6
ரம்யா தான் கொஞ்சமும் தயங்காமல் அருளிடம் கேட்டாள். “வர்மா சார், எங்கள் நிவியக்காவை ஊருக்கு உங்களுடன் அழைத்து சென்று வீட்டில் விட்டு விடுங்களேன்”
மற்றவர்கள் அவனிடம் எப்படி இந்த உதவியை கேட்பது என்று யோசித்து கொண்டு தயங்கி நின்ற
போது சின்னவளான ரம்யா மட்டும் கூட்டத்தில் சட்டென்று அப்படி கேட்டது நிவிக்கு தூக்கி வாரி போட்டது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? ஆனால் உடனே உற்சாகமாகி போன பெரியவர்களும் மற்றவர்களும் அதானே என்று நிவியை அவனோடு காரில் ஏற்றி விடாத குறையாக ஏக மனதாக அதை வழி மொழிந்தார்கள். நிவிக்கும் வேறு வழி இல்லை. அருளோடு கிளம்பினாள் அவள்.
பாதி தொலைவில் பொன்னி அருளிடம் அவளை சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட சொன்னாள். அவளுடைய மாமா மகளின் பேத்தி ஒரு தனியார் ஆசுபத்திரியில் பிரசவித்து இருக்கிறாள் என்றும் அவளை பார்த்து விட்டு வருவதாகவும் சொன்னாள். இவன் இடத்தை சொன்னால் அங்கேயே கொண்டு விடுவதாக சொல்லியும் அவள் கேட்க மறுத்து பஸ் ஸ்டாண்டில் இறங்கி கொண்டாள்.
பொன்னி இறங்கி கொள்ளவும் பின் சீட்டில் உட்கார்ந்து வருவது சரியில்லை என்று முன்னே வந்து அருள் அருகே உட்கார்ந்தாள் நிவேதிதா. இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே வந்தார்கள். அவனுடைய வேட்டி சட்டை அவளுடைய பட்டு புடவை கல்யாண வாசனை ஒருவித கிறக்கத்தை கொடுத்திருந்தது இருவருக்கும். அருகருகே இருந்தாலும் அமைதியாகவே இருந்தார்கள். அந்த அமைதி இன்னும் என்னன்னவோ கற்பனைகளை தூண்டி விட்டிருந்தது இருவருக்குமே.
நேரே அவன் வீட்டு முகப்பில் நின்றது கார். அவன் அவளை வீட்டிற்குள் வருமாறு அழைத்தான்.
தயங்கி நின்றவளிடம் சொன்னான். “உன் வீட்டில் தான் யாரும் இல்லையே. மாலை யாரேனும் வருவார்கள். எனவே மாலை போய் கொள்ளலாம். உள்ளே வா.”
அப்போதும் யோசித்து கொண்டு நின்றவளிடம் தலையை சரித்து தோள்களை குலுக்கி மிகவும் அலட்சியமாக அசால்டாக சொன்னான். “உன் மேல் நம்பிக்கை இருந்தால் மேலே வா”
அவனுடைய பாவனையை கண்டு ஒருவித பொய் கோபத்துடன் மேற் கொண்டு யோசிக்காமல் அவனுடன் மாடிக்கு போனாள் நிவி. வெளியே சாதாரணம் போல அவள் நடந்து கொள்ள முயன்ற போதும் மனதின் உள்ளே எழுந்த ஆவலால் எதிர்பார்ப்பால் மனது படபடப்பு அதிகமாக இருந்தது.
புன்னகைத்து கொண்டே படி ஏறியவன் கதவை திறந்து பேன் போட்டு அவளை அமர சொல்லி விட்டு கம்ப்யுட்டரில் அவன் வேலையை செய்ய தொடங்கினான்.
கதவை திறந்ததும் அருள் அந்த தனிமையையும் காரில் வரும் போது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த கிறக்கத்தையும் உடனே பயன்படுத்தி கொள்வான் என்று எதிர்பார்த்திருந்திருப்பாள் போலும். ஆனால் அவன் உடையை கூட மாற்றாமல் அவனுடைய வேலையை பார்க்க தொடங்கியது அவளுக்கு ஒருவித ஏமாற்றத்தை கொடுத்தது. என்ன வேண்டும் அவளுக்கு? அவளுக்கே புரியவில்லை. மெல்ல எழுந்து போய் ஜன்னல் அருகில் நின்று கம்பியை பிடித்து கொண்டு வெளியே வயல் வரப்பை பார்த்தவாறு நின்றாள்.
அப்படி எவ்வளவு நேரமாக வேடிக்கை பார்த்தாளோ..! தொலைவில் ஒரு பசுமாடு தன் கன்றுடன் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. அதன் மேல் ஒரு காக்கை உட்கார்ந்து பசுவின் முதுகை கொத்தி கொண்டிருந்தது. அதை அந்த மாடு வாலால் விரட்டி கொண்டிருந்தது. அதன் வால் அடிக்கும் போதெல்லாம் அந்த கன்று துள்ளி குதித்தது பார்க்க பார்க்க வேடிக்கையாக இருந்தது.
அவள் பின்னால் வந்து நின்றவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்து அவள் தோளில் முகம் பதித்து நின்றான். எங்கே அசைந்தால் நகர்ந்து விடுவானோ என்று அசையாமல் அப்படியே நின்றாள் அவள். அவளை தன் புறமாக திருப்பி அவள் முகத்தை கைகளில் ஏந்தி மென்மையாக அவள் கண்களின் மேல் காதில் என்று முத்தமிட்டான்.
இவ்வளவு நேரமும் இதை தான் எதிர்பார்த்திருந்திருந்தவள் அல்லவா அவள்.! அவன் கைகளில் நெகிழ்ந்தவள் இதனுடைய தொடர்ச்சியும் அது தன்னை எங்கே கொண்டு போய் நிறுத்த கூடும் என்பதும் அதனின் பின்விளைவையும் யோசிக்க கூடிய மனநிலையில் இல்லை.
அவளை அணைத்தவாறு பின்னோக்கி நகர்ந்தவன் ஒரு கதவில் முட்டி கொள்ள திறந்த கதவின் வழியே அவளையும் இட்டு சென்று ஒரு பெரிய கட்டிலின் விளிம்பில் அமர்த்தினான்.
“நிவேதி.’”
“ம்………..”
அவன் தரையில் அமர்ந்து கட்டிலின் விளிம்பில் அமர்ந்திருந்த நிவியின் மடியில் தலையை அழுத்தி
கொண்டான். தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த அவனை மிகுந்த அன்போடும் பரிவோடும் காதலோடும் பார்த்த வண்ணம் அவன் தலைமுடிக்குள் விரலை விட்டு கோதி விட்டு கொண்டிருந்தாள். மனதிற்குள் என்னெனவோ சிந்தனைகள் ஓடி கொண்டிருந்தது அவளுக்கு. மூன்று வருடங்களுக்கு முன்பு மனசும் உடலும் வறண்டு போய் இருந்தது அவளுக்கு. திருமணத்தில் விருப்பமில்லாமல் தட்டி கழித்து வந்தவள் இவனை திருமணம் செய்தது, அவனோடு மனைவியாக வாழும் சகல அதிகாரம் இருந்தும் வாழாமல் இருந்தது, இன்று அவனிடம் எந்தவிதமான உரிமையும் இல்லாத இந்த நிலையில் அவன் மேல் காதலால் கசிந்து உருகி கொண்டிருப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக இதோ இப்படி தனியறையில் அவன் கைகளில் இருப்பதும்…!
“நிவேதி.”
“ம்….”
அவனுடைய அழைப்பு அவளின் உயிரின் அடிவரை சென்று அசைத்து பார்த்தது. எழுந்தவன் அவளை இறுக அணைத்தவாறு அவனுடைய படுக்கையில் சாய்த்து கொள்ள போனான்.
அப்போது….!
அவன் தோள் சரிவின் வழியாக எதிரே இருந்த அந்த போட்டோவை பார்த்து விட்டு அவனை சற்றே பின்னுக்கு தள்ளி விட்டு அந்த ஆளுயர போட்டோவின் அருகில் போய் பார்த்தாள்.
அதில் நிவேதிதா நீல வர்ண ஜீன்ஸ் மேலே வெள்ளை கலர் குர்தா மெலிசான செயின் போட்டு கொண்டு வலது கையில் போனை பிடித்தவாறு படிக்கட்டில் இறங்கி வருவது போன்று இருந்தது. எப்போது எடுத்தது இந்த போட்டோ என்று அவளுக்கு நினைவில் வரவில்லை.
அது சரி, இந்த போட்டோ எப்படி இவன் கையில் வந்தது? அதை ஏன் இங்கே மாட்டி வைத்திருக்கிறான்?
super
💜💜💜💜
Interesting😍