Skip to content
Home » கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-8

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-8

அத்தியாயம்===8
சிவா சமயம் நாம் நடந்து கொள்ளும் விதத்தால் நம்மையே நாம் மதிக்காமல் போகும்
தருணங்கள் வாழ்க்கையில் வரும். சுஜா கேட்டதும் அந்த உண்மை மனதை சுட ஸ்ரீதர் ஏதோ

Thank you for reading this post, don't forget to subscribe!

சமாளித்து பேச்சை முடித்தான். அன்று அவன் தர்ஷினியிடம் மனதை செலுத்தியது விதி என்று
கௌரவமாக ஒதுங்கிக் கொள்ள முடியவில்லை.
அந்தக் காட்சிகள் எல்லாம் அவன் மனதில் விரிந்தது.
தர்ஷினி இருபத்திரெண்டு வயது செலுலாயிட் பொம்மை. சந்தனக் கிண்ணத்தில் தவறி
விழுந்த குங்குமம் போல் கண் பறிக்கும் நிறம். கலகலவென்று எல்லோரிடமும் பேசினாள்.
ஜொள் மன்னர்களுக்கு தீனி போட்டாள். தினம் ஒரு ரிவீலிங் உடை அலங்காரம். புடவை
என்றால் அது மெல்லிதயாக பேருக்கு தோள் தொட்டு தரை புரளும். அப்பட்டமாக அவள்
இளமை அழகை காட்டிக் கொண்டிருக்கும். ஸ்ரீதர் அவள் உடை அலங்காரம் கண்டு
அருவருத்து ஒதுங்கி கொண்டான். அவள் விடவில்லை. அடிக்கடி வந்து பேசினாள். கண்களை
சுழட்டி, படபட இமைகளுடன் மாயக்குவாள்.
“ஸ்ரீ….உங்களை ஆட்டத்தில் ஜெயிக்கவே முடியலை” என்று சிணுங்குவாள்.
“பந்தை பார்த்து ஆடணும். பந்தடிப்பவனை பார்த்து ஆடினால்?”
“அட….உங்களி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சைட் அடிச்சேன். தப்பா.?”
அந்த பட்டாம்பூச்சி கண்களின் துறுதுறுப்புடன் அவள் வாயாடும் போது. ஒரு கணம் மனசு
தட்டுத் தடுமாறத்தான் செய்கிறது.
“தர்சகணி என்னை சைட் அடிக்க வேண்டாம். நான் ஏற்கனவே காதல் தோல்வியால் மனம்
நொந்து போயிருக்கேன்.”
“அப்படியா? அவள் பேர் என்ன.? எப்படி மயக்கினாள்.?’
“அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம். மேலும் அவள் தன் அழகை உன்னை மாதிரி,
கடை பரத்தவில்லை. மயக்கினாள் என்று கொச்சைப் படுத்தாதே. ப்ளீஸ் லீவ் மீ அலோன்.”
“கடைசியா ஒரு கேள்வி……உங்க மனசிலே இடம் பிடிக்கக் என்ன செய்ய.?”
“முதல்ல டீசெண்டா உடை அணிய கத்துக்கோ. எந்த உடை வேணா உடுத்திக்கலாம் அதில்
வல்கேரட்டி இருக்கக் கூடாது. ஒரு மரியாதை ஏற்படுத்தணும். அது உன்னால் முடியாது.
உடம்பு தெரியற மாதிரி உடை உடுத்த உனக்கு கூசலையா.?”
அடுத்த ஒரு வாரம் தர்ஷினியை காணவில்லை. ஜொள் மன்னர்களுக்கு போர் அடித்தது.
ரமேஷ் அதில் ஒருவன். அவளிடம் அவன் வலிய வழிந்தும் அவள் அலட்சியப்படுத்தி வந்தாள்.
ஸ்ரீதர் மேல் அவனுக்கு கடுப்பு. நம்மை அலட்சியப்படுத்திவிட்டு அவனிடம் குழைகிறாளே..
ஒரு வாரம் கழித்து அவள் வந்தபோது ஸ்ரீதர் சிரித்துவிட்டான். கனமான பட்டுப் புடவை.
கழுத்தில் அட்டியல். கழுத்தை முடிய ஜாக்கெட்.
“நல்லாயிருக்கா.?” என்று கேட்டாள். அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“சரியான லூஸ். அடக்கமா உடை உடுத்து என்று சொன்னால் மடிசார் கட்டாத குறையா வந்து
நிக்கிற. எப்படி டென்னிஸ் ஆடுவே.?”
“அப்ப இது போட்டுக்கலாமா.?” மஷ்ரூம் கலர் சுடிதாரை காட்டினாள். பாந்தமாக இருந்தது.
“பைன்.” என்றான்.

“ஒரு வாரமா கடை கடையா அலைந்து உங்களுக்கு இந்தக் கலர் பிடிக்கும்னு மெனக்கெட்
அலசி வாங்கி வந்தேன். மாத்திட்டு வரேன்.”
அங்கு உடை மாற்றும் அறை இருந்தது. மாற்றி வந்தாள். “இப்ப….?’
“பிளசென்ட்டா கண் உறுத்தாத டீசெண்ட் டிரஸ். இதமான பெண்மை தெரியுது உன்னிடம்.
இதே மாதிரி டிரஸ் பண்ணு உனக்கு சூப்பர் மாப்பிள்ளை கிடைப்பான்.” என்றான்.
“அந்த சூப்பர் மாப்பிள்ளை நீங்க தான்.” என்றாள் கரங்களால் முகம் பொத்தி. வெட்கம் கூட
வருமா இவளுக்கு என்று வியந்தான்.
இப்படித் தான் அங்குலம் அங்குலமாக அவன் மானதுள் நுழைந்தாள். பரபர காற்று
உருண்டோடி வருவது போல் சிரித்தாள். அந்த சிரிப்பு மனதில் மாட்டிக் கொள்ள திணறினான்
ஸ்ரீதர்.
“என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா.?” என்றாள் ஒரு நாள்.
“அதெப்படி முடியும்.? என்னால் ஏந இனியவளை மறக்கக் முடியாது.”
“யாரவள்?’
“அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.”
“அதான் யாரவள்.?”
நம்ம ரமேஷ் மனைவி ஆகிவிட்டாள். என்னை விட்டுவிடு தர்ஷினி.”
தர்ஷினி எப்படியோ தூர நின்று சுஜாவை பார்த்துவிட்டு வந்தாள்.
“அய்ய….அவ மாசமா இருக்கா.? இன்னமும் அவளை நினச்சுக்கிட்டு இருக்கறது மகா தப்பு.
என் லைன் கிளியர்.”
“அவளை நீ பார்த்தியா.?’
“ஆமா. அவள் வீட்டுக் கிட்டே போய் காத்திருந்து வேவு பார்த்து கண்டுபிடிச்சேன். சும்மா
சொல்லக் கூடாது கிளியோபாட்ரா தான்.”
“சரி……வேவு பார்த்தது போதும். ஸ்டில் நோ வேகன்சி.”
“ஸ்ரீதர்….நான் தான் உங்க விருப்பப் படி அம்மாமி மாதிரி டிரெஸ் பண்ணிட்டேனே. லண்டன்
மாடல் நடை எல்லாம் விட்டுட்டேனே. திங்களுக்கு தங்கை மாதிரி இருக்கேன்.
வேண்டாமுன்னு சொன்னா எப்படி.” என்று ஏங்கி பார்த்தாள்.
“அம்மா தாயே….உனக்கொரு கும்பிடு. இனிமே என் கிட்டே வந்து தனியா பேசாதே. உனக்குத்
தான் ஏமாற்றம்.”
தர்ஷினி கோபித்துக் வந்து பத்து நாள் அவன் பக்காகமே திரும்பலை. அப்பாடா என்று
நிம்மதியாக குப்தாவுடன் செஸ் விளையாடினான். குப்தா நாற்பது வயது தாண்டியவர்.
ஜென்டில்மேன்.
“உன் ராஜாவை அரெஸ்ட் பாணாநிவே முடியலையேப்பா.” என்றார் ஆங்கிலத்தில். அவன்
சிரித்தான்.

“எப்படி முடியும்? நான்தான் செம உஷார் பார்ட்டி ஆச்சே.”
“ஸ்ரீதர்….செம உஷாரா தர்ஷினியை அவாய்ட் பண்றே போலிருக்கு.”
“உங்களுக்கு எப்படித் தெரியும்.?”
“நினை அரெஸ்ட் பண்ணவே முடியலையாம……என்கிட்டே புலம்பினா.”
“உங்க கிட்டவா.?” ஆச்சரியத்துடன் கேட்டான்.
“ஆமா….அவ அப்பாவும் நானும் ரொம்ப பரிச்சியம். தர்ஷினியை எனக்கு பத்து வயதிலேயே
தெரியும். என் கல்யாணத்தப்ப அவ பத்து வயது சிறுமி.” என்றார்.
“ஸோ….”
“தர்ஷினி நல்ல பொண்ணுப்பா. நார்த் இன்டியாவிலே கொஞ்ச வருஷம் இருந்தா. அப்ப தான்
எனக்கு பழக்கம். அகமதாபாதிலே எம். பி. ஏ முடிச்சா. வெரி ஸ்மார்ட். தாயாகப் போற
காதலியை இன்னும் நினச்சுக்கிட்டு இருக்கிறதிலே என்ன லாபம்? வாழ்க்கையில் எப்போ
செட்டில் ஆகப் போறே.? தர்ஷினி க்ரேட் காட்ச். பிடிச்சுக்கோ. உன் மேல் உசிரையே
வச்சிருக்கா. அவளுக்கு எவ்வளவு டிமாண்ட் தெரியுமா.?’ என்றார்.
“அதில்லே அங்கிள். என் மனக் காயம் இன்னும் ஆறலை. மேலும் அவ உலகம் வேற. எனக்கு
சரிபட்டு வரமாட்டா.” என்றான் அழுத்தமாக.
“என்ன யங் மேன்…….ஷீ இஸ் ஏ நைஸ் கேர்ள். மனசிலே ஒண்ணுமில்லே. கொஞ்சம்
பிடிவாதம் ஜாஸ்தி. அப்படிப்பட்டவ உன் கிட்டே மனசை பறிகொடுத்து தன் ட்ரெஸ்ஸிங்
ஸ்டைலயே மாத்திக்கிட்டா பார். பாவம் ஸ்ரீதர் அவ கொஞ்சம் கன்சிடர் பண்ணு.”
“யோசிக்கணும் சார் நான்…” என்று தப்பித்து எழுந்தான்.
வீட்டுக்கு வந்த பின் தான் தர்ஷினியின் சாதிக்க நினைக்கும் சுபாவம் புரிந்தது. அம்மா
பரபரப்புடன் ஓடி வந்தாள்.
“இந்தப் பெண்ணை பிடிச்சிருக்கா டா.” என்று தர்ஷினியின் போட்டோவை காட்டினாள்.
அவன் பார்த்தான். அதில் தர்ஷினி மிகவும் அடக்கமாக பாந்தமாக பட்டுப் புடைவையில்
மகாலக்ஷ்மி மாதிரி இருந்தாள்.
“நல்ல கலர் டா. உனக்குப் பொருத்தமா இருப்பா. என்ன பதவிசு! பண்பு! பெரியவங்களை
மதிக்கும் குணம். ஜாதகம் கூட பொருந்தியிருக்கு. அவ அப்பாவும் அம்மாவும் நேரிலேயே
வந்து விருப்பம் தெரிவிச்சாங்க. நீ என்ன சொல்றே.?” என்றாள் ஆவலுடன்.
“ஸ்ரீதர்……எங்களுக்கு இருக்கிறது நீ மட்டும் தான். ஏதோ ஒரு பெண்ணை காதலிச்சேன்னு
சொன்னே. உன் சந்தோஷம் தான் முக்கியம்னு ஒத்துக்கிட்டோம். அதுக்குள்ளே அவளுக்கு
கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னே? இன்னமும் கல்யாணம் பண்ணாம இருக்கே. பேச்சை
எடுத்தாலே நழுவிடற. எங்களுக்கு ஆசையா இருக்காதா! வாழிய வராங்க. நல்ல குடும்பம். சர்
சொல்லுடா.” என்று அப்பாவும் கெஞ்சலாக் கேட்டார்.
“அம்மா…. எனக்கு அவகாசம் வேணும். ப்ளீஸ்.” ஏமாற்றம் அடைந்தார்கள். மறுநாள் அவன்
தர்ஷினியை சந்தித்த போது சொன்னான்.
“உன் கூட பேசணும். இதுக்கோரு முற்றுப் புள்ளி வைக்கணும்.”

அழகர் கோவில் சென்றார்கள். தீர்த்த தொட்டி போகும் வழியில் பழமுதிர் சோலை மரத்தடியில்
உட்கார்ந்தார்கள்.
“தர்ஷினி…..என்ன இதெல்லாம்.? என்னை பலவந்தப் படுத்தாதே. என்னால் உன்னை
ஏத்துக்க முடியாது.”
“ஏனாம்.? நான் அழகா இல்லயா? நான் நொண்டியா? முடமா.?” நீர் நின்ற விழிகளுடன்
பேசினாள்.
“ஏன்னா….நீ நிஜமா என்னைக் காதலிக்கலை. உன் கண் சொல்லுது.”
“ஸ்ரீதர் இநதை பாருங்க.” கைப் பையிலிருந்து ஒரு ஓவியத்தை எடுத்துக் காட்டினாள். ரோஜா
மலர்கள் வரைந்து கொண்டிருக்கும் தர்ஷினி தத்ரூபமாக அழகாக தெளிவாக…. அவன்
போட்டோ அருகில் இருந்தது. அதை பார்த்துக் கொண்டிருக்கும் தர்ஷினி. அந்த கண்களில்
காதல் ததும்பிற்று.
“இதை யார் வரைந்தது.?”
“நானே தான். என போட்டோ பார்த்து நானே வரைந்தேன். உங்கலை நினச்சுக் கிட்டு….”
“அந்த ஓவியத்தை வெகுநேரம் பார்த்தான். ஓவியம் போய் சொல்லாது என்று திடமாக
நம்பினான். நேரில் பார்ப்பதை விட ஓவியத்தில் ஓவியனின் மனசு வெளிப்படும். இந்த
படத்தில் வீழிந்தான் ஸ்ரீதர்.
“யூ வின்….” என்றான். இனி என் வாழ்வில் குருக்கிடாதே என்று உறுதியாக சொல்ல
வந்தவன், அதற்கு முற்றிலும் எதிரான பதில் சொல்லி நின்றான்.
“நிஜமாவா சொல்றீங்க ஸ்ரீதர்.? ஜோக் இல்லையே.?” என்று ஏக்கமாக கேட்டாள். அவன்
மனம் இளகிற்று.
“நான் உன் கண்களை சரியாக கவனித்ததேயில்லை. கலை ஒரு மிகப் பெரிய ஆழ்ந்த
வாழ்வியல். மனசு ஒன்றாம ஒரு உணர்வை காலையில் கொண்டு வர எந்த ஓவியனாலும்
முடியாது. நீயே உன்னை வரஞ்சப்புறம் தான் உன் கண்களின் உயிரோட்ட காதல் உணர்வு
எனக்குப் புரியுது.”
“நீங்களும் ஓவியரா.?”
“ம்ம்ம்….உனக்குத் தெரியுமா? ஏ பொயட் கேன் ரீச் வேர் ஏ சன் கேனாட்…..அப்படின்னு
சொல்வாங்க. சூரியனால் தொட முடியாத பகுதிகளைக் கூட ஒரு ஓவியனால் தொட்டு விட
முடியும். எந்தக் கலையும் பொய்யை வடிக்க முடியாது. நீ என்னை காதலிக்கவில்லை என்றால்
அது ஓவியத்தில் தெரிந்துவிடும். ஸோ….யூ ட்ருலி லவ் மீ.”
“இப்ப என் கண் என்ன சொல்லுது.?”
“:நீ என்னை நேசிக்கிறேன்னு சொல்லுது.”
“அப்ப இந்த ஓவியத்தில் ஒரு கவிதை எழுதுங்க.”
“எனக்கு வரைய வரும். ஆனா கவிதை எல்லாம் வராது. அதனாலே இரவல் வரிகள்
எழுதறேன்……
“பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா.?”

பொன்மகளே வாழ்கவென்று பாமாலை போடவா?”
பொறுத்தமா இருக்கா.?” என்றான்.
“சூப்பர் தேங்யூ ஸ்ரீதர்.” அப்படியே அவனைக் கட்டிக் கொண்டாள்.
அந்த ஓவியத்தின் பின்னணி ஒரு நிஜத்தில் ஆரம்பித்து, ஒரு பொய்யில் பொலிவிழந்தது.
தேய்ந்த வெண்ணிலா ஆனது.

இன்று ஸ்ரீதர் சுஜாவிடம் செல்லில் சொன்னான்.

1 thought on “கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *