இதயத்திருடா-11
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
நற்பவி அருகே மருத்துவர்கள் மருந்திட்டு கொண்டிருக்க, அவளுக்கு அருகே, இவளை விட சிறுகாய வெட்டு வாங்கிய பெண் அலறிக் கொண்டிருந்தாள்.
“டிரஸிங் மட்டும் இரண்டு மூன்று முறை பண்ணிக்கணும் மேம். பெயின் குறைவா இருக்க டேப்லட் தர்றேன்.” என்று கூறி முடிக்க மதிமாறன் வேகயெட்டு எடுத்து வந்தான்.
‘நேத்து என்னலாம் பேசினார். இப்ப என்னவாம்… கண்ணுல எனக்கான நேசம் வழியுது. ஆனா இவர் காதலிக்க மாட்டார். கல்யாணம் பண்ணமாட்டார்னு வாய் வார்த்தையில சொல்லிட்டு இருப்பார்.’ என்று மனதில் திட்டிக் கொண்டு அவனை கோபமாய் முறைத்தாள்.
நேற்று அப்படி பேசிவிட்டு இன்று அக்கறையாய் பார்க்க வந்தால் முறைக்காம என்ன செய்வாளென எண்ணி மெதுவாய் வந்தான்.
“பெயின் இருக்கா” என்று கேட்டான்.
“ரொம்ப ரொம்ப பெயினா இருக்கு. நீங்க பேசியதுல” என்று எரிமலையாய் வெடித்து பதில் தந்தாள்.
செவிலியர் ஊசி ஒன்றை செலுத்திவிட்டு நற்பவியையும் மாறனையும் விநோதமாக கடந்தார்.
“நேத்து கேசுவலா எங்க அக்கா செய்த தொக்கை சப்பு கொட்டி ருசிச்சு ரசித்து சாப்பிட்ட. நான் பேசியதை காதுல வாங்காதது மாதிரி. இப்ப என்ன… காலையில இருந்து என் மேல கோபமா சுத்துற” என்றான் மதிமாறன்.
“ஓ…. உங்க மேல கோபப்பட்டா ரீசன் வேற கேட்பிங்களோ…?” என்று லாவா பீடபூமியாய் பதில் தந்து அங்கேயே சிறிது நேரம் அமர்ந்தாள். அவள் அழைத்து வந்த பெண்ணின் பெற்றோர் வருகைக்காக காத்திருந்தாள்.
அந்த நேரம் தர்ஷன் வரவும், “அச்சச்சோ தர்ஷன் சார் வர்றார் இங்கிருந்து கிளம்புங்க” என்றாள் அவசரமாய்.
“ஏன் கிளம்பணும். கையில அடிப்பட்டு இருக்கு நான் டிராப் பண்ணறேன்.” என்றான்.
“உன் அக்கறையில தீயை வைக்க. தயவு செய்து போயா. அவர் வந்தா என்னை கேள்வி கேட்பார். அவர் அப்பாவுக்கு பிரெண்டு வேற” என்று காதில் கையை வைத்து மறுபக்கம் பேசுவதாக பாவனை செய்தாள்.
“முடியாது… நேத்து திட்டியதுக்கு பரிகாரமா இருந்து உன்னை டிராப் பண்ணிட்டு போறேன்.” என்று அமர்ந்தான்.
அதற்குள் தர்ஷன் வந்து இருவரையும் கவனித்தான்.
“எப்படியிருக்க நற்பவி. பெயின் இருக்கா..” என்றார் கமிஷனர் தர்ஷன்.
“பெயின் கொஞ்சம் தான் சார் அதெல்லாம் மேனேஜ் பண்ணற லெவலுக்கு தான் வலிக்குது.” என்று பதில் தந்தாள்.
“வெல்… குட்.. இந்த தம்பி யாரு.. தெரிந்தவரா?” என்று தர்ஷன் கேட்க தெரியாதென நற்பவி தலையாட்ட, ஆமென்று மதிமாறன் தலையசைத்தான்.
தர்ஷன் இருவரையும் வினோதமாய் பார்த்து, “உங்க பெயர் என்ன?” என்று கேட்டதும், “மாறா அங்கிள்” என்று நற்பவியும் “மதிமாறன் சார்” என்று மதிமாறனும் விளித்தனர்.
“தெரியாதுனு தலையாட்டி மாறானு அறிமுகப்படுத்தற? என்றவர் மதிமாறனை எடைப் போட்டார்.
அதற்குள் கத்தி வெட்டு வாங்கிய பெண்ணின் பெற்றோர் வரவும் அவரை வரவேற்று பேசி அனுப்ப அதிகாரி என்ற முறையில் சென்றார்.
