💗அகலாதே ஆருயிரே💗💗3💗பள்ளியில் வகுப்புகள் முடியும் நேரம் ராதா மிஸ் சுவாரஸ்யமாக கணக்கு எடுத்துக்கொண்டு இருந்தார். முதல் பெஞ்சில் இருந்த ரிது உலகமே கரும்பலகையிலும் ராதா மிஸ் சொல்லிலும் இருப்பது போல, இரண்டையும் மாறி மாறி பார்த்தபடி அமர்ந்திருக்க, அவளை விட்டால் பார்வையாலேயே எரித்துவிடுவாள் போல முறைத்த படி அருகில் அமர்ந்திருந்தாள் ஆருஷி.சரியாக ராதா மிஸ் டிபரன்சியல் இக்குவேஷன் முடிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. பிள்ளைகள் எல்லாம் நல்ல தூக்கத்தில் இருந்து முழித்துக்கொள்ள, ராதா மிஸ் சிரித்தபடி, “இன்னிக்கு தூக்கமா வரும். ஆனா பரீட்சைக்கு முன்னாடி இது உங்களை தூங்க விடாது. ஒழுங்கா கிளாஸ் கவனிச்சா பாஸ்.. இல்லனா ஜூன், செப்டம்பர் ன்னு திரும்பி எழுத வேண்டியது தான். பார்த்துக்கோங்க.”, என்று சொல்லிவிட்டு வெளியேற, பிள்ளைகள் முகத்தில் கிலி பரவியது, நாளை முதல் ஒழுங்காக வகுப்பை கவனிக்க வேண்டும் என்று நினைத்தனர்.ஆருஷி ரிதுவிடம் பேசாமல் பையில் புத்தங்கங்களை திணிக்க, அவளை வேற்று கிரக ஜந்து போல பார்த்த ரிது, பயிற்சி கணக்கில் ஒன்றை நோட்டில் போட்டபடி இருந்தாள்.”கிளம்பலயா.. “,கேட்ட ஆருஷியை மென்னகையோடு பார்த்த ரிது, “இரு ஆரூ.. எனக்கு இந்த மெதட் கொஞ்சம் குழப்பமா இருக்கு. சரியா வரலன்னா ராதா மிஸ் கிட்ட கேட்டுட்டு போகலாம்.”ஆருஷி கொதிநிலைக்கு போனாள்.”ஏய்.. படி டி.. நான் வேண்டாம்ன்னு சொல்லல.. அதுக்கு இப்படியா.. ரொம்ப பண்ற ரிது..””ச்சு… இல்ல ஆரூ மேத்ஸ் கஷ்டம் இல்லை. ஆனா புரிஞ்சு படிக்கணும். புரியலன்னா கேளுன்னு ராதா மிஸ் சொன்னாங்க. இப்போவே கேட்டுட்டா மனசுல நிக்கும். இல்லனா அதுக்கு தனியா டியூஷன் வைக்கணும். ஏற்கனவே கெமிஸ்ட்ரி டியூஷன் வேற..””ஐயோ.. போதும் டி படிப்பாளி.. முடியல.. நீ கேட்டுட்டு வா. நான் கிரவுண்ட்ல இருக்கேன். நாளைக்கு வாலிபால் செலெக்ஷன் இருக்கு.””சரி போ. “,என்று அருஷியிடம், ரிதுவின் வாய் தான் சொன்னது, கண் கணக்கு நோட்டில் இருக்க, கடுப்பான ஆருஷி அவள் தலையில் குட்டிவிட்டு ஓடிவிட்டாள்.ரிது தலையை தேய்த்து விட்டபடி, “லூசுப்பொண்ணு..”, என்று சொன்னாலும் கண்கள் நோட்டை விட்டு அகலவில்லை.அவளே கணக்கை சரியாக பத்து நிமிடத்தில் முடித்தாள். இருந்தாலும் மிஸ்ஸிடம் கேட்க ஆசிரியர் அறைக்கு செல்ல, அங்கே,”என்ன ராதா கண்டுக்கவே மாட்டேங்கிற?”, என்ற குரலில் அது பி.டி சார் சுகந்தன் குரல் என்று புரிந்த ரிது அறைவாசலில் காத்திருக்க,இதுவரை கேட்டேயிராத ராதா மிஸ்ஸின் கோபக்குரல் வந்தது, “உனக்கெல்லாம் ஒருதரம் சொன்னா அறிவு வராதா ஒழுங்கா உன் வழியை பார்த்து போ. இல்ல அவ்ளோ தான் சொல்லிட்டேன்.” கத்தியபடி வெளியில் நின்ற ரிதுவை கவனிக்காமல் வெளியேறினாள் ராதா..ராதா ஒரு அன்பான ஆசிரியை. கணக்கு பாடத்தை அவ்வளவு அழகாக குழந்தைகள் தலைக்குள் நுழைத்து விடுவாள். விதிவிலக்கு உண்டென்றால் அது மேல்நிலை வகுப்புகள் மட்டுமே. எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காமல் சொல்லித்தரும் ராதா மிஸ், சிரித்தபடி பாடம் எடுக்கும் ராதா மிஸ் , தவறு செய்தாலும் கண்டிக்கும் குரல் தாண்டி கோபம் காட்டாத ராதா மிஸ் அனைத்து பிள்ளைகளுக்கும் பிடித்தமான ஆசிரியை. அப்படி இருக்க, இன்று ராதாவின் கோபக்குரல் ரிதுவுக்கு அவரின் நிலையை விளக்கியது, சுகந்தன் ராதாவை தொல்லை செய்கிறார். அது அவருக்கு பிடிக்கவில்லை என்று புரிந்த ரிது அங்கிருந்து நகரப்போக,”எங்க டி போய்டுவ, எப்படியும் நாளைக்கு இங்க தானே வரணும். தினமும் உன்னால என்கிட்ட இருந்து தப்ப முடியுமா?”,என்று கோரமாக பேசிக்கொண்டு நின்ற சுகந்தன் ரிதுவின் பார்வைக்கு அரக்கன் போல தெரிய, அவசரமாக அவன் பார்க்கும் முன் இடத்தை காலி செய்தாள்.வகுப்புக்கு போய் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு மைதானத்துக்கு செல்லும் பாதையில் நடக்கும் போது, அவள் எண்ணம் எல்லாமே ராதா மிஸ் பாவம் என்றே இருந்தது. அவரை நினைத்தால் வருத்தம் வர, யோசித்தபடி மெதுவாக நடந்து மைதானத்தை அடைய, அங்கே கண்ட காட்சியில் மெய்விதிர்த்து போனாள்.ஆருஷி கையில் பந்துடன் நிற்க, அவளின் பின்னால் அவளை அணைத்தபடி நின்று வாலிபால் சர்விஸ் பயிற்சி அளித்துக்கொண்டு இருந்தார் சுகந்தன்.அவர் ஆருஷியை பற்றி இருந்த விதமே ரிதுவுக்கும் அருவருப்பை தர, நடையில் வேகத்தை கூட்டி, “ஆரூ ஆரூ”, என்று கத்திக்கொண்டு ஓடினாள்.அவளின் குரல் கேட்டு திரும்பிய ஆருஷி சுகந்தன் பிடியில் இருந்து விலகி, “என்ன ரிது ? ஏன் கத்துற? என்ன ஆச்சு?”,என்று பதற, அதை அப்படியே பற்றிக்கொண்ட ரிது, “அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை வா போகலாம்”, என்று கையோடு இழுத்துப்போய் விட்டாள். சுகந்தன் அடுத்த பெண்ணிற்கு சொல்லித்தர செல்ல, அவரின் அருவருக்கத்தக்க செயலை என்ன செய்து நிறுத்துவது என்று புரியாமல் ரிது, ஆருஷியை நடுங்கும் கரங்களால் பற்றி வேக நடையோடு சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு வந்தாள். அவளின் நடுக்கம் உணர்ந்த ஆருஷி, “என்ன டி அம்மாவுக்கு என்ன? யார் சொன்னாங்க உனக்கு? ஏன் இப்படி நடுங்குற?””ஒன்னும் இல்ல. வா வீட்டுக்கு போகலாம்.”, என்று ரிது அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.பாதி தூரம் வரை முகத்தை யோசனையோடு வைத்துக்கொண்டு வரும் ரிதுபர்ணாவை பார்த்து கடுப்பான ஆருஷி, “ஏய் இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன். பாதி தூரம் வந்துட்டோம், இன்னும் அந்த ஆள் செஞ்சதையே நினைச்சிட்டு இருந்தா எப்படி? அவன் இல்லாத போது நிம்மதியா இருக்க வேண்டாமா?”, என்ற ஆருஷியின் பேச்சில் திகைத்து, சடன் பிரேக் போட்டு நின்றாள் ரிது,”உனக்கு தெரியுமா அந்த ஆள் உங்கிட்ட தவறா நடக்கிறான்னு..””தெரியாமலா இருக்கும்.””அப்பறம் ஏன்டி நின்ன?”,கோபமாக கேட்டாள் ரிது.”அவன் தான் டி கோச்.. அவன் சொல்றபடி கேட்டா தான் அவன் செலக்ட் பண்ணுவான்.””அதுக்கு அவன் அசிங்கமா தொடறான் நீயும் அப்படியே நிப்பியா?? “,கடுப்பான ரிது பொறியத்துவங்க..”இல்ல ரிது, அவன் எல்லை மீறல, மேல சாஞ்சு நின்னான், அடுத்து ஏதாச்சும் பண்ணிருந்தா கண்டிப்பா, ஸ்போர்ட்ஸ் ஷு வச்சு நச்சுன்னு மிதிச்சு, ஐயோ சாரி சார் பாக்கலன்னு சொல்லிருப்பேன்”, என்று ஆரூ சிரித்தபடி சொல்ல,”எப்படி டி தைரியமா பேஸ் பண்ற.. எனக்கு அப்படியே பதறிப்போச்சு..””நாம ஆண்கள் இருக்கிற உலகத்துல அவங்களோட கலந்து தான் வாழணும் ரிது, எல்லாத்துக்கும் பதறக்கூடாது. அவங்க அப்படி சபலமா தான் இருப்பாங்க, நமக்கு தான் எல்லை தெரியணும், யாரை எங்க எப்படி கட் பண்ணி விடணும்னு.. சரி வா ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம். உன்னோட பேசி பேசி நாக்கு வறண்டு போச்சு.. “,என்று கிண்டல் செய்ய,”அதுக்கு எதுக்கு ஐஸ்கிரீம், இந்தா என் பாட்டில்ல இன்னும் தண்ணி மிச்சம் இருக்கு. குடிச்சு உன் வறண்ட நாக்குக்கு உயிர் குடு.””அடியேய்… அநியாயம் டி. ஐஸ்க்ரீம் சாப்பிட பிளான் போட்டா, இப்படி கெடுத்துவிடப் பாக்குற.””அப்போ ஐஸ்க்ரீம் வேணும்ன்னு நீ சொல்லிருக்கணும். என்னை வச்சு காமெடி பண்ண பாக்குறியா பக்கி.. “,என்று ரிதுவும் சமநிலைக்கு வந்து அவளோடு வாயாட,”தெரியாம உன்னை சொல்லிட்டேன் தாயே.. வாங்க ஆளுக்கு ரெண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு சமாதானம் ஆகலாம்.”இருவரும் சிரித்துக்கொண்டே ஐஸ்க்ரீம் கடைக்குள் செல்ல,அங்கே உட்கார இடமில்லாமல் காதலர் கூட்டம் ஆளுக்கு இருவராக, டேபிளை நிறைத்து இருந்தது.அவர்களை கண்ட ரிது முகம் சுளித்தபடி, “போகலாம் ஆரூ. வேற எங்கயாவது போய் சாப்பிடலாம். “,என்று சொல்ல,”அங்கேயும் இப்படி கேஸ் இருக்க தான் டி செய்யும். நீ முதல்ல உலகத்தோடு ஒத்து வாழ பழகு. விலகி விலகி போகாதே”, என்று பெரிய மனுஷி போல சொல்ல, “நான் பொறுமைசாலி தான் ஆரூ ஆனா பிடிக்கலன்னா ஒதுங்கிப்போகும் ரகம். என்ன செய்ய..””அங்க பாரு, அந்த டேபிளில் ரெண்டு பசங்க தான் இருக்காங்க. வா அங்க போய் சாப்பிடலாம்”, என்று ரிதுவின் பதிலை எதிர்பார்க்காது, ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு அங்கே சென்றாள்.”ஹெலோ பாஸ்.. எல்லா டேபிள்ளையும் லவர்ஸ் இருக்காங்க, உட்கார இடம் இல்ல. நானும் என் பிரென்டும் இங்கே உட்காரலாமா?”, என்று நின்றபடி கேட்க, “எவ்வவா.. “,என்று திரும்பினான் ஹர்ஷா.”நான் தான் பாஸ், கண்ணு தெரியாதோ.. சாரி பாஸ் எனக்கு அது தெரியல.. இங்க உட்காரலாமா ?”,என்று பொறுமையை இழுத்துப்பிடித்து கேட்டாள், அவளுக்கு ஐஸ்க்ரீம் உருகும் என்று கவலை,அவளின் பேச்சை கேட்டு சிரித்த அபினவ், “உட்காரும்மா”,என்று சொல்ல,”நன்றி பாஸ்”, என்று கையில் இருந்த ஐஸ்க்ரீம் கிண்ணங்களை அங்கே டேபிளில் வைத்துவிட்டு, “ஓய் இங்க வா”, என்று ரிதுவை அழைத்தாள்.அவர்களுக்குள் சிறுவயது முதலே உள்ள ஒப்பந்தம் இது, வெளி இடங்களில் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. ஏய் என்றால் மரியாதையாக இருக்காது அதனால் ஓய் என்று அழைத்து கொள்வார்கள்.ரிது நிதான நடையில் வர, “வாவ் பியூட்டிபுல்..”, என்று அவளைப்பார்த்து ஹர்ஷா சொல்ல,”பாஸ் இருட்டு கூட அழகா இருக்குமா? எனக்கு தெரியாம போச்சே..”,என்று அவனை ஆருஷி ஓட்ட, அது புரியாத ஹர்ஷா, “தேவதை மாதிரி இருக்கா, அவளைப்போய் இருட்டுன்னு சொல்ற”, என்று கேட்க, அவன் தலையில் தட்டிய அபி,”மாடே.. அந்த பொண்ணு உன்னை ஓட்டுது டா. கண்ணு தெரியாதவன்னு சொல்லுச்சு நீ அதுக்கு பதில் சொல்லல, அதான் உன்னை கலாய்க்கிது..”, என்று அபி சிரிக்க,”என்ன ஒரு தைரியம், இடம் குடுத்தா.. என்னையே கலாய்ப்பாளா அவ?”, என்று வேகமாக திரும்பினான் ஆருஷியின் பக்கம்,அவளோ இப்படி இருவர் எதிரில் இல்லை என்பது போல,ரிதுவுடன் ஏதோ பேசி சிரித்தபடி கிண்ணத்தை காலி செய்து கொண்டு இருந்தாள். அவர்களையே வைத்தகண் வாங்காமல் பார்த்துவிட்டு ஹர்ஷா பேசாமல் இருக்க,ஹர்ஷாவை கண்ட அபி காறித்துப்ப,”சரி விடு பங்கு.. இதெல்லாம் வீரர்கள் வாழ்வில் சகஜம்.. “,என்று சமாளித்தான் ஹர்ஷா..”ஏண்டா.. ஒரு பொண்ணை பார்த்தா சரி, ஊர்ல உள்ள ஒரு பெண்ணையும் விடாம ஜொள்ளு விட்ற அது எப்படி டா?”,என்று சிரித்துக்கொண்டே கேட்க,”அதுவா… “,என்று வெட்கம் பூசிய முகத்துடன், “தெரில பங்கு யாரை பார்த்தாலும் மனசுக்குள்ள இளையராஜா பாட்டு கேக்குது.. “,என்று சொல்ல,”அடச்சீ, வெக்கப்படாத டா எருமை.. பாக்கவே சகிக்கல, மனசுக்குள்ள இளைய ராஜா பாட்டா.. சரிதான் இப்போ என்ன பாட்டு கேக்குதுன்னு எனக்கு தெரியல, ஆனா கடைசில என்ன பாட்டு கேக்கும்ன்னு எனக்கு தெரியும்..””என்னடா அது?”, என்று ஆர்வமாக ஹர்ஷா கேட்க,”ம்ம்.. அதுவா?”, என்று அவனை போன்ற மடுலேசனில் சொன்ன அபி,”எங்கே செல்லும் இந்த பாதை.. யாரோ யாரோ அறிவாரோ… “என்று பாட,”அடேய்.. “,என்று ஹர்ஷா அவனை துரத்த,”விடு ஜூட்… “,என்று அபி முன்னால் ஓடினான்..அவர்களின் பேச்சு காதில் விழுந்தாலும் கண்டும் காணாமல் இருந்த ரிது, அவர்கள் போனதும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பிக்க,”நம்மளை போலவே இருக்காங்க டி. வேற வேற ஸ்கூல் போல”,என்று அவர்கள் நட்பை பார்த்து ரசனையாக சொன்னாள் ஆருஷி.”ஆமா ஆரூ. நீயும் நானும் பேசுற மாதிரி இருந்துச்சு.. “,என்று ரிது ஒத்துக்கொள்ள,அங்கே.. “பங்கு.. பங்கு.. சும்மா சொன்னேன் டா.. விட்ரு.. இல்லனா.. “, என்று மிரட்டும் தொனியில் அபி பேச,”இல்லனா என்ன டா பண்ணுவ “,என்று ஹர்ஷா இடுப்பில் கைவைத்து கேட்க,”வேற என்ன மறுபடி ஓடுவேன்”,என்று ஓடிவிட்டான் அபி..”பக்கிபய.. என்னை ரெமோ விக்ரம் மாதிரி நான் பீல் பண்ணா, இவன் என்னை சியான் விக்ரம் ஆகிட்டான்.. பாவி.. ஆண்டவா இந்த கருநாக்கு நாயோட வாய் வார்த்தை பலிக்க கூடாது.. நீதான் என்னை என் காதல் தேவதை கூட சேர்த்து வைக்கணும்”, என்று நடுரோட்டில் நின்று வானத்தை பார்த்து பேச,”ஐயோ பாவம், குருடுன்னு நெனச்சேன் டி,மனநலம் சரி இல்லை போல”, என்று சிரித்தபடி ஆருஷி ரிதுவிடம் சொல்லிக்கொண்டு அவனை கடந்து செல்ல,”ஐயோ.. கடவுளே.. இவளுக்கு உக்கார இடம் கொடுத்தானே அவன் எங்க..” என்று சுற்றி அபியை அடிக்க ஹர்ஷா தேட, சற்று தள்ளி ,ஏதோ ஒரு விளம்பரத்தை பார்த்தபடி நின்றான் அபி.
Nice nice 👌
ரொம்ப அழகான நட்பு… என் கண்ணே பட்டுடும் போல…
அதுசரி, இதுல யார், யாருக்கு ஜோடியோ தெரியலையே..???
Romba nalla iruku decent ah podhu story
Spr sis
Nice epi👍