Skip to content
58 / 100 SEO Score

அத்தியாயம்-4

*இந்த கதை Kingpin story. அதனால் சில காட்சிகள் தவிர்க்கப்படாமல் மேலோட்டமாக எழுதப்படுகின்றது. கூடவே வாசிக்கும் வாசகர்களுக்கு நன்றி. கதை முடியவும் நீக்கப்படலாம். அதனால் சிரமம் பாராமல் படிக்கவும். * எனது முந்தைய கதைக்கு ஆதரவு தந்து வாசித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். *

சத்ரியன் தனக்கான சாம்ராஜியத்தில் பேசி முடித்து வந்து இளைப்பாற பெண்ணை நாடினான்.

மெத்தையில் தனித்து அமர்ந்து இடத்தை ஆராய்ந்த பெண்ணோ, கதவு திறந்து வந்தவனை கண்டு யாரேன கேட்கவும் விடாமல், சத்ரியன் தன் லீலையை ஆரம்பித்தான்.

சத்ரியனை கண்டவள், விழிவிரித்து, திகைத்தாள்.

மூச்சு முட்ட வைத்தவன், திகட்டாத இளமையை வாறி வழங்கியவளுக்கு, கடைசியாக கழுத்தில் செல்ல கடியையும் வழங்கி, அவளது கழுத்தை பிடித்து மெத்தையில் தள்ளி விட்டான்.

பேயறைந்தது போல ஸ்தம்பித்தவள் கழுத்தில் கடிப்பட்ட வலியுடன் கண்ணீர் சிந்தி, குளியலறைக்கு சென்றாள்.

வினோத் கால் செய்யவும், “என்ன வினோத் இந்த நேரத்துல?” என்று கேட்கவும், “பாஸ்.. அந்த பொண்ணு சாப்பிடாம கொள்ளாம, என்னை விடுங்க நான் பேகணும்னு நைநைனு கத்தினா” என்றான்.

சத்ரியன் கட்டை விரலால் நெற்றியை கீறி, “எந்த பொண்ணு?” என்றான் அரை போதையில்.‌

வினோத்தோ, “பாஸ்..‌ வக்கில் திவாகரோட பொண்ணு. நீங்க கூட மெடிக்கல்ல சீட் வாங்கி தர சொல்லி ஏற்பாடு எல்லாம் செய்திங்களே பாஸ். இன்னிக்கு இங்க கூட்டிட்டு வர சொன்னிங்க” என்று நினைவுப்படுத்தினான்.

“இங்கயா? இடியட்… மெடிக்கல் சீட் வாங்கி தந்துட்டு அவங்க அப்பாவுக்கு வீட்டு பத்திரமும் கொடுத்து செட்டில் பண்ணிடுனு சொன்னேன்.” என்றான் நாயகன்.

“நோ பாஸ்… தூக்கிடுனு சொன்னிங்க. சின்ன பொண்…ணு.” என்று தலையை சொரிந்தான் வினோத்.

“வாட்.?” என்றான் சத்ரியன்.

“ஆமா பாஸ்.. நான் அதனால தான் இன்னிக்கு நைட் தேவைக்கு கேட்டிங்களோனு இங்க கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான்.

சத்ரியனுக்கு இருந்த அரை போதையிலும் தூக்கி வாறி போட்டது.

“என்ன வினோத் சொல்லற? இன்னிக்கு நைட் தேவைக்கு இங்கயா? யூ இடியட்… நான் அவளை செட்டில் பண்ணி நம்ம பைசல் பண்ணற லிஸ்ட்ல இருந்து தூக்க சொன்னேன். நீ என்ன வேலை பார்த்திருக்க? அதுவும் இங்க?” என்றவனுக்குள் தனது அறைக்குள் இருந்த பெண் திவாகரனின் மகளா? அவளையா புணர்ந்து கூடியது?’ என்று எரிச்சலடைந்தான்.‌

சத்ரியனை பொறுத்தவரை தேவையற்று எந்த பெண்ணிடமும் இச்சை தீர்க்க கட்டாயாப்படுத்த மாட்டான். அவன் ஆசைக்கு இணங்கும் பெண்ணை தான் அவன் பணத்தால் வளைப்பது. இவனுக்கா தோன்றும் பெண்களை நுகர தோன்றி அவர்கள் மறுத்தால் மண்ணுக்கு போவார்கள். அப்படியிருக்க இந்த அழுகை, கற்பழிப்பு, இதற்குள் அடியெடுத்து செல்வது குறைவே. குறைவு என்பதை விட சூழ்நிலை அமைந்ததில்லை‌

அதிலும் தன்னை சிறையிலிருந்து மீட்க வாதாடிய, திவாகருக்கு மகள். அப்படியிருக்க அவருக்கு செய்த மாபெரும் தவறாக ஒரு நொடி தோன்றியது. இறக்கும் பொழுது கூட தனக்கு போன் போட்டு பேசி மகளை படிக்க வைத்து பார்த்துக்க கூறினாரே’ என்று தோன்ற தலையில் அடித்து சத்ரியன் அவசரமாய் சிகரெட்டை எடுத்து பதட்டத்தை மறைத்தான். படிக்க வைக்க கூறியதால் அவள் சிறுபெண் என்றது வேறு புத்திக்கு உரைத்தது.

வினோத்தை நேரில் வரக்கூறினான். மனதிற்குள், இங்கிருக்கும் பெண் தனது மன்மத லீலைக்கு அப்படியொன்றும் எதிர்ப்பு தரவில்லையே என்றும் குழம்பினான் சத்ரியன்.

வினோத் நொடியில் சத்ரியன் முன் வந்தவனாக “உங்க ரூம்ல தான் அந்த பொண்ணு இருக்கா பாஸ்” என்று கூற, குளியலறை பக்கம் கைகாட்டி, “இந்த பொண்ணா?” என்று கேட்க, “இவங்க ஏஜெண்ட் மூலமாக வந்த பெங்காலி மாடல் பொண்ணு பாஸ். ஒரு வேளை திவாகரோட பொண்ணு முரண்டு பிடிச்சு நீங்க அப்செட் ஆனா பேக்கப்பிற்காக வரவச்சேன்” என்றதும், “எனி பிராப்ளம்?” என்று குளியலறையிலிருந்து குளித்து முடித்ததும், அணியும் உடையுடன் வந்தாள் பெங்காலி மாடலழகி.

“இந்த பொண்ணு அந்த பொண்ணு இல்லையே?” என்று தெளிவுப்படுத்த சத்ரியன் கேட்க, “நோ பாஸ்.. அந்த பொண்ணு அந்த ரூம்ல இருக்கு. சாப்பிடவும் இல்லை. யாராவது நெருங்கினா அவங்க மேலயே பொருட்களை தூக்கி போடுது‌. யாமினி சாப்பாடு நீட்டவும், மறுத்துட்டு எங்க வீட்டுக்கு போகணும்னு கத்துது பாஸ். யாமினி சொல்லறா அந்த பொண்ணு இரண்டு நாளா சாப்பிடாதவளா தெரியுதுனு” என்று சத்ரியன் நடக்க அவனோடு இணைந்து நடந்து ஓடி கூறியபடி கதவை திறந்தான் வினோத்.

“பாஸ்… ஏதாவது உங்களை காயப்படுத்த போறா” என்று தடுக்க வந்தவனை ‘நான் பார்த்துக்கறேன்’ என்பது போல பேச்சிற்கு தடைப்போடும் விதமாக கையை நீட்டி மூச்சு முட்ட முறைத்தான்.

மெத்தைக்கு கீழே தரையில் அழுதபடி இருந்த ஷ்ரத்தா, கதவு திறக்கவும், வேகமாக நிமிர்ந்து, எழுந்தாள்.

அவளருகே அலங்காரத்திற்கு வைக்கப்பட்டவை கண்ணில் பட, அதை தூக்கி எறிந்தவாறு, “கிட்ட வராதிங்க.. வந்திங்க.. கொன்னுடுவேன். யார் நீங்க? எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திங்க. நான் எங்க வீட்டுக்கு போகணும்” என்று கத்தவும், சத்ரியன் புருவம் சுருக்கி, முன்னே நடந்து வந்தான்.

அலங்கார பொருளை சத்ரியன் மீது வீசவும், அதை தட்டி விட்டு, ஷ்ரத்தா கழுத்தை கைகளால் கவ்வினான் சத்ரியன்.

“நீ தூக்கி போட்ட ஒவ்வொரு பொருளும் பொம்மை டாய்ஸ்னு நினைச்சியா? லட்சத்துல வாங்கி அலங்கரிக்க வச்சது டி. அதிலும் இது என்னோட… என்னோட… அலங்கார பொருட்கள். அலட்சியமா தூக்கி போடற?” என்று தான் பார்த்து பார்த்து அலங்கரிக்க வைத்தவைகளை தூக்கிபோட்டதற்காக கர்ஜிக்க, ஷ்ரத்தாவுக்கு எமலோகத்தில் வந்தது போல மாயை தருவித்தது.

மூச்சு முட்டி கால்கள் இழுக்க, வினோத்தோ, “பாஸ்.. செத்துட போகுது பாஸ் சின்ன பொண்ணு.லாயர் திவாகரோட பொண்ணு பாஸ்” என்று சத்ரியனை உணர்வுக்கு கொண்டுவர, மெத்தையில் அவளை தள்ளி விட்டு கையை உதறினான்.

சத்ரியன் கண்காட்ட, “முதல்ல சாப்பிடு.” என்று வினோத் காண, யாமினி உணவை கொண்டு வந்து வைத்துவிட்டாள்.

சத்ரியன் வரவும் எப்படியும் இந்த முரண்டு பிடிக்கும் பெண் சாப்பிட வைத்திடுவானென அறிந்து உணவோடு வந்தாள் யாமினி.

ஷ்ரத்தா பயத்தில் மூவரையும் பார்வையிட, யாமினியோ சத்ரியன் அருகே வந்து, “புதுசுன்னு நினைக்கறேன் பாஸ். ரொம்ப முரண்டு பிடிக்கறா. பேசவே விடலை.” என்று கூற, “இவ அந்த மாதிரி கேட்டகிரி இல்லை யாமினி.” என்றவன் ஷ்ரத்தாவிடம் “முதல்ல சாப்பிடறியா? உன்னிடம் பேசணும்.” என்று கர்ஜிக்கும் விதமாக கூற, ஷ்ரத்தா விழித்தாள்‌.

‘இவ அந்த மாதிரி பொண்ணு இல்லை’ என்ற வார்த்தையில் ஷ்ரத்தா நிம்மதியடைந்திருக்க வேண்டும்.

“சாப்பிடு” என்றதும் ஷ்ரத்தா சிந்திக்க, “உங்கப்பா ஒரு வார்த்தை சொன்னாலே புரிந்துக்கறவர். நீயேன் பேந்த பேந்த முழிக்கற? இங்க உன்னை எதுவும் பண்ண இழுத்துட்டு வரலை‌. ஜஸ்ட் மிஸ்அண்டஸ்டேன்டிங். சாப்பிட்டேன்னா உன் வீட்டுக்கு திரும்ப அனுப்பிடுவேன்.” என்றான் சத்ரியன்.‌ சிறுபெண் என்றதாலா அல்லது திவாகர் மகள் என்ற காரணத்தாலோ வந்த கரிசனை பேச்சு.

மடமடவென புத்தி யோசிக்காமல் வீட்டுக்கு செல்லும் வேகத்துடன், ஷ்ரத்தா உணவை விழுங்கி முடிக்க, தண்ணீரை குடித்தாள்.

சத்ரியன் பார்வை ஷ்ரத்தாவை மெதுவாக அளவெடுத்தது.

மெடிக்கல் சீட் கேட்டு திவாகர் பேசியதால் கல்லூரியில் முதலடி எடுத்து வைக்கும் வயது என்பதால் பதினெட்டு இருக்கலாம் அல்லது பதினெட்டை தொடவிருக்கும் பெண்ணாக இருக்கலாமென்று யூகித்தான்.‌ பள்ளிச்சீருடை அணிந்தால் இன்னமும் பிளஸ் டூ படிக்கும் பாவையாக தான் கண்ணுக்கு தெரிவாள்.

பிஸ்தா வண்ணத்தில் சுடிதார், அழுதழுது சிவந்து வீங்கிய முகம், கழுத்தில் சின்னதாய் மின்னிய தங்க செயின், காதொட்டிய கம்மல் அதில் சிறிதாக ஒளிப்பெற்ற தொங்கட்டான். அவளது செயினிலும் அதே டிசைன் ஒளிப்பெற்ற  பெண்டன்ட் இடம்பெற்றது. அத்துடன் அளவான அங்கங்கள் என்று பார்வையிட, யாமினிக்கு சத்ரியன் பார்வை ஷ்ரத்தாவின் மார்பு பகுதிக்கு மத்தியில் செல்வதாக தோன்ற, “பாஸ்… இவளை வேண்டுமின்னா இங்க வழிக்கு கொண்டு வரணுமா?” என்று யாமினியின் குரல் கிசுகிசுக்க நடப்புக்கு வந்தான் சத்ரியன்.

“நோ” என்று வெடுக்கென உரைத்தான்.

அளவுக்கு அதிகமாகவே அவள் கண் காது மூக்கு இதழென்று தன் விழி ஊர்வலம் நடத்தி, அவள் நெஞ்சுக்கூடு வரை சென்றதில், யாமினி இப்படி கேட்டதும், சத்ரியன் சுதாரித்தான். அதற்குள் ஷ்ரத்தா மூளை விழித்திருக்க வேண்டும். இவன் யார் புதியவன்? இவன் பேச்சுக்கு ஏன் அடிப்பணிக்கின்றோம்? இவர்கள் ஏன் பாஸ் என்கின்றனர். இவன் பெயர் ஏதோ உச்சரித்தார்களே? சத்ரியன் என்றதும் தந்தை கடைசியாக வாதாடியவனின் பெயர் என்று வெளிச்சம் வந்தது.

“நீங்க தான் சத்ரியன்னா?” என்று மெதுவாக கேட்டாள்.

சத்ரியன் ஆமென்பது போல நிற்க, “எங்கப்பா கடைசியா பேசியது உங்களோட தான். எங்கப்பா… உங்க கேஸுக்காக வாதாடி தான் இறந்துட்டதா கேள்விப்பட்டேன்.

நீங்க தான் வீட்டு பத்திரம் அனுப்பியதா கேள்விப்பட்டேன். நீ..நீங்க தான் மெடிக்கல் படிக்க வசதி வாய்ப்பு உருவாக்கி தந்தவர்?” என்று கேட்டு அவர் தானா என்று தெளிவுப்படுத்த வரிசையாக கேட்டுக் கொண்டாள்.

சத்ரியனை இதற்கு முன் கண்டதில்லை. தந்தை இறப்புக்கும் சத்ரியன் பெயரில் யாரும் வரவில்லையே. ஆனால் அவன் பெயர் தந்தை இறந்த அன்று வந்தவர்கள் எல்லாம் தாரக மந்திரம் போல உச்சரித்தனரே!

“இப்ப என்ன அதுக்கு?” என்றான். அலட்சியமாக.

“எனக்கு எங்கப்பா திரும்ப வரணும். அவரை நீங்களே கூப்பிட்டுட்டு வாங்க. எனக்கு இந்த மெடிக்கல் காலேஜ் சீட் எதுவும் வேண்டாம், அந்த வீட்டு பத்திரம் வேண்டாம்‌, பேங்க்ல இருக்கற மொத்த பணமும் கூட நீங்களே எடுத்துக்கோங்க. எனக்கு எங்கப்பா வேண்டும். அவரை என் முன்ன அழைச்சிட்டு வாங்க” என்று அவனை உலுக்கினாள்.‌

பிஞ்சு கைகள் தன் மேற்சட்டையை பிடித்து உலுக்குகின்றது. ஏற்கனவே உடல் தேவைக்கு வந்த பெண்ணோடு புணர்ந்ததால், இவளை காண வரும் நேரம் அவசரமாய் கால்சட்டையும் மேற்சட்டையும், அணிந்திருந்த சட்டை பட்டன் திறந்திருந்ததில் இவள் உலுக்க அவன் சூரிய டாலர் அவளது கையில் பட்டது.

அவள் மொட்டுக் கைகள் அவன் பாறை உடம்பில் ஏதோ தீயை வார்ந்தது.

சத்ரியனுக்கு தன்னை இந்தளவு ஒரு சிறுப்பெண் உலுக்குவதில் கோபம் உருவாக, அவளை தள்ளிவிட்டான்.‌

அவள் ஒரு மரமேஜையில் மோதி விழவும், வினோத் அவசரமாக திரும்ப, ஷ்ரத்தா பின்னந்தலையில் இடிப்பட்டு விழுந்து சரிந்தாள்.

”என்ன பாஸ் இப்படி பண்ணிட்டிங்க.” என்று வினோத் பதற, யாமினியோ ஷ்ரத்தா அருகே சென்று அவளை எழுப்ப, “பாஸ்….. அவ பின்னந்தலையில பிளட் வருது.” என்று அதிர்ந்தாள் யாமினி.

யாமினி சத்ரியனின் வீட்டை நிர்வாகிக்கும் பெண். சில நேரம் பி.ஏ. ஒரு முறை புணர்ந்ததுண்டு. அன்று அவன் பார்வை அறிந்து கட்டளையிடாமல் ஏதேதோ மஸாஜ் செய்து அவன் உடலின் சோர்வை கலந்து, வீட்டையும் அலங்கரித்து மணக்கும் விதமாக வைத்திட, அதையே வேலையாக கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டான்.

சத்ரியனோ “அதுக்கென்ன.? வினோத் இந்த விஷயத்தை நீயே ஹாண்டில் பண்ணு. நான்கண் முழிச்சதும் அவயிங்க இருக்க கூடாது.” என்று கறாராக கத்திவிட்டு, மதுவை நாட ஓடினான்.

வினோத் யாமினி இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையிட்டு, ஷ்ரத்தாவிற்கு சிகிச்சை பார்க்க மருத்துவரை அழைத்தார்கள்.

மருத்துவரும் என்னவோ ஏதோவென சத்ரியன் வீட்டிற்கு தான் பதறி ஓடிவந்தார்.

மருத்துவர் வந்து, ஷ்ரத்தாவை ஆராய்ந்து பார்வையிட்டார்.

விழுந்த வேகத்தில் பட்ட அடியென்பதால் லேசாக ரத்தம் சொட்டியதை உரைத்துவிட்டு, கூடுதலாக மாத்திரையை எழுதி தந்தார்.

“இதுல்லாம் சாப்பிட்டு போடணும். ஆல்ரெடி இந்த பொண்ணு ரொம்ப வீக்கா தெரியுது. அதனால் ட்ரிப்ஸ் ஏத்திடலாம்.” என்றார்.‌ நொடியில் வீட்டையே மருத்துவமனை போல வந்த நர்ஸ் செய்து முடித்து ஷ்ரத்தாவுக்கு சிகிக்சை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்‌.

யாமினியோ, ஷ்ரத்தாவிற்கு காவல் காக்கும் பெண்ணாக கூடவே இருந்தாள்.

வினோத்தோ “யாமினி நீ பார்த்துக்கோ. அந்த பொண்ணு சரியானதும் கிளம்ப சொல்லிடலாம். நான் பாஸை பார்க்க போறேன்.” என்று வினோத் சத்ரியனை நாடி வர, ஷ்ரத்தா சிங்கத்தின் குகையில் இருப்பதை அறியாமல் மருந்தின் உபயத்தால் நன்றாக உறங்கி வழிந்தாள்.

மதுவை தேடிய சத்ரியன், தெளிவற்ற பார்வையுடன் இமை மூடி தத்தளிக்க, வினோத் அறைக்கு வந்ததும், சத்ரியனோ “யூ இடியட்.. நான் மார்னிங் பார்க்கும் போது அந்த பொண்ணு இங்கிருந்து கிளம்பியிருக்கணும். இவளை போய் கேட்டேன்னு எப்படி தப்பா அன்டர்ஸ்டேண்ட் பண்ணின. என் ரேஞ்சு என்ன? இந்த பொண்ணு ரேஞ்சு எங்க? கெட்லாஸ்ட்” என்று கர்ஜித்து வினோத்தை வெளியே தள்ளி அனுப்பினான்.‌

வினோத் பயந்து போனவனாக அப்படியே பம்மியபடி வந்துவிட்டான். அதானே… ப்யூட்டிஸா இருக்காறப்ப சாதாரண பொண்ணை கேட்டுட்டாரேனு அப்பவே நினைச்சேன்.’ என்று தனது தவறான யூகத்தால் தலையிலடித்தான்.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

Join the My Facebook Group Link👇🏻

https://www.facebook.com/share/g/1E7BPBX5QX/

Follow the Praveena Thangaraj Novels channel on WhatsApp 👇🏻 https://whatsapp.com/channel/0029VaLzctl8qIzyMR16cq0m

 

 

 

4 thoughts on “The leader-4”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 endha ponnu evan kita vandhu eppdi maatikiche🙄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!