Skip to content
64 / 100 SEO Score

The leader-5

அத்தியாயம்-5

 

சத்ரியன் சோம்பல் முறித்து கண்ணை திறந்து ஜன்னலை திறந்து பார்வையிட, தன் உருவ புகைப்படத்தை கண் இமைக்காமல் ஷ்ரத்தா ஹாலில் பார்வையிடுவதை கண்டான்.

 

எங்கிருந்து தான் கோபம் வந்ததோ காலையிலேயே ஆவேசமாக வந்தவன், “ஏய்… நீ இன்னமும் கிளம்பலையா? வினோத்.. வினோத்.. எங்க போனான் இந்த இடியட்” என்று கத்தவும், ஷ்ரத்தா திடுக்கிட்டு பின்நகர, அங்கேயிருந்த காஸ்ட்லி ஆன்ட்டி பீஸ் கொண்ட சிலையை இடித்தாள். அது தள்ளாடி நகரவும், பயத்தில் மறுபுறம் வந்து சேர, அங்கே விலையுயர்ந்த பெல்ஜியன் கண்ணாடியில் செய்த அலங்காரத்தையும் அவளறியாது தட்டிவிட்டு நின்றாள்.

 

அங்கும் இங்கும் பூனை போல நடந்தவளை, பல்லைக் கடித்து பிடித்து நிறுத்தினான்.‌

 

ஷ்ரத்தா கையை பற்றியதும், “ஆ…அப்பா. விடுங்க. வலிக்குது.” என்று நழுவ முற்பட, சத்ரியன் பிடியில் தப்பிக்க முடியுமா?

 

“நான் நைட் கூட படுக்க கூப்பிட்டதா வினோத் தப்பா நினைச்சிட்டு உன்னை அழைச்சிட்டு வந்துட்டான். நீ இங்கிருந்து கிளம்பறது உனக்கு ஸேப்டி. அதை மீறி இங்க என்ன புடுங்கற?” என்று தன்னை கொல்ல ஆயிரம் பேர் சுற்றி திரிய, இவளிங்கே வந்து நின்றதில் கோபமாய் கூறினான்‌.

ஷ்ரத்தாவோ சிறுப்பிள்ளை என்பதை நிரூபிக்கும் விதமாக “ஓ… முடியாது. உங்களை கோர்ட்ல காப்பாற்ற போய் தான், என் அப்பாவோட இறப்பு நிகழ்ந்திருக்கு. இதுக்கு முன்ன எந்த கேஸ்லயும் எங்கப்பாவை கொல்லற அளவுக்கு யாரும் வந்ததில்லை‌. இப்ப… எங்கப்பா இறந்ததுக்கு.. காரணம் நீங்க. இதுல என்னை வேற அசிங்கமா இங்க அழைச்சிட்டு வர்ற அளவுக்கு நடத்தியிருக்கிங்க.

உங்க நினைப்பு தப்பா இருந்திருக்கு‌ அதான் உங்க கைத்தடி வினோத் என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கார்.

எங்கப்பாவை யார் கொன்றா? சொல்லு… இல்லை அன்னிக்கு அப்பாவை பார்க்க வந்தவங்களில் நிறைய பேர் நீ தான் கொன்றதா சொன்னாங்க…. நீயே எங்கப்பாவை கொன்றியா.. சொல்லுடா சொல்லு?” என்று இளமை பருவத்தில் சூடான ரத்தத்தின் அம்புகளாக கை நீட்டி கேட்க, சத்ரியன் ஷ்ரத்தா ஆள்காட்டி விரலை கவனித்தான்.

 

வெண்டக்காய் விரல்கள், அவனை மிரட்டி கேள்விக்கேட்க, காலையிலேயே உள்மத்தம் பித்தமேற்றியது.

 

ஷ்ரத்தாவை அப்படியே அள்ளிக்கொண்டு மெத்தையில் தள்ளி, அவளது இந்த மென்மையான விரல்கள் அவன்  புஜத்தை அழுத்துவது போன்ற கனவிற்கு செல்ல, “சொல்லுடா.. எங்கப்பாவை நீ தானே கொன்ற? எங்கப்பாவை திரும்ப கொண்டு வா” என்று அவனை நெஞ்சில் அடித்து கேள்வி எழுப்பினாள்.

 

சட்டையில் மேல் பட்டனில் போடாமல் நின்றவனின் மேனியில் ஷ்ரத்தா கைகள் படவும், இமை மூடியவனின் கண்ணில் போதை ஏறியதை ஷ்ரத்தா நிச்சயம் கவனிக்க தவறியிருக்கலாம். அவளை இழுத்து குஷன் சோபாவில் விழ்த்தி, அவளது பஞ்சு மேனியில் ஆட்சி செய்ய அவன் மனம் இம்சித்தது.

அவளது தீண்டலை ரசித்தவனாக, ஷ்ரத்தாவை ஏறிட்டான்.

 

கண்ணில் சின்ன பயமின்றி அவனை நெஞ்சில் அடித்தவள், கோபத்தை இன்னமும் கைவிடவில்லை. அடியையும் தான்‌.

 

சத்ரியன் கல்லாய்(?) நிற்பதாக நினைத்தவள் ஓய்ந்துவிட்டு, அழ ஆரம்பித்தாள்.

 

இத்தனை நேரம் இருந்த போதை தெளிய, “ஏய்… அழறியா? என்னை அடிச்சிட்டு நீ அழற. பேஷ் பேஷ்” என்றவன் அவளது கை மணிக்கட்டை பிடிக்க, அவளது கைகளிலிருந்து பிடி நழுவாமல் அவளை முழுவதும் தீண்டிவிடு என்று சத்ரியன் நெஞ்சமது பேரிசைச்சலிட்டது.

 

மனதை அடக்கியவன், “தெரியாம தூக்கிட்டு வந்துட்டாச்சு. வீட்டுக்கு கிளம்பு. இங்கிருந்த.. எந்த எலும்பும் சதையும் எதுவும் மிச்சமிருக்காது” என்று மறைமுகமாக மிரட்டினான்.

 

ஷ்ரத்தா மிரட்சியாக பார்க்க, அதே நேரம் வினோத் இருவரை பார்த்து ஓடிவந்தான்.

 

ஷ்ரத்தா துப்பட்டா அங்கொன்றும் தலையில் உள்ள க்ளிப் இங்கொன்றுமாக இருந்தது. இதில் தலைவிரிக்கோலம் வேறு என்று இவளிருக்க, அங்கே சத்ரியன் டிராக்ஷூட் அணிந்து சட்டையில் பட்டன் மாட்டாமல் வெற்று மார்பில் படுக்கவர்ச்சியாக மன்மதபானம் அம்பால், வெறி ஏறிய கண்ணுடன் இருப்பதை கண்டான்.‌

 

“சாரி பாஸ். நீங்க மார்னிங் இந்த பொண்ணு இங்க இருக்க கூடாதுன்னு சொன்னிங்க. நான் தான் எழுந்ததும், அனுப்ப முயன்றேன். இந்த பொண்ணு கண் திறக்கவேயில்லை. மெடிசனால மொத்தமா தூங்கிடுச்சு.

காலையில எழுந்ததை கவனிக்கலை. ஏம்மா… உனக்கு உயிரோட வீட்டுக்கு போகணும்னு நினைப்பில்லையா?” என்று திட்டி அவளது கையை பிடித்து வெளியேற்ற முனைய, ஷ்ரத்தாவோ வினோத் தீண்டலை தொடவிடாது “எங்கப்பா இறப்புக்கு யார் காரணம்னு பதில் சொல்லாம உங்களை சும்மா விடமாட்டேன்.” என்று ஆங்காரமாய் புறப்பட்டாள்.

 

வினோத்தோ பின்னால் செல்ல, சத்ரியனோ, ‘கூடுதலா இங்கயே இருந்தா உன்னையே நான் சும்மா விடமாட்டேன்’ என்று சத்ரியன் மூளை சொல்ல அவன் மனசாட்சி ஆமோதிப்பாய் சிரித்தது.

 

உண்மை தான்…. இங்கே இருந்தால் சேதாரம் அவளுக்கு தான்.

 

சத்ரியன் இருப்பிடமிருந்து ஹாலுக்கு வந்தப்பின் வினோத் எட்டியெட்டி பார்த்து, “ஏம்மா… போன்னு சொன்னா போகமாட்ட? தெரியத்தனமா உன்னை அடைய கேட்டார்னு தப்பா நினைச்சி இழுத்துட்டு வந்துட சொன்னது நான் தான். அவரே உன்னை அதுக்கு கேட்கலைனு தெரியவும் அனுப்ப முயன்றா, இன்னமும் இங்கயே இருக்கியே? தப்பி தவறி ஒரு நேரம் இல்லைன்னா ஒரு நேரம் கைப்பிடிச்சி கட்டிலுக்கு தூக்கிட்டு அழைச்சிட்டு போனா என்ன செய்வ? உங்கப்பா சத்ரியன் பாஸ்காக வாதாடினார். ஓகே தான். ஆனா அவர் இறந்ததுக்கு எப்படி சத்ரியன் பாஸ் பொறுப்பாக முடியும்?

 

இங்க வந்து உங்கப்பா உயிரை திருப்பி கேட்கற? அப்படியேன்னாலும் உங்க அப்பா உயிரை சத்ரியன் பாஸ் மீட்டு தரமுடியுமா?

உன் உயிரை இழக்க நேரலாம். ஏன் மானத்தை கூட இழக்க நேரலாம். உனக்கு உன் மானம் முக்கியமா இல்லையா?” என்று பொரிந்து தள்ளவும், ஷ்ரத்தா வினோத் சொல்ல வருவதை தாமதமாக புத்திக்கு உரைத்திட நிமிர்ந்தாள். எந்த மாதிரி இடத்தில் வந்து, இன்னமும் இங்கே நிற்கின்றாள். உயிருக்கும் மானத்திற்கும் பங்கம் வந்தால் யாரும் தனக்கென நிற்பார்கள்?

 

“ஏதோ உன்‌ நல்ல ராசி… இன்னமும் உயிரும் மானமும் பத்திரமா இருக்கு. முதல்ல கிளம்பு. உன் அப்பா உனக்கு தான் டாக்டர் படிப்புக்காக சீட் கேட்டது. உனக்காக டாக்டர் படிப்பு ரெடியா இருக்கு. போய் படிக்கற வழியை பாரு. அதை விட்டு உங்கப்பாவை யார் கொன்றா எதுக்கு கொன்றானு தேடினா நீயே பிணமாகலாம்.” என்று கூற, ஷ்ரத்தா, அதிர்ச்சியுடன் கையாளாகாததனத்துடன் மெதுவாக நடந்து வாசலுக்கு வந்தாள்.

 

பிறகு தலைவிரி கோலத்துடன் நடந்தவள், நிமிர்ந்து அவ்வீட்டை ஒருமுறை கண்டாள்.

 

சத்ரியன் யாரிடமோ போனில் பேசிக்கொண்டே அங்கும் இங்கும் உலாத்துவது துப்பாக்கி குண்டும் நுழையாத கண்ணாடி திரை போன்ற சுவரில் தெரியவும் பார்த்துவிட்டு கோபமாய் நடந்தாள்.

 

ஷ்ரத்தா வழிநெடுக ஏதேதோ யோசித்தவளை போவோர் வருவோர் நெருங்கி வந்து ஏதோ பேசவும், தன் கோலத்தை கவனித்தாள்.

 

காலையில் எழுந்ததும் தலைவிரி கோலம், சத்ரியனுடன் சண்டையிட்டு மூச்சு வாங்கி அவன் தன்னை குஷன் சோபாவில் தள்ளி மேலே படுக்க வைத்தது என்று எண்ணியவளுக்கு, தன் கோலம் எதையோ உணர்த்தியது.

 

அவசரமாய் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறியமர்ந்து, அவளது வீட்டிற்கு புறப்பட்டாள்.

 

ஷ்ரத்தா தலைவிரி கோலத்துடன் சென்றதில் சத்ரியன் அவள் வீடு வரை பாதுகாப்புடன் விட்டு வர அவளது பாடிகார்ட் யோகேஷிற்கு கட்டளையிட்டான். அவளது கைகளின் மென்மை அவனை இன்னமும் அதையே நினைக்க வைத்தது.

 

அவனும் இன்னும் இருவரும் அப்படியே ஷ்ரத்தாவை பின் தொடர்ந்து வந்தனர்.

 

அவள் இறங்கி பணம் தர முழிக்க, அவள் தான் எதையும் எடுத்துக் கொண்டு கடத்தபடவில்லையே. யோகேஷ் ஓடிவந்து பணம் தர, அவனையும் பார்த்தாள். தன்னை இங்கிருந்து இழுத்து சென்றதில் இவனும் ஒருவனே. பணம் தரவும் எனக்கென்ன என்ற ரீதியில் இருந்தாள்.

ஷ்ரத்தா அவள் வீட்டிற்குள் நுழைய அங்கே அக்கம் பக்கத்தில் சிலர் மார்க்கமாய் பார்த்ததையும் கவனித்தாள்.

 

ஏதோ கற்பை பறிக்கொடுத்து வந்ததாக மற்றவர் பார்வை இருந்தது. அந்த சிறு பெண்டிற்கு அனிது உடனே புரிப்படவில்லை‌.

 

சத்ரியன் ஆட்கள் இழுத்து சென்று, இந்த கோலத்தில் திரும்ப அழைத்து வந்து விட்டால் யார் எப்படி நினைப்பார்கள் என்று ஷ்ரத்தா அறியாமல் போனாள்‌.

 

வீட்டில் தனித்து அமர்ந்திருக்க, தந்தை நினைப்பு மனதை கொன்றது.

 

தன் தோழி மனிஷாவுக்கு அழைக்கலாமென்றால் மனம் அதற்கு ஒப்பவில்லை‌. அந்த வீட்டில் தனித்து அமர்ந்திருக்க அச்சமும் வாட்டியது.

 

இதற்கு முன் தந்தை வரும் முன் தனியாக தான், இதே வீட்டில் இருப்பாள். ஆனால் அப்பொழுது எல்லாம் தந்தை வந்துவிடுவாரென பாதுகாப்பாகவே உணர்ந்தாள்.

 

இன்று தந்தை நிரந்தரமாக வரமாட்டாரென்று புத்திக்கு புரிய, விரக்தியாக குளிக்க சென்று உடைமாற்றி அமர்ந்திருந்தாள்.

 

பக்கத்து வீட்டு பெண்மணியோ எட்டியெட்டி பார்த்து, “திவாகர் சார் இறந்ததும் எதுவும் சரியில்லை. அந்த பொண்ணை நாலுபேரு தூக்கிட்டு போனாங்க. யாருனு விசாரிச்சதுக்கு சத்ரியன் ஆட்கள்னு தெரிந்தது. ஒரு நைட் கழிச்சு தான் கூட்டிட்டு வந்து விட்டாங்க. அது கூட எப்படி? தலைவிரி கோலமா அழுதுட்டு வந்தா.

 

கேடுகெட்டவனுங்க தூக்கிட்டு போனா.. சீரழிச்சி தானே விடுவாங்க. பாவம்… பன்னிரெண்டாவது தான் முடிச்சுது. காலேஜ் கூட இனி தான் போகும்.” என்று கூறினார். மறுபுறம் வயதை கேட்டிருப்பாரோ என்னவோ, “வயசா… ஒருமுறை இந்த எலக்ஷன் வர்றதுக்குள்ள பதினெட்டு ஆகிடும். இந்த முறை ஓட்டு போடுவேன் ஆன்ட்டினு சொன்னா.” என்று பேசவும் துணியை உலர்த்த வந்த ஷ்ரத்தா செவியில் எல்லாம் விழுந்தது.

 

என்ன தான் பள்ளி படிப்பை தற்போது தான் முடித்திருந்தாலும், பள்ளி பாடத்திலேயே இனப்பெருக்கத்நை பற்றி அறிவியல் பாடத்தில் துல்லியமாக படித்தவளாயிற்றே. அத்துடன் மருத்துவம் படிக்க நினைத்தவளுக்கு அவர்கள் பேச்சு புரியாமல் போகுமா?

 

கண்ணீருடன் தலையை கூட துவட்டாமல் வந்து ஹாலில் உள்ள சோபாவில் அழுதாள். காலை உணவாக உப்புமா செய்தவள் அதை தொடவும் மறந்தாள்.

 

அழுதழுது ஒய்ந்து, மதியம் போல தன்னை தானே தேற்றிக்கொண்டு காலையில் செய்த உப்புமாவை விழுங்கினாள்.

 

இனி வாழ்க்கை எதை நோக்கி செல்ல சொல்கின்றது என்று யோசித்தாள்.

 

தந்தை தனக்கென பார்த்து வைத்த டாக்டர் படிப்பை தேடி போக வேண்டுமா? அது அந்த சத்ரியன் போட்ட லஞ்சமாக நினைத்தாள்.

 

அதுவும் அவன் தனக்கு படிப்புக்கு பார்க்க வேண்டுமா? அல்லது தானாக ஏதேனும் ஒரு கலை கல்லூரியில் சேர்ந்து படித்திடலாமா என்று எண்ணினாள்‌

 

ஆனால் அதுவுமே தந்தை பணம். தந்தை வங்கியை நிரப்பியது சத்ரியனே. அப்படியிருக்க அடுத்த படிப்பு எதுவாயினும் சத்ரியன் பணத்தால் தான் படிக்க முடியும்.

 

அதற்கு டாக்டருக்கே படிக்கலாமா என்று தான் சிந்தித்தாள்.

 

மணி மூன்று நெருங்க, பாலை சுட வைத்தாள். அங்கும் இங்கும் நடந்து படிப்பை தொடர வேண்டும். ஏதேனும் ஹாஸ்டல் சேருவதற்கு என்ன வழி? தோழியிடம் பேசி யாரின் பெரியவர்கள் உதவியோடு செயல்பட வேண்டும்.

 

பாதி காபி சுடவைக்கும் பொழுதே தன் வீட்டில் இரண்டு தடியன் வந்து நின்று அவள் முன் கத்தியை எடுத்து வந்தனர்.

அவர்களை கண்டு பயந்தாள்.

 

“யார்.. யார் நீங்க?” என்று அஞ்சிட, “இவ தான் திவாகரோட பொண்ணு? சத்ரியன் இவளுக்காக டாக்டர் சீட் வாங்கியது. இவளை தான் தூக்கிட்டு போய் திரும்ப பாதுகாப்பா வீட்ல விட வச்சான். என் கண்ணால பார்த்தேன்.” என்றான் ஒருவன்.

 

மற்றொருவனோ “அப்படின்னா இவளை சாகடிச்சிட வேண்டியது தான்” என்று கூற, ஷ்ரத்தா வேகமாய் பின்பக்கம் ஓடினாள். அவளை துரத்தி பின்னால் செல்ல, ஷ்ரத்தா வேகமாய் பின் வாசல் பக்கமாய் வெளிவந்து கதவை தாழிட்டு, வேகமாக முன் வாசல் பக்கம் வந்து, முன் கதவையும் சாற்றிவிட்டு மூச்சு வாங்க நின்றாள்.

 

பக்கத்து வீட்டு மனிதர்களிடம், “அங்கிள் ஆன்ட்டி… என்னை இரண்டு பேர் கொல்ல வர்றாங்க. காப்பாத்துங்க. போலீஸுக்கு போன் பண்ணுங்க” என்று மன்றாடினாள்.

 

“ஏம்மா… நீ என்ன பைத்தியமா? வந்தவங்க போலீஸுக்கு கைக்கூலியா இருந்தா என்ன செய்வ? உன் அப்பா இறப்பே ஒரு திட்டமிட்ட கொலை. அதையே விபத்துனு சொன்னவங்க தான் இந்த போலீஸ் கூட்டம். அவங்களை நம்பி கால் பண்ண சொல்லற. அத்தோட… எங்களிடம் உதவி கேட்டு இங்க நிற்காத. எங்க உயிருக்கும் ஆபத்து வந்துடும்.

எவன் உன்னை தூக்கிட்டு போய் சீரழிச்சானோ அவனிடம் போய் நில்லு. அவனை கண்டா தான் படையே நடுங்கும்‌. உன்னை கெடுத்து சின்னாபின்னமாக ஆக்கினவன், பாதுகாப்பா வீட்டுக்கு வந்து விட்டிருக்கான். இந்த உதவி செய்ய மாட்டானா. போபோ.. அவனை தேடி போ. அதான் அவனோட ஆசை நாயகியா மாறிட்டியே” என்று நொடித்துக் கொண்டு கதவை தாழிட்டார்கள்.

 

ஷ்ரத்தாவுக்கு பகீரென்றது. இதென்ன அவனுடன் நான் சரசம் செய்ததாக முடிவே கட்டி பேசுகின்றார்.‌’ என்று நினைக்க தன் வீட்டு கதவு படபடவென அடிக்கும் விதமாக சப்தமிட்டது. கதவை உடைத்து வெளிவந்தால் தனக்கு ஆபத்தென உணர்ந்தாள்.

 

பக்கத்து வீட்டில் அபத்தமாக பேசினாலும் போலீஸில் செல்வது ஆபத்தாகவே தோன்றியது. தந்தை இறப்பை விபத்தென்று பூசி மொழுகினார்களே!

 

இதற்கு விடை தான் என்ன? என்று எண்ணியவளுக்கு இங்கே இருப்பது ஆபத்தென்று மட்டும் புரிய அவ்

விடம் விட்டு அந்த இடத்திற்கு ஓடினாள். அவளுக்கு பழக்கப்படாத இடம். அவள் இதுவரை வராத இடம்.

 

-தொடரும்.

 

 

 

 

 

2 thoughts on “The leader-5”

  1. Super sis nice epi 👌👍😍 endha akkam Pakkam erukuravanga ellam enna dhan jenmangalo🙄 oru vishayam kedaika koodadhu uduney oodhi perusa akiduvaanga paavam enna dhan panna poralo pei ku bayandhu pisasu kita pora kadavule 😐😕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!