💟9
என்றுமில்லாது இன்று வழக்கத்திற்கு மாறாக 7 மணி அளவில் எழுந்தாள் லத்திகா. வேக வேகமாக கிளம்பி முடித்தாலும் 8:30 ஆகிவிட்டன.
சகுந்தலா சமையல் முடித்து விட்டு லத்திகா சாப்பிட வரும் தருவாயில் பேசுவோம் என காத்திருக்க, கைப்பையை மாட்டி கொண்டு கிளம்புவதை கண்டார்.
”ஏய் லத்திகா உன்கிட்ட பேசணும் என்று சொன்னேன்ல நீ பாட்டு கிளம்பினா என்ன அர்த்தம்”
”அய்யோ அம்மா கிளம்பினதே லேட், வந்து பேசிக்கறேனே ஆபிஸ்ல சிடுமூஞ்சி லேட்டா வருவதை பார்த்துச்சு அப்பறம் கடுகு மாதிரி தாளிச்சுடும். பை பை” என ஸ்கூட்டி எடுத்து பறந்து போனாள் .
நேற்று போலவே இன்றும் சகுந்தலா கூப்பிடுவது கேட்காமல் போனவளை திட்டியபடி சமையல் அறையில் நுழைய, தலையை உலர்த்தியவாறு ஜீவானந்தம்,
”சகு லத்திகா இன்னும் சாப்பிட வரலையா?” என்று கேட்டதும் தாமதம்
”உங்க பொண்ணு அப்படியே என் சொல் பேச்சு கேட்கற மாதிரி கேட்கறீங்க , அவ பாட்டு கிளம்பி போயிட்டா. ஆபிஸ் லேட் ஆனா அந்த தம்பி திட்டுவார் என்று சொல்லிட்டு நான் என்ன பேசறேன்னு கூட காதுல வாங்காம ஓடிட்டா” என்று பொறுமினார்.
”அச்சோ , இப்ப ஜெயராஜன் சாருக்கு என்ன சொல்ல?” என்று வருந்த,
”அவங்களா போன் பண்ணினா சொல்லிக்கலாம் விடுங்க” என்று மனையாள் கூற தலையாட்டி கொண்டார். அவர்களாக போன் போட்டு கேட்பது நடக்காது என்று.
”ம் அதான் சரி சகு. நான் இன்னிக்கு ஆபிஸ்க்கு லீவு சொல்லிட்டேன்” என காலை நீட்டி பேப்பரில் மூழ்கினார்.
நேராக ஸ்கூட்டி நிறுத்திவிட்டு மேலை பார்க்க பிருத்வி ஜன்னல் வழியாக அவளை பார்த்திருந்தான். போச்சு அவன் எனக்கு முன்ன வந்து என்னை கண்காணிக்கரான் என்று நேரத்தை பார்க்க அது சரியான நேரம் என்று காட்டியது. அப்பாடி என்று பெருமூச்சு விட்டாலும் தயக்கத்தோடு நுழைந்தாள்.
அவளது தயக்கம் அவனுக்கோ அது பயம் என உணர்ந்து அவன் சற்று எகத்தாளத்தோடு நடக்க நினைத்தான்.
முன்பு பெட்ரோல் பேங்க் அருகே பேசிய நபர் யார் என கேட்கும் எண்ணத்தை கைவிட்டு இருந்தான். இப்பொழுது அவ்வெண்ணம் உதிக்க, அவன் அறைக்கு அவள் வந்த அத்தருணத்தில் திட்டமாட்டாள் என்ற தைரியத்தில் கேட்க துடித்தான்.
”சார்கிட்ட சைன் வேணும் சார் வரலையா ?” என்று கேட்க,
”இங்க நான் தான் md கொடு” என்றான்.
”இல்லை சார்”
”இந்த ஆபிஸ் என் பேர்ல நடக்குது என்கிட்டேயே சைன் வாங்க யோசிக்கற கொடு” என்று பைல் புரட்டினான். சைன் போட்டுக்கொண்டே
”ஒன் வீக் முன்னாடி பெட்ரோல் பேங்க்ல உன்னை பார்த்தேன் யார்கூட பேசிட்டு இருந்த?” என்ற கேள்வியில் அமைதியாக இருந்தவள் திடீர் என முறைத்து பின்னர் நக்கலாக,
”ம் என் லவ்வர்” என்றாள்.
”ஏய் …” என்று பிரஜன் திமிர,
”என்ன ஏய்… என்கிட்ட கேட்க உங்களுக்கு என்ன ரைட்ஸ்… நானும் போன போகுது என்று சும்மா உங்களுக்கு பதில் சொல்றேன்னு ரொம்ப தான்… நான் உங்க ஆபிஸ்ல ஒர்க் பண்றேன் ஆபிஸ் விஷயம் மட்டும் கேளுங்க இல்லை… ” என முறைத்து சென்றிட, ‘ஏன் கட்டிக்க போற நான் கேட்க கூடாதா? ரொம்ப திமிர் ராட்ஸசி ராட்ஸசி’ என புலம்பினான்.
அவளோ ‘இனி கேள்வி கேட்கட்டும் அப்பறம் இருக்கு உனக்கு என்னடா வெண்ணை என்று கேட்கறேன்… சும்மா சும்மா நொய் நொய் னு கடுப்பை கிளப்பறான்…. என் அப்பா கூட நான் யார்கூட பேசறேன் பழகறேன் என்று நோட் பண்ணியது கிடையாது…இவனுக்கு என்னவாம்…. கட்டின புருஷன் மாதிரி கேள்வியை பாரு.” என நொடித்து கொண்டாள்.
அதே நேரம் பிருத்வி போன் மணி அடித்தது.
”ம் சொல்லுங்க …”என்றான்.
”டேய் லத்திகா வந்துட்டாளா?”
”ம் வந்து ஆடுறா”
”டேய் இப்ப தான் போன் பண்ணி கேட்டேன். லத்திகாவிற்கு இன்னும் ஏதும் சொல்லலையாம். நான் 12 மணிக்கு வர்றேன் நேர்ல பேசலாம்” என செல்லை அணைத்தார்.
‘சொல்லிருந்தா மட்டும் என்னவாம் இதே மாதிரி தான் தையா தக்கானு குதிப்பா’ என்று சொல்லி கொண்டு அவளை காண அவள் எந்த வித ரியாக்ஷன் இல்லாது பணியை செவ்வென செய்தாள்.
சொல்லாமல் இருக்கும் பொழுதே இப்படி குதிக்கறா அவளை மேரேஜ் பண்ண கேட்டா என்ன செய்வா? பிருத்வி உன்னை அவ கையால அடிவாங்கி அவஸ்தை பட அப்பா பிளான் போட்டுட்டாரோ.. எதுக்கோ எஸ்கேப் ஆகிடலாமா? ஆனா என்னவோ அவளோட பதில் தெரிந்துக்க ஆர்வமா இருக்கு என்று மனச்சாட்சி சொல்ல…. ஹ்ம்ம் எனக்கும் ஆர்வமா இருக்கு.’ என்றான் சிரிப்போடு.
சொல்லியது போலவே பன்னிரெண்டு மணி அளவில் வந்தவர். லத்திகாவை அழைத்தார்.
ஆஹ ஒரு சைன் அவன்கிட்ட வாங்க யோசிச்சதுக்கு சாரை கூப்பிட்டு விட்டானே இந்த சிடுமூஞ்சி என்று நினைத்தவாறே உள்ளே நுழைந்தாள்.
”வா மா லத்திகா உட்கார் ”
”இ…இருக்கட்டும் சார் . என்ன விஷயம்”
”உட்கார் சொல்றேன்” என்ன இது இப்படி பில்டப்பா இருக்கே வேலையே விட்டு அனுப்ப போறாரா என சற்று மிரட்சியோடு அமர்ந்தாள்.
”லத்திகா எனக்கு பிஸ்னஸ் பர்சனல் ரெண்டுதலையும் நேரிடையா பேசி தான் பழக்கம். அதனால் நேரிடையாவே பேசிடவா?”
”ம் பேசுங்க சார்”என தயங்கினாள். கன்போர்ம் வேலை விட்டு தூக்க போறார்.
”லத்திகா என் மனைவி பவானிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னை மாதிரி ஒரு பொண்ணு என் வீட்ல இருந்து அவகிட்ட எப்பவும் பேசி சந்தோஷமா இருக்கனும் என்று விரும்பறா… ” என்று லத்திகாவை பார்த்து பின்னர் ஜன்னல் அருகே இருந்த பிருத்வியையும் ஒருமுறை பார்த்து மீண்டும் ஆரம்பித்தார் .
”அதனால அவ உன்னை மருமகளா வீட்டுக்கு அழைத்து வர சொல்றா”
”சார் … ” என உள்ளுக்குள் சென்ற குரலில் கூறியவள் அப்படியே தலையை தாழ்த்தி கைகளின் அதிர்வை மறைக்க கைக்குட்டையால் அழுத்தி கொண்டாள்.
”உங்க அப்பா அம்மாகிட்ட நேற்றே பேசிட்டேன் அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உன்கிட்ட பேச ட்ரை பண்ணினாங்க பட் வாய்ப்பு சரியா அமையலை. சரி நானே நேரிடையா கேட்டுடலாம் என்று வந்துட்டேன்”
”அ…ம்மா ஏதோ பேசணும் என்று நேற்று நைட் சொல்லி இருந்தாங்க… நான் என் பிரென்ட் என்கேஜ்மென்ட் போயிட்டேன். மார்னிங் ஆபிஸ்க்கு லேட் ஆகிடுமேனு வந்துட்டேன்… எனக்கு என்ன … ” தலை நிமிர்த்தி மீண்டும் குனிந்து பேச முடியாமல் தவிக்க, நீரை பருக கொடுத்தார் ஜெயராஜன்.
”முதலில் நீரை குடி, ம் ரிலாக்ஸா… யோசி நாளைக்கு பதில் சொல். எங்கிட்ட சொல்லணும் என்று தயக்கமா இருந்தா உன் அப்பாகிட்ட சொல்லிடு சரியா. பதில் என்னவா இருந்தாலும் நீ இந்த ஆபிஸில் ஒர்க் பண்ணலாம். அதுல குழப்பம் இல்லை” என்றார் புன்னகையோடு.
”ஓ ஓகே சார்” என்று வேகமாக எழுந்தவள் கதவை திறந்து வெளியேறி திரும்ப கதவு மூடும் சமயம் பிருத்வி கண்கள் அவளையே பார்க்க அவளும் அவனை தான் பார்த்து இருக்க அந்நொடி கண்களில் நேருக்கு நேர் ஒரு வித புது உணர்வு இருவரையும் தாக்கியது.
பணியில் கவனம் சற்றே தடுமாறினாலும் பிருத்வி இருந்த பக்கம் தலையை திருப்பவில்லை அவள். ஜெயராஜன் சற்று நேரத்தில் கிளம்பிவிட்டார்.
ஐயோ அப்பா கேட்டுட்டு போயிட்டார்… இவ அமைதியா இருக்கா… என்னை கன்னத்தில் அடிப்பா என நினைச்சேன்… நல்ல வேலை அடிக்கலை… ஆனா அமைதியா போயிட்டா… அது அவளோட குணம் இல்லையே…
நான் வேற ஏற்கனவே லவ்வர் இருக்கா அது இது என்று கேட்டு வச்சி இருக்கேன்… என்னை சந்தேகபடறவன் என்று முடிவு கட்டி ரிஜெக்ட் பண்ணிடுவாளோ? என்னை இங்க இப்படி புலம்ப வச்சிட்டு அப்பா பாட்டுக்கு வீட்டுக்கு போயிட்டார்…. திடீரென பேப்பர் எடுத்துவந்து எல்லோர் எதிரில் போடா உன் வேலையும் வேணாம் நீயும் வேண்டாம் என்று ஸ்டாப் முன்ன தூக்கி எரிவாளா? ஐயோ ஐயோ என்றே அலுத்து கொண்டான்.
லதிக்கவோ என்ன இது சார் இப்படி திடீரென இப்படி கேட்டுட்டார்… அதுவும் அவன் முன்னால… அவன் மனசில் என்ன இருக்கும்? அவன் என்னை கல்யாணம் செய்ய ஓகே என்ற முடிவில் இருக்கானா? அச்சச்சோ இது தெரியாம அவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் திமிரா பதில் சொல்லிட்டு இருந்தேனே… பெட்ரோல் பாங்க்ல இருந்தவனை கேட்டதும் அதுக்கு தானா?
கிளம்பும் பொழுது எதுக்கு ஒரு லுக் விட்டான்… ப்ப்பா அப்படியே புதைந்துடுவேன் போல… அதுல ஏதோ இருந்துச்சு…என்னது? நல்ல வேலை கொஞ்சம் கம்மியா தான் திட்டினேன்.
Nalla vela kammiatha thittuten😂😂😂😂 nalla manasu ponga🥳🥳🎊
Ennadhu konjama thituniya avana nalla kazhivu uthitu konjama thitanu solra paru😂😂…. Prajin and lathika also one of my fav. Jodi…. Super veena akka…. Waiting for next ud….