Skip to content
Home » அபியும் நானும்-10

அபியும் நானும்-10

🍁 10

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  


                            பத்து நாட்களுக்கு மேல் ஆனது. கீர்த்தனா பள்ளியில் பணிப்புரிய துவங்கி, அவள் அபிநயாவை அழைத்து வந்து, அவள் வகுப்பில் விட்டுவிட்டு, இவளும் அவள் வகுப்பில் சென்று வகுப்பெடுக்க செய்வாள். சில நேரம் அபிமன்யு ரௌண்ட்ஸ் வரும் பொழுது வணக்கம் வைப்பதோடு சரி, நேர்பார்வை கூட பார்க்காமல் தவிர்த்தான்.


           ஆனால் சில நேரம் அபிநயாவோடு, மாலை விளையாடி, மகிழ்வான். அவனுக்கு அதில் சிறு சந்தோஷம் கிட்டியது.


         ராஜேஷ் மனதில் கேத்ரின் அவனும் சேர்ந்து வாழும் நோக்கம் அதிகமாக போனது. அதற்கு முக்கிய காரணம் ராஜேஷ் குழந்தை கேத்ரின் வயிரில் 50 நாட்கள் கருவாக உருவாகியது.


           முதலில் விவாகரத்து செய்வதில் பிடித்தம் இல்லாமல் இருந்த ராஜேஷ் கேத்ரின் தாய்மையில் விரைவாக முடிக்க சொன்னான்.


       அன்று தான் கோர்ட்டில் ராஜேஷ் கீர்த்தனா ஒன்றாக வந்து நின்றார்கள்.


                    அபிமன்யு அதே நேரம் வந்திருக்க கீர்த்தனாவை கண்டவன் முகம் மலர்ந்து அவளருகே செல்ல, அங்கே ஒருவன் அவளிடம் பேசுவதை கண்டு அப்படியே நின்றான்.
     தூரத்தில் இருந்தே யாராக இருக்கும்? இங்கு எதற்காக வந்து இருப்பாள்? என்று யோசித்தவன் குழம்பி போனான்.

அதற்குள் ராஜேஷ் கீர்த்தியிடம் ”ஆசை ஆசையா காதலிச்சேன் டி. இப்படி டிவோர்ஸே வாங்க வைப்பேனு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை” என்று ராஜேஷ் குறைபட்டான்.


    ”யாருக்கும் அவங்க தவறு கண்ணில்படாது ராஜேஷ். இந்த நிமிஷம் வரை நான் அதே கீர்த்தனா ராஜேஷ் தான். ஆனா நீ தான் கேத்ரின் ராஜேஷா மாறி அவளுக்கும் உன் பேரில் பங்கு கொடுத்து நிற்கற… அது மட்டுமில்லை அவள் வயிற்றில் உன் குழந்தை இருக்கு. எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதே.. எல்லாம் தெரிந்தும் தான் கண்டு கொள்ளாமல் இருக்கேன். அந்த குழந்தையாவது உன்னிடம் அன்பை முழுசா பெறட்டும் வாழ்த்துகள்.

நீ கேட்கலாம் நீ தவறு செய்யலையா என்று? நான் செய்த தவறு நீ வேறொருத்தி பிடியில் இருந்தும் வேடிக்கை பார்த்து அபிநயாவை கவனிக்க செய்தது தான். ஆனா அது கூட உன் நலன் யோசிச்சேன். என்கூட தான் உனக்கு ஒரு நிம்மதியான வாழ்வு அமையலை ஆனா கேத்ரின் கூடவாது அமையட்டும்னு தான் மனசை மாற்றிக்கிட்டேன். இனியாவது சந்தோஷமா இரு” என்றதும் ராஜேஷ் அந்த பக்கம் செல்ல கீர்த்தனா அபிமன்யு நோக்கி வர கண்டு முகத்தினை மறைக்க பார்த்தான்.

அவளோ ”என்ன சார் நீங்க இங்க?’ என்றாள் கீர்த்தனா.
     ”அது…ஸ்கூல்காக நிலம் வாங்கியது கொஞ்சம் பத்திரம் பதிவு செய்து இருந்தேன் அந்த வக்கீல் இங்க தான் இருந்தார் அதான் பார்த்து பேச…” என்று சொல்லி அவளின் கண்களை ஊடுருவி நின்றான்.


     ”நீ… நீங்க?” என்றான் ஒருமையில்… பேசி தடுமாறி பன்மையில் மாற்றி
      ”எதுக்கு சார் நீ என்றே சொல்லுங்க பரவாயில்லை” என்று சொன்னவள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி
    ”நாங்களும் பதிவு செய்ய தான் வந்தோம்.. விவாகரத்து பதிவு செய்ய..” என்றவள் இமை தாழ்த்தி நின்றாள். அபிமன்யுவிற்கு கொஞ்ச நேரம் முன் பேசிய ராஜேஷை பார்த்தான்.


     அவன் பார்வை சென்ற திசையில் கீர்த்தி ”அவர் தான் சார்.. ராஜேஷ்…” என்றாள்.
     கொஞ்ச நேரத்தில் கேத்ரின் கையை பற்றி தொத்தி கொள்ள அபிமன்யு இருவரையும் பார்த்து மீண்டும் பார்வையிலே கேட்க
      ”அவங்க தான் ராஜேஷை மறுமணம் செய்து கொள்ள போற பெண் கேத்ரின்” என்று சொன்னவள்
    ”சாரி நான்.. ஏதும்.. ஹர்ட் ஆஹ் இருந்தா…. எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான் அபிமன்யு.


        ”அதெல்லாம் மறைக்க ஒன்றும் இல்லை ஸார்.. எங்க வீட்டின் அப்பர்ட்மெண்ட்ல பலருக்கும் தெரிந்த அம்பலம் தான். எல்லாருக்கும் ஓரளவு தெரியும். இனியும் என் வாழ்வில் மறைக்க என்ன இருக்கு? ஆனா இன்னிக்கு தான் சந்தோஷமா இருக்கற பீல் பண்றேன்.. இந்த கல்யாணம் காதல் என்பது எல்லாம் எவ்ளோ பெரிய முட்டாள் தனமானது புரிந்தது” என்றவள்.
     ”என்ன காரணம்?” என்றான் கேட்க தயங்கி,
   ”அபி தான் சார்” என்றதும் ‘நானா?’ என்று மனம் எண்ணி நிமிர, அவளின் குழந்தை பெயரும் அபி என்றதில் அபியால் என்ன பிரச்சனை வந்திட போகுது” என்று சாதாரணமாக கேட்டவனை வினோதமாக பார்த்தாள் கீர்த்தனா.


   ”என்ன சார் என் பொண்ணு பற்றி தெரியாம பேசறிங்க..”


    ”இல்லையே அவள் ஒரு அழகான பார்பி டால்… அதுவும் அந்த சாண்டல் பிரோக் டிரஸ் செம கியூட்… அவளால என்ன பிரச்சனை?” என கேட்க தொண்டை அடைக்க
      ”அவள் ஸ்பெஷல் சைல்ட் ஸார்.. உங்களுக்கு…”
      ”அதுவும் தெரியுமே.. ஸ்பெஷல் சைல்ட் ஸ்பெஷல் மாம் கையில் தான் இருப்பாங்க.. பின்ன கடவுளின் குழந்தைகளை வளர்க்க தனி தகுதி வேணுமே” என்ற அபிமன்யு சொல்ல, கீர்த்தனா அவனை இமைக்காமல் பார்த்தாள். அந்த பார்வையில் ஆச்சரியம் மட்டுமே.


      ”வாட் ஹப்பேன் கீர்த்தனா? ஸ்டன் ஆகியிருக்கிங்க?” என்று கேட்டதும்
     ”முதல் முறை இப்படி சொல்லி கேட்கறேன்.. இதுவரை இப்படி யாருமே சொன்னது இல்லை எல்லாரும் வருந்தி உச்சு கொட்டுவாங்க.. பட் நீங்க வித்தியாசம் சார்”
     ”சாரை விடுங்க” என்றதும் விழித்தவள்”அபிமன்யு கூப்பிடுங்க” என்றான்.


     ”அபி… அபிமன்யு… உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா அபி என்று கூப்பிட முடியாது. என் பொண்ணு பெயர்.. அதனால மனு கூப்பிடவா?” என்று கீர்த்தி கேட்க
      ”வாவ் அப்படியே கூப்பிடுங்க.. என்னை எல்லோரும் அபினு தான் சொல்லுவாங்க நீங்க மனு சொல்லுங்க” மனமோ நீ ஸ்பெஷல் சொல்லறியா? என்று கிண்டல் புரிந்து முன்னே வர,
     ”நீ சொல்லுங்க போதும் மனு.. நான் கிளம்பறேன்” என்று நகர்நதாள்.


     ”உங்க லைஃப் இனி..” என்று கேட்க தயங்கினான்.
     ”அதான் அபி இருக்க கவலை என்ன” என புன்னகைத்து அவளின் ரெட் காரில் பறந்தாள்.
       அபி இருக்க இனி நீ கவலை படக்கூடாது கீர்த்தி என்றே சொல்லி அவனும் கிளம்பினான்.


         வழி நெடுங்கிலும் அவள் விவாகரத்து பதிவு செய்து பெற்றுட்டா.. இனி அவள் மிஸ்ஸஸ் ராஜேஷ் இல்லை. அவனும் வேற வாழ்க்கை தேடிக்கிட்டான். இனி கீர்த்தனா என் வாழ்வில்……… என்று மகிழ ‘பட் அவள் ஒப்புக்கணும்… அப்பா ஒப்புக் கொள்ளணும், பத்து வயசுல ஒரு குழந்தையோட இருக்கற ஒருத்திய விரும்பறேன் சொன்னா, அப்பா மட்டுமில்லை மொத்த சமுதாயமும் என்னை காரி உமிழும்…. ஆனா இது காதல்னு சொல்ல முடியுமா? முதலில் கீர்த்தனா மனதில தான் இடம் பிடிக்க முடியுமா.?

இன்று தான் சந்தோஷம் உணருகின்றேன் சொல்லறா… காதல் கல்யாணம் என்பது எல்லாம் முட்டாள் தனமானது சொல்றா.. அவளிடம் போய் மறுகல்யாணம் பற்றி பேச முடியுமா? கொஞ்சம் பொறுமையா போகலாம் என்று எண்ண, மனசாட்சியோ ”உனக்கு வயசு 33 டா.. இன்னும் என்ன பொறுமை? என்று சிரிக்க அவனவன் நாற்பதில் தான் கல்யாணமே பண்றான்.. நீ சும்மா இரு என்று மனசாட்சியையும் அடக்கினான்.


          இதுவரை ஆண்டு விழா புகைப்படம் காணக்கூடாது என்று மறைத்து வைத்திருக்க அதனை எடுத்தான். அதில் கீர்த்தனா, அபிநயா, அபிமன்யு இருக்கும் புகைப்படம் போனில் கிராப் செய்து பதிவு செய்தான். இரவு அதனையே பார்த்தவன் அபியை தனது மகளாகவே எண்ண துவங்கினான்.


                கீர்த்தனா நீண்ட நாட்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் அபிக்கு டோரா போட்டு விட போனில் பாடலை இசைக்க விட்டு சமைத்தாள்.


        மணக்க மணக்க அபிக்கு பிடித்த பருப்பு சாதம் செய்து, குழைத்து, நெய் ஊற்றி ஒரு கப்பில் வைத்து அபியிடம் டேபிளில் வைக்க, அங்கே சிந்தாமல் சாப்பிட்டு முடித்தாள். அதனை பார்க்க கீர்த்தனாவுக்கு மனம் பூரித்தது.

அபி உணவு முறை எல்லாம் அத்தனை பெர்பெக்ட்… ஆடை கூட அப்படி தான் இந்த பேச்சு தான் கொஞ்சம் திக்கும்.. தடுக்கும்… புரிந்து கொள்ளும் திறன் குறைவு.. இப்போ பெரியவர்களே நிறைய புரிந்து கொள்வதில் பூஜ்ஜியம் தான் என்றெண்ணி ஹாலில் பெட் விரித்து படுக்க செய்தார்கள். அபி கீர்த்தியை அணைத்து கொண்டு உறங்க முயன்றாள்.


     ‘இன்னிக்கு என்ன அச்சு? என் முகம் நிஜமா மலர்ந்து இருக்கு… ராஜேஷ் டிவோர்ஸே கொடுக்க பதிவு செய்ததாலா? இல்லை இனி தினமும் மது வாடை வராது என்பதாலா? ஒரே வீட்டில் ராஜேஷ் இல்லை என்ற நிம்மதியா? மனு சொல்லிய அபி கியூட் என்றாறே.. என் மகளை இப்படி சொல்ல செய்தவர் மிகவும் நல்லவர். அவர் பார்வையில் அபி பரிதாபம் இல்லை.. நர்சரி குழந்தையை கொஞ்சும் இயல்பே அவரிடம் கண்டேன் என எண்ணி உறங்கினாள்.


            அடுத்த நாளும் இதே புத்துணர்ச்சியோடு கிளம்பினாள் கீர்த்தனா. போகும் பொழுது இருக்கும் சந்தோஷம் மீண்டும் வரும் பொழுது இருக்குமா என்றறியாது மகிழ்ந்து போனாள்.

2 thoughts on “அபியும் நானும்-10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *