அத்தியாயம்-6
ஒரு காபி ஷாப்பில் சாஹிர் மற்றும் நீஷா வீற்றிருந்தனர்.
நீஷாவின் நடவெடிக்கை என்ன செய்ய வருகின்றாளென கணிக்க இயலாத அளவிற்கு இருந்தது.
தனக்கு பிடிக்காவிட்டாலும், கழுத்தில் பெயரை தொங்கவிடப்பட்டு கூடவே சுற்றும் நாயை போல சாஹிர் நீஷாவோடு இருந்தான்.
காரணம் நீஷா அல்ல வருணிகா. ஏனெனில் அவள் பின்னால் தான் நீஷா பின் தொடர்கின்றாள்.
கரும்பு தின்ன கூலியா என்பது போல வருணியை மனதில் வருடியபடி ரசிக்கின்றான். நீஷா அறியாமல்…
சாஹிருக்கு ஒரே வருத்தம். வருணியின் கைகளை பிணைத்து கடைகடையாக சுற்றுகின்றான் மகிழன்.
இப்பொழுது கூட மகிழன் வலது கையால் கோல்ட் காபியை பிடித்து குடிப்பவன், இடது கையால் வருணி கைகளை தொட்டு நகத்தின் அழகை ரசிக்கின்றான். அதை தான் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
ஏனோ வருணி தனக்கு வேண்டும் என்ற ஆசை சாஹிருக்கு.
வருணிகா மகிழனிடம் “மகிழ் அத்தான் கொஞ்சம் கையை விடறிங்களா? நீங்க மட்டும் கண்ணாடி கிளாஸை பக்கத்துல வச்சி குடிக்கறிங்க. என் கையை விடலாமே. இப்படி பிடிச்சி வச்சா நான் எப்படி குடிக்கறது?” என்று சிணுங்கினாள்.
“உன்னை தொடற ரைட்ஸ் எனக்கு மட்டும் தான். நமக்கு நிச்சயம் பேசி முடிச்சிட்டாங்க. நிச்சயம் முடிந்தாலே பாதி பொண்டாட்டி தெரியும்ல. கல்யாணத்துக்கு உண்டான வேலைகள் அமோகமா நடந்துட்டு இருக்கு. ஆனா என்னை நீ நெருங்க விடறியா?
ஏன் தான் மாமா உன்னை இப்படி வளர்த்து வச்சியிருக்காரோ? பேருக்கு தான் அத்தை பையன் வீட்ல வந்தது சாதாரணமா உன் பக்கத்துல பேச வந்தா கூட மாமாவுக்கு மூக்கு வேர்த்துடுது. அவர் வந்து உன்னை ஒரு பார்வை பார்த்தா நீ பயந்துடற.
இப்ப நிச்சயம் முடிஞ்சி அம்மாவே உன்னை வெளியே கூட்டிட்டு போய் மேரேஜ் பர்சேஸ் வாங்க அனுப்பியிருக்காங்க. எதுக்காம்… கொஞ்சம் பேசி பழகறதுக்கு.
நீ என்னடான்னா….
கை பிடிக்க கூடாது…
பக்கத்துல வரக்கூடாது..
உரசக் கூடாது…
மூச்சு காத்து கூட படவிட மாட்டேங்குற?
கல்யாணம் முடிச்சி நான் என்ன பில்லோவை கட்டிப்பிடிச்சி தனியா படுத்துக்கணுமா?” என்று உச்சப்பட்ச கோபத்தை உரிமையாக காட்டினான்.
ஏனெனில் அந்தளவு கட்டுபாட்டை மகேஸ்வரன் விதித்திருந்தார்.
மகிழன் பேசியதில் ஆனந்தம் ஏற்பட்டாலும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “மகிழ் அத்தான் அப்பா இப்பவா இப்படி ரூல்ஸ் போடறார். அக்கா தொலைந்தப்பிறகு அப்பா ரொம்பவே மாறிட்டார்.
உங்களுக்கு தெரியும் தானே.?! அப்பா என்னை எவ்ளோ செல்லமா பார்த்து வளர்த்தார். அக்கா தொலைந்ததும் ஒரே பிள்ளையை நல்லபடியா வளர்க்கணும்னு மொத்தமா மாறிட்டார்.” என்று வேதனையோடு உரைத்தாள்.
வருணிக்கு அப்பா என்றால் உயிர். சிறுவயதில் அதிகப்படியான செல்லம், இது மகிழனுக்கு தான் தெரியுமே.
எத்தனைமுறை வநீ தனியாக அமர்ந்து அழுவாள். அதெல்லாம் கண்டு ஆறுதல் கூறப்போனால் கடித்து குதறுவது போல பேசுவாள்.
அவள் வருணி போல அத்தான் என்று எல்லாம் மகிழனை விளிக்க மாட்டாள்.
‘மகிழ்’ என்று சட்டமாய் பெயர் கூறி பேசுவாள்.
துடுக்குத்தனமாக பாவாடையை தூக்கி சொருகி சண்டைக்கு வருவாள். வநீ தனி கலர். வெள்ளை வெளீரென்ற இருப்பாள்.’ என்று நினைவுகள் செல்ல நெடுமூச்சு வெளிப்படுத்தினான்.
தூரத்தில் இருந்ததால் இவர்கள் பேச்சு கேட்காமல் நீஷா நகம் கடித்தபடி தவித்தாள்.
”காபி குடிச்சாச்சு கிளம்பலாம் மகிழ் அத்தான்” என்று எழுந்தாள் வருணி.
அவளை எழவிடாமல் “என்ன அவசரம்? ஆறுமணி வரை கூடயிருக்க மாமாவிடம் பர்மிஷன் வாங்கியிருக்கேன் வரு” என்றான்.
வருணிகா கை கடிகாரத்தை பார்த்து மீண்டும் அமர்ந்துக் கொண்டாள்.
இவர்களையே பார்த்திருந்த வநீஷாவோ “என்னை எல்லாரும் மறந்துட்டாங்க. நான் ஒருத்தி, கூடவே பதினைந்து வருடம் வாழ்ந்ததை, தொலைந்ததை.” என வேதனை ததும்ப கூறினாள்.
”யாருக்கும் என்னை தேட தோணலை. அவங்கவங்க வேலையில் பிஸியாக இருக்காங்க. மனுஷன் செத்தா, மறக்க முடியாம தவிக்கறேன்னு சொல்லறது எல்லாம் பொய் சாஹிர். யாரோட வாழ்வும் யாராலையும் பாதிக்கப்படுவது இல்லை.” என்று வாய் வார்த்தை உதிர்த்து பேசினாள்.
வருணி எழுந்து செல்லவும், ஒரே மடக்கில் கோல்ட் காபியை பருகி பின் தொடர முயன்றாள் வநீஷா.
சாஹிரோ என்ன பேசினாலும் பார்வை வருணியை தான் நோட்டமிட்டது.
“நீஷா… நீஷா” என்றதும் அவன் வாயை பொத்தி தடுப்பிற்கு பின் மறைந்தாள்.
வருணிகாவின் கூந்தல் விளம்பரத்தில் காட்டுவது போல கருப்பு அருவியாக அலை பாய்ந்தது.
சாஹிர் இருந்த பக்கம் திரும்பினாள்.
“மகிழ் அத்தான் வநீஷா என்ற பெயரை யாரோ கூப்பிட்டது போல இல்லை?” என்று கண்கள் பரபரவென தேடினாள் வருணி.
“என்ன உலருற? வநீ பத்தி பேசவும் அப்படி தோன்றியிருக்கும். எல்லாம் பிரம்மை. ஒன்பது வருஷம் கண்ணுல சிக்காதவ இப்ப முன்ன வந்து நிற்பாளா?” என்று அழைத்து செல்ல வருணி திரும்பி திரும்பி பார்த்து நடந்தாள்.
அவர்கள் செல்லும் வரை வநீஷா சாஹிர் வாயை பொத்தியவள் கையை எடுக்கவில்லை.
வருணி தலை மறையவும் கையை தளரவிட்டாள் வநீஷா.
“என்னடி பண்ணற? தங்கச்சியை பார்க்கணும், பெத்தவங்களை பார்க்கணும்னு துடிச்ச.
இங்க வந்து பார்த்தா பெத்தவங்களை பார்க்க போகலை. சரி தங்கை மூலமாக பொறுமையா அம்மா அப்பாவிடம் பேசி இணைவேன்னு பார்த்தேன். நீ என்னடான்னா உன் தங்கச்சி பின்னால சுத்தற. ஆனா அவ பக்கத்துல போக மாட்டேங்குற. அப்பறம் எதுக்கு நாம அவ பின்ன சுத்தணும்.
இதுல அந்த தடிமாடி மகிழன் உன் தங்கை கையை பிடிச்சி தான் பேசுவானா?” என்று சாஹிர் ஹிந்தியில் கத்தவும் ஆளாளுக்கு திரும்பி பார்த்தார்கள்.
தமிழ் மொழியில் கத்தியிருந்தால் நாலு பேருக்கு புரிந்திருக்க வாய்ப்புண்டு. ஹிந்தி என்பதால் சாஹிர் கத்தி முடித்ததும் பார்வையை மாற்றிக் கொண்டார்கள்.
“இப்ப என்ன? ஏன் பாலோவ் பண்ணறேன்னு தனியா வேற தெரியணுமா?
நான் ஒரு வேசி. எத்தனை பேர் கூட படுத்தேன்னு கணக்கில்லை. என் அழகு எனக்கு மூலதனமா இருந்தாலும், எத்தனை பேருக்கு என்ன பிடிச்சிருந்தாலும், நான் ஒரு அசிங்கம்.
வருணியை பார்த்தல்ல?! எப்படியிருக்கா…? அவளிடம் போய் என் நிலையை சொல்லணுமா? ஆசைதீர பார்த்துட்டு போயிடலாம். எனக்கு இன்னும் இரண்டு நாள் டைம் கொடு” என்றாள்.
சாஹிருக்கு ‘என்னவோ செய்துக்கொள்’. என்று விறுவிறுவென நடந்தான்.
வநீஷா மற்றவர்களை பாராமல் பின் தொடர்ந்தாள். காரில் மகிழனை தேட முடியாதென்று வருணி வீட்டுக்கு போக கூறினாள். எப்படியும் அவளை வீட்டில் விட செல்வான். அல்லது அவன் வீட்டுக்கு போவான் அல்லவா?!
மகிழன் பைக்கில் ஏறி அமர்ந்த வருணியோ “எனக்கு என்னவோ வநீஷக்கா நினைப்பாவே இருக்கு.
ஏன்னு தெரியலை. அங்க காபி ஷாப்ல கூட, வநீ அக்கா இருந்த மாதிரி உணர்வா இருக்கு.” என்று புலம்பியவளை கண்டு தலையிலடித்து, வண்டியை நிறுத்தினான்.
வருணி வீட்டிற்கு முன் வந்துவிட்டாயிற்று.
வீட்டுக்குள் செல்ல வேண்டியது தான் பாக்கி. மகிழனோ நிதானமாக, “நம்ம கல்யாணத்துக்கு இன்னும் நாலு மாசமிருக்கு. என்னோட பழகு. என் நினைப்புல சுத்து. எப்ப பாரு…” என்றவன் கோபமாக வீட்டுக்குள் எட்டி பார்த்தான். அத்தை ரேணுகாவும் மகேஸ்வரனும் வீட்டின் ஹாலில் இருப்பதாக யூகித்தான். வீட்டு கேட்டிற்குள் இருக்கு தைரியம் வேறு.
வருணியோ “உங்களை பத்தி என்ன நினைக்க மகிழ் அத்தான்” என்றவளின் உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டிருந்தான் மகிழன்.
அவசரம் அவசரமாக வருணி வீட்டிற்கு தான் விட வந்திருப்பானென நீஷா கூற, அவர்கள் வீட்டின் முன், சற்று தள்ளி காரை நிறுத்தி சாஹிர் பார்க்க, வருணியை மகிழன் முத்தமிடுவதை கண்டாள் வநீஷா.
எத்தனை நாள் ஏக்கமோ, எத்தனை நாள் கோபமோ, தன்னிடம் விலகி சென்றவள் மீது மகிழன் திருமணமாக போகும் தைரியத்தில் வருணியின் இரு கன்னத்தையும் ஏந்தி உதட்டில் தேனை ருசிக்கும் வண்டாய் மாறினான்.
வருணிகா விலக முயல, அது மகிழனிற்கு கோபத்தை கொடுக்க வருணியின் கீழ் உதடு மகிழனிடம் கடிபட்டு, சீஸை போல இழுப்பட்டது.
உதடுவலிக்க முத்தம் கொடுத்து தீர்த்தவன் “என்ன பத்தி என்ன நினைக்க என்று கேட்டியே. இந்த முத்தத்தை நாள் முழுக்க நினைச்சிட்டேமிரு. நைட்டு உனக்கு தூக்கமே வரக்கூடாது. இனி நீ என்னை பத்தி மட்டும் தான் நினைக்கணும்” என்று மூச்சு வாங்க கட்டளையிட்டான் மகிழன்.
வருணி திகைத்தவளாக, உதடு வலிக்க மூச்சு வாங்க நின்றாள்.
மகிழனோ, “நான் இப்படியே கிளம்பறேன். அதான் எனக்கு நல்லது. இல்லை… இன்னிக்கு உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று மார்க்கமாய் புறப்பட்டான்.
வருணிகா பேயறைந்தவளாக, முதல் முத்தம் அனுபவித்தபடி, வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்.
“மாப்பிள்ளை எங்க?” என்று மகேஸ்வரன் அதட்டி கேட்க, “அத்தானுக்கு நேரமாச்சுன்னு அப்படியே கிளம்பிட்டார் அப்பா” என்று நடுங்கும் குரலில் பதில் தந்து அறைக்குள் அடைக்காக்க சென்றாள்.
தந்தை ஏதேனும் கவனித்து விட்டாரா என்று அஞ்சினாள்.
காரில் இருந்த வநீஷாவோ, எத்தனை வகையான முத்தங்களை அவள் வாழ்வில் கண்டதுண்டு. ஆனால் இன்று முத்தத்தையே பாராதது போல திகைத்து, அதிர்ந்து வீற்றிருந்தாள்.
அவளுமே இப்படியொரு முத்தக்காட்சியை எதிர்பார்க்கவில்லை.
தந்தை வீட்டில் இருப்பதால், சற்று நேரம் பேசிவிட்டு மகிழ் கிளம்புவானென்று நினைத்தாள். தந்தை தான் அதிக நேரம் மகிழை வீட்டில் உட்கார வைக்க மாட்டாரென நம்பிக்கை. சிறுவயதில் அப்படிதானே?!
ஆனால் தந்தை வநீஷாவின் நம்பிக்கையை குழித்தோண்டி புதைத்து நின்றாரே. தங்கைக்கு மகிழன் முத்தம் கொடுக்க, வீட்டுக்குள்ளிருந்து வந்தவர், அச்சம்பவத்தை பார்த்தும் பாராதவர் போல வீட்டுக்குள்ளே சென்று பதுங்கினாரே.
இதே நான் மகிழனிடம் முன்பு அவன் சட்டையை அணிந்ததற்கு தன்னை அடி வெளுத்தார். அந்த நேரமெல்லாம் எப்படி துடித்தேன். இங்கு தங்கைக்கு முத்தமிடுவதை நேரில் காட்சியாய் கண்டும் அமைதியாகின்றார்.
எல்லாம் நேரமென்று பற்கடித்தாள்.
வநீஷாவுக்கு மேலாக சாஹிரும், கொதித்து போயிருந்தான்.
ஒரு பெண்ணின் சின்ன சின்ன விலகலில் அவளுக்கு இது அனுபவமா இல்லையா என்று கடைந்தெடுத்திடுவான் அயோக்கியன் அவன்.
வருணிகாவுக்கு இது முதல் முத்தம் என்பது வருணி மிரண்டு கால் விரல்கள் மண்ணில் புதைய, கைகள் இறுகியிருக்க சாஹிர் அறிந்துக் கொண்டான்.
‘பச் எச்சி பண்ணிட்டான். இனி மிச்ச மீதி போட்டு தள்ளுவானானு தெரியலை. சே…
எப்படி உறிஞ்சு எடுத்துட்டான். கீழ் உதட்டை விடுவிக்காம இழுத்து அவளை ஒரு வழி பண்ணிட்டான். ஆசையா இருந்தேன்.’ என்று மனதிற்குள் புலம்பினான்.
வெளியே கத்த முடியாதே. சிரித்தாலும் அழுதாலும் வநீஷாவுடன்.
வநீஷாவை தானே காதலித்தாய்!? அவளுக்கு என்ன குறை? வேசியாக இருப்பதை தவிர்த்தால் அவளுமே வருணியை விட அழகியே. நீ இன்னமும் வநீஷாவை காதலிக்கின்றாய் என்று கார் கண்ணாடியில் இருந்த அவன் முகம் கேலி பேசியது.
வநீஷாவோ ‘ஹோட்டலுக்கு போ’ என்று கூறிவிட்டு காரில் சாய்ந்துக்கொண்டாள். வாடகைக்கு எடுத்த காரை தங்கியிருந்த ஹோட்டலுக்கு கிளப்பினான்.
மகிழனின் முத்தம்… ஏதோ அவளை இழுத்து அணைத்து கொடுத்தது போல் துடித்தாள்.
அடிக்கடி நாவால் கீழ் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள். ஏன் இப்படி செய்தான்? என்ன அவசரம்? திருமணத்திற்கு நான்கு மாதம் இருக்கே. இப்பொழுதே உரிமை நிலைநாட்டுவதேன்?
இதில் தந்தை பார்த்தும் பாராது சென்றது எரிமலையை விழுங்கியது போல இருந்தது.
எப்பவும் போல தங்கைக்கு மட்டும் சாதகமான சூழல் அமைகின்றது. தனக்கு… தனக்கு மட்டும் ஏன்? என்றவள் உள்ளம் நெருப்பில் வாட்டும் விதமாக மாறியது.
சாஹிர் வநீஷா இருவரும் ஹோட்டல் அறைக்கு வந்து மெத்தையில் படுத்தனர்.
ஆளுக்கு ஒரு புறம் திரும்பி கொண்டார்கள். இருவருமே எந்த விஷயத்தையும் பேசி அலசவில்லை. பேசினாலும் நிம்மதிக்கு பங்கமே.
வநீஷா இதற்கு என்ன தான் முடிவு? என்று சிந்திக்க மும்பைக்கு திரும்புவதே சாலச்சிறந்தது என்று எண்ணினாள்.
-தொடரும்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💜💜💜
S CORRECT ILLANA ETHANA PANIDUVA
Nice epi👍
Evanga mumbai ku thirumba povaanga nu thonala parpom 🤔
Nallathu