“நான் தெரியாதுனு சொல்லிட்டேன். நீ தெரியும்னு சொல்லற. போச்சு… போச்சு… இனி அப்பாவிடம் பேசிடுவார். நீ லவ் பண்ணலைனு சுத்தற. ஆனா நான் இனி காதலிக்கறேன் என்ற போர்வையில அப்பாவிடம் திட்டு வாங்குவேன். இப்ப ஹாப்பியா.” என்று பொங்கினாள்.
“ஏய்… அவர் உங்க பேமிலி பிரெண்ட் என்று எனக்கு எப்படி தெரியும். அவர் வந்தப்ப நற்பவினு கத்தினேன் அவர் பார்த்துட்டார். இப்ப போய் தெரியாதுனு சொன்னா அது தப்பாகாது. நீ இப்ப தானே பிரெண்டுனு சொன்னது.” என்று மொழிந்தான்.
“ஆஹ்… வக்கணையா பேசு. எங்கப்பாவிடம் இவர் என்னத்த சொல்லி உன்னை பத்தி எங்க வீட்ல சொன்னா… என்னாகும்.” என்றாள்.
“என்னாகும்?” என்றான் மாறன்.
“யோவ்… தெரியாம தான் பேசறியா. நீ லவ் பண்ண மாட்டேன் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சுத்தற. என் லவ்வை என்ன பண்ண.” என்றாள்.
மதிமாறன் செய்வதறியாது திகைத்தான்.
“உன் லெட்டரை இப்ப தான் படிச்சேன். கருத்துபகுதில போட்டிருந்தியே அது.” என்றதும், “அடப்பாவி… டெய்லி வாசிக்க மாட்டியா… நான் லவ்வை சொல்லியும் இப்படி பிகேவ் பண்ணறியேனு தான் கடுப்போட இருந்தேன்.” என்று தவித்தாள்.
மெதுவாய் முறுவலிட்டு “ஐ அம் சாரி.” என்றான்.
“சாரியா… நீ பேசியதுக்கு புல்லட்டை எடுத்து ஹார்ட்டுல இறக்கியிருக்கணும்.” என்றாள்.
“இப்ப கூட செய் யாரு வேண்டாம்னு சொன்னா. உன் கையால சாகறது சந்தோஷம் தான்.” என்றான்.
“நான் வாழறதுக்கு பேசினேன். நீ சாகறதுக்கு பேசற. முதல்ல இங்கிருந்து போ. அங்கிள் வந்துட்டார். நான் போறேன்.” என்று நடந்தவளை பின் தொடர்ந்தான்.
“அப்பறம் தம்பி என்ன பண்ணறிங்க. அப்பா அம்மா என்ன பண்ணறாங்க?” என்று கேட்டு நடையிட்டவாறு பேசவும், “அப்பா அம்மா இல்லை சார். அக்கா மாமா மட்டும் தான். தனியா மாறன் உணவகம்னு நடத்திட்டு இருக்கேன்” என்று கூறினான்.
தர்ஷனோ “சரிதம்பி பை” என்று நற்பவியை அழைத்து கிளம்பினார்.
மதிமாறன் தனது உணவகத்துக்கு வந்து சேர்ந்தான். வடிவேல் நற்பவியை பற்றி விசாரிக்க, “அவளுக்கென்ன அண்ணா. இரும்பையே முழுங்கி ஏப்பம் விடுவா. கொஞ்சம் பெயின் இருக்காம். மத்தபடி சமாளிச்சிடுவா” என்று புன்னகையோடு கூறவும் வடிவேல் சந்தோஷப்பட்டார்.
சரத் என்பவோனோ அதனை கேட்டு ரெஸ்ட் ரூம் வந்து, யாரோ ஒரு நபருக்கு போன் செய்தான்.
“சார் அந்த பொண்ணு போட்டு தள்ளுவிங்க அரசியல் கட்சி ஆட்கள் மேல பழி வந்துடும். நம்ம மேல ச்நதேகமே வராதுனு பிளான் பண்ணி சொன்னேன். இப்படி சொதப்பிட்டிங்களே சார். அந்த பொண்ணு என்னை கண்டுபிடிச்சா என்ன சார் பண்றது?” என்று பயந்தான்.
மறுபக்கம் என்ன பேச்சோ, “என்னை பார்த்த பொண்ணு யாருனு தெரியலை சார். ஆனா கர்ப்பிணினு சுண்டல் விக்கிற பொண்ணு. நான் பார்த்தா அடையாளம் சொல்லிடுவேன். பீச்ல தான் சுத்தும். மத்தபடி அந்த பொண்ணு யாரு என்னனு தெரியாதே.” என்றான்.
மறுபக்கம் மீண்டும் ஏதோ கூற, “நல்லது சார் கண்டுபிடிச்சி அந்த பொண்ணை சாகடிச்சிட்டா கூட என் மேல சந்தேகம் வராது. ஆனா கைலாஷ் அண்ணாவிடம் வேலைக்கு கேட்க போனேன். அவர் நினைவு வச்சிருப்பார்.” என்று இழுத்தான்.
“சரிசார் சரி சார் காலேஜ்ல மாவு பேக்கெட்டை வித்து கொடுத்துடுவேன் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்” என்று அணைத்தான்.
இனி அந்த கர்ப்பிணியை தீர்த்து கட்டினாலே தன் பக்கம் நிம்மதியாய் மாறலாமென தப்பு கணக்கிட்டான் சரத் என்ற சரத்குமார்.
தன்னால் கூட்டம் மாட்டும் என்றால் தன்னையே அழிக்க துணிய மாட்டார்களென்றதை எண்ணாமல் போனான் சரத்.
வெளியே வந்து நிம்மதியாய் பார்ட் டைம் பேரராக பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தான் கல்லூரி மாணவன் சரத்.
கல்லூரியில் குமார் என்ற முகமூடியில் டிரக் விற்பவன் அவனே என்று மாறன் அறியாதவாறு மிகவும் நல்லவனென்ற போர்வையில் நடமாடினான்.
தர்ஷனோ, “காதலிக்கறதா இருந்தா சொல்லணும். அதென்ன பிரெண்ட்ஸா பழகின அக்கா அப்பாவிடம் கூட மறைத்து பொத்தி வைக்க சொல்லுது உன் காதல்.
உங்கப்பன் நித்திஷ்வாசுதேவ் உனக்கு மாப்பிள்ளை தேடி கஷ்டப்படறான். நீ என்னனா இங்க ஹோட்டல்காரனை…” என்று பாதி வார்த்தையை முழுங்கினார். இத்தனை வசதி வாய்ப்பு இருந்து சாதாரணமானவனை விரும்புவதாக பேச வந்தார். நற்பவி வெடுக்கென திரும்பவும் வார்த்தை விடவில்லை.
“எந்த தொழிலும் தப்பில்லை. அவர் நேர்மையானவர்.” என்று சட்டென நற்பவி பேசிவிட்டு திரும்பி கொண்டாள். அதற்கு மேல் தர்ஷனிடம் பேச அவளால் இயலாது. ஆனால் மனதிற்குள் ‘இவருக்கு என்னவாம். எங்கப்பா சொல்லட்டும் எங்க அக்கா சொல்லட்டும். ரொம்ப தான் என் விஷயத்துல தலையிடறார்.’ என்று திட்டினாள்.
“உங்க அக்கா கணவர் ப்ரனித் ஆக்டர். தமிழ் திரையுலகத்துல வெள்ளிதிரை நாயகன். உங்கப்பா வேண்டுமின்னா எழுத்தாளர்களுக்கு மட்டும் பரீட்சையமான ஆளா உலகத்துல சுத்தலாம். உங்க அக்கா கணவர் ப்ரனித்தை இந்தியாவுக்கே தெரியும்.” என்று ஒப்புமைப்படுத்தாமல் அதே நேரம் குத்தி காட்டினார்.
நற்பவிக்கு அழுகை வராதா குறை தான். இவர் முன் அழுதால் அதற்கு வேறு திட்டி தீர்ப்பார். பெண்கள் அழுதால் பிடிக்காது என்று நெருப்பாய் வார்த்தையால் சாடுவார். எப்படி தான் அஸ்வதி ஆன்ட்டி சமாளிக்கறாங்களோ. ஓவியா அக்கா சித்தார்த் எல்லாம் பாவம்.’ என்பது போல கமிஷனரின் மனைவி, மகள், மகனுக்காக எல்லாம் கவலைப்பட்டாள்.
“வண்டி நின்னுடுச்சு நற்பவி.. என்னை மனசுல திட்டறதை நிறுத்திட்டு போ. இன்னிக்கே உங்கப்பாவிடம் மாட்டி விட எனக்கு விருப்பமில்லை. நான் அந்த பையனை பற்றி விசாரிச்சிட்டு வர்றேன். ஏன்னா காதலுக்கு கண் இல்லை பாரு” என்றார்.
அமைதியாக இறங்கி வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்.
நற்பவி அக்கா நன்விழியோ “அங்கிள் உள்ளவாங்க அப்பா திலீபன் பத்தி பேசணும்னு சொன்னார்.” என்று கூப்பிட, தர்ஷன் வேறுவழியின்றி நற்பவியை கண்டு வந்தார்.
நித்திஷ் வாசுதேவ் மகளுக்கு நன்விழி கூறிய பையனை பற்றி பேசி முடிக்க, நற்பவியோ சிலையாய் இருந்தாள்.
“உன் பொண்ணுகிட்ட முதல்ல யாரையாவது லவ் பண்ணறாளானு கேளு. திலீபன் எல்லாம் நல்ல பையன் தான். விசாரிக்கணும்னு அவசியமேயில்லை.” என்று பேசிவிட்டு நன்விழி கொடுத்த காபியை பருகினான்.
‘என்னடா தர்ஷன் இப்படி சொல்லறார்’ என்று மகளை காண அவளோ வாய் திறவாமல் இருந்தாள்.
“என்னதான் மனசுல ஓடுது. வாயை திற. நானும் வர்ற வரன் எல்லாம் தடையாகுதே கவலைப்படறாளோனு பார்த்தேன். யாரை லவ் பண்ணற.” என்று நன்விழி கேட்கவும் நற்பவியோ இன்னிக்கு உங்கப்பாவிடம் மாட்டி விடமாட்டேனென கூறிவிட்டு இப்படி வசமா மாட்டி விட்டுட்டாரே என்று கோபப்பட்டாள்.
அதற்காக இனியும் மறைக்க முடியுமா? “மதிமாறனை லவ் பண்ணறேன். பிராட்வேல மதிமாறன் சைவ அசைவ உணவகம் என்ற ஏசி ஹோட்டலை நடத்தறார்.
அக்கா மாமா மட்டும் தான். அப்பா அம்மா இல்லை. சொந்தமா கடையும் வீடும் இருக்கு. எனக்கு இது போதும். நீங்க பார்க்கற பேங்க் மேனேஜர், தொழிலதிபர், சினி பீல்டுக்கு புரடெக்ஷன் பண்ணறவங்க, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், டாக்டர், இன்ஞினியர் பிஸினஸ் மேக்னட் எவனும் வேண்டாம். மாறன் போதும்.” என்று தர்ஷனை கண்டு தன்மையாக வெடித்தாள்.
தந்தை நித்திஷ் அதிர்ச்சியாக நன்விழியை காண, அவளும் எனக்கு தெரியாது என்ற ரீதியில் இருந்தாள்.
தந்தை முகம் அதிருப்தியாக இருக்க, பின்னர் “ஸ்டேடஸ் பார்க்கறிங்களா… ஏன்பா… உங்க கதையில மட்டும் காதலிக்கறவங்க ஒன்னு சேரணும்.
இந்த அவார்டு கதை மாதிரி என்னை பிரிச்சி வச்சி அழகு பார்க்காதிங்க” என்று கோபமாய் கூறினாள்.
“இதுங்களை பார்டா… லவ் கதை எழுதினா உடனே லவ் பண்ணினவங்களை வீட்ல சேர்த்து வைக்கணும்னு ரூல்ஸ் போடுதுங்க. தர்ஷன் பையனை பார்த்தியா?” என்று கேட்டார் வாசுதேவ்.
“ம்ம்… பார்த்தேன்.. பார்க்க நல்லாயிருக்கான்.” என்று நற்பவிக்கு ஆதரவாக ஒரு வார்த்தை விழுந்தது.
“அப்ப பேசலாமா?” என்று கேட்க, “அவருக்கு என்னை பிடிக்கும். ஆனா கல்யாணம் பண்ண மாட்டேனு அடம் பிடிக்கிறார். இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா என்னை தேடி வர்றார்.” என்று உரைத்தாள்.
மூவரும் திகைத்து பார்த்தனர். நற்பவி அழகானவள், புத்திசாலி தைரியசாலி அவளை வேண்டாமென்று மறுக்கின்றானா? என்பது போல, நற்பலியோ “அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஐந்து வருஷத்துக்கு முன்ன அவரோட ஓய்ப் மதுவந்தி இறந்துட்டாங்க. அவர் மனசுல மதுவந்தி தான் இருக்கறதால என்னை அக்சப்ட் பண்ண மாட்டேங்கறார்.” என்றதும் நித்திஷ் வாசுதேவோ, “என்ன கல்யாணம் ஆனவனா? இங்க பாரு உன்னிஷ்டத்துக்கு ஆடறதால எல்லாம் நடக்கும்னு கனவு காணாதே. பாரு தர்ஷன்… நான் எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கறேன். இவ போயும் போயும் ஹோட்டல்காரனை… அதுவும் கல்யாணமாகி விடவோ இருக்கறவனை விரும்பறா.
நன்விழி நீ திலீபனை பார்த்து சம்மந்தம் பேச வரச்சொல்லு.” என்று வரிசையாய் பட்டியலிட்டார்.
நற்பவியோ மூவரையும் கண்டு மாறனின் முடிவு தெரியாமல் தற்போது வாதிட பிடிக்காமல் நகர்ந்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Super super super super super super super super super super super super interesting
Wow super super. Sema twist. Intresting
Acho dharsan yen ippadi narpavi ah mativitu nikuringa avalum ellathaium sollita aana vera ethum pesa mudiyama irukale mathi othupana matana theriyama