Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -26

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -26

துஷ்யந்தா-26

ஆதித்யா பேரனை விநோதமாக கண்டார்.

விதுரனோ நிலைக் கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தான். குறுக்கும் நெடுக்கும் நடந்தவனை பார்த்து கேட்டு விட்டார்.

“என்னப்பா… பிரகதி போனதுல கஷ்டமாயிருக்கா?” என்று.

“தாத்ரு… அவ இந்த சென்னையிலேயே இல்லை… ஏன் இந்தியாவிலேயே இல்லை. உங்க பேத்தி பறந்துட்டா. ஆஸ்திரேலியா ஓடிட்டா.

அத்தை காலுக்கு பாதிலா அவளோட காலை உடைச்சிருக்கணும் தாத்ரு.” என்று புஜங்கள் துடிக்க ஆதித்யாவோ புரியாது முழித்தார்.

“ஏன்டா… மனைவியா அதிகாரம் பண்ணறப்ப அவள் உன்னை கத்தியால குத்தினப்பே அவர்டு வாங்கின மாதிரி கண்டுக்கலை. இப்ப டிவோர்ஸ் பண்ணி அத்து விட்டப் பிறகு எங்கயோ போயிட்டானு குதிக்கிற.

சசிதரன் மாதிரி துடுப்பா ஒரு குழந்தை இருந்தா கூட பரவாயில்லை. அதுக்கும் வழியில்லை. நீ ஏன்டா இப்படி இருக்க.

முடியலை டா மனசு கேட்கலை. வேறயொருத்தியை கல்யாணம் பண்ணி குழந்தை குட்டினு வாழ பாரு.” என்றார்.

“நான் என்ன விலைமகனா தாத்ரு. இல்லை… மலரை விட்டு மலர் தாவர வண்டா?” என்றான் விதுரன்.

“அப்படி சொல்லலையே டா. இதோ தீபிகா இன்பாவை விரும்பினா… இப்ப சசியை கல்யாணம் பண்ணிக்கலை.
அந்த இன்பாவையே எடுத்துக்கோ தீபிகா இடத்துல இப்ப அஞ்சலினு ஒரு பொண்ணோட வாழலை.

வேற பெண்ணை பார்க்கறேன் டா. நீ கல்யாணம் பண்ணி வாழு. உனக்கு நீ நான்னு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு தருவாங்க.” என்றான் ஆதித்யா.

“தாத்ரு…. தீபிகா கேரக்டர் ஏற்கனவே சொன்னேன். பணத்தையும் வீட்டையும் பார்த்ததும் சசியோட வாழ்ந்துட்டானு. பிரகதி அப்படி பணத்துக்கு இம்பார்டன் தரலை.

இன்பா… ம்… அஞ்சலியோட வாழறான். ஆனா அவளை ஏற்று வாழ ஆரம்பிக்க தீபிகா என்ற பெண்ணோட உண்மையான முகம் தோலூரிக்கப்பட்டுடுச்சு. அதனால ஏமாற்றினவளை மறந்து ஒரு பொண்ணை ஏற்றுக்கிட்டான்.

இங்க பிரகதி ப்யூர் கோல்ட் தாத்ரு. மறக்கவோ மறந்துட்டு வேறொருத்தியை தேடவோ என்னால எப்படி முடியும்?” என்றான் விதுரன்.

ஆதித்யா கண்ணாடியை கழட்டிவிட்டு விதுரன் பக்கம் வந்தார்.

“அவளை விரும்பறியா விதுரா?” என்றார்.

“அப்படியும் சொல்லலாம் தாத்ரு. யாருக்கும் அடங்காம ஒரு பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்காம இருந்த என்னை அவளை தேட வச்சிட்டா. ஒரு பத்து மாசம்கிட்ட தேடினேன். ஒரு மாசத்துல வரவச்சேன்.

என் கேரக்டரா இருந்தும் இரண்டு முறை என்னை இரசிச்சா… இப்ப போறிட்டா. நான் இப்ப புலம்பல, ஆனா ஏமாற்றமா இருக்கு.

சட்டுனு காணாம போயிட்டாளோனு.” என்று விதுரன் முடித்தான்.

“டேய்… டிவோர்ஸ் கொடுக்கறப்ப இரண்டு மாதம் இருந்ததே. அப்ப என்ன காணாம போனாளா…? உன்னோட ஒரே ஆபிஸ்ல வந்தா. உன்னோட ஒர்க் பண்ணினா. நாற்பது சதம் ஷேரை கேட்டு வாங்கினா… நீயும் தூக்கி கொடுத்த… டிவோர்ஸ் கொடுக்கறேனு சொன்னப்பிறகு அதிக நேரம் உன்னோட தானே இருந்தா. என்னடா பிரிஞ்சிப்போக போறப்ப வந்த காதலா?” என்று சலித்தார்.

“இல்லை தாத்ரு. இது வேற போகப்போறானு தெரிந்து காதலிள்பேனா.. இப்ப சொல்லாம ஆளைக்காணோம்னு ஏதோ என்னை மதிக்காத உணர்வு.” என்றான்.

“ஆக மதிப்பு தரலைனு கோபத்துல இருக்க?” என்றார்.

“என்னவோ தாத்ரு. சரி விடுங்க. அவங்க அம்மா இறந்ததுக்கு நான் காரணம் என்று நினைக்கிறவளுக்கு என்ன சொல்ல. போறவ உங்க ஷேரையும் என் பேர்ல மாற்றிட்டா…” என்றவன் தலைக்கோதி என்னவோ திடீருனு காணோம் என்றதும் புலம்பறேனோ….?” என்றான் விதுரன்.

ஆதித்யா சிரித்து விட்டார். என்னடா இப்ப தான் புலம்பலனு சொன்ன இப்ப புலம்பறேனானு கேட்கற. பேசாம டிவோர்ஸ் பேப்பரை தூக்கி போட்டுட்டு தூக்கிட்டு வா.” என்றார் ஆதித்யா.

“தாத்ரு… தூக்கிட்டா.. வேண்டாம் தாத்ரு. எப்பவும் நமக்கானது நம்மை தேடி வரும். இதுல நான் தெளிவா இருக்கேன். இனி அவளா வந்தா பார்ப்போம். இல்லைனா… இப்படியே போகட்டும். லைப் என்ன திருமணம் குழந்தை குட்டினு மட்டுமா?” என்றவன் விக்னேஷ் வரவும் “ஓகே தாத்ரு… பை… முடிஞ்சா பொண்ணு பார்த்து வைங்க. மனசு என்பது மாறிட்டே இருக்குமே” என்று புறப்பட்டான்.

பிரகதி எண்ணிற்கு அழைத்து பார்த்தார் ஆதித்யா. எண் சுவிட்ச்ஆப் என்றே வந்தது.

காலங்கள் அதன் போக்கில் ஓடையாக சென்றது.

விதுரன் ஆரிப்பை விட்டு அனிலிகா வீட்டை பார்த்து வர சொல்ல, அங்கே பிரகதி சந்தோஷமாக இருப்பதாக சேதி தெரிவித்தான்.

ஆனால் அடுத்த மாதம் அனிலிகா மட்டுமே வீட்டில் இருப்பதாக தோன்றியது.

ஆரிப் வந்து கேட்க, அவயிங்க இல்லை… யாரோ தூரத்து சொந்தம் இருக்காங்க அப்பா வழி சொந்தம் அங்க போறேன்னு கிளம்பிட்டா.” என்று பதில் தந்தாள். ஆரிப் அதை அப்படியே விதுரனுக்கு கூறி முடித்தான்.

அனிலிகாவுக்கே அவள் சென்ற இடம் தெரியாது என்று கடந்திட, விதுரன் அதன் பின் பிரகதியை பற்றி அறிந்திட தவிர்த்தான்.

முழு மூச்சாக தன் தொழிலை மேம்படுத்த இறங்கினான். ஆதித்யா கம்பெனி அனைத்தும் விதுரன் கம்பெனியாக விஸ்தாரமானது.

ஆதித்யாவுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. தன் வாழ்வில் விதுரன் இருக்கும் நிலையை கண்டு. அன்று சசியின் பையனுக்கு முதல் பிறந்த நாளென விழா நடைப்பெற்றது.

விதுரன் வந்ததும் கூட்டமே சலசலத்தது.

தீபிகாவுக்கு அதை காண பொறுக்கவில்லை. “பொண்டாட்டி கூடயில்லைனாலும் மதிப்பும் மரியாதையுமா தான் இருக்க” என்று நொடிந்து சென்றாள்.

கேக் வெட்டும் போது யுகன் சசிக்கு கொடுத்து தீபிகாவும் கேக் ஊட்டினான்.

ஆதித்யா மற்றும் கோமதிக்கு அவன் கையால் கேக் ஊட்டினான். தீபிகாவோ விதுரன் வரும் நேரம் “யுகன் கேக் ஊட்டாதே” என்றாள். குழந்தையும் ஊட்ட மறுத்து கையை தன் பக்கம் இழுத்து கொண்டான்.

விதுரன் அவமானப்படட்டும் என்று தீபிகா வஞ்சமாக சிரிக்க, பரிசு பொருளாய் அவன் உயரத்திற்கு காரை எடுத்து வந்து தர்மா முன்னிருத்தி வைத்து விட்டு சென்றான். விதுரன் உடனே… “கார் வேண்டுமா…? இதோ கீ.. கேக் கொடுத்துட்டு காரை ஓட்டு” என்றான்.

குழந்தை உள்ளம் காரை பார்த்ததும் கேக்கை ஊட்டி விட்டு கீயை வாங்கி தத்தி தாவி ஓடியது.

“பையன் உன்னை மாதிரியே பொருட்களுக்கு ஆசைப்பட்டு ஓடிட்டான். ஈஸியா தான் வளைக்கலாம்” என்றவன் இகழ்ச்சியாய் அவளை கண்டு “மதிப்பும் மரியாதையும் நடந்துக்கற நிகழ்வில் இருக்கு தீபிகா.

நீ காதலிச்சவனை ஏமாற்றி பெரிய சம்மந்தம்னு இன்பாவை தவிர்த்த, இன்பாவிடம் நீ என்ன எதிர்த்து கூட அழைச்சிட்டு போகமாட்ட என்று அவனோட பலவீனத்தை காட்டி நீ சந்தோஷமா பணக்காரனான சசியோட கல்யாணத்துக்கு தயாரான. சசி திக்குவாய் என்றதும் மறுபடியும் இன்பாவை தேடின, இன்பா அடிச்சி துரத்தி அனுப்பி சசியோட வீட்டுக்கு வலுகட்டாயமா வந்தப்ப அவன் வீட்டை கண்டே வாயை பிளந்து சசியோட தீண்டலுக்கு பத்தே நாளில் வளைஞ்சி கொடுத்த.

உன்னை மாதிரி மாற்றி மாற்றி நடக்கலையே… பிரகதியும் காசு பணம் என்று யோசிக்கலை. அதான் என்னை விட்டு போனா. அவளோட கோபம் நியாயமானது. ஏன்னா என் கையால ஒருத்தனோட மரணத்தை பார்த்து முடிவெடுத்தா.

நீ அப்படியில்லை… என்னை கொல்ல சாப்பாட்டுல விஷம் கலந்த. சாப்பாட்டை நான் அன்னிக்கு சாப்பிட மாட்டேனு தெரிந்ததும் அவசரமா அன்னாச்சி ஜூஸ்ல மெடிக்கலில் இருந்த ஆசிட்டை வாங்கி கலக்க மகேஷை அனுப்பின.” என்றதும் தீபிகாவுக்கு வியர்த்து.

“எ…என்ன கதை கட்டற..?” என்று திக்கினாள்.

“சசிக்கு தானே திக்கு வாய். நீயேன் திக்குற. என்ன அதிர்ச்சியா. இந்த விஷயம் யுகனுக்கு பெயர் வைக்கிறப்பவே தெரிந்துக்கிட்டேன்.

அதெப்படி என்னை கொல்லறது ஓகே. என்னோட பிரகதியும் சாப்பிடுவானு உனக்கு தெரியுமே. அப்பறம் எப்படி மனசாட்சியில்லாம விஷம் கலந்த…

அதானே… இரண்டு முறை யுகனையே கருக்கலைப்பை செய்ய ட்ரை பண்ணினவள் தானே நீ. கருவுல இருக்கற உன் குழந்தையையே கொல்ல துணிஞ்ச நீ பிரகதியோ யோசிப்பியா. நான் சாக மட்டும் யோசிச்சு இருப்ப. ஆனா உன்னால பத்மாவதி அத்தை எத்தனை கஷ்டம் அனுபவிச்சாங்க தெரியுமா?

உனக்கு அன்னிக்கு லேபர் பெயின் வந்ததா கோமதி அத்தை சொன்னாங்க. பட் உண்மை என்னனு எனக்கு தெரியும். உங்க வீட்ல திட்டம் போட்டு மாத்திரை போட்டு வயிற்று வலியில் வந்து லேபர் பெயினா மாற்றின ஆளு நீ.

யுகனை பெத்துட்டு தாய் பால் கொடுக்காத தெரு நாய் நீ. சாரி தெரு நாயோட கூட உன்னை கம்பேர் பண்ண மாட்டேன். பிகாஸ் அது நாலு எச்சி இலையை சாப்பிட்டு தன் குட்டி நாயோட பசியை போக்க நினைக்கும். நீ அதை விட கேவலமான சொறிநாய்.

உன்னை இப்பவரை விட்டு வச்சதுக்கு ஒரே காரணம் சசிதரன்.

அவனா ஆசைப்பட்டு கட்டிக்கறேன்னு சொன்ன பொண்ணு நீ. அவன் ஆசை வீணாகிட கூடாதேனு இந்த நிமிஷம் வரை சும்மா இருக்கேன். இல்லை… உன் ஆட்டத்துக்கும் உங்க அம்மா போடுற சீனுக்கும் எண்ட் கார்டு போடுவேன். என்ன கீதா வர்ட்டா..” என்று தீபிகாவின் தாய் ஒளிந்து நின்றவரை பார்த்து வல்லவன் பட சிம்பு போல கூறிவிட்டு கண்ணாடி அணிந்து கிளம்பினான்.

தீபிகாவின் அம்மா கீதா சுவர் பின் இருந்து வெளிவந்து “ஆத்தி புட்டு புட்டு வைக்கிறான். நீ வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்ட? இருக்கற வாழ்க்கையை கெடுத்துக்காதே.” என்று அதட்டினார்.

தீபிகா சிலை போல நின்றாள். அனைத்தும் தெரிந்து தான் அமைதி காத்தானா… எப்பொழுதும் தன்னை எள்ளலாக பார்ததது உண்மை அறிந்ததால் தானா. தெருநாய் கூட ஒப்பிடாமல் சொறி நாய் என்கின்றானே என்ற ஆவேசம் அவளை தாக்கியது.

ஆனால் மற்றவர் பரிசு கொடுக்க வாங்கி வைத்தவள் விதுரன் மறையும் வரை இமை தட்டாமல் வெறியோடு பார்த்தாள்.

விதுரனோ அதன் பின் இந்த உறவு வட்டத்துள் செல்ல பிடிக்காமல் தவிர்த்தான்.

ஆதித்யா மட்டும் விதுர் வாழ்வை எண்ணி கவலைக் கொண்டார்.

ஒரு வருடம் பிரகதி எங்குள்ளாள் என்பதே அறிய முடியவில்லை.

எதச்சையமாக விதுரன் லண்டனில் இருந்த வர்த்தகத்தோடு தொழில் முறையில் பேச வந்த ஆரோலிடம் கலந்துரையாடலில் முகநூல் கணக்கில் எட்வின் தென்பட, விதுரன் அவனை பற்றி கேட்டறிந்தான்.

ஆரோலும் தெரிந்தவரா என்ற விதத்தில் எட்வின் என்னோட பிரெண்ட் இரண்டு வருடமா பழக்கம். எங்க இருப்பிடத்தில் வசிப்பவர் என்று உரைத்தான்.

விதுரன் நூல் பிடித்து மீண்டும் பிரகதியை அறிந்து கொண்டான்.

ஆனால் இம்முறை அவளிடம் பேசவோ பழகவோ எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏன் ஆரிப் போன்றவனை அனுப்பி நிலவரம் அறியவும் செய்ய தோன்றவில்லை.

நானாக தேடி விஜயம் செய்ய போவதில்லையென்று அழுத்தமாய் இருந்தான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

6 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -26”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *