The Leader-6
அத்தியாயம்-6
ஷ்ரத்தா ஓடி களைத்து வந்து நின்ற இடம் சத்ரியனின் தனிப்பட்ட இடம். அவன் ராஜாங்கம், பல்வேறு துறையில் முடிவெடுக்கப்படும் இடமான தனிப்பட்ட பார். சில நாட்களுக்கு முன்பு கூட இங்கே மல்கோத்ரா இறந்து கிடந்தாரே.
அவ்விடம் வந்து “நான் சத்ரியனை பார்க்கணும் என்னை உள்ள விடுங்க” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.
இவ்விஷயம் ஒருவர் மாற்றி ஒருவர் மூலமாக வினோத் காதிற்கு சென்றது.
அவனோ தலையிலடித்து வேகமாய் சென்றான்.
சத்ரியனின் தனிப்பட்ட பாடிகார்ட்ஸ் யோகேஷ் அவனோ அதை கவனித்து, வினோத்தை சிசிடிவி மூலமாக கண்டான்.
அங்கே ஷ்ரத்தா வந்தா பேசி கத்தவும், சத்ரியனிடம் தெரிவிக்க ஓடினான்.
ஷ்ரத்தா என்ன நினைத்தாளோ, வினோத்தை தள்ளி விட்டு, ”இங்க தானே சத்ரியன் இருக்கான். நான் அவனிடமே பேசிக்கறேன்” என்று ஓடினாள்.
இதற்கு முன் இவ்விடத்தில் ஒரு பெண் அதுவும் சுடிதார் அணிந்த சிறுபெண் இத்தனை தைரியமாக நுழைந்ததில்லை. அதுவும் வினோத் அவளை தடைப்போட உத்தரவிடாமல், “ஏ.. ஷ்ரத்தா… சாரை எல்லாம் இங்க பார்க்க கூடாது. அப்பாயின்மெண்ட் கேட்டு வாங்கி தர்றேன் அப்பறம் வந்து பேசு” என்று தொடர, அது ஷ்ரத்தா செவியில் சேரவில்லை.
தனஞ்செயனிடம் “இன்னும் மூன்று மாசத்துல அந்த நடிகன் தேர்தல்ல நிற்கறான். என்ன தான் புதுக்கட்சி என்றாலும் அவன் பக்கம் மக்கள் போயிடுவாங்கனு ஆளுங்கட்சி பயப்படுது. அதனால அவனுக்கு பதிலா பணத்தை வச்சி மக்களோட வாயை அடைக்க, இந்த பணம் செலவு செய்ய தந்திருக்காங்கா. இந்த பணத்தை அப்படியே வச்சிட்டு கள்ளநோட்டை இதுல கலந்து நடமாட்டத்துல விட்டுடு. மாட்டினா கூட ஆளுங்கட்சி தான் பணத்தை இப்படி மாத்தியதா சொல்லிடலாம்.” என்று பேசிக்கொண்டிருக்க, “எவனும் மாட்ட மாட்டான்” என்ற சத்ரியனிடம், யோகேஷ் காதருகே ‘ஷ்ரத்தா வந்ததையும், வினோத் வழிமறைத்து பேச சென்றதையும் தெரிவித்தான்.’
“வாட்.. அவ எதுக்கு?” என்று திரும்ப, அங்கே ஷ்ரத்தா மூச்சு வாங்க முன் நின்றாள்.
“இங்க தானே இருக்கான். அநியாயமா பொய் சொல்லறிங்க.” என்று வினோத்தை திட்டிவிட்டு, மாடியில் தனித்து குழுவாக பேசியவர்களை கண்டு மேலு வந்தாள். ”உங்களை காப்பாற்றிய பாவத்துக்கு எங்கப்பா திவாகரை யாரோ கொன்னுட்டாங்க. இப்ப சும்மா இருந்த என்னை தூக்கிட்டு வந்து, நைட் வரை வச்சி, காலையில் பாதுகாப்பா அனுப்பியதால, இரண்டு தடிமாடுக ஏதோ உங்களோட வெல்விஷர்னு நினைச்சி, என்னை சாகடிக்க வர்றாங்க. எல்லாம் உங்களால தான். நிம்மதியா நானும் அப்பாவும் வாழ்ந்தோம். இப்ப பாருங்க… என்னை கொல்ல ஆட்கள் வர்றாங்க. உங்களை காப்பாத்தி எங்கப்பா தப்பு செய்துட்டார். உங்களை எங்கப்பா ஜெயிலில் தள்ளி விட்டிருக்கணும்.” என்று பேச, “ஷட்அப்… ஷட்அப்” என்றவன் பேசிக்கொண்டே போனவளை கண்டு பளாரென அறைந்தான்.
