Skip to content
58 / 100 SEO Score

அத்தியாயம்-36

“டூ லேட் ஷ்ரத்தா…” புகையை மெதுவாக வெளியேற்றியபடி சத்ரியன் சிரித்தான். அந்த சிரிப்பில் வெற்றி இருந்தது. யோகேஷ் அருகில் நின்றபடியே புருவத்தை சுருக்கினான்.
“பாஸ்… இவங்க ரெண்டு பேரும் இப்போ எச்சரிக்கையாகிடுவாங்க.” என்றான்.

“அதுதான் வேணும்.” என்றவாறு
சத்ரியன் கிளாஸை மேசையில் வைத்தான்.

“வேட்டையாடுறதுல சுவாரஸ்யம் எப்ப தெரியுமா யோகேஷ்?” என்று கேட்க, “பாஸ்..” என்று தெரியாதென விழித்தான்.

“இரை ஓட ஆரம்பிக்கும்போது.”
அவன் கண்கள் மின்னலாய் பளிச்சிட்டது.

“வினோத் இப்ப ஓடணும் மறையணும்னு யோசிப்பான். ஆனா அவன் எங்க போனாலும் அவன் மனசுல இருக்குற காரணத்தை தூக்கிட்டு தான் போவான்.” என்று வேட்டையாடும் சிங்கத்தை போல சத்ரியன் கூற யோகேஷ் அமைதியாக நின்றான்.

“அந்த காரணம் என்னன்னு எனக்கு தெரிஞ்சா போதும். அதுவரை ஷ்ரத்தாவோட பங்கு இதுல எப்படி அமையுதுனு பார்க்கற ஆசையிருக்கே.. அது தான் கிக்கா இருக்கு.” என்று சிலிர்த்தான்.

அதே நேரம் ஷ்ரத்தா அறைக்குள் வினோத்தின் முகம் வெண்மையாக மாறியிருந்தது. அவன் கண்கள் புரஜெக்டர் திரையையும் கதவையும் மாறிமாறி பார்த்தான்.
அந்த நேரம் யோகேஷ் அழைத்தான்.

சத்ரியன் சார்பில் ஆதிகேசவனின் இறப்புக்கு மலர்கொத்து தந்து இறப்பிற்கு சென்று வரக்கூறியதாக தெரிவித்தான்.

“சாகடிச்சிட்டு மலர்கொத்து வேற கொண்டு போக சொல்லறான் பார்த்தியா?” என்று மூச்சை இழுத்து, “சத்ரியன் பாஸுக்கு தெரிந்தா நான் இங்க நின்று பேச முடியாது ஷ்ரத்தா. அவன் அடுத்த செகண்டே கொன்றுயிருப்பான்.
அதனால என் மேல சந்தேகம் எழுந்திருக்கலாம். நான் ஆதிகேசவ் இறப்புக்கு போயிட்டு வர்றேன். என்னோட வாழ்க்கையும்
கத்தில நடக்கற நிமிடமா மாறிடுச்சு. இப்ப போறேன். அப்பறம் வந்து பேசறேன். உன்னை நம்பி தான் இருக்கேன்.‌ என்னை சத்ரியனிடம் போட்டு கொடுத்துடாத” என்று கிளம்பினான்.

இன்னமும் சத்ரியனுக்கு வினோத் பற்றி தொரியாமல் இருக்குமோ? என்று ஷ்ரத்தா கூட நம்பத் துவங்கினாள்.

அந்த நேரம் ஹாலுக்கு வந்து சேர, கனிமொழி போனில் அழைத்தாள்‌.

மனமாறுதலுக்கு தோழியுடன் கதைக்க, ஏற்றாள்.

“ஷ்ரத்தா..‌ நியூஸ் கேள்விப்பட்டியா? இன்னிக்கு காலேஜ் லீவு.
நம்ம ஹாஸ்பிடல் அட்மினிஸ்ரேட் ஆதிகேசவ் டாக்டர் சார் இருக்காரே. அவர் மெடிக்கல் சீட்காக எவ்வளவோ பணத்தை வாங்கி நிர்மல் என்ற ஸ்டுடண்டை ஏமாத்தியிருக்கார்.

அந்த ஸ்டுடண்ட் ரீசண்டா பணத்தை திருப்பி தர கேட்டு, ஆதிகேசவ் சார் தராம போகவும் ரொம்ப மோசமா பிஹேவ் பண்ணிருக்கான்.

ஆதிகேசவ் டாக்டர் ஆச்சே வயிற்றுலேயே ஏதோ ஆயுதத்தால குத்திட்டார் போல. அந்த நிர்மல் அதை தாங்கி டாக்டர் கழுத்தை வெட்டி டாக்டர் சாகறப்ப அவனையும் கொன்றுயிருக்கார். இப்ப இரண்டு பேரும் உயிரோட இல்லை.” என்றாள்.

ஷ்ரத்தாவோ அதிர்ந்து ‘அச்சோ? ஏன் இப்படி? அவரா?’ என்றெல்லாம் கேட்பாளென்று தெரிவிக்க, “அப்படியா?” என்றாள்.

“என்னடி… நான் எவ்ளோ பெரிய விஷயத்தை சொன்னேன். நீ கூலா அப்படியானு கேட்கற. ம்கூம்… வரவர சத்ரியன் சார் கூட இருப்பதால ரத்தம், சதை, வெட்டு குத்து எல்லாம் சர்வசாதாரணமா நினைக்கற போல.” என்று கேலியாக பேசினாள்.

ஷ்ரத்தாவோ “இருக்கலாம்.. சத்ரியனோட இருப்பதால எல்லாவிதமான பழிபாவத்தை பார்த்துட்டேன் பழகிட்டு வர்றேன்” என்றாள்.

சத்ரியனோ “பேசியது போதும்… பெட்ரூமுக்கு வா.” என்று போனை பிடுங்கி அணைத்து, தூக்கி எறிந்து,  அவளை அள்ளிக் கொண்டுச் சென்றான்.

“சத்..சத்ரியன்.” என்று சிணுங்க ஒரே கையில் அவளை தோள் மீது தூக்கி போட்டு மறுகையால் புகையை ஊதி தூரயெறிந்து நடந்தான்.‌

பாடிகார்ட்ஸ் வழிவிட்டு நகர, யோகேஷோ ‘இந்த ஷ்ரத்தாவை ஆசைக்கு கூட்டிட்டு போறாறா… இல்லை இவ சாகடிக்கறாளா இல்லையானு வேடிக்கை பார்க்க தூக்கிட்டு போறாருனே தெரியலை‌. இதுல பாடிகார்ட்ஸ் பக்கிங்க ஒருத்தரை ஒருத்தர் மார்க்கமா பார்த்து சிரிக்குதுங்க.
யார் கண்டா உள்ள எதுனாலும் நடக்கும்’ என்று மனதில் தான் புலம்பினான்.

சத்ரியன் அறைக்குள் வந்ததும் மெத்தையில் அவளை தொப்பென்று போட,  “எல்லாரும் பார்க்கற மாதிரி ஏன் என்னை அசிங்கப்படுத்தற.” என்றாள்.

“அசிங்கப்படுத்தறேன்னா… ஓய்… கன்னத்துல இரண்டு அறை விட்டேன். நல்லா புஸுபுஸுனு வீங்கும்.
காலையில இரண்டு மர்டர் எனக்காக பண்ணிருக்கேன். அதுக்கே நான் மத்தவங்க என்ன யோசிப்பாங்கனு நினைச்சதில்லை. இதுல உன்னை தூக்கிட்டு வர நீ அசிங்கப்படுவேன்னு எதுக்கு யோசிக்கணும்.

ஏன்.. காலையில கழுத்தும் கழுத்துக்கு கீழேயும் அங்கங்க சிவப்பு தடிச்சதை பார்த்திருக்கலையா? இல்லை கையில தோள்ல பற்தடத்தை பார்த்திருக்க மாட்டாங்களா. ரொம்ப அலட்டாதடி.” என்றான்.

“நாம ஒப்பந்தப்படி ஒருமுறை என்னை இழந்துட்டேன். நான் இப்ப எங்க வீட்டுக்கே போறேன். நம்ம கணக்கு முடிந்தது.” என்று ஓட பார்த்தாள்.

சத்ரியனோ அவ்வறை அதிர சிரித்தான்.

“முதல் தீண்டலுக்கு தான் உன்னோட பர்மிஷனை எதிர்பார்த்தேன். இப்ப பார்த்தல்ல.. உன்னால எனக்கு எதிரிகள் கூடுதலா ஆகியிருக்கு. என் பாவகணக்குல இரண்டு மரணம் தேவையில்லாம ஏறிடுச்சு. அந்த இரண்டு குடும்பத்தோட உறவுகள் என்னை எப்படியெல்லாம் கரிச்சு கொட்டுவாங்க. அந்த பாவகணக்கை யார் தீர்ப்பா? என்னோட படுத்து நீ தான் தீர்க்கணும்.

எனக்கு இந்த சொர்க்கம் நரகம் இந்த பேண்டஸி கதையில நம்பிக்கை இல்லை. உயிரோட இருக்கறப்பவே சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்கறவன் நான்‌.

அதோட என்னால மத்தவங்களுக்கும் சொர்க்கத்தையும், நரகத்தையும் காட்டவும் தெரியும்.
காலையில இரண்டு பேருக்கு நரகம் காட்டியிருக்கேன். உனக்கு சொர்க்கத்தை காட்ட விரும்பறேன். இல்லை நீ அதையும் நரகமா நினைச்சா, உனக்கு நரகத்தை காட்டி எனக்கு சொர்க்கத்தை பார்த்துக்கறேன்.” என்று அவள் மீது படர துவங்கினான்.

‘என்னை விட்டுவிடு’ என்ற கத்தல் எதுவும் ஷ்ர்ததா உரைக்கவில்லை. “சத்ரியன் ப்ளீஸ்… இதெல்லாம் தப்பு. என்னால.” என்று கூறியவளின் பேச்சை முத்தங்களால் நிறுத்தினான்.

எந்த நேரம் பிடிவாதத்தை மறந்து அவனது பரந்த முதுகை தன் மென்கரத்தால் தழுவினாள் என்று அவளுக்கே தெரியாது.

சத்ரியன் இங்கே சல்லாபிக்க, ஆதிகேசவ் இறப்புக்கு பூங்கெத்தை வைத்துவிட்டு வினோத் நகர்ந்தான்.

வினோத் மனதில் பயம் விதைக்கப்பெற்றது. இனி சத்ரியனிடம் தப்பிக்கவும் முடியாத வகையில் தான் இருக்கின்றோமென புரிய, தனித்து நகர முடியவில்லை. இத்தனை நாள் பாடிகார்ட் கூடவே வந்தவனுக்கு, இன்று கூடவே வருபவன் கூட சாகடிக்க முயலுவானோ என்று அஞ்சினான்.

ஆட்டத்தில் அனைத்து எதிரி காய்களும் வெட்டப்பட்டு, ராஜா தனியாக இருந்தாலும், ஆட்டம் இன்னமும் களைவதாக இல்லை. புதிதாக… தன்னிடம் உள்ள காவலர்களே, மந்திரியரோ, ஏன் படை வீரர்களோ கூட தன்னை அழிக்க முன் வைத்தால் எப்படி ராஜா தப்பிப்பான் என்ற புதிரான ஆட்டத்தில் தான் சத்ரியன் இருந்தான்.‌ அதற்காக ஆட்டத்தில் தோற்க்க வாய்ப்புண்டு என்று எண்ணியதில்லை. எப்படியும் ராஜா தான் வெற்றி பெறுவான்.

