Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-25

ஐயங்காரு வீட்டு அழகே-25

இரு தினம் கழித்து காருண்யாவோடு அலுவலகம் சென்று திரும்பியவனை வரவேற்றார் ரோகிணியும், அமிர்தம் பாட்டியும்‌.

Thank you for reading this post, don't forget to subscribe!

“இவங்களை மறந்துட்டோம் பார்றேன்.” என்று ராவணன் வண்டியை நிறுத்த, “நாளைக்கு லீவு தான் போட்டாச்சே.” என்று காருண்யா பாட்டியையும் ரோகிணியையும் வரவேற்றாள்.
“பாட்டி.. மாமி எப்ப வந்தேள்” என்று ஆனந்தமாய் கேட்க,
பாட்டியோ “நாங்க சேமமா இருக்கோம்டிம்மா. உள்ள உன் தோப்பனார் மாமா இருக்கா, அவாளை முதல்ல நலம் விசாரி.” என்று அனுப்பினார்.‌

“மாமி” என்று வர கட்டியணைத்து, “நல்லாயிருக்கியாம்மா” என்று கேட்டார்.

“ரொம்ப நல்லாமிருக்கேன் மாமி. ஏன் வெளியே நிற்கேள் உள்ள வாங்கோ” என்று அழைக்க, “ஒருத்தனை பைக்கே வாங்காதடானு சொல்லியிருந்த, என் பேச்சை மதிக்காம பைக் வாங்கி, ஹெல்மேட் கூட போடாம சிரிக்கறான். அவனை வெளியே வச்சி விசாரிச்சிட்டு வர்றேன்” என்று ராவணனை பார்த்து முறைத்து கூறினார்.‌ ஏற்கனவே போனில் பைக் வாங்கி செல்பி எடுத்து ரோகிணியின் பீபியை ஏற்றி அரை மணி நேரம் போனில் அர்ச்சனை வாங்கினான். போனை ஆன் செய்து எப்படியும் தூரவைத்து தப்பித்திருப்பானென்று நேரில் கிழிக்க வந்தார்.

அன்னைக்கும் மைந்தனுக்கும் உள்ள விவகாரமென காருண்யா தந்தை மாமாவை காண ஓடினாள். அமிர்தமும் பேத்தி பின்னால் நடந்தார்.

அவர்கள் தலை மறைந்ததும், “என்னடா நீ இரண்டு மாசம் பொறுத்து வாங்கினா என்ன. இப்பவே வாங்கணுமா?” என்று கடிய, “அம்மா.. காருண்யா ஸ்கூட்டில சைக்கிளில் போற மாதிரி பீல். எனக்கு செட்டாகலை. செவன் இயர்ஸ் முடிஞ்சிடுச்சு. இப்ப இடைப்பட்ட மந்த் தானே.‌ அதெல்லாம் ஜாக்கிரதையா ஓட்டுவேன். மேரேஜ் ஆனப்பிறகும் ஒரு வளர்ந்த பையனை கண்டிக்கறிங்களே” என்று ஆதங்கமாக பேசுவதாய் விளையாடினான்.

“போடா… போக்கிரி. டெய்லி கடவுளிடம் வேண்டிட்டு இருக்கேன். சரி… எப்படியிருக்க?” என்று ராவணனின் முகத்தை ஆராய்ந்து கேட்டார். எப்பொழுதும் போனில் கேட்டால் ‘நல்லாயிருக்கோம். எங்களுக்கு என்ன குறை’ என்பான். அதெல்லாம் வாய்வார்த்தை‌.. நேரில் கண்டால் தானே தெரியும் என்று ரோகிணி கேட்டு நின்றார்.

ராவணனோ, “இப்படி கரடி மாதிரி வந்துட்டு எப்படியிருக்கிங்கன்னு கேட்கறிங்க. மனசாட்சியிருக்கா? இப்ப நான் தாலி கோர்க்க கூப்பிட்டேனா. நாங்களே தனியா இப்ப தான் ஸ்பேஸ் வேண்டுமின்னு சுத்திட்டு இருக்கோம். கும்பலா வந்துட்டிங்க” என்று அன்னை தோளில் கைப்போட்டு சலித்தபடி அழைத்து வந்தான்.

