Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-26

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-26

அத்தியாயம்-26

   துகிரா எழுந்து அமர்ந்து முதல் வேலையாக குளிக்க சென்றாள். இஷான் வெறும் பார்வையாளராக குற்றவுணர்வில் நின்றான்.‌

   துகிராவிடம் தன்னிலை விளக்கம் அல்லது மன்னிப்பு இரண்டில் ஏதாவது பேச நினைத்தான்.

நடந்த நிகழ்வில் அவன் தானே துகிராவை அள்ளி கொண்டு தனி மெத்தையில் கிடத்தி, துர்கா என்று ஆரம்பித்து துகிரா என்று முடித்தான். துகிராவை துளியும் கடிய இயலாதே.!

   துகிராவும் மௌனமாய் தலைக்கு குளித்து வெளிவந்தவள், தனது போர்வையை மடித்து வைத்திட நினைத்து எடுக்க, மெத்தையின் மேல் விரிப்பு, ரத்த கறையாக தெரிய, அமுல்யா எழவும் அவசரமாய் மறைத்தாள்.

  “மம்மி பிரஷ் பண்ணிடவா?” என்று நல்லப் பிள்ளையாக அமுல்யா கேட்க, தலையாட்டினாள்.

  அமுல்யா குளியலறை செல்லவும், துகிரா அவசரமாய் மெத்தை விரிப்பை அகற்றி வாஷ்பேஷனில் கறையை நீக்க போராடினாள். அவள் கண்ணில் கண்ணீர் வேறு வழிய, இஷானுக்கு முதல்முறை துகிரா நிலையிலிருந்து பார்த்து இதயம் கனத்தது.  

   ஏதோ தொன்னூறு சதம் விரிப்பில் கறை நீங்கவும், அதை துவைக்கும் லாண்டரி பேகில் போட்டுவிட்டு, அமுல்யாவுக்கு உடையை எடுத்து வைக்க பொறுப்பான அன்னையாக மாறினாள்.

     இஷானோ டீயை அறைக்கு வரவழைத்து துகிராவிடம் தள்ளி வைத்தான்.
  அமுல்யா குளித்து முடித்து உடையணிந்து பாலை பருகினாள். அடுத்து இஷானும் டீ குடித்து வெளியே புறப்பட தயாரானான்.

இருபது நிமிட இடைவெளியில் உணவும் வந்து சேர, அறைக்குள்ளேயே பிரேக்ஃபஸ்ட் முடிந்தது.

   இன்று ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய கிளம்பியிருக்க, துகிரா அமுல்யாவிடம் கூட பேசாமல் தனித்து நடந்து வந்தாள்.

  இஷானுக்கு அதுவே மனதை பிசைந்தது. படகில் ஏற கைக்கொடுக்க தயங்கிட, அதற்குள் அவளே சமாளித்து ஏறினாள்.

அமுல்யா நேற்று போலவே “அம்மா உங்க போன் எடுங்க செல்ஃபி எடுக்கலாம்” என்று கூற, “போன் தண்ணில விழுந்துட்டா. வேண்டாம் அம்மு” என்றாள். அவள் குரலே மாறியிருந்தது. வார்த்தையை உதிர்க்க, முடியாமல் வெளிவருவது போன்ற குரல். அப்படியிருக்க போனை எடுத்து செல்ஃபி எடுக்க இயலாதே!

   ”அப்பா நீங்க எடுங்க. நீங்க தான் எதையும் பத்திரமா ஹாண்டில் பண்ணுவிங்க” என்று தந்தையை பாராட்டி அவனை புகைப்படம் எடுக்க கூறினாள் அமுல்யா. குழந்தைக்கு தன் தந்தை இஷானுக்கு எல்லாம் தெரியுமென்ற எண்ணம். இஷான் துகிரா விஷயத்தில் சரியானவனாக இன்னமும் நடக்காத கணவன் தான்.

   இஷான் மூவருமாய் சேர்ந்து செல்ஃபி எடுக்க, கண்ணீர் வற்றிய கண்களாய் துகிரா விழிகள் உயிரற்று கிடந்தது.

  ஏனோ நடந்த விபரீதங்களுக்கு பிறகு, துர்கா என்ற கண்ணோட்டத்தில் இஷானால் துகிராவை பார்க்க இயலவில்லை. துகிரா.. அவளிடம் நேற்று வரம்பு மீறிவிட்டேன். அதுவே மனதில் கிடந்து தவிக்க, ஒவ்வொரு நொடியும் துர்கா என்ற பெயரை தாண்டி துகிராவை  கவனித்தான்.

  முப்பது நிமிட படகு பயணம் முடிவுற்றதும், இஷான் முதலில் இறங்கிவிட்டு அமுல்யாவை தன் பக்கம் நிறுத்திவிட்டு துகிராவுக்கு கையை நீட்ட, படகின் தள்ளாட்டத்தில் இஷான் கையை அவசரமாய் பிடித்து விட்டாள்.

இஷானோ துகிராவை பார்த்து கோபமானான். அவள் கையை தீண்டியதற்கு அல்ல.. துகிரா உடல் கொதித்து போயிருந்தது. படகு ஓட்டியவற்கு கூடுதலாக பணத்தை வழங்கிவிட்டு கோபமாய் வந்தான்.

  “உடம்பு அனலா கொதிக்குது. ஜுரம்னா சொல்லி தொலைக்கலாமே. அப்படி என்ன வீராப்பு” என்று கோபமாய் கேட்க, அமுல்யா தந்தையை கண்டு மிரள, துகிராவோ அமைதியாக அமுல்யாவின் கைப்பிடித்து பேசாமல் நடந்தாள்.

   “டேப்ளட்டாவது போட்டியா?” என்று அக்கறையாக கேட்டான். முதல் முறை அவளிடம் அக்கறை? துகிராவுக்கு விரக்தியான சிரிப்பு உண்டானது.
“நான் கொண்டு வந்தது சிரஃப். அமுல்யாவுக்கு ஜுரத்துக்கான சிரஃப். சளி சிராஃப். பீவர் டேப்ளெட்ஸ் எதுவும் இல்லை.” என்றாள்.

   “முதல்லயே சொல்லியிருந்தா ரூம்ல ரெஸ்ட் எடுத்திருக்கலாமே?” என்றான்.

  “அதுக்கு தான் சொல்லலை. என் பொண்ணு ஊட்டியை சுத்திப்பார்க்க ஆசைப்பட்டா. நான் அவளை ரூம்லயே அடைச்சிட விரும்பலை. எனக்கு பீவர் வந்தா யாருக்கு என்ன கஷ்டம்.” என்றாள். ஒவ்வொரு வார்த்தையும் மொட்டையாக, விரக்தியாக வந்து விழுந்தது.

  இஷானோ மெடிக்கல் கடையில் மருந்து வாங்க கார் டிரைவரிடம் கூற அவரும் ஒரு மெடிக்கல் கடையில் நிறுத்தினார்.

  காரிலிருந்து இறங்கி வேகமாய் மருந்துக்கடை நோக்கி நடந்தவன், மீண்டும் துகிராவிடம் தயக்கமாய் வந்து, ”பீவர் மட்டுமா? இ..இல்லை பெயின் இருக்கா?” என்று கேட்க, துகிராவோ, “பேரசிடெமெல்லே போதும். அதுவே உடம்பு வலியை குறைக்கும்” என்றாள். அது கூறி முடிக்கும் முன் இஷானை தவிர்க்க நினைத்து சங்கடமாய் கூறினாள்.

   மாத்திரை வாங்கி வந்து நீட்ட உடனடியாக தண்ணீரை கொண்டு விழுங்கினாள்.

  “மம்மி உங்களுக்கு ஜுரமா? நாம வேண்டுமின்னா ரூமுக்கு போகலாம்” என்று குழந்தை தனக்கு புரிந்ததில் கூற, “இல்லை.. ரூமுக்கு வேண்டாம். அம்மா ஓகே தான்” என்று அமுல்யாவிடம் உரைத்தாள்.

   அறைக்குள் சென்றால் அமுல்யா பக்கத்தில் இருப்பாள். இங்கே என்றால் அமுல்யாவை விளையாட விட்டு துகிராவிடம் மன்னிப்பு கேட்கவும், மற்றவை பேசவும் வசதியென்று இஷான் தொட்டபெட்ட சிகரத்தை நோக்கி பயணித்தனர்.

2623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் நீலகிரியின் மிக உயரமான சிகரமாகும். ஊட்டியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள சிகரத்தை கடந்து வரும் நேரமெல்லாம் அமுல்யா தான் பேசி சிரித்து வந்தாள்.
இஷானும் துகிராவும் குண்டூசி சத்தம் கூட தரவில்லை. இஷான் அடிக்கடி துகிராவை கண்டு அவளது நிலையை கவனித்தான். 

அடர்ந்த சோலைகளால் சூழப்பட்ட இந்த சிகரம், மலையேற்றப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக, ரசிக்க, கண்ணுக்கு குளிர்ச்சியாக மனதை  மயக்கும். பத்து கிலோமீட்டர் பயணத்தில் சீக்கிரம் வந்து சேர்ந்தனர்.

சிகரத்தில் ஒரு தொலைநோக்கி வீடு இருக்க, அதில் இரண்டு தொலைநோக்கிகள் இருந்தன, அவை பள்ளத்தாக்கின் வசீகரிக்கும் காட்சியை பார்வையாளருக்கு காண உதவும். அங்கு அமுல்யாவை பார்வையிட்டு முடிக்க, இஷான் துகிரா தனிமையில் அமர்ந்தனர்.
  துகிரா கால் வலி என்று ஓரிடமாக அமர இஷானும் அங்கே அமர்ந்தான்.

  வரலாற்று அதிசயமாக அவனே வந்தது துகிராவுக்கு ஆச்சரியம்.
  “இப்ப ஃபீவர் பரவாயில்லையா?” என்று கரிசனையாக கேட்டான்.‌

  “பரவாயில்லை” என்றாள்.

“பெயின்?” என்று இழுக்க, ‘இப்ப இல்லை.’ என்று சத்தமின்றி உரைத்தாள்.

  “நான் துர்கானு நினைச்சி தான்…” என்று இஷான் ஆரம்பிக்கவும், ”ப்ளிஸ்… நேத்து நடந்ததுக்கு நான் காரணம் கூட கேட்க விரும்பலை. ஆனா தப்போ சரியோ நடந்ததை பத்தி நான் எதுவும் பேசலை. ஆனா துர்கானு நினைச்சி தொட்டதா சொல்லி என்னை மேலும் மேலும் கொன்னுடாதிங்க.
   துர்கா என்ற பெயர்ல டிரெயின்ல வந்து, துர்கா என்ற அடையாளத்தோட நீங்க தொட்டதா நினைக்கும் போது, என் சுயத்தை நான் மொத்தமா இழந்தது போல வேதனையா இருக்கு.
  அக்கா இறந்துட்டா ஆனாலும் அவ மேல தேவையில்லாம கோபம் கோபமா வருது.
  அவளோட இஷான்.. துர்காவோட இஷான் தான். ஆனா இஷானோட துகிராவா நான் மாறி, நீங்க கட்டிய தாலியை சுமந்துட்டு இருக்கேன். எனக்கு என்னோட இஷானா உங்களை பார்க்க ஆசை. நடக்காதுனு தெரியும். ஆனா மனசுல என் கணவர் இஷான்னு தான் நினைச்சி  உங்களோட நேற்றைய உணர்வுக்கு வடிகால இருந்தேன். ஆனா நீங்க… அக்காவா நினைச்சி என்னை தொட்டதா மன்னிப்பு கேட்டு என்னை கொல்லாதிங்க” என்று அழவும், இஷான் சுற்றி முற்றி பார்வையிட்டான்.

‌ஏற்கனவே தனிமையான பகுதியாக துகிரா அமர்ந்திருக்க ஓரளவு யாரும் கவனிக்கவில்லை. ஆனாலும் பொதுயிடத்தில் அழுபவளிடம், “நிறுத்தறியா… நான் துர்கானு தான் ஆரம்பிச்சேன். இல்லைன்னு சொல்லலை. ஆனா முடியறப்ப துகிராவோட நடந்ததை மறக்கலை. இனி மறக்கவும் முடியாது. தெரியாம தொட்டேன்னு பச்சை பொய் சொல்ல மாட்டேன். துகிரா துர்கானு மனதோட, உன்னை பார்த்ததுலயிருந்து போராடிட்டு இருக்கேன். அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?!

  நான் ஆசை ஆசையா  காதலிச்ச துர்கா. இப்ப ஒரு குழந்தையை தந்துட்டு உயிரோட இல்லை. அதே உருவத்துல கொஞ்சமும் அடையாளம் இல்லாத துகிராவா உன்னை என் பக்கத்துல அதுவும் மனைவியா நிற்கறப்ப இருதலைகொள்ளியா நானும் தான் என் சுயத்தை மொத்தமா தொலைச்சிட்டு வாழ தெரியாம வாழந்தேன்‌
  பட் நேத்து நடந்தது துகிராவோட எனக்கு நடந்ததுனு என் மனசாட்சிக்கு நல்லா தெரியும். அதை ஏமாத்த முடியாது. உனக்கு தான் என்னால கஷ்டம். அது நல்லாவே புரியுது. ஆனா அந்த கஷ்டம் நிவர்த்தியாக என்னால ஒரடி எடுத்து வைக்க தயக்கமிருந்தது. ஆனா ஒரடியென்ன ஒரேடியா நேத்து மாறிடுச்சு.” என்று கூறியவன் முகமும் சோகத்தை தாங்கியிருந்தது.

  ‘காலேஜ்ல துர்காவை காதலிச்சேன். உங்க வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் செய்தது‌ உங்க வீட்ல அனுமதியில்லை. எங்க வீட்லயும் அம்மா தயங்கினாங்க. அதான் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணினேன். அவளோட வாழ்ந்த நாட்கள் கொஞ்சம் தான். ஆனா மனசெல்லாம் நிறைந்தவ. அவளுக்கும் எனக்கும் சண்டைன்னா அது உங்க வீட்டுக்கு கடைசியா போவேன்னு அடம்பிடிச்சதுக்கு தான்.
  அவளுக்கு என்னை விட அப்பா அம்மா பொருசா போயிட்டாங்க. அதான் சாகறப்பவாது கூடவே வர்றேன்னு என்னை தவிக்க வச்சிட்டு போயிட்டா.” என்றவன் குரல் கலக்கமாய் வந்து விழுந்தது.

  “இஷான்” என்று துகிரா அழைக்க, “துர்காவுக்கு… என்ன தான் என்னை தனியா விட்டு போக மனசில்லை. அதான் என் குழந்தையை உயிரோட தந்துட்டு‌ போயிட்டா. அவளுக்கு அவ தங்கை துகிராவையும் பிடிக்கும்.
   அடிக்கடி சொல்வா. கன்சீவா ஆனதிலயிருந்து… ‘என் தங்கை மட்டும் கூடயிருந்தா உட்கார்ந்த இடத்துலயே இருந்து, எனக்கான வேலையை வாங்கிப்பேன். எனக்காக என்ன வேண்டுமென்றாலும் என் தங்கை செய்வா’னு பெருமை பேசுவா.  ‘மச்சினி மச்சினினு சொல்லுறயே கண்ணுல காட்டும்மா.. உனக்கு பதில், அவளே என்னையும் பார்த்துக்க சொல்லு’னு சொல்லி விளையாடியிருக்கேன்.

‘ஆங்.. என் தங்கை என் குழந்தையை பார்த்துப்பா‌.’ என்று அவ பேச நான் சும்மாயில்லாம ‘ஆமா ஆமா நீ இல்லைன்னா என்னையும் பார்த்துப்பா.’னு நான் பேச, என்னை கிள்ளிவிட்டுயிருக்கா.
  ஆனா காலம் போனதில் இப்ப அதுவே நடக்கு.
  அவயில்லாத இடத்துல நீ தான் துகிரா. அமுல்யாவுக்கு அம்மாவா உன்னை பார்த்தப்ப, துர்காவா தான் தெரிந்த அதான் முதல் சந்திப்பில் முத்தமிட்டது.

  நீ துர்கா இல்லை துகிரானு சொன்னதும், தப்பு பண்ணிட்டேனேனு என்னை நானே திட்டிய தருணம்.
   இத்தனை வருஷமா அம்மா கல்யாணம் செய்யுனு சொன்னப்ப வராத பயம். நீ வந்து நின்றப்ப, என்னையறியாம துர்கா சாயலில் இருக்கற, துகிராவிடம் மனசு சாய்ந்திடுமோனு தினறினேன். பிகாஸ் அந்தளவு முகசாயல், என் மதியிழக்க வச்சது.
   ஒரு பக்கம் சார்லஸை மணக்க போறேன்னு நின்றப்ப, அவரை காதலிச்ச பொண்ணிடம், நான் முத்தம் கொடுத்துட்டேனேனு, உன்னை நேர்ல பார்க்க தவிர்த்தேன். இங்கயிருந்து போயிடுன்னு விரட்டினேன். எங்கம்மா வேற உன்னை பார்த்ததும், அவங்க மைண்ட்ல உன்னையும் என்னையும் சோர்த்து வைக்க திட்டம் போடுவாங்கன்னு நினைச்சேன். ஆனா உன் காதலை தேடி நீ போவன்னு மிதப்புல இருந்தேன். பட் நீ அமுல்யா மேல வச்சிருந்த அன்பு, உன்னை எங்கயும் நகரவிடலை.
  சில நேரத்துல துர்காவே உன் ரூபத்துல வந்து குழந்தையை பார்த்துக்கிட்டா என்றது போல, உன் செய்கை ஒவ்வொன்னும் இருந்தது.

   கொஞ்சம் கொஞ்சமா என் மகளை உண்மையா நேசித்து அம்மாவா இருந்தப்ப, என் மனசை ஜெயித்த. 
   இந்த அட்மாஸ்ஃபியர், என் ஓய்ஃப், என் குழந்தை என்ற உரிமையில் தான் நடமாடியது.
  துர்காவை விட துகிராவை நேசிக்க ஆரம்பிச்சிட்டியானு என்‌ மனசாட்சி சாடைமாடையா கேட்டும், வீராப்பா சுத்தி, உன்னிடம் விலகினேன். இனி விலக முடியுமானு தெரியலை. அட்லீஸ்ட் என் மனதில் துர்காவை விரும்பிய அதேயளவு, துகிராவான உன்னையும் விரும்புவேன்னு சொல்லி, இதுக்கு முன்ன நடந்ததுக்கு மன்னிப்பு கேட்க தான், இந்த ட்ரிப்பை தேர்ந்தெடுத்தேன்.
  ஆனா… இங்கயும் என்னை அறியாம நேத்து உன்னை காயப்படுத்திட்டேன். துர்கா பெயரை உச்சரித்தது தப்பு. உன்னை இழந்ததை விட, அந்த பெயரால நீ காயப்பட்டிருப்பதை என்னால உணர முடியுது. ரியலி சாரி துகிரா” என்று இத்தனை நாள் வீராப்பாய் நடையிட்டவன் கண்ணீரோடு விழியை நிமிர்த்தி துகிராவை காண, அவளோ காற்று வீச, நடுக்கமாய் ஸ்வெட்டரை இறுக பற்றி, “அம்மு போதும் இங்க வா.” என்று கூப்பிட்டு நடுங்க ஆரம்பித்தாள்.

  “என்னாச்சு.” என்று கழுத்திற்கு கைகளை கொண்டு செல்ல துகிரா  இரண்டடி பின்னால் நகர்ந்தாள். இஷானுக்கு அதுவே வலியை கூட்டியது.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

10 thoughts on “கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-26”

  1. M. Sarathi Rio

    கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே !
    எழுத்தாளர்: பிரவீணா தங்க ராஜ்
    (அத்தியாயம் – 26)

    அப்பாடா..! ஒருவழியா மனசு திறந்து பேசிட்டான், கன்ஃபெஷன் செக்சனும் முடிஞ்சாச்சு, மன்னிப்பும் கேட்டாச்சு, இனி அடுத்து என்ன ? இவன் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம் தானே..?
    சரியான வணங்காமுடி.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Ipovathu purinjitu pesuriyani lo porumaiya athuve periya vishayam than aana nee pesi uriya pesave yositu irunthu intha mari nadantha apram vanthu ddhurga nu sonna kovam varatha akka va ve irunthalum varume urimaiyana edathula irukale ava

  3. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 ishan endha alavuku pesinadhu periya vishayam aana enna erundhalum thugira kaaya pattadhu maara konjam kashtam dhan 🙄🥺🤔🧐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!