இதயத்திருடா-13
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தர்ஷனின் அலுவலக அறையில் நற்பவி அமர்ந்திருந்தாள்.
“நீ இதுவரை பிடிச்ச அக்யூஸ்ட் யாராவது உன்னை ரிவேன்ஜ் எடுக்கறாங்களானு செக் பண்ணு. மோஸ்டா… உன்னால அதிகமா அபெக்ட் ஆகி அவங்க தரப்புல அவங்க வாழ்க்கை பூஜ்ஜியமா போச்சு என்று பீலானவங்களை டீப்பா பாரு” என்றதும், நற்பவி தலையாட்டினாள்.
“சார் இதுவரை சென்னைனா… பிக்பாக்கெட், நகைத்திருடு, திருவுல வழிப்பறி செய்தவங்களை தான் பிடிச்சிருக்கேன். முதல் கேஸ் கொலை வழக்கு அதுக்கு கூட தரண் தான் கைதாகி இறந்தார்.
மற்றபடி உயிரிழப்பு பெரிய வாழ்வாதாரத்தை அழிச்சது இல்லையே சார். நீங்களாவது நாலு தீவரவாதியை கொன்னிங்க, டைமணட் பிஸினஸை இல்லிகலா பண்ணின யுகனை சாகடிச்சிங்க. குழந்தை மீது பாலியல் கொடுமை, விபச்சார கும்பலை பிடிச்சிங்க. இதெல்லாம் பெரிய இடம். ஒரு சாம்ராஜியத்தை அழிக்க பார்த்திங்க உங்களை சாகடிக்க கும்பல் கும்பலா வரலாம்.
நான் பீல்டுக்கு வந்தே கொஞ்ச நாள் தானே சார். என்னை போய்.. அதுவும் போட்டுதள்ள.” என்று குழம்பினாள்.
“நானே பீக் ஹவர்ல ரோந்து போகறதுக்கு தான் அலார்ட் பண்ணி, திருட்டு கொலை நடக்காம பார்த்துக்க ரவுண்ட்ஸ்ல இருக்கேன்.” என்று வருந்தினாள்.
“நமக்கு காரணம் சிறிதோ பெரிதோ அது மத்தவங்களுக்கு ரொம்ப பெரிய காரணமா தெரியும்.
லைக் உனக்கு மாறன் விடோ என்றதில பிரச்சனையில்லை. பட் உங்கப்பாவுக்கு பிரச்சனை.” என்றதும் நற்பவி சோகமானாள்.
“என்னாச்சு… அந்த பையனிடம் நம்ம சைட் இப்படி பிரச்சனை ஓடுதுனு சொன்னியா?” என்று கேட்டார் தர்ஷன்.
“இல்லை அங்கிள் இனி தான் சொல்லணும். நீங்க கூப்பிட்டதும் காலையில இங்க ஓடி வந்துட்டேன். போன்லலாம் அவர் இதுவரை பேசியதேயில்லை. ஏன் நான் விரும்பறேன். அவர் என்ன மைன்ட் செட்ல இருக்கார்னே தெரியலை. அவருக்கும் பிடிச்சிருக்கு, பேசறார் பழகறார். காதல் கல்யாணம் என்று கிட்ட போனா நான் விடோ என் மதுவந்திக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு சொன்னதே சொல்வார்.
இப்ப தான் அவரோட அக்கா மாமாவிடம் பேசி அவங்களுக்கு ஓகே என்றவரை தெரிந்து வச்சியிருக்கேன்.” என்றதும் முகம் பூவாய் மலர்ந்து பேசினாள்.
“அந்த பையனுக்கு உன்னை பிடிக்குதுனு தெளிவா தெரியுது. நேத்து உன் பெயரை ஏலம் விட்டு கத்தினான். ஐ திங்க் அவன் விழுந்துட்டான்.
எதுக்கும் முரண்டு பிடிச்சா என்னிடம் கூட்டிட்டு வா. இப்ப கிளம்பு.” என்று அனுப்பவும், “தேங்க்ஸ் அங்கிள்” என்றவள் சல்யூட் அடித்து எழுந்தாள்.
“நற்பவி… உன்னை கொல்ல துடிக்கறவங்களுக்கு நீ சுதாரிச்சிட்டேனு தெரிய வேண்டாம். கட்சி ஆளா கொல்ல துடிச்சி பழியை மாத்தி போட முயன்றாங்க. இனியும் அதே மெத்தட் பாலோவ் பண்ண மாட்டாங்க. தனியா இருந்தா போட்டு தள்ள தான் நினைப்பாங்க. எப்பவும் கேர்ஃபுல்லா இரு. உன்னை சுத்தி ஒராயிரம் கண்ணை சுழலவிட்டுதான் நீ நடக்கணும் புரிஞ்சுதா” என்றதும் தலையாட்டினாள்.
ஸ்டேஷன் வந்து எப்பொழுதும் போல கடமையாற்றி பைல்களை அலசினாள். இதுவரை தான் பார்த்து மிச்சம் சொச்சம் உண்டவர்கள் தன்னை கொல்ல வரும் வலிமை படைத்தவர்களா என்று கவனித்தாள்.
தர்ஷன் கூறும் அளவிற்கு அவளை கொல்லுமளவுக்கு விரோதியாக யாரும் கண்ணுக்கு தெரியவில்லை.
தலைவலியோடு காபி பருக நினைக்க, மதிமாறன் நினைவு வந்தது. மணியை பார்க்க பன்னிரெண்டு என்றதும் அவனின் உணவகத்திற்கே செல்ல சகாதேவனை பணித்தாள்.
அவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்தார்.
மாறன் உணவகம் நுழையவும் வடிவேல் ஓடிவந்து விசாரித்தார்.
மதிமாறனோ, அவள் சாப்பிட அமர்ந்து பொறுமையாய் ஸ்பூனால் துழாவி இருக்க, அவனே வந்து ஸ்பூனை பிடுங்கினான்.
“அப்படியென்ன அவசரம் ரெஸ்ட் எடுக்காம அடுத்த நாளே வேலைக்கு வந்து நிற்கறது.” என்று கடிந்தான்.
“அங்கயிருந்து வீட்டு கார்ல வந்தேன். இங்க சகாதேவன் அண்ணா வண்டி ஓட்டினார். நான் ஹாயா உட்கார்ந்து தானே வர்றேன்.
அதுவும் இல்லாம தர்ஷன் அங்கிள் முக்கியமா கூப்பிட்டார்.” என்றதும், அவளின் உதடருகே சாதம் நீட்டியபடி, “நான் யாருனு கேட்டாரா? பச்.. எனக்கு உங்க அப்பாவுக்கு தெரிந்தவர் என்றதெல்லாம் தெரியாது கொஞ்சம் எமோஷனலாகிட்டேன்.
உங்கப்பாவிடம் போட்டு கொடுத்திட்டாரா?” என்று கேட்டான் மாறன்.
“பின்ன போட்டு கொடுக்காம நீ என்னனாலும் சுத்தும்மா வேடிக்கை பார்க்கறேன்னா சொல்வார். வீட்டுல எங்கப்பா எப்படியோ, இந்த போலிஸ் பீல்டுல தர்ஷன் சார் தான் எனக்கு காட் பாதர்.
உன்னை பத்தி அப்பா கேட்டார் சொன்னேன். விடோவை லவ் பண்ணறியானு ஆச் பூச்னு கத்தினார். என் சைட்ல அப்பாவை மட்டும் கன்வின்ஸ் பண்ணணும். எப்படியும் ப்ரனித் மாமா சொன்னா அப்பா கேட்டுப்பார். ப்ரனித் மாம்ஸ் ஊர்ல இல்லை. வெளிநாட்டுக்கு சூட்டிங் போயிருக்கார்.” என்று பேசினாள். அவன் கைகள் தானாக நற்பவிக்கு ஊட்டி விடும் பணியில் கண்ணும் கருத்துமாய் கவனித்தது.
“எதுக்கு இப்படி? ஏன் இவ்ளோ கஷ்டம்… நான் உன்னை வசீகரிக்கற மாதிரி எதுவும் பண்ணலை நற்பவி. என் மனைவி மதுவந்தி மாதிரி ஒரு ஏழை பொண்ணு படிக்க ஆசைப்பட்டா தேடி போய் உதவி செய்தேன். இதுல என் சுயநலம் தானே தவிர பொதுநலமே இல்லை.” என்றதும், நற்பவியோ சிரித்தாள்.
காதல் என்ன பொதுநலம் நோக்கத்தோடவா பண்ணுவாங்க. அதுவும் என் சுயநலத்துக்காக தான்” என்றதும் மதிமாறன் அக்கா மாமா பேசலை. கல்யாணத்துக்கு ஓகே சொன்னா மட்டும் பேசணுமாம். இல்லைனா பேசாதேனு கண்டிஷன்.” என்றான்.
முழுவதும் சாப்பிட்டு விட்டு பேக்கெட்டிலிருந்து மாத்திரையை எடுத்து விழுங்கினாள்.
“கண்டிஷனுக்காக லவ் பண்ணாதே… பிறகு அதுக்கு வேற ஆப்டர் மேரேஜ் எலியும் பூனையுமா திரியணும். காதலிக்கிறப்பவும் எலி பூனை கல்யாணம் முடிந்தப்பிறகும் அதேயென்றால் போரடிக்கும்.
ஏற்கனவே நீ கல்யாணம் காதல்ல எதையும் முழுசா அனுபவிச்ச மாதிரி தெரியலை. அதனால என் காதல்ல உன்னை டைட்டானிக் கப்பலாட்டும் முழ்கடிச்சி மிதக்க விடணும்.” என்றாள்.
“ஏது… ஜேக் மாதிரியா?” என்றதும் “புத்தியை பாரு… திருடா…” என்று கிள்ளினாள். அடுத்த கணம் “ஏய் மாறா… இதுவரை நடக்காது நடக்காதுனு புலம்புவ. இப்ப ஜேக் மாதிரியானு கேட்கற? எனக்கு ஊட்டிலாம் விடற என்னாச்சு?” என்று ஆர்வமாய் கேட்டாள்.
“எனக்கும் உன்னை பிடிக்கும் நற்பவி. இப்பயில்லை… இதழினி கேஸ்(முதல் கேஸ் சந்தித்தை சொல்லறான். உயிர் உருவியது யாரோ கதை) விஷயமா சந்திச்சப்பவே போல்டானா பெண் என்ற அளவுல பிடிக்கும். என்னை பிடிக்கவும் முடியாம தப்பிச்சதையும் தாங்கிக்க முடியாம நீ தவிச்சப்ப ரொம்ப கியூட்டா இருந்த.
மதுவந்தி இடத்துக்கு யாரையும் நெருங்க விட்டதில்லை. ஆனா நீயா வந்து பொருந்தி மதுவந்தியை நற்பவியா மாறி மாறி என் மனசுல ஆட்டம் காணவச்சப்ப ரொம்பவே நொந்துட்டேன்.
இப்ப விரும்பறேன்னு சொல்லி உண்மையை ஒத்துக்கவும் முடியலை. அதே நேரம் முடியாதுனு விலகி ஓடவும் முடியலை.” என்றவன் டிசு பேப்பரை நீட்டினான்.
“முடியாதுனு ஏன் விலகி ஓடணும். உண்மையை ஒத்துக்கோ. உனக்கான மீதி வாழ்க்கை நான் தான்” என்றவள் இமையை மூடி திறந்து இடது கையால் அவன் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தாள்.
“உங்க வீட்ல ஒத்துப்பாங்களா… நீ ஆக்டர் ப்ரனித் மச்சினிச்சி” என்று குறைப்பட்டான். அவன் சாதாரணமானவன் என்றதை குறிப்பிட்டான்.
“ஆஹ்… அவரே வந்து உன்னிடம் பேசறதா சொன்னார். இப்ப ஊர்ல இல்லை இல்லைனா இன்னிக்கே வந்துடுவார். அவரும் அடிமட்டத்துல இருந்து மேல வந்தவர். பார் வித் சில்வர் ஸ்பூன் இல்லை.. என்ன… கூலாயிரு. அப்பறம் உன்னோட அக்கா மாமாவிடம் சொல்லு. ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
ஐந்து வருஷம் மதுவந்தி அக்கா இல்லாததை விட நீ தனிமரமா நிற்கறியேனு ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பாங்க.” என்றதும் தலையாட்டினான் நற்பவி ஆட்ட வைத்தாள்.
“ஓகே டைம் அப். நான் டியூட்டிக்கு போறேன்.” என்று புறப்பட்டாள். அவளுக்கு மாறன் தன்னை விரும்புவது எப்பொழுதே அறிந்ததால், அவன் ஒப்புதலுக்காக தான் காத்திருந்தாள்.
அதனால் பரவசமாக நிலையெல்லாம் இல்லை. இதம் மட்டுமே.
மாடியிலிருந்து கண்ணாடி கதவழியாக பார்த்தான். அவள் காரில் ஏறிட சகாதேவன் வண்டியை செலுத்தினார்.
நற்பவி ஸ்டேஷன் வந்ததும் பரபரப்பாக இருந்தது. “மேடம் பட்டினம்பாக்கம் கடற்கரையில ஒரு பொணம் கரை ஒதுங்கியிருக்கு. இரண்டு போலீஸ் அங்க தான் காவலுக்கு இருக்காங்க. நானே உங்களுக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன்” என்று ஏட்டு கூறவும் தாமதம் செய்யாமல் கிளம்பினாள்.
“லவ் பெயிலியரா? கூட வேற பொண்ணோட திங்க்ஸ் பிணம் இருக்கா?” என்று கேட்டாள்.
“நோ மேம். தனி பொணம் தான்.” என்றவர் கடற்கரை நோக்கி சென்றனர்.
அங்கே பிணம் திரும்பியிருக்க லத்தியால் திருப்பி போடப்படவும் நற்பவி அதிர்ச்சியாகி நின்றாள்.
“இது கைலாஷ் ஆச்சே.” என்று குழம்பியவளாய் நின்றாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Wow super super. Intresting. Sema twist.