அத்தியாயம்-21
அமுல்யா இஷானை அழைத்து, “அம்மாவை அடிக்காங்க ஆன்ட்டி. ஏன்னு கேளுங்கப்பா” என்று முன்னே செல்ல உந்தவும், இஷான் மகளை தூக்கியபடி, “உங்க பிரெண்ட் மேல எந்த தப்பும் இல்லை. அதுக்காக உங்க அண்ணா மேல தப்புனும் அர்த்தமில்லை.” என்று கூறினான்.
அதற்குள் சார்லஸும் தங்கை மெர்ஸியை நிதானப்படுத்த “ஏன் அறைந்த? சொல்லிதானே கூட்டிட்டு வந்தேன். சாரி துகிரா” என்று மன்னிப்பு கேட்டான் சார்லஸ்.
“யார் அறைந்தா.. என் பிரெண்ட் தானே அடிச்சா. பரவாயில்லை” என்று கூற மெர்ஸியோ துகிராவை கட்டியணைக்க, இஷானோ தோழிகள் ஒன்றாக சேர்ந்ததில் இனி தான் அதிகப்படியாக என்று வீட்டுக்குள் செல்லும் போது, “சார்லஸ்.. உள்ள வந்து பேசுங்க” என்று அழைக்கவும், “உள்ளவா” என்று மெர்ஸியையும் இழுத்து சென்றாள் துகிரா.
மெர்ஸி தன் தோழியின் முக மாற்றத்தை கவனித்தாள். முகம் முன்பிருந்ததை விட மாற்றமிருந்தது. நெற்றியில் குங்குமம், கழுத்தில் பொன்தாலி, காலில் மெட்டி தலையில் பூ என்று பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
“மெர்ஸிக்கா… காபி” என்று பிரதன்யா நீட்ட, “தேங்க்ஸ் மா” என்று பெற்றுக்கொண்டாள்.
“சார்லஸ் அண்ணா” என்று கொடுக்க “தேங்க்யூம்மா” என்றான்.
இஷான் சாதாரண நண்பனிடம் கதைப்பது போல சார்லஸிடம் பேச, மெர்ஸியோ எல்லோர் எதிரே தோழியிடம் பேச தயங்கினாள்.
பைரவியோ “துகிரா தனியா போய் பேசுங்க.” என்று கூற, இருக்கட்டும் அத்தை” என்று துகிரா கூறினாலும் மெர்ஸி இதற்கு முன் துகிராவுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு அழைத்து வந்திருந்தாள்.
குக்கீஸ் பழம் எல்லாம் முன்னேயிருக்க, “சாப்பிடு மெர்ஸி” என்றதற்கு, “நீ நல்லாயிருக்கியா? ஆளே மாறிட்ட. இதுக்கு முன்ன உன்னை சின்ன பொட்டு வச்சி மிதமான சேலையில் அமுல்யாவுக்கு அம்மாவா பார்த்தேன். அப்ப சிங்கிள் மதர் லுக்ல இருப்ப. பூ வைக்க கூட மாட்ட. அக்கா குழந்தையை நல்லபடியா படிக்க வைக்கணும், தனியா ஆளாக்கணும், வரப்போறவன் அக்கா குழந்தையை எப்படி நடத்துவானோ என்ற பயத்துல, உன்னோட விருப்பு வெறுப்பை கூட மூட்டைக்கட்டி ஒரு விதமான வாழ்க்கையில் சிங்கிள் மதர் என்ற போர்வையில் கவலை, கடமை, கட்டுப்பாட்டோட வாழற முகம் தெரியும்.
இப்ப தலை நிறைய பூ, நெற்றில கல்யாணமானதற்கான அடையாளமா பொட்டு, கால்ல முத்து வச்ச மெட்டி, கழுத்துல தாலினு இஷானோட பொண்டாட்டியா தனிச்சி தெரியற. அக்கா குழந்தையை உன் குழந்தையா வளர்க்கற. அதுவும் இஷானோட மனைவியா. இனி அமுல்யாவை பத்தி கவலைப்பட வேண்டாம்னு நிறைவா இருப்பதை உன் முகமே சொல்லுது.” என்றதும் துகிராவுமே “எஸ்.. முன்ன ஒரு குழந்தையை எப்படி வளர்க்கணும் என்ற பயம் இருந்தது. இப்ப குடும்பமா இணைந்ததில், அதுவும் அமுல்யாவுக்கு உரியவரோட சேர்ந்து வளர்க்கறப்ப முன்னருந்த சுமை பாதி குறைந்திடுச்சு. மேபீ அதுல முகம் பிரைட்டா இருக்கலாம்.” என்றாள் துகிரா.
