அத்தியாயம்-21
“வநீஷா” என்ற பெயரில் பயந்து தான் போனாள்.
அது தன் அக்கா பெயராயிற்றே. அந்த பெயரை ரஞ்சித் கூறுகின்றான்’ என்று நெற்றி சுருங்கியது.
வருணிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சொல்லற நீ.. வநீஷா என் அக்கா. என்னோட அக்கா. அவ பொண்ணு. நீ… நீ…ஆம்பள?’ என்று ரஞ்சித்தை ஏறயிறங்க பார்த்தாள்.
ரஞ்சித்தோ “நீ ஆம்பள.. தேங்க்ஸ் வருணி. உன் வாயால இந்த வார்த்தை கேட்க சந்தோஷமா இருக்கு. பிகாஷ் கஷ்டப்பட்டது எல்லாம் வீணாக கூடாது பாரு. நீ என்ன ஆம்பள மாதிரியா இருக்க? பொண்ணு மாதிரி இருக்கன்னு நீ சொல்லிட்டா என் மனசு தாங்காது. இப்ப சொன்னியே இது.. இது தான்.” என்று கூற, வருணிகா இன்னமும் மாறாத திகைப்பில் திளைத்திருந்தாள்.
“என்ன பத்தி சொல்ல வேண்டிய கட்டாயம் வந்துடுச்சா வருணி?” என்று வருணியின் தாடை பிடிக்க இம்முறை ஒவ்வாமையே வந்தது.
தன்னை தீண்டுவது வநீஷா என்ற பெண் ஆணாக மாறி ‘ரஞ்சித்’ என்ற பெயரில் அல்லவா தொடுவது. அதுவும் காதல் என்ற வார்த்தையை பூசி, என்றதும் எழுந்து நின்று விட்டாள் வருணிகா.
அவள் எழவும் அவள் மடியில் வைத்த பையிலிருந்து மில்க் ஷேக் இரண்டும் கீழே விழுந்து உருண்டது.
அதனை எடுத்து உணவு மேஜையில் வைத்தான் ரஞ்சித்சாஹிர் என்னும் வநீஷா.
ஆம் வநீஷா… வநீஷா தான் பெண்ணாக இருந்து ஆணாக உருமாற்றம் பெற்று இன்று முழு ஆணாக வருணிகா முன்னால் நிற்கின்றான்(ள்).
“நீ... நீ.. நீ ஏன்?” என்று கேட்டு மற்ற விரிவான வினாவை கேட்கவே வாய் கூச, கேட்க முடியாது துண்டித்தாள் வருணிகா.
“சொல்லறேன்… இனி மறைச்சு வைக்க முடியாதே. நீ தான் என்னை கண்டுபிடிச்சிட்டியே. உன் மகிழனை அடைச்சி வச்சது நான்னு தெரிந்து என் கூட வாழ்வியா நீ.
நான் ஏன் இப்படி மாறினேன்னு சொல்லறேன்.” என்றவன் உணவு மேஜை மீது ஒயிலாக அமர்ந்தான்(ள்).
“நமக்கு ஒரு அம்மா. ஆனா அப்பா வேற வேற இது தெரியுமா?” என்று கேட்க, வருணிகா தலைகுனிந்து, “கொஞ்ச நாள் முன்ன அம்மா சொன்னாங்க. நீ அவங்களோட முன்னாள் கணவர் எழிலனோட மகள் வநீஷா என்று.
ரேணுகா அம்மாவை எங்கப்பா இரண்டாம் கல்யாணம் செய்தவர்னு தெரியும்.” என்று கூறினாள்.
“ஆஹ்… கரெக்ட். ஆனா எனக்கு எப்ப தெரியும் தெரியுமா? நான் இரண்டாவது படிக்கும் போது ஷீலா அத்தை என் குமட்டுல குத்திகுத்தி சொன்னாங்க.
‘எவனோ பெத்த குழந்தையை எங்கண்ணா சுமக்குறான்’னு மகிழன் அம்மா என்னை போட்டு பாடாய்படுத்தி உலுக்குவாங்க.
அம்மாவிடம் சொல்லறப்ப அவங்க என்னை அரவணைச்சு ‘அத்த சொல்றதை காது கொடுத்து கேட்காதடி தங்கம்’னு சொல்வாங்க.
நானும் பச் என்னவோ அத்த சொல்லறாங்கன்னு கடந்தேன்.
எனக்கு மகேஸ்வரனோட அன்பு தேவையேயில்லை. அதான் அம்மா ரோணுகா இருக்காளேனு தோணும். இது நம்ம கதைக்கு பெரிய மேட்டரே இல்லை.
பட் நான் வளர வளர பொட்டு வைக்க பிடிக்கலை. கம்மல் போட பிடிக்கலை. வளையல், கொலுசு இப்படி பெண்கள் சம்மந்தப்பட்ட அணிகலன்கள் சுத்தமா பிடிக்கலை. பாவாடை சட்டை நீண்ட முடி, அதை பிடிச்சி கட்டி, பூ வச்சிட்டு சுத்தியது இதெல்லாம் கூட எதுவுமே பிடிக்காம இருந்தது.
அதுக்கு பதிலா முகத்துல மீசை வரைய பிடிச்சது. அப்பா ஷர்ட் போட்டுக்க பிடிச்சது.
அதுவும் முழங்கை வரை ஏத்தி மடிச்சி, பஸ்ட் பட்டனை திறந்து விட்டு, சும்மா கெத்தா நடக்க பிடிச்சது.
என்னை அதிக கவனத்தோடு வளர்த்த அம்மா கண்ணுக்கு என்னோட மாற்றம் தெரிய வந்தது.
என்ன மாற்றம்னு புரியுதா? ஆஹ்… பெண்ணாக இருந்த எனக்குள்… நான் பெண் இல்லைன்னு தோணுச்சு. நான் ஆம்பளைனு தெரியப்படுத்த நினைச்சேன்.
நீயே சொல்லு தழைய தழைய பாவாடை சட்டை போட்ட நான், அதை அவிழ்த்து போட்டு சொல்ல முடியுமா? அதான் நெஞ்சு பழத்து ‘நீ பொம்பளை’ன்னு என்னை காட்டி கொடுத்துச்சே. இதுல வயசுக்கு வேற வந்துட்டேன். சை.. அது இன்னமும் மோசம்.
எனக்கு அது எதுவும் பிடிக்கலை வருணி. அம்மாவுக்கு என்னை பொண்ணா தான் பிடிக்கும் போல என் மாற்றத்தை பார்த்துட்டு, தனியா கூப்பிட்டு கிளாஸ் எடுத்தாங்க.
என்னென்னவோ சொன்னாங்க. மானம் போகும், வீட்ல எல்லாரும் கேலி பேசுவாங்க, உறவுகளிடம் மரியாதை கிடைக்காது, அதுயிதுன்னு அடுக்கினாங்க.
சரி அம்மா சொல்றாங்க. நமக்கு தான் ஏதோ வியாதின்னு விட்டுட்டேன்.
இந்த ஆட்டோமெடிக்கா சில விஷயம் நம்ம குணத்தை பிரதிபலிக்கும் பாரு. அப்படி தான் ஹால்ல உட்காரும் போது பப்பரப்பா காலை விரிச்ச உட்காருவேன். பசங்களான மகிழனோட விளையாட ஊர்சுத்தினேன்.
நம்ம அம்மா ரோணுகா துடப்பகட்டையால் வெளுத்துட்டாங்க. அதுக்கு பிறகு வேலை வேலை வேலை பெண்டு நிமிர்த்தினாங்க.
பொட்டச்சிங்களோட வேலை பாத்திரம் கழுவு, வீடு பெருக்கு, தண்ணி இறைச்சி ஊத்து, இப்படி பம்பரமா வேலை செய்ய வச்சி அம்மா என்னை பொண்ணா தக்க வைக்க முயற்சி செய்தாங்க. சூடு கூட வச்சாங்க.
என்ன முயன்று ஒன்னுத்துக்கும் உபயோகமாகலை.
பொண்ணாயிருந்த நான் எனக்குள்ளயிருந்த ஆணை தான் ரசித்து வளர்க்க ஆரம்பிச்சேன்.
ஸ்கூல்ல… அப்பாவிடம் இரண்டு கம்பிளைன் வந்துச்சு. பசங்களோடவே அதிகம் பேசறா, விளையாடறானு. இதுல ஒரு பொண்ணு அப்பாவிடம், ‘பாருங்க அங்கிள் என்னை கல்யாணம் பண்ணிக்கறியானு வநீஷா விளையாட்டு தனமாக கேட்கறா’னு ஒரு பொண்ணு போட்டு கொடுத்துட்டா.
அப்ப தான் உங்கப்பா மகேஸ்வரனுக்கும் என் மேல டவுட் வந்துடுச்சு.
மறுபடியும் அட்வைஸ்… நீ இப்படி இருக்கணும். அப்படி இருக்க கூடாதுன்னு. ஒரு கட்டத்துல என்னால் கேட்க முடியலை. ஏன்னா… நீ வயசுக்கு வந்துட்ட. நான் ஏன் எவளோயொருத்தியை ரசிக்கணும்? தேவதை மாதிரி நீ இருக்கும் போது?
நீ தாவானி போட்டு தலைவாரி அலங்கரிச்சு நடக்குமா போது அந்த பதினைந்து வயசுல ஒரு தேவதை ஒவ்வொரு இளைஞன் மனசுக்குள்ள கனவுக்குள்ள வருவாளே அப்படியிருப்ப நீ.
அப்ப எல்லாம் ‘இவ மட்டும் இந்த பெண் என்ற அடையாளத்தோடு சந்தோஷமா நடமாடுறா, நம்ம மட்டும் ஏன் ஆம்பள பசங்க உணர்வுகளோடு போராடுறோம்’னு உன்னை பார்த்து ஏங்கியிருக்கேன் வருணி.
இதுல ஒன்னா வேற படுத்து கட்டி பிடிச்சி தூங்குவோமா? உன்னை தொட்டு பார்க்க ஆசையா இருக்கும்.
நம்மளே பொண்ணு ஆனாலும் அந்த பார்ட்ஸ் எல்லாம் வெறுப்பை வந்துச்சு. உன்னை தீண்டும் போது ஜிவ்வுனு இருக்கும். ஆனா அந்த சந்தோஷமும் கொஞ்ச நாள்ல போயிடுச்சு. நீ தூங்கும் போது தொட்டு ரசிச்சப்ப அம்மா பார்த்துட்டாங்க.
அடிக்கடி அடி வாங்குவேன். உங்கப்பனிடம் திட்டு வாங்குவேன். ஆனா நீ பாவமா நிற்ப. எனக்கு சப்போர்ட் பண்ணுவ. மகிழன் என் கையை பிடிச்சு பேசுவான்.
ஒரு பாய் பிரெண்ட் கிடைச்சி அவனோட தான் பீல் பண்ணுவேன். நான் எழிலனோட பையன் என்பதால் தான் மகேஸ்வரன் அப்பா அப்படி நடப்பதாக மகிழனிடம் சொல்ல அவனுக்கு என் மேல சாஃப்ட் கார்னர் உருவாச்சு.
இதெல்லாம் நடந்துட்டு இருந்தப்ப தான் மணிமொழியோட கண்ணாமூச்சி ஆடியது.
உண்மையில் என் வாழ்க்கையை கண்ணாமூச்சி ஆடி இருளை தந்தது அவளோட மரணம்.
என்னை உரசிட்டு, நான் ஒளியற இடமா வந்தவ, கட்டிலுக்கு கீழேயிருந்து கப்போர்ட்ல மாட்டி செத்துட்டா.
லேசான பயம் வந்தது. ஏன்னா அவளோட நானும் ஒளியும் போது, என் ஹார்மோன் எக்குதப்பா குதிக்க, அவளை கிஸ் பண்ணினேன். அவ கோஅப்ரேட் பண்ணினா.” என்றதும் வருணிகாவுக்கு மயக்கம் வராத குறை.
”சின்ன பொண்ணு இல்லையா?! நான் நீயுனு நினைச்சு கொடுத்த முத்தம் அவளுக்கு ஏதோ புதுசா இனிக்க என்னை நோண்டிட்டே வந்தா, கத்தி விட்டேன். ஆனா அவளுக்கு அந்த முத்தம் திரும்ப தேவைப்பட்டுச்சு. நீ திரும்ப முத்தம் கொடு. இல்லை அத்தை மாமாவிடம் சொல்லறேன்னு ஓடினவளை தான் நிறுத்தி கட்டில் கீழே இருந்த இடத்துல தள்ளி மூடி அது மேல உட்கார்ந்தேன்.
எனக்கு தெரியும் அந்த இடத்துல பத்து நிமிஷத்துக்கு மேல மூச்சு முட்டும். நான் அவ இறக்கறப்ப அந்த நிமிஷம் அங்க இருந்தேன்.
அவ மூச்சுக்கு போராடி கதவை தட்டி, சாரி கேட்டு, காப்பாத்துங்கனு கதறி, சப்தமில்லாம பட்டுனு கை தொப்புனு விழுந்து இறந்ததை நேர்ல உணர்ந்து, அவ இறப்பை பார்த்துட்டு தான் அங்கிருந்து கிளம்பி உன்னை தேடி, உன்னோட வந்துட்டேன். ஏன்னா என்னை பத்தி எல்லாரிடமும் சொல்லிட்டா…” என்று கூற, வருணிக்கு இங்கு தனியாக வந்த மடத்தனம் விளங்கியது.
நிச்சயம் இவ்விடம் விட்டு உயிரோடு போக முடியாதென்ற பயம் அவளை நடுங்க வைத்தது.
வநீஷா(ரஞ்சித்) தொடர்ந்தாள் “அப்பறம் உனக்கே தெரியும் நம்ம வீடு இறப்பு வீடா மாறுச்சு. நீ வேற நான் ஒளிஞ்ச இடத்தை தேடி மணிமொழி போனதால் இறந்ததா சொல்லிட்ட. ஷிலா அத்தைக்கு ஏற்கனவே என்னை பிடிக்காது. அவங்க உடன்பிறப்பு மகேஸ்வரனிடம் என்னை இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு முடிவு கட்டினாங்க. ஊட்டியில் சேர்க்க திட்டமிட்டாங்க.
அதோட அம்மா எனக்காக போராடினாங்க. அப்ப அம்மா என்னிடம் பேசறப்ப நான் தான் மணிமொழி இறப்புக்கு காரணம்னு சொன்னேன். அவ்ளோ நேரம் நான் ஊட்டிக்கு தனியா போகக்கூடாதுன்னு சண்டைப் போட்ட அம்மா. என்னை அனுப்ப முடிவெடுத்தாங்க. மணிமொழி இறப்புக்கு நான் காரணம் என்பதை இங்கிருந்தா தெரிய வரும்னு அனுப்பனாங்க.
ஊட்டிக்கு வர்றப்ப மகேஸ்வரனுக்கு நான் திருநம்பியா மாறுவது தெரிய வந்தது. இனியும் கூட வச்சிக்க அந்தாளு என்ன மஹாத்மாவா? என்னை அப்படியே விட்டுட்டு வந்துட்டான்.
‘உன்னை மாதிரி ஆளுங்க பிச்சை எடுத்து வயித்தை கழுவுவாங்க. நீ குடும்பத்துல இருந்தா என்மக வருணி வாழ்க்கை கெட்டுடும்’னு சொல்லி அந்தாளு என் காலில் விழுந்து ‘எங்களை விட்டு போயிடு. வீட்டுக்கு வந்துட்டாதே’னு அழுதான்.
பிறகு எப்படி வீட்டுக்கு திரும்பி வர. உன் வாழ்க்கை என்னால கெடும்னு சொல்லிட்டான். எனக்கும் பயமாயிருந்தது வருணி.
எனக்குள்ள ஏற்படுற மாற்றம், எண்ணங்கள், செய்கைகள் எதுக்கும் விடை தெரியலை.
இப்ப மாதிரியா… இப்ப பொண்ணும் பொண்ணும் கல்யாணம் செய்யறாங்க. ஆணும் ஆணும் தாலிக்கட்டிக்கறான். அந்த வயசுல ஆண் பெண்ணாக மாறுறதும். பெண் ஆணாக மாறுறதும் இந்தளவு வெளிப்படையா யாரும் பேச மாட்டாங்க. இப்ப பாரு யூடியூப், இன்ஸ்டா, TV பேட்டினு ஒன்னுவிடாம இன்டர்வியூ தர்றாங்க.
அப்பயிருந்த காலத்தில் என்ன செய்யணும்னு தெரியலை வருணி. மும்பைல தான் இப்படி அசிங்கம் பிடிச்சவங்க வாழ்வாங்கனு உங்கப்பன் வேற கோபத்துல ஒரு வார்த்தை விட்டார். மும்பைக்கு டிரெயின் ஏறிட்டேன்.
ஈஸியா விபச்சாரியா மாறினேன். ஆனா இந்த முறை நான் ‘ஆண்’ என்ற உணர்வுக்கு கடிவாளம் போட்டேன். ஏன்னா பெண்ணா இருந்தா தான் மதிப்பு என்றும், பணமும் கிடைக்கும்னு உலகத்தை கவனிக்கும் போது தெரிந்தது.
முதல்ல வயிற்றை நிறைக்க பணம் தேவைன்னு ஒரு பொண்ணா… விபச்சாரியா.. வந்தவங்களோட ஆசையை தீர்த்து வச்சேன்.
சின்ன பொண்ணு அழகாவும் இருப்பேன். அடமும் பிடிக்காம சொன்னதை செய்வேன். என் ரேட் தங்க விலையை விட கூடுச்சு. அந்த மார்க்கெட்ல என் விலை இரட்டிப்பு ஆச்சு.
அந்த தருணம் ஆணாக வேண்டாம் பெண்ணாகவே வாழ்ந்து முடிப்போம்னு முடிவெடுத்தேன்.
அப்படி தான் வாழ்ந்தேன் வருணி… உன்னை பார்க்கற வரை.” என்று ஆள்காட்டி விரலால் வருணி மார்ப்பை ரஞ்சித்(வநீஷா) தொட்டு முடிக்க இரண்டடி பின் நகர்ந்து சோஃபாவில் விழுந்து தடுமாறினாள்.
-தொடரும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Adi pavi ithu ena ivlo periya twist apo nijamave sahir ku ena achi
💜💜💜💜💜
Interesting
Unexpected twist😵
Appo edhu sahir ellaiya😱 evlo azhaga plan panni pannuraley🙄 endha ponnu vera thaniya vandhu maatikitaley🥺