இதயத்திருடா-30
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
மதிமாறன் கூறிமுடித்து திரும்ப அடுத்த நொடி குண்டு துளைத்த தொடர் ஓசை கேட்டு மதிமாறன் அச்சத்தோடு திரும்பினான்.
தர்ஷன் நற்பவி இருவரும் ரங்கன் மற்றும் ரமணனை சுட்டுக் கொண்டிருந்தனர்.
தோட்டாக்கள் காலியானதும் தர்ஷன் என்ன என்பது போல மதிமாறனை பார்வையிட்டான்.
“என்ன போட்டுத் தள்ளிட்டிங்க?” என்று அதிர்ந்து கேட்டான் மதிமாறன்.
“இவனுங்களை பிடிச்சிட்டு போய் கோர்ட்டுல நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்து ஸப்ப்ப்பா… ரொம்ப நேரம் எடுக்கும். இதுக்கு எல்லாம் எனக்கு பொறுமையில்லை.
குற்றவாளினு தெரிந்தப்பின்னும் நீதிபதி தண்டனை கொடுத்தா என்ன நாம கொடுத்தா என்ன?
நமக்கு தேவை தண்டிக்கப்படணும்.
நாளைக்கே பணம் புரண்டு ஓடும். முதலமைச்சர் குணசேகரனிடமிருந்து கால் வரலாம். எங்களுக்கு இவனை தெரியும் அவனை தெரியும்னு ஜட்ஜ் பார்ஷியாலிட்டி பார்க்கலாம். இதுக்கு கஷ்டப்பட்டு பிடிச்சி போலீஸ் படை பாதுகாப்பு கொடுத்து, கூட்டிட்டு போகணுமா? இப்ப கன் ஷூட்டிங்மட்டும் தான். மிஞ்சி மிஞ்சி போனா மனித உரிமை பக்கம் ஆட்கள் கேள்வி வரும். அது கூட டிரக் ஆட்கள் மேல இறப்புன்னு வரமாட்டாங்க. பார்த்துக்கலாம்..” என்று தர்ஷன் பேசவும் மதிமாறன் வித்தியாசமாய் பார்த்தான்.
“சார்… நற்பவிக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கிங்க தேங்க்யூ சார்.” என்றான்.
“ஏ… பிரேவ் மேன். எனக்கு கீழே யார் நேர்மையா வேலை பார்த்தாலும் அவங்களுக்காக நான் முன்ன இறங்கி வருவேன். இதுல என் நண்பன் பொண்ணு, அங்கிள் என்ற பார்ஷியாலிட்டி எதுவும் இல்லை. அவளை கூட்டிட்டு போ. இங்க டீமை வச்சி நான் மேனேஜ் பண்ண ஆர்டர் போட்டுக்கறேன்.” என்று தட்டிக் கொடுக்கவும், மதிமாறன் நற்பவியை அழைத்து பைக்கில் சென்றான்.
தர்ஷன் தனது டீமிடம் கூறி எறிந்த இடமும், ரமணன், ரங்கன், பாரத், போட்டிலிருந்து குதித்த மற்றவர்களை அங்கே காத்திருந்த பிடித்த ஆட்கள் என்று கூட்டத்தை பிடித்தனர்.
காவல் துறையில் திலீபன் நற்பவியை புகைப்படம் எடுத்து கொண்டதால் மற்ற இடத்தை படம் பிடித்து உடனடியாக தர்ஷனின் மருமகளான ரிப்போர்டர் ஷண்மதிக்கு அனுப்பி வைக்க, அவளோ தான் பணிப்புரிந்த பத்திரிக்கையில் மாலை செய்தியாக உடனடியாக பக்கம் பக்கமாக செய்தியை போட பணியில் தீவிரமானார்கள்.
அதோடு அதே பத்திரிக்கை துறைக்கான செய்தி அலைவரிசையில் சூடான செய்தியாக பிளாஷ் நியூஸ் நொடிக்கு ஒருமுறை வந்தது.