ஒன்றிரெண்டு நாட்கள் ஆதிகேசவ் நிர்மல் கேஸ் எங்கு திரும்பினாலும் மீடியாவில் பேசப்பட்டது.
மருத்துவரின் மெடிக்கல் சீட் ஊழலை பற்றி பேச்சும், பாதிக்கப்பட்ட மாணவனாக நிர்மல் நிலையும் சூடுதணியும் வரை பேசி அடங்கினார்கள்.

ஒருவழியாக கல்லூரியும் விடுமுறையை விடுத்து திறந்து மாணவர்கள் படிக்க வந்தனர்.

ஷ்ரத்தா “இப்பொழுதும் கல்லூரிக்கு செல்லவா?’ என்று சத்ரியனிடம் அபிப்ராயம் கேட்டாள்‌.

சத்ரியனோ “தாராளமா போ. சத்ரியனோட கார்டியன் நீ ஒரு பையனும் நெருங்க முடியாது. ஆனா புட் எல்லாம் செக் பண்ணி தான் உன்னிடம் வரும். யோகேஷும் மத்த பாடிகார்ட்ஸும் கூட தான் வருவாங்க. இது நார்மல்‌. அத்தோட நீ ஹாஸ்டலுக்கோ உங்க வீட்டுக்கோ போக முடியாது. என்னோட ஆசை தீரற வரை நீ  என்னோட தான் இருக்கணும்‌. நீ பேசிய பேச்சு… உன்‌ மேல இருக்கற மோகம்… இரண்டும் தீருற வரை விட முடியாது. அது என்னோட ஈகோ பிரச்சனை” என்றான்.

ஷ்ரத்தாவுக்கு அவன் பேசியதை கேட்டு கோபம் வந்தது. அதே சமயம் அவளுக்கு ஹாஸ்டலில் தங்க பயமும் இருந்தது. வீட்டில் தனியாக இருக்க மனதிடமும் இல்லை.

சத்ரியனோடு ஒன்றிணைந்த நேரம், அவளுமே அவன் தீண்டலுக்கு அடிப்பணிந்து நின்றாள். ஒன்று அவன் காட்டும் மென்மையான தீண்டல் நேசமாக கருதுகின்றாள் முட்டாள் ஷ்ரத்தா.

தற்போது அந்த நேசம் தான் அன்பாக கருதுகின்றாள். யாருமில்லாத சமயம் அடைக்காத்தவன். கூடவே ஷ்ரத்தா விலகி வந்தால் மட்டும் அவள் சத்ரியனின் ஆசை நாயகி என்ற அடைமொழியை நீக்கிடுவார்களா என்ன? அல்லது அதற்கு மதிப்புமிக்க பெயரை சூட்டுவார்களா? இதுவரை வந்த பெயரையே அவள் வைத்துக் கொண்டால்…

ஷ்ரத்தா கல்லூரிக்கு அடியெடுத்து நகர்ந்தாள்.
சொல்லப்போனால் அவளது வாழ்க்கை நீரோட்டம் போல தடையின்றி சென்றது.

கல்லூரிக்கு காலையில் எழுந்து குளித்து முடித்து, சாப்பிட்டு கிளம்புவாள்.

அங்கே பாடத்தை கவனித்து கனிமொழியிடம் பேசிவிட்டு கேன்டீனில் பாடிகார்ட் உத்தரவு பேரில் அவர்கள் சுவைப்பார்த்த பிறகு ஒன்றுமில்லை என்றதும்  சாப்பிடுவாள்.
மாலையில் வீடு திரும்பி ஹோம்வொர்க் செய்ய துவங்குவாள். நிறைய படிக்க வேண்டிய வேலையும் இருக்கும். கண் அசறும் நேரம் அவளது அறையில் உறங்கிடுவாள்.

சத்ரியனுக்கு தேவைப்படும் நேரம், ஒன்று குண்டுக் கட்டாக அனுமதிக் கூட கேட்காமல் ஷ்ரத்தாவை அள்ளிக்கொண்டு தனதறைக்கு வந்து ஆசையை தீர்த்துக் கொள்வான் அல்லது அவளது அறையிலேயே அவளது மடியில் கிறங்கியிருப்பான்.