“படவா… தாலி பிரிச்சி கோர்த்துட்டு நாங்க போயிடுவோம். கவலைப்படாத. உன் பொண்டாட்டி கூட எப்பவும் போல தனிக்குடித்தனம் நடத்து.” என்றார் அவரும் கேலியாக.

ஏற்கனவே பைக்கிலிருந்து வரும் போது காருண்யா ராவணன் பேசி சிரித்து வந்ததை தூரத்தில் பார்த்து அகமகிழ்ந்தார். இப்பொழுது மகனின் பேச்சில் நிஜமாகவே அகம் குளிர நின்றார்.

பிறகு மாமனாரை நலம் விசாரித்து அறைக்கு வந்தான்.

பாட்டி அப்பா இருப்பதால் ராவணன் அறைப்பக்கமே வராமல் நேரம் கடத்தினாள். “காரு… என்னோட போன் சார்ஜர் எங்க.” என்று கூப்பிட, “அங்க தான் இருக்கும். கொஞ்சம் நன்னா தேடிப்பாருங்களேன்” என்றவள் பாட்டி நைட்டுக்கு இடியாப்பம் தேங்காய் பால் செய்துடவா?” என்று நின்றாள்.

“முதல்ல ஆம்படையான் கூப்பிட்டா என்னனு பக்கத்துல போய் கேளுடிம்மா. சார்ஜர் எடுத்து கொடுத்துட்டு வா. நான் தேங்காய் பால் ஆட்டி வைக்கறேன்” என்று அனுப்பினார்.

ரோகிணியும் அப்படி தான் அனுப்ப நினைத்தார்.

“தேடி கொடுத்துட்டு வர்றேன் பாட்டி” என்று அறைக்குள் செல்ல, “ஈவினிங் வந்ததிலருந்து‌ ஒரு கிஸ் கூட தரலை‌. நீ பாட்டு ஹால்ல இருக்க” என்று கட்டிபிடிக்க, “வீட்ல பாட்டி அப்பா மாமி மாமா இருக்கா ராவணா. அவா போனதும் உன் சில்மிஷத்தை ஆரம்பிக்கலாமே. தப்பா எடுத்துக்க போறா.” என்று தள்ளி நிற்க கூறி பேசிவிட்டு வாசலை வாசலை பார்வையிட்டாள்.

“ஏன் டி சாந்தி முகூர்த்தம் இந்த நாள் இப்ப நடக்கணும்னு இவங்களாம் தானே பேசினாங்க. தினமும் சாந்தி முகூர்த்தம் நடக்காதா? இல்லை நடக்கா கூடாதா?” என்றான்.

“உன்னோட ரோதனை ராவணா. இப்ப விடு.” என்றாள். முகம் தூக்கி வைத்தவனின் தாடை பற்றி கன்னத்தில் முத்தம் ஒன்று வைக்க, மெத்தையில் இருந்தவனோ, அவளை இழுத்து மடியில் விழவைத்து செவ்விதழை திண்றான்.‌

“காருண்யா… ஏலக்காய் எங்கடிம்மா இருக்கு” என்ற அமிர்தம் குரலில் அவனை தள்ளிவிட்டு, “போடா.” என்று கிச்சன் பக்கம் ஓடினாள்.

“பாட்டி… ஏலக்காய் இதோ இங்க இருக்கு. அப்படியே போடாதிங்க. தேங்காய் பால் குடிக்கும் போது ஏலக்காய் விதை வந்தா கசக்குதுன்பா.
தேங்காய் ஆட்டும் போது அதுல போட்டு ஆட்டிடுவேன்” என்று அரைக்க ஆரம்பித்தாள்.

“ஏண்டிம்மா… சமையல் எல்லாம் நம்மவா மாதிரியா? இல்லை அவா வீட்டு பழக்கம் இருக்கா?” என்று கிசுகிசுத்து கேட்டார்.

“அச்சோ பாட்டி… எனக்காக முட்டை கூட போட்டு சாப்பிட்டதில்லை.” என்று பெருமையாக உரைத்தாள்.

ரோகிணி மகன் ஏலாக்காய் எல்லாம் எவ்வாறு சாப்பிட உகந்ததாக மாற்றி விரும்புவானென்று அறிந்து வைத்தவளை கண்டு பூரித்தார்.

என்ன இந்த மாமிசம் மட்டும் அவளறியாது உண்பது ரோகிணி அறிவார். பெரும்பாலும் ‘வயிறு வலி, பசிக்கலை, ஸ்னாக்ஸே ஹெவியா இருக்கு. ஒரு பொடி தோசை போதும்’ என்று கூறி வெளியே செல்லும் நேரம் கலக்கி முட்டை, ஆஃப்பாயில், சிக்கன் கபே, மட்டன் சுக்கா, பீஸ் ப்ரை இறால் தொக்கு பரோட்டா என்று விழுங்குவதை தாய் அறிவார்.

‘அவளிடம் ஒரு நாள் மாட்டப்போற’ என்று ரோகிணி உரைக்க, ‘நான் ஒன்னும் தப்பு செய்யலையே. எனக்கு பிடிச்சதை வாங்கி சாப்பிடறேன். இதுல அவளுக்கென்ன பிராப்ளம். அவளிடம் சொல்லாம தவிர்ப்பது, அவ மனசு கஷ்டப்படக்கூடாது என்ற ரீசன் மட்டுமே’ என்பான்.

ரோகிணிக்கு உள்ளுக்குள் பயமிருந்தாலும், மகன் அதெல்லாம் சாமர்த்தியமாக செய்ல்படுத்துபவனே என்று நம்பினார்.

அன்றைய இரவு ரோகிணியும் அமிர்தம் பாட்டியும் மற்றொரு அறையில் உறங்க, சகவராமனும் சீனிவாசனும் ஹாலில் படுத்தனர்.

காருண்யா வருகைக்காக ராவணன் காத்திருக்க, “அப்பா பாட்டி மாமா மாமி எல்லாம் தூங்க போர்வை கொடுத்துட்டேன். அவாளுக்கு பால் ஆத்தினேன். உங்களுக்கும் கொண்டாந்தேன்.” என்று நீட்ட, “நீ வாடி” என்று இழுத்தான்.

“சத்தம்.. சத்தம்.. போடாதேள்” என்று கூற, “உஷ்” என்று அவளது இதழில் கை வைத்து காரியம் சாதித்தான்‌ ராவணன்.

அடுத்த நாள், ரோகிணியின் உறவினர்கள் சிலரை அழைத்து, தாலி பிரித்து கோர்க்கும் சம்பிரதாயம் தாலி பிரித்து கோர்க்கும் நாளன்று திருமணத்திற்கு எடுத்து பட்டு புடவையை காருண்யா அணிந்திருக்க, ராவணன் கஷ்டப்பட்டு வேஷ்டியை உடுத்தினான். அதன்பின் நல்ல நேரம் பார்த்து தம்பதியினரை கிழக்கு முகமாக மணப்பாயில் உட்கார வைத்தனர்.‌

பின் காருண்யா கழுத்தில் இருக்கும் தாலிக்கு பதிலாக ஒரு மஞ்சள் கயிற்றை கட்டியபிறகு, திருமணத்தின்போது மாப்பிள்ளை கட்டிய தாலியை அவிழ்த்து அதில் காசு, முத்து, பவளம், குண்டு, ஞானக்குழாய் போன்றவை அதனுடன் சேர்த்து மஞ்சள் கயிறு அல்லது செயினுடன் சேர்த்து கட்டினார்கள்.

சுமங்கலி பெண்கள் ஒவ்வொருவராக வந்து தம்பதினரை மஞ்சள், குங்குமம் வைத்து ஆசிர்வாதம் செய்தனர். பின் பெண்ணின் மாங்கல்யத்திற்கு பூ, மஞ்சள், குங்குமம் வைத்து எல்லோரும் அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்து, நல்ல நேரம் முடிவதற்குள் ஆரத்தி எடுத்து முடித்தனர். புது செயினில் திருமாங்கல்யத்தை அணிந்துகொண்டபின், சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், புஷ்பம் இவைகளுடன் ஒரு ஜாக்கெட் துண்டு வைத்துக் கொடுத்தனர்
அவர்களுக்கு சாப்பாடு பரிமாறினார்கள். .

ஓரளவு வசதியானவர்கள் என்பதால் சுமங்கலிகளுக்கு புடவையை கொடுத்தனர். தீர்க்க சுமங்கலியாக வாழுவீர்கள் என ஆசி பெற்றனர். பிரித்து எடுத்த மஞ்சள் கயிறினை கண்ணில் ஒற்றி, பத்திரமாக வைத்துக் கொள்ள அமிர்தா உரைக்க காருண்யா ராவணன் அணிந்த தாலி என்பதில் பத்திரப்படுத்தினாள்‌.

சிலர் பத்திரமாக வைத்திருந்து இவர்கள் குழந்தைக்கு கட்டி விடுவார்கள் .

இந்த சம்பிரதாயம் திருமணமான பெண் கர்ப்பமாக இருந்தால் செய்யமாட்டார்கள். அந்த சமயத்தில் பெண்ணுக்கு தாலி பிரித்து கோர்க்க மாட்டார்கள்.

இப்படியாக அன்றைய நாள் கழிந்தது.

திருமண நாளில் காருண்யாவை தன்னவள் என்ற ரீதியில் உரிமையாக பார்வையிடாத ராவணன், தற்போது அணுஅணுவாய் கன்னத்தில் கைவைத்து ரசித்தான்.‌

அங்கு வந்த சுமங்கலிகள் விடைப்பெற்று போனதும், இன்று இருந்துவிட்டு நாளை காஞ்சிபுரம் போவதால் குடும்பமாய் அமர்ந்து பேசினார்கள்.

ரோகிணி காருண்யா இருவரும் சமைய கட்டில் இருந்தனர்.
ரோகிணி தோசை சுட, அதை காருண்யா கொண்டு போய் பரிமாறினாள்.

ஆண்கள் மூவரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
“இன்னொன்னு வைக்கவா மாமா” என்று சிவராமனிடம் கேட்டு வைத்தாள். “அப்பா… பாட்டி மொத்தையா தோசை ஊத்துவா. இங்க முறுகலா சாப்பிடுங்கோ” என்று கூறி அவருக்கும் பரிமாறியவள், ராவணுக்கு குழம்பு ஊற்றிட, “ஏய்… அதிகமா ஊத்திட்ட” என்றான்.

“இன்னொரு தோசை அத்தை சுடறாங்கோ. அதுக்கு சரியா இருக்கும்” என்றாள். அப்படியிருந்தும், குழம்பு அதிகமாகவே தட்டில் இருக்க, “காரு.. குழம்பு இன்னும் இருக்கு” என்றான்.‌

”சரி அப்படியே வச்சிடுங்கோ, நான் சாப்பிட்டுக்கறேன்.” என்று கூற அமிர்தம்மோ பேத்தியை ஆச்சரியமாய் பார்த்தார்.

திருமணத்திற்கு முன்பு சடங்கு சம்பிரதாயம் என்று வீட்டில் இருந்தவள் ‘போங்கோ… உங்க இஷ்டத்துக்கு ராவணனோட என்னை கோர்த்துவிடறேள். அவாளுக்கும் நமக்கும் எப்படி பொருந்தும். கடமைக்கு வாழறதா போயிடும்” என்று தேம்பினாள்.
நம்மவானா எனக்காக யோசிப்பா. ராவணன் எல்லாம் நேக்கு செட்டாகாது. சிவனேனு இருந்த வாழ்க்கையில் கல்யாணம் அதுயிதுனு இப்படி இழுத்துவிட்டேள்‌” என்று அழுதவளே. நேற்று பைக்கிளிருந்து இறங்கும் போது இருந்த மகிழ்ச்சியும், வீட்டில் ராவணனுடன் இயல்பாய் பேசி சிரிப்பதும், இப்போழுது அவனது எச்சி தட்டில் தோசை போட்டு சாப்பிடுகின்றாளே என்று ஆச்சரியமாக பார்த்தார்.

பேத்தி வாழ்க்கை மலர்ந்துவிட்டதென இதை விட புரிந்துக்கொள்ள முடியுமா?

இரவு உறங்கும் நேரம் அமிர்தம் ரோகிணி அறையில், “நாளைக்கு நாங்க ஆபிஸ் போனா என்ன? நீங்கல்லாம் இரண்டு மூன்று நாள் இருக்கலாமே. அங்க ஆத்துல என்ன வேலையிருக்கு.” என்று அமிர்தத்திடம் கேட்டாள்.

“இதுவே அதிகம் காருண்யா. ரோகிணியோட கிளம்பி வந்தோம். அவாளோட கிளம்பலாமேனு தான் இருக்க வச்சிட்டா. இல்லைன்னுவை இன்னிக்கே கிளம்பியிருப்பேன்.” என்றார்.

“உங்க கடமை முடிச்சிட்டேள்னு கிளம்ப பார்க்கறேள். அடுத்த தடவை வந்தா நிறைய நாள் தங்கணும் சொல்லிட்டேன்” என்றாள் காரு. அமிர்தமோ “சரிடிம்மா” என்று மூட்டுவலி தைலத்தை தேய்த்து படுத்துக்கொண்டார்.

ரோகிணியிடம் “ஏன்‌ மாமி நீங்களாவது ஒரு வாரம் தங்கலாமே.” என்றாள் காருண்யா.

“உன் புருஷன் நேத்து வந்தததுக்கே கரடி மாதிரி ஏன் வந்திங்கனு கேட்டுட்டான். இன்னமும் ஒரு வாரம்னா அவன் உன்னை கடத்திட்டு போய் ஆபிஸ்லயே வச்சிப்பான். அங்கயாவது பக்கத்துல இருக்கியே.” என்று நாணத்தை வரவழைக்கும் விதமாக பேசினார்.

“போங்க மாமி.. கேலி செய்யறேள்” என்று கூற, “காரு.” என்ற ராவணன் குரலில், ”இந்தா… கூப்பிட்டுட்டான்.” என்று ரோகிணி கேலி செய்து அனுப்ப, காருண்யாவோ வெட்கத்தோடு, ‘அச்சோ மானத்தை வாங்கறியே ராவணா.’ என்று
வேறு வழியின்றி ராவணனை தேடி அறைக்கு வர, “தழைய தழைய புதுதாலி போட்டுட்டு, அடக்கவொடுக்கமா சேலை கட்டின்டு செக்ஸியா நடந்து வர்றேளே மாமி. சின்ன பையன் மனசு சலனம் வராதா” என்றான்.

“ராவணா.. வரவர நோக்கு வாய் நீளுது.” என்று கூற, அங்கே அழகான இளம் தம்பதியினரின் வாழ்வியல் துவங்கியது.

-தொடரும்.

11 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-25”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 25)

    ஆஹா…! இவங்க பண்ற லொள்ளு தாங்க முடியலையே, இவங்க விடற ஜொள்ளுல பாட்டியும், அப்பாவும், மாமனும், மாமியும் போட்லயே ஊர் போய் சேர்ந்திடுவாங்க போல. இப்ப அடுத்து என்ன, மசக்கையோ..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Dharshini

    Super sis nice epi 👌 semmaiya pogudhu story 👍😍 avanga ammaku therinjadhu eppo evaluku theriya pogudho🙄 therinjidhu nee gaali da raavana 😂 endha happiness eppovum erukattum🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *