Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-37

ஐயங்காரு வீட்டு அழகே-37

ஐயங்காரு வீட்டு அழகே-37

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

அத்தியாயம்-37

   காருண்யாவை ரோஸ்லின் பக்கத்தில் நிறுத்தி, “அதெப்படி டி… சண்டைப்போடற ஜோடி சட்டுனு கன்சீவ் ஆகறிங்க? அந்த ராவணன் பிராஜக்ட் ஏழு மாசத்துக்குள்ள சக்சஸ் ஆகணும்னு முடிவோட தான் வேலை பார்த்திருப்பார் போல. கேடி தான்” என்று மார்க்கமாய் பேசி கேலி செய்தாள்.

  “செத்த சும்மாயிரு ரோஸ்லின். நேக்கு வெட்கமா வருதோனோ. ஏன் இப்படி பச்சையா பேசறேள். நீயும் அந்த ராகவியும் இந்த கேலி செய்வதில் ஒன்னா இருக்கேள். அவாளும் இப்படி தான்.” என்று வெட்கத்துடன் பேச, “பின்ன இல்லையா? அன்னிக்கு அவரோட கோபமான முகத்தை பார்த்து எனக்கு அல்லுவிட்டுடுச்சு.
  ம்ம்ம்… கோபம் எப்படி எக்ஸ்டாடினரி வந்ததோ, அதே போல ரொமான்ஸும் எக்ஸ்டாடினரி வரும் போல. ஆஹ்.. அப்படி தானே” என்ற கிண்டலில் காருண்யாவுக்கு முகம் வெட்கத்தில் மென்மேலும் சிவந்து போனது.

  அலுவலகத்தில் இனிப்பை தந்து சந்தோஷ அலை முடித்து கொண்டு  அலுவலக வேலையில் இருவரும் மூழ்கினார்கள். பதினொன்று மணிக்கு ஒரு ப்ரஷ் ஜூஸ், மாலை கிளம்பும் போது, ராகி மால்ட் என்று ராவணன் அலும்பு தாங்கவில்லை.

இப்படியாக இரண்டு நாட்கள் கழிய, மூன்றாம் நாள், அமிர்தம், சீனிவாசன், ரோகிணி-சிவராம் அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

  காலையில் சாரதா அக்கா வீட்டை பெருக்கும் நேரம் வந்து சேர்ந்தார்கள். உணவெல்லாம் சமைத்திட ரோகிணி உத்தரவு பிறப்பித்தார்.

   காருண்யா ஏற்கனவே ‘சாரதா அக்கா’ என்று கூறியதால் ஏதோ அறிமுகம் தேவையற்று வந்தார். இல்லையென்றால் வீட்டில் வேற்று பெண்மணியின் நடமாட்டத்தில் அமிர்தா சலித்துக் கொண்டிருப்பார். பேத்திக்கு வந்த வரனே எக்குதப்பாக இருக்க, வேலைக்காரம்மாவை குற்றம் சுமத்த முடியுமா? அதோடு, காருண்யா ராவணன் இல்லாத சமயம் போனிலேயே, ‘பாட்டி இங்க வர்றதா இருந்தேள், ராவணனை குறை சொல்லாதேள். நீங்க நம்மாத்துல இருந்து விரட்டி கேட்டை பூட்டியவரை அவருக்கு நினைவுயிருக்கு. சாதி பிரிவு இதெல்லாம் பார்த்து பழகறதா இருந்தா இங்க உங்க பாட்டிக்கு நான் இப்பவும் செட்டாக மாட்டேன்னு சொல்வார். அதோட உங்களை அவரும் பேசிட்டா நேக்கு கஷ்டமாயிருக்கும். அதனால் அவர் இருக்கறச்ச ஆச்சாரம் அதுயிதுனு ஓவரா புலம்பாம இருங்கோ’ என்று மட்டும் பூனைக்கு மணிகட்டி விட்டாள்.

  ‘காடு வா வா’ என்று கூறும் காலத்தில், முதியவளுக்கு பேத்தி கூறும் விஷயம் புரியாமல் இல்லை.
  ஏற்கனவே ராவணன் ‘நோ கேஸ்ட்’ என்று வாங்கி வைத்ததை பேச்சு வாக்கில் அறிந்தவர். அதோடு ராவணனை பற்றி கொஞ்சம் போல தெரிந்தவரே. பெற்றவர்கள் ஏதேனும் சொன்னாலே மூக்கு வேர்த்து வீட்டில் தங்காமல் உத்தியோகத்தை வெளிமாநிலம் தேடி கிடைக்க சென்றவன். தான் எல்லாம் எம்மாத்திரம்‌. பேத்திக்கு தொந்தரவு கொடுக்காத வகையில் இருக்க தான் முடிவெடுத்தார்.

     முன்பு தாலி பிரித்து கோர்க்கும் நாளை போல ரோகிணி அமிர்தா வீட்டில் நடமாடினார்.

“ஏன்டிம்மா… தலைவலி பிராணம் போகுது‌ செத்த பில்டர் காபி போட்டுதாடிம்மா.” என்றார்‌. அதை கொடுக்க சாராதா வந்த போது, “காருண்யாவும் அவா ஆம்படையானும் எப்ப வருவா? நீ எப்ப வீட்டுக்கு போவ” என்று வினவ, ஏழு மணிக்குள்ள வந்துடுவாங்க பாட்டி. நான் காலையில் ஆறுமணிக்கு வந்து சமைச்சி தந்துட்டு பத்து பதினொன்றுக்கு கிளம்பிடுவேன். மறுபடியும் ஐந்துமணிக்கு வந்து வீடு பெருக்கி கூட்டி, மாவாட்டி, டீ போட்டு வைப்பேன் ஆறரைக்கு அவங்க வந்துடுவாங்க. டின்னர் செய்ததை சாப்பிட வச்சி  பாத்திரம் விளக்கிட்டு மறுபடியும் கிளம்பிடுவேன். காருண்யா வந்ததும் கஷ்டப்பட வேண்டாம்னு தம்பி முடிவு பண்ணிடுச்சு. ஆபிஸ்ல வேலை பார்த்து வீட்லயும் வேலைன்னா காருண்யா களைச்சிடுமே. குழந்தை சுமக்கறவ.” என்றார்.

  அமிர்தமிற்கு இந்த ஒரு விதத்தில் ராவணனை பாராட்ட தோன்றியது. ‘நம்மாவான்னா பேஷா பார்த்துப்பா. காருண்யா வேற்று பிரிவில் எப்படி இருப்பாளோ.’ என்று தோன்றாமல் இல்லை.

  சிவராமனும் சீனிவாசனும் இருவர் வருகைக்காக காத்திருக்க, “காரு வேகமா ஓடாத” என்று அதட்டும் குரலில் அமிர்தா கால் பக்கமிருந்த டம்ளரை பதட்டத்தில் தட்டிவிட்டார்.
   “அவா வந்துட்டா” என்று அமிர்தம் சேலையை முழுக்க மூடி எழுந்துக்கொண்டார்.

“அய்யோ மாமி உட்காருங்கோ. அவன் சின்ன பையன் தானே.” என்று ரோகிணி பிடித்து அமர வைக்க, காருண்யா வந்ததும் அமிர்தம் மடியில் முகம் புதைத்தாள்.

ராவணன் வரவும் “வாங்க” என்றவன் பழங்களை பழக்கூடையில் வைத்தான்.

  “என்னப்பா… பழம்ல வாங்கியிருக்கா?” என்று சிவராமன் வரவும், “இந்த நக்கல் தானே வேண்டாங்கறது. காருக்கு பழம்” என்றான்.‌

  காருண்யா “பாட்டி மாமி எப்ப வந்தேள்” என்று ரோகிணி கைகளையும் பிடித்தாள்.

  “என்னடிம்மா.. வேலை அதிகமா… சோர்வா இருக்க” என்று கேட்டார்.

  “அதெல்லாம் இல்லை பாட்டி. பிரகனென்ஸி சீக் தான்” என்றவள், சாரதா அக்கா பாட்டி அத்தை மாமா அப்பாவுக்கு சாப்பிட ஏதாவது செய்து தந்தேளா?” என்று கேட்க, “அதெல்லாம் வந்ததும் பருப்பு அப்பளம் பொரியல் அவியல்னு வச்சிட்டேன்மா” என்றான்.

“சரிடா நான் கிளம்பறேன்” என்று போகவும், “அக்கா… நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க” என்று அனுப்பினாள்.

கதை பேச ஆயிரம் இருந்தது. கும்பலாய் ஹாலில் பேசிச்சிரிக்க, அமிர்தமோ வயதின் காரணத்தால் பஸ்ஸில் வந்த அலுப்பிலும் அறைக்குள் ஒதுங்கிக் கொண்டார்.

  சீனிவாசன் மட்டும் “வேலைக்கு போக கஷ்டமா இருந்தா தற்காலிகமா வேலையை விட்டு இருந்துடும்மா. ஆப்டர் டெலிவெரி முடியவும் வேலைக்கு போ” என்றார்.‌

  “இல்லைப்பா… வேலை ரொம்ப முக்கியம். எனக்கு வேலையை குறைக்க தான் சாரதாக்கா இருக்காளே. ஆபிஸ்ல கூட ராவணன்.. சாரிப்பா. இவர் இருக்கார்.” என்று சுட்டிக்காட்டினாள்.

   “மாமா சென்னையில் கணவன் மனைவி வாழணும்னா ஒருத்தர் சம்பாத்தியம் போதும். இப்ப குழந்தை வருது. இரண்டு பேர் சம்பாத்தியம் முக்கியம் மாமா. என்னயிருந்தாலும் காருண்யாவுக்கு வேலைக்கு போனா தாற் செல்ப் கான்பிடன்ஸ் இருக்கும். எப்பவும் வேலையெல்லாம் விட வேண்டாம். அவளை பேலன்ஸ் பண்ணி நான் பார்த்துப்பேன்.” என்றான்.

  இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் வாயடைத்து நின்றார்.‌ அன்றைய நாளெல்லாம் ரோகிணியுடன் பேசி சிரித்து ராவணன் காருண்யா உறங்கினார்கள்.

  அடுத்த நாள் காலையில் ஆரம்பமானது பிரச்சனைகள்.
  இதென்ன பாத்திரம் இது தனி ரேக்கில் இருக்கு” என்று தீண்ட போக, “பாட்டி அதெல்லாம் தொடாதேள். அது முன்ன அசைவம் சமைச்ச பாத்திரமாம்” என்று கூறினாள்.

“என்னடிம்மா.. இன்னமும் இதெல்லாம் வச்சிட்டு அழகு பார்க்கற. தூக்கி தூர போட வேண்டியது தானே” என்றார்.‌

  காருண்யாவோ “போடலாம் பாட்டி. நீங்க ரெஸ்ட் எடுங்கோ” என்று கிச்சனில் அனுப்பாமல் தவிர்க்க, அமிர்தமோ, “ஏன்டிம்மா.. வேலைக்காரி வச்சி அசைவம் சமைச்சி சாப்பிடுவாளா?” என்று கேட்டார்.