இப்படி தான் இந்த பதினைந்து நாட்களும் நடந்தது.
ஏன் கூடுதலாக கூட நாட்கள் கழிந்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் சத்ரியன் வினோத்தை பற்றி தன்னிடம் உரைப்பாளா? என்று கவனிப்பான், அல்லது அவனோடு சேர்ந்து கொல்ல திட்டமிடுகின்றாளா என்று கூட சந்தேகித்தான்.

யோகேஷிற்கு தான் இதை கண்டால் திகைப்பான். வினோத்தை பாவம் பார்த்து விட்டுட்டாரா? இல்லை… வினோத் அப்படி கொல்ல துடிக்காம ஏதாவது நம்ம பிரம்மையா என்று கூட யோசித்தான்.
ஆனால் வினோத் தனியாக முயல முடியாது, இம்முறை ரிதுராஜிடம் உதவிக் கேட்டான்.‌
ரிதுராஜோ, “நினைச்சேன்… அந்த ஆதிகேசவ் ஒருமுறை என்னை தேடி வந்தான். ஆனா எந்த வேலையும் இல்லைனா பயந்துட்டு ஓடிட்டான்.
இப்ப புரியுது… துப்பாக்கி எதனால யாரால சத்ரியன் வயிற்றில் பாய்ந்ததுனு. முதல்லயே சொல்லக்கூடாதா. அந்த நிர்மலுக்கு ஒரு மலர் வளையத்தை வைத்து பாராட்டியிருப்பேன்.‌” என்று வினோத்திடம் பேசினான்.

வினோத் முகவாட்டத்துடன் நின்றான்.‌ ரிதுராஜோ “பெர்சனல் ரீஸன் என்று சத்ரியனை கொல்ல உதவி கேட்கற. என்ன பெர்ஸனல்னு கேட்டா.. பதிலில்லை. உன்னை எப்படி நம்பறது? நீ சத்ரியனோட விசுவாசமான நாய். ஒருவேளை சத்ரியனை அழிக்க நான் நினைப்பதா நினைச்சு, அவனே தூண்டில் போட உன்னை அனும்பினானா?” என்று வினோத்தை நம்பாமல் சிரித்தான்.

வினோத்தோ “இல்லை… அவனை அழிக்க ஷ்ரத்தாவிடம் கூட கூட்டு சேர்ந்தேன். ஆனா அவ இனி கொல்ல உதவமாட்டானு நல்லாவே தெரியுது. ஏன்னா..‌ தன் தந்தை லாயரை கொன்றவனையே, அவ கையால கொல்வானு நினைச்சா. அவ போலீஸ்ல ஒப்படைங்க என்று சொன்னா. அவ வேண்டுமின்னா சத்ரியனிடம் மாட்டி விடாம இருப்பா. ஆனா சத்ரியன் என்னை ஸ்மெல் பண்ணிட்டானோனு பயமாயிருக்கு” என்றான்.‌

ரிதுராஜோ, ஏற்கனவே சத்ரியனை கொல்ல ஒரு அழகி, காரியதரிசியாக யாமினியை, மைக்கேல்லை அனுப்பி, இரண்டு முறையும் பெயிலியர் ஆகிடுச்சு. இந்த முறை வினோத்தை வைத்து முயற்சிக்கலாமா? வினோத் ஏதோ பாதிக்கப்பட்டு இருப்பதை உணர முடிந்தது. இல்லையென்றால் இந்தளவு நடுக்கம் நாடகமாக அமையாது.

“என்னவோ சொல்லற.. சத்ரியனை  நான் கொல்ல எனக்கு ஐடியா இல்லை. ஆனா நீ உதவி கேட்கற என்ற பட்சத்தில், என் ஆளுங்களை துணைக்கு வச்சிக்கோ. எப்ப எதுனாலும் கால் பண்ணு. ஆனா உடனே பண்ணு. உனக்கு வேண்டுமின்னா… அந்த ஷ்ரத்தா உதவுவதா தெரியலாம். ஆனா அவ நல்லவ. அதுவே நமக்கான கொள்கைக்கு எதிரானது.

இந்த மாதிரி ஒரு கேங்க் சர்கிளில் நீதி நியாயம் என்று பேசறது ரொம்ப அபத்தமான விஷயம்.” என்று கூறினான்.‌

வினோத்துக்கும் அதே பயம் உண்டு.

ரிதுராஜோ “ஆமா… அந்த பொண்ணு ஷ்ரத்தா மேல சத்ரியனுக்கு ஏதாவது இன்ட்ரஸ்ட் இருக்கா? இல்லை… முதல்ல கொண்ணா கொல்லுடானு விட்டான். இப்ப பார்த்தா அப்படி தெரியலையே. பொத்தி பொத்தி பாதுகாப்பா பார்த்தது போல இருக்கு” என்று கேட்க, “உண்மையை சொல்லணும்னா… சத்ரியன் பாஸ் ஷ்ரத்தா மேல இன்ட்ரஸ்டா தான் இருக்கார். இல்லைன்னா காலேஜ் பாடத்தை புரஜெக்டர்ல வீட்டுக்கே படிக்க ஏற்பாடு பண்ணுவது, தெரிந்தோ தெரியாமலோ ஆதிகேசவ் நிர்மல் இறப்பு கூட அவளுக்காக பண்ணினாரோனு சந்தேகம் இருக்கு. அது ஏன்னு தெரியலை. முன்ன எப்படியோ.. இப்ப அவளோட பிஸிகல் ரிலேஷன்ஷிப்ல வேற இருக்கார்” என்ற கூடுதல் தகவல் வழங்கினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

 

7 thoughts on “The leader-36”

  1. Un ego kaga avala yen da use panra padikira ponna nee eppadi use panitu iruka intha shratha vum Vinoth ah mari vida Matra avan enada na ipo rithuraj kitta poi nikuran ena personal irukum sikram sollunga sisy

  2. Endha Vinoth yedhukaga eppdi pandran onnumey puriyalaiye 🤔😐 endha shratha vera evan kita nalla lock ayita 🙄

  3. தீ லீடர்…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 36)

    அடப்பாவி…! இந்த வினோத்துக்கு இன்னும் கூடவா சத்ரியனைப் பத்தி தெரியலை. அவன் ஓட விட்டு அடிப்பான்ங்கிறது இவனுக்கல்லவா முதல்ல தெரியணும். சத்ரியன் இன்னும் கையை காலை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கிறான்னா, வினோத்தோட ரிவென்ஜ்ஜோட ரீஸன் என்னன்னு தெரிஞ்சிக்கத் தான் அவன் அமைதியா இருக்கிறான். இது கூட தெரிஞ்சு வைச்சுக்காமத் இத்தனை நாளா சத்ரியனுக்கு வலது கையா இருந்து என்னத்தை கிழிச்சான்னு தெரியலை போங்க.

    இதுல ஷ்ரத்தா சத்ரியன் ரிலேஷன்ஷிப் பத்தி வேற அந்த கேடு கெட்ட ரிதுராஜ் கிட்ட புட்டு புட்டு வைக்கிறான். இவனைப் பத்தி மட்டும் ஷ்ரத்தா சத்ரியன் கிட்ட கூட சொல்லக் கூடாதாம், ஆனா இவன் மட்டும் ஷ்ரத்தாவைப் பத்தி வரவன் போறவன் கிட்ட எல்லாம் பத்தி பத்தியா சொல்வானாம், இது எந்த ஊரு நியாயம்ன்னு தெரியலை.

    இந்த வினோத் இருக்கிற ஆபத்து பத்தாதுன்னு ரிதுராஜ் மூலமா ஷ்ரத்தாவுக்கு வேற இன்னும் வில்லங்கத்தை கூட்டி விட்டுட்டானோன்னுத் தோணுது.

    😴😴😴
    CRVS (or) CRVS2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!