Skip to content

The leader-31

64 / 100 SEO Score

The leader-31

அத்தியாயம்-31

பங்களாவில் அந்த மாலை நேரம் விசித்திரமான அமைதி.

பெரிய ஜன்னல்கள் வழியே விழுந்த சூரிய ஒளி, பளபளக்கும் தரையில் நீளமான நிழல்களை வரைந்து கொண்டிருந்தது. வெளியே பாடிகார்ட்ஸ் வழக்கம்போல நடமாடினர். உள்ளே ஏசி குளிர் இருந்தாலும், ஷ்ரத்தாவுக்குள் மட்டும் வெப்பம். என்னவெல்லாம் பேசுகின்றான். அவனை வெளியேற்ற முடியாது பாத்ரூமில் தான் அடைந்தாள்.

அவளாக வரமாட்டாளென அறிந்து சத்ரியன் மமதையுடன் வெளியேறினான்.

 

ஷ்ரத்தாவாக கொஞ்ச நேரம் கழித்து கீழே வந்தபோது சத்ரியன் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தான்.

 

அவனது உடல்நிலை முன்னேற்றம் காண அடிக்கடி தேவைப்படும் நேரம் உணவு எடுத்துக் கொண்டான். சென்னா வேகவைத்ததை சாப்பிடும் உணவு மற்றொரு கையில் போன்.

ஏதோ டீலிங் கைப்பேசியிலேயே பேசித்தீர்க்கும் ஜாலம்.

அவளை பார்த்ததும் போனை வைக்கவில்லை. ஷ்ரத்தா நேராக அவன் முன்னே வந்து நின்றாள்.

“நான் நிரோஷை பார்க்கணும்.”

சத்ரியன் தலை கூட தூக்கவில்லை.

“முடியாது.” என்று கூறிவிட்டு போனில் கவனம் செலுத்தினான்.‌

 

“ஒரே தடவை. பார்த்துட்டு வந்துடறேன். வேண்டுமின்னா… வினோத் அண்ணாவோட அனுப்புங்க” என்றாள்.

 

“நோ. நீ யாரோடவும் போக தேவையில்லை‌ அந்த நிரோஷ் உயிர் பிழைச்சிட்டான் அந்த நியூஸ் வந்துச்சா.. தட்ஸ் இட்” என்றான்.

 

ஷ்ரத்தா நகராமல் “என்னை அனுப்பலைன்னா நான் மறுபடியும் பட்டினி கிடப்பேன்.  சாப்பிட மாட்டேன். ஏற்கனவே சாப்பிடாமயிருந்தேன்.” என்று நினைவுப்படுத்தினாள்.

 

சத்ரியன் போனில் பஞ்சாயத்தை தீர்த்துவிட்டு போனை அணைத்துவிட்டு, மெதுவாக பார்வையை உயர்த்தினான்.

 

அவன் கண்கள் நேராக அவளை துளைத்தது. பிறகு நிதானமாக,

“சாப்பிடலன்னா போடி. நீ சாப்பிட்டா என்ன சாப்பிடலைன்னா எனக்கென்ன?” என்றான். ஷ்ரத்தா அதிர்ந்து பார்த்தாள்.

 

சத்ரியனோ “உயிர் வாழணும்னு ஆசை இருந்தா நான் சொல்றதை கேட்டு நட.” அவன் மீண்டும் சென்னாவை(வெள்ளை மூக்கடலை) சாப்பிட ஆரம்பித்தான்.

 

அவ்வளவு தான். ஷ்ரத்தாவுக்கு கண்களில் நீர் ஏறியது.

அவள் திரும்பி நடந்தாள்.

மாடிக்கு செல்வாள் என்று எண்ணியதற்கு மாறாக வாசல் பக்கம் நடக்க ஆரம்பித்தாள்..

அங்கே இருந்த பாடிகார்ட்ஸ் உடனே நகர்ந்தனர்.

“மேம்.. நீங்க வெளியே போக்கூடாது.” என்று முன்னால் வந்து தடுத்தனர். ஆனால் யாருக்கும் அவளை தொட தைரியம் இல்லை.

அவள் அதை கவனித்தாள்.

 

‘இவங்க என்னை தொடவே பயப்படறாங்களா…?’ என்றதும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

 

அந்த நேரம் ஒரு பெரிய நிழல் தன்னை துரத்தாவதாக தெரிய திரும்பினாள். ஆனால் அது நிழலை விட சுனாமி போல தன்னை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டது. தனியாக அந்த நபர் யாரென வரையறைக்க தேவையின்றி இருந்தது. அது சத்ரியனே. அவனை தவிர ஷ்ரத்தாவை தீண்ட அங்கு யாருக்கும் தைரியமில்லை‌

 

இந்த சத்ரியன் எப்போது பின்னால் வந்தான் என்று கூட புரியவில்லை ஷ்ரத்தாவுக்கு.

“அவ்ளோ சொல்லியும் ஓடறியா?” என்று என்றவன் துப்பாக்கி தோட்டா இறங்கியும் கல்லை போல உடலை வைத்து, பூப்போன்ற  பெண்ணவளை சுமந்து நடந்தான்.

 

“சத்ரியன்! விடு!” என்று ஷ்ரத்தா கத்தினாள். அவன் அக்குரலை செவிமடுக்கவில்லை.

 

நேராக படிக்கட்டுகள் தாண்டி, அறைக்கு வந்து கதவை திறந்து, கட்டிலில் அவளை தூக்கி போட்டான். அவளை உள்வாங்கி பூபோல தாங்கியது மெத்தை.

 

“உனக்கு என்ன பைத்தியமா?!” என்று ஷ்ரத்தா எழுந்து நின்றாள்.

 

“நான் நிரோஷை பார்க்க போவேன். என்னை தடுக்க நீயாருடா? என்னை யார் கொல்ல வந்தாலும் கொன்னு தொலையட்டும். நீ ஒன்னும் காப்பாற்ற தேவையில்லை” என்றாள்.

 

அந்த வார்த்தை சத்ரியனை சில விநாடி அமைதியாக்கியது.

அவன் இன்னும் நெருங்கினான்.

“யாரிடம் பேசறேன்னு தெரிந்து பேசு ஷ்ரத்தா. இல்லை.. விளைவு அதிகமாகும்” என்றான்.

 

ஷ்ரத்தா சுற்றிமுற்றி பார்த்தாள். அங்கிருந்த மேசையில் பழம் வெட்டும் கத்தியிருக்க அதை எடுத்தாள்.

 

சத்ரியன் கண்கள் சுருங்கியது.

“ஏய்… ஷ்ரத்தா.. அதை கீழே வை. என்னை பயமுறுத்த பார்க்காத. நான் துப்பாக்கி தோட்டாவுக்கே சளைக்கலை. இது ஆப்ட்ரால் பழக்கத்தி. என்னை கொல்ல உனக்கு தைரியம் போதாது‌.” என்றான். ஷ்ரத்தா அவனை குத்த முனைவதாக நினைத்து எச்சரிக்கை செய்தான்.

 

“நான் ஏன்டா உன்னை கொல்லணும். நான் என்னையே கீறிப்பேன்.” என்றவள் அச்சுறுத்த முயன்றாள்.

சத்ரியன் சில விநாடிகள் பார்த்தான். பிறகு சிரித்தான்.

“ஓ. அந்தளவு தைரியமா?” என்று  வேகமாக அருகே வந்தான்.

 

கத்தியை அவள் கையிலிருந்து பிடுங்கினான். ஷ்ரத்தா மூச்சு முட்டி நின்றாள். அவன் கத்தியை பார்த்தான். அவளை பார்த்தான்.

“இதுல தானா கீறிப்பேன்னு சொன்ன?” என்று கேட்டு, அவனே அவள் இடது கையை பிடித்தான்.

 

ஷ்ரத்தா அதிர்ந்தாள். அவனோ சளைக்காமல் அவள் கையில் கீறலை கோடு போல இழுத்தான்.

ஷ்ரத்தாவின் பால் மேனியில் கையில் செங்குருதி பளிச்சிட ஷ்ரத்தா பயந்தாள்.

 

“சத்ரியன் என்ன பண்ணற?” என்றதற்குள் சிறிய கோடு. கத்தி தோலை லேசாக கிழித்தது.

 

“ஆஹ்!” அவள் உடனே கையை இழுத்தாள். சிறிய சிவப்பு கோடு.

அதிலிருந்து இரத்தம். அவ்வறையில் சொட்டியது.

 

அவள் உடனே கையை இழுத்து பிடித்தாள். சத்ரியன் இளக்காரமாக சிரித்தான். “இவ்ளோ தானா நீ? என்னவோ அந்தளவு துள்ளின. ஆப்ட்ரால் ஒரு கோடுக்கு தாரை தாரையா கண்ணீர்.” என்று அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரை சுண்டினான்.

 

அவள் அதிர்ச்சியோடு பார்த்தாள்.

அவன் காயத்தை பார்த்தான்.

பிறகு கண் சிமிட்டி, “இப்ப வா. உனக்கு ட்ரீட்மென்ட் பார்த்துட்டு அப்படியே அந்த நிரோஷை பார்க்கலாம்.” என்றான்.

 

அவளுக்கு புரியவில்லை.

இவன் என்ன மனிதன்?

ஐந்து நிமிஷம் முன் முடியாதுன்னு சொன்னவன். இப்ப கத்தியால் தன் கையை  கிழித்து கிளம்ப சொல்றான்.

புரியாமல் இருந்தாலும், நிரோஷை பார்க்க வேண்டும். அதுவே முக்கியமென அவன் இழுத்த இழுப்புக்கு நகர்ந்தாள்.

 

வழியெங்கும் ரத்தம் சொட்ட யோகேஷ் தந்த பஞ்சால் பிடித்துக் கொண்டாள்.

 

அடிக்கடி சத்ரியனை கண்டு மிரண்டாள். யோகேஷ் கூட ‘வரவர பாஸ் ஷ்ரத்தா மீது வயலன்ஸ் காட்டறார். ஒரு வேளை வினோத்தை காட்டிக் கொடுக்காம இருப்பதால கூட இப்படி துன்புறுத்தறாரோ?’ என்று அமைதியானான்.

 

இந்த அக்கப்போரில் வினோத் தன்னை ஷ்ரத்தா மறந்துவிட்டால், சத்ரியன் பார்வையும் தன் மேல் பதியாது நிம்மதியானான்.

 

மருத்துவமனை வாசல் வந்து கார் கதவு திறந்தவுடன் மருந்து வாசனை. அவசரமாக நகரும் ஸ்ட்ரெச்சர்கள். மெதுவாக ஒலிக்கும் மானிட்டர் சத்தங்கள்.

வெள்ளை கோட் அணிந்த டாக்டர்கள், நர்ஸ்கள், இடைவிடாத ஓட்டம் என்று அவ்விடம் பரபரப்பாக இருந்தது. நிரோஷை வேறொரு மருத்துவமனையில் மாற்றியதால் புதுயிடமாக வேறு இருந்து தொலைத்தது.

 

ஷ்ரத்தா உடனே ICU வார்டு பக்கம் சென்றாள். சத்ரியன் சவகாசமாக பாடிகார்ட்ஸ் கூடவே பின்னால் வந்தான்‌.

 

நிரோஷ் இருந்த அறைக்கு வந்து சேர்ந்ததும், படுக்கையில் இருந்தான். பல வயர்கள், கையில் ட்ரிப்ஸ் ஏறியிருந்தது.

முகம் இன்னமும் சோர்வாக தெரிய, உயிருடன் இருந்தான். ஷ்ரத்தா மெதுவாக அருகே சென்றாள்.

