அத்தியாயம்-35
ஆதிகேசவின் கால்கள் நடுங்கின.
காரணம் ஷ்ரத்தாவுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பதல்ல…
சத்ரியன் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான்.
சத்ரியன் அமைதியாக இருந்தால் தான் ஆபத்து. அவன் மெதுவாக கிளாஸில் இருந்த மதுவை பருகி முடித்தான். பிறகு யோகேஷை பார்த்து, “ஷ்ரத்தாவுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு… இப்போ என் டர்ன்.” என்றான்.
அந்த ஒரு வரியில் ஆதிகேசவின் முகத்தில் இருந்த ரத்தமே வடிந்தது.
ஹாலில் இருந்த காற்றே கனத்தது.
யாரும் பேசவில்லை. ஷ்ரத்தா மட்டும் சத்ரியனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்பது திகிலாகயிருந்தது.
ஆனால் ஆதிகேசவுக்கும் நிர்மலுக்கும் புரிந்திருந்தது.
அதனால் தான் இருவரின் முகத்திலும் மரண பயம் அப்பட்டமாக தெரிந்தது.
“சார்… நான் தவறு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க..” ஆதிகேசவ் கைகளை கூப்பினான். சத்ரியன் முன்னே நடக்க, “என் குடும்பத்தை நினைச்சு பாருங்க” என்று மண்டியிட்டான்.
சத்ரியனோ வில்லன் சிரிப்பை உதிர்த்து, “டேய்.. சாகடிக்கறவனுக்கு எல்லாம் ஒரு குடும்பம் இருக்கும். ஒவ்வொரு முறையும் கொல்லறவனுக்கு பின்னால குடும்பத்தை யோசிக்க முடியுமா? இங்க எனக்கெதிரா நின்றா மரணம் நிச்சயம் என்றது எழுதப்படாத விதி” என்றான்.
அந்த வார்த்தை கேட்டு அவர்களது அலறல் இன்னும் கொடூரமாக இருந்தது. நிர்மல் திடீரென முன்னே வந்தான்.
“சார்… ஷ்ரத்தா உயிரோட இருக்கா. அவளுக்கு ஒன்னும் ஆகலை. என்னை விட்டுடுங்க. எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்கறேன். ஷ்ரத்தா காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்கறேன்.” என்று ஷ்ரத்தா காலடியை தீண்ட சென்றான். அவளோ இரண்டடி பயந்து பின்னால் நகர்ந்தாள்.
சத்ரியன் அதற்கு அவனை பார்த்த பார்வையில் உயிரே உறைந்தது போல தள்ளாடினான். “உங்களை விட்டுடணுமா?” அவன் மெதுவாக சிரித்தான். “லாயர் திவாகரை விட்டியா?”அந்த கேள்விக்கு ஆதிகேசவனிடம் பதில் இல்லை.
“என் வயிற்றில் துப்பாக்கி தோட்டாவை இறக்கியிருக்க, உன்னை விடணுமா?” என்று கேட்க, நிர்மல் பயந்துப்போனான்.
ஷ்ரத்தாவுக்கு ஏதோ தவறாகப் போகிறது என்று புரிந்தது.
அவள் உடனே சத்ரியன் முன்னே வந்தாள். “சத்ரியன்… போதும்… உண்மை தெரிஞ்சிருச்சு. இவங்களை போலீஸ்ல ஒப்படை.” என்று அவளது குரலில் பதற்றம் இருந்தது.
சத்ரியன் அவளை அதிசயமாக திரும்பிப் பார்த்தான். எதையோ ஆராய்வது போல. பிறகு மீண்டும் ஆதிகேசவ் பக்கம் திரும்பினான். பின்னர் ஷ்ரத்தாவிடம் “ஏய்… உண்மைக்காகவா இத்தனை தூரம் துரத்தியது? இல்லை உங்கப்பாவுக்காக உனக்காக இவங்களை இங்க மண்டியிட வச்சேனா? நெவர்… என்னை மீறி என் கூட இருந்தவங்களை தொட்டா கூட மரணம் நிச்சயம் என்பதை ஒவ்வொருத்தரும் உணரணும். என்னை பத்தி நல்லா தெரிந்தவங்களுக்கும், என்னை பற்றி தெரியாதவர்களுக்கும் நான் புரிய வைக்கிற மெத்தட்” என்றவன், அவளை அசட்டையாக கடந்து, “பொதுவா தவறு செய்ததுக்கு சட்டம் தண்டனை கொடுக்கலாம். ஆனா என்னை நெருங்கறவங்களுக்கு நான் தான் தண்டனை தருவேன்” என்றவன், அலங்காரத்திற்காக அங்கிருந்த பெரிய வாளை கொண்டு நிர்மல் வயிற்றில் சொருகினான்.
“இது என்னை நீ துப்பாக்கியால் சுட்டதுக்கு.” என்று வாளை ரொட்டைட் செய்து வெளியே எடுக்க குடலும் ரத்தமுமாக உருவினான். ஷ்ரத்தா மிரண்டு போய் பார்வையிட, ஒரே வெட்டில் இரண்டு பேரின் கழுத்தில் வாளை வீச, கழுத்தில் செங்குருதி கசிந்து தலை தொங்கியது.
சத்ரியன் இனிதாக மரணத்தை பரிசளித்து, யோகேஷை மட்டும் பார்த்தான். அந்த பார்வையின் அர்த்தம் யோகேஷுக்கும் வினோத்துக்கும் புரிந்தது. வினோத்தின் முதுகுத்தண்டில் குளிர் ஓடியது. அவன் இதுவரை சத்ரியனை பார்த்திருக்கிறான்.
கோபத்தில், சண்டையில், வேட்டையில் ஆனால் இப்படி இல்லை. பெரிதாக யாரையேனும் சாகடித்திருந்தால் சத்தமின்றி கொன்றுவிட்டு அதன்பின்னே சத்ரியன் வினோத்தை அழைத்திருப்பான்.
இன்று அவன் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தான். அதுவும் பல பாடிகார்ட்ஸ் முன்னிலையில்… தானும் பழிவாங்க துடிப்பதை யூகித்தால் தனக்கும் இதே கதி என்று புரிய எச்சியை விழுங்கினான்.
சில நிமிடங்களில் உயிரற்ற ஆதிகேசவையும் நிர்மலையும் ஆட்கள் வெளியே இழுத்துச் சென்றனர்.
அவ்விடம் பயங்கரமான மயான அமைதியை தந்தது. அந்த அமைதியே எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. ஷ்ரத்தா நடுங்கினாள்.
சத்ரியன் எதுவும் நடக்காதது போல மீண்டும் அமர்ந்தான். கிளாஸில் மதுவை ஊற்றினான்.
அவனது முகத்தில் இருவரை கொன்றதற்கான வருத்தத்திற்கான மாற்றமே இல்லை. மடமடவென ரத்தாறு ஓடிய இடத்தை கறை படிந்த இடத்தை தூய்மை செய்ய ஆட்கள் குவிந்தனர். பதினைந்து நிமிடத்தில் ரத்தகறைகள் துடைக்கப்பட்டு தரை பளிச்சிட்டிருந்தது.
அந்த நொடியில் தான் வினோத் உண்மையாக பயந்தான்.
இன்று ஆதிகேசவ் நிர்மல்.
நாளை.. கண்டிப்பாக தனது அழிவு கூட நெருங்கலாம்.
தன் ரகசியம் வெளியில் வந்தால் இதே முடிவு தான். அவன் முகத்தில் வியர்வை துளிகள் பூத்தன. அதை ஷ்ரத்தா கவனித்தாள்.
வினோத்தை பார்த்தவள் மனதுக்குள் உறைந்தாள். ‘இவனைப் பற்றிய உண்மையை நான் சொன்னா… வினோத்துக்கும் இதே நிலைதான்…’ என்பது புரிய அவளால் மூச்சே விட முடியவில்லை.
சத்ரியனோ ஷ்ரத்தாவையே கவனித்துக் கொண்டிருந்தான்.
அவளது முகத்தில் ஓடிய பயம்,
அவளது கண்களில் தோன்றிய தயக்கம். அவனை ஏதோ யோசிக்க வைத்தது. ‘இன்னும் வினோத்தை மறைக்கிறா..’ என்று அவனது உள்ளுணர்வு கூறியது.
தனக்காக உயிரை ஆபத்தில் போட்டான். அவளை பாதுகாத்தான். அவளது தந்தையை கொன்றவர்களை கண்டுபிடித்தான். ஆனால்… இன்னும் அவள் வினோத்தை பற்றி சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாள்.
அது ஏன்? தன்னை அழிக்க நினைக்கின்றாளா? என்று சத்ரியனின் பார்வை மெதுவாக வினோத்தின் மீது திரும்பியது. அடுத்த நொடி மீண்டும் ஷ்ரத்தா மீதும் திரும்பியது.
அவன் கண்ணில் கேள்வியாக மாற்றி, ”நீ யாரை காப்பாத்துற, ஷ்ரத்தா?” என்றான். அந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்காமல் சத்ரியன் நிற்கப் போவதில்லை.
உடனே பேச்சை மாற்றும் விதமாக, “உன்னோட அப்பாவை கொன்றவனை, உன்னை கொல்ல முயன்றவனை, உன் கையால சுட்டு முடிப்பனு பார்த்தா, போலீஸ்ல பிடிச்சு கொடுக்க சொல்லற. உனக்கு கொல்லணும்னு ஏன் தோணலை?” என்றான்.
ஷ்ரத்தா நடந்ததையே ஜீரணிக்க முடியாது நின்றவள், “ஏன்னா.. நான் சாதாரணமானவ. எனக்கு மனிதநேயம் இருக்கு. எங்கப்பா என்னை ரத்தத்துக்கு ரத்தம்னு சொல்லி வளர்க்கலை.
தப்புக்கு தண்டனை கிடைக்கும். அதுவும் நீதிமன்ற மூலமாக கிடைக்கும்னு சொல்லி தந்தவர்.
மிருகம் மாதிரி வேட்டையாடி, ஒரு மரணத்துக்கு பதிலடி இன்னொரு மரணம் என்று நினைக்க மாட்டேன்.” என்றாள்.
“பென்டாஸ்டிக்… இந்த மனநிலை உள்ளவங்களை நான் என் வாழ்க்கை அனுபவத்துல முதல் முறை பார்க்கறேன். ஏன்னா… எனக்கெல்லாம் எதிரினு முளைத்தாலே கொண்ணு புதைச்சு மரத்தை நட்டு வைக்கறது தான் பழக்கம். இன்ட்ரஸ்டிக் கேரக்டர் தான் நீ” என்றான்.
“ஓகே.. காய்ஸ்… பிரேக்பாஸ்ட் டைம் வந்துடுச்சு. நான் வேற டாப்ளேட் எடுக்கணும்.” என்று சத்ரியன் கூலாக ஷ்ரத்தாவின் கைபுஜத்தை இழுத்து செல்ல, அவனுக்கு பின்னால் படையே சென்றது.
உணவு மேஜையில் அமர்த்தி, “சாப்பிடு” என்றதும், “இரண்டு உயிரை கண்முன்னால கொண்ணு ரத்தாறு பாய்ந்து கிடக்கு. கண்ணுக்குள்ள அந்த காட்சி இன்னும் அகலலை. எப்படி சாப்பிட. நீ வேண்டுமின்னா அரக்கனா இரு. நான் அப்படி இருக்க முடியாது” என்று அவளுக்கான அறைக்கு ஓடினாள்.
“வினோத்.” என்ற கர்ஜனை “பாஸ்” என்று உயிரை பிடித்து நின்றான் வினோத்.
“அவ சாப்பிட்டு இருக்கணும். உன்னோட பொறுப்பு” என்று ஆணையிட, வினோத் ஷ்ரத்தா அறைக்கு நடந்தான். கூடவே சில பாடிகார்ட் நடக்க, “நீங்க இருங்க. எப்பவுமா போல நானே பேச போறேன்” என்று தவிர்த்துவிட்டு வந்தான்.
ஷர்த்தா சத்ரியன் தான் பின்னாலே வந்து இம்சை தருவானென்று “ப்ளீஸ் வெளியே போ” என்று கத்த, “ஷ்ரத்தா.. நான் வினோத்” என்றதும் திரும்பி அழுதாள்.
வினோத்தும் கதவை கதவை பார்த்து, கண்ணீரை வெளியிட்டான்.
“என்னை எக்காரணத்துக் கொண்டும் காட்டி கொடுத்துடாத” என்று மண்டியிட்டு நின்றான்.
ஷ்ரத்தாவின் கழுத்தில் கையில் சத்ரியனின் லீலைகள் வெளிச்சமிட்டு இருந்தது. அதனால் வினோத்திற்கு ஷ்ரத்தா சத்ரியனிடம் அவளை இழந்ததை தெரிந்துக் கொண்டு, “அவன் ஆசைக்கு உன்னை வளைய வச்சியிருக்கலாம். அதுக்காக ஏதாவது ஒரு சூழ்நிலையில் என்னை மாட்டிவிடாத” என்றான்.
ஷ்ரத்தா இம்முறை கண்ணீரை துடைத்துவிட்டு, “வினோத் அண்ணா… நீங்க ஆபத்துல தான் இருக்கிங்க. நான் சத்ரியனிடம் சொல்லாவிட்டாலும், அவன் உங்களை ஸ்மெல் பண்ணிட்டான். நீங்க தான் எக்ஸ், அவனை கொல்ல முயற்சி செய்யறிங்கன்னு தெரிந்திருக்கும்.” என்றாள்.
“என்ன? எப்படி சொல்லற?” என்று அதிர்ந்து போனான்.
“தெரியலை… இது என் யூகமா கூட இருக்கலாம். ஆனா எனக்கு மனசுல அப்படி தான் தெரியுது.
தெரிந்தோ தெரியாமலே சத்ரியனுக்கும் எனக்கும் சந்திப்பை நிகழ்த்தியது நீங்க தான். இல்லைன்னா சத்ரியன் யாருனே தெரியாம நான் ஆதிகேசவால எங்கப்பா இறந்தது போல அவராலையோ, அல்லது நிர்மலால இறந்திருப்பேன்.
அப்படியில்லாம சத்ரியன் பாருக்கு உங்களால் தான் வந்தேன். நீங்க தான்… சரியோ தப்போ சத்ரியனிடம் என்னை நிறுத்தினிங்க.
இப்ப சத்ரியன் என் வாழ்வில் வந்ததை நான் சாபமா நினைக்கலை. அதே சமயம் இந்த வாழ்க்கை வரமும் இல்லை.
எந்த நேரம் என்றாலும் நானும் அவனுக்கு யாரோ என
ஒருத்தியா வெளியே தள்ளப்படலாம்.
அதுக்குள்ள நீங்க கிளம்பிடுங்க. இங்கிருந்தா உங்க உயிருக்கு ஆபத்து.” என்றாள்.
வினோத்தோ ‘அய்யோ சத்ரியனுக்கு சந்தேகம் எழுந்ததா’ என்று துடித்தவன், ஷ்ரத்தா பேசியதை கேட்டு “சத்ரியனை கொல்லாம என்னால போகமுடியாதே.” என்று அழுதான்.
“அவரை நீங்க ஏன் அண்ணா கொல்ல நினைக்கறிங்க?” என்றதற்கு வினோத் பதில் செல்லவில்லை. “பச்… எதுவும் சொல்லாம.. நான் மட்டும் அவனிடம் எல்லாத்தையும் மறைக்க சொல்லறிங்க. இது நியாயமா அண்ணா?” என்று கடுப்புடன் அங்கிருந்த ஒரு ரிமோட்டை தட்டி விட்டாள்.
அது கல்லூரியில் பாடம் நடத்துவதை நேரிடையாக இங்கே புரஜெக்டர் மூலமாக காண வைத்தது. லைவாக பாடம் நடப்பது காட்சியாக காட்டியது.
ஷ்ரத்தா சில நொடி அதிர்ந்தவள், “அண்ணா… சத்ரியன் ஒருவேளை என் அறையில் நடப்பதை, லைவ் டெலிகாஸ்ட்ல, அவன் இருந்த இடத்துலயிருந்து பார்க்கும் படியா அமைச்சிருக்கலாம் தானே?” என்றதும் வினோத் திகைத்தான்.
அது போல இதுவரை வினோத் அறிந்ததில்லை. யோகேஷ் சொல்லியும் கேள்விப்பட்டதில்லை.
ஆனால் தற்போது அப்படி ஏதாவது நிகழ்ந்திருந்தால் வினோத் ஷ்ரத்தாவிடம் பேசியதை பார்த்து கேட்டிருப்பானே!
வினோத் ஷ்ரத்தா இருவரும் திகைத்து நிற்க, “டூலேட் ஷ்ரத்தா” என்று புகையை ஊதியபடி, சத்ரியன் அறையில் சிரித்தான்.
யோகேஷோ “பாஸ் வினோத் என்ன காரணத்தால் உங்களை கொல்ல நினைக்கறான்னு இன்னும் தெரியாது. அப்படியிருக்க.. இப்ப நாம அவங்களை கவனிப்பதை யூகிச்சிட்டாங்க. இனி அந்த காரணம் சொல்லாம மறைக்கலாம். இல்லை… என்ன நடக்கும்?” என்றான்.
சத்ரியனோ ”என்னை கொல்ல காரணம் வேற வேண்டுமா? நா
ன் கெட்டவன் இது போதாதா?” என்று சிரித்தான். யோகேஷிற்கு எதுவும் புரியாது, ஷ்ரத்தா வினோத்தை கண்டான்.
– தொடரும்.

Super sis nice epi 👍👌 shratha correct ah ellathaiyum guess pandra pa aana Vinoth en reason Ennanu solla maatenguran🧐🤔
Wow intelligent shardha. U think like chatriyian. Very intresting sis.
wow interesting vinoth ethukaga kolla ninaikiran atha shradha kitta sollavum matran but crt ah guess panra shradha ena konjam late ah panra ithuke antha chathriyan una ena pana porano
It’s interesting waiting for nxt epi
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 35)
அட.. ஆதிகேசவனும் நிர்மலும் மத்தவங்களை கொல்றச்ச, அவங்களுக்கும் குடும்பம், குட்டி எல்லாம்இருக்கும்ன்னு யோசிக்க மாட்டாங்களாம், ஆனால்அவங்களை கொல்றச்ச மட்டும் குடும்பம் இருக்கு, குட்டியிருக்குன்னு சீனை போடுவாங்களாம்… போங்கடா டேய்.
அப்பாடா..! இப்பத்தான் ஷ்ரத்தா & வினோத் ரெண்டு பேரோட மூளைக்கும், சத்ரியன் ஷ்ரத்தாவோட ரூமை லைவ் டெலிகாஸ்ட்டா பார்த்திட்டிருந்தா என்கிற சந்தேகமே தோணியிருக்கு பாருங்களேன்.
அது சரி, இந்த வினோத் ஏன் சத்ரியனை கொல்ல நினைக்கிறான்..? வினோத்தோட குடும்பம் அழிய ஏதாவதொரு விதத்துல காரணமா இருந்திருப்பானோ இந்த சத்ரியன்..?
😴😴😴
CRVS (or) CRVS2797