Skip to content

The leader-30

64 / 100 SEO Score

The leader-30

அத்தியாயம்-30

ஷ்ரத்தாவுக்கு கிங்பின்னான சத்ரியனை கொல்ல வருவதற்கு காரணம் உண்டு. தன்னை போல சாதாரணமானவளை யார் கொல்ல வருவாங்க? தனது தந்தை இறந்தப்பின் தனக்குண்டான வாழ்வியலை ஒருமுறை மீண்டும்‌ நினைவுப்படுத்தி பார்த்து முடித்தாள். அதில் யார் யார் புது மனிதரென்று கூடுதலாக யோசித்தாள்.
என்னயிருந்தாலும் தன்னால் நிரோஷ் இறப்புக்கு சென்று வந்துவிட்டதினால் கூடுதலாக யோசித்தாள்.
ஏதோவொரு குருட்டு யோசனைக்குள் தான் சென்றால் என்று கூட கூறலாம்.
ஆனால் அவள் புத்திசாலி பெண் என்பதால் சில புள்ளிகளை இணைக்க முடித்து கோட்டுக்குள் வரவழைத்து முடித்திட அங்கே எக்ஸாக நின்றது வினோத் மட்டுமே.

அப்பொழுது கூட சந்தேகத்துடன் தான் வினோத் பெயரை உச்சரித்தாள். “அண்ணா?! நீங்க தானா?” என்று தள்ளாட, வினோத் அவசரமாக அவள் கைகளை தீண்டி சோபாவில் அமர வைத்து தரையில் அமர்ந்தான்.

“ப்ளீஸ்… பாஸிடம் சொல்லிடாத…” என்று வினோத் குரல் நடுங்கியது.

“பாஸ்க்கு தெரிந்தா நான் உயிரோட இருக்க முடியாது. என்னை கொன்று புதைத்து பாஸ் வளர்க்கற நாய்க்கு இரையாக்கிடுவார்” என்று கரைந்தான்.

ஷ்ரத்தா முழுக்க உறைந்தாள். உண்மை தான். சத்ரியனுக்கு தெரிந்தால் வினோத் பிணமாவான். அன்று டாக்டர் ஒருவர் ரத்தமும் வெள்ளமுமாக இறந்து கிடந்தாரே. அப்படி இறந்திட வாய்ப்புண்டு.
வினோத் உயிருக்காக தன்னிடம்  கெஞ்சுகின்றான் என்று புரிந்தது.

“நீ என்ன வேண்டுமானாலும் நினைச்சிக்கோ… ஆனா… இப்ப பாஸ்க்கிட்ட மட்டும் சொல்லிடாத… நான்… நானா சொல்லறேன்.” என்று கெஞ்சிட, வினோத்தின்  குரலில் உயிர் பயம் அப்பட்டமாக இருந்தது.

ஷ்ரத்தா பேச முடியாமல் நின்றாள்.

அதே நேரம் சத்ரியனின் அறையில்  பெரிய ஸ்கிரீனில் இங்கு நடக்கும்‌, அத்தனை முழு காட்சியும் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.

சத்ரியன் சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான். கையில் விஸ்கி கிளாஸும், உதட்டில் மெதுவான சிரிப்பு. அந்த சிரிப்பு… மகிழ்ச்சியா இல்ல வேட்டைக்காரன் இரையை பார்த்த மிருகச்சிரிப்பா என்று பிரித்தறிய இயலாது. அப்படி இருந்தது.

“பா..பா… பாஸ்” என்று யோகேஷ் மெதுவாக அழைத்தான். யோகேஷ் முகம் கடினமாக இருந்தது.

சத்ரியனுக்கு வலது கை இடது கை என்று தொழிலில் பலத்திலும் வினோத் முன்னனியில் இருப்பது யோகேஸ் அறிவான்.
அப்படியிருக்க வினோத் தான் அந்த எக்ஸ் என்றதும் பயமில்லாமலா? “பாஸ்.. வினோத்தை?” என்றவன் வாக்கியம் முடிக்கவில்லை. மனதில் ‘இந்த நொடியிலிருந்து வினோத் எப்ப வேண்டுமானாலும் சாகலாம்.’ ஏனெனில் சத்ரியன் பாஸை ஏமாற்ற முயற்சித்தவர்கள் பெரும்பாலும் நீண்ட நாள் வாழ்ந்ததில்லை.

