அத்தியாயம்-45 The leader-45
கடல் பயணத்திலிருந்து திரும்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.
வீடு மீண்டும் பழைய பரபரப்பை அடைந்திருந்தது.
சத்ரியன் தனது அலுவலக அறையில் சில கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஷ்ரத்தா அவளது அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாலும், சத்ரியன் வாங்கி தந்த பட்டு புடவையை ஒரு கையால் வருடியபடி இருந்தாள். இங்கு வந்த அடுத்த நொடியே அவள் முன் பல பட்டு புடவைகள் ரகவாரியாக கடைப் பரப்பப்பட்டது. அதில் எல்லாவற்றையும் எடுத்துக்கோ என்றான்.
‘ஏதாவது ஒன்றை எடுத்து தா’ என்று ஷ்ரத்தா குழந்தை போல அடம் பிடிக்க, சத்ரியன் கடை பணிப்பெண்கள் கையில் வைத்து பட்டுபுடவை பிடித்து வரிசையாக நிற்க, சத்ரியன் ரெட் ஓயின் கலர் பட்டுபுடவையை எடுத்து ஷ்ரத்தா முன் நீட்டினான். அதை தான் அன்றிரவு கட்டி கொண்டு நின்றாள்.
‘திகட்டாத அழகுடி உனக்கு போதை தர்ற ஓயின் கலர் சேரி.’ என்று கூற, அடுத்தடுத்த நாளில் அவள் மடியில் தடவி ரசித்தாள். சத்ரியன் வாங்கி தந்தது என்றதை விட வேறு காரணமில்லை. அறையில் சில பட்டுபுடவை இடம் பிடித்து அலமாரியை நிறைத்தாலும் அவனாக தேர்ந்தெடுத்தமைக்கு தனிச்சிறப்பு உண்டு என்று பூரித்தாள்.
அப்போது… வாசல் பக்கம் திடீரென சத்தம் கேட்டது. “நான் சத்ரியன் சாரை பார்க்கணும். என்னை உள்ளே விடுங்க.” ஒரு பெண்ணின் பதற்றமான குரல். ஷ்ரத்தா எட்டியெட்டி பார்த்தாள்.
கேட்டில் இருந்த பாதுகாவலர்கள் ஒரு பெண்மணியை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். அந்த முகத்தை பார்த்ததும் ஷ்ரத்தா யோசிக்காமல் எழுந்து வந்தாள்.
யோகேஷும் வினோத்தின் வேலையையும் சேர்த்து பார்ப்பதால் அங்கே அந்த நேரம் இல்லை. அதனால் ஷ்ரத்தா அவளாக வாசல் வரை அப்பெண்மணியின் அழுகையை தாழாது மனம் கேட்காமல் வந்து சேர்ந்தாள்.
“யார்.. யாரு இவங்க? ஏன் கத்தறாங்க?” என்று பாடிகாட்ஸ் ஒருவரிடம் கேட்க, “மேம்… இவங்க ஒரு வாரமா இங்க பாஸை பார்க்கணும் வந்தாங்க. பாஸ் வெளியே போயிருப்பதா சொல்லியும் தினமும் வந்து கேட்டு குடைச்சல் தந்தாங்க. சீனியர் கார்ட்ஸ் யோகேஷ் தான்… பாஸுக்கு தெரிந்த பெயர். எதுக்கும் பாஸ் வந்ததும் சொல்லிக்கறேன். இப்ப அவரோட பெர்சனல் டைமிங்கை ஸ்பாயில் பண்ண வேண்டாம்னு அனுப்பி விட்டார். இன்னிக்கும் வந்துட்டாங்க. ஏதோ அவங்க குழந்தையை காணோம் கண்டுப்பிடிச்சு தர உதவி கேட்டு வந்திருக்காங்க” என்றான்.
“தன் சுடிதார் துப்பட்டாவை தோளில் பிடித்து, “உங்க பெயர் என்ன?” என்று கேட்க, “ஸ்டெல்லா…” என்றார். ஷ்ரத்தாவுக்கு உடனே அடையாளம் தெரிந்தது. தந்தை திவாகரின் இறப்பிற்கு முன் நடந்த விஷயங்களை கூறிய நர்ஸ்.
“நீங்க தான் எங்கப்பா இறந்தப்ப கடைசியா கூடயிருந்தவங்க தானே?” என்று சந்தேகம் கேட்க, “ஆ.. ஆமாம்மா. நான் தான். நானே தான்” என்று கண்ணீருடன் உரைத்தார்.
“என்னாச்சு ஏன் அழறிங்க?” என்று கேட்க, “என் பொண்ணு… ஐரின்.. எட்டு வயசு ஆகுதும்மா. அவளை காணோம். அவளை சத்ரியன் சாரை கண்டுபிடிச்சு தரச்செல்லும்மா” என்று கெஞ்சினார்.
“போ…போலீஸுக்கு போகாம இங்க வந்திருக்கிங்க?” என்று ஷ்ரத்தா நிற்க, அசுரத்தனமாக சத்ரியன் வந்து சேர்ந்தான்.
ஷ்ரத்தாவின் கை புஜத்தை பிடித்து தன் பக்கம் இழுத்து, “யார் கூட பேசிட்டு இருக்க. கார்ட்ஸ்… உங்களுக்கு அறிவில்லை. கதவை திறந்து யாரிடம் பேசறிங்க. ஏய்.. ஸ்டேஞ்சர் கூட பேசாதன்னு எத்தனை முறைடி சொல்லறது” என்று பாடிகார்ட்ஸுக்கும் ஷ்ரத்தாவுக்கும் திட்டு விழுந்தது.
”யார் நீ” என்று சத்ரியன் ஸ்டெல்லாவை பார்த்து கேட்டான்.
“சார்… என்னை தெரியலையா? நான் நர்ஸ் ஸ்டெல்லா சார்.. திவாகர் சார் இறப்பை பத்தின உண்மையை உங்களிடம் சொன்னேனனே.” என்று அறிமுகப்படுத்தினாள்.
சத்ரியனோ நிதானமாக அப்பெண்மணியை அளவிட்டு கண்டான். அன்று நர்ஸ் உடையில் மிகவும் உற்சாகமாக திகழ்ந்தவராயிற்றே. இன்று ஏன் இப்படி ஏதோ பரதேசி போல ஆள் அடையாளமின்றி நிற்கின்றார் என்று குழம்பினான்.
ஆனாலும் இவ்விடத்தில் நின்று பேசுவதற்கு மனமின்றி, ஷ்ரத்தா மீது அக்கறை கொண்டவனாக, அவர்களையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்து பேச அழைத்தான்.
“முதல்ல உள்ள வாங்க. இப்படி வீட்டுக்கும் வாசலுக்கும் நடுவழில நின்று பேச வேண்டாம்.” என்றான்.
சத்ரியன் ஷ்ரத்தாவை பாதுகாப்பாக அழைத்துவர, ஸ்டெல்லாவையும் உடனடியாக பாடிகார்ட்ஸ் ஆராய்ந்து உள்ளே அழைத்து வந்தார்கள்.
“சாரி… உதவி செய்த உங்களையே செக் பண்ணுவதா தப்பா எடுத்துக்காதிங்க. இங்க கொஞ்சம் செக்கியூரிட்டி செக்கிங் இருக்கும்” என்று ஷ்ரத்தா தான் மன்னிப்பு வேண்டினாள்.
“பரவாயில்லைம்மா.” என்றாள்.
அதற்குள் பாடிகார்ட்ஸ் மூலமாக ஸ்டெல்லா இதற்கு முன்னும் இங்க வந்து வந்து சென்றது அறிந்துக் கொண்டான் சத்ரியன். யோகேஷ் தான் சத்ரியன் பாஸ் தனிமை தேடி போயிருக்கார். வந்தப்பிறகு சொல்லிப்போமென தவிர்த்ததையும் அறிந்துக் கொண்டான்.
“என்ன பார்க்க இரண்டு மூன்று முறை வந்ததா கார்ட்ஸ் சொன்னாங்க. என்ன ரீசன்” என்று கேட்டு நின்றான்.
அதற்குள் ஷ்ரத்தா ஸ்டெல்லாவுக்கு குடிக்க பழச்சாறை கொண்டு வர கூறினாள்.
“என் பொண்ணு ஐரினை காணோம் சார். போலீஸ் ஸ்டேஷன்ல தான் முதல்ல எப்ஐஆர் தந்தேன். அவங்க முதல்ல தீவிரமா தான் விசாரிச்சாங்க. ஆனா அதுக்குப்பிறகு மந்தமா மாறிட்டாங்க. இப்ப… காணாம போனதை பெரிசா எடுத்துக்காம அவங்க அவங்க வேற கேஸை பார்க்கறாங்க.” என்று விவரித்தார்.
“லுக்… சைல்ட் மிஸ்ஸிங் கேஸ் என்றால் கொஞ்சம் டைம் ஆகலாம். அதுக்குள்ள கண்டுபிடிக்க இக்கட்டை கூட்டாதிங்க. மேபீ போலீஸுக்கு தினமும் நிறைய கேஸ் இன்வால் ஆவாங்க. அவங்களுக்கு ஒரு மிஸ்ஸிங் கேஸ் மட்டும் வராது.” என்று சத்ரியன் எடுத்துரைத்தான்.
சத்ரியனுக்கு இந்த ஏழை மிடில்கிளாஸ் மக்களின் கண்ணீர் எல்லாம் பழக்கமற்றது. அவன் பார்த்தவரை ஏதாவது தெரிந்தே குற்றம் செய்து அதை மறைக்க நீலிக்கண்ணீர் வடிக்கும் கூட்டத்தை தான் கண்டவன்.
சுருக்கமாக சொல்லப்போனால் மல்கோத்ரா ஆதிகேசவ் போன்ற நபர்கள் தங்கள் சொந்த தேவைக்காக ஏதாவது தவறு செய்துவிட்டு கண்டறிந்தப்பின், வடிக்கும் கண்ணீரை தான் பார்த்து வந்தான்.
இங்கே ஸ்டெல்லா கண்ணீரில் ஏதோ மாயம் நிகழ்த்தியது. குழந்தை தொலைந்து போனப்பின் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு அலையும் தாயின் கதறலை தான் கண்டான்.
“இல்லை சார்.. இல்லை… அங்கிருந்த போலீஸ் ஒருத்தர் தெளிவா சொன்னார். கடத்தியது போலீஸுக்கு மலைப்பை தர்ற கேங்காம். அதனால இங்கயிருக்கற எந்த போலீஸும் இனி என் பொண்ணை கண்டுப்பிடிச்சி தரமாட்டாங்கனு சொல்லிட்டார். யாராவது பெரிய ஆட்களை கூட்டிட்டு வந்து பார்க்க சொன்னாங்க. நான் ஒரு சாதாரண நர்ஸ் சார். எனக்கு பெருசா யாரை தெரியும்னு தவிச்சேன். அப்ப தான் உங்க நினைப்பு வந்துச்சு. உங்களிடம் உதவிக்கேட்டா… நீங்க ஒரு போன் பண்ணி சொன்னா.. என் பொண்ணை சட்டுனு கண்டுப்பிடிச்சு நிறுத்திடுவாங்க சார்” என்று கெஞ்சினார்.
ஸ்டெல்லாவின் முகம் வெளிறியிருந்தது. கண்கள் வீங்கியிருந்தன. சில நாட்களாக சரியாக தூங்காதவள் போல தெரிந்தாள்.
“இங்க பாருங்க.. இதுக்கெல்லாம் நான் பேசணுமா?” என்று சின்ன விஷயமாக கூறினான்.
“உங்களுக்கு சின்ன விஷயமா இருக்கலாம். எனக்கு பெரிய விஷயம் சார். எனக்கு ஹஸ்பெண்ட் இல்லை. ஐரின் இரண்டு மாசமா என் வயிற்றுல இருந்த பொழுதே அவர் இறந்துட்டார். எனக்கு எல்லாமே ஐரின் தான். உதவி செய்யுங்க சார்” என்று கைகூப்பினாள்.
இரண்டு மாதமாக வயிற்றில் இருந்த பொழுதே’ என்ற சொல் ஷ்ரத்தாவை தாக்கியது.
அவள் சத்ரியனை தான் பார்த்தாள்.
“நான் இருக்குற உலகம் வேற. இதுல நான் தலையிட முடியாது.” என்று மறுக்க பார்த்தான்.
“சார்… ப்ளீஸ். எனக்கு என் பொண்ணு வேணும்.” ஷ்ரத்தாவால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“சத்ரியா… ஒரு குழந்தை தானே. நீ காப்பாத்தலாமே.” என்றதும் சத்ரியன் திரும்பிப் பார்த்தான்.
“ஷ்ரத்தா. இது உனக்கு புரியாது.” என்று அடக்க பார்த்தான்.
“புரியும்… ஒரு பெண்ணா அவங்க கதறுற வலியை என்னால புரிஞ்சுக்க முடியும்” என்று அவளும் பிடிவாதமாக நின்றாள்.
“ஏ…” என்று ஏதோ செல்ல வந்து அமைதியானான்.
“நீ ஒரு சாம்ராஜ்ஜியத்துல கட்டளையிடற இடத்துல இருக்க. ஒரு குழந்தையை கண்டுபிடிக்க கூட முடியாதா?” என்றதும் சத்ரியனின் முகம் இறுகியது.
“முடியும்.” என்றான். “அப்ப? அவங்களுக்கு உதவு” என்றாள்.
“அதுக்கு நான் தயாரா இல்ல.”
இருவரின் பார்வையும் நேராக மோதியது.
ஸ்டெல்லா அழுதபடி நின்றாள். ஷ்ரத்தா ஸ்டெல்லாவின் கையை பிடித்தாள். “நீங்க போங்க. நான் பார்த்துக்கறேன். அவரிடம் நான் பேசறேன். நீங்க குழந்தையோட டீட்டெயிலை தாங்க” என்றதும்,
ஸ்டெல்லா நம்பிக்கையுடன் அவளை பார்த்தாள்.
“நிஜமாவா?” என்று கண்கள் மிளிர கேட்டாள். “ம்ம்ம். உங்க பொண்ணு கிடைக்க நான் முயற்சி பண்றேன்.” என்றதும் மடமடவென குழந்தை புகைப்படம் முதல் அவள் காணாமல் போனப் பொழுது அணிந்திருந்த உடை முதல் அனைத்து விவரத்தையும் தந்துவிட்டு, அதற்குப் பிறகுதான் ஸ்டெல்லா கிளம்பினாள்.
கதவு மூடிய அடுத்த நொடி… சத்ரியன் கோபமாக திரும்பினான். “என்னடி பண்ணற? என் வேலையில நீ நுழையாத. முதல்ல யாராவது வாசலில் கத்தி அழுது பிரச்சனை பண்ணறாங்கன்னு சடனா அங்க போய் என்னனு கேட்காத. என்னை கொல்ல வர்ற ஆட்கள் கூட அங்க இருக்கலாம்.” என்றதும் ஷ்ரத்தா திடுக்கிட்டாள்.
“நான் என்ன தப்பு பண்ணேன்? அவங்க அழுத அழுகையில உண்மை இருந்தது.” என்றாள்.
“உண்மையோ பொய்யோ.. நான் வேண்டாம்னு சொன்ன விஷயத்துல மூக்கை நுழைச்சு வாக்குறுதி கொடுக்காத.” என்றான்.
“ஒரு குழந்தை காணாம போயிருக்கு சத்ரியன்” என்றாள்.
“இந்த உலகத்துல இந்தியாவுல மட்டும் ஒரு மணிநேரத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாம போறாங்க ஷ்ரத்தா… நாம தூங்குற நேரத்துல கூட எங்கயோ ஒரு அம்மா தன் பிள்ளையை தேடி கதறிட்டு இருப்பா. கண்டுப்பிடிக்கறதுலாம் போலீஸ் வேலை.” என்றான்
“அவங்களுக்கு முடியல என்று தானே உன் உதவி கேட்டாங்க. போலீஸ் ஃபைல்ல இது ஒரு கேஸ். நியூஸ்ல இது ஒரு நிமிஷ செய்தி. ஆனா அந்த அம்மாவுக்கு உலகமே. அந்த குழந்தை தானே” என்றாள்.
“அதுக்கு நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கற?” என்று சத்ரியனின் குரல் உயர்ந்தது.
“நீ இன்னும் புரிஞ்சிக்கல. நம்ம குழந்தை இரண்டு மாச கருவா இருந்து கலைந்ததுக்கே உன் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. அப்படியிருக்க.. பெத்து வளர்த்து எட்டு வருஷமா வளர்த்த குழந்தை இல்லைன்னா… அய்யோ… நினைச்சு பார்க்கவே பதறுது சத்ரியன். உனக்குன்னா வலி அவங்களுக்கு இருக்காதா?” என்று என்னவோ இவளே பெற்றெடுத்தவளாக பேசினாள்.
“இந்த உலகத்துல எல்லாரையும் காப்பாத்த முடியாது ஷ்ரத்தா. சில கதவுகளை திறந்தா… அதுக்குள்ள இருந்து என்ன வெளியில் வரும்னு தெரியாது.” என்று பேச, ஷ்ரத்தா திடுக்கிட்டு நின்றாள்.
“அந்த ஸ்டெல்லா… எங்கப்பா இறப்பை அசட்டையா எண்ணாம, உன்னை பார்த்ததும் வந்து சொன்னாங்க. உனக்கு எங்கப்பாவை கொன்றது யார்னு குழம்பி, உன் பார்ட்னர்ஸை தொழில் ஆட்களை சந்தேகப்பட்டிருந்த. இந்த லேடி தானே அந்த உண்மையை சொல்லி உனக்கு தேடுதல் இல்லாம செய்தாங்க. அப்படி உதவினவங்களுக்கு நீ சின்ன உதவி செய்ய மாட்டியா?” என்று கேட்டாள்.
சத்ரியனோ பெருமூச்சை வெளியிட்டு நிற்க, “ஏன் சத்ரியா.. நீ… குழந்தை கடத்தலையும் செய்வியா?” என்று அதிர்ந்தபடி கேட்டாள்.
ஏனெனில் கிங்பின் கூட்டத்தில் பாவ புண்ணியம் பார்க்காமல் தானே சத்ரியன் செயல் உள்ளது. அதனால் நடுக்கத்துடன் கேட்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
சத்ரியன் இதை செய்வானா? அல்லது என்ன விவகாரமாக இருக்கும்?
எனி கெஸ்?
புதுத்தளத்தில் கதை வாசித்தா விமர்சனம் செய்யுங்க. எப்பவும் உங்க விமர்சனம் வரும்னு எதிர்பார்த்து ஏமாறுகின்றேன். எதிர்பாராக்காம கதை போடலாம்னு இருந்தாலும், லாகின் பண்ணி படிக்கட்டும்னு தோணுது. ஆனா அதுக்கு மட்டும் மாறிமாறி லாகின் இல்லாம படிக்க முடியாதானு கேட்கறிங்க. உங்களுக்காக லாகின் இல்லாம படிக்க நேத்து முட்டி மோதி, மூன்று நாள் டேட்டாவை இழந்து பதிவுகள் காணாம
போயிடுச்சு. ஆனாலும் திட்டு வாங்கிட்டு லாகின் இல்லாம படிங்கனு வச்சியிருக்கேன். அதென்னவோ சைலண்ட் ரீடராவே இருந்தா எப்படி?

nice!!!
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 45)
அட ராமா..! சைல்ட் கிட்நாப்பிங் வேறயா..? யார் பண்ணியிருப்பாங்க ? ஒருவேளை, சத்ரியனோட கேங்கா, இல்லை வேற யாரோவா.. ? அது தெரிஞ்சதாலத்தான் சத்ரியன் தலையிடாமல் கமுக்கமா ஒதுங்கிக்கப் பார்க்குறானோ ?
ஆனா ஏன் ? ஸ்டெல்லாவோட மகளை கடத்தி யாருக்கு என்ன லாபம் ?
😴😴😴
CRVS (or) CRVS2797
Superb sis intresting
Omg. Chatriyan will never do this? If he did this earlier he wont felt foe his child. Sema twist. Very intresting sis.
Interesting super super super super super super super super super super super
It’s going very interesting…. Waiting for nxt epi 😍
கண்டிப்பா சத்ரியன் குழந்தைகளை கடத்தல் வேலை பண்ணி இருக்க மாட்டான். .. ஸ்டெல்லா குழந்தை கண்டு பிடிக்க போய் சத்ரியனுக்கு எதாவது ஆக போகுது
Super sis nice epi 👍👌 kandipa chathriyan panniyiruka maatan but edhu periya network ah erukum pola🙄
chathriyan itha kandipa senji iruka matan thonuthu aana ena twist iruku ithula