அவள் வந்ததும் இமை திறந்து பார்த்தான்.

 

“சாரி…” என்று அவள் குரல் உடைந்தது. இது இரண்டாவது முறை. முன்பு ஜானிடமும் இதே போல சொன்னாள். ஆனால் அவனாவது அடிமிதியோடு இருந்தான். நிரோஷ் இறப்பை சந்தித்து திரும்பியதால் கண்ணீரும் வந்தது.

 

நிரோஷ் மெதுவாக “பரவாயில்லை ஷ்ரத்தா… அழாத. நான் தான் முட்டாள்தனம் செய்துட்டேன். உனக்கு ஆபத்துனு காலேஜிக்கே தெரியும். அதுவும் உன்னோட பாடிகார்ட்ஸ் இருக்கறப்ப, நான் யோசித்திருக்கணும். அன்னிக்கு நீ ஆர்டர் பண்ணிட்டு கேன்சல் செய்துட்ட. நான் தான் நீ ஆர்டர் தந்த புட்டை சாப்பிட ஆசைப்பட்டு வாங்கிட்டேன். அதுல இப்படி பாய்ஸன் இருக்கும்னு நினைக்கலை. நான் ஏதோ சத்ரியன் சார் சீன் போடுவதா நினைச்சி மிதப்பா இருந்துட்டேன்.” என்றான்.

அவள் கண்களை துடைத்தாள். ஆக இவனாக குளறுபடி செய்தானா என்ற எரிச்சல். ஆனால் உயிரோடு வந்துவிட்ட நிம்மதியும் வழிந்தது.

 

அதை வெளியேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த சத்ரியனுக்குள் எரிச்சல் உருவாக,

‘இவனுக்காக இவ்வளவு மெனக்கெடல்.?’ என்ற சலிப்புடன் திரும்பி வெளியே வந்தான்.

 

காரிடாரில்.. சிகரெட். பற்ற வைத்தான். இரண்டு இழுப்பு இழுத்து புகையை வெளியிட்டான்.

அங்கிருந்தவர்கள் பாடிகார்ட்ஸ் இருக்கவும், மேலும் சத்ரியனிடம் கத்த பயந்து இறுமலுடன் இடத்திலிருந்து நகர்ந்தனர்.

 

அந்த நேரம் ஒரு நர்ஸ் பாடிகார்ட்ஸை கவனிக்காமல் சிகரேட் புகையை மட்டும் கண்டு வந்தார். “சார்! சார்” என்று கத்தினாள்.

 

“சார் இங்க ஸ்மோக் பண்ணக்கூடாதுனு தெரியாது. ஹாஸ்பிடல்ல பேஷண்ட் இருக்காங்க. டாக்டர்ஸ் டீன் ரவுண்ட்ஸ் வருவாங்க” என்று கூற,

சத்ரியன் மெதுவாக திரும்பினான்.

 

அவள் அவனை முழுசாக பார்த்தாள்.

அதற்குள் பாடிகார்ட் ஒருவன், “ஹலோ சத்ரியன் பாஸ் நினைச்சா இந்த ஹாஸ்பிடலை விலைக்கு வாங்கிடுவார். டீன் என்ன டாக்டர்ஸ் என்ன?” என்று தள்ளிவிட, “சத்ரியனை பற்றி அறிந்த நர்ஸ் ஒருத்தியோ, “ஏ ஸ்டெல்லா.. அவர் தான் சத்ரியன். பெரிய இடம் தெரியாம பேசாத” என்று இழுத்தார். ஸ்டெல்லா என்பவளுக்கு முகம் மாறியது.

 

“ச… சத்ரியனா…?” என்று உச்சரிக்க, சத்ரியன் புருவம் சுருங்கியது.

 

நர்ஸ் ஸ்டெல்லாவோ அருகேயிருந்த நர்ஸை தாண்டி, சத்ரியன் அருகே வந்தாள்.

 

பாடிகார்ட்ஸ் உடனே தடுத்தனர்.