யோகேஷ் திரையை பார்த்தான். வினோத் இன்னும் ஷ்ரத்தா காலடியில். சத்ரியன் பாஸ் இன்னும் அமைதியாக இருக்க, அதுவே இன்னும் பயமாய் இருந்தது.

‘இவன் நம்ம பாஸை அழிக்க வந்திருக்கான்னு தெரிந்தும்… ஏன் வேடிக்கை பார்க்கறாரு?’ என்று திகிலோடு சத்ரியனை பார்த்து  புரியாது நின்றான்.

சத்ரியன் மட்டும் வினோதமாக சிரித்தான். “இன்ட்ரஸ்டிங்…” என்று மெதுவாக முணுமுணுத்தான். சத்ரியன் பார்வை வினோத்தின் மீது இல்லை. ஷ்ரத்தாவின் மீது.

அவள் என்ன செய்கிறாள்?தன்னிடம் சொல்லிவிடுவாளா?அல்லது மறைப்பாளா? எந்த பக்கம் திரும்புவாள்? அதுவே இப்போது அவனுக்கு சுவாரசியம் கூடியது.

கிளாஸை சுழற்றியவன் மெதுவாக, “யோகேஷ்…” என்றழைத்தான்.

“பாஸ்.” என்று வினோத்தை போட்டு தள்ள துப்பாக்கியை கூட எடுத்தான்.

“இனி இந்த இரண்டு பேரையும் நோட் பண்ணு.” என்று சதாரணமாக கூற, யோகேஷ் கண்கள் சுருங்கியது.

“ஷ்ரத்தாவையுமா பாஸ்?” என்று கேட்க, “ஆமா.. அவளும் தான். ஏன் அவ என்ன ஸ்பெஷலா?” என்று கேட்க, யோகேஷ் என்ன பதிலாக உரைப்பதென்று முடியாமல் அமைதியாக தலையசைத்தான்.

திரையில் ஷ்ரத்தா இன்னும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தாள்.

அவள் அமைதி சத்ரியனுக்கு போதுமான பதிலாக இருந்தது.

‘ஓ… அப்ப அவனை காப்பாற்ற நினைக்கிறாளா?’ என்று அவன் சிரிப்பு இன்னும் ஆழமானது.

‘என்னை விட… வினோத்தை பாதுகாக்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாளா…?’ அந்த எண்ணமே… சத்ரியனுக்குள் புதிதான ஆர்வத்தை உருவாக்கியது.

எத்தனையே பேர் அவனை கொல்வதற்கு தயாராக சுத்துகின்றனர். அதில் பாதிக்கு மேலாக அவன் அவர்களோடு தான் பார்ட்னராக வேலை பார்ப்பது. அப்படியிருக்க யார் எந்த நொடி எதிரியாக இருந்து எமனாக மாறுவார்கள் என்று கணிக்க இயலாது‌. ஆனால் அத்தகைய வாழ்வில் தான் அவனது கணிப்பும் யூகத்துடன் தலைமை பொறுப்பு உள்ளது. தன்னை கொல்ல யாராவது கனவில் நடந்தால் கூட எமபாதகன் போட்டு தள்ளி விடுவான்.
இல்லையென்றால் இத்தனை சின்ன வயதில் இவ்விடத்தில் வந்திருக்க வாய்ப்பில்லை‌. இந்த இடத்திற்கு வருவதற்கு கூட எத்தனை ரத்தம் யார் யார் சிந்தினார்கள் என்ற வரையறை இல்லை. அதெல்லாம் பழித்தீர்க்க படைகள் வந்தாலும் அதெல்லாம் மென்று முழுங்கும் கடோத்கஜன்.

அப்படியிருக்க வினோத் ஷ்ரத்தா பேச்சை அசைப்போட்டவனாக, கணக்கிட்டான்.

சத்ரியன் இந்த எக்ஸ் விஷயத்தை ஷ்ரத்தா என்று கூறினாளோ அப்பொழுதே வினேத்தின் மீது சந்தேகம் உதிர்க்க வினோத்தின் செயலை கூராய்ந்து கண்டுவிட்டான்.

சத்ரியன் விட்டு வைத்திருக்க காரணம், ஷ்ரத்தாவோடு ஏன் கூட்டு சேர்க்கின்றான். ஷ்ரத்தா இதில் எப்படி கையாள்கின்றாள். இதோ தன்னிடம் மறைக்கின்றாளா? தன்னை வினோத்திடம் கூட்டு சேர்ந்து சாகடிக்க திட்டமிடுகின்றாளா? அல்லது தன்னிடம் அன்று போலவே உண்மையை உரைத்து உண்மை விளம்பியாக மாறுகின்றாளா இதெல்லாம் ஆராய வினோத் தேவைப்பட்டான்.‌

ஷ்ரத்தா தன்னை கொல்ல துணிந்தால், வேட்டையாடும் வேகம் இந்த சிங்கத்திடம் குடிவந்திடும்.

உண்மையை உரைத்தால் இதே சிங்கம் அவளை புசித்து முத்ததில் மகிழ்விக்க தயாராகும். இரண்டுமே சத்ரியனுக்கு லாபகரமான வாழ்வு தான். அதில் துளியும் ஐயமில்லை. என்ன… எது நடந்தாலும் வினோத் உயிர் கேள்விக்குரியது. அவன் இத்தனை வசதி வாய்ப்பு தந்தும் யாருக்கா கொல்ல துடிக்கின்றான். அல்லது தனிப்பட்ட காரணம் உண்டா என்று அறிந்திட ஆவலாக இருந்தது.

வினோத் எப்படியோ ஷ்ரத்தாவை அமைதிப்படுத்திட, “என்னவோ அண்ணா… உங்களை மாட்டிவிட ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா சத்ரியன் ஈவு ஈரக்கம் பார்க்காம கொன்னு புதைச்சிடுவான்னு இந்த கொஞ்ச காலத்துல புரிந்துடுச்சு.
என்னால நிரோஷ் ஹாஸ்பிடல்ல இருப்பதே என்னால தாங்க முடியலை‌. இதுல நீங்க என்னால இறந்ததா இருந்தா, எனக்கு தூக்கம் வராது. அந்த ஒரு காரணத்துக்காக நான் எக்ஸ் நீங்க தான் என்ற உண்மையை சத்ரியனிடம் சொல்லமாட்டேன். அதுக்காக நான் உங்களோட சத்ரியனை கொல்ல கூட்டுனு அர்த்தமில்லை. சரியோ.. தப்போ.. என்னால என் கண் எதிர்ல ஒரு உயிர் இழப்பை பார்க்க முடியாது. அதுக்கு காரணமா நான் இருக்கவும் மாட்டேன். அதனால என்னிடம் சத்ரியன் இறக்க உதவி கேட்காதிங்க. அப்பறம்.. சத்ரியன் அலட்சியமா நினைக்காதிங்க. சத்ரியன் ஸ்மெல் பண்ணிடுவான். அப்ப என்னால ஒன்னும் பண்ண முடியாது.” என்று சத்ரியன் ஷ்ரத்தா எதனால் வினோத்துடன் சேர்ந்து உண்மை மறைக்கின்றாளென்ற காரியத்தை கேட்டு வியந்தான்.

“யோகேஷ்… கேட்டியா… இந்த ஷ்ரத்தா சின்ன பொண்ணுனு நினைச்சா.. எவ்ளோ க்ளவரா பேசறா. ஐ லைக் இட். இதுக்காகவே இவ மடில விழுந்துடலாம்” என்றான் சத்ரியன்.

யோகேஷ் கூட ஷ்ரத்தா பேச்சில் தெளிந்தான். எங்கே ஷ்ரத்தா சத்ரியனை கொல்ல துடிப்பாளோ என்று.

“ஒகே… யோகேஷ்.. நாடகம் ரொம்ப போரிங்கா இருக்கு. அண்ணன் தங்கைனு இன்னும் நெஞ்சை நக்கலாம். கொஞ்சம் பிரேக் டைம்னு நடுவுல யார் மூலமாவது ஜூஸ் கொடுத்து விடு. தற்காலிகமா பேச்சு தடையாகட்டும். ஷ்ரத்தா வினோத் யோசிக்கட்டும். வினோத்தோட ஆக்டிவிட்டிஸ் கவனிப்போம். அப்பறம்..‌. அந்த நிரோஷ் நிலையை அவளிடம் சொல்லு.
அப்பறம்… ஷ்ரத்தாவை கொல்லறவனையும் கண்டுப்பிடிக்கணும். எனக்கு என்னவோ என்னை சார்ந்தவங்களா இருக்காது. ஏன்னா… என்னை கொல்ல முயல்பவர்கள் ஷ்ரத்தாவை கொல்லணும்னா  என்னிடத்துல ட்ரை பண்ணியிருப்பாங்க… ஷ்ரத்தா செத்திருக்கணும்.
அவ தனியா இருக்கற இடமா தான் அவளுக்கான டார்கெட் அமையுது. சோ… இது நார்மல் பெர்சன்.. பட் டேஞ்சரஸ் ஆல்சோ. படிப்பு புரோஜெக்டர் மூலமாவே இருக்கட்டும். காலேஜ் அவ வீடு ஹாஸ்டல் எதுவும் உன்னை மீறி போகக்கூடாது. அப்படி ஷ்ரத்தா போனா உன் உயிர் உடம்புல நிற்காது.” என்று வார்னிங் தந்தான்.

யோகேஷோ ‘ஆமா இவருக்கு இப்ப எல்லாம் எமன் பக்கத்துல இருக்கற நினைப்பு இல்லை. வினோத்தை விட்டுட்டு வேடிக்கை பார்க்கறார். மனசுல ஏஞ்சல் நிற்கறதாவே நினைச்சிட்டு ஷ்ரத்தாவை சைட் அடிக்கறார்.’ என்று எச்சி விழுங்கினான்.

சற்று நேரத்தில் யோகேஷ் மற்ற பாடிகார்ட்ஸ் வந்து ஜூஸ் தரவும், அதை வாங்க அஞ்சினாள் ஷ்ரத்தா.

சந்தேகத்துடன் வினோத்தை பார்வையிட்டாள். எங்கே உண்மை தெரிந்ததால் கொல்ல விஷத்தை கலந்திருப்பானோ என்று. ஆனால் வினோத் நொடியும் தாமதிக்காமல், பழச்சாறை குடித்து, “இதுல எதுவும் எதிரிகள் கலக்கலை மேம். நீங்க தாராளமா பருகலாம்” என்று கூறியதும், திகிலோடு தான் பருகினாள்.
யோகேஷோ நடப்பதை வேடிக்கை காண, சத்ரியனும் அவனுக்கு முன் இருந்த ஸ்கிரினில் ஷ்ரத்தா வினோத்தை சந்தேகித்து பழச்சாறை பருகவும், “பயங்கரமான ஆளு தான்.” என்று சிரித்து மனதிற்குள் பாராட்டவும் செய்தான்.

நீண்ட நேரம் ஷ்ரத்தாவை நேரில் சந்திக்காமல் ஸ்கிரினில் பார்த்திடவும் ஸ்கிரினை அனைத்துவிட்டு, நேரிடையாக தரிசணம் தர சென்றான்.

சத்ரியன் வரவும், பாடிகார்ட்ஸ் ஒவ்வொருத்தரும் வழிவிட்டு நகர, ஷ்ரத்தா கதவை அடையும் நேரம் கதவு திறக்கப்பட்டது.

வினோத்திற்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்தது. ஷ்ரத்தாவிடம் கண்களாலே யாசகம் கேட்டு நின்றான். ஷ்ரத்தாவோ சத்ரியன் கண்களை சந்திக்க அஞ்சி, பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

“என்ன வினோத்… உன்னோட பாசக்கார தங்கை என்ன சொல்லறா? இரண்டு நாளா பச்சை தண்ணி படாம சீன் எல்லாம் போட்டா. இப்ப அந்த நிரோஷ் உயிர் பிழைச்சிட்டான் என்றதும் ஜூஸ் குடிக்கிறாளா” என்று கேட்டான்.

“ந…நத்திங் பாஸ். தன்னால ஒரு உயிர் போகக்கூடாதுனு யோசிச்சாங்க. இப்பவும் அந்த எண்ணம் உண்டு.” என்று என் உயிரை பற்றி சிந்தித்திடு’ என்று மானசீகமாக எதார்த்தமான பேச்சிலும் அவனுக்கான பேச்சை முன்னிருத்தினான்.

“பைன் ஒரு உயிருக்காக யோசிக்கலாம்.” என்றவன் ஷ்ரத்தாவை சுற்றி வட்டமிட்டு நடக்க, இன்னும் சட்டை போடாமல் படிக்கட்டு தேகத்துடன் நடந்து நோட்டமிட்டவனை கண்டு எரிச்சலானாள்.

“நான் காலேஜிக்கு போகணும். எனக்கு இந்த ரூம்ல புரோஜெக்டர்ல பாடம் படிக்க பிடிக்கலை. ஏதோ என்னை தங்க கூண்டுல அடைக்கற மாதிரி இருக்கு. இதுல என்னால பாதிக்கப்பட்ட நிரோஷை பார்க்கணும்” என்றாள்.

“எனக்குன்னு சில கேள்விக்கு பதில் இல்லை. அதுக்கான விடை கிடைத்ததும் உன்னை விடுவிப்பேன். நிரோஷை எல்லாம் பார்க்கறது முடியாத காரியம்.
ரொம்ப அவசரம்னா.. என்னோட பெட் ஷேர் செய். அடுத்த செகண்ட் நீ ஹாஸ்டல் போ.. எங்க வேண்டுமென்றாலும் போ. ஐ டோண்ட் கேர்” என்றான்.

இத்தனை நாள் எங்கேயும் போக அனுமதிக்காதவன் தன்னிடம் பெண்மையை இழந்தால் விடுவதற்கு தயாராக இருப்பதை தெரிவித்தான்.

ஷ்ரத்தா கைகள் சத்ரியனை அடிக்க பரபரப்பாக துடிக்க, சத்ரியனின் ஒருவிதமான நம்ம பார்வை அவளை எவ்வித செயலையும் செய்ய இயலாது தடுத்தது.

என்னவிதமான பார்வை? எதற்கான பார்வை? அந்த பார்வை சொல்லும் சேதி எதுவும் புரியாது, ஏதோ அபாயத்தை மட்டும் தருவித்தது போலிருந்தது. அதனாலேயே அவள் மூச்சு கூட விடாமல் நின்றாள்.

-தொடரும்.

 

 

 

 

 

 

5 thoughts on “The leader-30”

  1. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 30)

    அட.. இந்த வினோத் சத்ரியனை எதுக்காக கொல்லத் துணிந்தான் என்கிற காரணத்தை இன்னும் சொல்லலையே…?

    அதுசரி, எனக்கொரு சந்தேகம்.
    சத்ரியன் அறையில் பெரிய ஆன் லைன் ஸ்கிரீன் உள்ளது என்கிற உண்மை ஷ்ரத்தாக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதே வீட்டில் இத்தனை ஆண்டுகள் வேலை செய்த வினோத்க்கு கூடவா கேமராக்கள், ஸ்கீரீன்கள் எங்கெங்கு உள்ளன என்பது தெரியாமல் போகும் ???

    😴😴😴
    CRVS (or) CRVS2797

  2. shratha ipo un turn nee chathriyana kolla ninaikala aana yen unmaiya sollma maraikanum vinoth ethuku una vachi game aadanum una yar kolla pakuranga evlo ? nikuthu ithuku ellam pathil chathriyan tha kandupidikanuma intha vayasula ivlo theliva yosichi ellam panitu irukana apo etho iruku avan life la athan papom

  3. Super sis nice epi 👍👌 Vinoth ku enna reason ah erukum parpom 🧐🤔 aana chathriyan en ennum vittu vechirukan🙄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!