மல்கோத்ரா இறந்து மல்லாக்காக விழுந்த இடத்தில் ஷ்ரத்தா விழவும், “இதுவரை என் முன்ன ஒருத்தரையும் பேச விட்டதில்லை. ஆப்ட்ரால் பிளஸ் டூ முடிச்ச ஸ்கூல் பொண்ணு நீ. என்னை கேள்விக் கேட்கற.” என்று கர்ஜித்துவிட்டு வினோத்தை பார்த்து, “ஏன்டா மயிறே… தெரியாம தூக்கிட்டு வர சொல்லி, நேத்தே விரட்டினேன். தலையில அடிப்பட்டு துரத்த சொன்னேனா இல்லையா? இப்ப பாரு… எங்க வந்து என்னை கேள்விக் கேட்கறா? வெளியே அனுப்புடா” என்று சீறினான்.
ஷ்ரத்தவோ கன்னம் தாங்கி அழுதுக்கொண்டே “வீட்டுக்கு போனா இரண்டு பேர் கத்தி வச்சி கொல்ல வர்றாங்க. போலீஸுக்கு போகலாம்னா, அப்பா கொலையை விபத்துனு சொன்னதால, அங்க போக பிடிக்கலை. உங்களிடம் வந்தா அட்லீஸ்ட் அப்பா உங்களை வெளியே எடுத்ததுக்கு பரிகாரமா, நன்றிக்கடனா பாதுகாப்பா பார்த்துப்பிங்கனு நினைச்சேன்.” என்று தேம்பினாள்.
“பரிகாரமா? நன்றிக்கடனா… புல்ஷிட்… அதுக்கு தான் உனக்கு படிக்க டாக்டர் சீட் கொடுத்து அழுதது. பேங்க்ல பணத்தை போட்டது. இதை தாண்டி உன்னை பாதுகாக்கற வேலை எனக்கில்லை டாமிட். நேத்து யோகேஷ் மூலமா நீ வீட்டுக்கு போயிட்டியானு கேட்டது கூட, நான் தள்ளிவிட்டு உன் மண்டையில அடிப்பட்டதால போற வழியில மயங்கி செத்துடுவியோனு தான் சொன்னது. அது எதுக்கு தெரியுமா? இந்த வினோத் ஓழுங்கா கேட்டு முடிவுப்பண்ணாம முட்டாள்தனமா உன்னை தூக்கிட்டு வந்ததுக்கும், நீ சொன்னியே திவாகர் எனக்காக வாதடியதுக்கு. அவ்ளோ தான்.. உனக்கும் உங்கப்பாவுக்குமான செட்டில்மெண்ட். உன்னை எவனாவது சாகடிக்க வந்தா நீ தான் பார்த்துக்கணும். அதெல்லாம் என் பொறுப்பு கிடையாது.
புரிதா.. கிளம்பு… இங்கயே இருந்தா நானே கொன்னுடுவேன்.
வெளியே போய் எவன் கொல்ல வந்தானோ அவன் கையால சாவுடி” என்று கர்ஜித்தான்.
அங்கிருந்தவர்களோ காமத்தை தாண்டி முதல் முறை பெண்ணை கண்டு, அதுவும் ஷ்ரத்தாவை கண்டு பாவம் பார்த்தனர்.
சிலர் மட்டும் அவளது போதையூட்டும் வனப்பை அப்பொழுதும் ரசித்தனர்.
“அப்படின்னா… என்னை யாராவது சாகடிச்சா செத்துடணுமா?” என்று இத்தனை நேரம் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டு பயந்தவளாக நின்றாள்.
“அது உன் தலையெழுத்து” என்று யோகேஷிடம் கண்ணை காட்டி கழுத்தை பிடித்து வெளியே தள்ள கூறிட, பேயறைந்தது போல ஷ்ரத்தா நிற்க யோகேஷ் கைகளால் கழுத்தை பிடித்து வெளியேற்றப்பட்டாள்.
