் பெயரெல்லாம் சொல்லாமல் தான் பேசினான். ஆனால் வினோத் அண்ணா காரில் வரும் பொழுது இந்த பாரில் இத்தனை மணி நேரத்தில் சத்ரியன் பாஸ் இருப்பார் என்று பேசினார்.

 

ஆக நானாக சத்ரியன் பாருக்கு செல்லவில்லை. சத்ரியன் பார் எங்கிருக்குமென்று கூட தெரியாது. ஆனால் வினோத் அண்ணாவின் விலாசம் கூறிய தோரணையால் அது என்‌மனதில் பதிய, தானாக சென்றேன். ஆக வினோத் அண்ணா என்னை அங்கே வர எதிர்பார்த்திருந்தாரா? சத்தமாக உரைத்தது எனக்கு பாரின் விலாசம் தெரிவதற்கா?

 

அடுத்தடுத்த தன்னிடம் கனிவாக பேசினாரே. ‘அண்ணா என்று சொல்லிட்ட உன் நல்லதுக்காக சொல்லறேன். பாஸ் பக்கம் வராத’ என்றாரே.

நானாக சத்ரியன் மீது கோபம் கொண்டு பேச நலம் விரும்பியாக பாதுகாத்தாரே.

 

‘நலம் விரும்பி?’ அந்த எக்ஸ் வினோத் அண்ணாவாக இருப்பாரோ?

 

ஷ்ரத்தாவுக்கு தான் ஏன் இவ்வாறு யோசிக்கின்றோம் என்று குழம்பினாள். ஆனால் கண் எதிரில் இறப்புகளை சந்திக்க ஆரம்பித்தப்பின், பயத்தை விட காரண காரியம் அறிந்திடவே மூளை அதிவேகமாக சிந்திக்க ஆரம்பித்தது.

 

சத்ரியன் தனக்கு அனுப்பிய பிறந்த நாள் பரிசுக்கான உடை, ஸ்டதஸ்கோப் வைத்திட்ட பொழுது தான் மோதிரமும் பெயரில்லா லெட்டரும் வந்தது.

வினோத் அண்ணாவே ஹாஸ்டல் தேடி வந்து வைத்திருந்தால்?

சத்ரியனை இந்த கொஞ்ச நாட்கள் கவனித்திருக்க, அவனை தாண்டி ஒரு எதிரி முளைக்க இயலுமா? அப்படியென்றால் தன்னிடம் ‘எக்ஸ்’ என்று விளையாடும் நபர் வினோத் அண்ணனாக இருக்குமா?

 

அப்படியென்றால் எக்ஸ் என்ற பெயரில் சத்ரியனே தன்னை வேவு பார்க்க வினோத் அண்ணா மூலமாக விளையாடுகின்றானா? அல்லது வினோத் அண்ணாவே தன்னை வைத்து சத்ரியனை கொல்ல முயல்கின்றாரா?

 

சத்ரியன் அடிக்கடி சொல்வானே. எனக்கு என் கூடவே இருப்பவர்கள் கூட எதிரிகளாக இருக்கும் வாய்ப்பு அதிகமென்று.

 

எக்ஸ் வினோத் அண்ணனாக இருப்பதால் தான் சத்ரியன் என்ன செய்து கண்டறிவானென்ற நுணுக்கம் அறிந்து அவரை போலவே நாசூக்காய் தப்பித்துயிருக்கின்றாரா?

 

ஆனால் தன்னை கொல்ல வந்தது யார்? அதுவும் வினோத்தா? அல்லது வேறு யாராக இருக்கும்? தலைவலி தாளயியலாமல் புரஜெக்டர் மூலமாக பாடம் நடந்தப்படி இருக்க ‘வினோத்’ என்று பல்லைக் கடித்து புத்தகத்தை தூக்கி சுவரில் எறிந்தாள்.

 

சத்ரியன் மதுவை சுவைத்தபடி சிரித்தவன், “யோகேஷ்.” என்றவன் அவனை காட்டி, “வினோத் சாப்பிட்டு வந்ததும், அடுத்து ஷ்ரத்தா அறைக்கு அவனை மட்டும் அனுப்பு. பூனை சமையலறையில் உருட்டி உருட்டி வெளியே வர நேரம் வந்துடுச்சுனு நினைக்கறேன்.‌” என்றான்.‌

 

“பாஸ்… வினோத் தான் ஷ்ரத்தா மேடத்திடம் எக்ஸா பேசி உங்களை கொல்ல திட்டமிடுவதா தெரியுதுன்னா அவனை நீங்க…” என்று மென்று முழுங்கினான்.

 

சத்ரியனுக்கு எதிரே அவனை கொல்ல வந்தால் நரகத்திற்கு வழி சொல்லி தானே பழக்கம் சாகடிக்காமல் வேடிக்கை பார்க்கின்றாரே என்று கேட்க முனைந்தான்.

ஏனெனில் வினோத் வீட்டுக்குள்ளே சத்ரியன் பாஸுடன் நெருக்கமாக இருக்க, கொல்வதற்கு எளிதாக அமைந்துவிட்டால்? அந்த பயம் இந்த விசுவாசிக்கு.

 

“கொல்ல வர்றவங்களை காரண காரியம் இல்லாம கொல்ல தான் யோகேஷ் தோணுது. ஆனா… இந்த ஷ்ரத்தாவோட நலன் விரும்பிக்கு என்னை கொல்ல என்ன காரணம்னு தெரிந்துக்கறேன். என்ன அவசரம்.. நம்ம வினோத்… நமக்காக கூடுதலா வாழட்டுமே. உன் கூட வேலை செய்யறவன் கூடுதலாக வாழ்ந்தா நீ விரும்ப மாட்டேங்கற” என்று சிரித்தான்.

 

“பாஸ்.. நண்பன், எதிரி துரோகின்னா பார்க்கற பார்வை மாறுபடும் இல்லையா.” என்று கூறி நின்றான்.

 

“ம்ம். அதனால தான் அவனுக்கான தண்டனை காலமும் மாறுபடுது.” என்று கூறிய சத்ரியன்,  “இனி எந்த உணவும் வினோத் சாப்பிட வச்சியே ஷ்ரத்தாவுக்கு கொடு.” என்று சீரியஸாக கட்டளையிட்டான்.

 

வினோத் சாப்பிட்டு, வேறு விஷயமாக சென்றவன், ஷ்ரத்தாவிடம் பேச அனுப்பிட யோகேஷ் காத்திருந்தான்.

 

சத்ரியனோ மதுவை ஊற்றி ஐஸ் கட்டியை போட்டு, ‘இப்ப தெரிந்துடும் ஷ்ரத்தா… நீ வினோத்தை பத்தி என்னிடம் சொல்லி என்னை காப்பாத்தறியா? இல்லை… அவனோட சேர்ந்து என்னை அழிக்க கூட்டு சேருறியானு.

இந்த ஒரு சிட்டுவேஷன் உன்னோட கேரக்டரை காட்டி தந்துடும். அதோட இழுத்து வச்ச என் பொறுமை முடிவுக்கு வரும்.’ என்று முடிவெடுத்தான்.

 

ஷ்ரத்தா காத்திருக்க வினோத் வந்து சேர்ந்தான்.

“மேம்… ஏதோ கோபமா கத்தியதா யோகேஷ் சொன்னான். அவன் வந்தா நீங்க எறிந்து விழுவிங்களோனு வந்ததும் என்னிடம் சொல்லி அனுப்பினான். என்னாச்சு மேம்?” என்று பணிவாக கேட்டான்.

 

ஷ்ரத்தா கையை கட்டி கூர்ந்து பார்த்து, “அந்த மோதிரம்… எங்கண்ணா வாங்கனிங்க?” என்றாள்.

 

“பார்டன்.” என்றான் வினோத்.

 

“வைர மோதிரம் வைரம் வைரம். எனக்குன்னு வாங்கினிங்களே” என்றாள்.

 

“மேம்.. இப்பவும் புரியலை” என்றான்.

 

“எக்ஸ் கொடுத்ததா நீங்க கொடுத்த மோதிரம் எங்கண்ணா வாங்கனிங்க” என்று விடாமல் கேட்கவும்

“மேம்… என்ன சொல்றீங்க?” என்று வினோத் சிரிக்க முயன்றான்.

 

ஆனால் அந்த சிரிப்பு முகத்தில் ஒட்டவே இல்லை.

 

ஷ்ரத்தா அசையாமல் நின்றாள்.

 

“நடிக்காதிங்க அண்ணா…” அவள் குரல் மெதுவாக இருந்தாலும் அழுத்தமாக இருந்தது.

 

“என்னிடம் மோதிரம் வந்தது… கடிதம் வந்தது… எக்ஸ் பேசினான்… என்னை சத்ரியனிடம் கொண்டு வந்து நிறுத்தினது நீங்க… இவ்வளவும் சேர்த்து பார்த்தா…”

 

அவள் ஒரு நொடி மூச்சை இழுத்தாள்.

 

“நீங்க தான் அந்த எக்ஸ் என்னால ஊர்ஜிதமா சொல்ல முடியும். அந்த நலன் விரும்பி நீங்க தான்..”

 

வினோத் கண்கள் சட்டென பெரிதானது.

 

“ஷ்ரத்தா… இல்ல… நீ தப்பா ஏதேதோ சொல்லற” என்று மழுப்பினான்.

 

“பொய் சொல்லாதிங்க.” அவள் குரல் உயர்ந்தது.

 

“என்னிடம் நல்லவங்க மாதிரி பேசிட்டு… என்னை ஏன் அவனிடம் மாட்டிவிட்டிங்க?”

 

வினோத் அங்கும் இங்கும் பார்த்தான். இதயத்துடிப்பு அதிகரித்தது. ஷ்ரத்தாவையே குட்டி போட்ட பூனை போல சுற்றி நடக்கும் சத்ரியன் வந்துவிட்டால்? அவன் கேட்டு விட்டால்? தான் உயிரோடு இருப்பது வாய்ப்பில்லை என “ஷ்ரத்தா… ப்ளீஸ்… கத்தாத.” அவன் அவளருகே வேகமாக வந்தான்.

 

“நான்.. நான் சொல்றேன்… ஆனா… இப்ப கத்தாத…” ஷ்ரத்தா புருவம் சுருக்கினாள்.

 

“அப்படின்னா நீங்க தானா?” என்றாள்.

 

“இல்ல… நான்…” என்று அவன் வாக்கியம் முடிக்கவில்லை. ஷ்ரத்தாவுக்கு முன்னுக்கு பின் முரணாக நடப்பதில் கதவு பக்கம் செல்ல வேகமெடுத்தாள்.

 

அடுத்த நொடி வினோத் சட்டென அவள் காலில் விழுந்தான். ஷ்ரத்தா அதிர்ச்சியில் ஒரு அடி பின்னால் சென்றாள்.

 

-தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

7 thoughts on “The leader-29”

  1. Itha ethirpakala Vinoth ivlo visvasiya irunthu chathriyana kolla pakuran athuvum shratha vachi yen avan itha seiyanum ivanum ellam therinji rha amaithiya irunthu irukan athuvave veliya varanumnu twist bayangarama Iruku aduthu ena nadakumo

  2. Super super super super super super super super super super super super super super super super super super super interesting

  3. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 29)

    வாவ்…! மை கெஸ்ஸிங் இஸ் கரெக்ட். வினோத் தானே அந்த எக்ஸ், நலம் விரும்பி.. ? ஆனா, ஏன் ? எதுக்கு ?

    ஒருவேளை, அவன் குடும்பத்தையும் வைச்சு செஞ்சிட்டானோ..? அதனாலத் தான் ஷ்ரத்தா வைச்சு ரிவென்ஜ் எடுக்க நினைக்கிறானோ…?

    ஆனால், இதையெல்லாம் தன்னோட அறையில இருந்துக்கிட்டே கேமரா வழியா ஷ்ரத்தாவையும் வாட்ச் பண்ணிக்கிட்டே பார்த்துக்கிட்டும், கேட்டுக்கிட்டும் இருப்பான் அந்த சத்ரியன்னு வலது கையான வினோத்க்கு தெரியாதா என்ன ?

    😴😴😴
    CRVS (or) CRVS2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!