“இல்ல… நான் அவரிடம் பேசணும்.” என்று சத்ரியனை பார்வையிட்டு கூறினாள்.

 

“பின்னாடி போ பாஸை நெருங்க முடியாது.” என்றான் யோகேஷ். அவள் மீண்டும் முன்னே வந்தாள்.

 

சத்ரியன் குரல் கீழிறங்கியது.

“என்ன பேசணும்.. ஆங்” என்ற அந்த குரலில் மிரட்டல் விடுத்தான். இந்த இடத்தில் அவனுக்கு பொவுது போக நினைத்து கேட்டான்.

 

நர்ஸ் சில விநாடிகள் தயங்கினாள்.

பிறகு மெதுவாக, “தி..திவாகர் சார் இறந்ததை பற்றி…” என்றதும் சத்ரியன் கண்கள் மாறியது.

 

நர்ஸ் தொடர முயன்றாள். “நான் உங்களிடம் ஒரு விஷயம் ரொம்ப நாளா தெரிவிக்க நினைச்சேன். ஆனா உங்களை சந்திக்க முடியாது என்றதும், சில பிரச்சனைகளை தவிர்க்கணும்னும் அதை சொல்லாம விடுத்தேன். ஆனா உங்களை இங்க சந்திச்சதும் சொல்ல நினைக்கேறன்” என்றாள்.

 

சத்ரியன் சிகரெட்டை கீழே போட்டான். மெதுவாக அவளை வலது கையால் ‘வா’ என்பது போல செய்கையில் பக்கம் அழைத்தான்.

 

“லாயர் திவாகரோட இறப்பை பற்றி என்ன விஷயம்?” என்றான்.

நர்ஸ் அவனை பார்த்தாள்.

முகம் பதட்டமானது. பாடிகார்ட்ஸ் நின்றியிருந்த அமைதி.

 

தூரத்தில் ஷ்ரத்தா இன்னும் நிரோஷுடன் பேசிக் கெண்டிருக்க சத்ரியனுக்கு நேரம் போகவும், இந்த நர்ஸ் வேறு திவாகர் பெயரை உச்சரிக்கவும் நர்ஸ் கூறவருதை கேட்க செவிக்கொடுத்தான்.

 

“சார்… திவாகர் இறந்தப்ப அவர் போன் போட்டு உங்களை கூப்பிட சொன்னப்ப நான் தான் உங்களிடம் பே

சியது.” என்று நினைவுப்படுத்திவிட்டு, அடுத்த நொடி நர்ஸ் ஸ்டெல்லா சத்ரியனிடம் எதை எதையோ சொன்னாள்.

 

சத்ரியன் முகம் மெதுவாக இறுகியது.

 

– தொடரும்.

 

6 thoughts on “The leader-31”

  1. ama la call pana sonaru apram ena nadanthuchinu therila ipo inga vanthathu intha nurse pakura mari aeiduchi athukagave vanthu etho theriuthu aduthu ena nadaka pothunu therila ithula vinoth kum etho connection iruku

  2. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 31)

    இந்த ஷ்ரத்தா சும்மாவே இருக்க மாட்டாளோ..? சத்ரியனை சீண்டி சீண்டி வைக்குறதையே தொழிலா வைச்சிருக்கிறாளோ என்னவோ..?

    அந்த நர்ஸ் அப்படி என்ன சொன்னாள்..? ஒருவேளை, திவாகரை கொன்னதும் இந்த வினோத் தானோ…? அவனே கொல்ல ஏற்பாடு பண்ணிட்டு, பழியை சத்ரியன் மேல போட்டு, ஷ்ரத்தா கையால சத்ரியனை கொல்ல ட்ரை பண்ணி ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறானோ..,
    பழி அவன் மேல் விழாமல் இருக்க..?

    😴😴😴
    CRVS (or) CRVS2797

  3. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌 nurse enna solliyirupanga yetho vishayamiruku parpom 🤔🧐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!