  “அதெல்லாம் இல்லை பாட்டி” என்று கூறினாள். ஆனால் இந்த இடைப்பட்ட நாளில் சாரதா அக்கா கையால் ராவணன் அசைவத்தை செய்ய பயன்படுத்தியது. அவள் அறிந்ததே. முட்டைக்கு தனி கடாய். மீன் குழம்பு சட்டி. மட்டன் வேக வைக்க தனி குக்கர் என்று பிரித்து விட்டாள்.
  இதில் தட்டு டம்ளர் கூட ஒதுங்கி விட்டாள். தனி கப்போர்ட் போட்டவை அலமாரியை காருண்யா தீண்டவும் மாட்டாள். சாரதா அக்காவிடம் மட்டும், நீங்க அவருக்கு சமைச்சி வச்சிட்டா, வாடை வராம க்ளீன் பண்ணுங்கோ. வாசத்துக்கு ரூம் பிரஷ்னர் யூஸ் பண்ணுங்கோ’ என்றெல்லாம் அறிவுறுத்தினாள். இதெல்லாம் அமிர்தா பாட்டியிடம் கூற முடியுமா?

ராவணன் தான் முன்னெச்சரிக்கையாக, “இங்க பாரு.. இப்ப தான் இந்த முதல் சண்டைக்கு நாம ஒரு முடிவை கொண்டு வந்திருக்கோம். இது இத்தோட முடியாது.
அடுத்து குழந்தை வயிற்றில் வளருது. அதெல்லாம் உங்க பார்மாலிடிஸ்ல என்ன செய்யணுமோ செய்யுங்க. நான் எதுலயும் பேதம் பார்க்கற ஆளில்லை.
ஆனா உங்க வீட்ல… மாமா எதுவும் மோட்டிவோட செய்யறதா தெரியலை. ஆனா உங்க பாட்டி மோட்டிவோட எதையும் செய்யற ஆளு. அவங்களோட சேர்ந்து நீயும் எதுவும் பண்ணி சண்டையை இழுத்து வைக்க கூடாது.” என்று ஆரம்பிக்க, “நான் என்ன செய்தேன்.” என்று பேசியவளை “இரு நான் பேசிடறேன்.” என்று இடைவெட்டியவளை தடுத்தான்.

“குழந்தை ஆம்பளை பிள்ளையா வளர்ந்தா இந்த பூணூலை போட்டு நாமம் போட்டு எந்நேரமும் வைக்க கூடாது. விழாவுக்கு நல்ல நாளுக்கு ஓகே தான்.

பொண்ணுன்னா ஓவர் ஆச்சாரம் எல்லாம் சொல்லி தரதேவையில்லை.
ஆணோ பெண்ணோ கோவிலுக்கு அழைச்சிட்டு போ.. சாமி பத்தி, பக்தியா என்னவேன்னா சொல்லி கொடு. ஆனா மனுஷங்க ஒன்னு தான், சாமியும் ஒன்னுனு சொல்லி கொடு.
அவா கூட பழக கூடாது இவா கூட பழகக்கூடாதுனு ஆள் பார்த்து எட்டி நிறுத்த எல்லாம் கத்துக்கொடுக்கவே கூடாது. அப்பறம் ஸ்லோகம், சமஸ்கிருதம், அதுயிதுனு எதுனாலும் கற்றுக்கலாம். எதையென்றாலும் கற்றுக்கறதுல தப்பில்லை. ஆனா இனத்தை காரணம் காட்டி சலுகை எதுவும் என் பையனுக்கோ பொண்ணுக்கோ தேவையில்லை. அப்படி ஏதாவது ஆபர் அதுயிதுன்னு வந்தா நமக்குள் சண்டை வரும் ஜாக்கிரதை.
பொண்ணு பிறந்தா வயசுக்கு வந்தா கூட அவ அவவிருப்பம் போல இருக்கணும்.

சொல்லப்போனா உங்க பாட்டி விரும்பற மனுஷாளில் கூட மாடர்ன் டிரஸ் போட்டு, பிராட் மைண்ட்ல நிறைய பேர் இருக்காங்க. ஏன் அசைவம் கூட சாப்பிடறாங்க. ட்ரிங்க்ஸ் வரை போறாங்க. ட்ரிங்க்ஸ் யாராயிருந்தாலும் செய்யறது தப்பு. சரி அது வளர்ந்த பிறகு என் பையனுக்கு நான் நேக்கா அவாய்ட் பண்ண சொல்லிப்பேன்.
பட் என் குழந்தைங்க வளர்ந்து அசைவம் சாப்பிட விரும்பினா சாப்பிடுவாங்க. அதெல்லாம் தடுத்து ஓவரா பேசக்கூடாது. இரண்டு வெவ்வேறு விதமானவங்க மேரேஜ் செய்தா இதெல்லாம் அவங்க அவங்க இஷ்டப்படி இருக்கறப்ப விட்டுடணும். என் குழந்தையை சாப்பிடற விஷயத்துல கண்டிக்கவே கூடாது. நல்ல நாள் அதுயிதுன்னு விரதம் இருக்க வைக்காதே. அவங்களா இருந்தா ஓகே தான்‌.

சுருக்கமா சொல்லப்போனா, உங்க பாட்டி மாதிரி ஒரு வட்டத்துல கட்டம் போட்டு என் குழந்தை வாழக்கூடாது.

அவளுக்கான வட்டமோ கட்டமோ அதெல்லாம் அவ போற டிபரெண்ட் கோணத்திற்கு ஏற்ப வாழ்வா.

பிறகு குழந்தை வளர்ந்து, ஒவ்வொன்னுக்கும் சண்டை போடாதே. சிலது உனக்காக விட்டு கொடுப்பேன். நீ எனக்காக விட்டு கொடுப்பது போல.” என்று பேசியவனிடம், “பேசிட்டேளா… நான் பேசவா… சண்டை நமக்குள்ள வரவே வராதுன்னு சொல்ல மாட்டேன். கண்டிப்பா வரும். ஆனா இரண்டு நாளுக்கு மேல சண்டையை இழுக்க வேண்டாம். இந்த கண்டிஷன் நேக்கும் தான்.
நேக்கு உங்களை கட்டிண்டு உறங்கணும். உங்களை தவிர வேறு எதுவும் பெரிசில்லை. ஆனா சாமி, பக்தி, நல்ல நாள் அதுயிதுன்னு பார்த்து வம்படியா அசைவம் சாப்பிட கூடாது. முடிஞ்சா அசைவத்தை ஆத்துக்கு வெளியே வச்சிக்கோங்க. இனத்தை வச்சி சலுகை எல்லாம் வாங்க மாட்டேன் போதுமோனோ. இந்த சாதி இந்த குலம்னு ஆள்பார்த்து பழகுனு பெத்தவாளா தப்பா சொல்லி தரமாட்டேன். மனுஷாள் நல்லவாளா மட்டும் பார்த்துக்க சொல்லி தருவேன்.” என்று வெகு யோசனையாக நிறைய பேசியது எல்லாம் கண்முன் அயர்ச்சியாக வந்தது.

அதுவும் அமிர்தா பாட்டி வேறு ஸ்னானம் பண்ணாம சாப்பிடறியே காருண்யா?’ இதென்ன ஆத்துல துளசி மாடம் இல்லை.’ என்று ஒவ்வொன்றாய் கூற காருண்யாவோ ராவணனிடம் “அவா பெரியவா இருக்கறவரை அணத்திட்டு போகட்டுமே.” என்றாள்.

இடுப்பில் கைவைத்து எப்ப உங்க பாட்டி எங்கம்மா கிளம்பளாங்களாம்” என்றான்.

“ஏன் இப்படி கேட்கறேள்” என்று வேதனை அடைந்தாள்.

“அம்மா தாயே.. நம்ம பிரைவேஸி மிஸ்ஸாகுது. சொல்லப்போனா அவங்களுக்குமே சங்கடமா சுத்தறாங்க. பேக்ட்(fact) அதான்.” என்றான்.‌

என்ன தான் சாரதா சமைத்து வைத்தாலும் தண்ணீரை தொட்டு தட்டை சுற்றி தெளித்து என்னவோ செய்வதில் ராவணன் எரிச்சலானான்.

“உன்னை பார்த்துக்க சாரதா அக்கா இருக்காங்க. மரியாதையா எங்க அம்மாவையும் உங்க பாட்டியும் டெலிவெரி நெருங்கறப்ப வந்தா போதும்.” என்றான்.

“ரொம்ப ஈஸியா பேசறேள். நீங்களே மாமியிடம் பேசுங்கோ.” என்று முகத்தை சுழித்து எழுந்தாள். எப்பொழுதும் பந்தை பெண்ணிடம் தள்ளி விட்டு வேடிக்கை பிர்க்கும் உலகம் தானே. அதை தவிர்க்க அவனிடமே பந்தை திருப்பி விட்டாள்‌.

‘பட்டுன்னு எங்க அம்மாவிடம் சொல்லிடுவேன். உங்க பாட்டிக்கு தான் யோசிக்கறேன்’ என்பதாய் தவிர்த்தான்.

சிவராமனும் சீனிவாசனும் அடுத்த நாளே சென்று விட்டார்கள். என்னயிருந்தாலும் அவர்கள் உத்தியோகம் கெடுவதால், வீட்டு பெண்களை விட்டு சென்றார்கள்.

அமிர்தமோ, வீட்டில் போரடிக்க ரோகிணியோடு, ஒரு நாள் மயிலாப்பூர் கோவில், ஒரு நாள் தி.நகர் பெருமாள் கோவில் என்று இருக்கும் இறைவனை எல்லாம் ஆராதித்து “சாரதா நன்னா தான் வீட்டை கவனிச்சுக்கறா. காருண்யாவுமே வேலைக்கு போயிடறா. நான் இங்க அதிகப்படியா இருப்பது போல தோணுது. நாள் நெருங்கினாதும் வந்துக்கவா ரோகிணி. நீங்க வேண்டுமின்னா பையன் ஆத்துல இருந்து வாங்கோ” என்று கூற, “மாமி…‌ நான் மட்டும் இங்க என்ன செய்யறது. நாம இப்ப கிளம்பிட்டு வளைகாப்பு வைக்க அழைச்சிப்போம். அதோட நாள் நெருங்கறப்ப வந்து தங்கலாம்” என்று முடிவெடுத்து புறப்பட்டார்கள்.
அலுவலகத்திலும், வீட்டிலும் ராவணன் கூடவேயிருக்க, பெண்ணவளுக்கு யார் உதவியும் தற்போது தேவையில்லையே.

அதனால் அவரவர் சௌகரியத்திற்கு அனுப்பி வைத்தார் காருண்யா.

-தொடரும்.
_பிரவீணா தங்கராஜ்.

11 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-37”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 37)

    ரெண்டு பேரும் சேர்ந்து டெஸிஸன் எடுத்ததெல்லாம் ஓகே, பட்… பேச்சு பேச்சா மட்டுமே இருந்திடாம, நடமுறையிலும் செயல்படுத்தணும்.
    அப்பத்தான் இல்லறம் சிறந்து,
    நல்லறம் விளையும்.

    ஏன்னா, ஒண்ணு கிழக்கு இன்னொன்று மேற்கு பாருங்க, இதுல புதுவரவு வேற வரப்போகுது, அது வடக்கை பார்க்குதோ, இல்லை தெற்கைப் பார்க்குதோ
    யாருக்குத் தெரியும்..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Dharshinipriya

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 decision yeduthadhu correct dhan pa eppove pesinadhu nalladhu dhan but nadaimurai la dhan yedhuvum theriyavarum parpom 😘🥰

  3. Kalidevi

    Wow super epi . Alaga rendu perum pesi mudivu pani irukanga crt thane ithellam kandipa pesanum athuvum antha paati vachi thirupi sanda vanthuda kudathu . Oru alavuku karu ethuka palagita vera ena pana mudium aduthu vara pasangalum valantha apram pasanga NV sapda aasa paduvanga tha . Nalla vela paati ethum pesama kelamba mudivu panitanga avanga privacy miss agum thana kudave irunthalum veetla iruka privacy thani than.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *