Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -31

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -31

துஷ்யந்தா-31

     பிரகதி இங்கு வந்தப்பிறகு இருதினம் தன்னை யாரேனும் தொடர்கின்றனராயென்று ஆராய்ந்தாள். ஆனால் அப்படி தெரியவில்லை.

    அனிலிகாவும் பிரகதியும் அவ்வீட்டில் இருந்தார்கள்.

     சற்று தள்ளி எட்வின் வீடு இருந்தது. ஒரு போன் செய்தால் உடனடி வரும் அளவிற்கு தான்.

     அதனால் மூவரும் உணவை உண்டு கொண்டு இருந்தார்கள்.

    அனிலிகா அருகே பேபி கேரேஜில் இருந்த குழந்தையிடம் ஆப்பிளை அவித்து மசித்து ஸ்பூனால் ஊட்டியபடி, “விதுரன் உன்னை லேசில் விடுவான்னு நான் எதிர்பார்க்கவேயில்லை.

     அதுவும் நானும் எட்வினும் வந்ததும் எட்வினை கண்டு கோபப்படுவாரோனு நினைச்சேன்.” என்று அனிலிகா கேட்டு முடித்தாள்.

     பிரகதியோ, “நீங்க ஏன் அங்க வந்திங்க. எங்கம்மா மாதிரி பணய கைதியா மாறவா? ஒரு நிமிஷம் உங்களை அங்க பார்த்து பக்குனு ஆகிடுச்சு.” என்று பயந்தாள்.

     “எங்களை என்ன பண்ண முடியும் பிரகதி. அன்னிக்கு போன் கட் ஆனதும் என்ன ஏதுனு பயந்தேன். அதனால உடனே கிளம்பிட்டோம். நாங்க அதர் கன்ட்ரிஸ். பிடிச்சி வச்சா நாம அவன் மேல கம்பிளென் பண்ணலாம். எதுக்கு பயப்படற. அவனுக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி போயாச்சு. இன்னும் என்ன பிரகதி” என்றாள்.

    “அனிலிகா சொல்றது கரெக்ட் தானே. நம்ம மேரேஜ் தெரிந்தும் உன்னை துன்புறுத்தலையே.  டிவோர்ஸ் ஆனதால உன் விஷயத்தில் தலையிட மாட்டான்.” என்று எட்வின் கூறினான்.
  
    எட்வினிடம் எப்படி கூறுவாள் அவன் அது தெரிந்தும் தன் இதழை முற்றுகையிட்டதை.

     “விடு எட்வின். ஒரு வாரம் இப்படி தான் இருப்பா. பிறகு சேஞ்சு ஆகிடுவா.” என்று குழந்தைக்கு ஊட்டி முடித்து வைப்ஸ் எடுத்து துடைத்து விட்டாள் அனிலிகா.

     பிப்பை அகற்றி குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டு அனிலிகா விளையாடிட எட்வினோ பிரகதியின் நிலையை தான் ஆராய்ந்தான்.

      அவனுக்கு மீண்டும் பிரகதி கை நழுவிடுவாளோ என்ற அச்சம் விதுரனை கண்டப்பின் சுனாமியாய் பெருகியது.

     அவனின் உறுமலும் கோபமும், அடங்காத கேசமும் சிங்கத்தை நினைவுப்படுத்தியது ஒரு நிமிடம் என்றால், அவன் பார்வை அக்னி பிழம்பாய் தெறிக்க, புலி அதன் இரையை குறிப்பார்க்கும் விழியாய், அவன் கண்கள் பிரகதியை பாய்ந்தது.

       இங்கு வரும் வரை அவனுமே பேச்சற்று இருந்தது உண்மை.

   இதோ திருமணம் வரை பிரகதி அவன் அருகே இருப்பதை கண்டு நம்ப முடியாமல் கண்ணை கசக்கினான்.

        ஆதித்யா இறந்து நாட்கள் ஓடிட, எட்வின் பிரகதி திருமண நாளும் வந்தது.

     வெள்ளை நிற கவுன் அணிந்து தலையில் கீரிடம் மின்ன, அடியெடுத்து அந்த சர்ச்சுக்குள் நுழைந்தாள்.

     பிரகதி சுற்றி முற்றி பார்வை பதிக்க அவள் தேடிய நபர் காணாமல் போக, அவளுக்கு விதுரனிடமிருந்து போன் வந்தது.

     “கங்கிராட்ஸ் பிரகதி… இன்னிக்கு உனக்கு கல்யாணமாமே… பச் நீ இன்வெயிட் பண்ணலை. பட் என்னோட விஷ்ஷஸ் உனக்கு எப்பவும் இருக்கும். எனிவே… இப்ப எப்படியிருக்க?” என்றான்.
 
      எட்வினோ சர்ச் பாதர் அருகே பிரகதியை மணப்பதாக கூறி சம்மதம் அளித்தவன் அவளின் பதிலுக்காய் காத்திருக்க செய்தான்.

     பிரகதியோ விதுரன் என்றதும் தான் தேடிய நபரை காணாமல் அனிலிகாவிடம் “கேர்டேக்கர் எங்க?”  என்று கேட்டாள்.

    “அதை ஏன் அந்த வெள்ளை பிசாசுவிடம் கேட்கற… நான் சொல்லறேன். உன் மேரேஜுக்கு அவசரமா வந்துட்டு இருந்த கேர்டேக்கர் லிண்டா என் அருமை லெப்ட் ஹாண்ட் தர்மாவால் மிரட்டப்பட்டு உன் குழந்தையை… சே சே..  நம்ம குழந்தையை பிடுங்கிட்டு கிளம்பிட்டேன்.” என்றான் கூலாக.

     “விதுரா…” என்று பிரகதி துடிக்கும் அலறல் போன் வழியாகவே விதுரனுக்கு வந்து சேர்ந்தது.

    “என்ன தைரியம் டி உனக்கு என் குழந்தையை மறைச்சி வச்சி வேடிக்கை காட்டியிருக்க?” என்றான் ரௌத்திரம் பொங்க.

    அடுத்த நொடியே தணிந்தவனாய் “டெவில் குயின்… உனக்கு இரண்டு ஆப்சன் தர்றேன். ஒன்னு அந்த  குழந்தையை தேடி உடனே இங்க வந்து சாரி கேட்டு என்னோட மிஸஸ் விதுரனா வந்து சேருர.
   இரண்டு… எனக்கும் உனக்கும் ஒரு ஒட்டும் உறவும் இல்லைனு டிவோர்ஸ் கிடைச்சதை நினைவு வச்சிட்டு அந்த எட்வின் அணிவிக்கிற மோதிரத்தை போட்டுக்கிட்டு அவனோட செட்டில் ஆயிடு. பட் குழந்தை எனக்கு மட்டும் தான். அதுல தலையிட விடமாட்டேன்.

      உனக்கும் புதுமண தம்பதிகள் தனிமை விரும்புவிங்க. என்னோட மேரேஜ் ஆனப்ப இரண்டற கலந்து இருந்த சந்தோஷம், மோகம் தாபம் மயங்கிய கண்கள், நமக்குள் பின்னி பிணைந்த நிமிடங்கள் இதெல்லாம் ரீவெண்ட் பண்ணி பாருடி. எழுத போகிற எக்ஸாம்க்கு யூஸ்புல்லாகும்”  என்று பற்களை கடிபட பேசி முடித்தான்.

     “சார் பிளைட் டேக் ஆகா போகுது. போனை ஆப் பண்ணணும்.” என்று தர்மா கூறவும் “பை டெவில்” என்று வைத்தான்.

      பிரகதியோ தாரை தாரையாய் கண்ணீர் வெளியேற போனை அப்படியே போட்டுவிட்டு தரையில் அமர்ந்தாள். எட்வினும் அனிலிகாவும் குழந்தை இல்லாத நொடியே நிலவரத்தை யூகித்தனர்.

      கேர்டேக்கரோ ஓடி வந்து, ஆங்கிலத்தில் யாரோ தன்னை அடித்து குழந்தையை மிரட்டி எடுத்து சென்றதாகவும், போனில் கூறலாமென்றால் போனையும் உடைத்து விட்டார்கள் என்றும் கூறி குழந்தை கடத்தி விட்டனர் என்று கூறி புகாரளிக்க பிரகதியை கூப்பிட்டாள்.

    பிரகதி சிலையென மாறியவள் “சாரி எட்வின் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்று வணங்கி ஓட்டமெடுத்தாள்.

     எட்வின் நிலவரம் அறிந்தமையால் செல்பவளை தடுக்கவில்லை. அனிலிகா தோழியோடு துணைக்கு சென்றாள்.

     எட்வினுமே பாதரியரிடம் தவிர்க்க முடியாத நிலையென்று கூறி மன்னிப்பு வேண்டி புறப்பட்டான்.

      பிரகதி அவளின் வீட்டுக்கு வந்த நேரம் வாக்கர், கேரேஜ் என்று மூலைக்கு ஒன்றாக இருந்தது.

     குழந்தையின் வாக்கர் இருந்த இடத்தில் சென்று அதனை வருடி வாய்விட்டு கதறி அழுதாள்.

     அனிலிகா அவளை சமாதானம் செய்ய முடியாது நின்றாள்.

     இதே போல தான் இந்தியாவிலிருந்து வந்த பிரகதி முதல் வாரத்திலேயே வாந்தியும் மயக்கமுமாய் மாறி சோர்ந்தாள். முதலில் தாய் மரித்து போய் இரண்டு மாத நிலையில் சரியாய் சாப்பிடாமல் இப்படி மயங்கினாளென அனிலிகா எண்ணியிருக்க, ஒரு நாள் சட்டென தேதிகளை புரட்டி பார்த்த பிரகதி இதே போல தரையில் அமர்ந்து முட்டி கட்டி அழுதாள்.

    அன்று

   என்னானதென கேட்ட கணம் “ஐ அம் பிரகணன்ட் அனிலிகா” என்றாள்.

      “எ… எப்படி…. விதுரன் விரல் கூட படலைனு சொன்ன. தூக்கத்துல தப்பா நடந்துக்கிட்டானா. இல்லை… பில்ஸ் கொடுத்து ஏதாச்சும்?” என்று அனிலிகா கேட்டாள்.

     “இல்லை… அவன் அவன் நினைத்த மாதிரி நானா அவனிடம் பணிந்து ஓகே சொல்லி தான் நடந்தது.” என்றாள் பிரகதி.

     அனிலிகா புரியாமல் குழம்பி “தெளிவா சொல்லு பிரகதி.” என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

      “அம்மா இறந்ததும் நான் புறப்பட அவனிடம் டிவோர்ஸ் கேட்டேன்.

    அதுக்கு அவன் டிவோர்ஸ் தர்றேன். பட் மனைவியா வாழாதவளுக்கு எப்படி டிவோர்ஸ் தர? என்னோட இரண்டு மாசம் ஓய்ப்பா கோ ஆப்ரேட் பண்ணு. மனைவியா மாறிட்டதால மியூட்சுவல் டிவோர்ஸ் அப்ளை பண்ணி தர்றேன். இல்லை…. காலம் முழுக்க டிவோர்ஸும் தரமாட்டேன்னு சொன்னான்.

   அவனோட இரண்டு மாசம்மா? இல்லை காலம் முழுக்கவா? யோசிச்சு… இரண்டு மாதம் சகிச்சுக்கிட்டா நான் விடுதலை ஆகிடுவேன்னு.. காலம் முழுக்க கற்பை பாதுகாத்து இவனோட நிழலில் வாழ முடியாதுனு அவன் கண்டிஷனுக்கு ஓகே சொல்லிட்டேன்.

    அன்னிக்கு நைட்டே……” என்றவள் அழுதாள்.

      “அதுக்கு பிறகு தினமும்… அதோட பாதிப்பு… இப்ப நான் பிரகணன்ட்.” என்று அழுதாள்.

      அனிலிகா தலையை பிடித்து எழுந்தவள், “இட்ஸ் ஓகே… டேப்லேட் வாங்கிடலாம். எத்தனை மாதம்?” என்றாள்.

     “நோ… அனிலிகா. நான் என் குழந்தையை கலைக்க மாட்டேன். இது… இது என்ன பாவம் பண்ணுச்சு.

   இது பேபி… குட்டி குட்டியா… ரோஸ் பெதர் போல மிருதுவா உள்ள உருவாகியிருக்கும். அதை போய்… என்னோட லைப் சேஞ்சஸ்காகவும் அவனை பிடிக்கலை என்றதிற்காகவும் அழிக்கணுமா நோ அனிலிகா. என் லைப் இப்ப மாற்றம் வர இந்த குழந்தை வேண்டும்.

    அதுவுமில்லாம இறந்து போன என்னோட அம்மா… என் வயிற்றுல குழந்தையா வருவாங்க.

     நான் இந்த குழந்தையை பெற்றுக்க போறேன்.” என்றாள் பிரகதி.

     “இப்ப தெரியாது… திடீரென விதுரன் வந்தா உன் கோலம் காட்டி கொடுத்திடும். அப்ப என்ன செய்வ. அவன் குழந்தையை விட்டு தருவானா?” என்றாள் அனிலிகா. இங்கு குழந்தையை ஆண் பெண் யாரிடமாவது கேர்டேக்கர் மூலமாக வளரும். அம்மா தான் தேவை என்று இல்லை.

     “நோ… விதுரனுக்கு தரமாட்டேன். அவனுக்கு தெரிந்தா.. கண்டிப்பா தூக்கிட்டு போயிடுவான். தீபிகா குழந்தையை அப்படி தான் தூக்கிட்டு போய் அவளை வரவழைச்சான். தீபிகாவுக்கும் சசிதரனுக்கும் டிவோர்ஸ் ஆகலை.

    பட் அவனுக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சு. குழந்தையை என்னிடமிருந்து பிரிச்சிடுவான். அவனுக்கு தயவு தாட்சாண்யம் எதுவும் இல்லை. நான் இங்க இருக்க மாட்டேன். எப்படியும் அவனா தேடி வரமாட்டான். ஈகோ பிடிச்சவன். ஆனா யாரையாவது வேவு பார்க்க அனுப்புவான். நான் எங்கயாவது தப்பிச்சி தனியா போயிடறேன்.

   ஆனா எனக்கு யாரையும் தெரியாதே.” என்று அழுத பொழுது தான் எட்வின் ஆறு மாதம் முன் லண்டன் சென்று அங்கேயே தங்கியது அறிந்தாள்.

      அவனும் அனிலிகாவோடு டச்சில் இருந்தமையால் அவனின் அட்ரஸ் கொடுக்கப்பட்டு அனைத்தும் பேசி அங்கே நள்ளிரவு நேரமாக பார்த்து வீட்டிலிருந்து கிளம்பி லண்டன் வந்தாள்.

     அனிலிகாவிடம் எட்வின் எண்ணும் பிரகதி எண்ணும் முற்றிலும் மாற்றி கொண்டாள்.

    எட்வினோடு அனிலிகா அந்த சமயம் பேச்சு வார்த்தை முறித்திருக்க, பிரகதியை முற்றிலும் தாங்கி கொண்டான்.

    அவளுக்கு தங்க வீடு பார்த்து சவுகரியம் செய்து வேலையும் வாங்கி கொடுத்தான்.

தினசரி ஒரெட்டு பார்த்து கொண்டான். மருத்துவமனைக்கும் அழைத்து சென்றான்.

    அப்படியிருந்த சமயத்தில் எட்வின் பிரகதிக்கு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் காதலிப்பதாக நின்றான்.

       முதலில் அனிலிகாவிடம் கூறி இதென்ன பழைய பூதம் புதிதாக படையெடுக்கிறது என்பதாய் உடைந்தாள்.

   ஆனால் எட்வின் கேர்டேக்கரை நியமித்து மற்றும் பொறுப்பான நண்பனாகவும் மாற பிரகதி தன்னிலையை விளக்கினாள்.

    எட்வினின் பதில் ஒன்றே எப்படியும் இதே நிலையில் விதுரனை நினைச்சிட்டு வாழுவியா? இல்லை வேற திருமணத்தை யோசிக்க மாட்டியா என்றதும்.

      “என்னால விதுரனை நினைச்சி காலம் முழுக்க வாழயியலாது. அவனோட ஆக்டிவிட்டிஸ் கண்ணால பார்த்து என்னால முடியலை. அவன் என்ன தான் தீபிகா லைப் மாறியதற்கு நான் காரணமில்லைனு சொன்னாலும், என் அம்மா இறப்புக்கும் அவன் மட்டுமே காரணம் என்றாள்.

    அதன் பிறகு எட்வின் கூடவே இருந்து மணக்க சம்மதம் வாங்கினான். அது கூட இரண்டு வருடம் காத்திருப்பதாக கூறி பிராமிஸ் செய்து ஓப்புதல் வாங்கினான். ஆனால் மணந்துக்கொள்ள மட்டும் செய்யலாமே என்ற எண்ணம்.

   விதுரனுக்கு எப்படியோ குழந்தை பிறந்தது வரை அறியாமல் பார்த்து கொண்டாள். அது எதுவரை அறியாமல் இருக்க முடியும் என்று மணக்க சம்மதித்தாள்.

     நடுவில் ஆதித்யா இறந்த பொழுது குழந்தை பிறந்து ஆறு மாதமாகியது. திருமணமும் விதுரன் அறிந்து தன்னிடம் மட்டும் உரிமையும், வெளியாட்களிடம் எட்டியும் ஆனால் முன்பு போல இருந்தவனை கண்டு பயந்தாள். ஆனால் லண்டன் திரும்பியதும் விதுரன் நூல் பிடித்து வராததும் நிம்மதியாய் மணநாளை கடத்திட விதுரன் நான் எமன் டா… என்றது போல அவன் வேலையை காட்டிவிட்டான்.

     அவன் குழந்தை என்று எப்படி கண்டறிந்தானோ? இன்று எப்படி வந்து மகளை அள்ளி சென்றான். என் மகள் அவனிடம் எப்படி இருக்கின்றளோ என்று பத்துமாதம் கொண்ட மழலையை பிரிந்து வருந்தினாள் பிரகதி.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -31”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *