Skip to content
Home » கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-7

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-7

அத்தியாயம்….7
பிறந்தநாள் கொண்டாடத்தன்று சுஜா நீர் வழிய சென்ற பிறகு ஸ்ரீதர் அம்மாவை எக்கச்சக்கமா
கோபித்துக் கொண்டான்.
“என்னம்மா இது? அவங்களே நொந்து போய் இருக்காங்க. நீங்க வேல் கொண்டு பாய்ச்றீங்க.
இப்படியா பேசறது.?”
“இல்லேடா….சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருவான்னு தான்.”
“வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டா.?”
“அப்படியெல்லாம் பண்ணமாட்டா. உன் மேலே அவளுக்கு ஒரு கண்ணு.”
“அக்கரை வந்திட்டு இருந்துச்சு, நீ கெடுத்திட்டே. இப்ப என்ன சொல்லி
சமாதானப்படுத்துவேன்.? போம்மா ச்சே.”
“ஸ்ரீதர் உனக்கு முப்பத்திரெண்டு வயசாவுது சீக்கிரம் உனக்கு திருமணம் ஆகணும்ன்னு
அப்படி சொன்னேன்.”
“அதுக்காக….புருஷனை பறிகொடுத்தா மாதிரின்னு வார்த்தையை விடலாமா.? உங்க கிட்டே
தான் சொல்லியிருக்கேனே….இதிலே அவங்க தப்பு ஏதும் இல்லேன்னு.”
“கனகவல்லி, அவன் சொல்றது சரிதான். எதுக்கு அபாபடி பேசின.? பாவம், அந்தப் பொண்ணு
மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்?” என்று ஸ்ரீதரின் அப்பா மகாலிங்கம் கூறினார்.
கனகவல்லி அம்மாளுக்கு தன் தவறு புரிந்தது.
“ஸ்ரீதர்……அவசரப்பட்டுவிட்டேன். இப்ப என்ன செய்யறது.?
“ஆறப் போடுங்க ஒரு வாரம் போகட்டும்.” என்றார் மகாலிங்கம்.
ஸ்ரீதர் ஒரு வாரத்தை கஷ்டப்பட்டு தள்ளினான். பிறகு சரழலை தாயிடம் கொடுத்து நீங்க
பேசுங்க சுஜாவிடம்.” என்றான்.

Thank you for reading this post, don't forget to subscribe!

“அவ எடுக்கலையே டா.”
“திரும்ப அடிங்க.”
அடித்தார். சுஜா எடுத்தாள். “ஹலோ..”
“சுஜாவாம்மா.? நான் ஸ்ரீதர் அம்மா பேசறேன்மா. எப்படிம்மா இருக்கே.? அவசரப்பட்டு
பேசிட்டேன். மனசிலே வச்சுக்காதே டா. ஸாரி….”
“அய்யோ….ஸாரி எல்லாம் எதுக்கு.?”
“அப்ப சரியாயிட்டியா.?”
“ம்..தேங்க்ஸ்ம்மா கூப்பிட்டதுக்கு.”
“இந்த ஸ்ரீதர் கூட பேசு.” செல் கைமாறியது. அவன் தன் அறைக்குப் போய் கதவை சாத்திக்
கொண்டான். “சுஜா……மன்னிக்க வேண்டுகிறேன்.”
“……..”
“என்ன பதிலையே காணும். கோபமா.?”
“நான் ரொம்ப நெகிழந்து போயிருக்கேன். உங்கம்மாவே கூப்பிட்டு சார் கேக்கறாங்க. எனக்கு
என்ன சொல்றதுன்னே தெரியலை.”
“அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. சுஜா நீ அப்ரப்ட்டா போனதாலே பயந்திட்டேன்.
காயப் படுத்திட்டோமோன்னு. ..”
“ஏதோ அந்த நேரத்து கோபம். தப்புதான். அப்செட் ஆயிட்டேன்.”
“சரி பச்சைக் கோடி காட்டுவீங்களா.?”
“வெள்ளை கொடி மறந்து போச்சா.?’
“ஏதோ ஒரு கொடி. இப்ப அவசர வேலையிருக்கு. ராத்தரி ஃபோன் பண்ணறேன்.”
“சரிடா.”
“தாங்க்யூ டீ.” இருவரும் சிரித்தார்கள். இருவர் மனசும் லேசாயிற்று.
சுஜா ஸ்ரீதரின் நட்பால் தொலைந்த சிரிப்பை மீண்டும் பெற்றாள். ஆர்த்தியை அவன் அவ்வப்
போது பள்ளியில் சந்தித்தான். அவள் மூலம் அவன் சுஜாவுக்கு நிறைய நல்ல இலக்கிய
புத்தகங்கள் அனுப்பி வைத்தான். நட்பு பலப்பட்டது.
ஒரு நாள் மாலை நேரம் சுஜா அவனுக்கு ஃபோன் செய்தாள்.
“ரொம்ப நாளா உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும்னு நினச்சிட்டு இருந்தேன்.”
“எது பத்தி சுஜா.?”
“உங்களுக்கு எப்படித் தெரியும் ரமேஷ் பிரிவார் என்று.?”
ஸ்ரீதர் மௌனித்தான். ஒளியும் இருளுமாய் கலந்து தவித்த அந்தக் கடந்த காலம் சொல்ல
வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதை உணர்ந்தான். பிறகு மெள்ள சொன்னான்.

பத்து வருடம் முன்பு……..ஸ்ரீதர் அப்போது கல்லூரி மாணவன். பக்கத்திலேயே ஒரு பெண்கள்
கல்லூரி இருந்தது. அதன் எதிரே உள்ள பேக்கரியில் மாணவ மாணவிகள் காப்பி சாப்பிட
வருவார்கள். தன் காதலியை எங்கே தான் முதல் முதலில் பார்த்தான்.
மாந்தளிர் மேனி. இடைபட்ட உயரம். கொண்டாடத்தக்க பசுமையான முகம். ;உன் கண்களை
கொஞ்சம் தாயேன்’ என்று மற்றப் பெண்கள் கேட்கக்கூடிய ஜீவன் ததும்பும் கண்கள். ஸ்ரீதர்
சொக்கியே போனான்.
அவள் பேக்கரிக்குள் நுழைவது தெரிந்தால், அவனும் உள்ளே நுழைவான். தள்ளி அமர்ந்து
அவளை ரசிப்பான். தோழிகளோடு வருவாள். சிரிக்கும்போது அண்ணாந்து சிரிப்பாள். சிலு
சிலுவென்று பூங்கொத்து மலர்ந்தது போல் இருக்கும். பெண்மையும் கம்பீரமும் கலந்த பாரதி
கண்ட புதுமைப் பென் இவளோ என்று வியப்பான். அவள் எந்த வகை கேக் வாங்கி
சாப்பிடுகிறாள் என்று கவனித்து அதையே அவனும் வாங்குவான்.
ஒரு முறை அவனைத் தாண்டிப் போகும்போது, அவள் துப்பட்டா விசிறி அவன் முகம்
மறைத்துக் கொண்டது. நடை தடை பட்டவுடன் அவள் வேகமாகத் திரும்பினாள். “ஸாரி…..
ஸாரிங்க….ஸாரிங்க..” பதறிச் சொன்னாள். அவள் முகம் மிக அருகில்..அவனுக்கு
கொடைக்கானலில் இருப்பது போல் இருந்தது. “இட்ஸ்…ஓ. கே.” என்றான் மை பிளஷர்ஸ்
என்று சொல்ல பயந்து.
“கோபமில்லையே…. “ என்று கேட்டாள் அவனை நேருக்கு நேர பார்த்து. திராட்சை போன்ற
அந்தக் கண்கள் மீன்களாய் துள்ளின.
“நாட் அட் ஆல் மேடம்….” என்று கூறி அவள் அறியாமல் மெமரி காரட் பட்டனை
தட்டிவிட்டான். அவன் பதிவு பண்ணியிருந்த பாடல் ஒலித்தது.
“மேலாடை தென்றலில் ஆஹா ஹா….”
பூவாடை வந்ததே ம் கும் ம்….”
அவள் சுட்டு விடுவது போல் திரும்பினாள். கண்ணியமானவன் என்று நினைத்தால்….ரோட்
சைட் ரோமியோ தானா இவன்?
பாடலை நிறுத்திவிட்டு காதருகே செல்லை வைத்து “ஹலோ.” சொன்னான். “ஏய்..அவனோட
ரிங் டோன் டீ. முறைக்காதே.” என்றாள் தோழி. சினம் தணிந்து இயல்பாகி சென்றாள் அவள்.
இன்றைக்கு ஸ்ரீதர் அந்த சம்பவம் விவரித்துவிட்டு கேட்டான்.
“அந்தப் பெண் தான் என் காதலி தெரியுமா.?”
“யார்? தர்ஷினியா?”
“இல்லே.”
“இல்லையா? பின்னே யார்.?”
“சொல்லுங்க பார்க்கலாம்.”
“எனக்கெப்படி தெரியும்.?”
“தெரியும். அவளை உங்களுக்கு நல்லாவே தெரியும்.”

“அப்படியா….. யாரு?” யோசித்தாள் “புரியலையே. நீங்களே சொல்லுங்க.”
“நிஜமாவே இந்த மூஞ்சியை மறந்திட்டீங்களா.? சுஜா….அந்த சம்பவம் கூடவா நினைவுக்கு
வரலை.? அது நீ தான்.”
“சுஜா தூக்கி வாரிப் போட மௌனித்தாள். அவனா? அந்த சம்பவம் அவள் மனப் பேழையில்
நிற்கவேயில்லையே. அந்த அலைவரிசை கிடைக்கிறதா என்று மன ரேடியோவில் அலசிப்
பார்த்தாள்.
“ஸாரி ஸ்ரீதர். சுத்தமா நியாபகம் இல்லை.”
“இப்போ எனக்கு வருத்தமில்லை. ஆனால் அன்று அவ்வளோ அழுதேன்.” துப்பட்டா
டம்பவத்துக்குப் பின், அவள் தனனி அடிக்கடி பார்ப்பாள் என்று நினைத்திருந்தான் ஸ்ரீதர்.
ஆனால் அவள் அவனை குறிப்பாக பார்த்து முறுவலிப்பாள் என்பது பொய்யானது.
கும்பாலோடு கும்பலாக அவனை ஏதோ ஒருவன் என்று தான் பார்த்தாள். அவள் மனதில் தான்
நிற்கவேயில்லை என்று சோகமானான்.
ஒரு நாள் பேக்கரியில் கேக் சாப்பிட உட்கார்ந்ததான். சுஜா தன் தோழிகளோடு வந்தாள்.
அடுத்த டேபிளில் அமர்ந்தார்கள். அவன் முதுகுக்கு பின்னே அவள் தான் உட்கார்ந்தாள்.
அவர்கள் அடங்கிய குரலில் பேசினார்கள். காதை தீட்டிக் கொண்டு கேட்டான்.
“ஏய் லில்லி, உன் ஆள் கூட படம் போனியா.?”
“இல்லேடி ஒல்லி. அவன் மல்லியை கூட்டிட்டு போயிட்டான். இடியட்.”
“பிரபா……உன் ஆள் உன் பிறந்த நாளுக்கு சுடிதார் வாங்கித் தந்தானா.?”
“மடிசார் வாங்கித் தறேன்னு சொன்னான். அதான் கழட்டி விட்டிட்டேன். பைக் மன்னன் கூட
என் லவ் ஸ்டார்ட் ஆக்கிடுச்சு.”
“ஏய் லக்கிடி நீ. அவன் கூட ஆறு மாசம் சுத்தினேன். நல்லா செலவழிப்பான். பிடிச்சுக்கோ.”
“ஆமாப்பா கஞ்சனை பிடிச்சிட்டா போர்.” சிரித்தார்கள். அப்பொழுது தான் சுஜா பேசினாள்.
“உங்களையெல்லாம் ப்ரெண்டுன்னு சொல்லிக்கவே அவமானமா இருக்கு. காதல் புனிதமான
விஷயம் தெரியுமா.? உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சு இல்லே.? தத்திங்க. ஏண்டி
இப்படி இருக்கீங்க.?’
“சுஜா உன்னை எங்க செட்டிலே ஏன் வச்சிருக்கோம் தெரியுமா.? நீ நல்லா படிக்கிற
பொண்ணு. மிஸ் கிளீன். அதினாலே எங்க குருப்புக்கு மரியாதை கிடைக்குது. அதை
காப்பாத்திக்க..”
இப்பொழுது சுஜா சிரித்தாள். அதில் கம்பீரமும் எள்ளலும் இருந்தது.
“உங்ககிட்டேயிருந்து என்னை காப்பாத்திக்கிட்டு பழகறேன் தெரியுமா? உங்க கூட சேர்ந்து
நானும் கண்டதே கோலம்ன்னு இருக்க கூடாது இல்லையா? கண்ட கண்டவனோடு சுத்திட்டு,
கடைசியிலே புருஷனோடு செட்டில் ஆயிடறுதுன்னு உங்க பாலிசி சகிக்கலை. நான் ஒரே
ஒருத்தனோடு தான் பழகுவேன். அவனுக்காக என் மனசையும், என்னையும் பரிசா தருவேன்.
என் மனது ஒன்று தான். ஒருவன் மீது தான். அதனாலே எந்த ஆணையும் ஏறிடுவதில்லை.
கல்யாணத்துக்கு பின் தான் காதல். காட் இட்.”

கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர் மனதில், அவளைப் பற்றின மதிப்பும் மாறியாதையும்
வானளாவ கூடியது. அவள் நியாபகத்தில் தான் இல்லாத தன் காரணம் புரிந்தது. கடைசி
வருடம் போஸ்ட் க்ராஜூவேஷன் முடிக்கப் போகிறான். முடிந்ததும் வேலை கிடைத்துவிடும்.
சுஜா வீட்டில் சென்று பென் கேட்டு அவளைப் பெறுவது தான் ஒரே வழி.
சுஜாவை பட்டிக்காடு என்று என்று கலாட்டா பண்ணியபடி அந்த மாணவிகள் கூட்டம்
கலைந்தது.
தேர்வுகள் முடிவடைந்து விட்டன. அவன் நல்ல முறையில் தேறியும் விட்டான். ஒரு நல்ல
கம்பனியில் கை நிறைய சம்பளத்துடன் வேலையும் காத்திருந்தது. தன் காதலையும்
கல்யாணத்தையும் பற்றி பேச தகுதி வந்துவிட்டது என்று உணர்ந்தான். அவனுக்கு வரைவதில்
விருப்பம் அதிகம். நிலவொளியில் ஆற்றங்கரையில் கை கோர்த்தபடி புது மண தம்பதிகளை
வரைந்தான். அவர்கள் பின் புறம் தான் முகம் காட்டாமல் வரைந்திருந்தான். அவர்கள் திரும்பி
பார்க்கப் போகிறார்கள் என்று யூகிக்கும் படி அந்த படம் எதிர்பார்ப்புடன் இருந்தது.
திரும்பினால் யாராக இருப்பார்கள் யூகியுங்கள் என்று சொல்லப் போகிறான். அவள்
திணறுவாள். அது நாம் தான் என்பான். அவள் வெட்கத்துடன் சிரிப்பாள்….இப்படியொரு
இனிய பில்ட். அப்புடன் அவளை பேக்கரியில் சென்று தேடினான்.
சுஜா தோழிகள் சூழ வந்தாள். அவள் முகத்தில் அலாதியானதொரு மகிழ்ச்சி. பேக்கரி ஓனரிடம்
சென்று சொன்னாள்.
“சார்….எனக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அடுத்த வாரம் ஆறாம் தேதி. மீனாட்சி
கல்யாண மண்டபம். அவசியம் வாங்க.”
“அவசியம் வரேன்மா. எம்ஸ். சி முடிச்சிட்டே. வேலைக்கு டிரை பண்ணலையா.? அதுக்குள்
கல்யாணம்.” என்றார்
“அது தெரியாதா உங்களுக்கு”என்று விளக்கினாள் லில்லி.
“பையன் பேர் ரமேஷ். சூப்பர் ஹீரோ முகம் சூப்பர் வேலை. சுஜாவை அப்படியே கொத்திட்டு
போகப் போறார். நோ டவுரி. நோ டிமாண்ட்ஸ். எல்லாம் மாப்பிள்ளை வீட்டார் செலவு.
அப்புறம் எதுக்கு வேலைக்குப் போகணும்.?’ என்றாள்.
“ரொம்ப சந்தோஷகம் மா. உன் நல்ல குணத்துக்கு நல்ல வரன் அமைனக்கு போச்சு.”
பாராட்டினார்.
ஸ்ரீதர் அப்படியே உறைந்து போனான். அதிர்ச்சியில் மூச்சு விட மறந்தான். இலவு காத்த கிளி
ஆகிவிட்டான். அவள் அந்தி வான சிவப்பு கன்னத்தில் தெரிய சென்றாள். அவன் அந்தி வான
சிவப்பு கண்ணில் தெரிய நொந்தபடி வீடு சென்றான். காதலிலே தோல்வியுற்றான் காளை
ஒருவன்…. அவன் ரிங் டோன் ஆனது.

ஸ்ரீதர் இன்று சுஜாவை செல்லில் கூப்பிட்டான்.
“சுஜா அன்று என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். அப்படி வலித்தது. அணியாயம்மக
தோற்றுவிட்டதாக பட்டது.

“ரமேஷ் முந்திக் கொண்டார். என்னை விட மூன்று வயது மூத்தவர். வேலையில் இருந்தார்.
இந்த சாதாரண வித்தியாசத்தில் முந்திக்கொண்டதால் ஒரு பொக்கிஷத்தை
இழந்தேன்……என்று புலம்பினேன் அம்மாவிடம். “ என்றான்.
“நான் ஒண்ணும் பொக்கிஷம் இல்லே ஸ்ரீதர்.”
“உன்னுடன் கனவில் குடித்தனமே நடத்திவிட்டேன் சுஜா.. பேசாமல் இறந்துவிடலாம் போல்
தோணுச்சு.”
“ஸாரி ஸ்ரீதர்….உங்க மனசை என்னையும் அறியாமல் காயப்படுத்தியிருக்கேன். நான் ஒரு
பயித்தியம். கையருகே வசந்தம் இருப்பது தெரியாமலேயே நழுவ விட்டிட்டேன். அந்த
பாவத்திற்க்குத் தான் எனக்கு இப்படியொரு தண்டனையோ என்னவோ.”
“சரி விடு. இதெல்லாம் நடக்கணும்னு இருக்கு. ரமேஷை எனக்குத் தெரியும். டென்னிஸ்
கிளப்பிற்கு வருவான். நெருங்கிய பழக்கமில்லே. நண்பர்கள் கூட்டத்துடன் அவனும் கலந்து
கொள்வான். அப்பப்ப பேசிப்போம். அவன் எனக்கு போட்டியா வருவான்னு நான் சுத்தமா
நினைகலை. அவனுடன் பேசியவரை அவன் பயணத்தாசை பிடித்தவன் என்று தெரிந்தது.
குறுக்கு வழியில் பணக்காரன் ஆகணும் என்ற வெறி கொண்டவன்னு தோணுச்சு.”
“அப்புறம் எப்படி என்னை வரதட்சணை, நகை டிமாண்ட் பண்ணாமல் கல்யாணம் பண்ணிக்
கிட்டார்? முரண்பாடா இருக்கே.?”
“உன் அழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும். அப்புறம் அவன் நிலைமை
என்ன சொல்ல.? ஆனா உன் புற அழகை விட அக அழகு பெரிசுன்னு அவனுக்குத்
தெரியலை.”
“அதி சரி….இவ்வளவு ஆழமா என்னை நேசிச்ச நீங்க எப்படி தர்ஷினியிடம் மாட்னீங்க.?
கிரேஸி.”
“எனக்கே அவமானமா தான் இருக்கு. என் பலவீனமான நேரத்தில் ஏற்பட்ட விபத்துன்னு
சொல்லலாம்.”
“தர்ஷினியை எப்படி மீட் பன்னீங்க.?”
“அவளும் டென்னிஸ் விளையாட வருவாள். தனவந்தர் ஆராவமுதன் பெண். தன் அழகில்
அப்படியொரு கர்வம். ரொம்ப நன்றாக டென்னிஸ் விளையாடுவா. ரமேஷ் ஜொள்ளு
விடுவார்.”
“அதை விடுங்க. அவர் தான் பொன் வண்டு ஆச்சே. மலர் விட்டு மலர் தாவினது பெரிசில்லை.
ஆனா என்னை ஆழமா நேசிச்சதா சொன்ன நீங்க , அந்தக் காதலை இன்சல்ட் பண்ண எப்படி
முடிஞ்சுது.?”
ஸ்ரீதர் பேச்சற்று தடுமாறினான்.

1 thought on “கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *