தன் தந்தை பசுபதியிடம் தனக்கு எந்த மாதிரியான பெண் வேண்டும் என்று கூறி விட்டு இளமாறன் எப்போதும் போல் தனது தந்தையினுடைய தன்னுடைய அழுக்கு துணிகளை எல்லாம் எடுத்து கொண்டு துவைத்து குளித்து வர வீட்டின் பின் இருந்த துவைக்கல்லுக்கு சென்று விட்டான்.
துணி துவைப்பதை தனக்கு ஒரு உடற்பயிற்சி என்று கூறியே அவர்கள் இருவரின் உடைகளையும் அவனே துவைப்பான்… கூடவே வீட்டையும் கூட்டி துடைக்கும் வேலையை அவன் எடுத்து கொள்வான்… அவனின் தந்தை சமைக்கும் வேலையை அவரின் கரத்தில் எடுத்து கொள்வார்.
ஆகையால் இளமாறன் அவனின் வேலையை பார்க்க சென்றதும் பசுபதியும் இவ்வளவு நல்லவனாக இருக்கும் தன் மகனுக்கு, “அவனின் மனம் கோணதபடி எப்போதும் அவனின் முகத்திலும் வாழ்விலும் மகிழ்ச்சியை தந்து அவனை தாங்கும் பெண்ணாக அவனுக்கு அமையணும் கடவுளே…” என்று வேண்டி கொண்டு காலைக்கும் மதியத்திற்கும் உணவு சமைக்க சென்று விட்டார் சமயலறை நோக்கி.
இவரின் வேண்டுதல் கடவுளின் செவியில் கேட்டு விட்டதோ என்னம்மோ ஒருவர் பசுபதியிடம் பெண் பார்க்கும் விஷயத்தை பத்தி பேச வந்து கொண்டு இருந்தனர்.
இயலினியோ எப்போதும் போல் தனது அன்றாட வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்… இப்போது வேறு அவள் வயலில் போட்டு இருக்கும் நெல்லுக்கு பருத்திக்கு எல்லாம் மருந்து அடிக்க வேண்டிய நேரம் என்பதால் அவளின் வேலை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தது.
பால் கொண்டு வந்து பால் பண்ணையில் ஊத்தி விட்டு நீர் ஆகாரம் கொஞ்சம் குடித்து விட்டு மருந்து அடிக்கும் மிஷின்னை தோளில் மாட்டி கொண்டு கரத்தில் வாங்கிய மருந்தினை பிடித்து கொண்டு மூக்குக்கு மாட்ட மாஸ்க் துண்டு எல்லாம் எடுத்து கொண்டு காலையிலே காட்டிற்கு சென்று விட்டாள்.
பேர்லரில் தண்ணீர் பிடித்து வைத்து இருந்ததால் நான்கு பக்கெட்டில் தேவையான மருந்தை கலந்து தண்ணீரை ஊத்தி குச்சி வைத்து கலங்கினாள்… அதை தள்ளு வண்டி போல் தள்ள ஒன்று வைத்து இருக்கின்றாள்… அதன் மீது வைத்து கொண்டு அதை வரப்பின் பக்கம்மாக தள்ளி கொண்டு வந்து வைத்தாள்.
இதே போல் தனது காட்டை சுத்திலும் மருந்து கலந்த தண்ணீர் பக்கெட்டை வைத்து விட்டு ஏழு எட்டு லிட்டர் பிடிக்கும் மருந்து மிஷினில் மருந்து கலந்த தண்ணீரை ஊத்தி கொண்டு தனது தோளில் மாட்டியவள் தனது நிலத்தில் இறங்கினாள்.
மருந்து அடித்து கொண்டே ஒரு மெனை முழுவதும் சென்றால் ஒரு டேங்க் காலியாகி விடும்… அங்கு டேங்க் காலியாகும் போது பக்கெட் இருக்கும் இடம் வந்து விடுவாள்… பிறகு மீண்டும் அந்த டேங்கை முழுவதுமாக நிரப்பிக் கொண்டு அடுத்த மெனை என்று அடிப்பாள்… இவ்வாறு அவளே அவளின் ஐந்து ஏக்கர் நிலத்திற்கும் மருந்து அடிக்கும் வேலையை செய்தாள்.
அவள் செய்து முடிக்கும் போது எல்லாம் மணி இரண்டை தொட்டு விட்டது… அப்படியே சோர்ந்து போயி வந்து மரத்தடியில் அமர செல்லத்தாயி பேத்திக்கு நன்றாக சமைத்து உணவு எடுத்து கொண்டு வர சரியாக இருந்தது.
ஏனோ, “நல்லா படிச்ச புள்ள நல்லா படிச்சி வேலைக்கு போயிருந்தா சொகுசா இருந்து இருப்பாளே… இப்படி காடு கரையில என் பேத்தி கஷ்டப்பட தேவை யில்லையே…” என்று அவர் எப்போது எல்லாம் இயலினி கஷ்டம்மாக உடலை வருத்தி கொண்டு வேலை செய்கிறாளோ அப்போது எல்லாம் செல்லத்தாயிக்கு அதங்கம்மாக இருக்கும்.
அதுவும் இது போல் மருந்து அடித்தால் அன்றில் இருந்து ஒரு நான்கு நாளைக்கு காய்ச்சல் வந்து உடம்பு முடியாமல் போய்விடும் சிலருக்கு… நம்ப இயலினிக்கும் அப்படி ஆகும்… ஆனாலும் செல்லத்தாயி இருக்கும் போது அதை எல்லாம் இயலினி பக்கம் அண்டவே விட மாட்டார்… அன்றில் இருந்து பத்து நாளைக்கு கசாயத்தை போட்டு தள்ளி விடுவார்.
இருந்தாலும் அவரின் ஆதங்கத்தை எங்காவது கொட்டி தானே ஆக வேண்டும் அதான்… வொயர் கூடையில் சாப்பாட்டை எடுத்து கொண்டு வரும் வழியில் எல்லாம், “இப்ப எதுக்கு இவ இப்படி தானியாவே எல்லா வேலையும் இழுத்து போட்டு கிட்டு செய்யிறா? நாலு ஆள விட்டா அவங்க பாட்டுக்கும் வந்து போன சுருக்கு கூட தெரியாம அடிச்சி முடிச்சிட்டு போயிடுவாங்க… ஆம்பளைங்க செய்யிற வேலைய எல்லாம் இப்படி மூச்ச பிடிச்சி கிட்டு தனியாவே செய்யிறாளே… காலையில இருந்து சோறு தண்ணீ கூட குடிக்கலையே எம்மூட்டு புள்ள… அப்படி யாருக்கு எதுக்கு டி சம்பாதிக்கிற…” என்று புலம்பி கொண்டே வந்தவர்
அங்கு காட்டிலே இருந்த சிறு குளியல் அறையில் தன் பேத்திக்காக துணியை எடுத்து போட்டு தண்ணீர் பிடித்து வைத்து அவளை கூப்பிட அவளும் வந்து ஒரு குளியலை போட்டாள்… போட்டு விட்டு வந்தவள் தனது பாட்டியை பத்தி தெரிந்தே இருப்பதால் அவர் போட்டு அமர்ந்து இருந்த படுதாவில், “இதுக்கு மேல எதையும் புலம்பாத கிழவி… பசி வேற காத அடைக்குது… நீ பாட்டுக்கு புலம்பி கிலம்பி வாங்கி கட்டிக்காத…” என்று கூறியே உட்கார்ந்தாள்.
பேத்தி பச்சிக்கிறது என்றதுபே பாட்டி செல்லத்தாயி தனது வாயை செல்லோடேப் போட்டு ஒட்டாத குறையாக ஒட்டி கொண்டு அவரே எடுத்து வந்த சாப்பாட்டில் சாம்பாரை ஊற்றி கத்திரிக்கா உருளை கிழங்கு முருங்கைக்காய் எல்லாம் கலந்து செய்த கூட்டினை தொட்டுக்கையாக வைத்து அவரே அவர் கையால் பேத்திக்கு ஊட்டினார்.
அவளும் அவர் ஊட்டிய உணவை எல்லாம் வாங்கி கொண்டு, “நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி நல்லா சுட தண்ணீல ஒரு குளியல் போடணும் கிழவி…” என்றாள்.
பாட்டியும், “ம்…” என்றவர் மேல எதுவும் பேசவில்லை.
இயலினியும், “ஆளு போட்டு மருந்து அடிச்சி இருக்கலாம் தான்… ஆனால் அவங்க ஒரு டேங்குக்கு இருபது ரூபாய்னு சொல்லி கூலி கேக்குறாங்க… எப்படியும் இரனூத்தி ஐம்பது டேங்க்காவது அடிக்கிற மாதிரி வரும்… இதுக்கே ஐயாயிரம் செலவாகிடும்… அத எடுக்க பாலு காசுல கைய வைக்கணும்… அதுக்கு நான் பாட்டுக்கும் கொஞ்சம் அலுப்பு பார்க்காம அடிச்சிட்டா இலாபம் தானே…” என்றாள்.
செல்லத்தாயிக்கு தெரியும் தன் பேத்தி எப்படி எல்லாம் சிக்கனம் பிடிப்பாள்… அதுக்கு தன்னிடம் என்ன என்ன சாக்குகள் எல்லாம் சொல்லுவாள் என்று அவருக்கு நன்கு தெரியும்… ஆகையால் அவர் அமைதியாக ஊட்டும் வேலையை மட்டும் செய்ய வாங்கி கொண்டே, “இப்ப ஏன் இப்படி அமைதியா இருக்க? ஏதாவது பேசு…” என்றாள்.
அவரும், “வேணாம்மா… நான் பாட்டுக்கு ஏதாவது பேசினா உனக்கு கோவம் வரும்… அப்பறம் இனிமே சோத்துக்கூடைய எல்லாம் தூக்கி கிட்டு இங்க வராதன்னு திட்டுவ… அதுக்கு நான் பாட்டுக்கு அமைதியாவே வந்த வேலைய முடிச்சிட்டு கிளம்புறேன்…” என்றார்.
இயலினிக்கும் தன் பாட்டி தன் மீது கொண்டு உள்ள பாசத்தை நினைத்து மகிழ்வாக இருந்தது… அதோடு பெத்த மகளையே ஒதுக்கி வைத்து விட்டு தன்னுடன் அவர் இருப்பதே அவளுக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு… எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அவர கஷ்டப்படுத்திடவே கூடாது… அவர் சந்தோஷமா இருக்கணும்… அவருக்கு என்ன எல்லாம் தேவையோ அது எல்லாம் பார்த்து பார்த்து செய்யணும் என்று எப்போதோ முடிவு எடுத்து விட்டாள்.
ஆகையால் அவள், “சரி… சரி… எனக்கு போதும்…” என்று கூறி தண்ணீர் குடித்து விட்டு, “இப்போ எதுக்கு எதுவும் பேச மாட்டேங்குற? இப்படி எல்லாம் அமைதியா இருக்காத… எனக்கு ஒரு மாதிரி இருக்கு… ஏதாவது பேசு…” என்று கூறியே அவரின் மடியில் சிரத்தை வைத்து படுத்து கொண்டாள்.
செல்லத்தாயும் பேத்தி உண்டு முடித்த மீதி உணவை அவரும் உருட்டி வாயில் போட்ட படியே, “நான் உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கேன்…” என்றார்.
அவர் கூறியதும் முடி இருந்த இமைகளை திறந்து, “என்ன சொன்ன?” என்று கேட்க
அவரும், “அதான் நான் சொன்னது தெளிவா உன் காதுல விழுந்ததுல… அப்பறம் என்ன? உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன்… அதனால நாலஞ்சு இடத்துல தெரிஞ்சவங்க கிட்ட மாப்பிள்ளைக்கு சொல்லி இருக்கேன்… அவங்களும் சொல்லி இருக்காங்க… மாப்பிள்ளைய நான் பார்த்து எனக்கு பிடிச்சி இருந்தா அவன நீ கட்டிக்கணும்…” என்றார்.
அவர் கூறியதை எல்லாம் கேட்ட இயலினி பாட்டியை சிறிது நக்கலாகவே பார்த்து, “இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல… பொண்ணு மாப்பிள்ளைய பார்த்து புடிச்சி இருக்குன்னு சொல்லணும்… நீ என்னடான்னா நீ பார்த்து உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருந்தா என்னைய கட்டிக்க சொல்ற… இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்?” என்றாள்.
அவள் இவ்வாறு நக்கலாக கேட்டதிலேயே தான் கூறியதை அவள் பெரியதாக எடுத்து கொள்ள வில்லை என்று புரிந்து கொண்ட செல்லத்தாயி, “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்… நான் மாப்பிள்ளைய பார்த்து எல்லாம் சரியா இருக்குன்னு தெரிஞ்சதும் உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவேன்… அந்த மாப்பிள்ளைய உனக்கும் பிடிக்கும்… அவனோட நீ வாழ்ந்தா சந்தோஷமா இருப்ப… ஆனால் நீ அத எல்லாம் கேட்க மாட்டேன் அது இதுன்னு ஏதாவது வீம்பு பிடிக்கிற மாதிரி இருந்தால் அதுக்கு அப்பறம்…” என்றவர் தன் மடியில் இருந்த இயலினியின் தலையை எடுத்து விட்டு எழுந்து கொண்டார்.
இவ்வாறு ஏதோ கூற வந்தவர் அப்படியே நிறுத்தி விட்டு விலகியவரை பார்த்த இயலினி, “அப்பறம் என்ன? என்னைய விட்டுட்டு போயிடுவியா?” என்று கேட்க சாப்பிட்ட பாத்திரத்தை அலசிய படியே, “உன்னைய விட்டுட்டு போக எனக்கு வேற போக்கெடம் எங்க இருக்கு? அதனால நான் உன்னைய விட்டுட்டு எல்லாம் போக மாட்டேன்… ஒரே அடியா இந்த உலகத்த விட்டுட்டு போயிடுவேன்…” என்றார்.
அவர் கூறியதை கேட்டதும் ஒரு நொடி அவள் மனம் திடுக்கிட்டு தான் போனது… அவள் திருமணமே பண்ண மாட்டேன் என்ற கொள்கை கொண்டு திருமண வாழ்க்கையை வெறுக்க கூடியவள் எல்லாம் இல்லை.
என்ன அதை பத்தி அவள் எதுவும் யோசிக்க வில்லை… அவ்வளவே… ஆனால் அவளின் குணத்தையும் அவளின் செயலையும் கண்டு ஊரில் உள்ளவர்கள் எல்லாம் அவளை பேசாத வார்த்தைகளே இல்லை… படித்து முடித்த பெண்களாக இருந்தால் இருவத்தி மூன்று இருவத்தி நான்கு வயது பெரிய வயதாக தெரியாது… இப்போதே கல்யாணம் பண்ணும் வயது என்று கூறுவர்.
ஆனால் இயலினி பதினெட்டு வயதிலே படிப்பை விட்டு விட்டு விவசாயம் பார்ப்பேன் என்று வீட்டில் காட்டில் என்று ஊர் கண்ணில் ஐந்து வருடங்களுக்கு மேல் தினமும் பட்டு கொண்டே இருக்க அவளை பேசாத பேச்சியில்லை… அதன் விளைவு தான் பொறுத்து பொறுத்து இருந்த செல்லத்தாயின் இறுதி முடிவாக இந்த வார்த்தையை உதிர்த்து தன் பேத்திக்கு வாழ்க்கையை அமைத்து தர முடிவு எடுத்து விட்டார்.
அப்படின்னா… பாட்டி அவளோட மனம் கவர் கள்(ண)வன் இளமாறனையே கொண்டு வந்தா தேவலை.
நன்றிகள் சிஸ்
Neenga edutha mudivu xrt tha paati iyal avalukunu oru vazhkai thunai venum thane ava sammathipa neenga pakura mappilaiku
thank you sis
Good epi
Paati ni vera level po…. 👌👌👌