The leader-32
அத்தியாயம்-32
மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழி முழுக்க காரில் அமைதி. ஷ்ரத்தா ஜன்னல் பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவள் கையிலும் கத்தியால் சத்ரியன் கீறியதற்கு கையில் கட்டியிருந்த வெள்ளை பேண்டேஜ் இருந்தது.
சத்ரியனுக்கு சற்று முன் நர்ஸ் ஸ்டெல்லா கூறியதை கேட்டு கழுத்து நரம்பு புடைத்தது. திவாகர் மரணத்திற்கு தான் காரணமென்று நினைத்திருக்க, அது வேறொரு காரணத்திற்கான பாதையை நீட்டியது.
உடனடியாக ஷ்ரத்தாவிடம் அந்த காரணத்தை பகிராமல் மௌனம் சாதித்தவனாக வந்தான்.
ஷ்ரத்தா மனதில் நிரோஷ் உயிர் பிழைத்து தெளிவாக பேசியதால் ஒரு நிம்மதி பரவியது
அதையும் தாண்டி புகைப்பிடித்து தன்னை இருக்கையில் அமர்ந்து, அடிக்கடி அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஒருமுறை இரண்டுமுறை மூன்றுமுறை என்று அவள் கவனிக்கும் பொழுது பார்வை அகற்றாமல் இருக்க, இறுதியில் ஷ்ரத்தாவே கவனித்தாள்.
“என்ன.. எதுக்கு பார்க்கற?” என்றாள். சத்ரியன் உதட்டில் புகையை ஊதியபடி, “இப்ப திருப்தியா? நிரோஷை பார்த்தாச்சுல.” என்றதும் ஷ்ரத்தா மௌனமானக பிறகு அவன் சிரித்தான்.
“என்ன லவ்வா?” என்று ஏளனமாக கேட்டதற்கும், ஷ்ரத்தா எந்த பதிலும் சொல்லவில்லை.
அவளது பார்வை தன் கையில் இருந்த கீறலில் பதிந்தது. இடியட்… மிரட்ட கத்தி எடுத்தா இவனே கையை கிழிச்சு வச்சியிருக்கான். அந்த லூசு எனக்காக கத்தியால கிழிச்சு பார்க்க வந்தியானு கேட்கறான். இல்லைனு சொல்லவும் அழறான். சாகற லெவலுக்கா போயிட்டு வந்தும் இந்த நிரோஷுக்கு அறிவில்லை.
ஒரு பொண்ணு மனசுல என்ன இருக்குன்னே தெரியாத இந்த சத்ரியனுக்கும் அறிவில்லை என்று மனதில் இருவரையும் பேதமின்றி வசைப்பாடினாள்.
இதில் தாமதமாக தான் சத்ரியனின் முகத்தை கவனித்தாள். அந்த முகத்தில் ஏதோ ஜம்பமாக திரியும் சிங்கத்தின் சாயல்.
இவளை போலவே சத்ரியனும் ஷ்ரத்தாவின் முக பாவணையை ஆராய்ந்தான்
அதில் ஷ்ரத்தா முகத்தில் கோபமா?
சோகமா?அல்லது இன்னும் தன்னை புரிந்துகொள்ள முடியாத குழப்பமா?சத்ரியனுக்கு தெரியவில்லை. ஆனால்
அந்த முகம் அவனுக்கு விசித்திரமாய் பிடித்திருந்தது.
நாள் முழுக்க கூட தெவிட்டாமல் பார்க்க போதையூட்டும் முகம். நல்லவனாக ரட்சிக்கப்பட்டவனாக இருந்தால் அதையே ‘மகாலட்சுமி சாயல்’ என்று விளக்கலாம். இவனுக்கு தான் அத்தகைய வார்த்தைகள் பிடிக்காதே.
சத்ரியன் பங்களாவிற்கு வர இரவு நெருங்கியது. ஷ்ரத்தா தனக்கான அறையில் இரவாடை அணிந்தாள்.
உடையை கழற்றி மாற்ற கொஞ்சம் சிரமப்பட்டாள். ஒரு கீறலுக்கே வலி உயிரை போகின்றதே. அந்த சத்ரியன் துப்பாக்கி தோட்டாவுடன், கண்ணாடி சில் குத்தி கையில் கீறலும் இருந்து எப்படி தான் நிலைமையை சமாளிக்கின்றானோ? இதற்கு தான் சட்டை அணியாது முழு நேரம் சுற்றினானா? ஏதோ கவர்ச்சிக்கரமாக சிக்ஸ் பேக் உடலுடன் அச்சுறுத்தும் விதமாக உலாவினான்.
சொல்லப்போனால் அவன் நெருங்கி வந்து நின்றாலே தன்னை ஆள வந்து நிற்கின்றானா என்ற அச்சுறுத்துவதை போல இருந்தது.
ஷ்ரத்தாவுக்கு மருந்து தந்திருக்க, அதை விழுங்குவதற்கு முன் ஏதேனும் வயிற்றில் நிறைத்து விட்டு சாப்பிட கூறியிருக்க, ஹாலுக்கு வந்தாள். இங்கு இப்பொழுது எல்லாம் சாப்பிட அவளை தாங்க யார் உண்டு. ‘சாப்பிட்டா சாப்பிடு இல்லைன்னா போடி’ என்றல்லவா ஒருவன் சுத்துகின்றான்
ஷ்ரத்தா வரவும் மற்றவர்கள் எல்லாம் தள்ளி நின்றனர்.
சத்ரியன் ஹாலில் அமர்ந்திருந்தான். அவனுக்கும் துப்பாக்கி தோட்டா இருந்த இடம், மருந்து மருத்தின் வீரியத்தில் மெல்ல மெல்ல ஆறிக் கொண்டிருக்க, சாப்பாட்டை ருசித்து மருந்தை விழுங்கினான்.
ஷ்ரத்தா உணவை எடுத்து போட்டு சாப்பிட, சத்ரியன் நீர்கோப்பையை கையில் சுழற்றிக் கொண்டிருந்தான்.
திடீரென “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்றான். ஷ்ரத்தா அவனை வெறித்துப் பார்த்தாள்.
“என்ன சொல்லி தொலை” என்றாள். சத்ரியன் புதிராக பேசுவதை ஷ்ர்ததா விரும்பவில்லை. சத்ரியனுக்கு அவள் முககலவரம் பிடித்திருக்க மெதுவாக சிரித்தான்.
பின்னர் விளையாட்டை ஓரம்கட்டி, “லாயர் திவாகர் இறந்தப்ப…” என்றவன் பருகியிருந்த அவன் கிளாஸை மேசையில் வைத்தான்.
“நான் என்னோட சைட்ல யாராவது காரணமா இருக்காங்களானு வலை வீசி பார்த்தேன். யாரும் சிக்கலை… என்னோட கூட்டத்துல என்னோட கிங்பிங் சர்க்கிள்ல… எல்லாரையும் சந்தேகப்பட்டேன்.” அவன் தோள்களை குலுக்கினான்.
“கண்டுபிடிக்க முடியலை.”
ஷ்ரத்தா புருவம் சுருங்கியது.
“ஏன்னா… அங்க யாரும் லாயரை கொல்ல நினைக்கலை. உங்கப்பாவை கொல்லற அளவுக்கு… அங்க யாருக்கும் காரணம் இல்ல.” என்று கூறிடவும் ஷ்ரத்தா உறைந்தாள்.
சத்ரியன் தொடர்ந்தான். “திவாகர் இறப்பை கண்டுபிடிக்க முடியாம இருந்தேன். அதுவே என் தூக்கத்தை பறிச்சது. ஆனா.. இன்னிக்கு நல்லா தூங்குவேன். பிகாஸ்….” அவன் கண்கள் மெதுவாக, அவளை பார்த்தது.
“இப்போ காரணம் தெரிந்துக்கிட்டேன். எதிரி யாருனும் தெரிந்துக்கிட்டேன்.”
ஷ்ரத்தா உடனே எழுந்தாள்.
“யா..யாரு?” என்று வினோத்தை நோக்கினாள். சத்ரியன் அமைதியாக இருக்க, “யாருனு சொல்லு!” அவள் குரல் நடுங்கியது.
சத்ரியன் புகை பிடிக்க சிகரெட்டை பற்ற வைத்தான். “ப்ளீஸ்.. எங்கப்பாவை கொன்றது யாரு?” என்று கெஞ்சினான்.
“சொல்ல மாட்டேன்.” என்றவன் சிரித்தான். “ஏன்?” என்று புருவம் சுருக்கினாள்.
“சொன்னா… எனக்கு எந்த பெனிஃபிட்டும் இல்லையே.” என்று
சிறிய இடைவெளி விஷமமாக அவளை பார்த்தான். ஷ்ரத்தா அப்பார்வைக்கு அதிர்ந்தாள்.
சத்ரியனோ, “எனக்கு காரியம் இல்லாம, எச்சி கையால காக்காவை கூட விரட்ட மாட்டேன்.” என்று சோபாவில் தோதாக சாய்ந்தான்.
அந்த நேரம் வாசல் பக்கம் வினோத் அவசரமாக உள்ளே வந்தான்.
முகம் பதட்டத்தை தேக்கி வைத்திருந்தான்.
ஷ்ர்த்தா அவனை கண்டதும், “வினோத் அண்ணா… எங்கப்பாவை யார் கொன்றா?” என்று கேட்டாள். வினோத் கையை பிசைந்து நின்றான்.
சத்ரியனுக்கு இந்த கேள்வி பிடிக்கவில்லை. தன்னிடம் கேட்பாளென்ற கர்வமிருக்க, வினோத்திடம் கேள்வியை திருப்பவும் சிகரெட்டை புகைத்து அவனது அறைக்கு சென்றான். எப்படியும் ஷ்ர்த்தாவுக்கு அவள் தந்தையை கொன்றது யாரென அறிய வேண்டினால் அவள் தன் அறைக்கு வரட்டுமென்ற எண்ணம்.
சத்ரியன் தலை மறையவும், “எனக்கு யாருனு தெரியாது ஷ்ரத்தா. ஆனா சில பேரை தேட ஆளுங்க போயிருக்காங்க. யோகேஷ் இந்த இடத்துல இல்லை பாரு” என்றான். ஏதாவது ஒரு வில்லங்க விவகாரம் நடக்கின்றதென்றால் ஒன்று அங்கே யோகேஷ் அல்லது வினோத் இல்லை என்றால் இவ்வாறான செய்தி நிகிழ்வதாக ஷ்ரத்தாவுக்கு விளங்கியது.
ஷ்ரத்தாவுக்கு இதயம் வேகமாய் அடித்தது. அப்போ சத்ரியன் சொன்னது உண்மையா?
அவளது மனதில் ஒரே கேள்வி.
‘அப்பாவை கொன்றது யார்?’ இதை தெரியாமல் மண்டை வெடித்துவிடுமே.
சில நேரம் கழித்தே ஹாலை கவனித்தாள். சத்ரியன் இல்லாததை உணர்ந்தாள்.
சத்ரியன் காணாததை கண்டு விழியில் அலச, “பாஸ் ரூமுக்கு போயிட்டார் மேம்” என்று மற்றொரு பாடிகார்ட் கூறினான்.
நொடியும் தாமதிக்காமல் சத்ரியன் அறைக்கு விரைந்தாள். அவனோ கொஞ்சம் போல விலையுயர்ந்த விஸ்கியை பருகிக் கொண்டிருந்தான்.
ஷ்ரத்தா அவன் முன் வந்து மூச்சுவாங்க நின்றாள்.
“எங்கப்பாவை கொன்றவன் யாரு. எனக்கு தெரிஞ்சாகணும் ப்ளீஸ்…” என்றாள். சத்ரியன் கிளாஸில் இருந்த ஐஸ் கட்டியை சுற்றினான்.
அந்த சத்தம் மட்டும் அவ்வறையை நிறைத்திருந்தது. ஷ்ரத்தாவுக்கு கோபம் வந்தது. அவள் அவன் முன்னே வந்து நின்றாள்.
“நான் இவ்வளவு கேட்கறேன். சொல்லமாட்டியா? அப்பாவுக்கு நீ தந்த பணம் வீடு எல்லாவற்றையும் எடுத்துக்கோ.” என்றாள்.
சத்ரியன் மெதுவாக தலை தூக்கினான். அவள் கண்களில் கோபமும் வலியும் தாண்டி இவனிடம் கெஞ்சினாள்.
அவளது உடைந்த மனது அவனுக்கு தெரியவில்லை. ஒரு முகத்தில் இத்தனை விதமான உணர்ச்சிகள். அத்தனை உணர்ச்சியும் அழகாக பிரதிபலிக்கின்றது. இதை தான் ரசித்தான்.
சத்ரியன் சில விநாடிகள் அவளையே ரசித்து விழுங்குவதை பார்த்தவளுக்கு அவனது தேவையும் விழியில் தென்பட்டிருக்க அதிர்ந்தாள். ஆனால் அவளுக்கு தந்தையை கொன்றவன் யார் என்றதை அறிய வேறு வழியில்லை.
ஷ்ரத்தா அந்த கதவை தாழிட்டு முடித்தால், “என்னை உன்னிடம் இழந்தா… எங்கப்பாவை கொன்றவன் யாருனு சொல்வியா?” என்று கேட்டு நின்றாள்.
அவள் அழுகையுடன் கேட்டு நிற்க,
அவனது பார்வை முதல் முறையாக விளையாட்டில்லாமல், “எனக்கு இப்படி அழுது வடிஞ்சி, உன்னை ஒப்படைச்சா பிடிக்காது. அதோட என் படுக்கைக்கு வர்றவங்க யாரும் கண்ணீரோட நிற்கறப்ப தொடுவதா இல்லைனு சபதம் எடுத்திருக்கேன்.” என்றான் நகைப்புடன்.
தானே அவன் அருகே வந்து, தானே அவளை இழக்க கேட்டும், அழுகையுடன் வரவேண்டாமென தடுத்து, தனது அழுகைக்கு கூட தடை உத்தரவு பிறப்பித்தவனை கொல்ல தோன்றியது. ஆனால் தனக்கான காரியம் பெரிதா என்று யோசித்தவள் சற்று நேரம் அழுகையை அடக்க பிரம்மபிராயத்தம் செய்தாள்.
அவளது அழுகை விரைவாக கரைய மெனக்கெடுவதை கண்டு, இன்னதென வரையறுக்க இயலாத சிரிப்பில் உதடு விரிந்தது அவனுக்கு.
ஒருவழியாக தன்னை இழந்திடும் துயரத்தை அழுகையாக சிறிது நேரம் கண்ணீர் வடித்து, அழுகையை அடக்கி, மேலாடையாக அணிந்திருந்த டாப்பை களைந்து நின்றாள்.
சத்ரியன் இதற்கு மேல் அவளை சங்கடப்படுத்த விடாமல், அவன் அவளது கரத்தில் கீறிய கையை பிடித்து இழுத்தான்.
அவன் மீது பூங்குவியலாக விழுந்தவள் கைகள் அவன் நெஞ்சை பற்றிட, இமைகளை அங்கும் இங்கும் உருட்டி, அவன் விழிக்குள் ஏறிட்டாள்.
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”னு சொல்வாங்க. ஐ மீன்.. ‘காதலியின் உதட்டருகே உருவாகும் ஈரமும், அவள் தரும் முத்தமும், பாலும் தேனும் கலந்த சுவையைப் போல இனிமை தருமாம். நான் சொல்லலை… அந்த வள்ளுவன் அனுபவிச்சு எழுதியிருக்கான் போல. நானும் அதை அனுபவ ரீதியா டெஸ்ட் பண்ணலாமா?” என்று கேட்டான்.
ஒரு நொடி சத்ரியன் கூறியது திருக்குறளா? என்று வியந்தவள், அடுத்த நொடியே, இவனுக்கு திருக்குறள் எல்லாம் தெரியுமா? துப்பாக்கியும் கத்தியும் வச்சி, மற்றவர்களின் உயிரோட விளையாடறவனுக்கு தமிழின் சிறந்த உரையான திருக்குறள் தெரிந்திருக்கா? தனக்கு கூட இந்த குறள் தெரியாதே. இவன் எத்தகையானவன் என்ற பிரம்பிப்பில் திளைக்க, சத்ரியன் ‘என் முத்த மழையிலும் கொஞ்சம் நனைந்திடு’ என்று, ஷ்ரத்தா இதழில் மென்மையான முத்தங்களை விதைத்திருந்திருந்தான்.
அமுதம் பருக வேண்டுமென்றால் ஆலகால விஷத்தை நீக்க வேண்டுமென்பது போல, அவனது ஆளுமைக்கு தயாராக நின்றவள், அவனது மென்மையான முத்தங்களில் கரைந்தாள் என்பதே உண்மை.
இதுவரை காதல் என்ற சொற்களுக்கும், இது போன்ற செயலுக்கும் தனக்கு சம்மந்தமேயில்லாமல் இருந்தவளுக்கு முதல் முறை ஆடவனின் தீண்டல். அதுவும் ச
த்ரியன் போல ஒரு புயலிடம் இது போன்ற தென்றல் வருடம் முத்தங்களை எதிர்பாராமல் சொக்கி கிறங்கி தான் போனாள் நாயகி.
– தொடரும்
பிரவீணா தங்கராஜ்.
ஹாய் பிரெண்ட்ஸ்.. புதுத்தளம் ஆரம்பிச்சு லிங்க் ஷேர் பண்ணிருந்தேன். உங்களோட ஆதரவை அந்த தளத்துக்கும் வழங்குங்க. இந்த தளத்தில் சத்ரியன் சாம்ராஜியத்துடன் வேற கதை வராது
அங்க ரெஜிஸ்டர் லாகின் பண்ணி படிக்க வாங்க. இனி அங்க தான் கதை வரும். ஏற்கனவே இரண்டு கதை அங்க இருக்கு. மையலிட்ட சிற்பமே மற்றும் நின் பிரேமம் என் சிநேகம் முழுகதையா வச்சியிருக்கேன்.
அடுத்து மதுர ஜில்லா மச்சானே மற்றும் மௌஹபத் முதல் நிக்காஹ் வரை கதை பதியப்படும்.
எனவே ரெஜிஸ்டர் பண்ணி ரீடர்ஸ் வந்ததும் புதுக்கதை அங்க போட்டுடுவேன். நீங்க விரைவில் வந்தா நான் விரைவில் அங்க போடுவேன்.

avan ninacha mariye avala ippadi vara vachitane cha shratha ku antha nilamai varathu ninachen last la antha nilamai vanthuduche , chathriyan iva kitta mattum romba soft handle panran ena unmai yar konnathunu vera thriyanume athuku vera nalaiku vara wait pannanuma innaike podunga sisy
Sharadha y this decision? It may be dream? Becz chatriyan wont do like this. Very intresting sis.
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 32)
அடிப்பாவி ! இவ எதுக்கு இந்தளவுக்கு இறங்குறான்னு தெரியலை…? இப்ப அவளோட அப்பாவை யார் கொன்னாங்கன்னு தெரிஞ்சு பழி வாங்கப் போறாளா என்ன..?
இல்ல அவங்கப்பாத்தான் உயிரோட திரும்ப வரப் போறாரா என்ன ? ஒழுங்கா அவங்கப்பா ஆசைப்பட்ட டாக்டர் படிப்பை படிச்சு முடிச்சு, அவரோட கனவை நனவாக்குறதை விட்டு எதுக்கு இந்த தேவை இல்லாத ஆணியெல்லாம் புடுங்குறாளோ தெரியலை..?
😴😴😴
CRVS (or) CRVS2797