மதிமாறனை பைக்கில் அவனை அணைத்துக் கொண்டு அவன் முதுகில் சாய்ந்தபடி நற்பவி பயணித்தாள்.
எண்ணூரில் கடல் பாலத்தில் மேல் வண்டி செல்லும் நேரம், நற்பவியின் வெம்மையான கண்ணீர் மாறனின் முதுகில் கசியவும் வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.
நற்பவி அவசரமாய் கண்களை துடைத்து இறங்கினாள்.
“என்னடி பொண்டாட்டி… இப்படி பொட்டுனு போட்டுத் தள்ளிட்டு இங்க புசுபுசுனு அழுவுற? என்னாச்சு? அதான் ஆட்களை பிடிச்சாச்சே.” என்று தாடை நிமிர்த்தி கேட்டான்.
சில்லென்ற கடல் காற்று, பாலத்தின் மேலே தன்னவன் மட்டும் தங்களை கடந்து செல்லும் வண்டிகள் என்றிருக்க, தேம்பினாள்.
“பவிம்மா… என்னனு சொன்னா தானே புரியும்.” என்றான்.
மாறனிடமிருந்து திரும்பி பாலத்தின் பிடியில் கையை வைத்து கடலில் எங்கோ வெறித்தபடி கண்களை அலைய விட்டாள்.
“அவன்… அவன்… என் யூனிபார்மை கிழித்து…” என்றதும், “சரி விடு புது யூனிபார்ம் ஸ்டிரிச்சிங் கொடுத்து வாங்கிடலாம்” என்றதும் நற்பவி முறைக்க, “ஏய் பொண்டாட்டி… வர்றப்ப பார்த்தேனே… இங்கிலிஷ் படத்துல ஏலியன்ஸ், அனிமல், ஸ்பேஷியஸ்னு மாட்டிக்கிட்டு, தப்பிச்சு உயிரோட ஜெயித்து வந்து ஹீரோயின் மாதிரி கெத்தா வந்த.” என்றான்.
“மாறா….” என்று கோபமாய் இருக்கவும், அவளின் அழுகைக்கு அவன் சிரிப்பூட்டும் பேச்சு எடுபடவில்லையென அவளை தன் பக்கம் திருப்பினான்.
“அவன் என் மேல கை வச்சிட்டான். அருவருப்பா இருக்கு மாறா. உடம்பு எல்லாம் புழு ஊர்ந்து போற மாதிரி இருக்கு. முன்ன நான் இப்படி யாராவது என்னிடம் நடந்தா அதை கடந்து வந்துடுவேன்னு அசால்டா சொல்லியிருக்கேன்
ஆனா இன்னிக்கு… அப்படி நடந்ததும்… கடக்க முடியலை. இப்பவும் அவன் தீண்டல்” என்றதும் அவளை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு அழுவதை வேடிக்கை பார்த்தான்.
சில பல நிமிடம் அவளின் தலையை முத்தமிட்டு முதுகை வருடி, “தெரியும்மா… அவனுங்க அப்படி பண்ணலைனா தான் ஆச்சரியம். நிச்சயம் தப்பானவங்களுக்கு மிஞ்சி மிஞ்சி பொண்ணுனா இதை தவிர என்ன நடக்கும். உடம்பை உரசி, தடவி மேய நினைக்கிற மாடுங்களா தான் இருப்பாங்க. நீ ஏன் அதை நினைக்கிற. என் பவிக்குட்டி பெண்சிங்கம்ல நினைச்சேன்.” என்று பேசினான்.
தேம்பிக்கொண்டே “அங்கிருந்து காப்பாத்திக்க முயன்று வந்தாச்சு மாறா. அவனை கொன்னுட்டேன் ஆனா இப்பவும் அவன் செய்த செயல் என்னால மறக்க முடியலை.” என்றவளின் முகத்தை அவன் விழியை பாரக்க வைத்து “என் கண்ணை பார்த்துக்கிட்டே மெதுவா இமையை மூடு” என்றான்.
நற்பவியோ மாறனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவளாய் மெதுவாய் இமை மூடினாள்.
“அன்னிக்கு அக்கா மாமாவை பார்க்க போனப்ப, உன்னை டிராப் பண்ணினேன் நினைவுயிருக்கா.” என்றான் மென்குரலில்.
கடலின் ஓசையை விழுங்கியது அந்த மென்மையான பேச்சு. இமை மூடியப்படி “ம்ம்.” என்றாள்.
“அப்போ… உன் உடல் என் முதுகுல உரசியது நான் அப்ப என்ன ரியாக்ட் பண்ணினேன்.” என்று கேட்டான். நற்பவியின் கண்களுக்குள் கருவிழிகள் இங்கும் அங்கும் உருண்டது.
உதடு விரிந்து கன்னம் மெதுவாய் உப்பசமாய் தெரிய மென்னகை விடுப்பது புரிந்தது.
மாறன் அவளின் முகமாற்றத்தை ரசித்தவனாய் “சொல்லு… நான் என்ன ரியாக்ட் பண்ணினேன். நீ என்ன ரியாக்ட் பண்ணின?” என்றவன் அவள் கழுத்தருகே உஷ்ணக் காற்றோடு கேட்டான்.
இமை திறக்காமல் “அன்னைக்கு உன் மேல நான் வேண்டுமின்னே மோதினேன். நீ சட்டுனு பிரேக் போட்ட, நான் இன்னமும் உன்னோட முதுகுல ஒட்டிக்கிட்டேன்.
என்ன மாறா டைம் ஆகுது வண்டியை எடுன்னதும் நீ கை நடுக்கத்தோட வண்டியை திரும்ப ஓட்டின. எங்க என் உடல் திரும்ப திரும்ப மோதுமோனு மெதுவா ரோட்டுக்கு வலிக்குமோனு ஓட்டினா,” என்ற போது நற்பவி உதட்டில் அழகாய் மாதுளை முத்துகள் தெரிய சிரித்தாள்.
மாறனுக்கு அதை கண்டதும் வெட்கமும் அவளை ரசித்தும் பார்வையிட்டான்.
“நீ மெதுவா போனாலும் வேகத்தடை வந்தப்ப வேண்டுமின்னே மோதிட்டே இருந்தேன். உனக்கு அப்போ நெற்றில சொட்டு சொட்டா வியர்த்துடுச்சு கழுத்து பகுதிலயும்.
பாவம் பையன் விட்டுடலாம்னு இருந்தேன். எனக்கும் உன்னிடம் அப்படி பழக ஒரு மாதிரி இருந்தது. நீ எப்படி எடுத்துப்பியோனு.
ஆனா என்னனு தெரியலை. அன்னிக்கு உன்னை டெம்ட் பண்ணி பார்க்க ஆசையா இருந்தது.
உன்னை நெஞ்சோட அணைச்சிட்டு வந்தேன். நீ தான் டியூட்டில ப்யூட்டி சல்லாபம் அதுயிதுனு பேசி கையை எடுக்க வச்ச.
அப்ப தான் கேட்டேன். ஏன் மாறா மது அக்காவோட இப்படி போனதில்லையானு.
நீ சொன்ன அவங்க சேரி கட்டி டிஸ்டன்ஸ்ல வருவாங்கனு. என்ன மாதிரி பேண்ட் ஷர்ட் போட்டு டபுள் சைட் போட மாட்டா. அதோட இந்த மாதிரி அனுபவம் முதல் முறைனு சொன்ன.
அந்த நொடி அவ்ளோ ஹாப்பியா இருந்தது. என் மாறாவுக்கு எல்லா பீலும் ஏற்கனவே வந்துயிருக்கும். என்னால புது உணர்வை பிரசண்ட் பண்ண வைக்க முடியாதுனு இருந்தேன். ஆனா நீ சொன்னதும் எனக்கு ஜிவ்வுனு இருந்தது.
அந்த நேரம் நட்டநடு ரோடா போயிடுச்சு வண்டி வேற நிறுத்தி பேசிட்டு இருந்தோம். இல்லைனா பஸ்ட் கிஸ் கொடுக்கணும்னு நினைச்சேன். அது மிஸ்ஸானதுல தான் அகைன் ஒருமுறை நீ டிராப் பண்ணினப்ப சேம் கழுத்துல வியர்வை சொட்டவும் முத்தமிட்டேன். என்ன டிராவல்ல இருந்தோம் பரவாயில்லை லவ்வர்ஸ் கொடுத்துப்பாங்க தானே.” என்றாள்.
மதிமாறன் சட்டென இதழை முத்தமிட்டு சுவைக்க ஆரம்பித்தான். அவளின் ஆசையை அடக்கிய பெண்ணவளுக்கு அவனின் ஆசையை மீறி அவனை தள்ளிட மனம் வரவில்லை.
இமை திறந்து அவனின் கண்களை காண அவனோ இமை மூடி அவளின் தேன்சுவையை ரசிக்க ஆரம்பித்ததை அறியவும் மீண்டும் முத்த மழைக்குள் நனைந்திட இமை மூடினாள்.
நேரங்கள் இருட்ட துவங்க இருசக்கர வாகனமும், காரும் அதிகமில்லையென்றாலும் சல்சல்லென்று போகவும் குளிர்ந்த காற்று உடலை மேலும் குளிர்வித்தது.
மழை தூவ ஆரம்பித்ததும் இருவரும் விலகி நிற்க, சுற்றி இருட்டாய் இருந்தது.
மதிமாறன் அவள் விலகவும் அவள் கையை பற்றி, “இப்ப உன் உடல்ல.. உயிர்ல… என் நினைப்பு இருக்கா?” என்றான்.
அவன் கேட்க வரும் காரணம் புரியவும், “ம்ம்” என்றாள்.
“பெர்பெக்ட்… இனி கண்டவனோட தீண்டலை இந்த மழை எடுத்துட்டு போயிடுச்சு. இனி என் நினைப்பு மட்டும் தான் என் பொண்டாட்டிக்கு இருக்கணும். இனி அழுவியா?” என்றான் மதிமாறன்.
மாட்டேன் என்பது போல தலையசைத்தாள்.
அவளை அணைத்து பைக்கில் ஏறக்கூறி அழைத்து வீட்டுக்கு வந்தான்.
அங்கே தர்ஷன் ப்ரனித் நன்விழி நித்திஷ் என்று காத்திருக்க, நற்பவி ஓடிவந்து, “மாம்ஸ்… எப்ப வந்திங்க?” என்று கேட்டாள்.
“மதியமே வந்துட்டேன் பாப்பா. ஆமா… என்ன நீ வீரசாகசம் எல்லாம் பண்ணிட்டு வர்ற. எப்படியிருந்தது தெரியுமா. ரொம்ப பெருமையா மாமா போட்டு போட்டு பார்த்தார்.” என்று கூறவும், நற்பவியோ வெட்கம் கொண்டாள்.
“என்ன மாம்ஸ்… அக்கா உம்முனு இருக்கா… கிப்ட் எதுவும் வாங்கிட்டு வரலையா?” என்று விழியனை தூக்கினாள்.
“அதயேன் கேட்கற.? உங்கக்கா உன்னை காணோம்னு பைக் எடுத்து கிளம்ப அதே நேரம் நான் எண்ட்ரி ஆனேனா. எல்லாம் தர்ஷன் அங்கிள் பார்த்துப்பார் நீ ப்ரணிதா குட்டி அழுவறா அவளை பாருனு இழுத்துட்டு வந்து சொல்லிட்டேன்.
அவ்ளோ தான்…
எல்லாம் உன்னால தான் டா. என் ஜாப் போச்சு. என் கெரியரை அழிச்சிட்ட. உன்னை காதலிச்சதுக்கு என் தலைவிதி என் தங்கைய காப்பாத்த கூட போக விடமாட்டறனு நான் ஸ்டாப்பா திட்ட ஆரம்பிச்சிட்டா…
உனக்கு தான் தெரியுமே… எப்படியும் விழி லைப் முழுக்க சொல்லிக் காட்டியே என்னை குத்தி கிழிப்பா. ரூமா இருந்தா முத்தம் வச்சி ஆப் பண்ணிடுவேன்.” என்றவன் நன்விழியை பார்க்க அவளோ முனங்கி கொண்டு ஷர்ட் ஒன்றை எடுத்து வந்து மதிமாறனிடம் கொடுக்க மென்னகை புரிந்தான்.
“தேங்க்ஸ்ங்க” என்றபடி ஷர்ட் மாட்டினான்.
“ஓஎம்ஜி பங்காளியா பார்க்கலையே. நைஸ் டூ மீட் யூ மதிமாறன். வீடியோ கால்ல பேசலாம்னு இருந்தேன். பட் விழி தான் வேண்டாம் நேர்ல பேசுனு சொன்னா.
உங்களிடம் துஷ்டி கேட்க கூட முடியலை மாறன். எல்லாம் கடந்து வாங்க. நமக்கு அது தானே வாழ்க்கை.” என்றான் ப்ரனித்.
“கண்டிப்பா சார்.” என்றவன் நற்பவியை காணவும், “சாரா ப்ரனித்னு சொல்லுங்கப்பா இல்லையா அண்ணானு சொல்லிடுங்க.” என்றார் ப்ரனித்.
“கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கறேன்.” என்றவன் கிளம்பவா என்பது போல பார்த்தான்.
“டேய்… உட்காரு டா. சாப்பிட்டு இங்கேயே ஸ்டே பண்ணு.” என்று நித்திஷ் கூறவும் மதிமாறனோ தயங்க, “நித்திஷ்… மாப்பிள்ளை பா. வாடா போடானு பிரெண்ட் நினைப்புல இருக்க.” என்று நித்திஷிடம் கூறினார் தர்ஷன்.
பின்னர் மதிமாறனிடம், “மிஸ்டர் மாறன் இங்கயிருங்க. நற்பவிக்கு கொஞ்சம் பலமா இருக்கும்.” என்று அங்கு நடந்தவையில் பவி கலங்குவாளோ என்று இலைமறையாய் கூறினார்.
மாறன் புரிந்தவனாக தலையாட்டி சரியென்றான். “அப்பறம் நற்பவி… கலக்கிட்ட டா. ப்ரவுட் ஆஃப் யூ சைல்ட். நியூஸ் பார்க்கலை நீ… ரமணன் ஃபாக்டரி சீல் வச்சாச்சு. அதோட கிளை அலுவலகம் எல்லாமே கிளோஸ். வெளிநாட்டு டீலிங் வச்சியிருக்கிற எல்லாம் நோண்டியாச்சு.
ரங்கன் குடோன் மட்டும் இல்லை கூடவே இரண்டு மூனும் டேக்ஓவர் பண்ணி அழிச்சாச்சு. எதுவும் யார் கைக்கும் கிடைக்கவிடலை. எரிந்ததை தான் காட்டியிருக்கு. அங்க டிரக் இருந்ததை மாறன் கொண்டு வந்த ஹார்ட் டிஸ்க்ல இருந்த சிசிடிவி பதிவு மூலமா டிஸ்பிளே பண்ணி பிளே பண்ணியாச்சு.