“இந்த கேள்வி கேட்க கூடாது. ஆனாலும் கேட்கறேன். நீ நல்லாயிருக்க தானே? கணவன் மனைவியா? இஷான் உன்னை அன்பா பார்த்துக்கறாரா?” என்று கேட்க, துகிராவிடம் பலத்த மௌனம்.
“துகிரா” என்று மெர்ஸி தீண்ட, ”ம்ம்.. நல்லாயிருக்கேன் மெர்ஸி. எப்படி சொல்லறதுன்னு தெரியலை. இந்த வீட்ல அமுல்யாவுக்கு நல்ல அம்மாவா, மாமியாருக்கு மருமகளா, நாத்தனாருக்கு அண்ணியா, கொழுந்தனாருக்கு அண்ணியா, நல்லா தான் இருக்கேன். ஆனா கணவனுக்கு நல்ல மனைவியானு கேட்டா தெரியலை. அவருக்கு இன்னமும் துர்கா அக்கா நினைப்பு மறக்கலை. துர்கா அக்கா முக அமைப்பில் இருக்கற என்னை சில நேரம், அவரை மறந்து பார்க்கறார். அடுத்த செகண்ட் நான் துகிரானு நினைப்பு வந்துடுமோ என்னவோ வெடுக்குனு போயிடுவார். ஒரு மாசமாக போகுது கல்யாணமாகி. இதுவரை இன்டேரக்டா பேசியதை விரல்விட்டு எண்ணிடலாம். மூன்று நாலு முறை இருக்கலாம்.
டேரக்டா இன்னிக்கு தான் துகிரானு கூப்பிடவே செய்தார். அதுக்கூட ரிஷியோட மாமியார் மாமனார் முன்ன தட்டு மாத்த கூப்பிட்டார்.
மத்தபடி இங்க எதுவும் மாறலை. அவர் என் அக்கா கணவர். இப்ப என் கணவர். நல்லவேளை இந்த வீட்ல உரிமையா தங்கவாது முடியுது. அதுவரை சந்தோஷம். இல்லைன்னு வை, அக்கா குழந்தையை பார்த்துக்க நான் யார்னு எந்த நொடி அமுல்யாவை என்னை பிரிச்சிடுவாங்களோனு பயம் இருக்கும். இப்ப பாரு அமுல்யாவுக்கு உரிமையான அம்மாவாவும் மாறிட்டேன். இனி இஷானே வெளியே போக சொல்ல முடியாது.” என்று நகைத்தாள்.
மெர்ஸியோ தோழியின் தாடை பற்றி திருப்பி, “கணவன் மனைவியா பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல இருக்கியா இல்லையா? அதை சொல்லு” என்று கேட்க, மறுப்பாய் தலையாட்டினாள்.
மெர்ஸியோ “அப்பறம் என்ன டேஸுக்கு கல்யாணம் செய்தார்? அவர் பொண்ணுக்கு கேர்டேக்கர் வேலைக்கு மட்டுமா? என்ன நினைச்சிட்டு இருக்கார்? நானும் ஏதோ கல்யாணமாகி எல்லா கணவன் மனைவி மாதிரி இருப்பிங்கன்னு நினைச்சேன். இப்படியொரு கல்யாணம் தேவையா துகிரா?” என்று கோபமாய் கேட்க, துகிராவோ, “தேவையா இல்லையா என்பது இப்ப தேவையற்ற கேள்வி மெர்ஸி” என்றாள்.
“ஓ.. அப்ப நீ எப்ப உன் வாழ்ககையை வாழ்வ? யாரும் கேட்க மாட்டோம்னு நினைக்கறாரா?” என்று கோபமாக, “அச்சோ.. கத்தாத. இப்ப நான் வாழறதில் என்ன குறை இருக்கு. சந்தோஷமா இருக்கேன். சும்மா இதையே கேட்காத. வந்ததும் அறைஞ்சிட்ட. கன்னமெல்லாம் வலிக்கு.” என்றாள்.
மெர்ஸியோ, “சாரிடி.. அண்ணா சொன்னதும் பயங்கர ஷாக். போன்ல திட்டிட்டேன். எனக்கு ஜீரணிக்க நேரம் எடுத்தது. அப்படியிருந்தும் நேர்ல வந்ததும் உன்னை பார்த்ததும் கோபத்துல அடிச்சிட்டேன். சார்லஸுக்கு சொந்ததில் பொண்ணு பார்த்தாச்சு. அதை சொல்லதான் வந்ததே. ஆக்சுவலி பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கறது.” என்று மெர்ஸி வெட்கப்பட்டாள்.
“ஓ… சூப்பர். இதை முதல்ல சொல்ல வேண்டாம்.” என்று துகிரா வாழ்த்த, “முதல்ல கல்யாணம் வேண்டாம்னு அண்ணா சொன்னான். அப்பறம் கல்யாணம் செய்ய புஷ் செய்தோம். முதல்ல தங்கைக்கு கல்யாணம் ஆகட்டும்னு நழுவ பார்த்தான். அப்பா தான் சொந்தத்தில் இந்த வரன் வந்ததை சொன்னார். அதையே முடிச்சிடலாம்னு பேசியாச்சு. மூன்று மாசத்துல கல்யாணம். அதை நேர்ல சொல்லிட்டு உன்னை பார்த்துட்டு, போகலாம்னு தான் வந்தோம். அண்ணாவுக்கு வேற உன்னை இஷானோட கட்டிக் கொடுத்துட்டாலும் துகிரா என்ன பண்ணறாங்களோனு என் புலம்பலை கேட்டு நேர்ல பேசு, என்னால உங்க பிரெண்ட்ஷிப் சிதைய கூடாதுன்னு சொல்லிட்டான்.” என்றாள் மெர்ஸி.
“நல்ல மனுஷன். டாக்டரா இருந்ததால் அம்மு மனசை புரிந்து செயல்பட்டிருப்பார்னு நினைச்சேன். ஆனா சார்லஸுக்கு இயற்கையிலே நல்ல மனசு.” என்றாள் துகிரா.
இருவரும் முன்பு போல பேச, மெர்ஸியோ, “இப்பவும் இதே ரூம்ல தான் இருக்கியா?” என்றதற்கு, துகிராவோ, “நீ வேற, அவரோட ரூம்ல தான் இருக்கேன். நான் அம்மு அவரு. இந்த ஆர்டர்ல தான் தூங்குவோம்.
அவர் அறையில் என் திங்க்ஸ் மாத்தியாச்சு. அத்தை இந்த விஷயத்துல ரொம்ப நல்லடைப். என்ன முதலிரவு அப்ப அலங்காரம் செய்து அறையில் வந்ததும் நடுங்கிட்டேன். ஆனா பேச கூட வேண்டாம் என்னை தொல்லை பண்ணாதனு கத்திட்டார். அன்னைக்கு மட்டும் அமுல்யா இல்லை.” என்று பேச, மெர்ஸியோ துகிரா நெற்றியில் கை வைத்து தள்ளி “குழந்தையை அந்த நேரம் படுக்க வைக்க அனுப்புவாங்களா? என்ன தான் ஒன்னுமே நடக்கலைன்னாலும்” என்று வாறினாள்.
“போடி” என்று வெட்கப்பட்டு துகிரா சிவக்க, அவள் கையை பிடித்து, “இப்பவும் நீ சந்தோஷமா வாழறனு நான் எடுத்துக்க மாட்டேன். என்னைக்கு இதே போல வெட்கப்பட்டு, இஷான் சார் கூட எல்லா கணவன் மனைவி போல வாழ்ந்தப்பிறகு சொல்லு. அப்ப தான் எனக்கு சந்தோஷம்.” என்றதும் துகிராவோ ‘அந்த காலம் வராது’ என்று மனதில் நினைத்தாலும் வெளியே ‘சரி வா. என் பொண்ணு தேடுவா. என்னை செய்யறாளோ தெரியலை” என்று அழைத்து வந்தாள்.
அமுல்யா இஷான் மடியில் இருக்க, “கண்டிப்பா கல்யாணம் முடிந்ததும் விருந்துக்கு வரணும்.” என்று கூற சார்லஸோ “ம்ம்.” என்றவன் மெர்ஸியிடம் விஷயம் சொல்லிட்டியா என்பது போல பார்த்தான்.
“வாழ்த்துகள் சார்லஸ். இந்த மாற்றம் விரைவில் வந்ததில் சந்தோஷம்” என்றாள்.
இஷானோ “அம்மு… அத்தை கூட விளையாடு போ” என்று விரட்ட, அமுல்யாவும் சென்றாள்.
அதன்பின் நிறைய பேசி முடித்தனர். இரண்டு முறை வந்தப்போதும் தங்கி செல்லாத சூழல் அமைய, இன்று இரவு தங்கி செல்ல துகிரா உரிமையாக கட்டளையிட, மெர்ஸியும் சம்மதித்தாள்.
சார்லஸ் ரிஷி அறையிலேயே படுத்துக் கொள்வதாக உரைத்திட, துகிராவுக்கு முன்பு கொடுக்கப்பட்ட அறையில் மெர்ஸியும் துகிராவும் பேசினார்கள்.
அமுல்யா தான் துகிரா மடியில் இருந்து அவளாக உறங்க, இஷானோ கதவை தட்டினான்.
“உள்ள வாங்க” என்று மெர்ஸி தான் அழைத்தாள்.
“அமுலு தூங்கிட்டாளா? கூட்டிட்டு போக வந்தேன்.” என்று வந்தான்.
துகிராவோ மடியில் கிடத்தியிருக்க, இஷான் மகளை மட்டும் அள்ளிக்கொள்ள கைநீட்டி தூக்கினான்.
இஷான் பார்வை இம்முறையும் துகிராவை தழுவியது. துகிராவும் இஷானின் நெருக்கத்தில் திக்குமுக்காட, குழந்தையை மட்டும் தூக்கிவிட்டு “குட்நைட்” என்று சென்றான்.
துகிராவோ, செல்லும் இஷானை வெறித்து பார்க்க மெர்ஸியோ சொடக்கிட்டு, “என்னாச்சு? அவர் பேசினாலும் நீயா பேச மாட்ட போலயே” என்று கேட்டதற்கு, ஒரு சன்னமான சிரிப்பை வழங்கினாள்.
மீண்டும் பேச்சு மெர்ஸி தாய்தந்தையர் பற்றி போனது. திருமணத்தை எப்படி அவசரப்படுத்தி கார்னர் செய்தாரென்று மெர்ஸி கூற “பாவம்பா உங்க அண்ணா.” என்று நகைத்தாள்.
இல்லையா பின்ன குழந்தையோடு இருந்த துகிராவை காதலித்து, மணக்க போராடி, பின்னர் சார்லஸாக இஷானுக்கு விட்டுக்கொடுத்து கல்யாணம் செய்ய பேசிமுடித்து வந்ததில் அவனது பெற்றோர் கோழி அமுக்குவது போல அடுத்த சில நாட்களிலேயே வரன் தேடினார்கள். ஏசுவின் கிருபையில் சொந்தத்தில் அமைந்தது. அதிலும் மெர்ஸிக்கும் வாழ்வு அமையும் விதமாக போனதில் களிப்படைந்தனர்.
மெர்ஸி கொட்டாவி விட்டு, “ஓகே நீ போய் தூங்கு. எனக்கு தூக்கம் வருது” என்று அனுப்ப, துகிராவுமே அமுல்யாவை தேடி இஷான் அறைக்கு வந்தாள்.
இஷானின் நெஞ்சில் அமுல்யா உறங்க, குழந்தை தலையை தடவினாள். கூடுதலாக தினசரி முத்தம் வைக்க குனிந்து அமுல்யா கன்னத்தில் முத்தமிட, மல்லிப்பூ வாசம் இஷானின் நாசியில் நுகர்ந்து, ஆழ்ந்து மூச்செடுத்தான்.
இஷான் கண்கள் பட்டென திறக்க, பயத்தில் துகிரா கையை அசைக்க, தடுமாறி அவன் மேல் கன்னத்தில் முத்தமிட்டாள். ஆனால் இம்முறை இஷானின் கன்னத்தில் எதார்த்தமாக ஒற்றிவிட, “நான் வேண்டுமின்னே பண்ணலை. கை பேலன்ஸ் ஸ்கிட் ஆகிடுச்சு.” என்று துகிரா பயத்தாலும் வார்த்தையை கோர்த்து காரணத்தை உதிர்த்தாள். இல்லையென்றால் தவறாய் எடுத்துக்கொண்டு ரௌத்திரம் கொப்பளிக்க கத்தினால் துகிரா மானம் போகுமே!
இஷான் என்ன வினை ஆற்றுவானென்று துகிரா அச்சம் கொண்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 evanga renduperum kannamoochi attam nalla aadranga pa😂 oru nalla friend ah thukira kita nadandhukuranga super 😘
Aatam eppo than start aaguthu
Superb epi. Nice going
கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 21)
இல்லையில்லை, துகிரா வேணுமின்னேத்தான் கொடுத்தா…. அப்படியே
கொடுத்திட்டாலும்.
சார்லஸ் & மெர்ஸி மாதியொரு நட்பு கிடைக்க துகிரா ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும். உண்மையான நலன் விரும்பிகள்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super super super super super super super,❤️❤️❤️❤️❤️
Super story 💞
ரொம்ப நல்லா போகுது கதை very interesting….. 😍😍😍
Nice … Spr going waiting for nxt epi 😍
AVANUKU ATHU THERIUM AANA ENA PANAUVANO
Nice!!!
Super 👏
Nice going