கால்கள் செல்லும் பாதையில் நடந்தாள்.
சத்ரியனோ வினோத்திடம் “வினோத் அந்த பொண்ணுக்கு இந்த இடம் எப்படி தெரிந்தது?” என்று அங்கிருந்தவர்களை பொருட்படுத்தாமல் கர்ஜனையாக கேட்டான்.
“கேட்டேன் பாஸ்… இன்னிக்கு காலையில அந்த பொண்ணை விரட்டினப்ப, நீங்க தான் இங்க வரப்போவதா போன்ல வழக்கமா சந்திக்கற இந்த பார் நேமை சொல்லி வந்துடறதா பேசியதை.. தற்செயலா ஒட்டு கேட்டாளாம்.” என்று கூறினான்.
சத்ரியனோ “செட்டில்மெண்ட் பண்ணித்தொலை, தூக்கிடுனு சொன்ன வார்த்தைகளை ஒழுங்கா புரிந்துக்காம நீ செய்த வேலையை பாரு. ஒரு சாதாரண பொண்ணுக்கு என்னோட இந்த பிரைவேட் பார் பிளேஸ் இருக்கற இடம் தெரிந்திருக்கு. இங்கவரை ஒருத்தி சாதாரணமா நுழைஞ்சியிருக்கா… உன்னை முதல்ல கொன்னு புதைக்க போறேன்.” என்று வினோத்திடம் பேசியவன் “ஆ.. யோகேஷ் சப்போஸ் அந்த பொண்ணு ஒருவேளை அவளை துரத்தின ஆட்களால் செத்துட்டா… அதுக்கெல்லாம் நாம பீல் பண்ண முடியாது. ஆனா அவளை யார் கொல்ல சொன்னாங்களோ அவங்களை தேடி கண்டிப்பிடிச்சு சாகடிச்சிடு.
ஏன்னா… நம்மளை நிழலை தொட்டாலே எதிராளி செத்து தான் போகணும்னு புரிய வைக்கணும். சோ… இந்த பொண்ணு செத்தா விட்டுடு.. போய் தொலையட்டும்… பட் சாகடிச்சவனை உருத்தெரியாம போட்டு தள்ளு. அதோட காரணகர்த்தாவை தேடி முன்ன நிறுத்து. எவனுக்கும் என் நிழலை தொட்டாலும் இந்த கதினு புரியவை” என்று கூறினான்.
யோகேஷ் நகர, தனஞ்செயனிடம், “ஏய்… பணத்தை பட்டுவாடா செய்துட்டு கள்ள நோட்டை மாத்திடு. பிறகு இந்த புதுகட்சி ஆளு அடிமட்ட தொண்டரோட வீட்டில் சில்மிஷம்னு, அவதூறான விஷயத்தை உடனே டிரெண்ட் ஆகற வழியை பாரு. ஏஜென்சி வச்சி அந்த வேலையும் செய்திடுங்க.” என்று வேலையை ஏவினான். சமூக தளத்தில் பலரும் பேக் ஐடியால் ஒருவரை மாற்ளி ஒருவரை வன்மத்தால் வேட்டையாடி, மக்களோடு மக்களாக அசிங்க வார்த்தையால் பேசி தாக்குவதும் ஒருவிதமான பிசினஸாக மாறி கொத்து கொத்தாக ஆட்கள் வேலை செய்கின்றனர். அவர்களுகாகான படப்பட்டுவாட கூட சத்தமின்றி நடைப்பெறுகின்றது.
தனஞ்செயனோ ‘அப்ப அந்த பொண்ணு செத்தா இவனுக்கு கவலை இல்லையா? அச்சோ நம்ம கேங்க்ல யார் இதை செய்தானு தெரியலை. எவனும் கொல்லாம இருந்தா சத்ரியனிடம் கண்ணுல படாம இருப்போம்’ என்று நினைத்தான்.
இங்கு தன் வீட்டை நோக்கி நடந்து சென்றவள் எதிரே தன்னை கொல்ல வந்த ஆட்கள் எதிரே வர, இம்முறை ஷ்ரத்தா ஓடவில்லை. ஓளியவில்லை… ”என்னை சாகடிக்க தானேடா வந்திங்க.? வந்து சாகடிச்சிக்கோங்க” என்று வீராப்பாக வர, போனில் யாரின் குரலோ, அவளை விட்டுவிட சொல்ல, கத்தியை உறைக்குள் வைத்து ஷ்ரத்தா கண் எதிரிலேயே அவளை தாண்டி சென்றார்கள்.
இந்தமுறை ஷ்ரத்தா இறந்தால் யார் என்ன என்று சத்ரியன் தன் எதிரியை தேட அவர்களாக வாய்ப்பை கொடுப்பதாக கூறி, ஷ்ரத்தாவை ஒன்றும் செய்யாமல் வரக்கூறியிருந்தார்கள். அதனால் அப்படியே ஓட்டமெடுத்தார்கள் அவ்விருவரும்.
‘இவனுங்க என்ன பைத்தியக்காரனுங்களா. அப்ப கொல்ல வந்தாங்க. நான் ஓடினேன். இப்ப ஓடமுடியலை கொன்னுக்கோங்கனு நிற்கறேன் போறாங்க’ என்று குழப்பமாய் பார்வையிட்டாள்.
தன் வீட்டை வந்தடைந்ததும், “என்னடிம்மா.. கொல்வ வந்தவங்க கூட போயிட்டாங்க? யாரோட உதவி கேட்ட? அந்த சத்ரியனா?” என்று கேட்க, ஷ்ரத்தா அவர்களை புழுவை விட கேவலமாய் பார்த்து பதில் அளிக்காமல், ‘வந்துட்டா… உதவி கேட்டப்ப உபதேசம் பண்டிட்டு இப்ப வந்து கேள்விக்கேட்க’ என்று வீட்டுக்குள் வந்தாள்.
காப்பாற்றும் நேரம் கதவை அடைத்துவிட்டு உயிர் திரும்பி வந்தததும் யார் காப்பாற்றியது என்ற கேள்வியா? என பக்கத்து வீட்டு ஆட்கள் என்ன மனிதர்களோ என்று அருவருப்பானாள்.
வீட்டுக்கு வந்ததும் மணி ஆறரை ஆனது. மெதுவாக வீட்டை அலசினால், தனித்து இருக்க பயம் கூடியது. அதனால் மனிஷாவிடம் பேசி அவள் தந்தையையும் அவளையும் வரக்கூறி, தன்னை கொல்ல வந்தவர்களை பற்றி கூறாமல், இன்று ஒரு நாள் அவர்கள் வீட்டில் தங்க அனுமதி கேட்டாள். மனிஷா தந்தையும் அவளும் உடனடியாக வந்து அழைத்து சென்றார்கள். தந்தையை இறந்த பெண், தனித்திருக்க பிடிக்காமல் அழைத்ததாக நினைத்தார்கள்.
மனிஷா வீட்டில் குளித்து இரவு உடைமாற்றி அவளுடனே உறங்கும் நேரம் சத்ரியனை சந்தித்து பேசியதையும், இன்றைய கலவரங்களையும் மெதுவாக கூறினாள். மனிஷா தோழிக்கு நடந்தவைகளை எண்ணி பயந்தாள்.
நாளை மட்டும் டாக்டர் படிக்க சீட் கிடைத்த பிரைவேட் கல்லூரிக்கு அருகே ஹாஸ்டலில் சேர்த்துவிட, மனிஷா தந்தைக்கு கோரிக்கையும் வைத்தாள்.
மனிஷாவுமே சரியென்று கூறி தோழிக்கு ஆறுதலுரைத்து உறங்கினார்கள்.
ஷ்ரத்தாவுக்கு கண்ணை மூடினால் சத்ரியனும், அவனை சார்ந்தவர்களும், அவன் வீடு, அவன் பார், தன்னை கொல்ல வந்தவர்கள், இன்று எடுத்த ஓட்டம், தந்தையின் இறப்பு என்று ஒவ்வொன்றாக நினைவு வந்து இரவு தூக்கத்தை விரட்டியது.
தந்தையை எண்ணி இருட்டில் சத்தமின்றி அழுதாள்.
தன்னை பாதுகாப்பாக உறங்க கூறி சென்றவர், சடலமாக வந்து சேர்ந்ததில், துவண்டாள். தந்தையின் இறப்புக்கு யார் காரணம்? அவர்களை கண்டறிந்து பழிவாங்கலாமா? அல்லது அதெல்லாம் தன்னால் இயலாத ஒன்றா? இதுவே அவள் மனதை அரித்தது.
இரவெல்லாம் உறங்காமல் அதிகாலை விடியவும், மனிஷாவும் அவள் தந்தையுடம் டிப்பன் முடித்து மருத்துவ கல்லூரிக்கு அருகே உள்ள ஹாஸ்டலில் வந்து சேர்ந்தார்கள்.
மனிஷாவோ கல்லூரியை கண்டு வாயை பிளந்தவளாக “இந்த காலேஜிலயா படிக்க போற? வாவ்.. ஷ்ரத்தா… நீ டாக்டரா படிப்பது எனக்கு பெருமையா இருக்கு. அங்கிள் இறப்பை நினைச்சு சோர்ந்திடாம நல்லா படி. உனக்காக தானே உங்கப்பா இந்த காலேஜ்ல சீட் வாங்கியிருக்கார்.” என்று கூறினாள்.
“இந்த சீட்டுக்கு விலை எங்கப்பாவோட உயிரா போயிருச்சு மனிஷா” என்று வருந்தினாள் ஷ்ரத்தா.
மனிஷா தந்தை சண்முகமோ ஹாஸ்டலில் கார்டியன் என்று போட்டு சேர்த்துவிடவும் அவர் காலில் விழுந்து நன்றியுரைத்தாள்.
“அட… உங்கப்பா வாழ்ந்தவரை நல்ல மனுஷனா வாழ்ந்தவர்மா. கடைசியா கையில எடுத்த கேஸ் கூட ஜெயிச்சிடுச்சு. என்ன… அநியாயத்தின் பக்கத்துல போயிட்டார். ஆனா ஒன்னும்மா, அவர் நியாயத்தோட பக்கம் இருந்தாலும், வேஸ்டா போயிருக்கும். ஏதோ இறக்கும் தருவாயில் கூட நல்லது செய்துட்டு போயிட்டார் மனுஷன். நீ உங்கப்பா ஆசையை நிறைவேத்தும்மா” என்று புறப்பட்டார் சண்முகம். மனிஷாவுமே இனி போனில் பேசிக்கொள்வதாக கட்டியணைத்து சென்றாள்.
ஷ்ரத்தா.. தனியாக ஹாஸ்டலில் வந்து சேர்ந்துவிட்டாள். இரண்டு பேர் மட்டும் இருக்கும் ஹாஸ்டல் அறை. அவளது அறையில் இன்னமும் பெண் வரவில்லை. தற்போது ஷ்ரத்தா மட்டுமே என்பதால் அவள் கண் மூடி அழுது கரைந்தாள்.
இந்த இடம் பாதுகாப்பாக இருக்குமென நம்பினாள். இதற்கு மேல் எவ்விடமும் தனக்கு
நல்லதாக அமையாது என்றும் புரிய, தந்தை புகைப்படத்தை கண் எதிரே மாட்டினாள்.
-தொடரும்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 yedhaiyum yosikama endha ponnu nalla padichi doctor aganum🥺 endha chathriyan ellam enna jenmamo🙄😐
Sharatha stay strong. Chathritian what a charecter you are? Very intresting sis.
தீ லீடர்…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 6)
அடப்பாவி…! உயிருக்குப் பயந்து
உதவி நாடி வந்த பெண்ணை இப்படி மனசாட்சியே இல்லாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி கழுத்தை பிடிச்சு விரட்டி அடிச்சிட்டானே…? சின்னப் பொண்ணாச்சே என்கிற நினைப்பாவது இருந்ததா ?
ஒருவேளை, அவளுக்கு ஆதரவு கொடுத்தால், இனி காலம் முழுக்க உயிர் வாழ பயந்துக்கிட்டு ஓட வேண்டியதா இருக்குமோன்னே துரத்தி விட்டானோ…?
ஆதரவு மட்டும் தர மாட்டான், ஆனால் அவளைத் தொட்டு ஆட்டைய மட்டும் போட நினைப்பானோ..? நல்லா வருவடா…!
😴😴😴
CRVS (or) CRVS2797
Super
Pavam shratha nilami romba mosama Iruku ippadi yarum help kuda pana mudiyatha alavuku. Ithula intha shathriyan ivlo mosama irukan kapathama avala saga solran
Interesting
படித்து நல்ல உயரத்திற்கு வரனும்