Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-4

உன்னில் தொலைந்தேன்-4

💟 4
                                       

அடுத்த நாள் அலுவலகத்திற்கு ஜெயராஜன் வந்து விட்ட பின்னரும் பிருத்வியும் கூடவே வந்து இருந்தான். லத்திகாவிற்கு ஜெயராஜன் வந்து விட்ட விவரம் அறிந்து அவரை காண அறைக்குச் சென்றாள். அங்கு MD சீட்டில் பிருத்வியே அமர்ந்து இருந்தான். அதற்கு எதிர் சீட்டில் ஜெயராஜன் அமர்ந்து இருந்தார்.


     ”சார் உங்க உடல் நிலைக்கு என்ன? ஏதோ ஹாஸ்பிடல் என்று மட்டும் கேள்விப்பட்டேன்” என்று அக்கறையில் கேட்டு விட்டாள்.


     ”என் ஒய்ப் பவானிக்கு மைல்டு அட்டாக் மா. உன் கூட பேசிட்டு பவானிக்கு போன் பண்ணினா லைன் போகலை அப்பறம் வீட்டு வேலை செய்யுற அகிலா தான் அட்டேன் பண்ணினா. அப்பறம் ஹாஸ்பிடல்ல போய் கூடவே இருந்துட்டேன்”


      ”சார் இப்ப மேடமுக்கு..?”


      ”பைன் மா. என்ன இன்னும் பத்து நாள் இருக்க சொல்லறாங்க. வீட்ல தனியா இருப்பதை விட பாதுகாப்பா ஹாஸ்பிடலில் இருப்பது சேப்”


       ”அப்ப சாப்பாடு..?”


       ”பவானிக்கு எனக்கு எல்லமே சமையல்காரங்க செய்யறது தான்”


      ”கூட சொந்தக்காரங்க … யாரும் …”


      ”இல்லைம்மா பவானி கூடவே  நர்ஸ் ஏற்பாடு செய்தாயிற்று”


      ”ஒ ..” என்றவள் புறப்பட கதவில் கை வைத்தாள்.


      ”லத்திகா உன்னை பொண்ணு பார்த்துவிட்டு போயாச்சா… எப்ப கல்யாண சாப்பாடு போட போற?” என்றதும் பிருத்வி லத்திகா மீது கண் பதித்தான். லத்திகா அவனின் திடீர் பார்வையால் பேச்சிழந்து தடுமாறி உடனே சுதாரித்தாள்.


      ”மாப்பிள்ளைக்கு பொண்ணு பிடிக்கலையாம் சார். சோ மேரேஜ் கேன்சல்” என்று தோளை குலுக்கினாள்.


      ”என்ன உன்னை பிடிக்கலையா?” என ஜெயராஜன் கேட்க, அதே மனநிலையில் தான் பிருத்வியும் இருந்தான். ‘எந்த மடையன் இவளை பிடிக்கலை என்று சொன்னான். மேலும் அன்று அலங்காரத்துடன் லத்திகா வந்தது இதனால் தானா? அலங்காரம் செய்த அவளின் முகம் அன்று அதற்காக வருத்தப்பட்டு இருந்தது போல இல்லையே… 2  மணி நேரம் தாமதமாக வந்ததும் அதனாலா… ‘  என மனதிலே கேட்டு கொண்டான்.


    ”ஆமா சார்” என்றது லத்திகா குரல்…. ஆனால் அவன் மனதில் நினைத்த செய்திக்காக வந்த பதில் போலவே தோன்றின… ராஜன் கூறியதற்கு அவளின் பதில்..


    ”என்ன மா ஏதாவது ஜாதகம் சரியில்லையா?”


     ”அதெல்லாம் பார்க்கவே இல்லை சார். அப்பாவுக்கு நம்பிக்கையும் இல்லை”


     ”பின்ன நகை பணம் பிரச்சனையா?”


     ”அம்மா நகையே 30 சவரன் இருக்கு அப்பா வேற 30 சவரன் சேர்த்து வச்சி இருக்கார்”


      ”வேற என்ன பிரச்சனை?” என ஜெயராஜன் கேட்க,


      ”நான் போட்ட கண்டிஷன் அப்படி சார்”


      ”என்ன கண்டிஷன் மா?”


      ”திருமணத்திற்கு பிறகும் என் சம்பளத்துல பாதி பணம் என் பெற்றோருக்கு தரணும் அதுக்கு ஓகே என்றால் சரினு சொன்னேன். பொண்ணு பார்க்க வந்த பையனுக்கு அதுல உடன்பாடு இல்லை அதான் திருமணம் வேண்டாம் என்று கூறி விட்டு போயிட்டாங்க” என்றாள்.


       ”எந்த முட்டாள் இதுக்கு சம்மதிப்பான் யார் கல்யாணம் பண்ணிப்பான்” என இடையில் பிருத்வி புகுந்தான்.


      ”எந்த முட்டாள் ஓகே சொல்லறானோ அவனை கல்யாணம் பண்ணிப்பேன் உங்களுக்கு என்ன?”
 என்ற பிறகே ஜெயராஜனை கண்டு


     ”சாரி சார் ஒரு ப்லோவ் வா வந்துடுச்சு” என்றாள் சங்கடத்துடன்…..


       ”பரவாயில்லை மா பிருத்வி வந்த அன்னைக்கே உனக்கும் அவனுக்கும் காரசாரமான சண்டை என்று கேள்விப்பட்டேன்”


      ”அது … வந்து … sorry sir நான் அவர் கத்தியதில் நானும் கொஞ்சம் கோவமா பேசிட்டேன்…  நான் வேலைய பார்க்க போறேன் சார்” என நழுவினாள். மன்னிப்பு கேட்டாகிவிற்று அதே சமயம் அவனும் பேசியதாக சுட்டி காட்டியாகிவிட்டது என்றது  மனம்.


                             அவள் சென்றதும் “ரொம்ப நல்ல பெண். அப்பா அம்மாகாக எப்படி யோசிக்கறா? வந்த வரனையும் வேண்டாம் என்று சொல்லி இருக்கா?” என பேசினார்.


      ”நானும் உங்க ரெண்டு பேருக்காக தான் இந்த ஆபிஸ்க்கு வந்து இருக்கேன்”


      ”ஏன்டா ரீல் விடற, நீ அப்ளை பண்ண நினைச்ச போஸ்ட் ரத்து பண்ணிட்டாங்க அதுவும் இல்லாம வில்லியம் பக்கத்துல இருக்கற ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போன ஆளுக்கு ஏதோ பூச்சி கடிச்சு உயிருக்கு போராடி இருக்கான். அவன் பயத்துல வரலை. அவனால இன்னும் நாலு பேரும் வர மாட்டேன் என்று சொல்லிட்டாங்க சோ ப்ரோக்ராம் கேன்சல். எல்லாம் பேப்பர்ல பக்கம் பக்கமா போட்டு இருக்காங்க”


      ”முட்டாள் பசங்க கிடைச்ச ஆபர் விட்டுட்டு இருக்காங்க. நானா இருந்தா கண்டிப்பா போய் இருப்பேன்” பிருத்வி பேச சினம் கொண்ட ஜெயராஜன்,


     ”இது ஆபிஸ் இங்க பர்சனல் பேச கூடாது” என்றார்.


     ”இவ்வளவு நேரம் அந்த …ராட்… பொண் …ம்… ஆஹ் லத்திகா கூட பேசினது எல்லாம் பர்சனல் இல்லையா?” என ராட்சஸி என கூற வந்து பின் பொண்ணு … என ஆரம்பித்து ஒருவழியாக அவள் பெயரை தன் மூளையில் தனக்கே தெரியாமல் பதிந்த அவள் பெயரை சொன்னான்.


       ”சரி நீ பேசறது பிடிக்கலை விடு…. இப்போ மட்டும் உங்க அம்மா மருத்துவமனையில் என்ன அனுசரிச்சு நடக்க சொல்லி கேட்டுக்கலை என்றால் இங்க வந்து இருப்பியா…? அவள் சொல்லிட்டா அதுவும் உடம்பு முடியாமலிருப்பதால் சொல்லுக்கு காது கொடுத்து வந்து இருக்க.. இல்லை என்றால் நீயாவது இங்க வந்து இருப்பதாவது?” என்று சொல்லிட பிருத்வியும் வாதம் செய்யவில்லை.


             ஆனால் இனி அலுவலகம் வர அவனே ஆர்வம் கொண்டு இருந்தான். அதற்கு காரணம் லத்திகா என்பதை அறியாமலே இருந்தது அவனின் மூளை


            ஒரு வாரம் அமைதியாக சென்றன. இடையில் இரண்டு முறை தன் வீட்டு உணவினை ஒரு லஞ்ச் பாக்ஸில் எடுத்து வந்து ஜெயராஜனுக்கு உண்ண கொடுத்தாள். அதில் சிறிது அவளது சிடுமூஞ்சியும் ருசித்தான்.


             அவன் அவள் எதிர்க்க தான் உண்டான். ஆனால் எதையும் காட்டி கொள்ளாமல் உண்டு முடித்தான்.


             லத்திகா கூட அதை பற்றி எல்லாம் யோசிக்கவில்லை…. அவள் அம்மா உணவு யாருக்கு பிடிக்காமல் போகும்… 30 வருட கை பக்குவம் துணை தானே…


        அடுத்த நாள் பேச்சு வாக்கில் ஜெயராஜன் பிருத்வி பிடித்த உணவினை அவரை அறியாமல் சொல்ல கேட்ட லத்திகா அதற்கடுத்த நாள் தாய் என்ன உணவு செய்ய லத்திகா என்று கேட்க அவளோ பிருத்வி பிடித்த உணவு என்று ஜெயராஜன் சொல்லிய உணவு வகைகள் காய்கறிகளை சொல்லி முடித்தாள்.


      அது அவளே உணரவில்லை…….. ஜெயராஜன் இன்று என்னம்மா என் பையனுக்கு புடிச்ச டிஷ் சமையலா இருக்கு… என்று கேட்ட பின்னரே உணர்ந்தாள்.  


            வீட்டுக்கு வந்த பின்னர் அது எப்படி அவனுக்கு பிடித்த உணவினை அம்மா கேட்கும் பொழுது சொல்லியது என் மனம் என்ற யோசனையில் மட்டும் சென்றாள்.


            அதற்குள் அவளின் குட்டி வானர கூட்டங்கள் வந்து சேர அவர்களோடு விளையாட சென்று விட்டாள்.


         பக்கத்து வீட்டில் இருக்கும் எல்லா குட்டி பசங்க பொண்ணுங்க எல்லாம் லத்திகாவின் நெருங்கிய நட்பு வட்டங்கள்…… அவர்களோடு நேரம் செல்ல பிருத்வி நினைவை தற்காலிகமாக மறந்து போனாள்.

-தொடரும்

4 thoughts on “உன்னில் தொலைந்தேன்-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *