அத்தியாயம்-19
அப்படியொன்றும் இஷானோடு வாழ்வது? கடினாக இல்லை. ஏனெனில் துகிரா இஷானோடு பேசி பழகி காதல் கீதம் வாசிப்பதில்லையே அதே போல அவனுமே அவளிடம் பழக விரும்பவில்லை. இந்த ஒரு வாரத்தில் ஓரளவு சாத்தியமானது
முதல் நாள் போல் இல்லாமல் அடுத்த நாளே துகிராவே அமுல்யாவை அழைத்து வந்துவிட்டாள்.
பிரதன்யாவோ “அண்ணி அமுலு என்னோட தூங்கட்டும்” என்று கூறியதற்கும், “இல்லைம்மா.. அத்தையோட எந்த ட்ரிக்ஸும் செட்டாகாது. எனக்கு அம்முவை கட்டிக்கிட்டு தூங்கினா தான் தூக்கமே வரும்.” என்று தோளில் அழைத்து செல்ல, இஷான் அந்த நேரம் ரிஷிக்கு போனில் பேசியபடி அமுல்யாவோட ஷூ சைஸ் கேட்டிருக்க, அதை கூறியவனுக்கு துகிரா பேசியதும் கேட்டது.
அன்றிலிருந்து இந்த ஒரு வாரம் இஷான் தினசரி வாழ்க்கையை அனுபவித்தான். அலுவலகம் சென்று வந்து, ஒரு சராசரி மனிதனாக வாழ ஆரம்பித்தான். ஆம்.. தற்போது வாழ ஆரம்பித்தான்.
துகிராவிடம் சம்சார கடலில் குதிக்காமல், குழந்தைக்கு தந்தையாக மட்டும் வீட்டில் உலாவினான்.
ஒரு நாளில் சிற்சில நிமிடம் துகிராவின் கண்களை சந்திக்கும் விபத்து நிகழும். ஆனாலும் எவ்விதமான உணர்வும் பாதிக்காத வண்ணம் கழுவும் நீரில் நழுவும் மீனாக நழுவினான்.
அன்று துகிராவுக்கு மெர்ஸியிடமிருந்து போன் வந்தது.
ஆசையாக அழைத்து பேச ஆரம்பித்த தோழிடம், “மெர்ஸி” என்ற ஒற்றை சொல்லை உதிர்த்தாள். மறுநொடி மெர்ஸியோ “நீ நல்லாயிருப்பியா? எங்கண்ணாவோட மேரேஜ் வரை பேசிட்டு இப்ப எப்படி அந்த இஷானோட பொண்டாட்டியா மாறிட்ட. ஒரு முறை எங்கண்ணா காதலை நினைச்சி பார்த்தியா? இந்த அண்ணாவாவது சொல்லலாம்ல. அங்க வந்து காதலை தியாகம் செய்து கல்யாணம் செய்ய ஐடியா வேற தந்துட்டான். அவனை தனியா அனுப்பியது தப்பு. நான் வந்திருக்கணும். அந்த இஷான் முன்ன நான் கேள்வி கேட்கணும். ஏன்டா.. உனக்கு குழந்தை இருப்பதே இப்ப தான் தெரியும். அதுக்கான பாசமே குழந்தையை கூட்டிட்டு போனியே. என் பிரெண்டுக்கு குழந்தை கூடவே இருந்தா. அவளுக்கு பாசத்தை காட்டி கல்யாணம் பண்ணிட்டியானு.
அவனை சொல்லக்கூடாது. உனக்கு எங்க போச்சு அறிவு. இதோ இங்க துகிராவை திட்டாதேனு கத்திட்டு போனை பிடுங்கறானே அவனை சொல்லணும். ஏன்டி இப்படி செய்த.” என்று அழுவது துகிராவை தாண்டி அந்த நேரம் அங்கு வந்த இஷான் செவியிலும் கேட்டது.
இஷான் மெர்ஸியின் பேச்சை கேட்டபடி, ஷர்ட் பட்டனை கழட்டினான்.
“மெர்ஸி.. மெர்ஸி.. நான் அப்பறம் பேசறேன்” என்று கத்தரித்திட முனைய, “ஏன் அங்க உன் புருஷனோட கொஞ்சி குலாவனுமோ? முத்தம் கித்தம் கொடுத்து மொத்தமா உன் உயிரையும் உடலையும் மொத்தமா அபகரிச்சிட்டானா அந்த தாடிக்காரன். இல்லை உன் பொண்ணுக்கு பருப்பு சாதம் பிசையணுமா? ஏன்டி இப்படி பண்ணின?” என்று மெர்ஸி ஆவேசமாக ஆரம்பித்து அழவும், “தெரியாது.. தெரியாது மெர்ஸி… ஆனா ஒன்னு தெரியும்.. கடவுள் காரண காரியமில்லாம எதையும் நிகழ்த்த மாட்டார்.
உன் அண்ணாவை கல்யாணம் பண்ணாம ஏமாத்தியதுக்கு பதிலா… ஜீஸஸிடம் நான் பாவமன்னிப்பு கேட்டுக்கறேன். என் பாவத்தை மன்னிச்சிடுவார். நீயும் மன்னிச்சிடு.” என்று கூறி போனை துண்டித்தாள்.
எப்படியும் இஷான் ஏதாவது பேசி உயிரை வதைப்பானோ என்று எண்ணுவதற்கு மாறாக, அவளது அழுகையை வேடிக்கை பார்த்தவனாக, கைகடிகாரத்தை கழட்ட துவங்கினான்.
இஷான் உள்ள வந்து உடைமாற்ற துவங்க, வாஷ்பேஷனில் முகமலம்பி கீழே சென்றாள்.
இஷான் இமை மூடி மெத்தையில் அப்படியே விழுந்தான். ‘ஏன் அங்க உன் புருஷனோட கொஞ்சி குலாவனுமோ? முத்தம் கித்தம் கொடுத்து மொத்தமா உன் உயிரையும் உடலையும் மொத்தமா அபகரிச்சிட்டானா அந்த தாடிக்காரன்’ என்று செவியில் இரண்டாம் முறை கேட்பதாக தோன்ற, கன்னத்தை தொட்டு பார்த்தான்.
‘நான் இல்லை.. நான் அவளை எதுவும் கொஞ்சி குலாவலை.’ என்று மனசாட்சியிடம் வாதம் செய்ய, ‘தாடிக்காரனா துகிராவை துர்கானு நினைச்சு முத்தமிட்டு உதட்டை உறிஞ்சி எடுத்தது யாரா இருக்கும்?’ என்று கேலி செய்ய, ‘பச் அது துர்கானு நினைச்சி கிஸ் பண்ணினேன்.’ என்று இதயத்திடம் மறுத்தான்.
மூளையோ ‘நீ மறுத்தாலும் மாண்டாலும் அவளுக்கு கொடுத்த முத்த நிகழ்வு மாற்றிட முடியாது’ என்று நகைத்தது.
இஷான் அன்றைய நாட்களுக்குள் சிக்கி தவித்தான். ஏனோ அவனது உடலுக்கு துகிராவை முத்தமிட்டது இப்பொழுதும் சூடேற்றியது.
திருமணமான காளையவனுக்கு துகிராவை துர்கா என்றே பார்த்து தொலைத்து எல்லை மீறிடுவோமோ என்ற பயம் நாளுக்கு நாள் அச்சத்தை கிளப்பியது. உருவத்தில் வேறு முகம் இருந்தாலாவது இஷான் இதயம் பிழைத்துக்கொள்ளும்.
அச்சு அசலாக துர்கா போல துகிரா இளமையின் வளமையில் இருக்க, இஷான் மனதை கட்டுப்படுத்த பல்வேறு வழியில் முயன்றான்.
துகிராவை முதல் முறையிலேயே துர்கா என்ற கண்ணோட்டத்தில் பார்த்து அவளிடம் இதழமுதம் அருந்தினான், அவளாக தன்னை தேடி வரவைக்க எடுத்த முயற்சியில், காரோட்டி வந்தவன் மகளோடு வாழும் வாழ்க்கையை மட்டுமா கனவு கண்டான். துர்கா தன்னை தேடி மீண்டும் வந்ததும் அவளோடு அமுல்யாவோடும் இனிதாக வாழ வேண்டுமென்ற கனவு கோட்டையை கட்டியிருந்தான். அதனால் தான் அங்கே சென்றதும் மகளை பார்த்து பூரித்தவன் அணைத்துக்கொண்டான். மனைவியை கண்டதும் முத்தத்தை வாறியிறைத்தான்.
என்ன செய்ய இஷானின் மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவாக துகிரா அவனை தள்ளி நான் உன் மனைவி துர்கா இல்லை என்று உரைத்ததும், பயந்துவிட்டான்.
மச்சினிச்சியிடம் முத்தமிட்டு விளையாடி இருப்பது தாமதமாக புத்திக்கே உரைக்க, கோபத்தேடு வந்தானே. இன்று வரை அமுல்யா விஷயத்தில் நல்ல தகப்பனாக துகிராவை மணந்து வாழ்க்கையை சீர்ப்படுத்திவிட்டான்.
ஆனால் துகிராவின் அழகான வாழ்வையை கலைத்து விட்டது இது போன்ற சூழ்நிலையில் அறிந்து குற்றமுள்ளவனாக துடிக்கின்றான்.
இதில் அன்னை பைரவி வேறு இஷ்டத்திற்கு தன்னையே திட்டி தீர்க்கின்றார். வாழ்க்கையை சமாளித்து சமாளித்து ஓய்ந்து போனது போல தோன்றியது.
“டேடி” என்று அமுல்யா ஓடிவரவும் மகளுக்காக தன் எண்ணங்களை புறந்தள்ளி சிரித்து, “அமுலு குட்டி சாப்பிட்டிங்களா?” என்று கேட்க, “ம்ம் துகிரா அம்மா பருப்பு சாதம் குழைவா பிசைந்து தந்தாங்க” என்றாள்.
‘அவ பிரெண்ட் மெர்ஸி சொன்னதுல ஒரு விஷயம் நடக்குது. என்றவனுக்குள் மற்றொரு விஷயம் துகிராவை தான் கொஞ்சி குலாவ வேண்டுமா என்ன? என்று அதிர வைத்தது.
“அப்பா பாட்டி உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க.” என்றுரைத்தாள்.
“இதோ போறேன். அமுலு குட்டி மாடிக்கு வந்துட்டிங்க” என்று கேட்டதும், தூக்கமா வருதுன்னு நான் தான் வந்துட்டேன் குட் நைட் அப்பா” என்று இரவு நேரத்தில் கொடுக்கும் முத்தத்தையும் வழங்கினாள்.
இஷான் அதன்பின் உடைமாற்றி கீழே வர, “நான் அம்முவை தூங்க வச்சிட்டு வர்றேன் அத்தை” என்று துகிரா நழுவ பார்க்க, “ஏய் நில்லு… நான் இங்க சாப்பிட்டுட்டு இருக்கேன். உன் புருஷன் வர்றான். அவனுக்கு பரிமாறு. அப்படியே நீயும் சாப்பிடு. திரும்ப ஒரு முறை இறங்கி வருவியா?” என்று கடிய, இஷான் அமரும் இடத்தில் தட்டை வைத்து உணவை பரிமாறினாள்.
இங்கு வந்த நாள் முதல் பைரவி தான் அனைவரையும் விழுந்து விழுந்து கவனித்தார். திருமணம் என்ற புதைக்குழியில் துகிரா விழுந்தப்பின், மெது மெதுவாக அமுல்யாவின் முழு பொறுப்பை தள்ளிவிட்டது போல, இஷானுக்கு செய்ய வேண்டிய மனைவியின் பணிவிடையையும் செய்ய ஆணையிட்டார். ஹாலில் ஒவ்வொரு முறையும் ரிஷி, பிரதன்யா இருக்கும் நேரம் வாதம் செய்யவோ, கோபத்தை காட்டி முகத்தை திருப்பி பேசப்படும் பொருளாக, மாற்றாமல் இஷான் அமைதிக் காத்தான். இந்த இடைப்பட்ட நாளில் அவன் கற்றுக்கொண்ட பொறுமைக்கு முதல் காரணம் அமுல்யா. துகிராவை ஏதாவது பேசும் சமயம் எல்லாம் கழுத்தை திருப்பி கொக்கு போல தன்னையே உற்று நோக்க, இஷான் பொறுமைக்கு தன்னை அர்ப்பணித்தான்.
துகிரா பரிமாற இஷான் உணவை விழுங்க, ரிஷியோ, “அண்ணா… அஞ்சனா வீட்ல என் லவ் மேட்டர் வீட்ல தெரிந்துடுச்சு. அவ சதா புலம்பிட்டே இருக்கா. அமுல்யாவோட பிரெண்ட் கிஷோர் இருந்தான்ல. அதான் அஞ்சனாவோட அண்ணா, அவன் அஞ்சனாவிடம் அமுல்யாவை தூக்கிட்டு போனது யாரு என்னனு விவரம் கேட்க பிரதன்யா பிரெண்ட் என்று சொல்லி தப்பிக்க பார்த்திருக்கா. ஆனா பிரதன்யா வேற காலேஜ் நான் அஞ்சனா காலேஜ் என்றதும் அவங்க அண்ணா மோப்பம் பிடிச்சி வீட்ல போட்டு தந்துட்டான்.
இப்ப வீட்ல வந்து பேசுன்னு அஞ்சனா டெய்லி தொல்லை பண்ணறா” என்று தன் காதல் விவகாரத்தை உரைத்தான்.
“அம்மாவை கூட்டிட்டு போ அவங்க பேசுவாங்க” என்றான் இஷான்.
ரிஷியோ “இல்லைங்கண்ணா… அம்மாவிடம் பேச கூப்பிட்டேன். அவங்க பெரியவன் காதலுக்கு நான் பச்சை கொடி காட்டலை. அவனா போய் முடிச்சிக்கிட்டான். இப்ப உனக்கு வந்தா ஏதாவது சொல்வான். அதோட நான் இனி என் பேத்திக் கூட செட்டில். உங்க அண்ணா அண்ணியை கூட்டிட்டு போனு சொல்லிட்டாங்க. அஞ்சனா அண்ணா நெக்ஸ்ட் வீக் இங்க வர்றாராம். நம்ம பேமிலியா போய் பேசி மேரேஜை டிக்ளர் பண்ணிடலாமா?” என்றான்.
இஷானோ அஞ்சனா என்ற பெண்ணால் தானே, தனக்கு தன் தேவதை அமுல்யா கிடைத்தால் என்பதால் ஒருவிதத்தில் அவளை சந்தித்து தம்பிக்கு முடித்திட நினைத்தான்.
அதன் காரணமாக “சரி நான் நம்ம பேமிலியா போகலாம். டேட்டை எனக்கு நினைவுப்படுத்து. பிறகு மறந்துடுவேன்.” என்று கூற, “தேங்க்ஸ் அண்ணா. அண்ணி.. தேங்க்யூ” என்று ஓடினான்.
பைரவியோ “அம்மாடி எனக்கும் நினைவுப்படுத்து.” என்று உறங்க சென்றார். பிரதன்யா ஏற்கனவே அமுல்யா சாப்பிடும் நேரத்திலேயே சாப்பிட்டு சென்றிருக்க, இஷான் துகிரா மட்டும் டைனிங் டெபிளில் உணவருந்தினர்.
இஷான் சாப்பிடும் முன் பாத்திரத்தை கிச்சனில் வைத்து கையலம்பி சேலையில் துடைத்திட, இஷான் மெதுவாக கை அலம்பி கைக்குட்டையால் துடைத்து துகிராவை பின் தொடர்ந்தான்.
சேலையின் கோலத்தில் இடுப்பமடிப்பு இடையை பளிச்சிட்டு காட்ட, அங்கு சென்ற கண்களை கடினப்பட்டு திருப்பினான்.
அறைக்கு வந்த நேரம் அமுல்யா உறங்கியிருக்க, போர்வையை போர்த்தி விட்டு அமுல்யாவுக்கு வலதுபுறம் துகிரா படுக்க, இடது புறம் இஷான் படுத்துக் கொண்டான்.
குழந்தையை தட்டிக்கொடுத்து துகிரா உறங்க இஷான் உறங்க போராடினான்.
இஷானுக்கு மீண்டும், துகிரா துர்கா உருவத்தில இருப்பது பிரச்சனையாகவே இருந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 ishan kandipa thugira va yethukanum pa🙄🥺
கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 19)
ஆக மொத்தம், பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைன்னு இதனாலத்தான் சொல்றாங்களோ என்னவோ..?
அவனவன் வெளியேப் போய் சைட் அடிப்பான், ஆனா நீ சொந்த வீட்டுக்குள்ளயே, சொந்த பொண்டாட்டியையே சைட் அடிக்கிற,
நீ ஜமாய் ராஜா, ஜமாய்.
உன் காட்டுல மழை.
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👌👌👌💕💕💕💕💕💕💕💕
Un nelamaya nenachaalum kashtam than
Super super super super super super super super super
Ethathu vaye theranthu pesina thana oru vali kedaikum epo paru ur urnu iruntha ena pana mudium avalum pavam tha unaku irukanmari than irukum
Nice!!!
Super
Nice going