Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே-9

கண்ணிலே மதுச்சாரலே-9

அத்தியாயம்-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    ஹாஸ்பிடலில் பார்வதி திலோத்தமாவை விட்டுவிட்டு சற்று நகர்ந்து வந்து மகன் ஆதித்யாவிற்கு அழைத்தார்.

  ரிங் செல்லவும் கோபத்தை சாந்தப்படுத்தி சாந்தமாய் பேச அலைப்பேசியை எடுத்தான்.

  “சொல்லுங்கம்மா” என்று எடுத்ததும் கேட்டதும் பார்வதியும் மழுப்பாது, “என்னப்பா… சம்பந்தியிடம் என்ன கோபம்.” என்று கேட்டார்.

  ஆதித்யாவோ “மன்னிக்க முடியாத தவறை சுட்டி காட்டினேன். நான் கோபப்படலைம்மா” என்றுரைத்தான்.

    “நீ தப்பு செய்ய மாட்டேன்னு எனக்கும் தெரியும். எதுனாலும் இப்ப இந்த சூழ்நிலையில் மன்னிக்கலாமே.
   இங்க திலோத்தமா அவ அப்பாவுக்காக அழுதுட்டு இருக்கா. சம்பந்தி இன்னமும் கண் முழிக்கலை. நீ வந்து அவளை ஆறுதல்படுத்தலாம்.” என்று கூற, “அம்மா… மன்னிக்க முடியாத தவறை செய்திருக்கார். என்னால் இந்த ஜென்மத்துல அவர் செய்த செயலை மறக்க முடியாது. நான் திலோத்தமாவை பத்து மணிக்குள் வீட்டுக்கு வர சொல்லிருக்கேன்‌. அவயின்னும் வரலை. அவளுக்கு என்னை விட அவ அப்பா தான் பெரிசுன்னு, இங்க வராமலே செல்லிட்டா.  இதுல நான் எப்படி அங்க வருவேன், திலோத்தமாவுக்கு ஆறுதல் சொல்வேன். திலோ பத்துமணிக்குள் வரலைன்னா எல்லாமே முடிஞ்சது.” என்று கூறியவனின் வார்த்தை அழுத்தமாய் வந்தது.

   “ஆதித்யா” என்று பார்வதி பதற, “ப்ளீஸ் அம்மா… என்ன ஏதுன்னு என்னிடம் கேட்காதிங்க. அந்த சுரேந்திரன் உயிர் பிழைச்சி வந்தா அவரிடம் கேளுங்க. ஆனா திலோத்தமா… இன்னிக்கு வரலைன்னா… இனி எப்பவும் ஏத்துக்க மாட்டேன். அப்ப என்னை நீங்க சாந்தப்படுத்தியோ, சேர்ந்து வாழவோ கட்டாயப்படுத்தாதிங்க.” என்று முடித்தான்.

   இதென்ன சேர்ந்து வாழ மாட்டேன் என்று பேசுகின்றான் என்று அதிர்ந்தாலும், “ஆதித்யா எந்த கஷ்டமானாலும் காலம் அதை சரிப்படுத்தும்.” என்று கூற போனை அணைத்திருந்தான்.

  ஆதித்யா முதல் முறையாக தன் வார்த்தையை முழுமையாக பேச விடாமல் துண்டிக்கின்றான். மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் படுத்த படுக்கையில் சிகிச்சையில் இருப்பவர் என்ன‌ செய்து வைத்தாரோ?
 
   பத்து மணிக்குள் திலோத்தமாவை ஆதித்யா எதிர்பார்த்திருப்பானோ என்று மருமகளிடம் வந்து, “நீ வீட்டுக்கு போய் ஒரெட்டு ஆதித்யாவை பார்த்ததுட்டு வந்துடும்மா. என்ன கோபமோ? அதுவரை அப்பா கண் திறந்தா நாங்க கூடயிருக்கோம்” என்று தன்மையாக எடுத்துரைத்தார்.

   திலோத்தமாவோ “அங்க உயிருக்கு ஆபத்துல சிகிச்சை எடுத்துட்டு இருக்கறது எங்கப்பா அத்தை. அவர் என்ன விளையாட்டுக்கு எல்லாம் வீம்பு பிடிக்கறார். நான் அப்பா கண் திறந்ததும் பார்த்ததுட்டு அப்பறமா அவரிடம் பேசிக்கறேன்.” என்று முடிவாய் உரைத்தாள்.

   பார்வதிக்கு என்னவோ மனதிற்கு சரியில்லை. கணவர் கைலாஷிடம் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க நினைத்தார்.

   அவரோ எப்படியும் பார்வதிக்கு தெரிய வரும். தானே கூறி நல்லவிதமாக நடந்திட முடிவெடுத்தார்.

  அதன் காரணமாக கூற ஆரம்பித்தார். “எனக்கு என்ன நடந்ததுன்னு விலாவரியா தெரியாது பார்வதி. உன் தத்து பையனோட ஒரிஜினல் அப்பாவும் சுரேந்திரனும் காலேஜ் நண்பர்கள். இதுல ஆதித்யாவோட அப்பாவுக்கு கீழே சுரேந்திரன் வேலை பார்த்திருப்பான் போல. அவன் சொத்து முழுதும் சுரேந்திரன் நயவஞ்சகமா, கையெழுத்து வாங்கி ஏமாத்தியிருக்கான்.

     அதன் காரணமா வண்டியோட்டும் போது இந்த விஷயம் தெரிய வந்து, விபத்து நேர்ந்து ஆதித்யா அப்பா அம்மா இறந்திருக்காங்க.

   ஆதித்யாவுக்கு சுரேந்திரன் தான் சொத்தை அபகரித்ததுன்னு தெரிந்திருக்கு. தன் அப்பா அம்மா இறப்புக்கு காரணமானவனோட பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கான்.
   பழிவாங்க கல்யாணம் செய்தானா என்னனு தெரியலை. இத்தனை நாள் சுரோந்திரனிடம் மரியாதை தராம, மாமானு கூப்பிடாம இருந்தவன், இன்னிக்கு சுரேந்திரன் மகள் வாழ்க்கைக்காக என்ன தான் காரணம்னு தெரிய ஆதித்யாவிடம் கேட்டுட ஆபீஸ் போய் சந்திக்கவும் ஆதித்யா சொல்லிட்டான்.
    இனி என்ன நடக்குமோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம். சுரேந்திரன் மகளை அழைச்சிட்டு வீட்டுக்கு வர நினைச்சான். ஆதித்யா ஒரு வேளை திலோத்தமாவை கொடுமை படுத்துவானா?” என்று அவரது எண்ணத்தை தான் வெளியிட்டார்.

     பார்வதிக்கு இதை கேட்டதும் பகீரென்றது.
   ஆதித்யாவின் பெற்றவர் இறப்புக்கு காரணம் திலோத்தமாவின் அப்பா. அப்படியிருந்தும் மகன் பத்துமணிக்குள் திலோத்தமா வீட்டுக்குள் வந்தால் வாழ்வதாக பேசினானே. அப்படி வரவில்லை என்றால் எல்லாமே முடிந்தது என்ற ரீதியில் பேசினான்.
 
  மணி ஒன்பது நாற்பத்தி ஐந்து ஆகவும், மருமகளை தேடி வந்தார்.
   
  “அம்மாடி… சரியோ தப்போ, உடனே நம்ம வீட்டுக்கு போய் ஆதித்யாவிடம் நேர்ல பேசு. அதை விட்டு நேரத்தை கடத்தாதே” என்று அறிவுறுத்தினார்.

   “எங்க அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கார் அத்தை. இந்த நிலையில நான் எங்கப்பாவை விட்டு வரமாட்டேன். கண்ணை திறந்து நல்லபடியா உயிர் பிழைச்சப்பிறகு பேசிக்கறேன். அதென்ன அவருக்கு பிடிவாதம்.” என்று திரும்பி கொண்டாள்‌.

    பார்வதிக்கு என்னவென்று உரைத்து மருமகளை மகனோடு பேச வைப்பது.
  எதற்கும் தானே ஆதித்யாவுக்கு அழைத்து பார்ப்போமென பார்வதி நினைக்க அவனோ அலைப்பேசியை துண்டித்து அணைத்தும் வைத்திருப்பான் போல. அலைப்பேசி அழைப்பு செல்லாமல் சதி செய்தது.

  மீண்டும் மருமகளிடமே திரும்பி, “அம்மாடி உங்கப்பா மேல தவறு இருந்து, ஆதித்யா மேல துளியும் தவறில்லாம இருந்தா, இந்த பிரச்சனை உங்களுக்குள் பெரிய சண்டையை இழுத்து வந்துடும். அவன் போனை வேற சுவிட்ச்ஆப் செய்து வச்சியிருக்கான். நீ அவனை நேர்ல பார்த்து பேசிட்டு வா. உங்கப்பாவுக்கு எதுவும் ஆகாது” என்று கூறினார்.
  வெளிப்படையாக உன் தந்தை தான் ஆதித்யா தாய் தந்தையரின் இறப்புக்கு காரணமென தெரிவித்து பேசயியலாமல் தவித்தார் அம்முதியவள்.

   அதனை புரிந்துக்கொள்ளாத திலோத்தமாவோ, “எங்கப்பா கொலையே செய்திருக்கட்டுமே. இந்த நிமிஷம் என் அப்பாவை விட்டு ஒரடி நகர மாட்டேன்.” என்று பிடிவாதம் பிடித்து நின்றாள்‌.

பார்வதி கொலைக்கு சமம் தானே சுரேந்திரன் செய்தது.
  அதில்லைம்மா” என்று பார்வதி கூற, கைலாஷோ, மனைவியை அழைத்து அவ்விடம் விட்டு தள்ளி அழைத்து வந்து, “என்ன பண்ணற பார்வதி. அந்த பொண்ணிடம் சுரேந்திரன் பத்தி சொல்லறதா இருந்தா ஆதித்யா சொல்லிருக்க மாட்டான். ஏன் இதுவரை சொல்லலை? ஏதாவது காரணமாயிருந்து நீயே இதுல மூக்கை நுழைக்காத. இது புருஷன் பொண்டாட்டி சண்டை அவங்களே தீர்த்துப்பாங்க. நீ இதுல தலையிடாத.” என்று கடிந்தார்.

    உண்மை தானே ஆதித்யா இத்தனை நாட்கள் எதுவும் சொல்லவில்லையே? அவன் சொல்ல நினைத்து முன்னரே சொல்லிருக்கலாம். ஏதோ காரணம் இருக்கலாம் என்று அமைதியானார்‌.

   ஆதித்யா கொடுத்த நேர அவகாசம் தாண்டியது. மருத்துவமனையில் ஒரு மணிக்கு சுரேந்திரன் கண் திறந்தார்.

   அதன் பின் கூட ஐசியூ பகுதியில் இருந்தனர். மணி மூன்று மணியளவில் ஓரளவு பேசும் திடம் பெற்றார்‌.

    திலோத்தமா ”ஒன்னுமில்லைப்பா… உங்களுக்கு சரியாகிடும்” என்று கண்ணீரை வழியவிட்டு தேற்றவும், அவர் பார்வை ஆதித்யாவை தேடியது.

    கைலாஷ்” என்று கூப்பிட, தந்தை தன்‌நண்பரான சம்பந்தியை தேடவும், “மாமா வெளியே இருக்கார் அனுப்பி விடறேன். அதிகம் பேசாதிங்க அப்பா” என்று வெளியேறினாள்.

  கைலாஷிடம் “மாமா அப்பா உங்களை பார்க்க விரும்பறார்” என்று கூறவும் கைலாஷ் சுரேந்திரனின் இருந்த அறைக்கு சென்றார்.

   “ஆ..ஆதித்யா?” என்று கேட்டு முடிக்க, கைலாஷோ “அவன் வரலை.” என்று கூறவும், “திலோத்தமாவிடம் ஆதித்யா ஏதாவது சொன்னானா?” என்று கேட்டார்.

   “இல்லை… உன்‌ மகளை மட்டும் கூப்பிட்டான். அவ வரலை என்றதும் கோபமா போனை அணைச்சிட்டான்.
    திலோத்தமாவுக்கு எதுவும் தெரியாது. அந்த பொண்ணு உன் மேல பாசத்தில் ஆதித்யாவிடம் சரியா பேசலை. பார்வதி வந்திருக்கா. அவளிடம் விஷயத்தை சொன்னேன். எப்படியும் தெரிய வரும் இல்லையா. எதுனாலும் பார்த்துக்கலாம் டா. இந்த நிலைமையில் யோசிக்காத” என்று நண்பனிடம் பேசவும் சுரேந்திரனுமே நிம்மதியடைந்தார்.

   இமை மூடி சுரேந்திரன் நிம்மதியாகவும், “நீ ஓய்வெடு. நான் வெளியே இருக்கேன்” என்று கூறி கைலாஷ் வர, திலோத்தமாவோ நிம்மதி மூச்சு விட்டு ஆதித்யாவின் அலைப்பேசிக்கு முயன்றாள்.

  ‘சுவிட்ச் ஆப்’ என்ற பதிலே வரவும் நேரத்தை பார்த்து காலையில் பேசிக் கொள்ளலாமென்று நினைத்து படுத்தாள்.
  சுரேந்திரனுக்காக கொடுக்கப்பட்ட அறையில் சற்று கண்ணயர்ந்தாள். பார்வதியும் வயதானவர் என்றதால் மருமகள் கூடவே உறங்கினார்.

  அடுத்த நாள் காலையில் பார்வதி  கைலாஷ் இருவரும் எழுந்ததும் கேண்டீனில் காபி பருக சென்று வந்தனர்.
   பார்வதியோ, “ஆதித்யாவிடம் உங்க அப்பா கண் முழிச்சதை சொல்லிட்டியா” என்று காபி நீட்டி கேட்டார்.

  “இல்லைங்க அத்தை‌ போன் அணைச்சே வச்சியிருக்கார்‌. அப்பாவுக்கு கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து பார்த்ததுட்டு போயிட்டா. நான் வீட்டுக்கு போய் அவரை சமாதானம் செய்துடுவேன்” என்று கூறினாள்.

   பார்வதியும் மகனே மருமகளிடம் சொல்ல வேண்டியதை சொல்லட்டும். இல்லையென்றால் அவள் தந்தை சொல்லி தெரியட்டும் என்று நினைத்தார்.

   டாக்டரும் சுரேந்திரனை பார்த்து இனி பயப்பட ஒன்றுமேயில்லை என்றதும் ஆதித்யாவை பார்க்க புறப்படுவதாக கூறினாள்.

  சுரேந்திரனின் நண்பன் கைலாஷ் என்பதால் அவரை விட்டுவிட்டு செல்ல நினைத்தாள். அவருமே, குளிச்சிட்டு ஆதித்யாவை பார்த்துவிட்டு வரக்கூறினார்.

   திலோத்தமா கிளம்பும் சமயம் “திலோத்தமா வீட்டு சாவி” என்று பார்வதி தரவும், “அவர் இருப்பார் அத்தை அவர் ஆபிஸ் கிளம்பறதுக்குள் வீட்டுக்கு போயிடுவேன்” என்று கூறியவளிடம் “எதுக்கும் சாவி எடுத்துட்டு போ” என்று திணித்தார்.
 
   திலோத்தமா தந்தையின் காரை எடுத்து கிளம்பியவள் வழியெங்கும் ஆதித்யாவை சமாதானம் செய்யும் ஒத்திகையையும் மனதில் பார்த்து கொண்டாள்.

    சமாதானம் முடிவுக்கு வந்தால் அவன் தரும் முத்தமழையை எண்ணிப்பார்த்து வெட்கம் பூத்தாள்.

அடிக்கடி சிரித்து காரை விரைவு படுத்தி ஓட்டி வந்தவளை வரவேற்றது என்னவோ பூட்டு போட்ட வீடு.

   ஆதித்யாவிற்கு அழைத்து பார்த்து இன்னமும் சுவிட்சாப் என்றதும் தன்னிடம் மாமியார் தந்த சாவி மூலமாக கதவை திறந்து உள்ளே வந்தவள் குளித்து உடை மாற்றி, சூடாக தோசை சுட்டு முடித்து சாப்பிட்டு மதியம் உணவும் சமைத்தாள்.

   ஆதித்யாவிற்கு பதினொன்று மணி அளவில் போன் போடவும் ரிங் சென்றது. அப்பாடி கோபம் குறைந்து போனை ஆன் பண்ணிட்டார்.’ என்று எண்ணினாள். ஆனால் அவளது அழைப்பை எடுக்கவில்வை.
 
    வாய்ஸ் மெஸேஜ் வீடியோ கால் என்று தொடர்பு கொண்டவளை உதாசினம் செய்யும் விதமாக ‘பிளாக்’ செய்து முடித்தான்.

  பிளாக்’ என்று காட்டவும், அந்தளவு கோபமா? என்று மீண்டும் மருத்துவமனை வந்தாள்.

  தந்தை இப்பொழுது பரவாயில்லை என்று தனியறையில் வைத்திருந்தனர். அத்தை மாமாவை சாப்பிட சொல்லிவிட்டு தந்தையை கவனித்தாள்.

   “அவனை பார்த்தியா? பேசினியா?” என்று தந்தை‌ சுரேந்திரன் கேட்க, “அவர் நான் அங்க போனதுக்கு முன்ன ஆபிஸ் கிளம்பிட்டார் அப்பா. போன் போட்டா மறுபடியும் எடுக்கலை. பிளாக் வேற பண்ணிட்டார்.” என்று சோகமானாள்‌.

   பார்வதிக்கு நிலவரம் தீவிரமாவதை அறிந்தாலும், மகனிடம் தான் ஒருமுறை பேசியப்பின் மருமகளிடம் பேச எண்ணினார்.

  அதனால் அமைதியாக வெளியே வந்து ஆதித்யாவுக்கு போனில் அழைத்தார்.

   “சொல்லுங்கம்மா” என்று அதே அழுத்தமான குரல்.   

   “ஆதித்யா…‌ சம்பந்தி  சுரேந்திரனுக்கு உடம்பு இப்ப பரவாயில்லை.”

  “அந்த ஆளுக்கு உடம்புக்கு என்ன ஆனா எனக்கு என்னம்மா?” என்றான்.

  ”தம்பி அப்படி பேசாத.. திலோதாதம்மா காலையில் நம்ம வீட்டுக்கு வந்தப்ப நீ வீட்டில் இல்லையாம்.” என்று மருமகள் வீட்டுக்கு வந்ததை அறிவிக்க முயன்றார்.

  “அவ நேரம் நேத்து பத்து மணி. இப்ப காலையில் எதுக்கு வந்தா? ஓ… உங்களிடம் இருந்த மாற்று சாவியால் வீட்டுக்கு வந்தாளா? நாளைக்கு பூட்டை மாத்திடறேன்” என்று பேசினான்.

  “ஆதித்யா… அவளுக்கு இன்னமும் எதுவும் தெரியாது. இங்க நானும் உங்கப்பாவும் எதுவும் சொல்லலை.” என்று கூற, “அம்மா…  அப்பா சொன்னாரா? சரி ஓகே, இந்த ஆதித்யா பேச்சு எப்பவும் ஒன்னும் போல தான் இருக்கும்.

   பத்து பத்துமணி வரை வராதவ இனி வந்தா என்ன? வராம போனா என்ன? நான் டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணலாமா என்ற யோசனையில் இருக்கேன்.” என்று பேச, அந்த பக்கம் திலோத்தமா போனை பிடுங்கியிருந்தாள்.

  “என்ன பேசறிங்க? டிவோர்ஸா? அத்தை இவர் என்ன பேசினார்?” என்று பதற, “நீ ஏன்மா போனை பிடுங்கற?” என்று போனை கேட்டு நின்றார்.

   “மாட்டேன்.. போன் தரமாட்டேன். அவர் என்ன இப்படி பேசறார். என்னங்க… ஏன் இப்படி பேசறிங்க” என்று பதட்டமாய் கேட்டதும், ஆதித்யா போனை அணைத்து விட்டான்.

   பார்வதியிடம் தாம் தூம் என்று காரணம் கேட்டு குதிக்க, “நீ அவனிடம் காரணத்தை கேளு. இல்லை உங்கப்பாவிடம் கேளு. என்னால எதுவும் செய்ய முடியலை‌ ” என்று வருந்தினார்.

   ஆதித்யா பேசியதை கேட்டு இடிந்து விழுந்தவளாய் மாறினாள் திலோத்தமா.

-தொடரும்.









6 thoughts on “கண்ணிலே மதுச்சாரலே-9”

  1. Thilo ku vishayam yara chum solli irundhu ava varala na kooda paravala ava ippo varaikkum avan appa kum adi kum sandai la than ipadi nadanthuchi nu nenachikitu irundha inga enna na avan divorce paren nu sollitan

  2. Kalidevi

    Thilo un appa than sollanum unaku yen aadhi ippadi intha alavuku panranu yosichiya nee antha ala u kal manasu illa avanuku irunthum paka varalana oru reason irukumnu yen purinjikala nee 10 kulla oru time poi pathu iruntha ipo intha nilami illaye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!