மொத்தத்துல இப்ப நிறைய பேசப்படுவது நீ தான். சந்தோஷமா இருக்கு. ரொம்ப திட்டிட்டேனா” என்று அணைத்து தட்டி கொடுத்தார்.
“இல்லை அங்கிள்… உளி மாதிரி திட்ட திட்ட தான் சிற்பம் செதுக்க முடியும். புரிஞ்சிடுச்சு அங்கிள்” என்றாள்.
“தட்ஸ் குட்… அப்பறம் நித்திஷ் வர்றேன் நன்விழி உன் தங்கையை பொறுப்பா கொண்டு வந்துட்டேன். இனியும் பார்த்துப்பேன்.” என்றவாறு கிளம்பினார்.
நித்திஷோ “நற்பவி சின்ன மாப்பிள்ளை குளிக்கட்டும். சாப்பிடலாம்.” என்று கூறவும், நற்பவியும் சரிப்பா” என்று அறைக்குள் வந்தார்கள்.
“நீங்க குளிக்க போங்க. நான் டிரஸ் எடுத்து வைக்கிறேன்” என்று சென்றவளை இழுத்து “அது என் டிரஸ். கொடு துவைச்சிடறேன்.” என்று மேல் சட்டையில் கை வைக்கவும், “நான் துவைச்சிப்பேன். நீங்க குளிச்சிட்டு வாங்க” என்று தள்ளிவிட்டு ஓடினாள்.
மதிமாறனோ “போலீஸ்காரி இந்த திருடனிடம் மாட்டுவ டி” என்று கூறவும் “வெவ்வவே” என்று சென்றவளை கண்டு ஷவரில் நனைந்தான்.
மதிமாறன் குளிக்க சென்றதும் நற்பவி உடையை எடுத்து தரவும், பின்னர் சாப்பிட வந்தார்கள்.
மஹாவும் குருவும் சாப்பிடும் போது “சார் ஒரு செல்பி சார். இந்த காபி வித் வினுனு சொல்வாங்களே அது மாதிரி டின்னர் வித் ப்ரனித் ஸ்டேடஸ் போடுணும்.” என்று கேட்கவும் “யா சூர்” என்றான் ப்ரனித்.
ப்ரனித்திடம் பேச பேச குருவுக்கு தலைகால் புரியவில்லை. குரு மதிமாறனின் ஹோட்டலில் சூப்பர் வைஸர் என்ற இடமும், மஹா குழந்தை பிறக்கும் வரை நன்விழி கவனிப்பில் இருக்க கூறினாள். அதன் பின்னும் இங்கு வீட்டில் குழந்தையை கவனித்து கொண்டு மேல் பணியை பார்த்துக்க கூறவும் மஹா மகிழ்ச்சியாய் தலையாட்டினாள்.
நற்பவிக்கும் மதிமாறனுக்கும் திருமணம் குறித்து ப்ரனிதிடமும் மதிமாறனிடமும் பேசினார் நித்திஷ்.
ப்ரனித்திற்கு சூட்டிங் இல்லாத நாட்களும், மதிமாறனுக்கு பார்ட்டி ஹால் கட்ட நாட்களை கேட்டு திருமணத்தை எப்பொழுது நடத்த என்று கேட்டார் நித்திஷ்.
“எனக்குனு இனி யாரு இருக்கா சார். நீங்க எது முடிவு பண்ணினாலும் ஓகே தான்” என்றான்.
“சாரா… என்னப்பா நீயும் என்ன மாதிரியே பேசற. ம்ம்.. பழக பழக மாமா வந்துடும். மாமா… நற்பவி கல்யாணத்தை குயிக்கா வச்சிட்டா பெட்டருனு நன்விழி சொல்லறா.” என்று ப்ரனித் பேசினான்.
நற்பவி அக்காவின் கையை பிடித்து “தேங்க்ஸ் அக்கா. நானே சொல்லலாம்னு இருந்தேன்” என்று காதை கடித்தாள்.
“சரி போய் தூங்குங்க. நாளைக்குள் தேதி பார்த்துடலாம். நற்பவி மதிமாறன் கொஞ்சம் அசதில இருக்கலாம்” என்று கூறவும், ஆளாளுக்கு உறங்க சென்றனர்.
மதிமாறன் விழித்து நிற்க, “போ.. நற்பவி ரூம்லயே தங்கிக்கோ. தர்ஷன் தான் நற்பவி கூடவேயிருக்கட்டும்னு சொல்லிட்டு போனான்.” என்றதும் மதிமாறன் தலையாட்டி நற்பவி அறைக்கு வந்தான்.
“ஓய்… மாறா… வந்துட்டியா” என்று போனிடெயில் போட்டு கொண்டையாய் முடித்தாள்.
“இப்ப என்ன வேட்டைக்கா போற. கொண்டையும் போனிடெயிலும்” என்று அதனை அவிழ்த்து விட்டு தோளில் புரள வைத்தான்.
“மாறா… தூங்கும் போது டிஸ்டர்பா இருக்கும்.” என்று சலித்தாள்.
“நான் ரசிக்கணும் டிஸ்டர்பா இருந்தா இருக்கட்டும்” என்று மெத்தையில் அமர வைத்து கண்ணுக்குள் அவளை நிரப்பினான்.
“மாறா… தூக்கம் வரலை.” என்று அவன் ஷர்ட் பட்டனை திருகினாள்.
“போலீஸம்மா… நீ ரொம்ப அசதியா இருப்பனு பார்த்தேன்.” என்றதும், அவன் ஷர்ட் பட்டனை ஒவ்வொன்றாய் அவிழ்த்தாள்.
“ஏய்… என்ன பண்ணற.” என்று எழுந்தவனை பிடித்து, “உட்காரு… உன்னை ஒன்னும் பண்ணலை. எனக்கு ஈவினிங் ஷர்ட் இல்லாம உன் நெஞ்சுல சாய்ந்தப்ப என்னவோ ரொம்ப பிடிச்சிருந்தது. நீ வேற பொண்டாட்டினு சொன்னியா. இயல்பா புருஷன் பொண்டாட்டி அந்த மாதிரி பனியன் டிரஸ்ல தானே வீட்ல தினமும் பார்க்குற மாதிரி இருக்கும். அதனால இன்னிக்கு அப்படியே இரு.” என்று கூறினாள்.
“போலீஸ்காரி.” என்று அவளின் இடையில் கை வைத்து தன்னோடு இறுக்கவும், “மாறா.” என்று உள்ளுக்குள் போன குரலில் கேட்டாள்.
காது கழுத்தில் இருந்த முடியை ஒதுக்கி விட்டு முத்தம் வைக்கவும், நற்பவி அவனை பார்த்து “என்ன வேணும்” என்று அவனை கூர்ந்தவாறு நோக்கினாள்.
“தெரியலை… இப்படியே கட்டிட்டு இருக்கணும்னு தோணுது. எல்லை மீறாம இப்படியே அணைச்சிட்டே இருக்கலாமா” என்று கேட்டான்.
“ம்ம் எனக்கு ஓகே” என்றவள் அவனின் தோளில் இருபக்கம் இருக்கும் பனியனினை இழுத்து அவனோடு புதைந்து கொண்டாள்.
மதிமாறனோ “லைட்டா கிஸ் பண்ணிக்கலாமா கன்னத்துல?” என்று கேட்டவனை முகம் நோக்கி நிமிர, சட்டென இதழை முற்றுகையிட்டு முத்தத் திருட்டை செய்தான்.
எவ்வளவு நேரம் முத்தங்களை பரிமாறிக் கொண்டர்களோ அதன் பின் இருவரும் பிரியாமல் கட்டிக் கொண்டார்கள்.
அதிகாலை விழித்தவளை மீண்டும் அணைத்து கொன்டவன் விழித்தபடி அணைத்திருப்பதை உணர்ந்தாள்.
“திருடா… கன்னத்துல கிஸ் பண்ணவானு கேட்டு லிப்ல கொடுத்துட்ட?” என்று கேட்டு அவனின் சின்னதாய் முளைத்த தாடியில் விளையாடியபடி கேட்டாள்.
“இதயத்திருடனிடம் இந்த மாதிரி நீ கேட்கவே கூடாது. நான் அப்படி தான் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பேன்.” என்று பேசினான்.
“பார்டா… ஹோட்டல்காரருக்கு இலை பாயாசம்னு டயலாக் விடறாரு.” என்று பேசவும் சட்டென விழித்தான்.
“ஏன் போலீஸம்மாவுக்கு திருடனை தான் பிடிக்குமா. இந்த ஹோட்டல்காரனை பிடிக்கலையா?” என்று கேட்டு எழுந்தான்.
“இந்த உயிரை உருவியது இதயத்திருடன் தானே. ஹோட்டல்காரன் இல்லையே.. அதனால இதயத்திருடனை தான் ரொம்ப பிடிக்குது.
வேண்டுமின்னா ஹோட்டல் வச்சிருக்குற மதிமாறனை எங்கப்பாவுக்கு பிடிக்கலாம்” என்று சிரிக்க மதிமாறனும் மங்கையவளின் மனம் திருடும் புன்னகையில் மயங்கினான்.
விரைவில் இதே அறையில் கணவன் மனைவியாய் காதல் கட்டுண்டு மதிமாறனை ஆட்சி செய்வாள் நற்பவி.
தனக்கான வாழ்க்கை மதுவந்தியிடம் தொலைந்ததாய் எண்ணி வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன் தற்போது நற்பவியின் அன்பிலும் ஆட்சியிலும் மாறனாக வலம் வந்து இதயத்திருட்டை தைரியமாய் போலீஸிடமே தினம் தினம் களவாடுவான்.
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.
Guest Roles
தர்ஷன்-From காதலாழி ஹீரோ
காதலாழி (பாகம்-1) (Tamil Edition) eBook : Thangaraj , Praveena : Amazon.in: Kindle Store
காதலாழி (பாகம்-2) (Tamil Edition) eBook : Thangaraj , Praveenaa : Amazon.in: Kindle Store
Kaadhalaazhi – An online Tamil story written by Praveena Thangaraj | Pratilipi.com
குரு மகா-From நதி தேடும் பெளவம் https://praveenathangarajnovels.com/community/%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-praveena-thangaraj/
ப்ரணித் நன்விழி -From உள்ளத்தில் ஒருத்தி(தீ)
Ullathil oruthidee – An online Tamil story written by Praveena Thangaraj | Pratilipi.com
One of the small வில்லன் இளங்கோ -From செந்நீரில் உறையும் மதங்கி செந்நீரில் உறையும் மதங்கி (Tamil Edition) eBook : Thangaraj , Praveena : Amazon.in: Kindle Store விரைவில் தளத்தில் rerun பதிவிடறேன்.
ரீடர்ஸ் உங்க கருத்தை சொல்லுங்க. thanks.
Super super fantastic narration sis. Wonderful.ending sis. Really very thrill story. Every episode so.many twists and love, romance, fight etc. Feel good story sis.
SUPER SUPER SUPER EPI AND ENDING. Sikram mudichitinga sisy story ah rendu perum oruthar ku oruthar evlo azhaga supportive ah irukanga aaruthal ah irukanga atha veetla iruka eriyavangalum purinji ethukiranga simply superb atiradi and Lovable story .
unga kitta pidichathe vera vera story characters include pani eluthurathu than athunala enaku antha stories um taknu mind la varum .
congratulatoins sisy . unga kadhaigal inum vanthute irukanum . melam kotta thali katta book vniten